நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
தேவையான பொருட்கள்: எலும்பில்லாத சிக்கன் - 250 கிராம் பசலைக்கீரை - 500 கிராம் (சுத்தம் செய்து வேக வைத்தது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் வெங்காயம் - 2 தயிர் - 1 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் - 3-4 மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் மல்லி தூள் - 1 டீஸ்பூன் சர்க்கரை - 1 சிட்டிகை எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் பிரியாணி இலை - 1 உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் பிரஷ் க்ரீம் - 1 டீஸ்பூன் (அலங்கரிக்க) செய்முறை: முதலில் சிக்கன் நன்கு சுத்தமாக கழுவி, அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு உப்பு, எலுமிச்சை சாறு மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் தடவி 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வேக வைத்துள்ள பசலைக்கீரை மற்றும் பச்சை மிளகாயை மிக்ஸியில் போட்ட…
-
- 0 replies
- 705 views
-
-
முட்டைப் பொரியல் - யாழ்ப்பாண முறை முட்டை - 2 அல்லது 3 சிறிய வெங்காயம் - 50 கிராம் நைசாக நறுக்கியது காய்ந்த மிளகாய் - 1 நைசாக நறுக்கியது மிளகாய்த் தூள் - 1 டீஷ்பூன் உப்பு - தேவையான அளவு வெங்காயத்தினையும், மிளகாயையும் தாச்சியில் (வானலியில்) இட்டு எண்ணெய் (நல் எண்ணெய், சிறப்பானது) சேர்த்து பொன்னிறம் வரும் வரை பொரிக்கவும். ஒரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊத்தி, மிளகாய்த்தூள், உப்பு இட்டு நன்கு அடித்துக் கொள்ளவும். பொரிந்து வந்த வெங்காயத்தினையும், மிளகாயையும் முட்டையியினுள் சேர்த்து கலக்கவும். பின்னர் தாச்சியில் (வானலியில்) கலவையினை தோசை மா போடுவது போல் பரத்திப் போடவும். பொரிந்து வரும் போது, தோசைக்கரண்டி கொண்டு, பக்கங்களில், சிறிது கிளப்பி, நடுவ…
-
- 32 replies
- 3.1k views
-
-
லக்னோ ஸ்டைல் பாஸ்டு சிக்கன் கொழம்பு. 6 சிக்கன் தொடை. மொளாகா தூள் நெய்யி 4 டீஷ்ஸ்பூன் ( தேக்கறண்டி) அரைச்ச ஒனியன் அரை கப் அரைச்ச கஜு அரை கப் கோகோனட்டு கிரீம் ஒரு கப் 4 ஏலம் 2 ஸ்டிக் கருவா யோக்கர்ட் மஞ்சள் கார்லிக் பேஸ்ட் சால்டு சிக்கனை யோக்கர்ட், கார்லிக் பேஸ்ட், மஞ்சள், சால்டு கலந்து மிக்ஸ்ஸு பண்ணி வைக்கவும். வாணலியில் நெய்யி விட்டு ஏலம் கருவா ஒனியன் இட்டு வதக்கவும் ஒனியன் பிறவுண் கலர் வந்தவுடன் மொளாகா தூள் 2 டேபிள் ஸ்பூன் (மேசைக்கறண்டி) வாட்டரு விட்டு கொதிக்க விடவும்.. வாட்டரு வத்தியதும் சிக்கனை போட்டு பெறட்டவும்.. சிக்கன் எல்லாப்பக்கமும் பொரிந்ததும் கோகோனட்டு கிரீம், கஜு போட்டு அரைமனித்தியாலம் ஸ்ட…
-
- 1 reply
- 705 views
-
-
மரவள்ளி கிழங்கு புட்டு இப்ப இருக்கிற ஆக்கள் கூடுதலாய் மாவிலைதான் புட்டு அவிப்பினம் . பருத்திதுறையிலை மரவள்ளிக் கிழங்கிலையும் புட்டு அவிக்கிறவை . மரவள்ளிக் கிழங்கு கஸ்ரப்பட்ட ஆக்களின்ரை சாப்பாட்டு எண்டு இப்ப பெரிசாய் ஒருத்தரும் அதை மதிக்கிறேலை . எங்கடை பழைய ஆக்கள் மரவள்ளிக் கிழங்கை சாப்பிட்டே நல்ல சுக நயமாய் இருந்தவை . எனக்கு தெரிஞ்சு இதிலை புட்டு அவிக்கிறது குறைவு . ஆனால் நல்ல சத்தான சாப்பாடு. என்ன வேணும் : மரவள்ளிக் கிழங்கு 1 கிலோ பனங்கட்டி 1 - 3 குட்டான் ஏலக்காய் 4-5 ( தேவையான அளவு ) பட்டர் அல்லது நெய் 1 தேக்கரண்டி உப்பு தேவையான அளவு கூட்டல் : மரவள்ளிக் கிழங்கை கொஞ்ச நேரம் மெதுவான சுடுதண்ணியிலை ஊறவிட்டு மண்ணை கழுவுங்கோ . மரவள்ளிக் கிழங்கை 2- 3 துண்…
-
- 1 reply
- 1.5k views
-
-
தயிர் சாதம் என்ன வேணும்??? அரிசி (பஸ்மதி அரிசி ) 2கப் 3 பேருக்கு . மோர்மிளகாய் 4 . சின்னவெங்காயம் 6 . கடுகு தாளிக்க . இஞ்சி 1 துண்டு . கஜூ 10 . உப்பு தேவையான அளவு . நல்லெண்ணை தேவையான அளவு . கொத்தமல்லி இலை தேவையான அளவு . தயிர் ( யோக்கூர்ட் ) 125 கிறாம் , 4 பெட்டி . கூட்டல் : ஒரு பானையிலை தண்ணியும் உப்பும் போட்டு தண்ணியை கொதிக்க விடுங்கோ . தண்ணி கொதிச்ச உடனை பஸ்மதி அரிசியை கழுவி போடுங்கோ . சோறு அரை பதத்திலை வெந்த உடனை வடிச்சு இறக்கி அதை ஆற விடுங்கோ . சின்ன வெங்காயம் , இஞ்சியை குறுணியாய் வெட்டுங்கோ . ஒரு தாச்சியை எடுத்து அதிலை கொஞ்சம் நல்லெண்ணை விட்டு , மோர்மிளகாய் ***, கஜூ எல்லாத்தையும் பிறிம்பாய் பொரிச்சு எடுங்கோ . மிஞ்சின எண்ணையிலை கடுகை வெ…
-
- 19 replies
- 2.9k views
-
-
குரக்கன் புட்டு. வேட்டை இறைச்சி . தாளிச்ச பருப்பு.. எழுபதுக்கள் வரைக்கும் முல்லை, வன்னிக்காடுகளில் வேட்டைக்கு போய்வந்து சோமபாண பார்ட்டி வைத்து சுட்ட இறைச்சியை சமைத்து சாப்பிடும் பழக்கம் எமது முதலியார் குடும்பத்தில் உண்டு. கனகாலமா இதை சமைத்துபார்த்துவிடவேண்டும் எண்டு இருந்து நேற்று சமைச்சு பார்த்தாச்சு.. இது எனது அப்பரின்ட சமையல் முறை.. சமைத்த முறையை இங்கு பகிர்கிறேன் ( செய்முறைமட்டும்! ).. குரக்கன்புட்டு. அரக்கரைவாசி குரக்கனும்கோதுமையும் கலந்து வறுத்து விட்டு சுடுதண்ணியும் உப்பும் கலந்து பினஞ்சு தேங்காய்ப்பூவூம் போட்டு வழக்கம்போல் புட்டு அவித்து கொள்ளவும்.. வேட்டை இறைச்சி.. நான் தேர்வு செய்த்தது காட்டுப்பண்டி வயிரு.. இறைச்சியை ஒரு…
-
- 11 replies
- 2.3k views
-
-
ஜவ்வரிசி - கால் கப் / சவ்வரிசி பால் - 1 கப் - 1 1/2 கப் நீர் - ஒரு கப் முந்திரி, திராட்சை - தேவைக்கு பாதாம், பிஸ்தா (விரும்பினால்) நெய் - ஒரு தேக்கரண்டி சர்க்கரை - அரை கப் ஏலக்காய் தூள் ஜவ்வரிசியை கழுவி கொதிக்க வைத்த நீரில் போட்டு ஒரு மணி நேரம் ஊற விடவும். பின் குக்கரில் வைத்து 1 - 2 விசில் வைத்து எடுக்கவும். பாதாம் பிஸ்தாவை பொடியாக நறுக்கி வைக்கவும். பாலை நன்றாக திக்காக காய்ச்சி ஆற வைக்கவும். பாத்திரத்தில் நெய் விட்டு முந்திரி, திராட்சை வறுத்து எடுக்கவும். அதே பாத்திரத்தில் நன்றாக வெந்து கண்ணாடி போல் இருக்கும் ஜவ்விரிசியை ஊற்றி சர்க்கரையை சேர்த்து கலக்கவும். சர்க்கரை நன்றாக கலந்து வந்ததும் கடைசியாக பால் சேர்க்கவும். இத்…
-
- 6 replies
- 5.6k views
-
-
-
- 14 replies
- 1.3k views
-
-
தீபாவளி ஸ்பெஷல் தேவையான பொருட்கள் 250 கிராம் கடலைமா 400 கிராம் சீனி 50 கிராம் பெரிய கல்லுசீனி 100 கிராம் கயு 25 கிராம் ஏலக்காய் 1/2 லீற்றர் எண்ணை 8 கப் தண்ணீர் 1/2 சுண்டு அவித்த கோதுமை மா சிறிதளவு உப்பு 1/2 மேசைக்கரண்டி பேக்கிங் பவுடர் மஞ்சள் கலறிங் செய்முறை: முதலில் கடலைமாவுடன் அவித்த கோதுமைமாவு, அளவான உப்பு, பேக்கிங்பவுடர், சிறிது மஞ்சள் நிற கலறிங், சேர்த்து நன்றாக அரித்து எடுக்கவும். பின்னர் அவற்றுடன் தண்ணீர் சேர்த்து தோசைக்கு மாக்கரைக்கும் பதத்திற்கு கரைத்து எடுக்கவும். அடுப்பில் தாச்சியை வைத்து எண்ணையை விட்டு சூடாக்கிக் கொள்ளவும். பூந்திக் தட்டு அல்லது துளைகள் உள்ள வேறு ஏதாவது பாத்திரத்தின் உட்புறமாக சிறிது எண்ணெய் தடவிய பின் எண்ணெய் தா…
-
- 19 replies
- 2.3k views
-
-
நீரிழிவு நோயாளிகள் உணவில் கவனமாக இருக்க வேண்டிய காரணத்தினால், அவர்கள் பல நேரங்களில் சுவையில்லாத உணவுகளையே அதிகம் சாப்பிட வேண்டியிருக்கும். ஆனால் அத்தகையவர்களுக்காக ஒரு அருமையான சைடு டிஷ் ரெசிபி உள்ளது. அது தான் பட்டாணிபன்னீர் கிரேவி. இதில் உள்ள பன்னீர் எளிதில் செரிமானமாகக்கூடிய உணவுப்பொருளாக இருப்பதால், இதனை பட்டாணியுடன் சேர்த்து கிரேவி போன்று செய்து சாப்பிடலாம். இது வயதானவர்களுக்கு ஏற்ற ஒரு சூப்பரான ரெசிபி. இதன் சுவையும் அருமையாக இருக்கும். சரி, இப்போது நீரிழிவு நோயாளிகள் சாப்பிடுவதற்கு ஏற்ற, அந்த பட்டாணி பன்னீர் கிரேவி ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: பச்சை பட்டாணி - 1 கப் பன்னீர் - 100 கிராம் (நறுக்கியது) வெங்காயம் - 2 (நறுக்கி…
-
- 0 replies
- 1.1k views
-
-
மாலையில் வடை சாப்பிட வேண்டுமென்று ஆசைப்பட்டால், அப்போது உடனே கடைக்கு சென்று வாங்கி வந்து சாப்பிடாமல், வீட்டிலேயே செய்து சாப்பிடுங்கள். அவ்வளவு பணம் செலவழித்து கடையில் வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக, அதனை வீட்டிலேயே செய்து சாப்பிட்டால், எத்தனை வேண்டுமானாலும் சாப்பிடலாம் அல்லவா. மேலும் வடை செய்வது என்பது மிகவும் எளிமையான ஒன்று. இப்போது வடையில் பருப்பு வடையை எப்படி செய்வதென்று பார்ப்போம்... தேவையான பொருட்கள்: கடலை பருப்பு - 3/4 கப் துவரம் பருப்பு - 1/4 கப் வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் - 2 வரமிளகாய் - 3 பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை கறிவேப்பிலை - சிறிது உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: கடலை பருப்பு மற்றும் துவ…
-
- 5 replies
- 1.5k views
-
-
தேவையான பொருட்கள் பூக்கோவா - ஒரு முழுப் பூ வெங்காயம் - 1 - 2 அல்லது சிறிய வெங்காயம் - 10-20 பச்சை மிளகாய் - 3 உப்பு - அளவானது. செய்முறை பூக்கோவாவைத் தனித்தனிக் கொத்துப் பூக்களாக வெட்டி நீரில் நன்றாகக் கழுவியபின் அரைக் கப் தண்ணீர் விட்டு உப்பும் போட்டு ஐந்து நிமிடங்கள் வேகவிடவேண்டும். அரை அவியலாக வெந்தபின் எடுத்து நீரை ஊற்றிவிட்டு அகப்பையால் மசிக்க மசிந்து தூளாக வரும். அதன்பின் அதை ஆறவிடவும். வெங்காயத்தையும் மிளகாயையும் சிறிதாக அரிந்து பூக்கோவாவினுள் போட்டு ஒன்றாக மசித்து உப்புத் தேவை எனின் சிறிது சேர்த்து தேசிக்காய்ப் புளியும் விட்டு நன்றாகக் கிளறி மரக்கறி சமைக்கும் நாட்களில் சோற்றுடன் உண்ண நன்றாக இருக்கும். விருந்தினர்கள் வரும்போது செய்து கொடுங்கள்…
-
- 3 replies
- 1.1k views
-
-
காலையில் இட்லி அல்லது தோசைக்கு தொட்டுக் கொள்ள என்ன சட்னி செய்வதென்று தெரியவில்லையா? அப்படியானால் கறிவேப்பிலை சட்னியை முயற்சி செய்து பாருங்கள். அதிலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள கறிவேப்பிலை சட்னி சற்று வித்தியாசமான சுவையைக் கொண்டது. சரி, இப்போது அந்த கறிவேப்பிலை சட்னியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: தேங்காய் - 1/2 கப் (துருவியது) உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலை - 1/4 கப் பச்சை மிளகாய் - 5 புளி - சிறு துண்டு மஞ்சள் தூள் - 1 சிட்டிகை கடுகு - 3/4 டீஸ்பூன் எண்ணெய் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு தண்ணீர் - தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் உளுத்தம் பருப்பு போட்டு பொன்னிறமாக வறுத்து, பின் …
-
- 0 replies
- 513 views
-
-
வெஜிடேபிள் முட்டை ரோல். மாலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியோடு வரும் குழந்தைகளுக்கு, நல்ல ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் செய்து தர ஆசையா? அப்படியானால், அதற்கு ரோல் சரியானதாக இருக்கும். அதிலும் வெஜிடேபிள் முட்டை ரோல் செய்து கொடுத்தால், அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் இந்த ரோலை காலையில் கூட செய்து சாப்பிடலாம். குறிப்பாக அலுவலகத்திற்கு செல்வோருக்கு ஏற்ற ரெசிபி. சரி, இப்போது அந்த வெஜிடேபிள் முட்டை ரோலை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: சப்பாத்தி - 1 உருளைக்கிழங்கு - 1 (வட்டமாக மெல்லியதாக நறுக்கியது) கத்திரிக்காய் - 1 (துண்டுகளாக்கப்பட்டது) முட்டை - 2 (அடித்துக் கொள்ளவும்) வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் - 1 (பொடி…
-
- 5 replies
- 1k views
-
-
சைனீஸ் உணவுகளில் மிகவும் பிரபலமான ஒன்று தான் டிராகன் சிக்கன் ரெசிபி. இத்தகைய சிக்கன் ரெசிபி அனைத்து சைனீஸ் ரெஸ்டாரண்ட்டுகளிலும் கிடைக்கும். மேலும் இதுவே ஸ்பெஷல் ரெசிபியும் கூட. இத்தகைய டிராகன் சிக்கன் ரெசிபியை எளிமையான முறையில் வீட்டிலேயே செய்யலாம். அதிலும் விடுமுறை நாட்களில் வித்தியாசமான ரெசிபியை முயற்சி செய்து குடும்பத்தினருடன் சாப்பிட்டால், அது இன்னும் இனிமையான அனுபவத்தைக் கொடுக்கும். சரி, இப்போது அந்த சைனீஸ் ஸ்பெஷல் ரெசிபியான டிராகன் சிக்கன் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: எலும்பில்லாத சிக்கன் - 1 கிலோ (சற்று நீளமாக வெட்டியது) இஞ்சி - 1/2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது) பூண்டு - 1/2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது) சில்லி ப்ளேக்ஸ் - 1…
-
- 1 reply
- 767 views
-
-
மீன் கோலா உருண்டை மீன், பெரும்பாலான அசைவ உணவு பிரியர்களுக்கு பிடித்தனமான ஒன்று. விடுமுறை காலத்தில் வீட்டில் அனைவரும் இருக்கும்போது, மீனை வைத்து ஓரே மாதிரியான குழம்பு, வறுவல் போன்றவற்றை செய்து போரடிக்காமல், இந்த புது வகை ஸ்நாக்சை செய்து அசத்துங்கள். தேவையானவை மீன் துண்டுகள் – 4 பிரெட் துண்டுகள் – 5 வெங்காயம் – 1 கரம் மசாலா – 1 ஸ்பூன் பச்சை மிளகாய் – சிறிது சீரகம் – 1 ஸ்பூன் முட்டை – 1 இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன் கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு உப்பு, எண்ணெய் – தேவைகேற்ப செய்முறை மீன் துண்டுகளை நன்றாக மஞ்சள் தூளில் போட்டு சுத்தம் செய்த பிறகு, அதனை சிறிய துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் போட்டு அரைத்துக்கொள்ளவும். பிரெட் துண்டுகளின் ஓரங்களை வெட்டி,…
-
- 4 replies
- 1.2k views
-
-
வைன்கோழிச்சாதம் தேவையான பொருட்கள். அரிசி கோழி ஸ்டொக் பட்டர் கோழி துடை 6 டபுள் கிரீம் அரை லீடர் வெள்ளை வைன் காப்போத்தில் பிரன்டி சின்ன குப்பி வெங்காயம் மூண்டு பெரிசு காட்டுக்காளான் 250 கிராம் செய்முறை. அரிசியை கோழி ஸ்டொக்குடன் பினைஞ்சு பட்டரில் லேசா வறுத்து, பின்னர் வழக்கம்போல் அவித்து வைத்துகொள்ளுங்கள். ரெண்டரை வெங்கயத்தை வட்டமை வெட்டி களானுடன் சேர்த்து பொண்ணிறமாய் பட்டரில் பொரித்து வைத்து கொள்ளவும். கோழியை பட்டரில் வேகும் வரை பொரித்துவிட்டு, அரைவாசி வெங்காயத்தை போட்டு லேசா கருக்கவும் அடுப்பை நூத்துவிட்டு குப்பி பிரன்டியை பக்குண்டு ஊத்தி குப்பெண்டு பத்தவைக்கவும்.( கவனம் பிள்ளைகாள் ) நெருப்பு அணைந்ததும் வைனை ஊத்தி அடுப்பில் வைத்து 5…
-
- 3 replies
- 836 views
-
-
இந்தியா, சீனா மற்றும் மேற்கத்திய நாடுகளில் தங்க கலவையினால் ஆன டீ விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் துபாயில் முதன் முறையாக இந்த தங்க டீ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. துபாயில் உள்ள மொக்கா ஆர்ட் கபே ஓட்டலில் இந்த டீ விற்கப்படுகிறது. இது 22 கேரட் தங்கத்தை கலந்து தயாரிக்கப்படுகிறது. இதன் விலை ஒரு கப் 55 தினார் மட்டும். மொக்கா ஆர்ட் கபேயின் நிறுவனர் அஷ்ரப்மக்ரான் (32) எகிப்தை சேர்ந்தவர். தங்க டீ குறித்து அவர் கூறியதாவது: இந்த டீயை இங்கிலாந்தில் உள்ள ஒரு ஓட்டலில் குடித்தேன். அதன் சுவை எனக்கு பிடித்து விட்டது. அதைத் தொடர்ந்து இந்த டீயை துபாயில் அறிமுகம் செய்தேன்.இலங்கையில் இருந்து தேயிலை இறக்குமதி செய்யப்பட்டு ஜெர்மனிக்கு அனுப்பப்படுகிறது. அங்கு அவை 22 கேரட…
-
- 2 replies
- 686 views
-
-
தேசிகாய் ஊறுகாய் தேவையான பொருட்கள் 1. இறாத்தல் (lb) மெக்சிக்கன் தேசிக்காய்/ எலுமிச்சம் காய் (ஊரில் உள்ள தேசிக்காய்களிலும் சிறிது, கனடாவில் Key lime என்ற பெயரில் ஒரு இறத்தல் பைகளில் கிடைக்கும், இது கிடைக்காவிட்டால் பெரிய தேசிகாயை பாவிக்கலாம்) Key lime image from : http://pintsizebaker.com/key-lime-pie 2 . மேசை உப்பு - 1 1 /2 கப் 3 . மஞ்சள் போடி - 3 மேசை கரண்டி 4 . 600 மில்லி லிட்டர்/ 1 லிட்டர் கொள்ளளவு உள்ள வாய் அகன்ற, இறுக்கமான மூடி உடைய கண்ணாடி போத்தல் (pasta souse போத்தல் பொருத்தமாக இருக்கும்) 5 . பேக்கிங் தட்டு (Baking tray) , மெழுகு கடதாசி (Parchment paper) 6 . 20 சாதாரண/பெரிய தேசிகாய் ( இது 3 கிழமைகளின் பின் தான் தேவைப்படும் ) …
-
- 1 reply
- 916 views
-
-
மொத்த சமையல் நேரம்: 1 மணித்தியாலம். (நீங்கள் தொடர்ந்து சமையலறையில் இருக்கனுன்னு அவசியம் இல்லை. இதையே சாட்டு வைச்சு.. ஊரை ஏமாற்றாமல்.. வேறு பயனுள்ள அலுவலையும் கவனிச்சுக் கொண்டு இதனை தயார் செய்யலாம்.) தேவையான பொருட்கள்: செய்முறை: * சுத்தமான பாத்திரத்தில் போதியளவு சுடுநீரை ஊற்றி பாஸ்ராவை வேக வைக்கவும். * பாஸ்ரா நன்கு வெந்து வந்த பின்.. மேலதிக நீரை வடித்து அகற்றவும். * அதன் பின் வெந்த பாஸ்ராவுக்குள் தேவையான அளவு ( பொதுவாக 4 தொடக்கம் 6 மேலே படத்தில் காட்டியது போன்ற ஒரு பக்கெட் பாஸ்ராவுக்கு மேசைக் கரண்டி..) பாஸ்ரா சோசை விட்டு கரண்டியால்..நன்கு கலக்கவும். * சிறிதளவு துருவிய சீஸையும் கொட்டி நன்கு கலக்கவும். * சுவைக்கு ஏற்ப உப்புச் சேர்த்தும் கலக்கிக் கொள்ளவும…
-
- 56 replies
- 5.4k views
-
-
என்னென்ன தேவை? கேரட் - 2, பாதாம் - 6, ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை, பால் - 2 கப், சர்க்கரை - தேவைக்கேற்ப. எப்படிச் செய்வது? கேரட்டை தோல் சீவிக் கழுவி, துருவி, பச்சை வாசனை போக வதக்கவும். பாதாம் பருப்பை ஊற வைத்துத் தோல் நீக்கி, கேரட்டுடன் சேர்த்து மிக்சியில் நைசாக அரைக்கவும். பிறகு வடிகட்டி, ஏலக்காய் தூள் சேர்த்து, காய்ச்சி, ஆற வைத்த பால் சேர்த்துக் கலந்து, குளிர வைத்துப் பரிமாறவும். http://www.dinakaran.com/cooking_Detail.asp?cat=502&Nid=1680
-
- 0 replies
- 530 views
-
-
ஜங்லி மட்டன் குழம்பு ஒரு ராஜஸ்தான் ரெசிபி. பொதுவாக ராஜஸ்தான் ரெசிபிக்கள் மிகவும் காரமாகவும், அதே சமயம் சுவையானதாகவும் இருக்கும். மேலும் இது ஒரு வித்தியாசமான சுவையையும் தரும். குறிப்பாக எளிதில் செய்யக்கூடியது. பேச்சுலர்கள் கூட, இந்த ரெசிபியை முயற்சிக்கலாம். சரி, இப்போது அந்த ரெசிபியைப் பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: மட்டன் - 1 கிலோ வெங்காயம் - 2 (நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன் தக்காளி - 2 (நறுக்கியது) மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் வரமிளகாய் (செத்தல் மிளகாய்) - 8 சீரகம் - 1 டீஸ்பூன் மிளகு - 1 டீஸ்ழுன் மல்லி - 1 டேபிள் ஸ்பூன் கசகசா - 1 டீஸ்பூன் கடுகு - 1/2 டீஸ்பூன் பட்டை - 1 இன்ச் ஏலக்காய் - 5 பிரியாணி இலை - 1 உப்பு - த…
-
- 1 reply
- 570 views
-
-
தமிழகத்தின் பாரம்பரிய உணவான இட்லி, சாம்பார் தான் அதிக சத்துக்கள் நிறைந்த காலை உணவு என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மற்ற பெரு நகரங்களில் சாப்பிடப்படும் காலை உணவுடன் ஒப்பிடுகையில் சென்னையின் இட்லி, சாம்பார் தான் அதிக சத்துக்கள் நிறைந்தது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்திய காலைநேர உணவு பழக்கம் குறித்து மும்பை, டில்லி, கோல்கட்டா, சென்னை ஆகிய 4 பெருநகரங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. 8 முதல் 40 வயது வரையிலான சுமார் 3600 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டு, அவர்களின் உடலில் நிறைந்துள்ள சத்துக்களின் அளவு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கார்போஹைட்ரோட், ஆற்றல், புரோட்டீன், கொழுப்புக்கள், கால்சியம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது.சமீப காலமா…
-
- 0 replies
- 479 views
-
-
வட்டிலப்பம் என்ன வேணும்: முட்டை 10 கித்துள் பனங்கட்டி 750 g முந்திரிகொட்டை ( கஜூ ) 100g தேங்காய்ப்பால் 2 கப் ஏலக்காய் தேவையான அளவு பட்டர் தேவையான அளவு கூட்டல்: கித்துள் பனங்கட்டியை சின்னதாய் வெட்டி தேங்காய் பாலுடன் நன்றாக கரையுங்கோ . முட்டையை நன்றாக அடிச்சு வையுங்கோ . பின்பு ஏலக்காயை பொடிசெய்து அடிச்ச முட்டையோடை சேருங்கோ . முந்திரிக்கொட்டையை சின்னதாய் வெட்டி கலவையிலை போடுங்கோ . பின்பு தேங்காய்பால் கலவையையும் ஒன்றாய் கலக்குங்கோ . இப்போ வட்டிலப்பதின்ரை கலவை தயார் . இந்த கலவையை பட்டர் பூசின சின்ன கிண்ணங்களிலை ஊத்தி நீராவியிலை ( steamer ) வேகவையுங்கோ . மைத்திரேயி 18/07/2013
-
- 8 replies
- 1.3k views
-
-
பாகற்காய் கசப்பு என்பதற்காக பலர் இதனை அதிகம் சாப்பிடமாட்டார்கள். ஆனால் பாகற்காயை சரியான பக்குவத்தில் சமைத்து சாப்பிட்டால், நிச்சயம் அது மற்ற உணவுகளின் சுவையை விட சூப்பராக இருக்கும். அந்த வகையில் இங்கு அருமையான முறையில் எப்படி பாகற்காயை சுக்கா செய்வதென்று கொடுத்துள்ளோம். அந்த பாகற்காய் சுக்கா மிகவும் எளிமையான செய்முறையைக் கொண்டது. மேலும் இந்த பாகற்காய் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறப்பான ஒரு உணவுப் பொருள். ஆகவே நீரிழிவு நோயாளிகள் இதனை அதிகம் உட்கொண்டு வந்தால், நீரிழிவு நோயை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள முடியும். சரி, இப்போது அந்த பாகற்காய் சுக்காவின் செய்முறையைப் பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: பாகற்காய் - 4 (நறுக்கியது) வெங்காயம் - 2 (பெரியது மற்றும் …
-
- 13 replies
- 2.4k views
-