நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
-
நீண்ட காலமாக மரவள்ளியும் பூசணியும் சேர்த்து வீட்டில் கறி வைப்பது வழமை.பலருக்கும் மரவள்ளி கறி பிடிக்கும்.ஆனால் நிறைய பேருக்கு பூசணிக்காய் கறி பிடிக்கவே பிடிக்காது.ஆனால் இந்த இரண்டையுமே சேர்த்து செய்தால் விரும்பி சாப்பிடாதவர்களே இருக்க முடியாது. அத்துடன் மிகவும் இலகுவான முறையிலான சுவையான சமையல். மரவள்ளி வாங்கும் போது அடி வேர்ப்பகுதி மெல்லிதாக இருப்பதை வாங்குங்கள்.மேலிருந்து கீழ்வரை நகத்தால் இடைஇடையே சுரண்டிப் பாருங்கள்.(கடைக்காரரும் உங்களை பார்க்கிறார்களா என்பதையும் பாருங்கள்)ஏதாவது கறுப்பாக தெரிந்தால் வாங்காதீர்கள்.பால் போல வெள்ளையாக இருந்தால் மட்டும் வாங்குங்கள்.நுனி கொஞ்சம் கறுத்து பழுதாகி இருந்தால் பரவாயில்லை.சிறிய துண்டு தானே வெட்டி எறியலாம். …
-
- 44 replies
- 3.8k views
- 1 follower
-
-
தேவையான பொருட்கள்: மரவள்ளிக் கிழங்கு 1/2 கிலோ கோதுமை மா 01 மேசைக்கரண்டி (நிரப்பி) சிறிதாக வெட்டிய வெங்காயம் 02 மேசைக்கரண்டி சிறிதாக வெட்டிய பச்சை மிளகாய் 02 மேசைக்கரண்டி தனி மிளகாய்த் தூள் அளவிற்கு சிறிதாக வெட்டிய கறிவேப்பிலை 01 மேசைக்கரண்டி பெரிய சீரகம் சிறிதளவு தேங்காய் எண்ணெய் 1/2 போத்தல் உப்பு அளவாக செய்முறை: மரவள்ளிக் கிழங்கை, தோலுரித்துக் கழுவி ஸ்கிரேப்பரில் துருவி எடுத்துக் கொள்க. இத்துருவலைப் பாத்திரத்திலிட்டு அரித்த கோதுமை மா, வெட்டிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சீரகம், மிளகாய்த்தூள் உப்புத்தூள் என்பவற்றைப் போட்டு நன்கு பிசைந்து குழைத்துக் கொள்க. கலவையை தேசிப்பழமளவு உருண்டைகளாக பிடித்து உள்ளங்கையில் வைத்து மெதுவ…
-
- 13 replies
- 3.1k views
-
-
மரவள்ளிக் கிழங்கு புட்டு இதுவரை எத்தனையோ வித்தியாசமான புட்டுகளை செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் மரவள்ளிக் கிழங்கைக் கொண்டு புட்டு செய்து சுவைத்ததுண்டா? உண்மையில் இது வித்தியாசமான ருசியில் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். இது ஓர் ஆரோக்கியமான ஸ்நாக்ஸாகவும், காலை உணவாகவும் இருக்கும். சரி, இப்போது அந்த மரவள்ளிக் கிழங்கு புட்டு ரெசிபியை எப்படி எளிமையான முறையில் செய்வதென்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: மரவள்ளிக் கிழங்கு - 1 கிலோ தேங்காய் - 1 1/2 கப் (துருவியது) உப்பு - தேவையான அளவு செய்முறை: முதலில் மரவள்ளிக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை துர…
-
- 3 replies
- 825 views
-
-
தேவையானவை மரவள்ளிக்கிழங்கு - 500 கிராம் கருவாடு - 100 கிராம் கறித்தூள் - ஒரு தேக்கரண்டி உப்பு - ஒரு தேக்கரண்டி பால் - 1/2 டம்ளர் எலுமிச்சம் பழம் - பாதி தாளிக்க: சின்ன வெங்காயம் - 30 கிராம் செத்தல் மிளகாய் - 3 கறிவேப்பிலை - 2 கொத்து கடுகு - அரை தேக்கரண்டி எண்ணெய் - 2 மேசைக்கரண்டி செய்முறை வெங்காயத்தை தோல் உரித்து வைத்துக் கொள்ளவும். மற்ற தேவையான அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். மரவள்ளிக்கிழங்கை தோல் உரித்து சிறுத் துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். கருவாட்டை 10 நிமிடங்கள் சூடான தண்ணீரில் போட்டு ஊற வைத்து நன்கு கழுவி சுத்தம் செய்து சிறுத் துண…
-
- 4 replies
- 1.7k views
-
-
மருத்துவ குணம் நிறைந்த சீரகக் குழம்பு செய்ய...! தேவையானவை: சீரகம் - 2 டேபிள்ஸ்பூன் புளி - ஒரு எலுமிச்சை அளவு பெரிய வெங்காயம் - 1 பூண்டு - 5 அல்லது 6 பல் சாம்பார் பொடி - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன் வெல்லம் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு தாளிக்…
-
- 1 reply
- 1k views
-
-
மலபார் சிக்கன் ரோஸ்ட் கேரளா ஸ்டைல் உணவுகளின் சுவையே தனி தான். அதிலும் மலபார் சிக்கன் ரோஸ்ட் மிகவும் அருமையாக இருக்கும். விடுமுறை நாட்களில் வீட்டில் பொறுமையாக செய்து சாப்பிடுவதற்கு ஏற்ற ரெசிபியும் கூட. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். சரி, இப்போது அந்த மலபார் சிக்கன் ரோஸ்ட் எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: சிக்கன் லெக் பீஸ் - 6 வெங்காயம் - 20 (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது) இஞ்சி - 1 துண்டு (நீளமாக நறுக்கியது) தேங்காய் எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன் மிளகுத் தூள் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான…
-
- 3 replies
- 605 views
-
-
[size=4]கேரளா என்றாலே அங்கு மீன் தான் ஸ்பெஷல். அதிலும் அவர்கள் மலாபாரில் செய்யும் பிஷ் ப்ரையின் சுவைக்கு அளவே இருக்காது. அவ்வளவு சுவையானதாக இருக்கும். அத்தகைய பிஷ் ப்ரையை வீட்டிலேயே விடுமுறை நாட்களில் சமைத்து, மதிய வேளையிலோ அல்லது ஈவினிங்கிலோ சாப்பிடலாம். இப்போது அந்த மலபார் ஸ்டைல் பிஷ் ப்ரையை எவ்வாறு செய்வதென்று பார்ப்போமா!!![/size] [size=4]தேவையான பொருட்கள்:[/size] [size=4]மீன் - 8 (ஏதேனும் ஒரு மீன்) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் பச்சை மிளகாய் பேஸ்ட் - 1 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 சிட்டிகை மிளகு தூள் - 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு[/size] [size=4]செய்ம…
-
- 1 reply
- 639 views
-
-
மலாய் ஃபிஷ் டிக்கா மசாலா என்னென்ன தேவை? ஷீலா மீன் - 500 கிராம், பச்சைமிளகாய் - 2, ஹங்க் கர்ட் - 50 கிராம் (கெட்டியான தயிரை மஸ்லின் துணியில் கட்டி தொங்க விட்டு, அதில் உள்ள அதிக தண்ணீர் வடிந்து கிடைக்கும் கெட்டியான தயிர்), கொத்த மல்லித்தழை - சிறிது, இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச்சாறு - 1/2 மூடி, வெள்ளை மிளகுத்தூள் - 1 டீஸ்பூன், வறுத்த சீரகப் பொடி - 1 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு. எப்படிச் செய்வது? ஒரு பாத்திரத்தில் மீனை நன்கு சுத்தம் செய்து தண்ணீர் இல்லாமல் வைக்கவும். கொடுத்துள்ள அனைத்து மசாலாக்களையும் கலந்து, மீனுடன் சேர்த்து நன்கு பிரட்டி அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து ஊறவைக்கவும். பின்பு கிரில் அல்…
-
- 0 replies
- 417 views
-
-
My First Time Eating Penis Soup in Malaysia | Unheard of Malaysian Food யாராவது நவராத்திரி, புரட்டாசி சனி விரதகாரர் இந்த பக்கம் வரவேண்டாம்...
-
- 7 replies
- 892 views
- 1 follower
-
-
மல்டி கிரெய்ன் ரொட்டி (தினம் ஒரு சிறுதானியம்-9) இன்று பெரும்பாலான வீடுகளில் இரவு நேரத்தில் சப்பாத்திதான் உணவாக இருக்கிறது. இதயநோய், சர்க்கரை நோய், ஒபிசிட்டி என நோயின் பாதிப்புகள் அதிகரித்திருப்பதுதான் இதற்கு காரணம். கோதுமையைப் பயன்படுத்தி மட்டுமே சப்பாத்தி செய்யாமல், சிறுதானியங்கள், பயறு வகைகளையும் சேர்த்து அரைத்து, சப்பாத்தி செய்வது உடலுக்கு வலுவைக் கூட்டும். இதனுடன் காய்கறி கலவைச் சேர்த்துக்கொண்டால், ஒட்டுமொத்த சத்தும் உடலில் சேரும். மல்டி கிரெய்ன் ரொட்டி தேவையானவை: முழு கோதுமை, மக்காச்சோளம், முளைக்கட்டி காயவைத்த கேழ்வரகு, தோல் நீக்காத கறுப்புக் கொண்டைக்கடலை, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. கொடுத்துள்ள தானியங்களை சம அளவு எடுத்து, நைஸாக அரைத்து மாவாக்கவும். இதை ந…
-
- 0 replies
- 676 views
-
-
இங்கு மழையும் நின்றபாடில்லை, நான் சூப் சமைப்பதும் நின்றபாடில்லை என்றாகிவிட்டது. பாவம் வீட்டில் உள்ளவர்கள் நிலமை கவலைக்கிடம் தான். ஆனாலும் எனக்கு கடமைன்னு வந்தால் பாசமெல்லாம் இரண்டாம் பச்சம் தான். சைவ சூப் என்பதால் அனைவயும் முயற்சித்துப்பார்க்கலாம். தேவையானவை: கரட் 1 பீன்ஸ் 5 மிளகு 5 சோளம் 1/2 கப் சோளமா 2 மே.க வினிகர் 1 தே.க சோய்சோஸ் 1 தே.க பச்சைமிளகாய் 2 உப்பு முதலில் செய்ய வேண்டியவை: 1. பச்சை மிளகாயை சின்னதாக அரிந்து எடுங்க. 2. கரட், பீன்ஸை சுத்தம் செய்து சின்னதா அரிந்து எடுங்க. 3. சோள மாவை 1/2 கப் நீரில் கரைத்து எடுத்து வைத்துக்கொள்ளுங்க. 4. மிளகை தூளாக்கி வைக்கவும். செய்முறை: 1. ஒரு பாத்திரத்தில் 2 கப் நீரை சுட வை…
-
- 14 replies
- 3.6k views
-
-
மலாய் பேடா ----------------- காளான் - 2 கப் தேங்காய் துருவல் - 1 கப் வெங்காயம் - 2 மிளகாய் - 5 மிளகு, தனியா, இலவங்கப்பட்டை, இலவங்கம், மஞ்சள் தூள்,பூண்டு,கொத்துமல்லி - தேவையான அளவு. செய்முறை --------------- முதலில் காளானை சிறுசிறு துண்டுகளாக வெட்டி, வெந்நீரில் போட்டு நன்றாக வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்றாக பொன்னிறமாகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். சிறிது எண்ணெயில் இலவங்கம், பட்டை, தனியா, மிளகு, பூண்டு, மிளகாய் போட்டு வதக்கவும். தேங்காய் துருவலை தனியாக வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மசாலாக்களை நன்றாக விழுதாக அரைத்து கொள்ளவும். இத்துடன் வேக வைத்த காளானை நன்றாக க…
-
- 2 replies
- 2.1k views
-
-
-
1- சுண்டு சோளம் மா 2- சுண்டு தண்ணீர் 1 or (3/4)- சுண்டு சீனி 6- மேசைக்கரண்டி நெய் தேவையான அளவு மஞ்சள் கலர்ப்பொடி தேவையான அளவு ஏலக்காய்ப்பொடி தேவையான அளவு மஞ்சள் முந்திரிகைவத்தல் தேவையான அளவு சிறிதாக்கப்பட்ட கசு நெய்யில் பொரித்தது ஒரு சுண்டு சோளன் மாவை இரண்டு சுண்டு தண்ணீரில் நன்றாகக்கலக்கி ஒரு மணித்தியாலம் ஊறவிடவும் பின் ஒரு சுண்டு சீனியை நெய்யினில் இட்டு பொன்நிறமாகும் வரை வறுக்கவும் அதன் பின் மாவில் இட்ட தண்ணீரை முதலில் வறுக்கப்படும் சீனியுள் ஊற்றி நன்றாக கரையும்வரை கலக்கவும். பின் சோளன் மாவை கரைத்து அதனுள் உற்றி நன்றாக கிண்டவும் உறுண்டு திரண்டு வரும்வரை கிண்டவும் பின் கசு, முந்திரிகை வத்தல் எலக்காய்ப் பொடி போடவும். நன்றாக கிண்டியபின் தட்டில் கொ…
-
- 26 replies
- 9k views
-
-
(தேவைகேற்ப அளவை மாற்றிக்கொள்ளுங்கள்) தேவையான பொருட்கள்: (10 கிலோ மஸ்கோத் அல்வா தயாரிக்க) சர்க்கரை - 5 கிலோ, தரமான தேங்காய் - 30, மைதா மாவு - ஒன்றரை கிலோ, முந்திரிப் பருப்பு - 400 கிராம். செய்முறை: முதல் நாளே, மைதா மாவில் தண்ணீர் ஊற்றி பரோட்டா பதத்துக்கு உருட்டி உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு சொம்பில் தண்ணீர் எடுத்து, ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ளுங்கள். கைகள் இரண்டிலும் கிளவுஸ் அணிந்து கொள்ளுங்கள். இனி உருட்டி வைத்திருக்கும் மாவு உருண்டைகளில் இருந்து ஒன்றை எடுத்து, தண்ணீர் இருக்கும் பாத்திரத்தில் போட்டு, ஐந்து நிமிடம் இரண்டு கைகளாலும் மாவை நன்றாக பிசைய வேண்டும். அதிலிருந்து பால் மெதுவாக வெளியேறும். தண்ணீர் கலந்த இந்த பாலை, வேறு ஒரு பெரிய பாத்திரத்தில…
-
- 1 reply
- 2.8k views
-
-
மஸ்டர்ட் இறால் மசாலா என்னென்ன தேவை? மிளகாய்த்தூள்- 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் - 2 டேபிள்ஸ்பூன், கருஞ்சீரகம் - சிறிது, உப்பு - தேவைக்கு, சர்க்கரை - 1 டீஸ்பூன், தேங்காய் விழுது - 4 டேபிள்ஸ்பூன், அரைத்த கடுகு விழுது - 4 டேபிள்ஸ்பூன், தயிர் - 5 டேபிள்ஸ்பூன், இறால் - 350 கிராம், கடுகு எண்ணெய் - 6 டேபிள்ஸ்பூன். எப்படிச் செய்வது? இறாலை நன்கு சுத்தம் செய்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 30 நிமிடம் தனியே வைக்கவும். பிறகு தயிர், மிளகாய்த்தூள், சர்க்கரை, தேங்காய் விழுது, கடுகு விழுது சேர்த்து நன்கு கிளறவும். கடாயில் கடுகு எண்ணெயை ஊற்றி கருஞ் சீரகம் போட்டு தாளித்து, இறால் மசாலாவை சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி வேகவ…
-
- 0 replies
- 846 views
-
-
[size=4]இன்றைய குழந்தைகளுக்கு இட்லி, தோசையெல்லாம் சாப்பிட்டு பிடித்தது போய், மேகி, நூடுல்ஸ் போன்றவற்றை விரும்பி சாப்பிட ஆரம்பித்துவிட்டனர். அதிலும் சைனீஸ் ஸ்டைலில் செய்து கொடுத்தால், விரும்பி சாப்பிடுவர். அத்தகைய ருசி ஹோட்டலில் மட்டும் கிடைப்பதில்லை, வீட்டில் சமைத்தால் கூட வரும். இப்போது அந்த வகையில் நூடுல்ஸில் ஒரு வகையான மஸ்ரூம் சில்லி நூடுல்ஸை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!![/size] [size=4]தேவையான பொருட்கள்:[/size] [size=4]நூடுல்ஸ் - 2 பாக்கெட் (400 கிராம்) காளான் - 10 (நறுக்கியது) வெங்காயம் - 1 (நறுக்கியது) இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன் குடை மிளகாய் - 1 (நறுக்கியது) பச்சை மிளகாய் - 2 (கீறியது) சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன் வினிகர் - 1 டேபிள் ஸ்பூன் …
-
- 3 replies
- 1.1k views
-
-
மஸ்ரூம் பெப்பர் ப்ரை மதிய வேளையில் நொடியில் மிகவும் சுவையான சைடு டிஷ் செய்ய வேண்டுமா? அதிலும் உங்கள் வீட்டில் காளான் இருக்கிறதா? அப்படியெனில் அதனைக் கொண்டு பெப்பர் ப்ரை செய்யுங்கள். இது மிகவும் சுவையான மற்றும் காரமான ஒரு சைடு டிஷ். மேலும் வீட்டில் உள்ளோர் அனைவருமே விரும்பி சாப்பிடும்படி இருக்கும். சரி, இப்போது அந்த மஸ்ரூம் பெப்பர் ப்ரையை எப்படி செய்வதென்று பார்ப்போமா...! தேவையான பொருட்கள்: காளான் - 1 கப் (நறுக்கியது) மிளகு - 1 டேபிள் ஸ்பூன் குடைமிளகாய் - 1/2 (நீளமாக வெட்டியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் பெரிய வெங்காயம் - 1 (நீளமாக வெட்டியது) மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் கரம் மசாலா - 1/4 டீஸ்பூன் …
-
- 5 replies
- 845 views
-
-
மஸ்ரூம் ரெசிபி மதியம் ஒரே மாதிரி சைடு டிஷ் செய்து சுவைத்து அலுத்துவிட்டதா? அப்படியெனில் இன்று சற்று வித்தியாசமாக காளானை தவாவில் செய்து சுவையுங்கள். இது உண்மையிலேயே வித்தியாசமாக இருக்கும். மேலும் வீட்டில் உள்ளோர் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும். தேவையான பொருட்கள்: காளான் - 1 கப் (நறுக்கியது) குடைமிளகாய் - 1/4 கப் (நறுக்கியது) பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது) தக்காளி - 1 (அரைத்தது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன் சீரகப் பொடி - 1/4 டீஸ்பூன் மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன் கரம் மசாலா - 1/4 டீஸ்பூன் உலர்ந்த வெந்தய கீரை - 1/2 டீஸ்…
-
- 0 replies
- 534 views
-
-
மாங்காய் இஞ்சி நெல்லிக்காய் துவையல் செய்ய... மாங்காய் இஞ்சி நெல்லிக்காய் துவையல் செய்ய... தேவையானவை: பெரிய நெல்லிக்காய் - 4 மாங்காய் இஞ்சி - 50 கிராம் கொத்துமல்லித் தழை - கைப்பிடி பச்சை மிளகாய் - 2 புளி - சிறு அளவு துருவிய தேங்காய் - ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண…
-
- 0 replies
- 672 views
-
-
மாங்காய் சம்பல் எங்கள் வாழ்வில் சின்ன வயசில் அம்மா சமைத்த சாப்பாட்டை விட இதை தானே அதிகம் சாப்பிட்டு இருக்கிறம்... தேவையானது: மாங்காய் மிளகாய் தூள் உப்பு வெங்காயம் (நான் யாரையும் திட்டவில்லை) மிளகாய் (நிறைய போட்டு போட்டு பிறகு....என்னை குறை சொல்ல வேண்டாம்) 1. மாங்காயை சின்னனா வெட்டுங்க. 2. வெங்காயம், மிளகாயை சின்னதா வெட்டுங்க 3. மேலே குறிப்பிட்ட அனைத்தையும் ஒன்றாக போட்டு கலக்கவும். 4. மற்றவர்களுக்கும் குடுத்து சாப்பிடவும். பி.கு - களவெடுத்த மாங்காய்க்கு ருசி அதிகமாம்..ஆனால் காவல்துறையில் இருந்து உங்களை வெளியே எடுக்க நாங்கள் வரமாட்டோம். நன்றி சரி சரி உங்கட மாங்காய் சம்பல் கதைகளை எழுதுங்கோ..
-
- 45 replies
- 9k views
-
-
மாங்காய் சாதம் தேவையான பொருட்கள் அரிசி - 1 கோப்பை (200 கிராம்) மாங்காய் - 1 சிறியது (சுமாரான புளிப்பு) காய்ந்த மிளகாய் - 4 வெந்தயத் தூள் - 1/4 தேக்கரண்டி மஞ்சள்தூள் - 2 சிட்டிகை கறிவேப்பிலை - 3 கொத்து கடுகு - 1/4 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி கடலைப்பருப்பு - 1/2 தேக்கரண்டி பெருங்காயம் - 3 சிட்டிகை நிலக்கடலை - 25 கிராம் நல்ல எண்ணெய் -25 கிராம் உப்பு - 1 தேக்கரண்டி செய்முறை 1. அரிசியை கழுவி 2 1/2 கோப்பை தண்ணீர் விட்டு குலையாமல் வேக வைத்து ஒரு தட்டில் ஆற வைத்துக் கொள்ளவும். மாங்காயை துருவிக் கொள்ளவும். 2. நிலக்கடலையை நெய்யில் வறுத்துக் கொள்ளவும். 3. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், …
-
- 3 replies
- 1k views
-
-
தேவையான பொருட்கள்: சாதம் - 2 கப், துருவிய மாங்காய் - 1 கப் தேங்காய்த் துருவல் - 1/2 கப் கடுகு - 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன் கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன் வறுத்த வேர்க்கடலை -1 டேபிள்ஸ்பூன் காய்ந்த மிளகாய் - 4 உப்பு - தேவைக்கு ஏற்ப கறிவேப்பிலை - சிறிதளவு பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் …
-
- 0 replies
- 1.1k views
-
-
மாங்காய் சாம்பார் FacebookTwitterPinterestEmailGmailViber தேவையானவை மாங்காய் – 1, துவரம் பருப்பு – 3/4 கப், சாம்பார் பொடி – 2 தேக்கரண்டி பழப்புளி – தேவையான அளவு மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி சின்ன வெங்காயம் – 10 தக்காளி – 1 (நறுக்கியது) வெந்தயம் – 1/4 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு – 1/2 தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு. தாளிப்பதற்கு. எண்ணெய் – 2 தேக்கரண்டி கடுகு – 1 1/2 கரண்டி கறிவேப்பிலை – சிறிது செத்தல் மிளகாய் – 2, பெருங்காயத் தூள் – சிறிதளவு செய்முறை முதலில் மாங்காயை கழுவி, அதனை பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும் பின்னர் துவரம் பருப்பை நன்கு கழுவி,…
-
- 0 replies
- 932 views
-