நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
வெங்காய தாள் கூட்டு தேவையான பொருட்கள்: வெங்காயத்தாள் - 5 கட்டு காய்ந்த மிளகாய் - 2 பாசிப்பாருப்பு - 5 தேக்கரண்டி[தனியாகவேகவைக்கவும்} உப்பு-தேவைக்கு தாளிக்க எண்ணெய் =தேவைக்கு சாம்பார் பொடி - 1/4 டீஸ்பூன் தேங்காய்த்துருவல் - 2 தேக்கரண்டி கறிவேப்பிலை - சிறிது கடுகு - 1 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன் கடாயில் எண்ணெய் விட்டு தாளிப்பு பொருட்களைப் போட்டு தாளிக்கவும் நறுக்கிய வெங்காய தால் போட்டு வதக்கவும் சாம்பார் பொடி பாசிப்பருப்பு போட்டு வதக்கவும அப்படியே சிம்மில் வைத்து வேகவிடவும்தேங்காய்த்துறுவல் சேர்த்து இறக்கவும் சுவையான வெங்காயதாள் கூட்டு ரெடி ... சோற்றில் தொட்டுக…
-
- 4 replies
- 7k views
-
-
அரைத்த ஆட்டிறைச்சி கறி செய்யத் தேவையான பொருட்கள்; அரைத்த ஆட்டிறைச்சி வெங்காயம் உள்ளி,இஞ்சி தூள்,உப்பு,மஞ்சல் தேவையான அளவு பச்சை மிளகாய் தக்காளிப் பழம் கருவேப்பிலை,ரம்பை[இருந்தால் போடவும்] வழமையாக இறைச்சி தாளிக்க தேவையான பொருட்கள் எண்ணெய் தேசிக்காய் கொத்தமல்லி இலை செய்முறை; இறைச்சியை வடிவாய்க் கழுவி வடி கட்டி தண்ணீரைப் பிழிந்து எடுக்கவும்[வெள்ளைத் துணி இருந்தால் அதன் மூலம் பிழியலாம், வடியைப் பாவிக்கலாம் அல்லது கையால் பிழியவும். கழுவிய இறைச்சிக்குள் மஞ்சல்,உப்பு போட்டு புரட்டவும். அடுப்பை பற்ற வைத்து பாத்திரத்தை அடுப்பில் வைத்து காய்ந்ததும் முதலில் வெங்காயம்,உள்ளி,இஞ்சி போட்டு எண்ணெயை விடவும். வெங்காயம் சற்று பொன்னிறமாய் வதங்க…
-
- 13 replies
- 2.7k views
-
-
-
- 0 replies
- 942 views
-
-
தேவையான பொருட்கள் பெரிய மக்கரல் மீன் - 2 (சிறிய துண்டங்களாக வெட்டிக்கொள்ளவும்) மிளகாய் தூள் - 3 மேசைக் கரண்டி சின்ன வெங்காயம் - 10 (சிறிய துண்டுகளாக அரியவும்) பச்சை மிளகாய் - 3 (சிறிய துண்டுகளாக அரியவும்) பழப் புளி கரைசல் - கால் கப் (ஒரு தேசிக்காய் உருண்டை அளவு) உள்ளி - 1 பூண்டு தேங்காய்ப் பால் - அரை கப் (கொழுப்பென்பதால் தவிர்ப்பத நல்லது. ஆனால் சுவை.) தண்ணீர் - ஒரு கப் தேசிக்காய் - 1 சின்ன சீரகம், பெருஞ்சீரகம், வெந்தயம் - ஒவ்வொன்றும் ஒரு தேக்கரண்டி அளவு உப்பு /…
-
- 55 replies
- 7.6k views
-
-
-
- 21 replies
- 2.4k views
-
-
எண்ணைய் கத்திரிக்காய் குழம்பு தேவையான பொருட்கள்:- கத்தரிக்காய் -4 புளி -ஒரு எலுமிச்சை அளவு எண்ணைய் -2 டேபிள்ஸ்பூன் மிளகாய்வத்தல் -2 கடுகு -1 டேஸ்பூன் பெருங்காயம் -சிறிது மஞ்சள்தூள் -1/4டேஸ்பூன் பொடிதயாரிக்க:- கடலைபருப்பு -1டேபிள்ஸ்பூன் உளுத்தம்பருப்பு -1 டேஸ்பூன் தனியா -1 டேஸ்பூன் மிளகாய்வத்தல் …
-
- 2 replies
- 2.7k views
-
-
தேவையான பொருட்கள் உருண்டை செய்ய சிந்தாமணி கடலை - 1/2 கப் கடலை பருப்பு - 1 /4 கப் சிவப்பு வெங்காயம் - 1 /2 பெருஞ்சீரகம் - சிறிதளவு உப்பு - சுவைக்கு எண்ணெய் - பொரிக்க கறிக்கு சிவப்பு வெங்காயம் - 1 - 1 /2 பச்சை மிளகாய் - 2 தக்காளி பழம் - 1 சிறியது தேங்காய் பால் / 2 % பால் - 1 கப் கறி துள் - சுவைக்கு ஏற்ப கடுகு - சிறிதளவு சீரகம் - சிறிதளவு கறிவேப்பிலை - 1 நெட்டு உள்ளி - 1 - 2 பல்லு இஞ்சி - சிறிதளவு பழப்புளி - சுவைக்கு ஏற்ப உப்பு - சுவைக்கு ஏற்ப எண்ணெய் - தாளிக்க செய்முறை உருண்டை - சிந்தாமணி கடலை, கடலை பருப்பு இரண்டையும் 6 - 8 மணி நேரம் ஊற வைத்து கடலை வடைக்கு அ…
-
- 22 replies
- 5k views
-
-
சிறிது தேங்காய்ப் பூ உங்கள் உறைப்புக்கேற்ப மிளகாய்த் தூள் உப்பு புளி தேவைக்கேற்ப பச்சை வெங்காயம் முடிந்தளவு சிறிதாக வெட்டி போடுங்கள் எல்லாவற்றையும் போட்டு நன்றாக பிசைந்து பாணுடன் சாப்பிட நன்றாக இருக்கும். சிறிய வயதிலிருந்தே எனக்கு ரொம்ப பிடிக்கும். நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.
-
- 12 replies
- 1.8k views
-
-
பருப்பு கீரை கூட்டு தேவையான பொருட்கள் 1 1/2 கோப்பை கடலைப் பருப்பு 1 கொத்து கீரை (பசலை, ஸ்பினாச், அரை கீரை போன்றது) 2 சிவப்பு தக்காளிகள் 15 பல் பூண்டு 1 தேக்கரண்டி மஞ்சள் உப்பு தேவைக்கேற்ப 1 தேக்கரண்டி ஜீரகம் 1 தேக்கரண்டி கடுகு 2 சிவப்பு மிளகாய்கள் காய்ந்தது செய்முறை கீரையை கழுவி சிறு துண்டுகளாக வெட்டி தனியே வைத்துக்கொள்ளவும். இதே நேரத்தில் கடலைப்பருப்பை பிரஷர் குக்கரில், மஞ்சள், உப்பு, 7 பல் பூண்டு போட்டு வேகவைத்துக்கொள்ளவும். பருப்பு வெந்ததும், இதனை கீரையோடு சேர்த்து, தக்காளியை வெட்டி இதனோடு சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, சூடானதும், ஜீரகம், கடுகு சேர்த்து, வெடிக்கும்போத…
-
- 2 replies
- 10.4k views
-
-
பெங்களூர் கத்திரிக்காய் கூட்டு-(செளசெள) தேவையானப்பொருட்கள்: பெங்களூர் கத்திரிக்காய் (செளசெள)- 1 பயத்தம் பருப்பு - 1/2 கப் சாம்பார் பொடி - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு தாளிக்க: எண்ணை - 1 டீஸ்பூன் கடுகு - 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது சாம்பார் வெங்காயம் - 2 செய்முறை: பயத்தம் பருப்புடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வேக வைத்துக் கொள்ளவும் (மலர வேக வைத்தால் போதும். குழைய விடக் கூடாது). செள செளவின் தோலை சீவி விட்டு, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கியத் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து காய்…
-
- 2 replies
- 3.1k views
-
-
எலுமிச்சை(தெசிக்காய்) ரசம் ரசம் என்பது நம்முடைய சாப்பாட்டில் முக்கியம் பங்கு வழங்கப்படுகின்றது. எந்த ஒரு உணவினை உண்டாலும் கடைசியில் ரசம் ஊற்றி சாதம் சாப்பிடுவது நம்முடைய வழக்கமாக இருக்கின்றது. ரசம் சாப்பிடுவதால் எளிதில் ஜீரணம் ஆகின்றது. உடலிற்கும் மிகவும் நல்லது. பருப்பு ரசம், தக்காளி ரசம், எலுமிச்சை ரசம் , மிளகு ரசம் என பல வகைகளில் ரசம் உள்ளன. அதில் இன்று நாம் பார்க்க போவது எலுமிச்சை ரசம். எப்பொழுதும் புளி சேர்த்து தான் பெரும்பாலும் ரசம் வைப்போம். புளியினை நிறைய சேர்த்து கொள்ளவதும் உடலிற்கு நல்லது அல்ல. அதனால் வாரம் ஒரு முறை இந்த ரசத்தினை எங்கள் வீட்டில் வைப்போம்…வாருங்கள் சமைக்க தேவைப்படும் நேரம் : 10 – 15 நிமிடம் தேவையான பொருட்கள் : …
-
- 3 replies
- 1.9k views
-
-
வேர்கடலை சட்னி வேர்க்கடலை சட்னியை விரைவாகவும் ருசியாகவும் செய்து இட்லி, தோசை போன்ற அனைத்து டிபன் வகைகளுடனும் சேர்த்து சாப்பிடலாம்.. தேவையான பொருட்கள்: வேர்க்கடலை - 100 கிராம் (வறுத்து தோல் உரித்தது) தேங்காய் - 4 பத்தைகள் காய்ந்தமிளகாய் - 4 எண்கள் உப்பு - தேவைக்கேற்ப புளி - பட்டாணி அளவு தாளிக்க - கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, எண்ணெய் - 3 டீஸ்பூன் செய்முறை: ஒரு கடாய் வைத்து அதில் சில சொட்டு எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய்களைப் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். தேங்காயை பல்பல்லாக நறுக்கி மிக்சி ஜாரில் போடவும். அத்துடன் வேர்க்கடலை, வறுத்த மிளகாய், உப்பு, புளி அனைத்தை…
-
- 8 replies
- 8.2k views
-
-
கொத்தவரங்காய் கூட்டு - தேவையான பொருட்கள் : கொத்தவரை - 1/4 கிலோ புளி - பெரிய நெல்லிக்காய் அளவு உப்பு - தேவைக்கேற்ப மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி மிளகாய்ப்பொடி - 1/2 தேக்கரண்டி மல்லிப்பொடி - 1 தேக்கரண்டி வெல்லம் - சின்னக்கட்டி துவரம் பருப்பு - 2 கரண்டி (வேக வைத்து மசித்தது) கடுகு - 1/2 தேக்கரண்டி உ.பருப்பு - 1 தேக்கரண்டி கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி கூட்டுப்பொடி - 2 தேக்கரண்டி எண்ணெய் - 2 தேக்கரண்டி பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி கறிவேப்பிலை - தேவையான அளவு தேங்காய்த் துருவல் - 6 தேக்கரண்டி செய்முறை : கொத்தவரங்காயைப் பொடியாக நறுக்கி வேக வைத்து உப்பு, மஞ்சள் தூள், மல்லித்தூள் சேர்த்து புளியைக் கரைத்துவிட்டு வெல…
-
- 4 replies
- 3.4k views
-
-
வேப்பம் பூ ரசம் தேவையான பொருட்கள் புளி - எலுமிச்சங்காய் அளவு உப்பு -தேவைக்கேற்ப மிளகாய்-8 ( கிள்ளி வைத்துக் கொள்ளவும் ) மஞ்சள் பொடி-2 சிட்டிகை பெருங்காயம்-தேவையான அளவு நெய்-1 டீஸ்பூன் கடுகு-1 டீஸ்பூன் செய்முறை வாணலியில் 1 டீஸ்பூன் நெய் விட்டு, கடுகு, கிள்ளிய மிளகாய், பெருங்காயம், வேப்பம்பூ முதலியவைகளை வறுத்து எடுத்துக் கொள்ளவும். 2 டம்ளர் தண்ணீர் விட்டு, புளியை நன்கு கரைத்து, உப்பு, மஞ்சள் தூள் போட்டு, வறுத்த பொருட்களையும் போட்டு நன்கு கொதிக்க விடவும். நன்கு கொதித்து சுண்ட ஆரம்பித்தவுடன் 2 டம்ளர் தண்ணீர் விட்டு விளாவி இறக்கவும். http://tamil.webdunia.com/miscellaneous/cookery/ve…
-
- 6 replies
- 2.1k views
-
-
பூசணிக்காய் புளிக் கூட்டு இதனை கல்யாணக் கூட்டு என்றும் சொல்வார்கள். ஒருவேளை மொத்தமாக ஒன்றிரண்டு காயை வாங்கி, உடைத்து, நறுக்கிச் செய்வது சுலபமாக இருப்பதாலோ என்னவோ, இந்தக் கூட்டு இல்லாத கல்யாணம், பெரிய விசேஷங்களே இருக்காது. தேவையான பொருள்கள்: பூசணிக்காய் – 1/2 கிலோ மஞ்சள் பட்டாணி – 1/4 கப் புளி – சிறிய நெல்லிக்காய் அளவு துவரம் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் – 1/2 கப் உப்பு மஞ்சள் தூள் கொத்தமல்லித் தழை வறுக்க: எண்ணெய் காய்ந்த மிளகாய் – 3, 4 உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன் கடலைப் பருப்பு – 1 டீஸ்பூன் தனியா – 1/2 டீஸ்பூன் தாளிக்க: எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை. செய்முறை:…
-
- 4 replies
- 5.6k views
-
-
ஆதி நைனாவின் நள(கை)பாகம் - 4 கொத்துக்கீரையும் குதூகல வாழ்வும் விசயத்துக்கு நேரே போவம்...... கீழ உள்ள குறிப்பை வாசிச்சுப் போட்டு ஆதி என்ன சொல்லவாறன் எண்டு கவனியுங்கோ.. கீரைகள் குறிப்பாக இரும்பு மற்றும் பிற தாதுப்பொருட்களை அதிகளவில் கொண்டுள்ளன. இரும்புச் சத்து பற்றாக்குறை, இரத்த சோகையினை ஏற்படுத்துகிறது. இது கர்ப்பிணி பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளில் ஏற்படும் பொதுவான உடல்நல அசெளகரியமாகும் கீரைகள் தினமும் உணவில் சேர்த்துக்கொள்வதின் மூலம் இரத்த சோகை வருவதை தடுத்து, நல்ல உடல் நலனை பெறலாம் கீரைகள் சுண்ணாம்புச் சத்து, பீட்டா கரோடின், வைட்டமின்-சி போன்றவற்றை அதிகம் கொண்ட முக்கிய மூலப்பொருளாகும் கீரைகளிலுள்ள கரோடின்களை பாத…
-
- 10 replies
- 2.4k views
-
-
எமது உணவு வகைகள் மற்றும் சிற்றுன்டி வகைகளுக்கு வெள்ளைகள் மத்தியில் வரவேற்ப்பு எப்படி குறிப்பாக எவை எவை பிடிக்கும் என்று யாராவது அனுபவம் உள்ளவர்கள் பகிர்ந்து கொள்ளுங்கள்.உதவியாக இருக்கும்.
-
- 20 replies
- 2.6k views
-
-
மூக்கறுந்த சூர்ப்பனகைகளையும், ரொக்கற்லோஞ்சர்க் குண்டையும் சேர்த்து வைத்த கமகமக்கும் கறி. ரொக்கற் லோஞ்சர் குண்டு (வாழைப்பூ) 1 மூக்கு நறுக்கிய சூர்ப்பனகை (சுத்தம் செய்த இறால்) 10 சின்ன அழுகுணி (வெங்காயம்) 5 பசுமை உறைப்பு (பச்சை மிளகாய்) 2 மாநல அகம் (பெருஞ்சீரகம்) அரைத் தேக்கரண்டி தே.பா.ப (தேங்காய்பால் பவுடர்) 2 தேக்கரண்டி வாசவேம்பு இலை (கருவேப்பிலை) சிறிதளவு சூரியக்கிழங்கு (மஞ்சள்) சிறிதளவு கடல்த்தண்ணீ (உப்பு) தேவையான அளவு பச்சைப் புளி (எலுமிச்சை) …
-
- 15 replies
- 4k views
-
-
. கருவாட்டுக் குழம்பு. தேவையான பொருட்கள்: சதையுள்ள கருவாடு 700 கிராம், கத்தரிக்காய் 300 கிராம், பச்சை மிளகாய் 6, வெங்காயம் 2, கடுகு 1 தேக்கரண்டி, பெருஞ்சீரகம் 1 தேக்கரண்டி, வெந்தயம் 1 தேக்கரண்டி, மிளகாய்த் தூள் 2 - 3 மேசைக்கரண்டி, தாழிக்க எண்ணை, பழப்புளி கொஞ்சம், விரும்பினால் தக்காளிப் பழம் போடலாம். செய்முறை: கருவாட்டை சிறு துண்டுகளாக வெட்டி ஒரு பாத்திரத்தில் இட்டு சுடு தண்ணீர் ஊற்றி, ஒரு மணித்தியாலம் ஊற விடவும். பின் அதன் தோலை நீக்கி வடிவாக இரண்டு மூன்று முறை தண்ணீரில் கழுவினால் அதில் உள்ள உப்பு போய் விடும். கத்தரிக்காயை பெரிய துண்டுகளாக வெட்டவும். இனி.... நீளமாக அரிந்த வெங்காயத்தை பாத்திரத்தில்…
-
- 58 replies
- 12.5k views
-
-
கொத்து புரோட்டா தேவையான பொருட்கள் குருமா (வெஜ் அல்லது நான்வெஜ்) - 1 கப் பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 கப் பொடியாக நறுக்கிய தக்காளி - 3/4 கப் பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - காரத்திற்கேற்ப முட்டை - 1 மிளகாய்த்தூள் - 1/2 ஸ்பூன் கூர்மையான விளிம்புள்ள டம்ளர் - 1 உப்பு,சமையல் எண்ணெய் பரோட்டா - 5 செய்முறை பரோட்டாவை சிறு துண்டுகளாக பிய்த்துக் கொள்ளவும். அடி கனமான கடாயில் ( நான்ஸ்டிக் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்!) எண்ணெய் காயவைத்து நறுக்கிய வெங்காயத்தில் முக்கால் பகுதி, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்த…
-
- 3 replies
- 1.6k views
-
-
யாராவது போன்டா செய்யும் மறையை இணைக்கவும்..நன்றி . பி.கு போன்டா செய்யும் முறை ஏற்க்கனவே இங்கு இணைக்கப்பட்டதுதான்.ஆனால் ஒரே எண்னெய் பிடிப்பாய் உள்ளது அந்த முறை.
-
- 4 replies
- 2.6k views
-
-
அறிஞர் ஆதிநைனாவின் ந(கை/ள)பாகம் -3 வணக்கம் கன நாளைக்குப் பிறகு சுவைஞர்கள் பகுதிக்கு ஆதிநைனா வந்துள்ளேன். உள்ளாரக் கூப்பிடுங்க. பயப்படாதீங்க எல்லாருக்கு நல்லது செய்யத்தான் வந்திருக்கிறன். ஒரு காலத்தில கனபேரின் வால்கள் வளர்ந்ததற்கு ஆதியைக் காரணம் சொன்னாங்க. இனிமே எல்லாருடைய நா வளர்ச்சிக்கும் ஆதியை சொல்லுவாங்க. நா என்றால் பேச்சு வன்மையை வளர்க்கப்போறன் என்று நினைக்கப்படாது. சுவைகள் அறியும் நா வளர்ச்சியைத்தான் ஆதிநைனா ஆரம்பிக்கப்போறன். இங்க ஆதிநைனா போடுற அட்டில் இரகசியங்களை வாசிக்கிற நீங்களே வச்சுக்கொள்ள வேணும் செயல்முறையைச் செஞ்சு பாக்கவேணும். பின்னாடி உங்க உங்க எசமானிகள் என்ர வீட்டு எசமானியைக் கூப்பிட்டு உன் வீட்டுச் சமையல்காரனின் செய்முறைப் பதிவால தாங்கள் வீட்ல நி…
-
- 14 replies
- 2k views
-
-
கொத்துரொட்டி கறி கொத்துரொட்டிக்கு வைக்கிற கறி வித்தியாசமாக இருக்குமே. அது எப்படி சமைப்பார்கள்??
-
- 21 replies
- 5.6k views
-
-
தோசையோ தோசை.. இது ஒருவிதமான உடனடி தோசை...முதலில் யாரேனும் பதிந்தார்களோ தெரியாது. ஆனால் என்னை பொறுத்தவரையில் சத்தியமாய் நான்தான் கண்டு பிடித்தனான். 1 . 1 சுண்டு / ரின்பால் பேணி (ஹி ஹி) உளுத்தம் மா ( கவனம் வறுக்காதது) 2 . 1 சுண்டு / ரின்பால் பேணி அவித்த கோதுமை மா ( கவனம் அவித்தது). (ஒரே அளவு மாவும், உளுத்தம் மாவும் ) 3 . கொங்சம் வெந்தயம் பவுடர் ஆக்கினது ..1 - 2 தேக்கரண்டி போதும்..கூட போட்டால் கைக்கும், குறைய போட்டால் தோசை சுவது கடினம் ஒட்டும் 4 . தேவையான அளவு உப்பு, தண்ணீர்... 5 . master blaster .........ஈஸ்ட் மிக்ஸ்...தயாரிக்கும் முறை..ஹிஹி ..ஒரு பெரிய கிளாஸ் இல் ஒரு (பீர் கிளாஸ் மாதிரி) முக்கால் வாசிக்கு இளம் சூடான தண்ணீர் விட்டு, ( சயின்ஸ் படித்…
-
- 14 replies
- 9.3k views
-
-
உருளைக்கிழங்கு பொரியல் தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு: 300 கிராம் சாம்பார் பொடி: 1 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு: 1 தேக்கரண்டி புளி: கைப்பிடி அளவு கடுகு: அரை தேக்கரண்டி நல்லெண்ணெய்: சிறிதளவு நெய்: அரை தேக்கரண்டி கறிவேப்பிலை, கொத்தமல்லி: சிறிதளவு உப்பு: தேவையான அளவு செய்முறை: உருளைக்கிழங்கினை கழுவி தோலோடு சிறுசிறு துண்டுகளாக நறுக்கி நீரில் போட்டு வைக்கவேண்டும். புளியினை சிறிது நீர் விட்டு ஊற வைத்து கெட்டியாக கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, ஒரு தேக்கரண்டி உளுத்தம்பருப்பு, சிறிதளவு கறிவேப்பிலை ஆகியவைகளைப் போட்டு தாளித்து, நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை போட்டு புரட்டிக் கொடுக…
-
- 1 reply
- 1.8k views
-