நிகழ்தல் அறிதல்
நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்
நிகழ்தல் அறிதல் பகுதியில் அவசியமான நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், விழாக்கள், சந்திப்புக்கள் பற்றிய தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும். யாழ் களத்தில் விளம்பரம் செய்ய விரும்பின் கட்டண விபரங்களை அறிய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளலாம்.
633 topics in this forum
-
நெல்லியடி மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழா! நெல்லியடி மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழா இன்று வெகுவிமர்சையாக இடம் பெற்றுள்ளது. இன்றைய முதலாம் நாள் நிகழ்வாக காலை மாணவர்களின் துவிச்சக்கர வண்டி பவனியும் பனம் கன்றுகள் நடும் நிகழ்வும் இடம்பெற்றன. அத்துடன் நூறாவது ஆண்டை முன்னிட்டு நினைவு முத்திரையும் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. ஊர்தி பவனியில் இராணுவ பீரங்கி ஒன்று கடோற் அணியினரால் உருவாக்கப்பட்டு அதுவும் காட்சியாகக் கொண்டு செல்லப்பட்டது. பாடசாலை அதிபர் கிருஸ்ணகுமார் தலமையில் இடம் பெற்ற இந்நிகழ்வுகளில் பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று இருந்தனர். https://ath…
-
- 0 replies
- 390 views
-
-
யேர்மனியில் வீரத்தமிழ்மகன் முத்துக்குமாருக்கு வீரவணக்க நிகழ்வு வீரத்தமிழ்மகன் முத்துக்குமார்....................... ஒரு முடிவற்ற தொடக்கத்தின் முகவுரையாய் தீயென எழுந்தவன். தீமை கண்டு பொங்கியவன். அதனால் தன்னையே தீயாக்கித் தீமைகண்டு பொங்குமாறு தீயாகியவன். தியாகியாய் உயர்ந்தவன். தமிழினத்தின் துயர்கண்டு துடித்துத் தீயாகித் தீயில் திரியாகித் தமிழன் துயர் களைய அனலான வீரன் முத்துக்குமாருக்கு முதலாவது நினைவுநாள் வீரவணக்க நிகழ்வு 31.01.2010 அன்று யேர்மன் Nuss நகரிலே Bedburgerstr.57இல் 15.00 மணிக்கு நடைபெற உள்ளது. தாயக உறவுகளே கலந்து கொண்டு மலர்தூவி வணங்குவோம். http://www.pathivu.com/news/5301/64//d,tamilar-event.aspx
-
- 1 reply
- 1.4k views
-
-
15/06/2024 அன்று என் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக நண்பர் [பொறியியல் பீடம், பேராதனை பல்கலைக்கழகம், இலங்கை மற்றும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் பழைய மாணவன்] மற்றும் கட்டிட பொறியாளர் 'திரு கந்தையா ஈஸ்வரன்' ஆகியோரின் இழப்பால் நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம். அவரின் இறுதிக்கிரிகைகள் ஜூன் 20, வியாழன் அன்று Chapel Ridge Funeral Home 8911 Woodbine Avenue L3R 5G1, Toronto, Canada தொலைபேசி 905 305 8508. காலை 10.00 மணி முதல் மதியம் 1,30 மணி வரை பார்வையிட்டு, அதே நாளில் மதியம் 2.00 மணிக்கு தகனம் செய்யப்படும் . "திரு.கந்தையா ஈஸ்வரன் அவர்களின் நினைவாக / "In Memory of Mr. Kandiah Easwaran" [15/06/2024] "யாழ் மத்திய கல்லூரியில் ஒன்றாக படித்து பேராதனை பொறியி…
-
- 2 replies
- 318 views
-
-
தமிழ் முஸ்லிம்களின் பொங்கல் கொண்டாட்டம் கொண்டிருக்கும் சேதி கோம்பை அன்வர் நீங்களும் - அதாவது முஸ்லிம்களும் - பொங்கல் கொண்டாடுவீர்களா? சந்தேகமும் ஆச்சர்யமும் கலந்த பல நண்பர்களின் கேள்விகள், எனக்கோ அல்லது என் குடும்பத்தினருக்கோ புதிதல்ல. ஒன்றல்ல, இரண்டல்ல; 16 வகை காய்கறிகளுடன் காலகாலமாகப் பொங்கலைக் கொண்டாடிவரும் எங்களுக்கு இது போன்ற கேள்வி வேடிக்கையாக இருக்கும் என்றால் மிகையாகாது. கோம்பை அன்வர் தன் குடும்பத்துடன், பொங்கல் விருந்தில் இருப்பினும் இந்தக் கேள்விக்குப் பல காரணங்கள் உள்ளதை மறுக்க முடியாது. அவற்றில் மிக முக்கியமானது இஸ்லாம் மற்றும் தமிழக இஸ்லாமியர் குறித்த தட்டையான புரிதல் ஆகும். இஸ்லாம் குறித்த தட்டையான புரிதலுக்கு பல இஸ்லாமியர்…
-
- 9 replies
- 1.7k views
-
-
சிட்னி முருகன் கோயில் வருடாந்த தேர்திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.வரும் சனிக்கிழமை தேர் .முருகனின் முகப்புத்தகத்தில் மேலதிக தகவல்களை பெறலாம் https://www.facebook.com/search/top/?q=sydney murugan temple சிட்னி முருகனுக்கு அரோகரா
-
- 3 replies
- 939 views
-
-
சரஸ்வதி பூசைக்காலத்துக்குச் சில வாரம் முன்பே பள்ளிக்கூடங்களுக்கு மில்க்வைற் சோப் கனகராசாவின் கைங்கரியத்தால் அச்சடிக்கப்பட்ட சகலகலாவல்லி மாலைப் புத்தகங்களும் (பின் அட்டையில் நீம் சோப் விளம்பரம்), ஆனா ஆவன்னா அச்சடித்த ஏட்டுச் சுவடிகளும் கட்டுக்கட்டாய் வந்துவிடும். முழுப்பதிவிற்கும் http://kanapraba.blogspot.com/2006/09/blog...og-post_29.html
-
- 18 replies
- 4.3k views
-
-
புங்குடுதீவு பெருங்காடு கோயில் வயல் ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில் மகாகும்பாபிசேகம்
-
- 0 replies
- 459 views
-
-
பாரதியாரின் 139ஆவது பிறந்தநாள் இன்று – யாழில் சிலை திறந்து வைப்பு December 11, 2021 இந்தியாவின் தேசிய கவிஞர் மஹாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 139ஆவது பிறந்தநாள் நிகழ்வுகள் யாழில் கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாணம் நல்லூர் அரசடி சந்தியில் அமைத்து பாரதியாரின் திருவுருவ சிலைக்கு இந்திய துணைத்தூதரக , துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் மாலை அணிவித்து மலர் தூபி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் , ஆணையாளர் ஜெயசீலன் , யாழ்.தமிழ் சங்க தலைவர் லலீசன் உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்து கொண்டு மாலை அணிவித்து மலர் தூபி மரியாதை செலுத்தினர். அதேவேளை , மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 139வது பிறந்தநாளா…
-
- 1 reply
- 486 views
-
-
மஹாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 140ஆவது பிறந்ததின நிகழ்வு முன்னெடுப்பு மஹாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 140ஆவது பிறந்ததின நிகழ்வு யாழ். அரசடிவீதியில் அமைந்துள்ள மஹாகவி பாரதியாரின் நினைவுத் தூபியில் இடம்பெற்றது. இன்று (ஞாயிற்க்கிழமை) யாழ். இந்திய உதவித்தூதகத்தின் எற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக யாழ். இந்திய உதவித்தூதுவர் ராகேஸ் நட்ராஜ் ஜெயபாஸ்கர் கலந்துகொண்டு பாரதியாரின் உருவச்சிலைக்கான மலர்மாலையினை அணிவித்தார். குறித்த நிகழ்வில் யாழ். இந்திய உதவித்தூதரத்தின் சிரேஸ்ட அதிகாரி ஏ.கிருஸ்ணமூர்த்தி, தமிழ் சங்கத்தின் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். https://athavannews.com/2022/1314950
-
- 0 replies
- 876 views
-
-
-
இன்று யாழ் கதிர்காமம் பாதையாத்திரைகுழுவின் திருகோணமலை கோணேஸ்வரர் ஆலய தரிசனம் By Shana வரலாற்றுப் பிரசித்தி பெற்ற பஞ்ச எச்சங்களும் ஒன்றான புகழ் பெற்ற திருகோணமலை கோணேஸ்வரர் ஆலயத்தை இன்று(24) வியாழக்கிழமை யாழ் - கதிர்காமம் பாதயாத்திரை குழு தரிசிக்கின்றது. கடந்த 15 நாட்களாக யாழ் மாவட்டம் முல்லைத்தீவு மாவட்டத்தை கடந்து திருகோணமலை மாவட்டத்தை அடைந்தள்ளது. . நேற்று நிலாவெளி லக்ஷ்மி நாராயணன் ஆலயம் மற்றும் சல்லி அம்மன் ஆலயத்தில் தங்கியிருந்தது. இன்று பாதயாத்திரை குழுவின் தலைவரான சி.ஜெயராசா தலைமையில் தொண்ணூறு அடியார்களை கொண்ட குழுவினர் திருகோணமலை கோணேஸ்வரர் ஆலயத்தை சென்றடைந்து அங்கு பூஜையில் கலந்து கொள்வார்கள்…
-
- 1 reply
- 341 views
-
-
-
- 0 replies
- 1k views
-
-
"எங்கள் பேத்தி ஜெயாவின் எட்டாவது பிறந்தநாள் இன்று!" / Eight Birthday Wishes for Jeya!" / [06 / 01 / 2025] "பூமியிலிருந்தும் வானத்திலிருந்தும் வாழ்த்துகள் பாட எல்லையற்ற வானத்தின்கீழ் கொண்டாட்டம் நிகழ அன்புஜெயா, மகிழ்ச்சி பெருமை தருபவளே எங்கள் பொக்கிஷமே எங்கள் விண்மீனே!" "மண்ணிலிருந்து தாத்தாவின் பாசம் சூழ உங்கள் நாட்களும் ஆத்மாவும் ஒளிரட்டும் ஒவ்வொரு அடியிலும் அறிவு வழிகாட்டட்டும், அன்பும் மகிழ்வும் உங்களை அணைக்கட்டும்!". "விண்ணிலிருந்து அம்மம்மா ஆசீர்வாதம் பொழிய அவளின் பெயரில் ஆறுதல் வழங்குபவளே நீங்கள் ஒளிர்ந்து கனவுகள் பறக்கட்டும் அரவணைப்பும் வலிமையும் உலகை நிரப்பட்டும்!" "உங்கள் வாழ்க்கை நேசத்தின் பாடலாகட்டும் …
-
-
- 10 replies
- 567 views
-
-
சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று ! இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, மட்டக்களப்பு மனித உரிமைகள் என்றால் எல்லா மனிதர்களுக்கும் உரிய அடிப்படையிலான உரிமைகளையும், சுதந்திரங்களையும் குறிக்கின்றன. ஒரு மனிதன் அமைதியான அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கு என்னவெல்லாம் தேவையோ அவற்றை மனித உரிமைகள் எனக் கருதலாம். இவற்றில் அடிப்படைத் தேவைகளான நீர், உணவு, உறைவிடம் போன்றவற்றுடன் கொலை செய்யப்படாமலும். சித்திரவதை செய்யப்படாமலும். அவமதிக்கப்படாமலும் வாழ்வதற்கான உரிமையும் இதில் உள்ளடக்கப்படுகிறது. இரண்டாம் உலக மகா யுத்தம் முடிவடைந்ததும் வெற்றி பெற்ற நாடுகள் 1945 இல் உக்ரேனில் யால்டா மாநாட்டில் கலந்து கொண்ட போது, உலக சமாதானத்தைப் பாதுகாக்க தவறிவிட்ட சர்வதேச சங்கத்த…
-
- 0 replies
- 531 views
-
-
லண்டனில் பண்டாரவன்னியன் குறும்பட வெளியீடு
-
- 0 replies
- 653 views
-
-
உரும்பிராய் இந்துக்கல்லூரி உரும்பிராய் பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கம் நடத்தும் பொங்கல் விழா பல கலைநிகழ்சிகளும் நடைபெறுகின்றது. 07-தை-2006 stephen Leacock C.I 2450 Birchmount Rd. Scarborough மேலதிக விபரங்களுக்கு தனிமடலில் தொடர்பு கொள்ளலாம் ***
-
- 25 replies
- 5.1k views
-
-
-
- 1 reply
- 1.6k views
-
-
"பல்கலைக்கழக வாழ்வின் என் நினைவு" - 04/10 பேராதனை பல்கலைக் கழகம் சென்ற தினம்] / "My memory of University life" - 04/10, The day we entered the University of Peradeniya] "தேடிய இன்பம், ஆடிய நையாண்டி மடியில் கொட்டுது, ஆயிரம் பாடல்கள் வாடிய இதயம், பூக்குது மீண்டும் கூடிய எம்மிடம், குதித்து துள்ளுது" "ஆண்டு ஒன்று அஞ்சி கழிந்தது ஆண்டு இரண்டு நிமிர்த்தி சென்றது ஆண்டு மூன்று துணிந்து நின்றது ஆண்டு நான்கு அறிவால் மலர்ந்தது" "நிறைந்த படிப்பு, இடையில் காதல் குறைந்த கூத்து, மத்தியில் தேர்வு உறைந்தது நெஞ்சம்,முடிவு கண்டு திரையும் வீழ்ந்தது, சிமிட்டில் பறந்தது" "நினைவுகளை விட்டு, மறைந்தது பல்கலைக்கழகம் …
-
- 1 reply
- 184 views
-
-
"கனவு மெய்ப்படும்" / பாரதியாரின் நினைவாக, அவர் விரும்பிய தலையங்கத்தில் ஒரு சிறுகதை [நினைவிடத்தில் உள்ள கல் பலகை மற்றும் அவரது இறப்புச் சான்றிதழில் உள்ள தகவல்களின்படி, தமிழ்க் கவிஞர் செப்டம்பர் 12 ஆம் தேதி காலமானார். ஆனால், மாநில அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதியை 'மகாகவி தினமாக' அறிவித்தது.] "மனதிலுறுதி வேண்டும், வாக்கினி லேயினிமை வேண்டும்; நினைவு நல்லது வேண்டும், நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்; கனவு மெய்ப்பட வேண்டும், கைவசமாவது விரைவில் வேண்டும்;" [பாரதியார்] கனவுகளின் அடித்தளம் விருப்பத்தின் விளைவு என்பது உளவியல் ஆய்வாளரான சிக்மண்ட் பிராய்டு [Sigmund Freud] என்பாரின் கரு…
-
- 0 replies
- 180 views
-
-
லண்டனில் ஒரு தமிழ் புத்தகக் கண்காட்சி வருகை தந்து உங்கள் ஆதரவினைத் தாருங்கள்! (ஈழம்- தமிழகம்- புகலிடங்களில் வெளியான முக்கியமான அனைத்து வகை நூல்கள். 300க்கும் மேற்பட்ட தலைப்புகளில்.... முதன்முறையாக,ஒரே இடத்தில்.... “நமது பண்பாட்டு, கலாசாரத் தளத்தில் சிறுமாற்றத்தை உருவாக்க இந்த மாதிரியான புத்தக கண்காட்சிகள் முக்கியமானவை. தேடலும் வாசிப்பும் கற்றலுக்குமான சூழலை உருவாக்கும் சமூகப் பணியில், சமூக ஆர்வலர்களுக்கும் கல்வி கற்றவர்களுக்கும், செயற்பாட்டாளர்களுக்கும்முக்கிய பங்குண்டு.” 11 மார்ச் 20 (புதன்) நண்பகல் 12 மணி முதல் - மாலை 9 மணி வரையும் 12 மார்ச் 20 (வியாழன்) மாலை 4 மணி முதல் - மாலை 9 மணி வரையும் ..... புத்தக கண்காட்சியும் விற்பனையும் -இரு தினங்கள் ந…
-
- 8 replies
- 2.8k views
-
-
திருக்குறள் விழா April 17, 2021 முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச செயலகமும் கல்வி பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த திருக்குறள் விழா நேற்று (16-04-2021) மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றுள்ளது . மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் செல்வி றஞ்சனா நவரத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்த திருக்குறள் விழாவில் முதன்மை விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் க. விமலநாதன் கலந்துகொண்டு விழாவின் ஆரம்ப சுடரினை ஏற்றி வைத்ததுடன் திருவள்ளுவர் சிலைக்கு மலர் மாலை அணிவித்தாா். இதனைத் தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் நடைபெற்றன இதில் திணைக்கள தலைவர்கள் அரச உத்தியோகத்தர்கள் உயர் அதிகாரிகள் பாடசாலை மாணவர்கள் சமய தொண்டர்கள் பொதும…
-
- 0 replies
- 698 views
-
-
திரு. கந்தையா ஈஸ்வரன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு கூறலும் "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" யும் முடிக்கப்படாத வரலாற்றுப் புத்தகமான "இலங்கை வரலாறு" எனது மறைந்த நண்பரும், அர்ப்பணிப்புள்ள சுயாதீன ஆராய்ச்சியாளரும் மற்றும் கட்டிட பொறியியலாளருமான திரு. கந்தையா ஈஸ்வரனின் வாழ்நாள் படைப்பாகும். அவர் இதற்காக பல நாட்களையும் மணித்தியாலங்களையும் செலவழித்து, உலகம் முழுவதும் இருந்து அரிய நூல்கள், ஆவணங்கள், சான்றுகள் என்பவற்றைச் சேகரித்து, 10–12 ஆண்டுகள் மிகுந்த ஈடுபாட்டுடன் இதை எழுதியவர் ஆவார். நாங்கள் இருவரும் யாழ்ப்பாண மத்திய கல்லூரியிலும் பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல் பீடத்திலும் இணைந…
-
- 1 reply
- 154 views
-
-
சந்நிதியான் தேர்த் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது! September 1, 202004 யாழ்ப்பாணம் – தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய தேர் திருவிழா இன்று (01) வெகு விமர்சையாக நடைபெற்றது. வரலாற்றுச் சிறப்பு மிக்கதும், அன்னதானக் கந்தன் என அடியவர்களால் போற்றிச் சிறப்பிக்கப்படுவதுமான செல்வச் சந்நிதியானின் மகோற்சவம் ஓகஸ்ட் 19ம் திகதி ஆரம்பமாகி இடம்பெற்றுவருகிறது. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஆலய மஹோற்சவம், சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி சிறப்பாக இடம்பெற்று வருவதுடன் இன்று காலை முத்தேர் பவனி வெகுசிறப்பாக நடைபெற்றது. …
-
- 6 replies
- 915 views
-
-
உலகைக் உலுக்கிய கறுப்பு ஜூலையின் 31 ஆவது ஆண்டை நினைவு கூறும் முகமாக டவுனிங் வீதியில் உள்ள பிரித்தானிய பிரதமர் அலுவலகத்தின் முன்பாக 23ஜூலை மாலை 4 மணி தொடக்கம் 8 மணி வரை நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன் நினைவு தினத்தில் பிரித்தானிய வாழ் அனைத்து தமிழ் உறவுகளையும் அணி திரளுமாறு பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு விடுக்கின்றது. தமிழ் மக்கள் மீதான சிறீலங்கா அரசாங்கத்தின் தொடர்ச்சியான இனவழிப்பில் பெரும் உயிர், உடைமை இழப்பை ஏற்படுத்திய 1983 கறுப்பு ஜூலை 3000 இற்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டும், பல்லாயிரக்கணக்கான பெறுமதியுள்ள சொத்துக்கள் அழிக்கப்பட்டு தென்னிலங்கையிலிருந்து அகதிகளாகத் துரத்தியடிக்கப்பட்டார்கள். 65 ஆண்டுகளுக்கும் மேலாக தொடச்சியாக சிங்கள …
-
- 0 replies
- 628 views
-
-
-
- 0 replies
- 2.1k views
-