Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. காதல் போயின் மோதல் இதோ நிஜ விந்தியா என் முன்னால் அமர்ந்திருக்கிறாள்.இதுவரை எத்தனையோ விந்தியாக்களைச் சந்திக்க நேர்ந்து விட்டது. ஆனால், இவள்தான் என்னுடைய விந்தியா. இன்னமும் அதே அதீத அழகு. கட்டியணைத்து அந்த ஸ்பாஞ்ஜ் கன்னங்களில் முத்தமிடத் துடித்தது மனம். பள்ளியில் துவங்கிய விந்தியா மீதான காதல் கல்லூரியைக் கடக்கிறபோது முடிந்து விட்டது. “ரவி, இது இன்ஃபாச்சுவேஷன். நிஜமான காதல் வாழ்க்கையில் நீ ஸ்திரமா உக்காந்திருக்கும்போது வரும். ஸ்கூல்ல படிக்கும்போது வர பாரதிராஜா காதலெல்லாம் ஜஸ்ட் சினிமாட்டிக். ஆத்தங்கரையைத் தாண்டறதுக்குள்ளே ஆறிப் போயிடும்...” காதல் உடைவதற்கு எவ்வளவு எளிமையான ஒரு காரணம். என் கண் முன்னே இன்னொரு ஆளுடன் சுற்றி - தாங்கிக் கொள்ள முடியவில்லை. …

  2. மறதி என்பது பெரிய வரம் என்று சிலர் சொல்வதுண்டு. அதிலும் குறிப்பாக தேவையில்லாத குப்பைகளை மனச்சிறையில் பூட்டி வைத்துக்கொண்டு கவலைப்படுவதை விட மறப்பது மேல். வெகு சிலருக்கு மட்டுமே இந்த மறதி என்பது ஒரு வரமாக அமைகிறது. எல்லோருக்கும் இந்த வரம் கிடைப்பதில்லை. மறக்க வேண்டிய விஷயங்களை மனதில் போட்டு குழப்புவதை விட மறந்து விடுவது மேல் தானே. ஆனால் அது அத்தனை சுலபம் அல்ல. தேவையான விஷயங்கள் மறந்து விடுவதும் தேவையற்ற விஷயங்கள் மனதில் பசுமரத்தாணி போல பதிந்து விடுவதும் இயல்பு தானே. படம்: இணையத்திலிருந்து…. நண்பரின் தாயார்: நாங்கள் எப்போது நண்பரின் வீட்டிற்குச் சென்றாலும் அவரது தாயார் எங்களையும் அவரது மகன் போலவே பாவித்து, "சாப்பிட்டு போடா கோந்தே" என்று ச…

  3. காக்கைச் சிறகினிலே அதற்குள் அப்படியொன்று இருக்குமென்று சத்தியமாக எதிர்பார்க்கவே இல்லை. அதன் விளைவாக நடந்த அத்தனை நிகழ்வுகளையும் நினைவுக்கு கொண்டு வந்து போட்டது, மைக்கேல் சாரை, அவரின் மனைவியோடு எதிர்கொள்ள நேர்ந்த இந்த மாலைப் பொழுது. தம்பதி சமேதராய் எதிரில் கடந்து போனவருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. அருகில் போய் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கலாம். பதினைந்து வருடங்களுக்கு முன், தன் வீடே பழியாய்க் கிடந்தவனை, இப்போது அவருக்கு நினைவில் இருக்குமா? அப்போது ஏழாவது படித்துக் கொண்டிருந்தேன். மைக்கேல் சார் எங்கள் பள்ளிக்கு வந்திருந்த புது ஹெட் மாஸ்டர். சொந்த ஊர் காஞ்சிபுரம் பக்கம் ஒரு கிராமம். வேலையில் சேர்ந்த புதிதில் சென்னைக்கு தினமும் பஸ்சில் வந்து போய்க் கொண்டிரு…

  4. இரவு நேர புழுக்கம் நித்திரையை தாலாட்டாமால் எழுப்பியது.இப்படி கொஞ்சநாளாக ..கொஞ்ச காலமாக ஏதோ எனக்கு வந்து கதை சொல்லுவது போல பிரமை .அதுவும் மற்ற நேரம் காலம் இல்லாது இரவு பன்னிரண்டு மணி அடித்து முடிந்த கையோடை தொடங்கி விடும்.காலில் இருந்து உடம்பில் வழியாக ஊர்ந்து வந்து தலை வழி ஏறி பிடரி பக்கம் சென்று இனம் புரியாத சங்கீத மொழியில் ஏதோ சொல்ல தொடங்கி விடும். இதோ தொடங்கி விட்டது.அக்கம் பக்கம் என்னையறியாமால் புரள்கிறேன் ,கவிழ்கிறேன் நிமிர்கிறேன் பிறகு படுக்கிறேன்..தலையை ஆட்டுகிறேன்.பிறகு புரள்கிறேன்..ஏதோ றிமோட் கருவியினால் யாரோ இயக்க அவர்களின் கட்டளைகளை உடனுக்குடன் நிறேவற்றுவது போல் நிறேவேற்றி கொண்டிருக்கிறேன். எனக்கே ஆச்சரியமாய் இருக்கிறது .நான் செய்து கொண்டிருப்பதை நானே மூன…

  5. Started by ஏராளன்,

    “அவன் அப்புடித்தான், தேளு கொட்டுன மாதிரி என்னமும் சொல்லிருவான்.. கொஞ்ச நேரத்துல மறந்துட்டு எப்பமும் போல சாதாரணமா பேசுவான், நாம்தான் கெடந்து தவிக்கணும்” அரைத்து வைத்த மசாலாவைக் குழம்பில் கலக்கியபடியே ராஜீவின் அம்மா சாதாரணமாகச் சொன்னாள். கேட்டுக்கொண்டு மௌனமாக நின்றிருந்தாள் கௌசி. அவளுக்குத் தேள் கொட்டிய நேரடி அனுபவம் கிடையாதே தவிர, பக்கத்து வீட்டு மகேஸ்வரிக்கு நெறி கட்டிக்கொண்டு எப்படியெல்லாம் அவஸ்தைப்பட்டாள் என்பதை அருகிலிருந்து கவனித்திருக்கிறாள். கொடுக்கைத் தூக்கிக்கொண்டு தன்பாட்டில் போய்க்கொண்டிருக்கும் தேள், தன் பாதையில் ஏதோவொன்று வந்ததும், இடைஞ்சலாக எரிச்சலாக உணர்ந்தோ, தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவென பயந்தோ, சுளீரெனக் கொட்டி விஷத்தையெல்லாம் கொடுக்கு…

  6. எவளுக்கும் தாயாக..... எஸ். அகஸ்தியர் - சிறுகதை அமரர் எஸ். அகஸ்தியர்[ பிரபல முற்போக்கு எழுத்தாளர் அமரர் எஸ். அகஸ்தியரின் 19 ஆவது ஆண்டு நினைவையொட்டி - 08.12.2014 - அவரது ‘எவளுக்கும் தாயாக’ என்ற நூலிலிருந்து இச்சிறுகதை பிரசுரமாகிறது. - பதிவுகள்-] நக நுனி சாடை, பிறை நிலா, ஒரு வெண் கீறு பாவி, மேக வெளி நாடி மின்வரி போட, செக்கல் கருகி இருள் அடர்ந்து கவிகிறது. பூமி முற்றாக மயான கோலம். அதிர் வேட்டுக்கள் வானமடங்க வெடித்து, நிலமதிரச் சிதறி, அவன் மனக்கண்ணுள் மின்னித் தெரிகின்றன. கைம்பெண் போல் தன்னை அவள் காட்டிக் கொள்வதில்லை. புருஷன் சம்பளம் பென்சனாக வருகிறது. ஒரே ஆண்பிள்ளை. இரண்டு இளங் குமர்கள். பிள்ளைகள் மூவரும் சதா படிப்பில் மூழ்கியபடி. பிள்ளைகளுக்கான படிப்புச் செலவுக்கே…

  7. Started by நவீனன்,

    கொடை வீட்டில் ஒரு வாரமாகவே அம்மாவுக்கும் மகளுக்கும் இடையே இந்தப் பிரச்னை ஓடிக்கொண்டிருந்தது. இருவருக்கும் இடையில் மாட்டிக் கொண்டது ரகுதான். "" பாருங்கப்பா இந்தம்மாவை, புரியவே மாட்டேங்குது. நான் எதைச் செஞ்சாலும் குற்றம் கண்டுபிடிச்சி திட்றாங்க'' எனக் குற்றப்பத்திரிகை வாசித்தாள் திவ்யா. ""அம்மாதானே சொல்றாங்க... விடும்மா. நான் பேசிக்கிறேன்'' என்றான். ஆனால், மனைவியிடம் பேசி எளிதாகச் சம்மதிக்க வைக்க முடியாது என்பது அவனுக்குத்தான் தெரியும். ""நீங்க ஒவ்வொரு விஷயத்திலும் அவளுக்குத்தான் சப்போர்ட் பண்றீங்க, ரொம்ப மாறீட்டா. சரியில்லை. அவ செய்ய நினைக்கிறதை சாதிச்சிடுறா, அதுக்…

  8. ஒருவன் காலையில் தூங்கி எழுந்தான்... . இரவு தூங்க வெகுநேரம் ஆனதால் காலை எழுந்து கொள்ள நேரமாகி விட்டது... . சுவரில் மாட்டப் பட்டிருந்த கடிகாரத்தில் 9 ஆகிவிட்டதை காட்டும் விதமாக 9 மணிஅடித்து ஓய்ந்தது.... . குளித்து முடித்து... காலண்டரில் தேதியை கிழித்தான்... 8-ம் தேதி‌ போய்.. இன்று தேதி 9 எனக் காட்டியது... . வங்கிக்கு சென்று வரலாம் என்று வங்கிக்கு செல்ல ஆட்டோ பிடித்தார்... . அதில் ஆட்டோ எண் 9 என வட்டம் போட்டு எழுதியிருந்தது... . வங்கியில் இறங்கி வங்கியில் நுழையும் போதுதான் கவனித்தான் வங்கியின் க‌தவு எண் 99 என இருந்தது.. . வங்கியின் உள்ளே சென்று கணக்கரிடம் தன்னுடை பாஸ்புக்கை காண்பித்து பண இருப்பை சரி பார்த்தான் அதில் 9 இலட்சங்கள் உள்ளது எனக்…

  9. நாளோடும், பொழுதோடும்! பாலக் கீரையை ஆய்ந்து கொண்டிருந்த மிருதுளா, 'டிவி'யில் ஒளிப்பரப்பான அந்த செய்தியை கேட்டு, அப்படியே கீரையை மேஜை மீது வைத்து, செய்தியை கவனிக்க ஆரம்பித்தாள். நெதர்லாந்தின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில், பொது இடத்தில் இயற்கை உபாதையை கழித்தாள் என்று பீனிங் என்ற இளம் பெண்ணை பிடித்து கேஸ் போட்டு, 90 யூரோ அபராதம் விதித்து விட்டனர். அந்தப் பெண் நீதிமன்றத்தை நாடி விட்டாள். ஆண்களுக்கென்று, 30க்கும் மேற்பட்ட கழிப்பறைகள் இருக்கும் நகரத்தில், பெண்களுக்கு மூன்றே மூன்றுதான் இருக்கின்றனவாம். அதுவும், அப்பெண் இருந்த இடத்திலிருந்து, 2 கி.மீ., தாண்…

    • 1 reply
    • 907 views
  10. இது யோ.கர்ணனின் வலைத்தளத்திலிருந்து பதிகிறேன். எழுத்து எண்ணம் யாவும் கர்ணன். யுத்தத்தின் பின் வீடுகளிற்கு திரும்பிக் கொண்டிருக்கும் முன்னாள்ப் போராளிகள் சந்திக்கும் நெருக்கடிகள் பற்றி பல்வேறு இடங்களிலும் பலரும் பதிவு செய்திருக்கிறார்கள். ஆகவே நான் புதிதாக எதனையும் இங்கு குறிப்பிடவில்லை. அவர்கள் பற்றி, அவர்களது நிலைமை பற்றி இந்த உலகத்திற்கு குறிப்பாக தமிழ் சமூகத்திற்கு மிகத் தெளிவாகவே தெரியும். ஆயினும் காக்கப்படும் கள்ள மௌனத்தின் அர்த்தம் மிகக் கேவலமானது. இதுபற்றி ஒருவர் குறிப்பிடும் போது எழுதியிருந்தார் – ‘அவர்கள் வெற்றிகளிற்கு மட்டுமே உரிமை கோருவார்கள்’ என. உண்மைதான் அதனைச் சிறு திருத்தத்துடன் ஏற்றுக் கொள்ளலாம். வெற்றிபெற்றவர்களிற்கு மட்டுமே அவர்கள் உரிமை கோரு…

  11. ஒரு கொலை ராகம்...!!! மண்டல பொறியில் கல்லூரியில் என்னுடைய பேட்ச் மாணவர்களில் நல்ல "மண்டை" யார் என்றால் எல்லோரும் கை காட்டுவது மணிவண்ணனாகத்தான் இருக்கும்...அவன் என்னுடைய அறை நன்பன் என்பதில் எனக்கு இன்றைக்கும் பெருமைதான்.. மண்டை என்றவுடன் மூலையில் உட்கார்ந்து பெரிய பெரிய புத்தகங்களை எப்போதும் மனப்பாடம் செய்துகொண்டிருக்கும் ஒரு "பழம்" உங்கள் சிந்தனையில் வந்து உட்கார்ந்தால்...சாரி...நீங்கள் தவறு செய்கிறீர்கள்... எங்களோடு சேர்ந்து ஹாட் அடிப்பான்...கிங்ஸ் அடிப்பான்...வாந்தி எடுப்பான்...சைட் அடிப்பான்..லெட்டர் கொடுப்பான்..ஆனால் பாழாப்போன தேர்வுகள் வந்தால் அன்றைக்கு இரவு மட்டும் சல்லீசாக கிடைக்கும் வில்ஸ் ஸ்மால் ரெண்டு பாக்கெட் - பத்து சிகரெட் மூன்று ரூபாய் - வாங…

  12. நிழல்கள் - ஆதவன் பிரிய வேண்டிய வேளை வந்துவிட்டது; பிரிய வேண்டிய இடம் வந்து விட்டது. அவளுடைய ஹாஸ்டல் கேட் உயரமான இரும்புக் கிராதிகளாலான கேட். அந்தக் கேட்டருகே நிற்கும்போது அவர்கள் இருவருமே எவ்வளவு சிறியவர்களாகவும் முக்கியத்துவம் இல்லாதவர் களாகவும் தோற்றமளித்தார்கள்! ஹாஸ்டல் கட்டிடத்தின் வெளிப்புறச் சுவரில் பொருத்தப் பட்டிருந்த விளக்கின் மங்கலான வெளிச்சம், கேட்டின் நிழலை வெளிப்புறச் சாலை மேல் நீளமாகப் படரவிட்டிருந்தது. எதிரெதிராக நின்றிருந்த அவர்கள் இருவருடைய நிழல்களும், அந்தக் கேட்டின் நிழலின் மேலேயே, ஒன்றின் மீது ஒன்றாகச் சாலையின் மீது படிந்திருந்தன. ''நம் நிழல்கள் ஒன்றையொன்று தழுவிக் கொண்டிருக்கின்றன'' என்றான் அவன். அவள் அவன் பார்வையின் திசையைக் கவனித்தா…

  13. புதுப்பித்தல் ‘‘பரமு! நம்ம ரெண்டு பேர் பாஸ்போர்ட்டையும் புதுப்பிக்கணும். ஆன்லைன்ல அதுக்கு ஏற்பாடு பண்ணிட்டேன்!’’ - வீட்டுக்குள் நுழைந்தபடி சொன்னார் சதாசிவம்.‘‘சரிங்க!’’‘‘அடுத்த மாசத்தோட என்னோட டிரைவிங் லைசென்ஸ் முடியப் போகுது. அதையும் புதுப்பிக்கணும்!’’ ‘‘சரிங்க!’’‘‘பரமு! டி.டி.ஹெச்சுக்கு பணம் கட்டாம விட்டுட்டோம். ஒரு சேனலும் தெரியலை. பணத்தைக் கட்டி கணக்கைப் புதுப்பிக்கணும்!’’ ‘‘சரிங்க!’’ ‘‘நான் ரிட்டயர் ஆனப்போ கிடைச்ச ஆறு லட்ச ரூபாயை ஒரு வருஷத்துக்குனு நிரந்தர சேமிப்பா பேங்க்ல போட்டேன் இல்லையா? வருஷம் முடியப் போகுது. அதையும் அடுத்த வாரம் புதுப்பிக்கணும்!’’‘‘சரிங்க!’’‘‘என்கூட ஸ்கூலில் ஒண்ணா படிச்சானே ராமசாமி... ஏதோ காரணத்துக்காக கோவிச்சுகிட்டுப் போனவனை ம…

    • 1 reply
    • 904 views
  14. உடல் எனும் இயந்திரம். இந்த பிரபஞ்ச உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் இயங்கி ஓடிக் கொண்டிருக்கிறோம். எதை நோக்கி ?? பிறந்த ஒவ்வொரு குழந்தையும் அழுகிறது பாலுக்காக, தன் தேவைகளுக்காக. ஒவ்வொரு குடும்பத்திலும் உறுப்பினர்கள் எதையோ நோக்கி ஓடுகிறார்கள். . குடும்ப தேவைகளுக்காக . அப்படி ஓடும் போது தன் சுகம், தூக்கம், பசி மறந்து இயற்கையின் சவால்களை சமாளித்தபடி. செல்ல வேண்டி இருக்கிறது. விரைவாக ஓட ஒரு வாகனம் அதற்கு பராமரிப்பு , ஆயில் மாற்றம் ரயர் மாற்றம் , பராமரிப்புக்கு விடுதல் (service ) என்பன செய்யும் மனிதன் தன்னைக் கவனிக்க மறந்து விடுகிறது..நம் உடல் எனும் இயந்திரம் சில(சிக்னல்களை )உடல் உபாதைகளை கொடுக்கிறது . அதைக் கவனித்து மருத்துவ பரிசோதனை செய்தால் பிழைத்த…

  15. மனிதர்களுடன் பேசுவது என்பது நினைப்பதைப் போன்று இலகுவானதன்று என்பதை இப்போது உணரக்கூடியதாகவிருக்கின்றது. உரையாடல் என்பது ஒரு பெரும் கலை. திரும்பிப் பார்க்கும் போது சில மனிதர்களுடனான எனது பேச்சுவார்த்தைகள் மனக்கசப்புகளுடன், பிரிவுகளுடன், கைகலப்புடன், எதிரி என்றான நிலைகளுடன் முடிவந்திருக்கின்றன. இப்போதெல்லாம் முன்பைப் போலல்லாது என் மனது கடந்து வந்த பாதைகளில் எங்கெங்கே தவறு விட்டேன், தவறுக்கான காரணம் என்ன, எப்படி அச் சிக்கலைத் தவிர்த்திருக்கலாம் என்று சிந்திக்கிறது. முன்பெல்லாம் பொதுவேலைகள், விளையாட்டுகள், சங்கங்கள், உன்று கூடல்கள் என்று ஓடித்திரிந்த காலங்களில் பல உரையாடல்களை நான் உரையாடலாகக் கொள்ளாமல் விவாதமாக - தர்க்கமாக மாற்றிக் கொண்டதனால் நட்புகளை மட்டுமல்லாமல் எ…

    • 4 replies
    • 904 views
  16. மத்தியபிரதேசத்தில் பீல் (Bheel) எனும் பழங்குடியினர் உண்டு. அவர்களை ஆய்வு செய்ய சென்ற பேராசிரியர் பகவான் தாஸ் படேல், பீல் பழங்குடியினரிடம் ஒருவகை மகாபாரதம் இருப்பதைக் கண்டார். அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் திரவுபதியின் கதை மிக வித்தியாசமானது என்பதுடன் பழங்குடி மரபுகளையும் உள்ளடக்கியது. பீல் மகாபாரதம் (Bheel Mahabharat) எனும் பெயரில் சாகித்ய அகாடமி நூலாக இது வெளிவந்தாலும் இதன் பெயர் பாரத் என்பதாகும். பீல் மொழியில் இதன் பொருள் யுத்தம் என்பதாகும். இதில் திரவுபதி பொன்னிற முடியை உடையவளாகச் சித்திரிக்கப்படுகிறாள். அஸ்தினாபுரத்தில் அவள் உறங்குகையில் அவள் தோழியர் அவள் தலையைச் சீவுகின்றனர். அப்போது ஒரு பொன்னிற முடி பறந்து சென்று காற்றில் அடித்துச் செல்லப்பட்டு, பாதாள உலகம் செல்க…

  17. சாப்ட்வேர் சீதை வா.மு.கோமு திரைப்படங்களில் நாம் பார்த்து ஏக்கப்பெருமூச்சு விடுவதற்கு தகுந்தாற்போல புதுமணத் தம்பதிகள் நிஜவாழ்வில் நடந்து கொள்வதில்லை தான். குளித்து முடித்து, புது டிசைனில் சேலை அணிந்து, ஈரம்காயாத தலைமுடிக்கு துண்டு கட்டி கையில் காபி டம்ளரோடு வரும் நாயகி படுக்கையில் குப்புற விழுந்து தூங்கிக் கொண்டிருக்கும் கணவனைப் பார்த்தும் நம்மைப் பார்த்தும் புன்னகை சிந்துவாள். காபி டம்ளரை பத்திரமாய் டேபிள் மீது வைத்துவிட்டு குளிக்க அனுப்ப கணவனை முதுகில் தட்டி, ‘எழுந்திருங்க கதிர், இன்னும் என்ன தூக்கம்?’ என்பாள். நாயகியின் குரல் கேட்டதும் பொய்யாய் தூங்கிக் கொண்டிருந்த கதிர் படுக்கையில் உருண்டு திரும்பி நாயகியை பாய்ந்து பிடித்து தன்னோடு இழுத்து கட்டிக் கொள்வான்.…

  18. அப்பா புகைக்கிறார் - எஸ். ராமகிருஷ்ணன் தனது அலுவலகத்திலிருந்து ருக்மணி வெளியே வந்தாள். மணி ஆறு இருபது ஆகியிருந்தது. சாலையில் செல்லும் வாகனங்களின் மீது வெயில் பட்டு தெறித்துக் கொண்டிருந்தது. கோடைகாலம் என்பதால் மாலையிலும் வெயில் அடங்கவில்லை. மின்சார ரயிலைப்பிடிப்பதற்காக செல்லும் வழியில் கடைக்கு போய் ஒரு சிகரெட் வாங்கலாமா என்று ருக்மணிக்கு தோணியது. இப்படி சில தினங்கள் தோன்றுவதுண்டு. சில வேளைகளில் அவள் சிகரெட் வாங்குவதை பலரும் கவனிப்பார்களே என்று தன்னை அடக்கி கொண்டுபோயிருக்கிறாள். சில வேளைகளில் யாரையும் பற்றிய கவலையின்றி கடைக்கு போய் சிகரெட் வாங்கியிருக்கிறாள். அவளது அலுவலகத்திலிருந்து உடன் வரும் ஆண்களில் சிலர் பெட்டிக்கடைக்களில் நின்று புகைப்பதை …

    • 1 reply
    • 902 views
  19. எண்ணும்பொழுது - ஜெயமோகன் “தெற்குதிருவீட்டில் கன்னியின் கதை” என்று அவன் சொன்னான். அவள் கூந்தலைத் தூக்கிச் சுருட்டி முடிந்துகொண்டிருந்தாள். அவன் சொன்னதை அவள் கேட்கவில்லை. அவன் அவளுடைய புறங்கழுத்தை பார்த்துக்கொண்டிருந்தான். அவள் நல்ல வெண்ணிறம். கழுத்து மென்மையான சருமப் பளபளப்புடன், சுருண்ட பிசிறுமயிர்ச்சுருட்களுடன், இரு சிவந்த மென்வரிகளுடன் தெரிந்தது. அவள் கண்ணாடியில் அவனைப் பார்த்தாள். கண்ணாடியிலேயே உதட்டைச் சுழித்து “என்ன பார்வை?”என்றாள் “சும்மா” ”பாத்துப்பாத்துதான் கெடக்கே” என்று அவள் உதட்டைச் சுழித்தாள் “பாக்கிறதிலே என்ன?”என்றான். “பாக்கிறதுக்காகத்தானே?” “பாக்கிறது மட்டுமா?” “பாக்கிறதுதான் முதல்லே… கண்ணாலேதான் மனசு… மத்ததெல்லாம…

    • 1 reply
    • 902 views
  20. அன்று அமாவாசையின் மூன்றாம் நாள், தஞ்சைக் கோட்டையைச் சுற்றி எங்கும் காரிருள் சூழ்ந்திருந்தது. நடுசாமம் ஆனதால் காவலர்களின் ஓசை மெல்ல மெல்லக் குறைந்து, அனைத்து ஜீவராசிகளும் நித்திரா தேவியின் நிழலில் உறங்கிக் கொண்டிருந்தன அந்த நான்கு கண்களைத் தவிர. இன்று நிகழப் போகும் கொடூரத்தைக் காண விரும்பாத நிலவும் வெறுப்பினூடே மறைந்து நின்றது. அப்போது கோட்டைக்கு மிக அருகில் மரங்களடர்ந்தப் பகுதியிலிருந்து ஆந்தையின் ஓசை கேட்டது. மரப்புதர்களில் ஒளிந்து கொண்டிருந்த ரவிதாஸனின் காதில் அதில் இன்பகானமாக ஒலித்தது. அனைத்தும் ஒன்று கூடி வருவதாக எண்ணிக்கொண்டான். இந்தச் சுரங்கப் பாதையைக் கண்டறிந்த தன் நுண்ணறிவை நினைத்துச் சிலாகித்துக் கொண்டான். இதுவரை மன்னர் மற்றும் முதன்மந…

    • 5 replies
    • 901 views
  21. ஒரு நிமிடக் கதைகள் பிரார்த்தனை! பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகிற நாள்... மதியம் 12 மணியிலிருந்தே ‘நெட்’டில் ரிசல்ட் பார்த்துக்கொள்ளலாம் என…

  22. 10 செகண்ட் கதைகள் ஓவியங்கள்: செந்தில் http://www.vikatan.com

  23. [size=5]ஹரியால் எப்பொழுதோ எழுதப்பட்ட கட்டுரை..இப்பொழுதும் நிலைமைகளில் எவ்வித மாற்றமும் இன்றி எமது சமூகக்கட்டமைப்புகளில் மாற்றங்கள் இன்றி,எங்கள் அடிமை நிலையில் மாற்றம் இன்றி,சிங்கள மேலாதிக்கதனத்தில் மாற்றமின்றி,எம்மவர்களின் மனங்களில் நிலவும் சாதிய மேலாதிக்க எண்ணங்களில் மாற்றமின்றி..எதுவுமே மாறாமல்..எதையும் மாற்றாமல் எங்கள் போராட்டம்.... [/size][size=5]நங்கள் மாறாததால் எங்கள் போராட்டத்தால் எதையும் மாற்றமுடியவில்லையா..?[/size] [size=5]-முரண்வெளி கூட்டுக்கட்டுரை-நன்றி ஹரி இராசலெட்ச்சுமி... ‘எமனைக் கருவேந்தி மருளும் காற்றோடும் எங்கள் அன்னையர் வயிற்று அக்கினி பெருக்கும் தணலோடும் கோடை வந்திறங்கிற்றெம் மண்மீது மறுபடியும் -தவ.சஜிதரன்- ‘Corpses …

  24. Started by நவீனன்,

    வாய்க்கால் - வண்ணதாசன் ஓவியங்கள்: டிராட்ஸ்கி மருது தண்ணீர் கலங்காமல் தெளிந்து ஓடிக்கொண்டிருந்தது. அதிகமாக இன்றைக்கு வெயிலும் இல்லை. சுத்தமாக ஆனி முடிந்து ஆடி மாதம் பிறந்துவிட்டது. போன மாதம் பூராவும் மழையும் இல்லை; சாரலும் இல்லை. காற்று மட்டும் அடிக்கவா செய்தது? இன்றைக்கு என்னவோ மூடாக்குப் போட்டதுபோல இருக்கிறது. காற்றும் இருக்கிறது. எதிர்த்த அரச மரத்தடியில், இடுப்பில் சுற்றினவாக்கில் பெட்டிக் கடைக்காரி ராஜாமணி காயப்போட்டு நிற்கிற மஞ்சள் பூப்போட்ட சேலை லேசான படபடப்புடன் சுவர் மாதிரி. எப்போதும் ஒரு கிழட்டுச் சடைநாயைக் கூட்டிக்கொண்டு வருவாள். முதலில் அதைக் குளிப்பாட்டிவிட்டபிறகுதான் அவளுக்கு மற்றது எல்லாம். மற்றது என்பதில், உச்சிப்படை வெயிலாகிவிட்டால்கூட …

    • 1 reply
    • 899 views
  25. சின்னத்துரையரிண்ட கொம்பனிக்கு நியூ யோற்கில இருக்கிற ஒரு நாலு பில்லியன் டாலர் நிறுவனத்தில ஒரு இருபது மில்லியன் பவுண்ட்ஸ் கொன்ராட் பிடிக்கவேண்டும். சின்னத்துரையிரிண்ட பாஸ் நாலு பேரை இந்த முக்கிய வியாபர குழுவில் போட்டுவிட்டார். மற்றைய மூன்று பேரும் இந்த டீலை தவறவிட்டால் வேலை போய் விடுமோ என்ற பயத்தில் சின்னத்துரையரை முன்னுக்கு தள்ளிவிட்டார்கள். பாஸ் வேற சின்னா குழறுபடி செய்துபோடாதை என்று சொல்லி வெருட்டிப்போட்டார். நியூ யோற்க்கில சின்னத்துரையர் இறங்கியவுடனேயே கையில் ஏனோ ஒரு சிறு நடுக்கம். ரூபன்ஸ்டைன்: வெல்கம் சின்னா. சின்னா: நன்றி திருவாளர் ரூபன்ஸ்டைன். ரூபன்ஸ்டைன்: நான் நினைத்தேன், இலண்டனில் இருந்து ஒரு பெரிய குழுவே வரும் என்று. சின்னா: ஒ அதுவா…

    • 2 replies
    • 898 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.