Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. Started by kandiah Thillaivinayagalingam,

    "ஓடம்" "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன் காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள் பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!" "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத் தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!" "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல் திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற நீர…

  2. Started by nunavilan,

    பிறந்த மண் அப்பா, நான் இந்தியாவுக்கு வரமாட்டேன். வேலைக்குப் புறப்பட்டுச் செல்லும்போது இருளப்பன் கூறிவிட்டுச் சென்ற வார்த்தைகள் மாணிக்கத்தேவரை நிலைகுலையச் செய்தன. இலங்கைக்கு வந்து நாற்பது வருட காலமாக மரகதமலைத் தேயிலைத் தோட்டத்தில் தனது வாழ்நாளின் முக்கிய பகுதியைக் கழித்துவிட்டு இப்போது தாய்நாட்டுக்குத் திரும்ப முடிவு செய்துவிட்ட மாணிக்கத்தேவர், கடைசி நேரத்தில் தன் மகன் இப்படியான அதிர்ச்சி தரும் முடிவுக்கு வருவானென எதிர்பார்க்கவேயில்லை. மாணிக்கத்தேவர் இந்நாட்டிலே வாழ்ந்த வாழ்க்கை அர்த்தமற்றுப் போய்விடவில்லையென எண்ணும்படியாக அவரிடம் இருந்த ஒரேயொரு செல்வம் அவரது மகன் இருளப்பன்தான். …

    • 4 replies
    • 1.6k views
  3. Started by nunavilan,

    வீட்டுப்பாடம் அலாரம் கிணுகிணுக்க கண்களைக் கசக்கி விட்டுக்கொண்டு, உள்ளங்கைகளை முதலில் பார்த்தவாறே எழுந்த ஆனந்தின் பார்வை பக்கத்தில் இயல்பாகத் திரும்பியது. அவளில்லாத வெற்றிடக் காட்சி முகத்திலறைந்தாற்போல் இருக்கவே ஒரு கணம் திடுக்கிட்டவன், தன்னிலை திரும்பி அந்த வெற்றிடத்தைப் பார்வையால் மெல்ல வருடிக் கொடுத்தான். அவனையறியாமல் ஒரு மெல்லிய பெருமூச்சு எழுந்தடங்கியது. “அவ இல்லாம இந்தக் குழந்தைகளை எப்படித்தான் சமாளிக்கப்போறேனோ!!” என்று தனக்குள் புலம்பியவன் குழந்தைகளின் அறையை நோக்கி நடந்தான். குழந்தைகளின் தூக்கம் கலைந்து விடக்கூடாதென்ற ஜாக்கிரதையுணர்வுடன் மெல்ல எட்டிப்பார்த்தவனின் இதழ்களில் புன்னகை அரும்பியது. மூத்தவள் பத்து வயதுத் தாரிணி பாதங்கள் மட்டும் வெளித்தெரிய தலை…

  4. என்னடா கடைசியா இவனும் அறுகக்க வெளிக்கிட்டான் என்று யோசிக்காதையுங்கோ இப்பகொஞ்ச நாளா ஊர் சம்பந்தமான பழைய நினைவுகளை மீட்டுப்பார்க்கும் சநதர்ப்பங்கள் கிடைத்ததன் விளைவுதான் இது. ஊரில பொதுவாக கோயில் திருவிழாக்கள் தான் பெரியோர் முதல் சிறியோர் வரை கொண்டாட்டங்களின் மையம்.கலை நிழச்சிகளை ரசித்தால் என்ன,கச்சான் தும்பு மிட்டாய் போன்றவை வாங்கி சாப்பிட்டால் என்ன,பெரிசுகள் தங்கள் மலரும் நினைவுகளை மீட்ப்பதும் இளசுகள் உயிர்ச்சிலைகளை ரசிப்பதும் சிறுசுகள் தேர்முட்டியில் நித்திரையிலிருக்கும் தங்கள் சகாக்களுக்கு மீசை வைப்பது தொடக்கம் வால் கட்டுவது என்று சகல திருவிளையாடல்களுக்கும் என்று இந்த திருவிழாக்கள் களைகட்டும். இதை விட தமது வசதி வாய்ப்புகளை மற்றவர்களுக்…

  5. Started by லியோ,

    (1) கிளிநொச்சி முந்தி மாதிரி இல்லை.செருப்பில குத்தி இருக்கிற முள் உடன் மிச்ச காலத்தை கடக்க வேண்டியிருக்கு.அவன் தொடர்ந்து கதைத்துக்கொண்டு இருந்தான்.அவன் முன்னாள் போராளி.பதின்ஐந்து வருடங்கள் இயக்கமாய் இருந்து முள்ளிவாய்க்காலில் சரணடைந்து , புனர் வாழ்வு பெற்று ?சமூகத்தோட வாழ்கிறான்.அவனுக்கு மனைவியும் ஒரு பிள்ளையும் இருக்கு.இது போதாதென்று அவனது தங்கையும் தங்கையின் இரண்டு பிள்ளைகளும் அவர்களோடு இருக்கிறார்கள்.தங்கையின் மனுஷன் போராளியாய் இருந்து ஒரு காலை இழந்து சமாதானத்தோட இயக்கத்தில இருந்து விலத்தி, சண்டை தொடங்கி இயக்கத்திற்கு ஆளணி பிரச்சனை பெரிதாக தானாய் போய் மீள இணைந்து ஆனந்த புரத்தில வீரச்சாவு. அவனுக்கு பெரிய படிப்பு இல்லை.படிக்கிற காலத்தில இயக்கத்திற்கு போன…

  6. என்னையே நானறியேன் பாட்டுடைத் தலைவனையுடைத்தாய் பாடுபொருள் கொண்டு ஏட்டிலே வடிப்பது இலக்கியமானால், பாட்டுடைத் தலைவன் தெய்வீகத் திருமகனாய் திகழ்வது மட்டுமே திறமன்று. ‚ '' எரிமருள் வேங்கை கடவுள் காக்கும் குறுகார் களனியின் உடலத்தங்கன் ஏதிலாளன் கவலை கவற்ற ஒருமுலை அறுத்த திருமாவுண்ணி'' என்னும் நற்றுணைச் செய்யுள் ஒன்றில் துன்பம் மீதுறப் பெற்ற பெண்ணொருத்தித் தன் முலை அறுத்த…

  7. முகவுரை! இன்னும் சரியாக மூன்று மணித்தியாலங்களில் பூமி தூள் தூளாக வெடித்து அழியப்போகிறது என்று காலை ஐந்து மணிக்கு எழும்பி சுருட்டை பற்றவைக்கும் கந்தசாமிக்கு தெரிந்திருக்க ஞாயமில்லை. கந்தசாமிக்கென்ன? நல்லூர் கந்தசாமிக்கு கூட தெரியாது. அவன் கோயிலுக்கு மேலாக மெல்ல மெல்ல உதித்துக்கொண்டு இருக்கும் சூரியனுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மூன்று மணிநேரமே அவகாசம் இருந்தாலும் கந்தசாமி பற்றி தெரியாமல் கலக்ஸி பற்றி பேசுவதில் அர்த்தமில்லை. ஸோ இரத்தின சுருக்கம்! யாழ்ப்பாணம், வைமன் றோட்டு சந்தியில் இருக்கும் பாரதியார் சிலையிலிருந்து கந்தர்மடம் நோக்கி போகும் அரசடி வீதியில், ஒரு ஐந்து ஆறு வீடுகள் தள்ளிப்போனால் ஒரு இராணுவ முகாம் வரும். அந்த முகாமுக்கு பக்கத்து வீட்டில் தான் …

    • 4 replies
    • 2.1k views
  8. புறாப்பித்து - சிறுகதை சிறுகதை: எஸ்.ராமகிருஷ்ணன், ஓவியங்கள்: ஸ்யாம் தற்செயலாகத்தான் அலுவலக மாடி ஜன்னலில் சாய்ந்தபடியே அந்தப் புறாக்களை கோவர்தன் பார்த்தார். அவரது அலுவலகத்தின் எதிரில் மத்திய உணவு சேமிப்புக் கிடங்கு இருந்தது. அதன் சுற்றுச்சுவர் மிக உயரமானது. கறுத்த சுவரின்மீது புறாக்கள் வரிசையாக உட்கார்ந்திருந்தன. ஒரேயொரு சாம்பல் நிறப் புறா. மற்றவை வெள்ளை நிறப் புறாக்கள். மொத்தம் எத்தனை என எண்ணிப்பார்த்தார். பதினாறு புறாக்கள். அலுவலகம், கோவர்தன் இயல்பை மாற்றியிருந்தது. இளைஞனாக இருந்த நாள்களில் இதுபோன்ற புறாக்களைப் பார்த்திருந்தால் இப்படி எண்ணியிருக்க மாட்டார். புறா என்றாலே காதலுக்குத் தூது விடுவது என்ற கற்பனையில் அமிழ்ந்து போயிருப…

  9. அவற்றின் கண்கள் - பா.திருச்செந்தாழை ஓவியங்கள் : ரமணன் வில்சன் - மேரி, ஓய்வுபெற்ற ஆசிரியத் தம்பதி. மேரி இன்று இறந்துவிட்டிருந்தார். பணி நாளினிடையே ஒரு மரணக் குறிப்பானது கார்ட்டூன் தோற்றம் பெற்றுவிடுகிறது. ஹவுசிங்போர்டு முட்டுச்சந்தில் அவர்களின் வீடு இருந்தது. நீராதாரம் இழந்துவிட்டு வீடுகளைக் கைவிட்டுச் சென்றுவிட்டவர்களால் அந்தத் தெரு சூன்யமடைந்திருந்தது. இயல்பாகவே முட்டுச்சந்து வீடுகள் காலத்தில் அதிர்ச்சியடைந்து அமைதியானவை. அநாதைக் கூழாங்கற்களில், மரங்களில், ஜன்னல்களில் பிணங்களைப்போல இறுகிவிட்ட ஈரத்திற்காகக் காயவைக்கப்பட்ட கொடித்துணிகளில் முட்டுச்சந்துகள் தங்களின் துக்கத்தை வளர்க்கின்றன. அதேவேளையில், பருவகால நோயொன்றிலிருந்து ம…

  10. நட்புக்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்த நண்பர்கள் எத்தனையோ மனிதர்களை நட்புக்கு எடுத்துக்காட்டாய் நாம் சுட்டுகிறோம். படித்து அதிசயிக்கிறோம். ஆனால் எத்தனை சோதனைகள் வந்தாலும் உண்மையிலேயே நட்புக்கு எடுத்துக்காட்டாய் பார்த்த கணத்திலிருந்து இறந்து வீழ்ந்த கணம் வரை வாழ்ந்தவர்கள் என்றால் கர்ணனையும் துரியோதனனையுமே சுட்டலாம். அவர்களின் சிறப்பான பக்கங்களைப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே. அஸ்தினாபுர அரண்மனையில் மன்னர்களுக்கிடையே ஒரு வில்வித்தைப் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஒருபோட்டியில் விஜயன் வென்றுவிட அங்கே தேரோட்டியின் மகனான கர்ணன் பங்கெடுக்க விரும்புகிறான். ஆனால் துரோணரோ அது க்ஷத்திரிய மன்னர்களுக்கான போட்டி என நிராகரிக்கிறார். உடனே துரியோதனன் கர்ணனைத் தன் நண்ப…

  11. ஜெக் கெவார்க்கியன்! இந்தப் பெயரைக் செய்திகளில் கேள்விப் படும் போதெல்லாம் என் மனதில் பலவாறான எண்ணங்கள் இழையோடும்.இந்த எண்ணங்களில் வியப்பும், விரக்தியும் சில சமயம் மனித வாழ்க்கையின் நொய்மையான தன்மை பற்றிய சலிப்பும் கலந்திருக்கும். இன்று காலை முதல் "டாக்டர் டெத்" என்று அழைக்கப்படும் ஜெக் கேவார்க்கியனின் பெயர் மறுபடியும் ஊடகங்களில் மிதந்து வருகிறது-அதுவே இந்தப் பதிவை எழுதத் தூண்டியது. டாக்டர் ஜெக் கேவார்க்கியன் 83 வயதில் இன்று இயற்கையான காரணங்களால் காலமானார் என்பது தான் செய்தி. ஆனால், அமெரிக்காவின் மிச்சிகன் மானிலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு இயற்கை தீர்ப்பளிக்க முதலே தன் மருத்துவ அறிவைப் பயன்படுத்தி மரணத்தை அளித்த ஒருவர் தான் ஜெக் கேவார்க்கியன். ஆர்மேனியப்…

  12. லண்டனில் கனடாவில் புலம் பெயர்ந்த தமிழர்களால் உருவாக்கப்பட்டு பல விருதுகளை பெற்ற 1999 என்ற திரைபடம் 11.06.11 அன்று காண்பிக்கப்பட்டது.இத் திரைபடம் அதிகம் அறியப்பட்டிராத ஒரு நிறுவனத்தின் திரைபட விழா மூலம் திரையிடப்பட்டது. லண்டன் புறநகர் பகுதியான kingston இல் திரையிடப்பட்ட பொழுதும் அரங்கு நிறைந்த நிலையில் பல இனத்தவரும் காணப்பட்டனர்.இந்த படம் சகல மட்டத்து திரைபட ரசிகர்களாலும் பார்க்க கூடிய படம். ஆனால் இந்த படத்தை லண்டனில் யாரும் விநியோகிக்க முன் வரவில்லையாம் என்பது துன்பகரமான செய்தி. இந்த படம் இத்திரை படவிழாவில் இலவசமாக காண்பிக்கப் பட்டது.இந்த படம் பார்த்து முடித்துவிட்டு என்னுள் எழுந்த கருத்து.தென்னிந்திய மற்றும் குப்பை படங்களை ரசித்து பழக்கப்பட்ட ரசிகர்கள் இந்த படத்தை விரும்…

    • 9 replies
    • 1.3k views
  13. கயிறே என் கதை கேள்! தூக்குத் தண்டனைக் கைதி முருகன் சொல்லும் கண்ணீர்க் கதை (பாகம் 11) எங்களின் தூக்குக்கு எதிராக மொத்தத் தமிழகமும் கைகோத்தபோது, காங்கிரஸ் காரர்கள் மட்டும் கோபத்தோடு எதிர்த் தார்கள். 'மறக்க முடியுமா... மன்னிக்க முடியுமா?’ என உரக்கக் குரல் எழுப்பினர். ராஜீவ் கொலையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைத் திரட்டி வந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். உண்மையாகவே ராஜீவ் காந்தியின் மீது நேசமும் பாசமும் பூண்டிருக்கும் காங்கிரஸ்காரர்களே... மாண்பையும் மனிதநேயத்தையும் மறவாதிருக்கும் நியாயவாதிகளே... உங்களிடம் எனது நீதிக்கான - உண்மைக்கான சில கேள்விகளை சமர்ப்பிக்கிறேன். உங்களை நீதிபதிகளாக மாறும்படி நான் வேண்ட வில்லை. குறைந்தபட்சம் நீங்கள் உண்மை என்று த…

  14. சிறிலங்காவின் இனப்பிரச்சினை மூன்று இனங்களையும் மூன்று துருவங்களாக்கியுள்ளது. ஆனாலும் இந்த மூன்று இன மக்களுடனும் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இவை தந்த அனுபவங்கள் பல. இவற்றுள் சில மிகவும் கசப்பானவை இன்னும் சில மிகவும் நெகிழ்ச்சியானவை. ஏங்கள் வீட்டில் வேலை செய்து எங்கள் அம்மாவின் சாப்பாட்டைச் சாப்பிட்டு எங்களில் ஒருவனாகப் பழகிய சிங்கள இனவெறியனே எங்கள் வீட்டைத் தீயிட்ட கசப்பான கடந்த கால நினைவும் என் மனதை விட்டு அகலவில்லை. கொடும் புற்றுநோயினால் எனது தாய்க்கு தினமும் இரத்தம் மாற்ற வேண்டிய தேவையுடன் நான் இருப்பதை அறிந்து எனக்குக் கூடத் தெரியாமல் தன் பெயரைக் கூடச் சொல்லாமல் என் அம்மாவிற்குக் குருதி தந்த எனது அலுவலகத்தில் வேலை செய்த சிங்களச் சகோத…

    • 205 replies
    • 28.8k views
  15. பிரபு போட்ட திட்டம் பலிக்கத் தொடங்கியது, இருவரும் ஒரு நன்நாளில் கடை திறந்தார்கள் வியாபாரமும் நன்றாக நடந்தது காலங்கள் ஓடிக்கொண்டே இருந்தன விஷ்ணுவுக்கு அவனது பெற்றோர் திருமணம் செய்து வைத்தார்கள், திருமணம் முடிந்து ஆறுமாதம் கூட ஆகவில்லை விஷ்ணுவின் மனைவி வைதேகி உன் பெற்றோருடன் இருக்க முடியாது ஒன்றில் நான் இருக்க வேணும் இல்லாட்டி அவை இருக்க வேணும் என்றாள் விஷ்ணு என்ன செய்வதென்று யோசித்தான் மோகம் அவன் கண்களை மறைத்தது தன் பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்க்க முடிவெடுத்தான், ஒரு அநாதையான தன்னை எடுத்து வளர்த்து ஆளாக்கிப் பார்த்த தன் பெற்றொருக்கு துரோகம் செய்தான் அவர்கள் எவ்வளவு சொல்லியும்,கெஞ்சியும் கேட்காமல் மனைவி சொல்லே மந்திரம் என்று அவர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்து …

    • 2 replies
    • 1.8k views
  16. மாபெரும் தாய் –அகரமுதல்வன் 01 வானிலை அற்புதமாக இருந்தது. குளிரில் குழையும் காற்று புன்முறுவல் பொங்கி வீசியது. அந்தியின் வாசனை உறக்கத்திலிருக்கும் ஆச்சியின் கனிந்த உடல் மீது எறும்புகளாய் ஊரத்தொடங்கியது. ஒதிய மரத்தின் பழுத்த இலைகள் உதிர்ந்து ஆச்சியைத் தீண்டின. உறக்கம் அந்தரங்கத்தின் பெருமழை. மின்னல் ஒளியும் பேய் இடியும் பிறந்து கொண்டேயிருக்கும் இந்த உறக்கம் ஆச்சியின் உடலை அத்துணை துல்லியமாக வந்தடைந்திருந்தது. புராதனக் கலத்தைப்போல அசைவின்றியிருந்த ஆச்சி கீர்த்திமிக்க வரலாற்றைப் போல சாந்தம் வழிய புரண்டு படுத்தாள். கிளித்தட்டு விளையாடி முடித்து வீடுகளுக்குத் திரும்பும் இக்கிராமத்தின் இளந்தாரிகள் ஒதியமரத்தைக் கடந்து போகையில் “ஆச்சி எழும்பன,உன்ர மந்திரக்கத்தியை எடுத்த…

  17. 10 செகண்ட் கதைகள் ஓவியங்கள்: ஸ்யாம் ட்ரீட்மெண்ட் ``கண் வலின்னு பையன் அழுறான்...'' என்றவரிடம், ``காலைல 50MB, மதியம் 50MB, நைட்டு 50MB மட்டும் மொபைல பார்க்கச் சொல்லுங்க... சரியாயிடும்'' என்றார், டாக்டர். - சி.சாமிநாதன் லாஸ்ட் ஸீன் ``கடைசியா எப்ப பார்த்தீங்க?'' என விசாரித்த போலீஸ்காரரிடம் வாட்ஸ்அப் லாஸ்ட் ஸீனைக் காட்டினார் பக்கத்து வீட்டுக்காரர். - கிருஷ்ணகுமார் காதல் ``நம்ம பொண்ணு லவ் பண்ண ஆரம்பிச்சுட்டான்னு எப்படி சொல்ற!'' ``நேத்து சேலை கட்டிப் பார்த்தாள்!'' - கி.ரவிக்குமார் கதை ``சும்மாச் சும்மா கதை கேட்டு நச்சரிக்கக் கூடாது. பாட்டியை சீரியல் பார்க்கவிடு...'' என்றாள் அம்மா! - பெ.பாண்டியன் என் ஆளு அவள் என் ஆளு என்ப…

  18. சின்னப்பன்றி: அகரன் அதிசயமாக அன்று காலை இயல் என்னை எழுப்பினாள். நாம் எழும்புவதற்கு கால் மணி நேரம் இருந்தது. கண்கள் அதிசயிக்கும்படி தானாகவே குளித்து, தன்னை அழகு படுத்தி, தனக்கு பிடித்த ‘அனா’ சட்டையை அணிந்திருந்தாள். காதுகள் அதிரும்படி பிரெஞ்சு மொழியில் ‘’Petit cochon réveille-toi’’என்றாள். (சிறிய பன்றி கண்விழி) எனது வாழ்வில் என்னை ‘சின்ன பன்றி’ என்று அழைத்தது, நான்கு வயதை நிறைத்துக் கொண்டிருந்த என் இயல். நான் பதறிப் போனேன். அவள் ‘பெரிய பன்றி’ என்றிருந்தால் பதட்டத்தின் அளவு குறைந்திருக்கும். பொதுவாக தமிழில் பன்றி, எருமை, குரங்கு, நாய் என்று ஊரில் திட்டு வேண்டியதால் அவை ‘கெட்ட’ வார்த்தைகள் என்று என்னிடம் படர்ந்திருந்தது. ஒரு இருட்டு மேகம் போல முகத்தை மாற்றி ‘’ இதை ய…

  19. நன்றி: விகடன் இணைப்பு: http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=90628 எங்கள் ஊர் ரொம்ப அழகான ஊர். எங்கள் அக்ரஹாரத் தெரு ரொம்ப அழகானது. எங்கள் அக்ரஹாரத்து மனிதர்களும் ரொம்ப அழகானவர்கள். அழகு என்றால் நீங்கள் என்னவென்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்களோ, எனக்குத் தெரியாது. என்னைப் பொறுத்தவரை ஒன்றின் நினைவே சுகமளிக்கிறது என்றால்... அது ரொம்ப அழகாகத்தான் இருக்க வேண்டும். 35 வருஷங்களுக்கு முன்னால் அங்கே அந்தத் தெருவில் ஒரு பழங்காலத்து வீட்டின் கர்ப்பக் கிரகம் மாதிரி இருளடைந்த அறையில் பிறந்து, அந்தத் தெருப் புழுதியிலே விளையாடி, அந்த மனிதர்களின் அன்புக்கும் ஆத்திரத்துக்கும் ஆளாகி வளர்ந்து, இப்போது பிரிந்து, 25 வருஷங்கள் ஆன பிறகும் அந்த நினைவுகள், அனுபவங…

  20. 10 செகண்ட் கதைகள் கெடுதல் ``எப்பப் பாரு டிவி பாத்தா கண்ணு என்னத்துக்குடா ஆகும்..?” எனச் சத்தம் போட்டார், வாட்ஸ்அப் பார்த்துக்கொண்டிருந்த அப்பா! - சி.சாமிநாதன் வீடு “தண்ணி வசதி இல்லாட்டியும் பரவாயில்ல.. கொசு இல்லாத வீடா பாருங்க’’ என்றான், தரகரிடம் ராகுல் . - எம். விக்னேஷ் கல்வி ``மார்க் முக்கியமா, ரேங்க் முக்கியமா’’ எனக் கேட்ட மகனிடம் இரண்டுமே முக்கியம் இல்லை என்றார் தனியார் பள்ளி நடத்திவந்த அரசியல்வாதி! - கே.சதீஷ் அறிவுரை ``பேரன்டிங் ரொம்ப முக்கியம். குழந்தைகளைத் திட்டாதீங்க. அன்பா இருங்க’’ என்ற பள்ளி ஆசிரியை வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த மகனை அடி பின்னியெடுத்தார். - கே.சதீஷ் ரகசியம் பஸ்சில்…

  21. கண்ணன் - சிறுகதை சிறுகதை: ஷான் கருப்பசாமி, ஓவியங்கள்: ஸ்யாம் லாரி விரைந்து கொண்டிருந்தது. பரமசிவம் வெளியே தலையை நீட்டி புளிச்சென்று வெற்றிலை எச்சிலைத் துப்பினான். அது காற்றில் சாரலாகி மறைந்தது. இருபது வருடங்களாக லாரி ஓட்டுகிறான். இந்தியாவின் எல்லா மூலைகளுக்கும் எல்லாவிதமான சரக்குகளையும் ஏற்றிக் கொண்டு சென்றிருக்கிறான். காதை மறைத்துக் கட்டியிருந்த உருமாலைக் கட்டு குளிருக்குக் கதகதப்பாக இருந்தது. நாக்பூரிலிருந்து கிளம்பி ஒரு மணி நேரம்தான் ஆகியிருந்தது. இன்னும் பிலாஸ்பூர் வரை செல்லவேண்டியிருந்தது. பீடி கையிருப்பு வேறு குறைவாக இருந்ததால் இன்னொரு பீடியைப் பற்ற வைக்கும் யோசனையைக் கைவிட்டான். தவிர அவனுக்கு இன்னொரு முக்கியமான வேலை இருந…

    • 1 reply
    • 1.8k views
  22. கதை சொல்லவா? (08)/வெறும் நாய் - கு. அழகிரிசாமி/ திரு தியா காண்டீபன்

    • 0 replies
    • 955 views
  23. போதமும் காணாத போதம் – அறிவிப்பு மெய்த்தலம் மூண்டெழுகிறது நெருப்பு முடுகி முடுகி எரிகின்றது ஒருபொறிதான் உள்விழுந்தது உலகே பற்றி எரிவதென ஓங்கி எரிகின்றது கீழிருந்து மேலெழுகிற சோதி ஆளுகின்றதா ?எனது போக்கும் வரவும் புணர்வுமெரிகின்றதா? சிற்றறிவாளும் நினைவுகளை சீண்டியழித்துச் செயலை முடுக்கி தூண்டும் சுடரொளியான சுதந்திரப் பிழம்பாய் மூண்டெழுகிறது நெருப்பு மேலே மேலே இன்னும் மேலே வாலின் நுனியை ஊன்றியெழுந்து வளர்பிறை நிலவைக் குறிவைத்து தூவெளி வானில் சோதி சுடர்த்தி நீலநிறத்துச் சுவாலையை வீசி சீறியெழுகின்ற அரவென நெளிதரு நடனம் நடனம் தீயளி நடனம்! நர்த்தனமாடும் அக…

  24. அம்மாவுடன் கோவிலுக்கு போவது என்றால் எனக்கு சின்ன வயசில் விருப்பமில்ல,அவர் மூன்றுதரம் கோவிலில் உள்வீதி வலம் வருவார் அவருடன் நானும் வலம் வரவேண்டும் பிறகு வெளிவீதி மூன்று தரம் சுற்ற வேண்டும்.அந்த வயசில் கோவில்கள் மிகவும் பிரமாண்டமாக தெரிந்தன,இதை எப்படி மூன்றுதரம் சுற்றுவது கால் நோகும் என்ற பயம் வேறு,"அம்மா எனக்கு மூன்று தரம் சுற்ற ஏலாது கால் நோகும் ஒரு தடவை மற்றும் சுற்றுகிறேன்" என அழாக்குறையாக கேட்பேன்." தம்பி ஒருதரம் சுற்றினால் பலன் கிடையாது கடவுளின் அருள் கிடைக்க வேணும் என்றால் மூன்றுதரம் சுற்ற வேண்டும், அத்துடன் கோவிலுக்கு போகும் பொழுது நடந்து போனால் இன்னும் அதிக வரம் கிடைக்கும்"என சொல்லுவார். சின்ன வயசு தாய் சொல்லை தட்டாதே என்பது நன்றாகவே மனதில் பதிந்து விட்டத…

    • 26 replies
    • 2.8k views
  25. Started by Kavallur Kanmani,

    விம்பம் இதமான காலை நேரம். இளவேனிற் காலத்தின் ஆரம்பம். ஆங்காங்கு புள்ளினங்களின் கீச் ;கீச்’ ஒலி. ஐன்னல் திரைச்சீலை இடைவெளிகளினூடாககதிரவனின் ஒளிக்கீற்று கட்டிலில் விழ ஆரம்பித்தது. ராதி மெதுவாகப் புரண்டு படுத்தாள். மெல்லிய திரும்பலிலேயே வயிற்றுக்குள் குழந்தை உதைத்தது.‘’அம்மா’’ என்ற வார்த்தை அவளையறியாமலேயே தன்னிச்சையாய் உதிர்ந்தது. ரமேஸ் அதிகாலையிலேயே எழுந்து வேலைக்குப் போய்விட்டதால் பக்கத்துப் படுக்கை வெறுமையாய்க் கிடந்தது. ரமேஸ் அவன்தான் எவ்வளவு நல்ல கணவன். மெல்ல எழுந்து திரைச்சீலைகளை நீக்கி விட்டாள். கண்ணாடி ஐன்னலூடாக வீதியில் அவசரம் அவசரமாக அசையும் மக்கள் கூட்டம். அவளது நினைவுகள் தான் பிறந்து வளர்ந்த அந்த அழகிய கிராமத்தை அச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.