கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
மாட்டு வண்டி.... ஒரு ஊரில் வியாபாரி ஒருவன் வாழ்ந்து வந்தான். தனது ஊரிலிருந்து தினமும் சரக்கு மூட்டைகளை கொண்டு சென்று பக்கத்து ஊர் சந்தையில் விற்பது அவனது தொழில். இதற்காக மாட்டுவண்டி ஒன்றை அவன் வைத்து இருந்தான். ஒரு நாள் அவன் வண்டியில் பூட்டும் மாடு அவனிடம் வந்து "எஜமான்! இரண்டு ஆண்டுகளாக நான் உங்களிடம் வேலை செய்கிறேன். ஆனால் நான் செய்யும் வேலைக்கு நீங்கள் எனக்கு சாப்பிட கொடுக்கும் புல்லின் அளவோ மிக குறைவு. தயவு செய்து எனக்கு நீங்கள் கொடுக்கும் புல்லின் அளவை அதிகரியுங்கள்" என்றது. மாடு சொன்னதை கவனமாக கேட்ட வியாபாரி "மாடே! நீ கடினமாக உழைப்பது உண்மையே. ஆனால் பக்கத்துக்கு வீட்டுக்காரன் மாடு 25 மூட்டைகளை தன் வண்டியில் சுமக்கிறது. ஆனால் நீயோ தின…
-
- 0 replies
- 1.8k views
-
-
மாணிக்கம் ஒரு ஏழை விவசாயி. தினமும் காலையில் எழுந்து தனக்குச் சொந்தமான வயற்காட்டுக்குச் சென்று கீரை வகைகளைப் பறித்து, அதைச் சந்தைக்கு கொண்டு சென்று விற்று, அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தைக் கொண்டு தன் குடும்பத்தை நடத்திக் கொண்டிருந்தான். அவன் தினமும் கீரைகளைப் பறிக்க, வயற்காட்டுக்குப் போகும் வழியில், ஒரு குடிலில் முனிவர் ஒருவர் ஒரு சிறிய பெருமாள் விக்கிரகத்தை வைத்து, அதைத் துளசி இலைகளால் பூஜைகள் செய்வதை பார்த்துக்கொண்டே போவான். அப்போதெல்லாம் முனிவரின் மீது ஒரு பக்தி கலந்த மரியாதை ஏற்படும். ஒருநாள் மாணிக்கம் கீரைகளைப் பறிக்கும் போது, அதன் அருகே சில துளசிச் செடிகள் வளர்ந்திருப்பதைக் கண்டான். அப்போது அவனுக்கு அந்த முனிவர் ஞாபகம்தான் வந்தது. உடனே ‘நாமும் அந்த …
-
- 1 reply
- 920 views
-
-
மாதா இந்த நாட்டில் அப்போது கடுமையானபனிக்காலமாகயிருந்தது. வெண்பனி விழுந்துதரையில் ஓரடி உயரத்திற்குப் பூப்போல குவிந்துகிடந்தது. அம்மா தூய பனிக்குள் தனதுகால்களை மிக மெதுவாகவும்எச்சரிக்கையாகவும் எடுத்து வைத்து வீதியின்ஓரமாக ஒரு முதிய வெண்ணிற வாத்துப் போலஅசைந்து நடந்துவருவதை தனது காருக்குள்இருந்தவாறே குற்றவாளிகவனித்துக்கொண்டிருந்தான். அப்போது மழைதூறத் தொடங்கிற்று. அம்மா தனது இரு கைகளையும் பக்கவாட்டில்ஆட்டியும் அசைத்தும் தனது உடலைச் சமன்செய்தவாறே வந்தார். முகத்தை வானத்தைநோக்கி அண்ணாந்து முகத்தில் மழைத்துளிகளை வாங்கிக்கொண்டார். அப்போதுபனியில் சறுக்கிக் கீழே முழந்தாள் மடியவிழுந்தார். அம்மா சட்டெனத் தனது வலதுகையைத் தரையிலே ஊன்றிக்கொண்டதால்முகம் அடிபடக் கீழே விழுவதிலிருந்துதப…
-
- 7 replies
- 2.8k views
-
-
Posted inStory மாதா எழுதிய “முதுமை” சிறுகதை Posted byBookday07/07/2025No CommentsPosted inStory “முதுமை” சிறுகதை – மாதா அந்த முதியவருக்கு எண்பது வயதாகிறது. அவரது மனைவிக்கு எழுபது. அவர்கள் கிளையில் தொங்கிக்கொண்டிருக்கும் பழுத்த மாம்பழங்கள். ஒரு நாள் திடீரென்று பலத்த காற்று வீசும் போது ஒன்றன் பின் ஒன்றாக பூமியில் விழுந்து விடும். தனது மனைவியை விட தான் வயது மூத்தவர் என்பதால் தார்மீக அடிப்படையில் அவளுக்கு முன்பாகவே தான் காலமாகிவிட வேண்டுமென்று எண்ணினார். ஆனால் கடவுள் அந்த வயது முதிர்ந்தபெண்ணுக்கு அணுக்கமாகவே நடந்து வருகிறார். வயதான காலத்தில் வாழ்க்கையில் பெரிதாக ஒன்றும் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் விரும்பியதை எல்லாம் கடவுள் வழங்கியிருப்பதாகவே நம்பினார்கள். தேவைகள் குறைவாக இரு…
-
- 0 replies
- 442 views
-
-
மாதுமை - கோமகன் ராகவனின் சொந்த மண் கோண்டாவிலாக இருந்தது. அவன் அவனது மச்சாள் மகேஸ்வரியை கலியாணம் செய்து மாதுமை என்ற பெண் குழந்தைக்கும் அப்பாவாக இருந்தான் .நாட்டு நடப்புகள் அவனை சிப்பிலி ஆட்டின. ரெண்டு பக்கத்து சீருடைகளுக்கும் இடையில் அவனது உயிர் மங்காத்தா விளையாடியது .கோண்டாவில் இந்து கலவன் பாடசாலையில் அதிபராக பேராய் புகழாய் ராஜகுமாரன் போல் இருந்த ராகவன், ஒருநாள் பல தேசங்கள் கடந்து நொந்த குமாரானாய் ஓர் இலையுதிர் காலமொன்றில் பாரிஸுக்கு என்றியானான். அவனுடன் படித்த குணாவின் அறையில் எட்டுடன் ஒன்பதானான். முப்பது மீற்ரர் பரப்பளவை கொண்ட ரகுவின் அறையில் ராகவனுக்கு நிலத்திலேயே படுக்க இடம் கிடைத்தது. அந்த அறை ஒன்றும் பெரிய மாளிகை இல்லை. அந்த அறைக்குள்ளேயே குசினி இருந்தது. ஒரு…
-
- 0 replies
- 2.3k views
-
-
மானிட உயிர் கோவிலில் காண்டாமணியோசை கேட்கின்றது, இன்றைக்கு கோவில் தீர்த்தமல்லே, நேரத்துக்குப் போனால்த் தான் சுவாமி பூசையையும் பார்த்திட்டு தீர்த்தமாடப் போகலாம், சுனாமிக்குப் பிறகு கடற்கரைக்குப் போகவே பயமாக இருக்கு, சுனாமி அடிச்சதில கடற்கரையில் இருந்து ஒரு மைல் தூரத்துக்கு எதுவித வீடு மனையும் மிஞ்சல்ல, ஆனா இந்த கோவில் மட்டும் மிஞ்சி இருப்பது அந்த முருகனில் செயல் தான், ஒரு கல் கூட அசையல்லையே! தமையன் கந்தவனத்துடன் கதைத்துக் கொண்டிருந்தாள் விசாலாட்சி, முருகா... முருகா... எல்லோரையும் பிரச்சனை ஒண்டும் இல்லாமல் காப்பாத்தப்பா... சுனாமியின் தாக்கத்தில் கணவனை இழந்தவள் தான் விசாலாட்சி, வெளிநாட்டிலுள்ள மூன்று பிள்ளைகளும் தாங்கள் வசிக்கும் நாடுகளுக்கு வருமாறு அ…
-
- 5 replies
- 2k views
-
-
மாபெரும் தாய் –அகரமுதல்வன் 01 வானிலை அற்புதமாக இருந்தது. குளிரில் குழையும் காற்று புன்முறுவல் பொங்கி வீசியது. அந்தியின் வாசனை உறக்கத்திலிருக்கும் ஆச்சியின் கனிந்த உடல் மீது எறும்புகளாய் ஊரத்தொடங்கியது. ஒதிய மரத்தின் பழுத்த இலைகள் உதிர்ந்து ஆச்சியைத் தீண்டின. உறக்கம் அந்தரங்கத்தின் பெருமழை. மின்னல் ஒளியும் பேய் இடியும் பிறந்து கொண்டேயிருக்கும் இந்த உறக்கம் ஆச்சியின் உடலை அத்துணை துல்லியமாக வந்தடைந்திருந்தது. புராதனக் கலத்தைப்போல அசைவின்றியிருந்த ஆச்சி கீர்த்திமிக்க வரலாற்றைப் போல சாந்தம் வழிய புரண்டு படுத்தாள். கிளித்தட்டு விளையாடி முடித்து வீடுகளுக்குத் திரும்பும் இக்கிராமத்தின் இளந்தாரிகள் ஒதியமரத்தைக் கடந்து போகையில் “ஆச்சி எழும்பன,உன்ர மந்திரக்கத்தியை எடுத்த…
-
- 0 replies
- 546 views
-
-
குகனும்,மதனும் பாலர் பாடாசலை முதல் உயர்தரம் வரை ஒன்றாக படித்தவர்கள் மதன் இடையில் ஒருவருடம் கொழும்பில் படித்தவன்.இருவருக்கும் மருத்துவராக வேண்டும் என்ற நினைப்பு ஆனால் முயற்சி இல்லாமல் உயர்தரம் மூன்று முறை எடுத்தும் முயற்சி வெற்றி அளிக்கவில்லை.தொடர்ந்து என்ன செய்வது என்று யோசித்து கொண்டு இருக்கும் போது மதனிம் மாமன் கொழும்பு வரும்படியும் அங்கு ஜ.சி.எம்.ஏ செய்ய வரும் படி கடிதம் போட்டிருந்தார் மதனிற்கு அந்த யோசனை நல்லதாகபட்டது உடனே குகனையும் வரும்படி கேட்டான் குகன் மறுத்துவிட்டான் உயிரியல் பாடம் படித்துவிட்டு எனி முதலே இருந்து கணக்காளர் படிப்பு படிக்க என்னால் முடியாது என்று மறுத்துவிட்டான்.மச்சான் நீ வராவிட்டால் உன்னுடைய ரிசல்ட் சீட் கொப்பி ஒன்றும் தரும்படி கேட்டான் குகன் ஒன்ற…
-
- 16 replies
- 4k views
-
-
மாயக்கிளிகள் ஜீ. முருகன் தனது இனத்துடன் வனங்களில் திரிந்து கொண்டிருந்தவளிடம் பிரேமைகொண்டு பட்டமகிஷியாக்கிக் கொண்டான் அரசன். மலைநாட்டுக்காரி ராணியாகி விட்டாள். அவள் இங்கே வரும்போது சீதனமாகப் பாடல்களைக் கொண்டு வந்திருந்தாள்; ஏராளமான பாடல்கள். அவள் பாடத்தொடங்கிய கணத்திலேயே நறுமணம் கமழ்ந்தது. துரிதமாக வளர்ந்து பூத்தன செடிகளெல்லாம். அவள் வருகைக்குப் பின்னர் அந்தப்புரத்திற்கு விதவிதமான பறவைகள் வரத்துவங்கின. புதுப்புது வண்ணங்களில் பட்டாம்பூச்சிகள் காணக்கிடைத்தன. வேட்டைக்குப் போனவன் இப்படி மணக் கோலத்துடன் திரும்பி வருவானென்று யாரும் எதிர்பார்க்கவில்லை. சூன்யக்காரி என்று குமைந்தார் கிழட்டு மந்திரி. ஒரு மலைநாட்டுக்காரி கீர்த்திமிக்க இந்நாட்டின் மகாராணியாவதை அவருட…
-
- 0 replies
- 753 views
-
-
மிகவும் அருமையான எல்லோரும் வாசிக்க வேண்டிய ஒரு கதை ,இணைக்க முயற்சித்தேன் முடியவில்லை .யாராவது முடிந்தால் இணைத்து விடவும் . . அம்ருதா யூன் இதழில் வெளிவந்த கதை இது .
-
- 13 replies
- 2.3k views
-
-
மாயாவி ஒரு பேப்பரிற்காக சாத்திரி மாயாவி எண்டதும் சின்ன வயதிலை படிச்ச சித்திரக்கதை மாயாவிவேதாளன் கதை பலபேருக்கு ஞாபத்துக்கு வரும். ஆனால் இது சித்திரக்கதையில்லை ஊரிலை நடந்தகதை. முந்தி ஊரிலை காலத்துக்குக்காலம் மர்ம மனிதர். இல்லாட்டி மாயாவி மனிதர் உலாவுவினம். இல்லாட்டி உலாவுறகதை (வதந்தி) அடிக்கடி அடிபடும்.கதையளைக்கேட்டாலே ஒருவித மர்மம் நிறைஞ்ச ஒரு பரபரப்பாத்தான் இந்த மர்மமனிசனின்ரை கதை ஊரிலை கதைப்பினம்.கதையைக் கேட்டால் ஏதோ திகில் நிறைஞ்ச ஒரு இங்கிலிஸ் படம் பாத்தமாதிரி இருக்கும்.பெரும்பாலும் இந்தமாயாவி மனிசர் தோட்டங்களிலை விழைச்சல் இல்லாட்டி அருவிவெட்டு(நெல்லு வெட்டு)காலங்களிலைதான் அதிகமாய் உலாவுவினம்.அப்பிடித்தான் எங்கடை ஊரிலையும் திடீரெண்டு மர்ம மனிசனின்ரை கதை …
-
- 15 replies
- 2.5k views
-
-
நீண்ட காத்திருப்பின் பின்.. டபிள்டெக்கர் வந்து சேர்ந்தது. அதில் ஏற முண்டி அடிக்கும் கூட்டத்திடம்.. இதுகளுக்கு ஒரு ஒழுங்கு வரிசையில வரத்தெரியாதா... என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தியபடி.. மேல் தட்டை பார்த்தேன். அது காலியாகக் கிடந்தது.. நான் டெக்கரில் ஏறுவதில் போட்டி போடுவதை விடுத்து மேல இடம் இருக்குத்தானே கடைசியா ஏறுவம் என்று பின்னடித்தேன். அழகிய பூப்போட்ட மேற்சட்டையும்.. ஸ்கேட்டும் அணிந்தவளாக அவள்.. சமர் உடுப்பில் கலக்கினாள். அவளின் எலுமிச்சம் கலர் தோலுக்கு அந்த உடுப்பு எடுப்பாக இருந்தது. அவளும் என்னைப் போலவே அதே டபிள்டெக்கரில் ஏறப் போனவள்.. பின்னர்.. பின்னடித்தவளாய் பின்னகர்ந்து வந்து என் முன் நின்றாள். என்ன ஒரு வேவ் லென்த்.. ஒரே விதமாய் சிந்திக்கிறாளே என்று என் மனசு தனக…
-
- 17 replies
- 7.4k views
-
-
மான்டேஜ் மனசு 16: மாரிகளின் தீராக் காதலால் வாடா 'பூ'வுலகு ''முன்னாடி மாசத்துக்கு ஒரு முறையாவது வீட்டுக்கு வருவே. இப்போ ரெண்டு மாசம் ஆனாலும் எட்டிக் கூடப் பார்க்க மாட்டேங்குறியே ராசா.'' ''சீக்கிரம் வர்றேன் பாட்டிம்மா''. ''ஊர்ல மாரியம்மன் திருவிழா. ஒரு எட்டு வந்துட்டுப் போகலாம்ல.'' ''சரிம்மா. அவசியம் வர்றேன்.'' பாட்டியிடம் போனில் பேசியதில் இருந்து எனக்கு ஊருக்குப் போக வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது. திருவிழா என்பதால் ரொம்ப நாளாய் பார்க்க முடியாத நண்பர்களையும் பார்த்துவிடலாம் என்ற நினைப்பில் ஊருக்குச் சென்றேன். தெருக்கூத்து நடந்து கொண்டிருந்தது. என் நண்பர்கள் நால…
-
- 0 replies
- 1.8k views
-
-
மாரியம்மன் கஞ்சியும் அந்தோணிசாமியும் நாகரத்தினம் கிருஷ்ணா ஜூன் மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை. வீட்டின் பின்புறமிருக்கிற தோட்டம். கோடைவெயிலை சுமந்தபடி அலையும் காற்று. காற்றின் அலைச்சலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் செரீஸ்மரத்தின் கிளைகளும், கைவிரல்கள் போல பிரிந்த அவற்றின் கொப்புகளும் அசைந்துகொண்டிருந்தன. மண்தரையெங்கும் பரவலாக நாவல்போல உலர்ந்த செரீஸ் பழங்கள், உதிர்ந்த இலைகள், மிலாறுகள். இரு செரீஸ் மரங்களுக்கிடையில் நான்குக்கு இரண்டு ச.மீட்டரில் அமைந்த மரக்குடில். பிளாஸ்டிக் நாற்காலியொன்றில் கால்களைப் பின்புறமாக மடித்து அந்தோணிசாமி உட்கார்ந்திருந்தார். பார்வை அவருக்கு நேர் எதிரே, இனி தேறாது என்றிருந்த வாழைமரத்தின் மீது நிலைத்திருக்கிறது. அரையில் முழங்கால் மூட்டுவரை இறங்கி…
-
- 1 reply
- 1.4k views
-
-
மாரியும் லாலியும் பின்னே சுகுவும்! ராஜுமுருகன் செ ன்னை கே.கே. நகரில் மொட்டை மாடி குடிலில் பேச்சுலர் வாசம் பூண்டிருந்தார் சுகுமாரன். 42 வயதாகியும் கல்யாணம் நிகழாத வருக்கு அடுத்த பிறவி குறித்து நான்கு ஆசைகள் இருந்தன. கண்ணதாசன் வீட்டில் சாராய கிளாஸாகப் பிறக்க வேண்டும்; இந்தி சினிமா டைரக்டரும் நடிகருமான குருதத்தின் தொப்பியாக ஜனிக்க வேண்டும்; இளையராஜாவின் ஆர்மோனியத்தில் ஒரு கட்டையாக இருக்க வேண்டும்; அல்லது, தன்னைத் துயரக் குடிலில் அடைத் துச் …
-
- 0 replies
- 1.3k views
-
-
ரொறன்ரோவில் அது ஒரு கோடைகாலம் வானொலிகளும் டிவிக்களும் மார்க்கம் மைதானத்தில் மாறி மாறி போட்டி போட்டு பண்டிகை செய்யும் காலம்.. ஆம்... வளமைபோல அந்த குடும்பமும் பண்டிகை காண உற்றார் உறவினரோடு பண்டிகை நடைபெறும் மார்க்கம் மைதானத்தை வந்தடைந்தது.. அவர்களைக் காணும் நண்பா்களும் உறவினா்களும் இந்தியாவிலிருந்து அந்த நடிகையும் வந்திட்டாவாம் - அந்த பாடகரும் வந்திட்டாராம் என்ன..! என குசு குசுத்தபடி தமது தமது பிள்ளைகளுக்காக சவாரிகளுக்காக பற்றுச் சீட்டுக்களை பெற்று தமது பிள்ளைகளை சந்தோசப்படுத்தியவாறு அந்த மைதானத்தின் ஒரு பக்கத்தை சுற்றிவருகிறார்கள்.. மைதானத்தினுள் மக்கள் திரள் திரளாக வருகிறார்கள் அந்தச்சிறுவனது தாயாருக்கு எச்சரிக்கை உணா்வு மேல…
-
- 0 replies
- 1.3k views
-
-
மார்கழியில் ஒரு காலை.... -------------------------------------------------------------------------------- மார்கழியின் காலை பொழுதை ரசித்தவரா நீங்கள். இப்போது அதை பார்க்காமல் ஏங்குபவரா நீங்கள்.......... கட்டாயம் படியுங்கள். நன்றாக கம்பளியை போர்த்திக் கொண்டு தூங்கிக் கொண்டிருக்கும் போது அப்பா எழுப்பி “போய் பால் வாங்கிட்டு வா” என்று மார்கழியில் ஒரு காலையில் எழுப்ப மார்கழியின் காலை எத்தனை ரம்மியமானது என்று உணர ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் எழுந்திரிக்க மனம் இல்லாமல் குளிருக்கு இதமாக போர்வையை நன்றாக இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கத் தோன்றும். இத்தனை ரம்மியமான அழகான உணர்ச்சிப் பூர்வமான மார்கழியை இத்தனை ஆண்டுகாலமாக ரசிக்காமல் விட்டுவிட்ட இந்த சோம்…
-
- 4 replies
- 2.6k views
-
-
மார்ட்டினா -ப. தெய்வீகன் (1) கறுத்த எறும்புகள் மார்ட்டினாவின் கைகளில் ஏறுவதும் விழுவதுமாக சிநேகித்தபடியிருந்தன. மார்ட்டினா பூரித்திருந்தாள். கால்களை விரித்து தரையில் அமர்ந்தபடி, உள்ளங்கைககளில் கூட்டி அள்ளிய மண்ணை மெதுவாக வருடினாள். ஆதி நிலத்தின் அழியாத அழகை தினமும் பருகுவதில் அவளுக்குள் அப்படியொரு இன்பம். கதிர் வற்றிய வானத்திலிருந்து விழுந்த அந்தியின் வெளிச்சம், மரக்கிளைகளின் வழியாக தரையில் சிறு நிழல்களை வரைந்தது. குளிரோடு தலைகோதும் காற்றின் வாசனையை உணரும்போதெல்லாம் மார்ட்டினா வானத்தை அண்ணாந்து பார்த்து சிரித்தாள். தோழமையான அவளது புன்னகையில் இயற்கையின் மொழி அடர்ந்திருந்தது. அருவமான அவள் எழில் கலந்திருந்தது. முதியோர் இல்லத்தின் நான்காவது …
-
- 0 replies
- 730 views
-
-
மாற வேண்டாம்! சாரு தன் கணவர் மாதவனைப் பற்றி இப்படித்தான் புலம்புவாள்...‘பெரிய கம்பெனியில் ஜெனரல் மேனேஜர்னு பேர். என்ன சம்பளம் வாங்கி என்ன புண்ணியம்? மனுஷன் எச்சில் கையால் காக்கா ஓட்ட மாட்டார். வீட்டுக்கு அரிசி, பருப்பு கூட கெமிக்கல் பேலன்ஸில் அளந்து அளந்து வாங்குவார்... தரித்திரம்! மாப்பிள்ளை, பொண்ணுங்க விசேஷம்னு வந்தா கூட இருக்கறதுலயே மலிவான ரகத்துல துணிமணி வாங்கித் தருவார்.’ ‘‘ஏங்க, போகும்போது பணத்தை தலையில கட்டிக்கிட்டா போகப் போறோம்? கொஞ்சம் தாராளமாத்தான் செலவழியுங்களேன்!’’ என்றாள் ஒரு நாள்.மாதவன் புன்னகைத்து பதில் சொன்னார்... ‘‘என் குடும்பம் ரொம்பப் பெருசு!’’‘‘இருந்த ரெண்டு பொண்ணுங்களையும் கட்டிக் கொடுத்தாச்சு. இதுக்கு மேல யாருக்கு சம்பாதிக்கணும்? …
-
- 1 reply
- 1.6k views
-
-
மான்டேஜ் மனசு 18: மாறாக் காதலின் பொக்கிஷங்கள்! பல ஆண்டுகளுக்குப் பிறகு குமார் செல்போனில் அழைத்தான். ''என்ன பண்ற மாப்ள'' ''அலுவலகத்துல இருக்கேன் டா. என்ன விஷயம்?'' ''நானும் சென்னையிலதான் இருக்கேன். உன் ஆபிஸ் எங்கே?'' ''மவுன்ட் ரோடு'' ''சூப்பர் மாப்ள. நான் தேனாம்பேட்டையிலதான் வீடு எடுத்து தங்கி இருக்கேன். வந்து ஒரு மாசம்தான் ஆச்சு'' ''சூப்பர் டா. சந்திக்கலாமா'' ''நிச்சயமா'' ''சரி சாயந்திரம் பேசுறேன்'' என்று உரையாடலுக்குத் திரையிட்டு பணிகளில் கவனம் செலுத்தினேன். இன்றைய இரவை எப்படிக் கழிக்கலாம் என்ற யோசனையுடன் இருந்தபோ…
-
- 1 reply
- 2.5k views
-
-
மாற்றமா ? தடுமாற்றமா? அ. முத்துலிங்கம் பூப்போல கீழே வந்து இறங்கியது விமானம். பதினைந்து வருடத்திற்குப் பிறகு கொழும்புக்கு வருகிறேன். மனைவி சொல்லியிருந்தாள். “நீங்கள் நம்பமாட்டீர்கள், அவ்வளவு சேஞ்ச்” என்று. நான் பல நாடுகளுக்கும் போயிருக்கிறேன்; பல இடங்களில் வேலை பார்த்துமிருக்கிறேன். ‘என்ன தான் என்று பார்ப்போமோ?’ என்று வந்திருந்தேன். குடிவரவுக்கு (Immigration) வரும் போதே இது விஷயம் வேறு என்று உடனே தெரிந்து விடுகிறது. அதிகாரிகள் முகத்தை உம்மென்று தான் வைத்துக் கொண்டிருப்பார்கள். ஒரு மனிதப் பிராணி அவர்கள் முன்பு நிற்பது அவர்களுக்குத் தெரியும்: ஆனால் நிமிர்ந்து கூட பார்க்க மாட்டார்கள். என் முறை வந்தது. பாஸ்போட்டை நீட்டினேன். குனிந்த படி ஏதோ எழுதி விட்டு பா…
-
- 0 replies
- 740 views
-
-
மாலதி டீச்சர் .......அப்போது மூன்று வயது இருக்கும். என் அண்ணா பள்ளிக்கு போகும் போதெல்லாம் நானும் அடம் பிடிப்பேன் கூட போகவேணு மென்று . ஏற்கனவே அண்ணவின் பை தண்ணீர் போத்தல் மத்திய உணவு பெட்டி என்று தோளில் மாட்டி பல முறை ஒத்திகை பார்த்தாயிற்று . அந்த சுப நாளும் வந்தது . முதலில் பாலர் வகுப்பு என்னும் .( அரிவரி )வகுப்பு . முதல் நாள் அதிகாலயே எழுந்து விட்டேனாம். அப்பா அப்போது பட்டணத்தில் வேலைபார்த்துக் கொண்டிருந்தார். எனது நச்ச்ரிப்பு தாங்காமல் அம்மா கடிதம் எழுதி எனக்கு தேவையாதை ஒரு நண்பர் மூலம் கொடுத்து விட்டிருந்தார் . பள்ளிக்கு போகுமுன்பே அதை பிரித்து ஒத்திகை பார்த்தாயிற்று. அந்த சுப நாள் ஒரு திங்கட்கிழமை. மாத ஆரம் பம என எண்ணுகிறேன். அங்கு இரு பெண ஆசிரியைக ளும் ஒரு தலை…
-
- 9 replies
- 19.5k views
-
-
போராளி காந்தா இறுதிச்சமர் முடிவில் தனது பிள்ளைகளோடு இராணுவக்கட்டுப்பாட்டை நோக்கி வந்த நேரம் எறிகணைபட்டு வீரச்சாவடைந்துவிட்டார். கையில் சரிந்த காந்தாவின் உடலை அவரது போராளிக்கணவன் தனது மனைவியின் உடலை நாய்களுக்கு இரையாகாமல் புதைத்துவிட்டு வருவதாக உறவுகளிடம் சொல்லிவிட்டு இரண்டு பிள்ளைகளையும் உறவுகளிடம் கொடுத்தனுப்பிவிட்டு காந்தாவின் உடலைப்புதைத்துவிட்டுப் போகப்போனவர். இன்றுவரையும் திரும்பி வரவில்லை. காந்தாவின் மகளும் மகனும் ஓர் உறவினால் வளர்க்கப்பட்டு வருகிறார்கள். தாயையும் தந்தையையும் இழந்த அந்தப்பிள்ளைகளுக்க எல்லாமுமாக அந்த உறவு அவர்களைத் தனது சொந்தப்பிள்ளைகளுக்கும் மேலாக கவனிக்கிறார். காந்தாவின் மகளோடு கதைக்கிற போது காந்தா வெளிநாட்டில் இருப்பதாக நம்புகிற அவளது குழந்தைக் கன…
-
- 1 reply
- 1.2k views
-
-
மிக உள்ளக விசாரணை - ஷோபாசக்தி ஃப்ரான்ஸ் காஃப்காவினது புகழ்பெற்ற நாவலொன்றுக்கும் இந்தச் சிறுகதைக்கும் ஓர் ஒற்றுமையும் ஒரு வேற்றுமையுமுள்ளன. அவரது நாவலின் தலைப்பு ‘விசாரணை’. இந்தக் கதையின் தலைப்பு ‘மிக உள்ளக விசாரணை’. வேற்றுமை என்னவென்றால், காஃப்காவினது நாயகனுக்கு ஒரு கவுரவமான பெயர் கிடையாதெனினும் அவனை ‘K’ என்ற ஓர் எழுத்தாலாவது காஃப்கா குறித்துக்காட்டினார். நம்முடைய நாயகனுக்கு அதற்குக் கூட வக்கில்லை. இப்போது நாங்கள் நேரடியாகவே கதைக்குச் சென்றுவிடலாம். எண்பத்தைந்து மனித மண்டையோடுகளும் குவியலாக மனித எச்சங்களும் அகழ்ந்தெடுக்கப்பட்ட, இருபத்தைந்து வருடங்களிற்கு முந்தைய மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து இந்தக் கதை திடீரெனத் தொடங்குகின்றது. யாழ்ப்பாணப் பட…
-
- 3 replies
- 2.5k views
-
-
மிக நீண்ட நாட்களின் ஆரம்பம்! (ஜீ உமாஜி) pro Created: 31 October 2016 வாழ்வின் மிக நீளமான ஆண்டு எது? அதை எப்படித் தீர்மானிப்பது? யோசித்துப் பார்த்தால் குறிப்பிடத்தகுந்த அனுபவங்களை, புதிய மனிதர்களை, புதிய இடங்களை, மறக்கமுடியாத பயணங்களை மேற்கொண்ட ஆண்டு மிக நீளமானதாயிருக்கும். எனக்கு தொண்ணூற்று ஐந்தாம் ஆண்டு மிக நீளமானதாயிருந்திருக்கிறது. தொடர்ந்து அடுத்த வருடமும்! தொண்ணூற்று ஐந்தாமாண்டில் யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக இரண்டு பாரிய இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. முதல் இரண்டு தவணைகள் மட்டுமே பாடசாலை நடைபெற்றது. அதில் நான்கு விடுமுறைகள் வேறு. ‘முன்னேறிப் பாய்தல்’ நடவடிக்கை தோற்றதும், இராணுவத்தின் அடுத்த நடவடிக்கை 'ரிவிரச' ஆரம்பிக…
-
- 1 reply
- 524 views
-