Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. புகழ்பெற்ற விஞ்ஞான புனைகதை ஆசிரியர் Sir Arthur C Clarke உடனான சில எண்ணப் பகிர்வுகள்! அனைவருக்கும் வணக்கம், இன்று/நாளை 16.12.2008 அன்று இந்த வருடம் மறைந்த உலகப்புகழ் பெற்ற விஞ்ஞான புனைகதை ஆசிரியர் மதிப்புக்குரிய Sir Arthur C Clarke அவர்களின் 91வது பிறந்தநாள். நான் சிறீ லங்காவில இருந்தபோது Sir Arthur C Clarke அவர்களுடன் வாழ்வியல், விஞ்ஞானம் சம்மந்தமாக எனது பல சிந்தனைகளை பகிர்ந்து இருந்தன். 1997ம் ஆண்டில இருந்து ஒவ்வொருவருடமும் அவருக்கு நான் பிறந்தநாள் வாழ்த்து அனுப்புவது. கடைசியாக சென்றவருடம் அவரது 90வது பிறந்ததினத்திற்கு ஒரு Teddy bearம் பூச்செண்டும் வாங்கி அனுப்பி இருந்தன். நன்றி கூறி பதில் அனுப்பி இருந்தார். அதுவே அவருடனான எனது கடைசி எண்ணப்பர…

  2. வாழ நினைத்தால் .................. வாழ்கை என்று நினைக்கும் போது எம் முன்னே வா ........என்கிறது ,பின் வாழ் .......என்கிறது அதற்கும் பின் வாகை அதாவது வெற்றி வாகை சூடி நீயும் வாழு என்கிறது .என்ன அழகான தத்துவமுத்துக்கள் . அவனும் வாழ தான் நினைத்தான் . ராகவனுக்கு வயது நாற்பது .வைத்திய சாலைக்கே உரிய அந்த நெடி ...அவனுக்கு பழக்கமாகி இருந்தது, முழங்கால் சத்திர சிகிச்சைக்காக படுத்து இருந்தான், அவன் மனம் பலவாறு சிந்தித்தது .தனிமையும் அமைதியும் மனதின் ஆழத்தை ஆராய சிறந்த இடம் என்பார்கள். அன்பான மனைவியும் மகனும் வீடில் , அவள் வர மாலை ஐந்து மணியாகும். இவனுக்கு மறுபக்கத்தில் உள்ள கட்டிலில் நேற்று இரவு ஒரு விபத்து ,சம்பவதுக்காக் ஒருவனை அனுமதித்து …

  3. தமிழீழம் தான் நம் கனவு... சிறு கதை.... சாந்தி சரியாக் கேளுங்கோ...இதில எல்லாம் ஆயத்தம் உங்கட உடுப்பு எல்லாம் சரிதானே.. விடிய முதல் இதால வருவினம். அண்ணை சொல்லிவிட்டது ஞாபகமிருக்குத்தானே....? வந்தினமெண்டா விடாம கவனிப்பம்..சரியோ..! குழப்பமில்லை தானே ''ஒன்றும் குழப்பமில்லை பயப்படாதேங்கோ... நான் அவர் வளர்த்த ஆளல்ல...எனக்கு பத்து போனாலும் மற்றவருக்கு ஒன்று என்றாலும் போகவேணும் என்ற பொலிசியெல்லாம் எனக்கில்லை...! என்னக்கு ஒன்று போனாலும் மற்றவருக்கு பத்துப் போகவைப்பன் என்ர வளர்ப்பு அப்படி ...தெரியுமல்ல....'' சொல்லி முடித்தாள் சாந்தி. ''அண்ணையும் பாவம் தானே எங்கள் எல்லாருக்காகவும் இத்தனை வருடமா கஸ்ரப்பட்டுக் கொண்டிருக்கிறார்தானே.. அவரோட பாக்கேகை இதெல்லாம்...…

  4. என்று சொந்த ஊரைவிட்டு புறப்பட்டோமோ அன்றே உணர்விளக்கத் தொடங்கிவிட்டன எமது சம்பிரதாயங்களும் பண்பாடுகளும்.....! அதற்கு கார்த்திகை விளக்கீடு ஒன்றும்விதிவிலக்கல்ல. நான் கடைசியாக விளக்கீட்டை விளக்கீடாக கொண்டாடி 15 வருடங்கள் கடந்துவிட்டன. மாலை 5 மணிக்கே அயலவர் வீடுகளில் "மாவிலி சங்கிலி இராசாவே வருசம் வருசம் வந்து போ..." என்ற பாடல்களுடன் விளக்கீடு அமர்க்களப்படும். குறைந்தது இரண்டு நாட்களுக்கு முதலே சீமைக் கிழுவையில் தடிகள் வெட்டி ஒன்றரை அடி உயரத்தில் பந்தம் சுற்றி விளக்கீட்டை வரவேற்கத் தயாராவோம். நீங்கள் எல்லோரும் எப்படியோ நானறியேன். நான் வளர்த்த பொன்வண்டுக்கு சாப்பாட்டுக்கு சீமைக்கிழுவை குருத்து வேணும் எண்டு சண்டைபிடித்து குருத்து பிடுங்கிய ஞாபகம் இன்னு…

  5. மீண்டும் ஒரு தொலைபேசி மணி அடித்து நல்ல நித்திரையை குழப்பியது .கதைத்து கேட்கிறது .ஏதோ பதட்டம் .தெரிகிறது.. அவர்களின் வார்த்தைகளின் ஏற்ற இறக்கத்தில். சந்தோச செய்தியோ துக்க செய்தியோ .என்னவோ என்று ஏக்கம் என்னுள்.இப்படித்தான் ஒரு முறை நடு இராத்திரி தாண்டி ஒரு விடியலில் இலங்கைக்குள் கடல் புகுந்து விட்டதாம்.அது ஏதோ புதிதாக சுனாமியாம் என்னவாமோ என்று ....செய்தி வந்தது .அது போல இப்பவும் வெள்ளம் மழை காற்று புயல் சனம் என்ற சொற்கள் அங்கு அடுக்கப்பட ..என்னையும் மீறி என்னை அமிழ்த்தி வைத்திருக்கும் போர்வையை விலக்கிக் http://sinnakuddy.blogspot.com/2008/12/blog-post.html

  6. Started by Manivasahan,

    அபிசேகம் நரகத்திலிருந்து விடுதலை கிடைத்து விட்டது. யமனுடைய கோட்டை வாயில் வரை சென்று மீண்டு வந்தாயிற்று. இது சாத்தியமா? நடக்கக் கூடியது தானா? நான் காண்பது கனவா? என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டதில் இது நனவு தான் என்று தெரிகிறது. இனிமேல் தினம் தினம் தூக்கமற்ற நீண்ட இரவுகளாய் அம்மாவை நினைத்து கண்கலங்கி, இராப்பொழுதுகளைக் கழிக்கத் தேவையில்லை. சாப்பிடுவதற்கு வைத்திருக்கும் ஒரேயொரு தகரப் பாத்திரத்தையே இரவில் சிறுநீர் கழிக்கும் பாத்திரமாகப் பாவிக்கும் கொடுமை இனியில்லை. இன்றைக்கு யார் வருவார் எப்படியான சித்திரவதைகளைச் செய்யப் போகிறார்கள் என்ற ஏக்கம் இனியில்லை. நாட்டைக் காக்கப் புறப்பட்டவர்கள் என்று சொல்லிக் கொண்டவர்கள் சிங்கள அரசின் கைப்பிள்ளைகளாக மாறி தமிழர…

  7. வணக்கம், நேற்றையோட பள்ளிக்கூடத்தில ஒரு குழந்தையிண்ட பிரசவம் மாதிரி எனது ஒருகட்ட படிப்பு உத்தியோகபூர்வமா முடிஞ்சிட்டிது. இப்ப கொஞ்ச நாளா யாழுக்க மினக்கட நேரம் கிடைச்சு இருக்கிது. இருந்தாலும்.. எப்ப நான் யாழில இருந்து காணாமல் போவன் என்று எனக்கே தெரியாது. அதனால.. ஒரு முன்னேற்பாடா.. இன்னும் சில நூறுவருசங்களால எங்களைப்பற்றி ஆராய்ச்சி செய்யப்போகும் தமிழ் ஆராய்ச்சியாளர்களுக்கு உதவலாம் எண்டுற நப்பாசையில இதுவரை காலமும் நான் யாழில பழகின ஆக்கள்பற்றி ஒரு சின்னப்பதிவு ஒண்டை நான் காணாமல் துலைஞ்சு போவதற்கு முன்னம் வச்சுப்போட்டு போகலாம் எண்டு நினைக்கிறன். எழுதுறதற்கு வசதியாக இருப்பதற்காகவும், எனக்கு தெரிந்த, நான் கருத்தாடல் செய்து பழகிய ஒருவரையும் தவறவிடாமல் இருக்கிறதற்காகவும்…

  8. தன்னைத் தவிர முழு உலகமும் சுறுசுறுப்புடன் இயங்குவதாக காட்சியளிக்கும் மாநகரத்தின் ஞாயிற்றுக் கிழமையை செய்தித்தாள் போடும் சிறுவர்கள் தூக்கம் கலைந்த வேகத்துடன் எழுப்பிக் கொண்டிருந்தனர். படுக்கையில் இருந்த வெங்கட்ராமன் விழித்தபோது மணி சரியாக ஆறு. அலாரமில்லாமல் டாணென்று எழுந்து விடுவதாக சிலர் பீற்றிக் கொள்வதைப் போல அவர் பெருமையடிக்கமாட்டார் என்றாலும் அப்படித்தன் கச்சிதமாக எழுந்திருப்பார். சில நாட்களில் பேப்பர் பொத்தென்று விழும் சப்தமும் வெங்கட்ராமன் துயிலெழும் மூகூர்த்தமும் சொல்லி வைத்தாற் போல பொருந்தி வரும். இன்றும் பொருந்தித்தான் வந்தது. பல் துலக்கியவாறே ஓய்வுநாள் தரும் துவக்கக் களிப்புடன் தலைப்புச் செய்திகளை மேய ஆரம்பித்தார். வாரநாட்களில் சில மணித்துளிகள…

  9. என்னடா முனிவர் இப்ப கதையில இறங்கிவிட்டார் என்று பார்க்கிறியளே நம்மட பொடியங்கள் செய்யுற வேலையை பார்க்க முடியல்ல அதுதான் இந்த கதை[வெளிநாட்டில ] வணக்கம் சாமித்தம்பி அண்ணே என்ன மகன் வெளிநாடு போக போறான் போல ஓம் சிவன் .நல்லாத்தான் படித்தான் ஆனால் இங்கு வேலை எடுக்கிற என்றால் சும்மாவா என்ன!! அதுவும் நம்மட தமிழ் சனங்களுக்கு வேலை கொடுக்கிறதென்றால் ஒரு வேண்டா வெறுப்பாத்தானே பார்க்கிறாங்கள் அதுதான் சும்மா இங்கு இருந்து என்ன செய்யிறது ஆளை வெளிநாட்டுக்கு அனுப்புவம் என்று பார்க்கிறன் இங்க அவனுக்கு பயந்து இவனுக்கு பயந்து இருக்கிறத்தை விட அங்க போனால் கொஞ்சம் நம்ம நிம்மதியாக இருக்கலாம் தானே...அது சரி அவ்வளவு காசுக்கு எங்க போவியள் . என்ன செய்யுற சிவன் ஒரு வாய் சோறு தாற நிலத்தைத…

  10. கடவுள் தந்த அழகிய வாழ்கை ,,,,,,,,,,,,,,,,, அதிகாலை ஐந்து மணியிருக்கும் அலாரச்சத்தம் கேட்டு கோமதி எழுந்து தன் காலைக்கடன் முடித்து கோப்பி குடித்து ,இரவு பெட்டியில் போட்டு வைத்த் மதிய உணவையும் எடுத்து கொண்டு ,பஸ் தரிப்பு நோக்கி நடந்தாள் . கனடா தேசத்தின் மார்கழி குளிரில் தன்னை பாது காக்க காலுறை கையுறை, தடித்த அங்கி ,காதுகளை மூடிய "மபிலேர்" என்று தன்னை ஒரு துணி மூடை யாகவே ,போர்த்தியிருந்தாள் . பஸ் வண்டி வரவே ஏறி அமர்ந்தவளின் எண்ணம் தாயகம் நோக்கி சென்றது . அம்மாவும் அப்பாவும் தன் இரு தங்கைகளும் என்ன பாடோ ? நான் இந்த குளிரில் உழைத்து அனுப்பும் காசில் தான் அவர்கள் சீவியம் .அப்பாவுக்கும் வயதாகிறது இனி பாடசாலை ஆசிரியார் பதவியிலிருந்து அடுத்தவருடம…

  11. அப்பா வருவாரா? வாழ்க்கையின் இன்னுமொருநாள் மெல்ல உதயமாயிற்று , நித்திலா எழுந்ந்து ,காலைக்கடன் முடித்து , அடுப்பை பற்றவைத்து ,பிள்ளைகளுக்கு ,தேனிர் தயாரிக்க ஆயத்தமானாள் .. நிகிலாவும் நித்தியனுமாக இரு பிள்ளைகளுடன் , புலம் பெயர்ந்து யாழ் நகரத்துக்கு வந்து இரண்டே மாதங்கள் . நிதிலாவும் கணவன் ராகவனும் ,பிழைப்பு தேடி ,ஈழத்தின் ஒரு தீவிலிருந்து வந்திருந்தார்கள் ,ராகவன் எற்கானவேஆட்களை வைத்து கடற்தொழில் செய்தவான், காரைநகர் நேவியின் அட்டகாசத்தால் ,தொழில் செய்யமுடியாத i நிலையால்.கெட்டும் பட்டணம் போ என்பதற்கிணங்க .இரு மாதங்களுக்கு முன் தான் வந்திருந்தனர். யாழ் கத்தோலிக்க தேவாலயம் அருகே ஒரு குடிசை கிடைத்து ,பிள்ளைகளையும் அருகிலிருக்கும் கன்னியர் மட பாடசலையில…

  12. இப்பவென்றாற் போல.... அழுகையாய் வந்தது. யாரிடமும் கதைக்கவோ சிரிக்கவோ முடியாத நிலையில் உதடுகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொண்டது. காடுகள் மலைகள் தண்ணீர் நிரம்பிய கடல் கிணறுகள் என நிறையவே என்னை அங்குமிங்குமாய் அலைத்து இழுத்துக் கொண்டு ஓடுமாப்போல அலைகளும் கடல்களும் என்னை உள்ளிழுப்பது போலிருந்தது. கண்களுக்குள் எட்டிய பிள்ளைகளின் கைகள் என்னைவிட்டுத் தொலைவாகின.....நான் தனியனாய் எல்லாவற்றையும் எல்லோரையும் தொலைத்து.... கோழியின் கூவலும் மெல்லிய இசையுமாக மணிக்கூடு தனது இருப்பை உறுதிப்படுத்தி எழுப்புகிறது. நேரம் அதிகாலை 4.20. வேலைக்குப் போகும் அவசரத்தில் என்னவன் எழுந்து போகிறான். அட இதுவரையும் கண்டது கனவா ? பிள்ளைகள் உறக்கம் கலையாமல் தங்கள் படுக்கைகளில்....கதவு இடுக்குகளால் …

  13. கோயில் பூசை முடிந்தவுடன் சந்நிதானத்தை ஒரு வலம் வந்து விட்டு நேரடியாக பிரசாதம் வழங்கும் இடத்திற்கு சென்று விட்டான் சுரேஷ்.இவன் அங்கு செல்லும் முன்னே பலர் முன் கூட்டியே வரிசையில் பிரசாதம் பெறுவதிற்காக நின்றதனால்,கடசியில் போய் நின்று கொண்டான்.ஒரு சில நிமிடங்களிள் பக்தர்கள் அதிகமாகவே சுரேசிற்கு பின்னாலும் வந்து சேர்ந்து விட்டார்கள். "அட என்ன சுரேஷ் கனகாலம் காணவில்லை எப்படி சுகம்" என்று ஒரு கதையை போட்டபடியே வரிசையில் நடுவில் புகுந்து கொண்ட கந்தர்.தனக்கு பின்னால் ஏனையோர் நிற்கிறார்களே என்ற எந்தவித கவலையும் இன்றி பத்தும் பலதும் அலச வெளிகிட்டார். ஆமை வேகத்தில் தான் வரிசை நகர்ந்து கொண்டிருந்தது. ஓமந்தையில் இருந்து ஒபாமா வரை அலசி ஆராய்ந்து கொண்டிருந்தார் கந்தர்.ஒமந்தையில…

  14. பழைய பறணிலிருந்து (மாவீரர் வாரத்தையொட்டிய நினைவு தாங்கிய சிறுகதை) "எதிர்பார்ப்பு" இசையும் கதையும். " அம்மாளைக்கும்பிடுறான்கள்" சிறுகதைத் தொகுப்பிலிருந்து 8வருடம் முதல் இசையும் கதையுமானது. எதிர்பார்ப்பு இசையும் கதையும்

    • 0 replies
    • 969 views
  15. ஒரு சித்திரம் பேசுகிறது ............... சக்கர நாற்காலியில் இருந்து .........ஒரு சித்திரம் பேசுகிறது .....அண்மையில் ஒரு முதியோர் இல்லத்துக்கு சென்ற பின் என் மனப்பதிவு :.......... நான் பிறந்த நாடு என் மண், என் வீடு பழகிய நட்பு படித்த பாடசாலை, திசைமாறிய பள்ளிக்காதல் ,உறவுகள் .நட்புகள் ,யாவரும்ற ஒரு தன்னந்தனியனாக ஒரு சக்கர நாற்காலியில் , உணவுண்டு , உடையுண்டு , வங்கியில் மாத மாதம் பணம் வ்ரும் . புலம் பெயர் நாட்டில் தன்னந்தனியனாக ஒரு முதியோர் இல்லத்தில் , குளிக்க ,உதவி செய்ய , மருந்து தர என்று பணியாட்கள் , ஆனாலும் எதோ ஒன்று ...........இல்லவே இல்லை . என் சம்சாரமும் காlaமாகிவிட மகனும் தன் மனை வி , குடும்பம் வேலை பிள்ளைகள் , என்று அவனும் அவனது…

    • 4 replies
    • 1.3k views
  16. என்னடா கடைசியா இவனும் அறுகக்க வெளிக்கிட்டான் என்று யோசிக்காதையுங்கோ இப்பகொஞ்ச நாளா ஊர் சம்பந்தமான பழைய நினைவுகளை மீட்டுப்பார்க்கும் சநதர்ப்பங்கள் கிடைத்ததன் விளைவுதான் இது. ஊரில பொதுவாக கோயில் திருவிழாக்கள் தான் பெரியோர் முதல் சிறியோர் வரை கொண்டாட்டங்களின் மையம்.கலை நிழச்சிகளை ரசித்தால் என்ன,கச்சான் தும்பு மிட்டாய் போன்றவை வாங்கி சாப்பிட்டால் என்ன,பெரிசுகள் தங்கள் மலரும் நினைவுகளை மீட்ப்பதும் இளசுகள் உயிர்ச்சிலைகளை ரசிப்பதும் சிறுசுகள் தேர்முட்டியில் நித்திரையிலிருக்கும் தங்கள் சகாக்களுக்கு மீசை வைப்பது தொடக்கம் வால் கட்டுவது என்று சகல திருவிளையாடல்களுக்கும் என்று இந்த திருவிழாக்கள் களைகட்டும். இதை விட தமது வசதி வாய்ப்புகளை மற்றவர்களுக்…

  17. ரமணன் அன்று தான் ஊருக்கு வருகிறான் வந்து தான் வைத்திருந்த பணத்தை வைப்பிலிடுவதற்க்காக வங்கிக்கு செல்கிறான் அன்று அவன் கண்டது ஒரு வேதனையான காட்சி அந்த காட்சியை பார்த்ததும் அவனது மனதுக்குள் ஆயிரம் கேள்வி அலைகள் அவனுள் எள மொனமாகி முகாமையாளரான அவனது நண்பன் ரவி சந்திரனை அணுகி அங்கே எதற்க்காக வரிசையில் நிற்கிறார்கள் என கேட்க அவனும் அடகு வைப்பதற்க்காக வரிசையில் நிற்கிறார்கள் என்று கூற அவனை அறியாமலேயே கண்ணீர் துளிகள் அவனது சட்டையை நனைக்கிறது . அங்கு பார்த்தது அவனுடன் கல்வி பயின்ற கலை பிரிவு மாணவி லோஜினியை தன்னுடன் சில வார்த்தைகள் பேசியதால் அவள் வாழ்க்கையில் இன்று இந்த நிலைமையா ? என்று அங்கிருந்து வெளியே வந்து தனது ஊர்மைதானத்தில் இருக்கும் ஆல மரத்தின் நிழலில் இருந்து பழ…

  18. லண்டனில் ஹாட்லி கல்லூரிபழைய மாணவர்களின் வருடா வருடம் நடைபெறுகின்ற இராப்போசன விருந்தும் வருடாந்த கூட்டமும் போன சனிக்கிழமை நடைபெற்றது. நாமள் இந்த இம்மாதிரியான நிகழ்வுகளுக்கு போவதில்லை என்றாலும் இம்முறைதான் முதல் முறை போய் வந்தேன் ..போய் வந்ததுக்கு முக்கிய காரணம் ............. http://sinnakuddy.blogspot.com/2008/11/blog-post.html

    • 23 replies
    • 3.9k views
  19. Started by nedukkalapoovan,

    என்னங்க இன்றைக்கு அம்மா ஊரில இருந்து போனில கதைச்சாங்க. என்னவாம். காசு கேட்டா போல. இல்லைங்க.. தங்கச்சிக்கு கனடாவில இருந்து ஒரு சம்பந்தம் பேசி வந்திருக்காம். அதுதான் விசாரிச்சுப் பார்க்கச் சொல்லிச் சொன்னா. நல்ல விசயம் தானே. விசாரிச்சாப் போச்சுது. உங்கட ஆக்கள் தானே கனடாவில புழுத்துப் போய் இருக்கினம். ஒருக்கா சொல்லி விசாரிக்கச் சொல்லுங்களன். அதென்ன உங்கட ஆக்கள் எங்கட ஆக்கள் என்று பிரித்துப் பேசிறீர். உம்மைக் கட்டினது துவக்கம் நான் எப்பவாவது உங்கட எங்கட என்று பிரிச்சுப் பார்த்திருக்கிறனே. இல்லையப்பா.. சும்மா சொன்னன். அப்படிச் சொன்னா தான் செய்வியள் என்று. அதுக்கேன் கோவிக்கிறியள். சரி சரி.. இப்ப நான் வேலைக்குப் போகப் போறன். இரவு வந்து கனடாவில இ…

  20. ஞாபகம் சொல்ல எவருமில்லாமல் துர்க்கையம்மன் வீதி. ஞாபகங்கள் தாங்கிய கையெழுத்துக்கள் சேர்த்து வைப்பதிலும் ஒவ்வொருவரின் ஞாபகமாக எதையாவது சேர்ப்பதில் பெரியதொரு நிறைவு.அப்படிச் சேர்த்து வைத்த கையெழுத்துக்களும் , ஞாபகப்பொருட்களும் நாட்டுக்குள்ளேயே தொடர்ந்த இடப்பெயர்வுகளுடனும் , புலப் பெயர்தல்களுடனும் ஒவ்வொன்றாய் தொலைந்து போய் விட்டது. அது 1991ஜனவரி மாதம் வாணி கல்வி நிலையத்தில் கால் வைத்த போது முதல் அறிமுகம் மதி, அவன்தான் முதல் அறிமுகமாய் மேசையொதுக்கி இடம் தந்தவன். அதன் பின்னர் துஷி , அம்பாள் , சுரேஷ் , தயாளன் , மனோ , பன்னீர் , கதிர் , ஜெயந்தி , மல்லிகா , நளினி , சுகந்தி , சுதன் , சர்மிலா , பிறேமிளா , நித்தியா என அடுத்தடுத்து வந்த உறவுகள். எல்லோரின் நினைவுகளும் நெஞ்சுக்கு…

    • 3 replies
    • 2.1k views
  21. வணக்கம் யாழ் உறவுகளே அண்மையில் சாந்தியின் ""சொல்லியழுதிட்டன்"" என்கிற கதையைப் படித்த பலரும் ஆண்களும் பாதிக்கப்பட்டிருப்பார்கள்த

  22. .கவலை இல்லாத மனிதன் ........... வாழ்கையிலே கவலை இல்லாத மனிதனை காட்ட அழைத்து செல்கிறேன். அவர் எண்பத்து மூன்று வயது வரை வாழ்ந்தது இது தான் காரணமோ ? வாசித்து பாருங்கள் . . .........இவர் ந்ம்ம பக்கத்து வீடு . அதனால் இன்னும் மறக்க முடியவில்லை ...........செல்லத்தம்பிக்கு வாய்த்த மனைவி குணமணி ........பெயருக்கேற்ற குணமான மணி தான் ,சரி ந்ம்ம கதைக்கு வருவோம் .செல்ல தம்பியர் தலை நகரிலே ஒரு வீதி கண்காணிப்பு கந்தொரிலெ வேலை பார்த்தார் மூன்று மாதமொரு முறை தன் வீடுக்கு வருவார். அழகிய அமைதியான சிறு ஊர் . .நாடு இரவில் யாழ் பட பஸ் மூலம் வீட்டு வாயில் கேற் கொழுவி சத்தம் கேட்டும் . நாய் குரைத்து பின் நட்பாக ஒலி எழுப்பும் , கிணற்றடியில் முகம் கழுவி காறித்துப்பி சத்தம்…

  23. அதிகாலை ஒரு மணி இருக்கும். வெடிச்சத்தம் காதைப் பிளக்க.. நித்திரை இடையில் கலைகிறது. "சண்டை தொடங்கிட்டுது எல்லாரும் எழும்புங்கோ" அம்மா அவசரப்படுத்திக் கொண்டிருக்க, பலாலிப்பக்கம் இருந்து 'ஆட்லறிகளும்' கூவுகின்றன. "மண்டை தீவுப்பக்கம் தான் அடி விழுகுது" அப்பா தன் பங்குக்கு சொல்லும் பொழுதே வெடிச்சத்தம் உக்கிரமடைகிறது. பயம் கெளவிக் கொள்ள வீட்டை விட்டு வெளிய வந்து மாமரத்துக்கு அருகில் நின்றபடி அவதானிக்கிறோம். "சந்திரிக்கா போட்ட யுத்த நிறுத்தம் இந்தளவும் தானா?" அம்மா ஏக்கத்தோடு என்னைப் பார்த்துக் கேக்க, "அவள் கதிரை பிடிச்சிட்டாள் எல்லோ எனி என்னவும் செய்வாள்" அப்பா பதிலுரைக்கிறார். நித்திரை குழம்பிய பக்கத்து வீட்டு 'அங்கிளும்'.. வெளியே வந்து, வீதியில் நின்றபடி " என்ன அடி தொடங்கிட்ட…

  24. ஈழத்தை நோக்கிய என் பயணங்களில் மறக்க முடியாதது இறுதியாக நான் என் மண்ணை தொட்டது 2005ஆம் ஆண்டு தான். எப்போதுமே ஆரம்பத்திற்கும் இறுதிக்கும் கிடைக்கும் கவனிப்பு அதிகம் தானே. முதல் பயணம் என்னை நானே அறிய முதல் நடந்தது. இறுதி பயணம் நானே என்னை மறக்கும் அளவிற்கு இன்று வரை கொண்டு சென்றுவிட்டது. பல காரணங்களில் ஒன்றை இப்பகுதியில் பார்க்கலாம். என் அப்பப்பாவின் நாட்டு பற்று தான் எங்கள் குடும்பமே தாய் நாட்டை நேசிக்க காரணமாக இருந்தது என்பது என் கருத்து. வெளிநாடுகளில் வாழ சந்தர்ப்பம் கிடைத்த போதும், வெளிநாட்டு வாழ்க்கை எப்படி என அறிந்த போதும்; “நீங்கெல்லாம் போய்ட்டு வாங்கோ, நான் என் மண்ணை விட்டு வர மாட்டேன்” என சொல்லி, இறுதிவரை தன் வார்த்தையை காப்பாற்றினார். ஊரில் இருந்த அப…

  25. நீர்த்திரையால் இழுப்புண்ட குச்சி ஒன்று கணமும் நில்லாது மேல் எழுந்து கீழ் விழுந்து அலைந்து சீர்க்கரையில் எற்றுண்டு கிடந்த செயல் நோக்கின் சிந்திக்கின் மானிடர்தம் வாழ்க்கை இது என்றேன்! -கங்கையில் விடுத்த ஓலை வணக்கம், இது மனித வாழ்க்கையிண்ட மறுபகுதி. பலர் சிந்திக்க விரும்பாத, அறிஞ்சுகொள்ள விரும்பாத பகுதி. மரணத்தின் பின்னர் இடுகாட்டுக்கு போவதுவரை என்ன நடக்கிது எண்டு கீழ் உள்ள விபரணச்சித்திரம் சொல்லிது. ஏழு பகுதிகள் இதில இருக்கிது. மொத்தமாக சுமார் நாற்பத்து ஐந்து நிமிடங்கள் நீளமான கதை இது. நேரம் கிடைக்கும்போது இவற்றை முழுமையாக பார்ப்பது எங்கட குடும்பங்களில, உறவினர்கள், நண்பர்களிற்கு... அகாலமான காலம் வரும்போது அதை தாங்கிக்கொள்ள, சரியான முறையில செயற்பட்டு இறுதிக்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.