கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3070 topics in this forum
-
பள்ளிக்குப்; போவதற்காய் புறப்பட்டுச் சென்ற செந்தூரன் அன்றைக்கும் அழுது கொண்டே திரும்பி வந்து விட்டான். அன்று தான் வேலை விடயமாக வெளியூர் சென்றுவிட்டுத் திரும்பி வந்திருந்த தகப்பன் “ஏன் தம்பி பள்ளிக்கூடம் போகாமல் திரும்பிட்டாய். என்ன பிரச்சினை’’ என்று ஆச்சரியத்துடனும் கவலையுடனும் கேட்டார். “மூலைவீட்டிலை இருக்கிற அந்தக் கொழுத்த நாய் நான் பள்ளிக்கூடம் போகும் போது கத்திக் கத்திக் குலைக்குது அப்பா. இப்ப ஒரு கிழமையா நான் பள்ளிக்கூடம் வெளிக்கிட்டுப் போறதும் திரும்பி வாறதுமா இருக்கிறன்" கவலையுடன் சொன்னான் செந்தூரன். சின்னப்பிள்ளைக்கு விளங்கும் விதமாகத் தகப்பன் சொன்னார் “தம்பி அந்த நாய் படிக்க இல்லை எல்லோ. அதாலை ஆக்கள் படிக்கப் போறதைப் பாத்தால் அந்த நாய்க்குப…
-
- 9 replies
- 2.9k views
-
-
அன்று வெள்ளிகிழமை கனகர் அடுத்த நாள் வேலைக்கு போக தேவையில்லை என்ற சந்தோசத்தில் உற்சாக பானத்துடன் உறவை வளர்த்து கொண்டி இருக்கும் போது தான் தொலை பேசி மணி அடித்தது,யாராவது அறுக்க போகிறார்கள் என்று யோசித்து கொண்டு தொலைபேசியை எடுத்தார்,அது அவரின் நண்பர் கந்தர் மறுமுனையில் இருந்து என்ன நாளை "உக்கிரேனியன்" மண்டபதிற்கு வாறீர் தானே என்றார்.என்ன விசயம் எப்ப என்று கேட்க கந்தரும் கொஞ்சம் உணர்ச்சி வசபட்டு கோபத்துடன் கேட்டார் என்ன போட தொடங்கிட்டீரோ. நாளை எங்களுடைய தமிழ் ஆட்களின் ஒன்று கூடல் இருக்குது வரவில்லையோ அப்பொழுது தான் கனகருக்கு ஞாபகம் வந்தது தமிழர்களின் ஒன்று கூடல் பற்றி இது என்ன இப்படி கேட்டு போட்டீர் நான் இல்லாமல் தமிழர் ஒன்றுகூடல் சிட்னியில நடைபெறுமா? கட்டாயம் வருவ…
-
- 10 replies
- 2.3k views
-
-
உயிர்த்துளியின் ஓரத்தில் கண்களை மூடிக் கொண்டேன். மெல்லிய இளங்காற்று என் மேனியைத் தழுவிட, புலன்களால் இனங்காணமுடியாத ஒரு அமானுஸ்ய உணர்வு என்னை ஆக்கிரமித்தது. கவிந்த இமைகளுக்குள் நிலைத்த விழிகளுக்குள் தவிப்பும், தாகமும் விரிந்தன. மூடிய கயல்களின் ஓரங்களில் மெல்லிய ஈரக்கசிவு. எங்கோ பசுமையைச் சுமந்தபடி என் வரவிற்காய் ஏங்கியபடி காத்திருப்பதாய், எனக்குள் உணர்த்தியபடியே, புன்னகையை வீசி என்னைத் தனக்குள் ஈர்த்தது பாசம். அக்கினித் தகிப்பில் உடலும், உள்ளமும் எரிந்தன. பனிக்கரங்கள் அணைத்துக் குளிர்ச்சி தரும் வெளிகளில் இருக்கும் என்னிருப்பின் உணர்வுகள் காலநிலைகளைத் தாண்டி முரண்பட்டுக் கிடக்கின்றன. அடையாளங் காணப்படாத பிணங்களைப் போன்று எண்ணங்கள் அவலமுறு…
-
- 5 replies
- 1.9k views
-
-
அழகிய மதிய பொழுது. நந்து வீட்டில் மதிய உணவருதிய பின்னர் நந்துவின் பெற்றோரும், சிந்துவின் பெற்றோரும் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். இடையிலே காணாமல் போன நம்ம கதாநாயகனை தேடி சிந்து வீட்டு தோட்டத்தை நாடி சொல்கின்றாள். இனி அலட்டலை பார்க்கலாமா? (யப்பா ஒரு ஆரம்பம்குடுக்கணும்னுறதுக்க
-
- 14 replies
- 2.6k views
-
-
கோம் தியேட்டரில் சிவாஜி படத்தை பார்த்துக் கொண்டு இருந்தான் சிவா.யாரப்பா வந்தது என்று மனைவி புஷ்பாவின் குரல் கேட்டும்,கேட்காதவன் போல் சிவாஜி படத்தை பார்த்து ரசித்து கொண்டிருந்தான். இங்கை உத நிற்பாட்டுங்கோ எத்தனை தரம் தான் இதை போட்டு போட்டு பார்க்கிறியள் அலுக்கவில்லையோ உங்களுக்கு அப்படி என்ன தான் ஸ்ரேயவில் இருக்கு என்று அன்பு கலந்த அதட்டலாக கேட்டாள் புஷ்பா. இல்லையப்பா நான் அவளை ரசிக்கவில்லை இந்த நம்மன்ட ரஜனியை தான் ரசித்தனான் என்னை விட பத்து வயசு கூட ஆனாலும் பாரும் மேக்கப் போட்டு எவ்வளவு இளமையாக இருக்கிறார் இளசுகளோடும் எவ்வளவு ஸ்டைலா டான்சும் ஆடுகிறார் பாரும் என்றவனை,இங்கப்பா சும்மா அலட்டாமல் யார் உங்க வந்தது என்று சொல்லுங்கோ. நான் "ஸ்பாவில்" இருந்தனான் அதுகுள்ள …
-
- 10 replies
- 2k views
-
-
சிதறல்கள் சொற்களால் கட்டிய புஸ்பக விமானம் ----- கவிதை அகிலத்தை வாழ்த்தும் ஆனந்தக் கண்ணீர் ----- மழை மனதுக்குள் பூப்பூக்கும் நந்தவனம் -----அன்பு காதலுக்கும் கனவுக்கும் பிறப்பிடம் -----விழி கண்ணுக்குப் புலப்படாத காந்தர்வ சக்தி -----கடவுள் நாதியற்றுப்போன நம்மில் ஒருவன் ----- அநாதை கதியற்றுப் போன காற்றுப் பைகள் ----- அகதி இறையுணர்வால் உடலுணர்வை வென்றவர்கள் ----- துறவி உயிரின் வருகைக்காய் உண்டான பூகம்பம் ----- பிரசவம் அணைக்க அணைக்க அத்துமீறும் காட்டுத்தீ -----ஆசை பாதிநாள் நோயாளி மீதிநாள் சுகவாசி ----- நிலவு உணர்வுகளின் கனவுத் தொழிற்சாலை ----- நினைவு அவனாக அவளாக இப்போ அதுவாக ----- பிணம் உறவுகளை உடைத்துவிடும…
-
- 5 replies
- 1.6k views
-
-
பொலிஸ் பரிசோதனையும் அடையாள அட்டையும் சற்று கிராமச்சூழலை அண்டிய பகுதியில் வாழும் மீனா ரொம்ப அழகானவள். பெற்றோருக்கு ஒரேயொரு செல்லமகளான மீனா பருவமடைந்தாலும் இன்னும் செல்லப்பிள்ளையாகவே வீட்டில் வலம் வந்தாள். படிப்பில் கெட்டிக்காரியான அவளுக்கு தனி அறை ஒதுக்கப்பட்ட போதிலும் படுக்கையை பெற்றோரோடு பங்கிட்டாள். அன்று ஞாயிற்றுக்கிழமை நீண்ட நேரம் உறங்கும் பழக்கம் கொண்ட மீனா கட்டிலில் பூனைகுட்டி போல மென்மையாக ஆனால் கடுமையான உறக்கத்தில் இருந்தவளை தாய் உலுப்பி எழுப்பியதால் திடுக்கிட்டு எழும்பி சிணுங்கியபடி எழுந்து "என்னம்மா இப்படி அவசரபடுத்தி எழுப்புறீங்க" என்ற முனங்கலோடு கண்ணைக் கசக்கியவண்ணம் குளியலறையை நோக்கிச் சென்றவள் வீட்டினுள் துப்பாக்கியோடு இருந்த இராணுவத்த…
-
- 17 replies
- 2.8k views
-
-
காட்டாற்றங்கரை அத்தியாயம் 1 கண்களையும் மனசையும் இறுக வைக்கிற வெய்யில். அறுவடை ஓய்ந்த வயல்களையும் பற்றைக் காடுகளையும் ங்காங்கே தனித்துநின்ற மரங்களையும் ஏற்கனவே கோடை மேய்ந்து விட்டிருந்தது. கண் எட்டிய தூரம்வரைக்கும் வரண்டு கிடந்த வெளியெங்கும் சுடு புழுதி செம் பருந்துகளாய்ச் சுளன்றது. காய்ந்த புதர்கள் கானல் நீரில் அசைந்து முள்ளம் பன்றிகள் போல ஓடின. முதலையின் முதுகுபோலப் பாழாய்க் கிடந்த களர் நிலத்தில் ஒரு மாடு விழுந்து கிடந்தது. அந்த மாட்டின் நோக்கி அலகை நீட்டியபடி காகம் ஒன்று காத்திருந்தது. உலர்ந்து வெடிக்கும் காட்சிகளெல்லாம் ‘ஈழத்தின் திணை பாலை’ என்கிற விவாதத்தையே ஞாபப்படுதியது. பாலை நிலத்துக்கு தனது குடி மக்களைத் தாங்கி வைத்திருக்கப் போதிய…
-
- 13 replies
- 2.7k views
-
-
சுடும் நிலவு சுடாத சூரியன் “இன்று சனிக்கிழமை காலநிலை பூச்சியத்துக்குக் கீழே பத்துப் பாகை என்று வானிலை அவதானநிலைய அறிவிப்பைக் கேட்ட வண்ணம் தொலைக்காட்சிப் பெட்டியை நிறுத்தி வீட்டைப் பூட்டியபின் தன் குளிருடைகளை எல்லாம் சரிபார்த்தபடி காரை வீதியில் இறக்கினாள் மனோகரி. வீதி ஓரம் எங்கும் பனிக்குவியல். இந்தக் குளிரிலும் வீதியில் ஆள் நடமாட்டத்துக்கு குறைவில்லை. அவரவர் தத்தமது கடமைகளைச் செய்வதற்கு குளிரோ மழையோ இங்கு ஒரு தடையாக இல்லை. காரை வெகு கவனமாகச் செலுத்திய மனோகரி பாடசாலை வாகன நிறுத்துமிடத்தில் காரை நிறுத்தி விட்டு பாடசாலைக்குள் நுழைந்தாள். அப்பொழுது நேரம் ஒன்பது மணி. தமிழ் வகுப்புகள் ஆரம்பமாக இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தன. பெற்றோர் தமது பிள்ளைகள் தாய் மொழியைப் …
-
- 10 replies
- 2.4k views
-
-
சிவகுமாரின் அன்பு கட்டளைக்கு இணங்கி கலை நிகழ்ச்சிக்கு போவதிஸ்கு ஆயத்தமானான் சுரேஷ் கனடாவில் இருந்து வந்த சுரேசிற்கு சிட்னி வாழ் தமிழர்களின் வாழ்க்கை முறை கொஞ்சம் நல்லதாகவே இருந்தது அவன் வந்த போது காலைநிலை வேறு இலங்கையில் உள்ளது போன்று இருந்தபடியால் அவனுக்கு மேலும் சிட்னி பிடித்திருந்தது. கதவு மணி அடிக்கும் சத்தம் கேட்டு கதவை திறந்தான் சுரேஷ்,நான் சிவகுமார் மச்சான் ரெடியா என்று வாசலிலே நின்ற படியே கூப்பிட்டான்.இருவரும் கிளம்பினார்கள் படைபாளிகள் சங்க கலைநிகழ்ச்சியில் கலந்து கொள்வதிற்கு. பட்டு சேலைகள்,கதர் வேட்டிகள் என்று தமிழ் மக்கள் கூட்டத்தை கண்ட சுரேஷிற்கு தானிருப்பது ஊரிலா என்று ஒரு சந்தேகம் ஒரு கணம் தோன்றியது.அ…
-
- 10 replies
- 2.3k views
-
-
இறுதிக்கட்ட சோதனைகள் நடக்கிறது... புரொவ் சங்கர் ( திட்டத் தலைவர்) : வணக்கம். எப்படிப் போய்க் கொண்டிருக்கிறது ஆய்வு..?! புரொவ் சுதர்சன் ( வடிவமைப்புக் குழுத் தலைவர்) : நல்ல முன்னேற்றம் தெரிகிறது. இன்னும் 5 மாதத்தில விண்ணுக்கு செலுத்திடலாம் சங்கர். அதன் பிறகு உங்கள் கனவு நனவாகிடும். இவர்கள் இப்படி பேச்சை ஆரம்பிக்க..சைரனும் ஒலிக்கிறது.. சங்கர் : என்னது சைரன் சத்தம் வருகிறது... சுதர்சன் வோக்கிடோக்கி மூலம் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொள்கிறார்... கலோ கலோ....மீண்டும் கலோ கலோஓஓஓஓ சங்கர்: என்ன தொடர்பு கிடக்குதில்லையோ....??! சுதர்சன் : ஆமாம் சங்கர். ஒரே இரைச்சலா இருக்குது.. அப்போது அவர்களை நோக்கி ஓடி வருகிறது ரோபோ திலீபன்.. அத…
-
- 2 replies
- 1.7k views
-
-
டிங்கிரி.சிவகுரு புராண இதிகாச நாடகங்களையே பார்த்து வாளும்.வேலும்.விழியும் .கண்ணாளா.மன்னா.மந்திரி என்று பழக்கப்பட்டுபோயிருந்த மக்களிற்கு வித்தியாசமான அதுவும் வாழ்வின் அன்றாட நிகழ்வுகளை முளுக்க முளுக்க நகைச்சுவையாக இருவர் மட்டுமே மேயில் தோன்றி நடித்த இரட்டையர்கள்தான் டிங்கிரி மற்றும் சிவகுரு என்பவர்கள்.இவர்களின் வருகை சமூக மற்றும் நகைச்சுவை நாடகங்களிற்கென மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது மட்டுமல்ல. பினர் பல நகைச்சுவை நடிகர்கள் தோன்றுவதற்கும் காரணமாக இருந்தது என்றும் சொல்லலாம். அது மட்டுமல்ல சாதாரணமாக ஒரு நாடகம் போடுவதென்றால் விளம்பரத்தில் நாடகத்தின் பெரைச்சொல்லி பின்னர் அதில் நடிக்கும் நடிகர்களின் பெயரைச்சொல்லி விளம்பரப்படுத்துவதுதான் வழைமை …
-
- 13 replies
- 3.3k views
-
-
விகடனில் வெளியான இந்த கதை எனக்கு பிடிச்சிருந்தது.. ஆறாவது அறிவு கழுத்துப் பட்டையை இறுக்கிக்கொண்டு இன்னொரு முறை கண்ணாடியில் முகம் பார்த்தார் டாக்டர் ராம்நாராயண். மோவாயில் நரை தொட்டு அடர்த்தியாகப் படர்ந்திருந்த தாடியையும், கொஞ்சமாக முன் பக்கம் வெற்று மண்டையைக் காட்டிவிட்டுச் சரிந்த கேசத்தையும் வாஞ்சையாகத் தடவினார். மூப்பின் அடையாளங்கள் துவங்கிய, ஆராய்ச்சி, பரிசோதனை என்று கழிந்த சுவாரஸ்யமற்ற வாழ்க்கைச் சுழற்சியில், எந்தப் பெண்ணும் ஆர்வம் காட்டாத அந்த முகத்தின் மேல் திடீரென்று பிரியம் வந்தவர் போல் பராமரித்தார். இன்னும் அரை மணியில் பத்திரிகைக்காரர்கள், தொலைக்காட்சி நிலையங்கள், செய்தி நிறுவனங்கள் என மொய்த்து புகைப்படம் எடுத்துத் தள்…
-
- 5 replies
- 2k views
-
-
கே.எஸ் பாலச்சந்திரன் நடிக்கும் அடைக்கலம் -- நாடகம்
-
- 1 reply
- 1.4k views
-
-
29.02.2008 காலை 09.35 இன்று காலை எனக்கு மனம் மிகவும் மனம் பாரமாக இருக்கிறது. உண்மையில் சுஜாதாவின் இழப்பு தொடர்பாகத்தான் அது. ஒரு அறிவாளியின் இழப்பு அது. அவருடனான நேரடி தொடர்பு எனக்கு இருந்தது. பழகுவதற்கு மிக அன்பானவர். ஒரு தேர்ந்த விஞ்ஞானி அவர். அவரின் இழப்பு மிகவும் கவலையாக இருக்கிறது. அனஸ்
-
- 13 replies
- 2.9k views
-
-
மலரே மௌனமா? வசந்தகால ஆரம்பத்தின் இதமான குளிர்காற்று உடம்பைத் தழுவ புரண்டு படுத்த பிரியாவுக்கு அதிகாலையிலேயே விழிப்பு வந்து விட்டது. இதுவரை தூங்கியது கூட கோழித் தூக்கம்தான். மனதில் விவரிக்க முடியாத விநோதமான உணர்வுகளின் சங்கமம். இன்று தன் மனதுக்கினியவனுக்கு இன்ரவியூ நடக்க இருக்கிறது. அதனால்தான் அவள் மனதுக்குள் பயம் கலந்த மகிழ்ச்சி. காரணம் தன் பெற்றவருக்தும் உடன் பிறப்புகளுக்கும் தெரியாமலே தன் மனம் கவர்ந்த பிரசாந்தை பொன்சர் செய்திருந்தாள்;. இச் செய்தி வீட்டிலிருப்பவர்களுக்குத் தெரிந்துவிடும் என்று மிகக் கவனமாகவே செயற்பட்டாள்;. தனது வீட்டிலிருந்து போன் எடுக்காமல் தன் நண்பியின்; வீட்டிலிருந்துதான் பிரசாந்திற்கு போன் எடுப்பது கடிதத் தொடர்புகூட நண்பியின் வீட்டிற்கு வரு…
-
- 7 replies
- 2.2k views
-
-
தொலைபேசி தொல்லைபேசியான கதை டெலிபோன் மணி இடைவிடாமல் அடிச்சுக்கொண்டே இருக்கின்றது. நல்ல நித்திரையிலிருந்த என்னை எழுப்பி விட்டது. டெலிபோனை எடுப்போமா எண்டு யோசிச்சிககொண்டு நேரத்தை பார்க்கிறேன். நேரம் காலை 3.00 மணி. ஒருவேளை அம்மாதான் கொழும்பிலிருந்து அடிக்கிறாவா எண்டு நினைச்சுக் கொண்டு ஓடிப்போய் போனை எடுக்கிறேன். அம்மாதான் போனில். அம்மாவின் குரல் கேட்டதும் காலையில் பறவையினங்கள் ஒலி கேட்டால் எப்படி சந்தோசப்படுமோ அது மாதிரிதான் அம்மாவின் குரலைக்கேட்டதும் எனக்கும் சந்தோசம். கதைச்சு முடிந்தபின் மனசில ஒரு கவலை. அம்மாவின் மடியில் படுத்து ஒருமுறை பிரிஞ்சிருக்கிற துக்கத்தை நினைச்சு ஒருக்கா கண்ணீர் விட்டு அழனும் போலிருந்தது. அந்த நினைப்போடு அப்படியே தூங்கி …
-
- 24 replies
- 6.1k views
-
-
தொழுவத்திலிருந்து கட்டியிருந்த மாட்டின் அழுகுரல் கேட்டு நினைவு திரும்பினார் கந்தர். எண்ணக்கோவைகள் எங்கொங்கோ சுழன்று சம்பந்தம் சம்பந்தமில்லாத இடத்துக்கு சென்று திரும்பவும் தொடங்கிய இடத்துக்கு வந்து கொண்டிருந்தன. யோசிச்சு யோசிச்சு மண்டையை உடைச்சாலும் தீர்வில்லாமல் தவித்தார். இறந்த போன மனிசியையும் நினைத்து http://sinnakuddy.blogspot.com/2008/02/blog-post_21.html
-
- 22 replies
- 3.8k views
-
-
பிரம்மலோகத்தில் ஜுவராசிகள் நடிகர்கள் மணியம். எஸ். யேசுரட்ணம் பார்வதி. திருமதி ஆன் அன்ரனி பிரமதேவன். அப்புக்குட்டி ராஜகோபால் நாய் .பி.லோகதாஸ் வெளவால். ஆந்தையாக. திருமதி நவரட்ணராணி சிவலிங்கம் http://www.tamilnews24.com/twr/audio/Naada...iramalogam.smil http://eu-avalam.com/
-
- 5 replies
- 2.2k views
-
-
www.tamil.2.ag என் இனியவளே, நான் உன்னை ஒவ்வொரு பொழுதும் சிந்தித்த்துக்கொண்டே இருக்கிறேன். என் கண்களில் காணும் காட்ட்சிகள் உன்னை ஞாபகப்படுத்துகின்றன. என் மனக்கண்களிலும். எம்மை மறப்பதற்கு யார் காரணம்? நானா? யார்? தெரிவித்துவிடு சரி செய்து முடியும் என்ற நம்பிக்கை என்னை தொந்தரவு செய்கிறது. பாவத்தை என்மேல் சுமத்துவியா? ஏங்குகிறது மனம். பாவத்தின் தண்டனையை அனுபவிக்க எனக்கொரு சந்தர்பம் தா. உன்னை மட்டும் நேசிக்காதோ என்காதே. என்னில் நான் இல்லை உன்னை கண்ட முதல். இப்பவும் நாமாகவே வாழ்கிறேன் நான். நீ எவவாறு என்று அறிய துடிகிறேன். என்ன செய்கிறாய், என்ன நினனகிறாய் என்பதை ஒவ்வொரு நிமிடமும் அன்று போல் இன்றும் மனத்திரையில் ஓடுகிறது. உன்னை குழந்தையாய் பாதுகாத்தேன் என்ம…
-
- 0 replies
- 1.1k views
-
-
உறவுகளிற்கு வணக்கம் இது என்னுடைய இன்னும் ஓர் சிறியமுயற்சி. ஈழத்தமிழ் கலைஞர்கள் படைப்பாளிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் பற்றிய விபரங்களை கணணிமுலம் ஆவணப்பதிவாக்குவதே என்னுடைய நோக்கமாகும்.என்னுடைய இந்த நோக்கத்திற்கும் வழைமை போல உறவுகள் அனைவரினதும் ஆதரவும் இருக்கும் என நம்பிக்கையுடன் தொடங்குகிறேன். ஏற்கனவே பிரான்சில் வாழும் திரு வண்ணை தெய்வம் அவர்கள் காலங்கள் வாழ்த்தும் 300 ஈழத்துக்கலைஞர்கள் என்றொரு ஆவணத்தொகுப்பினை புத்தகமாக வெளியிட்டுள்ளார். அவரது அனுமதியுடன் அவரது புத்தகத்தில் இருந்தும் நண்பர்கள் உதவியுடனும் மற்றும் எனக்கு தெரிந்ததையும் உங்கள் ஆதரவுடன் ஆவணமாக்குகின்றேன். நன்றி சாத்திரி. முதலாவதாக நாடகக்கலைஞர் திரு முகத்தார் யேசுரட்ணம் அவர்கள் முகத்தார…
-
- 9 replies
- 2.7k views
-
-
மன்னவா மாலை கொடு வேலை முடிந்து களைப்புடன் வீடு வந்து சேர்ந்த காயத்திரியை ஓடிவந்து கட்டிக்கொண்ட பிரியா “அம்மா நாங்க வெளியில போவமா?” என்று கேட்டகவும் தன் ஒரே மகள் பிரியாவை வாஞ்சையுடன் அணைத்தபடி “நான் குளித்து உடுப்பு மாத்திப் போட்டு வாறன் இருவருமாகக் கடைக்குப் போகலாம்” என்ற காயத்திரியின் பதிலில் திருப்திப் பட்டவளாக குதூகலமாக அறைக்குள் ஓடிய மகளை பெருமூச்சுடன் பார்த்தபடி ஒருநிமிடம் நின்றவள் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். சில வினாடிக்குள் அவள் மனதிலும் சில சலனங்கள். “என் பிரியாவை விட்டு நான் தூரமாகிவிடுவேனோ?” “சீ அப்படியெல்லாம் நடக்காது” இந்த ஜந்து வருடமாக பிரியாதான் என் வாழ்வில் ஒரேயொரு பற்றுக்கோடாக இருக்கிறாள். சிந்தனையுடன் குளியலறைக்குள் நுழைந்தவள் ஒரு பாட்டை முணும…
-
- 7 replies
- 2.4k views
-
-
அந்த ரயிலின் வருகையை எதிர்பாத்து இங்கை பலர் படுகிற பாடு இருக்கே சொல்லி மாளேலாது.இன்னும் சிறிது நேரத்தில் இந்த இந்தாம் நம்பர் மேடைக்கு காங்கேசன்துறையை நோக்கி புறப்பட இருக்கும் யாழ் தேவி வந்தடையும் என்று புகையிரத நிலைய ஒலிப்பெருக்கி மும்மொழிகளிலும் திரும்ப திரும்ப சொல்லி மனம் பாடம் பண்ணி கொண்டிருக்கிறது. அதுவும் தமிழை மிகவும் கடித்து துப்பி அறிவிப்பதால் என்னவோ அது வேறு மொழி போல காற்றில் பரவி கரைந்து கொண்டிருக்கிறது http://sinnakuddy.blogspot.com/2008/02/blog-post.html
-
- 6 replies
- 2.1k views
-
-
டைகர் பிலிம்ஸ் பெருமையுடன் வழங்கும் மற்றுமொரு திரைகாவியம் "புதிய சிவப்பு ரோஜாக்கள்"... (கண்டிப்பா வயது வந்தவர்களிற்கு மட்டுமே குழந்தைகள் மற்றும் கர்பிணி பெண்கள் தயவு செய்து பார்க்க வேண்டாம்...) கதாநாயகன் - இளைய தளபதி சுண்டல் (டைகர் பிலிம்சின் தனித்துவ கதாநாயகன்) இவருடன்..... *மக்கள் திலகம் திரு.கலைஞன்.. *நடிகர் திலகம் திரு.கந்தப்பு.. *கெளரவவேடத்தில் கனவுநாயகன் மருமோன்.. மேலும் புதுமுக நடிகர்களின் அட்டகாசமான நடிப்பில் மலர்ந்துள்ள திரைகாவியம்... வெளுறிய முகபரப்பில் உறைந்து போனது விழி! பூக்களும்,நிலவும்,கனவுகளும் கையூடு உதிர்ந்து கொட்ட கிடிநடுங்கி ஒரத்தே ஒதுங்கி உயிருக்காய் இறைஞ்சியது வாழ்க்கை!! "புதிய சிவப்பு ரோ…
-
- 50 replies
- 7.6k views
-
-
ஊருக்குப் போனேன்- பாகம் 4 (இறுதிப் பாகம்) -வாசுதேவன் இதுதானா என் வீடு ? இத்தனைவருட காலமாகக் காணக் கனவு கண்டு கொண்டிருந்த என் வீடு இதுதானா ? முற்றத்தில் தென்னைமரமில்லாமல், வேப்பமரமில்லாமல்,வேலியில் பூவரசமரமில்லாமல், கடதாசிப்பூக்கள் இல்லாமல், முருங்கைமரங்கள் இல்லாமல், புல்பூண்டு சூழக் கிடந்த இது என் வீடா ? என் வீட்டிற்கு வடக்குப் பக்கத்தில் ஒரு வீடு இருந்தது. அதையடுத்து இன்னும் பல வீடுகள் இருந்தன. அதைத் தொடர்ந்து பனங்கூடல் இருந்ததே ? என் வீட்டிற்குத் தெற்குப் பக்கத்தில் ஒரு வீடு இருந்தது . அதைத்தொடர்ந்து இன்னும் பல வீடுகள் இருந்தன. என் வீட்டு வேப்பமர உச்சியிலிருந்து பார்த்தாலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரையும் வீடுகள் இருந்தனவே ? என் வீடு என்பது நாற்திசையும் பரந்திர…
-
- 9 replies
- 2.3k views
-