கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
லொறி- க.கலாமோகன் சில வாரங்களாகவே நான் அவளை எனது வீட்டின் அருகில் உள்ள மதுச்சாலையில் கண்டு வருகின்றேன். அங்கு சில வேளைகளில்தான் போயிருந்தாலும் , அவள் மீண்டும் அங்கு போக என்னைத் தூண்டினாள். நிச்சயமாக எனக்கு அவள் மீது காதல் தொடங்கியது என நினைக்கவேண்டாம். ஆனால் அவள் என்னைக் கவர்ந்தாள். அவளது முகம் வட்டம். விழிகள் பச்சை. உடல் மிகவும் மெலிவு. நீல டவுசர். அவளின் முன் ஓர் பியர்க் கிளாஸ்…. அவளது அருகிலோ சிரித்தபடியும் ஆடியபடியும் சிலர்… நான் அதிகாலையில் தொழிலுக்குச் செல்லும் வேளையில் மதுச்சாலை மூடிக் கிடக்கும். ஆழமாக அதன் கதவுகளைப் பார்ப்பேன். அந்தக் கதவுகளில் உள்ள சித்திரங்கள் எனக்கு மகிழ்வைத் தருவன. ஓர் வயோதிபர் தனது கண்களைச் சிமிட்டிச் சிரித்துக் கொண…
-
- 1 reply
- 660 views
-
-
12/21/2022 மனத்தடை எல்லாமே கைகூடி வரும்; செய்துவிடலாமென்கின்ற துணிவிருந்தால். மாந்தனுக்குத் தடையாக இருப்பது அவனுடைய சொந்த மனத்தடைதான். நம்மில் எல்லாருக்குமே மனத்தடை இருக்கின்றது; நம்மால் இவ்வளவுதான் செய்ய முடியும், இதனைச் செய்ய முடியாது எனப் பலவாறாக. மனம் அனுமதிக்குமேயானால் முயற்சிகளுக்கு எல்லையே இல்லை. What you believe, why you are! What you eat, how you are! What you think, what you are! எப்போதெல்லாம் தாயகம் செல்கின்றேனோ அப்போதெல்லாம் ஈரோட்டு உறவினர்களைச் சந்திப்பது வழக்கம். கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாகச் சொல்லிக் கொண்டு இருந்ததுதான். தோட்டத்தைச் சென்று பார்க்க வேண்டுமென்பது. கைகூடி வ…
-
- 0 replies
- 659 views
- 1 follower
-
-
மத்தேயு 6 : 3 - சோம.அழகு “கயலு… உனக்கு சுண்டல் அவிச்சு வச்சிருக்கேன். அந்தச் சின்ன சம்படத்துல வடையும் வாங்கி வச்சிருக்கேன். பசிச்சா சாப்பிடு தங்கம். விளையாண்டு முடிச்சுட்டு எழில் அக்கா வீட்டுல இரு. நான் வந்து கூப்பிட்டுக்குறேன். சரியா?” – அவ்வளவு நேரம் தொடுத்த பூச்சரங்களையும் மாலைகளையும் கூடையினுள் எடுத்து வைத்து வழமையான மாலை வியாபரத்திற்குக் கிளம்பியவாறே தன் மகளிடம் வாஞ்சையாகக் கூறினாள் மலர். என்ன ஒரு பெயர் பொருத்தம்! “யம்மா… நானும் கூட வாரனே!” – கிட்டத்தட்டக் கெஞ்சினாள் கயல். இது வாராவாரம் நடக்கும் கதைதான். வார நாட்களில் கயலின் வீட்டுப் பாடத்தைக் காரணம் காட்டி உடன் அழைத்துச் செல்ல மறுத்துவிடுவாள் மலர். வார இறுதியில் சில சமயம் பிள்ளையின்…
-
-
- 2 replies
- 658 views
- 1 follower
-
-
-
- 1 reply
- 656 views
-
-
ஒரு விபத்து போலதான் அது நடந்தது. செல்வநாயகம் மாஸ்ரர் வீட்டில் தங்க வேண்டிய நான் ஒரு சிறு அசொகரியம் காரணமாக இப்படி ஜோர்ஜ் மாஸ்ரர் வீட்டில் தங்க நேரிட்டது. எனக்கு அவரை முன்பின் தெரியாது. அந்த இரண்டு இரவுகளும் ஒரு பகலும் எனது வாழ்க்கையில் மிகவும் முக்கியமானவையாக மாறும். எனது பதினாலு வயது வாழ்க்கையில் நான் கண்டிராத கேட்டிராத சில விஷயங்கள் எனக்குப் புலப்படுத்தப்படும். இன்னும் சில அதிர்ச்சிகளுக்கும் தயாராக நேரிடும். ஜோர்ஜ் மாஸ்ரர் பூர்விகத்தில் கேரளாவில் இருந்து வந்தவர். அவர் கழுத்தினால் மட்டுமே கழற்றக்கூடிய மூன்று பொத்தான் வைத்த முழங்கை முட்டும் சட்டையை அணிந்திருந்தார். அவருடைய முகம் பள்ளி ஆசிரியருக்கு ஏற்றதாக இல்லை. வாய்க்கோடு மேலே வளைந்து எப்போதும் …
-
- 0 replies
- 656 views
-
-
ஒரு நிமிடக் கதை: யானை மன்னரின் கை நாடியைப் பிடித்துப் பார்த்த அரண்மனை வைத்தியர் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியை அமைச்சர் நல்லசிவம் உணர்ந்தார். “வைத்தியரே... மன்னர்..” உதட்டைப் பிதுக்கினார் வைத்தியர்.. தலையை இருபக்கமும் அசைத்தார். “துடிப்பு குறைகிறது.. தாங்காது.” திரைக்கு அப்பால் அறையின் வெளியே தளபதி, ராஜகுரு, பிரதானி கள், பிரபுக்கள், நிலக்கிழார்கள், ஜமீன்தார்கள். “சரி விஷயம் நம்முடன் இருக்கட்டும்.. வெளியே கசிய வேண்டாம்.” திரைக்கு வெளியே வந்த அமைச்சர்.. “மன்னர் நலமாக இருக்கிறார்.. கவலை வேண்டாம்..ஆனால் ஒரு வாரத்துக…
-
- 0 replies
- 655 views
-
-
கெளரி -இளங்கோ 'ஒரு துரோகிக்கு பாடங் கற்பிக்கும்போது நாங்கள் ஓராயிரம் துரோகிகள் வளர்வதைத் தடுக்கின்றோம்' என்ற குரல் எல்லாவற்றையும் கலைத்துப் போனது. அதுவரை, சாணி மெழுகிய குசினிக்குள் அம்மா கம்பிக்குழாயால் அடுப்பை ஊதிக்கொண்டிருகக, இவன் கள்ளிச்செடிகளுக்குள் நுழைந்து கோழிகளைத் துரத்திக்கொண்டிருந்தான். அடர்த்தியாய் வளர்ந்திருந்த எக்ஸோராவில் சிறு குருவிகள் வந்து அமர்ந்திருக்க, முற்றத்து மல்லிகைப் பந்தலில் மல்லிகை வாசமும் வந்துகொண்டிருந்தது. திடீரென்று சிவப்பும் வெள்ளையுமான Half Saree அணிந்த பெண், 'ஒரு துரோகிக்கு பாடங்கற்பித்தல்....' என்கின்ற வாக்கியத்தை நடுக்கத்துடன் சொன்ன கணத்தில்தான் அதுவரை இவன் கண்டுகொண்டிருந்த அழகிய ஊர்க்கனவு சட்டென மறைந்து போனது. அன்று பாடசாலை …
-
- 1 reply
- 654 views
-
-
நீ அமைதியாக உறங்க… நவம்பர் 24, 2020/தேசக்காற்று/சிறுகதைகள்/0 கருத்து நீ அமைதியாக உறங்க… வியர்த்தது. காலதரை நெட்டித் திறந்தான். நிலவு அறைக்குள் விழுந்தது. கம்பியில் பிடித்து விளிம்பில் கால் வைத்து எட்டிப் பார்த்தான். சாய்ந்து கிடந்த வேலிக்கு மேலாக அந்த வெளி தெரிந்தது. இருட்டில் பார்த்தால் எதுவுமே தெரியாது. நெஞ்சத்தை ஏதோவொன்று அழுத்தும். ஆனால் நிலவில் இனிமைதான். எங்கும் வெண்ணிறப் படிமங்கள். மரங்களின் நிழல்கள் மறைக்க முயன்றன; முடியவில்லை. நாலாவது வரிசையில் கடைசியா…. இடம் அடையாளம் தெரிந்தது. அங்குதான் அவனின் அண்ணன் உறங்குகின்றான். பின்பக்கம் சத்தம் கேட்டது. சமையற்கட்டைவிட்டு அம்மா இப்போதைக்கு வரமாட்டாள். இண்டைக்…
-
- 0 replies
- 653 views
-
-
மயக்கும் எழுத்துக்காரர் வண்ணதாசன் எழுதிய அகம் புறம் - ஒரு பகுதி உங்களுக்காக! “வாழ்வில் எல்லாம் முக்கியமானவை. எல்லோரும் முக்கியமானவர்கள். இந்த எல்லாவற்றையும் எல்லோரையும் விட என் எழுத்து அப்படியொன்றும் அதிக முக்கியத்துவம் உடையது அல்ல என்பதை உணர்ந்தே இவர்களின் மத்தியிலும் இவற்றின் மத்தியிலும் நான் இருக்கிறேன்...” - இது தான் வண்ணதாசன். எழுத்தை கிரீடமாக்கிக் கொண்டு சிம்மாசனத்தில் அமராத இனிய ஆத்மா. அணுகுவதற்கு எளிய மனிதர். இளம் படைப்பாளிகளை உற்சாகமூட்டி கைதூக்கி விடும் வெள்ளந்திப் படைப்பாளி. மனதை மென்சிறகால் வருடும் உன்னத எழுத்து அவருக்கு வாய்த்த வரம். ஆனந்த விகடன் இதழில் 7.11.2007 முதல் 4.6.2008 வரை ”அகம் புறம்” என்ற தலைப்பில் வண்ணதாசன் எழுதிய அனுப…
-
- 0 replies
- 652 views
-
-
ஒரு நிமிடக்கதை: தீபாவளி அன்று அலுவலகத்தி லிருந்து வரும்போதே மிகவும் சந்தோஷமாக இருந்தார் அகிலன். “கல்பனா..! போனஸ் வந்தி டுச்சு.. தீபாவளி செலவுக்கு பட்ஜெட் போடுவோம். ஜவுளிக் கடையில பழைய பாக்கியை அடைச்சிடுறேன். தீபா, விஷ்ணு..! லேட்டஸ்டாக வந்த டிசைன்ல உங்களுக்கு என்ன பிடிக்குதோ வாங்கிக்கங்க.. கல்பனா..! ஹேண்ட்லூம்ல கிரடிட்ல உனக்கு பிடிச்ச பட்டு சேலை வாங்கிக்க. மாசாமாசம் என் சம்பளத்துல பிடிச்சுக்குவாங்க.” “தீபாவளிக்கு முறுக்கும், அதிரசமும் பண்ணலாம்னு இருக் கேன். சொந்தக்காரங்களுக்கும், பிரண்ட்ஸ்க்கும் நிறைய கொடுக் கணும்..” என்றாள் கல்பனா. “சரி.. மளிகைக்கடை பாக் கியை செட்டில் பண்ணிடுறேன். புதுசா என்னென்ன …
-
- 0 replies
- 650 views
-
-
வெள்ளிக்கிழமை என்றாலே குதூகலம்தான். எப்படியும் காலை நேரம் முழுக்க அடுத்த வாரத்திற்கான முன்னேற்பாட்டுக் கலந்துரையாடல் கூட்டங்கள் இருக்கும். அவை நடந்து முடிந்து தத்தம் இருக்கைகளுக்குச் செல்லும் போது நண்பகல் உணவு வேளை வந்து விடும். வார ஈறில் நீ என்ன செய்யப் போகிறாய் எனக் கேட்பதும், நான் என்ன செய்யப் போகிறேன் எனச் சொல்வதிலுமாக ஓரிரு மணி நேரங்கள் கழியும். பிறகென்ன? வார ஈறும், அதையொட்டிய விடுமுறை நாட்களும்தான். மகிழ்ச்சி! அந்நினைப்பினால் மேலிட்ட மனத் துள்ளாட்டத்தினூடாக வந்து கொண்டிருந்த என்னை, அலேக்காகத் தூக்கியது கமகம வாசனை. தகவல் தொழில்நுட்பப் பொறியாளராக நான் வேலை பார்க்கும் நிறுவனத்திலிருந்துதான் கமழ்ந்தடிக்கிறது அந்த நறுமணம். நான் குடியிருக்கும் மிச்சிகன் மாகாண…
-
- 2 replies
- 649 views
-
-
சிப்பமாய் கட்டின புகையிலை எல்லாம் லொறில ஏத்தியாச்சோ.. விடிய 6 மணிக்கெல்லாம் சரக்கு கிளிநொச்சிக்கு போக ரெடியாக இருக்க வேணும்... எல்லாரும் எழும்புங்கோடாப்பா.. முதலாளி வந்து சத்தம் போடப் போறார்.. கந்தர் அண்ணை புறுபுறுத்துக் கொண்டே படுக்கையை சுருட்டி ஒரு ஓரமா போட்டிட்டு.. கை கால் முகம் கழுவ குழாயடிக்குப் போனவர்.. கால்ல ஏதோ தடக்குப்பட.. குனிஞ்சு பார்த்திட்டு..என்ன இழவடாப்பா இது..இவன் குறுக்கால இதுக்க கிடக்கிறான்.. கும்பகர்ணன் போல..! எழும்படா எருமை.. எழும்பி முகத்தைக் கழுவு.. நேரம் ஆகுது.. என்று திட்டிக்கொண்டே.. அந்த தெருவோர தண்ணீர் குழாயடியில் வழிந்து கொண்டிருந்த தண்ணியை கையில தேக்கி வாங்கி.. கை கால்.. முகம் கழுவ ஆயத்தமானார். யாழ் ஆரியகுளம் பக்கமா.. சிங்கள ஆமிக்காரன்…
-
- 2 replies
- 648 views
-
-
கானல் நீர் காட்சிகள் வாட்ஸ்அப் பதிவு : 1 எங்கே இரண்டு நாளா ஆளையே காணோம்'' 7.35 PM ""டூர் போயிருந்தேன்'' 7.36 PM ""டூரா ! எந்த ஊருக்கு ?'' 7.37 PM ""மூணாறு, கேரளா'' 7.39 PM ""சொல்லவே இல்லை'' 7.40 PM ""சாரி.. திடீர்னு முடிவாயிடுச்சு'' 7.42 PM ""பரவாயில்லை, குடும்பம் எல்லாரும் போனீங்களா'' 7.44 PM ""இல்ல... ப்ரெண்úஸாட போனேன்'' 7.46 PM ""பயங்கர ஜாலிதான், ட்ரிங்க்ஸ்'' 7.38 PM ""கொஞ்சம், ரொம்ப கொஞ்சம்'' 7.48 PM ""ஏன் குடும்பத்தை கூட்டிப் போகல'' 7.51 PM ""அடுத்த வாரம் கூட்டிப் போகணும்'' 7.52 PM ""எதுல கூட்டிப் போவீங்க'' 7.55 PM ""வீட்ல…
-
- 0 replies
- 648 views
-
-
🚩ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவர் தன்னுடைய வீட்டை புதிப்பிப்பதற்காக மரத்தாலான சுவற்றை பெயர்த்து எடுத்து கொண்டு இருந்தார். 🚩ஜப்பான் நாட்டில் பெரும்பாலும் வீடுகள் மரத்தாலயே கட்டப்பட்டிருக்கும் இரண்டு கட்டைகளுக்கு இடையில் இடைவெளி விட்டு கட்டப்பட்டிருக்கும். 🚩வீட்டு சுவற்றை பெயர்த்து எடுக்கும்போது இரண்டு கட்டைகளுக்கு இடையில் ஒரு பல்லி சிக்கி இருப்பதை பார்த்தார்.அது எப்படி சிக்கி இருக்கிறது என்று அந்த பல்லியை சுற்றி பார்த்தார்,அவர் அப்போதுதான் கவனித்தார். வெளி பகுதியில் இருந்து ஆணி அடிக்கும்போது அந்த ஆணி பல்லியின் காலில் இறங்கி இருக்கிறது. 🚩அவருக்கு ஆச்சரியமாக இருந்தது அந்த ஆணி அடித்து குறைந்தது 3 வருடம் ஆகி இருக்கும்.எப்படி இந்த பல்லி 3 ஆண்டுகள் உயிருடன் இருந்தது, இதை நாம்…
-
- 3 replies
- 646 views
- 1 follower
-
-
"துரோகம்" நான் கொழும்பில் பொறியியலாளராக வேலை பார்த்துக்கொண்டு இருந்த காலம் அது. எனக்கு உதவி பொறியியலாளராக, வெற்றிநாயகன் என்ற ஒருவன் பதவி பெற்று, என்னுடன் நல்ல நண்பனாகவும் பழகத் தொடங்கினான். எமது நட்பு பலமாக, நாம் எம் தனிப் பட்ட விடயங்களையும் எமக்கிடையில் பகிரத் தொடங்கினோம். இருவரும் அப்பொழுது திருமணம் ஆகாத வாலிபர்கள். ஆகவே பெண் நண்பியை பற்றியும் தாராளமாக கதைப்போம். எமக்கிடையில் எந்த ஐயப்பாடும் இல்லை. ஒரு முறை, விடுதலையில் ஊர் போய், திரும்பிய வெற்றிநாயகன், முதல் முதல் தன் காதல் அனுபவத்தை, அன்று மாலை இருவரும் பொது விடுதியில் [pub] சந்தித்த பொழுது சொல்ல தொடங்கினான். தான் ஒரு முறை தன் கிராமத்தில், ஒட்டப்பயிற்சி செ…
-
- 0 replies
- 646 views
-
-
சுவர் முகம் August 4, 2025 ஷோபாசக்தி பாரிஸ் நகரக் காவல்துறைத் தலைமையகத்தில் அந்தச் சுவர் இருக்கிறது. சுவரோடு சேர்த்து அய்ந்து மனிதர்கள் நிறுத்தப்பட்டிருந்தார்கள். ஒவ்வொருவருடைய மேலங்கியிலும் வட்டமாக இலக்கத் தகடு பொருத்தப்பட்டுள்ளது. மூன்றாவது இலக்கத்தின் பெயரை ‘டேவிட்’ என வைத்துக்கொள்வோம். வயது 46. கருப்பு நிறம். உயரம் 5 அடி 8 அங்குலம். தலைமுடி படிய வாரப்பட்டுள்ளது. நரையேறிய தாடி. ஒல்லியான உடல்வாகு. இலங்கையைச் சேர்ந்தவர். 2009-இல் பிரான்ஸில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளார். டேவிட் இதற்கு முன்னரும் சிலதடவை இவ்வாறு சுவரோடு நிறுத்தப்பட்டிருக்கிறார். அவர் பிரான்ஸுக்கு வந்து ஆறு வருடங்கள் முடிந்திருந்தபோது, காவல்துறையிடமிருந்து அவருக்கு ஓர் அழைப்பு வந்திருந்தது. அந்த அழைப்பு தனது …
-
-
- 3 replies
- 643 views
-
-
வைரவ சுவாமியை எல்லாருக்கும் தெரிந்திருக்கும். அவருக்கு ஒரு சின்னப் பிரச்சினை, இல்லைக் கொஞ்சம் பெரிய பிரச்சினை. அதைப் பிறகு பார்ப்போம். இப்ப கோனாச்சானா, கோனாச்சானா ஒரு தீவிர கடவுள் பக்தர். முருகன் சிவபெருமான், பிள்ளையார், உலகத்தில் உள்ள எல்லா அம்மன்கள், வைரவர்கள் என்று எல்லாக் கடவுளரையும் விட்டுவைக்காமற் கும்பிடுவார். இயேசு பிரானைத் தெரியாத ஊரிற் பிறந்துவிட்டார். இல்லாவிட்டால் அவருக்கும் ஒரு கும்பிடு போடாமல் இருக்கமாட்டார். கோனாச்சானா அவரிற்கு அவரின் அப்பா/அம்மா இட்டபெயராக இருக்கமுடியாது. கோ.சங்கரப்பிள்ளை தான் சுருங்கி கோனாச்சானா என்றாய் விட்டது. என்றாலும் ஊரில் முந்தநாள் மீசை முளைத்த பெடியளுக்கோ இல்லாவிட்டால் திரு கோ.சங்கரப்பிள்ளைக்கு அப்பா வயதில் உள்ளவர்களுக்கோ அவரின் இய…
-
- 0 replies
- 642 views
-
-
கை கொடுக்கும் கை நாயுடு காம்பவுன்டைக் கடக்கையில் தற்செயலாய்ப் பார்வை போனது. மனுஷன் இருந்தால் பிடித்துக் கொள்வார். நிச்சயம் தப்பிக்க முடியாது. "ஏய்... நாகு. அம்பி வந்திருக்கு பாரு...'' என்று உள் நோக்கிக் குரல் கொடுப்பார். கையில் டீயோடு ஓடிவரும் அந்தம்மா. அந்த அளவிலான மதிப்பிற்கு, தான் என்ன பண்ணினோம் என்று தோன்றி இவனைக் கூச வைக்கும். இதைத் தவிர்ப்பதற்காகவே அந்த வழியைத் தவிர்ப்பான். ரெண்டு மூணு மாதங்கள்தான் இருக்கும் இப்படி ஆரம்பித்து. உட்காரும்போதெல்லாம் டீ கொடுத்து உபசரித்து. அது தனக்காக இல்லையோஅம்மாவுக்காக, அப்பாவுக்காக, சாமி அண்ணாவுக்காக என்…
-
- 0 replies
- 639 views
-
-
அவற்றின் கண்கள் - பா.திருச்செந்தாழை ஓவியங்கள் : ரமணன் வில்சன் - மேரி, ஓய்வுபெற்ற ஆசிரியத் தம்பதி. மேரி இன்று இறந்துவிட்டிருந்தார். பணி நாளினிடையே ஒரு மரணக் குறிப்பானது கார்ட்டூன் தோற்றம் பெற்றுவிடுகிறது. ஹவுசிங்போர்டு முட்டுச்சந்தில் அவர்களின் வீடு இருந்தது. நீராதாரம் இழந்துவிட்டு வீடுகளைக் கைவிட்டுச் சென்றுவிட்டவர்களால் அந்தத் தெரு சூன்யமடைந்திருந்தது. இயல்பாகவே முட்டுச்சந்து வீடுகள் காலத்தில் அதிர்ச்சியடைந்து அமைதியானவை. அநாதைக் கூழாங்கற்களில், மரங்களில், ஜன்னல்களில் பிணங்களைப்போல இறுகிவிட்ட ஈரத்திற்காகக் காயவைக்கப்பட்ட கொடித்துணிகளில் முட்டுச்சந்துகள் தங்களின் துக்கத்தை வளர்க்கின்றன. அதேவேளையில், பருவகால நோயொன்றிலிருந்து ம…
-
- 0 replies
- 639 views
-
-
துரோகி ஒரு ஊரில், சிறு தொழில் செய்யும் வியாபாரி பறவைகளைப்பிடித்து சந்தையில் விற்கும் தொழில் செய்து கொண்டு இருந்தான். வழக்கமாக சந்தை கூடும் ஒரு நாளில் தன் விற்பனைக்காக ஐந்து கெளதாரி பறவைகளை கொண்டு சென்று இருந்தான் . நான்கினை ஒரு கூட்டிலும் ஒன்றை தணிக் கூட்டிலும் வைத்திருந்தான். அந்த வழியே வந்த ஒருவன் பறவைகளின் விலை என்ன என்று கேட்க நான்கு பறவைகள் இருந்த கூட்டினை காட்டி ஒன்று நான்காயிரம் ரூபா என்றான் . மாற்றியதை காட்டி ஐந்தாயிரம் ரூபா என்றான். என் அதற்கு விலை அதிகம் என்று கேட்க்க ..எல்லாவற்றுக்கும் உணவு கொடுப்தேன் அதற்கு விசேடமாக தயாரித்து உணவு கொடுக்கிறேன் . என்றான் ..ஏன் அப்படி என்று கேட்க இதை தனியே வைத்து பழக்கி ஒரு கூட்டிலை விட அது தன் குரல் எழு…
-
-
- 2 replies
- 637 views
- 1 follower
-
-
இருட்டுப் பூச்சிகள் : நெற்கொழுதாசன் by நெற்கொழுதாசன் “என்ர மனுசி ஐயர் ஆக்கள். நான் வெள்ளாளன். நாங்கள் உதெல்லாம் சாப்பிடுறதில்லை.”இயல்பாக சொல்லியபடி, நான் வெட்டிக்கொடுத்திருந்த மாட்டிறைச்சியை கிறிலில் சூடாகிக்கொண்டிருந்தான். அவன் கூறியதைக் கேட்டதும் ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்குப் பிறகு எனக்குள் ஒரு சிறிய அதிர்வு எழுந்து அடங்கியது. என்ன இழவடா இது!, எங்கபோனாலும் முன்னால சனி போகுதென எனக்குள் சொல்லிக்கொண்டேன். செய்துகொண்டிருந்த வேலையை நிறுத்திவிட்டு நிமிர்ந்து அவனைப் பார்த்தேன். நான், தன்னைப் பார்ப்பதை உணர்ந்ததும் அவனில் ஒருவிதமான அசாதாரண உடல்மொழி வெளிப்பட்டு அடங்கியது. உலகைமுடக்க…
-
- 3 replies
- 636 views
-
-
டென்மார்க் தமிழ்க் கடைகளில் இலங்கையில் விற்கப்படும் கன்டோஸைக் காணுவேன் என நான் கனவில் கூட கற்பனை பண்ணியிருக்கவில்லை. கன்டோஸ் என்ற பெயராலே அந்த வகைச் சொக்கிலேற்றை அறிந்திருந்தேன். அல்லது தட்டையானதும் இறுக்கமானதும் இலகுவில் உருகக்கூடியதுமான சொக்கிலேற் வகைகள் எல்லாம் கன்டோஸ் எனவே நினைத்திருந்தேன். டென்மார்க்கிற்கு வந்தபின்பு ரொம்ஸ்ää மாபோää றீற்ரா ஸ்பொட் கம்பனிகளின் சொக்கலேட்டுகள் போன்றன அறிமுகமாகிய பொழுது தான் கன்டோஸ் என்பது ஒரு நிறுவனம் சூட்டிய பெயர் என அறிந்து கொண்டேன். அவ்வாறுதான் சிகரட் என்றால் திறீரோசஸ் என நினைத்திருந்த காலமும் உண்டு பிறிஸ்டல் இலங்கையில் அறிமுகமாகும் வரை. அறியாத வயதில் இலங்கையில் எங்கள் வீட்டில் தொங்கிய பாரதியினதும்ää திருவள்ளுவரினதும்ää காந்தியினதும் …
-
- 1 reply
- 634 views
-
-
காட்சிப் பிழை கே.எஸ்.சுதாகர் பாலகிருஷ்ணனின் மாமா அமிருக்கு ஒரு விருந்தாளி வந்திருந்தார். ‘ஹோல்’ மகிழ்ச்சியும் சிரிப்புமாக களை கட்டியிருந்தது. விருந்தாளி, பாலகிருஷ்ணனையும் அவனது மனைவி கலைச்செல்வியையும் பார்ப்பதற்குத்தான் வந்திருக்க வேண்டும். இரண்டு நாட்களுக்கு முன்புதான் அவர்கள் இருவரும் இலங்கையிலிருந்து கனடாவிற்கு வந்திருந்தார்கள். கனடாவில் கலைச்செல்வியின் அப்பாவும் அண்ணனும் இருக்கின்றார்கள். வவனியாவிலிருந்து கொழும்பு வந்து பின்னர் கனடா வந்த களைப்பு இன்னமும் தீரவில்லை. குளியலறைக்குள் பாலகிருஷ்ணன் ‘ஷேவ்’ செய்து கொண்டிருந்தான். முப்பது வருடங்களாகியும் பாலாவின் முகத்தினில் இருந்த தழும்புகள் மறையவில்லை. அதை தடவிப் பார்த்தான். காலம் போக வடுக்கள் எல்லாம் மறைந்து, உடம்பில…
-
- 1 reply
- 634 views
-
-
அச்சக் காடு - கிருஷ்ணா டாவின்ஸி கொழும்பு நகரத்தில், மிகுந்த பாதுகாப்பு வளையங்களுக்கு இடையே அமைந்திருந்த அந்தப் பிரமாண்டமான மாளிகை அமைதியாகக் காணப்பட்டது. நள்ளிரவு நேரம் என்பதால், ஒரு சில ஃபோகஸ் விளக்குகள் மட்டுமே எரிந்துகொண்டு இருந்தன. அப்போது காற்றில் கலந்து ஒலித்த மெல்லிய ஓசை, சற்று தூரே இருந்த கடல் அலைகளின் ஓசையா அல்லது கோடை இரவின் தணியாத தணலின் ஓசையா என்பது தெரியவில்லை. ஆனால், அந்தப் புதிரான சத்தம் மகிந்தாவை மிகவும் தொந்தரவுபடுத்தியது. அருகே, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த தன் மனைவியைப் பார்த்தார். தண்ணீர் குடிக்க வேண்டும் என்கிற உணர்வு தோன்றியது. படுக்கையிலிருந்து எழுந்து, கதவைத் திறந்து வெளியே வந்தார். வாசல் கதவுக்கு வெளியே ராணுவக் காவல்காரர்கள் தோளில்…
-
- 1 reply
- 631 views
-
-
எனக்கு 'அகிலா'வைப் பிடிக்கும் ரிஷபன் திருவானைக்காவல்வாசியான எனக்கு 'அகிலா'வைப் பிடித்துப் போனதில் ஆச்சர்யம் எதுவுமில்லை. புதிதாய் டிரையினிங்கிற்கு வந்திருந்த நான்கு பெண்களில் அகிலாவும் ஒருத்தி. ரோஸ்மேரி, அகிலா, வனஜா, தமிழ்செல்வி நான்கு பேரும் எதிரில் நிற்க என்னை அறைக்குள் அழைத்த என் பாஸ் அகிலாவைக் காட்டினார். "யூ டேக் கேர் ஆஃப் ஹர்" என்றார். பார்த்த உடன் முதலில் பதிவான தகவல்கள் இரண்டு. அகிலா சற்று அமைதியான சுபாவம். பெரிய அகலமான ஆழமான கண்கள். "உங்களுக்கு ஏதாச்சும் நிக் நேம் உண்டா, ஸ்கூல் டேய்ஸ்ல " என் அறைக்கு வந்ததும் நான் கேட்ட முதல் கேள்வி. மனசுக்குள் 'முட்டைக் கண்ணு' அகிலா கேள்வி புரியாமல் விழித்தபோது கண்கள் இன்னும் அழகாய்…
-
- 0 replies
- 630 views
-