கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
கடும் இருட்டு. எங்கு நோக்கினாலும் எதையுமே பார்க்கமுடியாத அப்படியொரு இருட்டு என் முன்னால் நீண்டு விரிந்துகொண்டிருந்தது. உற்றுப் பார்த்து எதையாவது உணர முற்படும்போது, அந்த இருட்டுக்குள் பற்பல அமிழ்ந்திருப்பதுபோலவும், இல்லாததுபோலவும் ஒரு நிச்சயமற்ற சூன்யமான தன்மை என்னைச் சுற்றிலும் ஆக்கிரமித்துக்கொண்டிருந்தது. எங்கோ இழுத்துச் செல்லப்படுகிறேன். போனால் போய்க்கொண்டே இருக்கலாம். எதுவுமே தென்படாத நிலையில் அர்த்தமற்று அலைவதில் என்ன பயன்?! நின்று நிதானித்து என்னைச் சுற்றி வரிக்க முற்படும் அந்தச் சூன்யத்தை அவதானிக்கலாமா என்று எண்ணுகையில்.... வெகு தொலைவில் ஒரு சின்னஞ்சிறிய மின்மினிப்பூச்சியின் ஒளிவட்டம்போல் தோன்றிய வெளிச்சம் என்னை நோக்கி நகர்ந்து, பெரிதாக விரிந்துகொண்டே நெருங்கி வ…
-
- 10 replies
- 1.6k views
-
-
ஐரோப்பிய நாடொன்றில் ...அந்த வதிவிடத்தின் மாடியில் ஒரு அறையில் அந்த முதியவர் வாழ்ந்து கொண்டு இருந்தார் ..இளைப்பாற்று ( பென்ஷன்) சம்பளம் எடுப்பவர் போலும்........அவரது அறையின் ஜன்னல் அருகே கதிரையில் உட்கார்ந்த படி போவோர் வருவோரை பார்த்துக் கொண்டிருப்பது .. பிடித்தமான பொழுது போக்கு. மாதத்தில் ஒரு தடவை வங்கி போன்ற இடங்களுக்கு செல்லும்போது தனக்கு தேவையான் சமையல் பொருட்களை வாங்கி வருவார். தினசரி பத்திரிகை படிப்பார். அவை அவரது குடியிருப்பின் வாயிலுக்கு வந்து விழும். ........இப்பொது பனி கொட்டும் காலம். குடிமனைச்சொந்தகாரர் தான் அவர்களது நடை பாதையை சுத்தம் செய்ய வேண்டும். சிலர் தாங்களாகவே செய்வார்கள் சிலர் வாடகைக்கு கூலியாட்களை அமர்த்தி செய்வார்கள். அந்த வேலையை செய்யும் கூலியாள…
-
- 5 replies
- 888 views
-
-
இரண்டாவது தலைவர் Friday, March 25th, 2011 -யோ.கர்ணன்- நானூற்றுச் சொச்சப்பேர் இருக்கிற இந்த வரிசையில எங்கட ஆள் இருநூற்று எழுபத்தேழாவது ஆளாக இருக்கிறார். ஒவ்வொருத்தரின்ர கையிலயும் விடுதலைப் பத்திரத்தை ஆமிக்காரர் குடுத்துக்கொண்டு வருகினம். பத்திரம் கையில கிடைச்ச ஆக்களின்ர முகத்தைப் பார்க்க மாட்டியள். அவ்வளவு பூரிப்பு. அடுத்தடுத்த நிமிசத்தில பத்திரம் தங்களின் கையிலயும் கிடைத்துவிடும் என்று தெரிந்தும், இன்னும் பத்திரம் கிடைக்காதவர்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். கடைசி நேரத்தில ஏதும் பிசகுவந்து தங்களை மறிச்சுப் போடுகினமோ என்று அவையள் பயப்படுகினம். பத்திரம் கிடைத்த ஆக்களிற்கு நிம்மதிதானே. அவையள் பக்கத்தில இருக்கிற ஆட்களை சுரண்டி கதைக்கத் தொடங்கி விட்டினம். என்னயிர…
-
- 8 replies
- 2.3k views
-
-
-
- 0 replies
- 917 views
-
-
டென்மார்க் தமிழ்க் கடைகளில் இலங்கையில் விற்கப்படும் கன்டோஸைக் காணுவேன் என நான் கனவில் கூட கற்பனை பண்ணியிருக்கவில்லை. கன்டோஸ் என்ற பெயராலே அந்த வகைச் சொக்கிலேற்றை அறிந்திருந்தேன். அல்லது தட்டையானதும் இறுக்கமானதும் இலகுவில் உருகக்கூடியதுமான சொக்கிலேற் வகைகள் எல்லாம் கன்டோஸ் எனவே நினைத்திருந்தேன். டென்மார்க்கிற்கு வந்தபின்பு ரொம்ஸ்ää மாபோää றீற்ரா ஸ்பொட் கம்பனிகளின் சொக்கலேட்டுகள் போன்றன அறிமுகமாகிய பொழுது தான் கன்டோஸ் என்பது ஒரு நிறுவனம் சூட்டிய பெயர் என அறிந்து கொண்டேன். அவ்வாறுதான் சிகரட் என்றால் திறீரோசஸ் என நினைத்திருந்த காலமும் உண்டு பிறிஸ்டல் இலங்கையில் அறிமுகமாகும் வரை. அறியாத வயதில் இலங்கையில் எங்கள் வீட்டில் தொங்கிய பாரதியினதும்ää திருவள்ளுவரினதும்ää காந்தியினதும் …
-
- 1 reply
- 634 views
-
-
ஆதிரையும் நாற்பது ஆமிக்காரரும்...... சிறுகதை: யோ.கர்ணன், ஓவியங்கள்: ஸ்யாம் ஆதிரைக்குவிரல் எல்லாம் ரைப்படிக்குது. இதுதான் அவளுக்கு பர்ஸ்ற் ரைம். இது மாதிரி விசயங்களில் பர்ஸ்ற் ரைம் ரென்சன் இருக்கும்தானே. வாறவன் எப்படிப்பட்டவனோ? இவள் படிக்கிற காலத்தில ரைப்பிங் பழகின வள்தான். அப்போது எல்லாம் இல்லாத வேகம் ரைப்ரைற்றர் இல்லாத இந்த நேரத்தில வருது. என்ன இருந்தாலும், இவள் லேசாகப் பயந்த பெட்டைதானே. இப்படி ஒரு காட்டுக்குள் முந்திப்பிந்தி பெட்டை உள்ளட்டதே கிடையாது. இவளின்ர இடம் முள்ளியவளை. முள்ளியவளை யில் இருந்து நெடுங்கேணிப் பக்கம் போனாலோ, குமுழ முனைப்பக்கம் போனாலோ, அல்லது காட்டுவிநாயகர் கோயிலடி கழிந்தாலோ காட்டைப…
-
- 6 replies
- 1.6k views
-
-
யாழ்ப்பாண சமையல்: பல வருடங்களின் பின் இம்முறை தான் அம்மாவின் சமையலை சாப்பிட்டது போலிருந்தது……... பொதுவாக எல்லா உணவுகளுமே ருசியாகத்தான் இருந்தது……..காலையில் உப்புகஞ்சி, அவல், பயறு, களி, கடலை, பால்பிட்டு, இடியப்பம்…….சிலநேரம் ரோஸ்ட்பாணுக்கு Anchor பட்டர் பூசி சாப்பிடுவேன் நன்றாக இருக்கும் ... சிறுவயதில் காலை சாப்பாடு எப்பவுமே பாண்தான் அதற்கு Australian பட்டர் பூசி, அதன் மேல் சீனி தூவி அம்மா தருவது வழக்கம், அதை பால்டீயுடன் சாப்பிட்டால் அப்படியே பட்டருடன் சீனியும் கடிபட…...அந்த ருசி இன்னமும் என்நாக்கில் இருக்கிறது. எனக்கு…..பட்டர் என்றால் கெலி அதுமட்டுமல்ல Nespray யும் கூட…….கள்ளத்தனமாக கைவிரலால் கிள்ளி சாப்பிடுவேன்,…….மேலும் மத்தியானம்….குத்தரிசி, சம்பா அரிசி சோறு…..…
-
- 2 replies
- 2.4k views
-
-
-
- 23 replies
- 1.6k views
-
-
விமல் போத்தலை ஓப்பின் பண்ணச் சொன்னதும் சற்றுக் குனிந்து முன்னாலிருந்த 'ரெமி மார்ட்டின்' போத்தலை எடுத்துத் திறந்து இரண்டு கிளாஸிலும் பாதியளவுக்குக் கொஞ்சங் குறைவாக விஸ்கியை ஊற்றினான். "மச்சான் உனக்கு ஏற்ற மாதிரி கோக் மிக்ஸ் பண்ணடா" என விமலிடம் சொன்னவன்... தனது கிளாஸிற்குள் நாலைந்து ஐஸ்கட்டிகளை மட்டும் எடுத்துப் போட்டுக்கொண்டான். அப்படிக் குடிப்பதுதான் அவனது வழக்கமாயிருந்தது. தனது கிளாஸிற்குள் கோக்கைக் கலந்தபடியே... "அஞ்சலிக்கும் உனக்கும் என்ன மச்சான் நடந்தது...?" என அவனைப் பார்க்காமலேயே கொஞ்சம் தாழ்ந்த குரலில் பேச்சை ஆரம்பித்தான் விமல். அவன் அவ்வாறு கேட்டதும், வழக்கமான 'சியர்ஸ்' எதுவுமே சொல்லிக்கொள்ளாமல் தனது கிளாஸை எடுத்து வாயில் வைத்து உறிஞ்சியபடியே வ…
-
- 6 replies
- 1.8k views
-
-
மணியண்ணை: என்ன சண்முகம் கனநாளா ஆளைக்காணேல்லை எப்படி இருக்கிறாய்? என்னவிசேஷம்? ஏதாவது கொண்டாட்டம் கிண்டாட்டமே? சண்முகம்:இல்லை அண்ணை. இஞ்சை சாமன்கள் விக்கிற விலைக்கு சாப்பிட வழியில்லை அதுக்குள்ளை கொண்டாட்டம் எப்படி மணியண்ணை செய்ய? பொன் விழைந்த பூமியிலை இண்டைக்கு பிணமும்,மனிதப்புதைகுழியும் தானே விழையுது மணியண்ணை: பார்த்தடா, வேலியிலை ஓணான் கீணானுக்கு கேட்கப்போகுது. சண்முகம்:ஏனண்ணை? மணியண்ணை: இப்ப ஓணான் கூட காட்டிக்குடுக்கிற காலமடா, அதுசரி சண்முகம் என்ன உந்த யாழ்ப்பாணத்திலை இருக்கிற சில ஆயுதம் தாங்கிய ஒட்டுண்ணிகள் ஆமிக்காரனோடை சேர்ந்து பாவம் சனத்தை ஆயுதமுனையில் வற்புறுத்தி ஆர்ப்பாட்டம் செய்திச்சினமாம், வராட்டி சுட்டுப்போடுவம் எண்டவையாம் சண்முகம்:ஓமண்ணை இவன் எ…
-
- 1 reply
- 804 views
-
-
இனிமேல் என்பது இதில் இருந்து... - சிறுகதை நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு... வண்ணதாசன், ஓவியங்கள்: ஸ்யாம் மழை விட்டுவிட்டதா என்று ஆவு கையை நீட்டிப் பார்த்தபடியே தெருவாசல் நடைப்பக்கம் கழற்றிப்போட்டிருந்த செருப்புகளுக்குள் காலை நுழைத்துக்கொண்டிருந்தாள். வெளிச்சம் இல்லை. கரன்ட் போயிருந்தது. நனைந்த செருப்பில் இருந்து தோல் வாடை அடிப்பதாக, எப்போதோ நுகர்ந்த வாசனை அவள் முகத்துக்குள் வந்தது. புளியங்கொட்டை அளவுகூட இராது... ஒன்றை அடுத்து இன்னொன்றாக குட்டிக்குட்டித் தவளைகள் தெருவில் இருந்து வாசல் பக்கம் குதித்து நகர்ந்து வந்தன. கோமு இதுவரை அசையாமல், தந்தி போஸ்ட் பக்கம் கெட்டுக்கிடையாகத் தேங்கியிருக்கும் தண்ணீரில் மழைப்புள்ளி விழுவதையே பார்த்துக் க…
-
- 0 replies
- 1.1k views
-
-
அருணாவைப் பத்து வருடங்களாக எனக்குத் தெரியும். அதாவது அவள் அப்பா இறந்து போன தினத்திலிருந்து. ராத்திரி தூங்கப் போகும் போது அப்பா , அம்மாவுடன் பேசிக் கொண்டிருந்தார். காலையில் எழுந்து பார்க்கும் போது உத்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்தார். அருணாதான் அதை முதலில் பார்த்தாள் . அப்போது அவளுக்கு வயது எட்டு. அவளுடைய போராட்டங்கள் அன்று ஆரம்பித்தன. அப்பாவிற்கும் அண்ணாவிற்கும் எப்போதும் சண்டை. யாருடைய கட்சி சரியென்று இப்போதும் தீர்மானமாகச் சொல்வதற்கில்லை. அண்ணா சிகரெட் பிடிப்பான் . காலை ஏழு மணி , பகல் ஒன்றரை மணி , மாலை மூன்று மணி என்று சொல்லிவைத்த மாதிரி தெருமுனைக்குச் சென்று திரும்புவான் . திரும்பி வரும் போது அவனிடமிருந்து ஒரு விநோத வாசனை வரும். ” என்னடா இ…
-
- 0 replies
- 1.1k views
-
-
இருள்களி - தெய்வீகன் நல்லதண்ணி கிணற்றடிப்பக்கத்திலிருந்து பாய்ந்து வந்து அவள் எனது சைக்கிளை மறித்தாள். மறித்தாள் என்பது மரியாதைக்குரியதாக செயலாக கருதப்படலாம். உண்மையைச் சொல்வதானால், சைக்கிளின் கைப்பிடி நடுஇரும்பின் மீது தனது ஒரேகையை அதிகாரத்தோடு அழுத்தி நிறுத்தினாள். அதற்கு நான்கைந்து விநாடிகளுக்கு முன்னர் “அண்ணா, அண்ணா…” – என்று இரண்டொரு தடவைகள் அவள் அழைத்த குரலுக்கு திரும்பிப்பார்த்து, நானாகவே அவள் பக்கத்துக்கு சைக்கிளைத் திருப்பியிருந்தால், எனது மரியாதைக்கு இவ்வளவு கேடு ஏற்பட்டிருக்காது. கிணற்றடிக்கு அருகாக உள்ள நெல்லிமரத்துக்குக்கீழிருந்து கச்சான் விற்கின்ற அந்தக்கிழவி அன்றில்லை. பாடசாலைவிட்டு வரும்வழியில் தாமரை பிடுங்குவதற்காக குளத்துக்குள் இறங்கும்ப…
-
- 0 replies
- 935 views
-
-
புரிந்தது ரோஸி அப்படிச் செய்வாளென்று யாரும் நினைக்கவில்லை. உண்மை எதிரே வந்து மோதிய போது ஒவ்வொருவர் மனத்திலும் ஆத்திரம் பொங்கியது. நன்றி கெட்ட பெண்! வளர்த்து ஆளாக்கியவர்கள் முகத்தில் கரியைப் பூசி விட்டுப் போய் விட்டாளே! அந்த வீட்டில் எடுபிடி வேலை செய்யும் பெண்ணாகவா ரோஸியை நடத்தினார்கள்? கிறிஸ்துமஸ், ஈஸ்டர்- எந்தப் பண்டிகை வந்தாலும் ரோஸிக்கு புது டிரெஸ் வாங்காமல் இருக்க மாட்டார்களே! அவளை ஸ்கூலில் சேர்த்து அவள் நன்றாகப் படித்து முன்னேறுவதற்கு எல்லா வசதியும் செய்யவில்லையா? சுமை புத்தகங்களும், நோட்டுப் புத்தகங்களும் வாங்கிக் கொடுத்து பஸ் பாஸுக்குப் பணம் கொடுத்து அவளுடைய படிப்பில் எப்படியெல்லாம் அ…
-
- 1 reply
- 2k views
-
-
சிவகங்கை மாவட்டம் சேர்ந்தவர் தா.கிருட்டிணன் இருமுறை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும்,ஒருமுறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தவர். 20.5.2003-ல் மதுரையில் கொலை செய்யப்பட்டார். கொன்றது யார்? தா.கி ஏன் கொலை செய்யப்பட்டார்? நடந்த சம்பவங்கள் என்ன? குற்றவாளிகள் யார்? தொடரும்..
-
- 1 reply
- 971 views
-
-
ஒரு நிமிடக் கதை: காதலின் பொன் வீதியில் சேகரின் பிள்ளைக்குக் கல்யாணம் நிச்சயமாகி இருந்த செய்தியைக்கேள்விப்பட்டு , அவனைப்பார்க்கச்சென்றேன். " வா சரவணா... இன்னும் நிச்சயதார்த்த தேதி முடிவுசெய்யவில்லை. அப்புறம் சொல்ல நினைத்தேன்" அவன் கைகளைப்பிடித்து குலுக்கினேன். " நமக்குள் என்ன பார்மாலிடீஸ், ஆமாம், உன் பையனும் உன்னைப்போல் ரொமாண்டிக்கா, அதான் லவ் மேரேஜ்ஜா?" அவன் மிகவும் அவசரமாக " சே..சே..இல்லடா.... இது நாங்க பார்த்து செஞ்சு வைக்கும் கல்யாணம் தான்.என்ன , பையனும் பொண்ணும் ஒரே காலேஜ், ஆனால் டிபார்ட்மெண்ட் வேற பாரு , சந்திச்சிருப்பாங்க ஆன…
-
- 1 reply
- 1.3k views
-
-
ஹாட்லிக் கல்லூரியின் லண்டன் கிளையினர் 24.04.11 அன்று நாத வினோதம் என்ற நிகழ்ச்சியை நடத்திருந்தினர். london croydon இல் உள்ள fairfield hall உள்ள பிரமாண்டமான அரங்கத்தில் நடைபெற்றது. அரங்கம் நிறைந்த மக்கள் காணப்பட்டனர் , இந்தியாவிலிருந்து இந்த நிகழ்ச்சிக்கு பிரபல பாடகர் உன்னிக்கிருஸ்ணன் வருகை தந்திருந்தார்.இந்த பிரமாண்டமான அரங்கம் நிறைந்ததின் காரணமாக பலர் டிக்கட் கிடைக்காமால் திரும்ப வேண்டி இருந்தது.இந்நிகழ்ச்சிக்கு போகும் போது நாத வினோதம் என்ற பெயரை பார்த்த பொழுது ஏதோ சங்கீதக் கச்சேரி நடக்க போகுது அலுப்படிக்க போகுது என்று நினைத்து போனேன் .ஆனால் சினிமா பாடல்களை பாடி அரங்க நிறைந்த கரகோசங்களுடன் நிகழ்ச்சி நடந்தது. எனது வகுப்பு தோழனும் நண்பனுமாகிய சிறிக்குமார் நிகழ்ச்சிய…
-
- 2 replies
- 1.4k views
-
-
கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்தும் சிறுகதைப் போட்டி – 2018 அகரன்November 02, 2018 in: நிகழ்வுகள் கனடாவில் கடந்த 25 வருடங்களாகப் பல்வேறு வழிகளில் கலை, இலக்கிய சேவையாற்றிவரும் கனடா தமிழ் எழுத்தாளர் இணையம், தனது 25வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தும் உலகளாவிய சிறுகதைப் போட்டி. பரிசு பெறும் எழுத்தாளர்களுக்காகப் 16 பரிசுகள், மொத்தம் இலங்கை நாணயம் 170,000 ரூபாய்களும்;, சான்றிதழ்களும் காத்திருக்கிறன. பரிசுபெறுகின்றவர்கள் வாழும் நாடுகளில் உள்ள நாணயப் பெறுமதிக்கு ஏற்ப அவர்களுக்குரிய பரிசு, நாணய மாற்றம் செய்யப்படும் முதலாவது பரிசு இலங்கை ரூபாய்கள் – 50,000 (அமரர் பண்டிதர் எவ். எக்ஸ். அலெக்ஸாந்தர் ஞாபகார்த்தமாக.) இரண்டாவது பரிசு இலங்கை …
-
- 0 replies
- 2k views
-
-
காலத்துடன் தொலைந்துபோன பயணத்தோழன்... மிதிவண்டியைப்பற்றி பலரும் பலநூற்றுக்கணக்கான பதிவுகளை எழுதியிருப்பார்கள் ஆனாலும் மிதிவண்டியுடனான எனது நினைவுகளை என்னால் எழுதாமல் இருக்கமுடியவில்லை.அன்று ஞாயிற்றுக்கிழமை வார நாட்கள் முழுவதும் கலகலத்துக்கொண்டிருந்த பாரிஸ் புறநகரின் ஆரவாரம் எங்கோ ஓடி ஒளிந்துவிட்டிருந்தது.அந்த நகரின் ஓயாத இரைச்சலை விழுங்கிவிட்டு அமைதி எங்கும் படர்ந்திருந்தது.தெருக்களில் வேலைநாளின் அவசரமின்றி அங்கங்கு ஆறுதலாகப் போய்க்கொண்டிருந்த ஒன்றிரண்டு மோட்டார் வண்டிகளைத்தவிர தார்வீதியின் கருமையும் அமைதியுமே வழிநெடுக நிறைந்திருந்தது.யாழ்ப்பாணத்து வீதிகளில் மாலைப்பொழுதுகளில் முகத்திலடிக்கும் அதே மெல்லிய மஞ்சள் நிறவெய்யில் அன்று பாரிஸிலும் எட்டிப்பார்த்துக்கொண்டி…
-
- 15 replies
- 2.6k views
-
-
"நிழலாக ஆடும் நினைவுகள்" [உண்மைக் கதை] இலங்கை தீவின், தலைநகரம் கொழும்பில், பொறளை என்ற இடத்தில் இருந்து நடக்கக் கூடிய தூரத்தில் அமைந்து இருந்த மன்னிங் டவுன் அரச விடுதியில் அண்ணா குடும்பம் இருந்த காலம் அது. நானும் பல்கலைக்கழக இறுதி ஆண்டு தேர்வு எழுதி விட்டு, மறுமொழி வந்து, பின் வேலை எடுக்கும் வரை, அவர்களுடன் இருந்தேன். அந்த காலத்தில் தான் அண்ணாவின் கடைசி மகளாக 'கலைமதி' பிறந்தார். பிறந்ததில் இருந்து அவருடனே நான் இருப்பதாலும், மற்றும் அவரை தூக்கி திரிவதாலும், விளையாடுவதாலும், அவர் என்னுடன் மிகவும் பிரியமாகவும் ஒட்டியும் இருந்தார். அவர் என் அறையிலேயே என்னுடனே படுப்பார். நானும் அவருக்கு கதைகள் எல்லாம் சொல்லுவேன். இன்னும் என் மனதில் மறக்க முடியாமல், என் மேல் அவர் வை…
-
- 1 reply
- 479 views
-
-
கிழிந்த கிடுகுகள் நிறைந்த வேலி முற்றத்தின் மத்தியில் பெயர் தெரியா ஒரு ஒற்றைப் பூமரம் எப்போதாவது எனைச் சந்தித்து சில மொழிகள் பேசும் இரு விழிகள் 0 0 0 சுப்ரமணியபுரம் பார்த்து முடித்த போது மனதைப் பாதித்த நம்பிக்கைத் துரோகத்திற்குமப்பால் இற்றைவரை துரத்துவதும் அதனூடே காலங்களைக் கிளறி மனதை அலைக்கழிப்பதுவும் படத்தில் குறிப்பிட்ட தூரம் வரை ஒரு கவிதையைப் போல் பயணித்திருக்கும் நாயகியின் விழிகளும் அதன் மொழிகளும்தான். படம் நிகழ்வதென்னவோ எண்பதுகள் எனினும் அந்தக் கண்கள் மட்டும் என் கனவுகளில் தொன்னூறுகளை இழுத்து வந்து நிறைத்து விடுகின்றன. சட்டென விழிப்பு வருகையில் ஏமாற்றமுறுகின்றேன் நான். மீளவும் கனவுக்குள் நுழைதல் குறித்து அவாவுகிறது மனம். சட்டெனச் சந்தித்து வி…
-
- 8 replies
- 2.3k views
-
-
வீட்டுக்கு விருந்தாளி வந்தாலே……! பகீரென்கிறது மனசு… அய்யோ……! கூரைமீதிருந்த…… காகம் கரைகிறதே…! இதயத்துடிப்பு இன்னும் அதிகரிக்கிறது.. ! நிச்சயம் இன்றைக்கு விருந்தாளி யாராவது வருவாங்க….! என் சுற்றத்தை சுற்றும் முற்றும் வாஞ்சையடன் பார்க்கிறேன்…! ஆபத்து நெருங்குகிறது…! இன்று- யாரோ ஒருவர் காலி நிச்சயமாகத் தெரிந்துவிட்டது ..! விருந்தாளி வந்தேவிட்டார்…! வீட்டில் ஏற்பட்ட களேபரத்தின் மூலம் தெரிந்து கொண்டேன்…! நன்றி முகநூல் பக்கம்
-
- 3 replies
- 692 views
-
-
ஆகாசப் பூ - சிறுகதை பிரபஞ்சன், ஓவியங்கள்: ஸ்யாம் அவள் புரண்டு படுத்தாள். இப்போது எல்லாம் இப்படி அடிக்கடி புரண்டு புரண்டு படுத்து, அறுந்துபோகும் உறக்கத்தின் இழையைத் துரத்திச்சென்று விடியும் வரை அவஸ்தைப்பட வேண்டியிருந்தது அவளுக்கு. மூன்று மூன்றரை மணிக்கு, இந்தப் பிரச்னை தொடங்கிவிடும். காதுகளுக்கு அருகில், விளங்காத சத்தங்கள், மொழிச்சொற்கள், யாரோ பக்கத்தில் இருந்துகொண்டு பேசுவதுபோல. என்ன பேசுகிறார்கள் என்றுதான் விளங்கவில்லை. ஏறக்குறைய உறக்கத்தில் ஆழ்ந்தாள். உலகம் விடிந்துகொண்டிருந்தது; சத்தமாகத் தெரிந்தது. பால் வெளிச்சம் படரும்போது, தோட்டத்து மரங்களில் இருந்து பறவைகள் பேசத் தொடங்கிவிடும். உணவுவிடுதிக்குக் கறந்து தர மாடுகள் நடக்கும் ஓசை, பால…
-
- 0 replies
- 2.1k views
-
-
கத்தரிக் குழம்பும் கருத்து முரண்பாடும் . நான் கனடாவுக்கு வந்த புதுசு. அவரும் நானும் தற்செயலாகவே அறைஞர்கள் ஆனோம். அவர் என்னைவிட ஒரு வருடம் முந்திக் கனடாவுக்குள் வந்து தரைதட்டியவர். அந்தத் தராதரம் மிக்க தகுதியின் அடிப்படையில் – அவரது பரிபாஷையில் – அவர் ஒரு பழைய காய். கனடா பற்றிய கற்கைநெறியில் அவரோடு தங்கி வாழ்ந்த ஆரம்பகால வாழ்க்கை எனக்கு ஒருவகையில் குருகுல வாசந்தான்! கண்ணைக் கட்டிக் கனடாவுக்குள் விடப்பட்டது போன்ற எனது பரிதாபகரமான அந்த நாட்களில் அவரது ஆலோசனைகளும் புத்திமதிகளும் – ஏன் குயுக்திகளும்கூட – எனது காதுக்குள் வேதமாய் ஓதப்பட்டன. ஒரு கொஞ்ச நேரம் பேசக் கிடைத்தால் போதும், ‘ஐசே’ என்ற முகமனுடன் உபநியாசம் ஆரம்பமாகும். கனடிய அரசு, கனடிய மக்கள், கல…
-
- 5 replies
- 1k views
-
-
தமிழர்களும் யூதர்களும் - ஜூட் பிரகாஷ் நானூறு ஆண்டுகளிற்கும் மேலாக எகிப்து தேசத்தில் அடிமைகளாக இருந்த யூதர்களை மீட்டுக் கொண்டு, அவர்களது தாயகம் நோக்கி போய்க் கொண்டுருந்த மீட்பர் மோசேயின் பயணத்தை செங்கடல் இடைமறிக்கிறது. உலக வரலாற்றில் முதலாவது மாபெரும் இடப்பெயர்வு எனக் கருதப்படும் இடப்பெயர்வு தான், யூதர்கள் எகிப்திலிருந்து வெளிக்கிட்டு, நாற்பது ஆண்டுகள் வனாந்தரங்களில் அலைந்து திரிந்து, கடைசியில் பாலும் தேனும் ஓடும் தங்களது சொந்த நிலத்தை வந்தடைந்தது. எகிப்திலிருந்து யூதர்களை மீட்டு வருவது மீட்பர் மோசேக்கு லேசுப்பட்ட விடயமாக இருக்கவில்லை. ஒவ்வொரு முறையும் எகிப்தின் ராஜாவான பார்வோனிடம் போய் “என் மக்களை போக விடு (Let my people go)” என்று மோசேயும் ஆரோனும் க…
-
- 3 replies
- 1.9k views
- 1 follower
-