Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. Started by கிருபன்,

    இரை மாதவன் ஸ்ரீரங்கம் மனிதனின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பென்று என்னைக்கேட்டால் தயங்காமல் கூறுவேன் துப்பாக்கிதான் என்று. ஏனெனில் அது எவரையும் நம்காலில் விழச்செய்யும் சக்திவாய்ந்தது. அச்சத்ததின் விளிம்பில் ரத்தம்சுண்டி முகம்வெளுத்து முன்னால் உயிருக்காக மன்றாடும் ஒரு இரையினைப் பார்க்கும் பரவசம் அலாதியானது. இப்போது இவன் அப்படித்தான் கிடக்கிறான். ஆனால் இவனைப் பார்த்தால் அந்த பரவசம் தோன்றவில்லை எனக்கு. சவரம் செய்யப்படாத தாடிமீசைகள் கடந்தும் அவன் கண்களில் நங்கூரமிட்டிருக்கும் அச்சத்தை உணரமுடிகிறது என்னால். இவனுடன் பிடிபட்ட நான்குபேர்கள் தனது கண்ணுக்கு முன்பாகவே ரத்தம் சிதற இறந்துபோனதை இவன் இறுதிமூச்சுவரை மறந்துவிட முடியாது. மலங்க மலங்க விழித்தபடி குத்துக்காலிட்டு அமர்ந்திருக்…

  2. அருணாவைப் பத்து வருடங்களாக எனக்குத் தெரியும். அதாவது அவள் அப்பா இறந்து போன தினத்திலிருந்து. ராத்திரி தூங்கப் போகும் போது அப்பா , அம்மாவுடன் பேசிக் கொண்டிருந்தார். காலையில் எழுந்து பார்க்கும் போது உத்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்தார். அருணாதான் அதை முதலில் பார்த்தாள் . அப்போது அவளுக்கு வயது எட்டு. அவளுடைய போராட்டங்கள் அன்று ஆரம்பித்தன. அப்பாவிற்கும் அண்ணாவிற்கும் எப்போதும் சண்டை. யாருடைய கட்சி சரியென்று இப்போதும் தீர்மானமாகச் சொல்வதற்கில்லை. அண்ணா சிகரெட் பிடிப்பான் . காலை ஏழு மணி , பகல் ஒன்றரை மணி , மாலை மூன்று மணி என்று சொல்லிவைத்த மாதிரி தெருமுனைக்குச் சென்று திரும்புவான் . திரும்பி வரும் போது அவனிடமிருந்து ஒரு விநோத வாசனை வரும். ” என்னடா இ…

    • 0 replies
    • 1.1k views
  3. அலெக்சாண்டர் இறக்கும் தருவாயில் போர் வீரர்களிடம் சொன்னார், “எனக்கு நீங்கள் நான் கேட்கப் போகும் உதவிகளைச் செய்ய வேண்டும்.நான் இறந்த பின் என்னைச் சவப் பெட்டியில் தூக்கிச் செல்லும் பொது என் இரு கைகளையும் வெளியே தொங்கப் போட்டவாறு எடுத்துச் செல்ல வேண்டும். எனக்கு மருத்துவம் பார்த்த உலகப் புகழ் பெற்ற டாக்டர்கள் சவ ஊர்வலத்தின் முன்னே செல்ல வேண்டும். நான் சேகரித்த வைரங்களையும் வைடூரியங்களையும் ஊர்வலப் பாதையில் போட்டுக்கொண்டே செல்ல வேண்டும்.” அங்கிருந்த அனைவருக்கும் ஒன்றும் புரியவில்லை. இவற்றை ஏன்செய்யவேண்டும் என்று ஆர்வமுடனும் வருத்தத்துடனும் அவரையே கேட்க அவர் சொன்னார், ”நான் எத்தனை நாடுகளை வென்ற போதும் எத்தனை கோடி செல்வத்தை வாரி எடுத்த போதிலும், இறந்தப…

  4. Started by லியோ,

    1, அவனது சிறுபராயம் விளையாட்டில் கழிந்தது.கிட்டிப்புள்ளு, கிளித்தட்டு,கிரிக்கட்,உதைபந்தாட்டம் என ஒரே விளையாட்டுத்தான். பாடசாலை அணிநடை,மெய்வல்லுனர் அணியிலும் இருந்தான். அவன் ஊரில் ஓரளவு பிரபல்யமான கோவில் இருந்தது.அந்தக்கோவில் கொடி ஏறினால் பத்து நாள் திருவிழா நடக்கும். நாலாம்,ஏழாம்,ஒன்பதாம் திருவிழாக்களுடன் பூங்காவனமும் கோலாகளமாய் நடக்கும்.எல்லா நாள் திருவிழாவிலும் அவனது சமுகமும் இருக்கும். மேளக்கச்சேரிகளுக்கு முன் வரிசையில் வாயை ஆவென்றபடி இருப்பான்.பின் வீட்டில் கோயில் கட்டி அந்தக்கோயில் கொடிஏறும்.அங்கயும் மேளக்கச்சேரி இருக்கும். தகர ரின் எடுத்து மூடியை கழற்றிவிட்டு பழைய கொப்பித்தாள்களை அந்தப்பக்கம் வைச்சு சைக்கிள் ரியுப் ரப்பர் எடுத்து…

    • 3 replies
    • 1.2k views
  5. என் கண்ணால் கண்ட காட்சிகளை அப்போதிருந்த என் மனதின் உணர்வுகளோடு இங்கே பதிவுசெய்கிறேன். வரலாற்றில் வாழவேண்டிய தமிழர்களின் கண்ணீர் கதைகளாக இருக்கட்டும் என்பதால் இயன்றவரை எழுதுகிறேன். உண்மையைச் சொன்னால் இவற்றை எல்லாம் எழுத எனக்கு உண்மையிலேயே விருப்பமில்லை. ஏனெனில் இதன் ஒவ்வொரு வரியையும் எழுதும்போது மீண்டும் மீண்டும் செத்துப்பிழைக்கிறேன். நினைக்காமல் இருந்துவிட விரும்பும் சில காட்சிகளை நினைத்து நினைத்து எழுதவேண்டி இருப்பதில் எவருக்கும் விருப்பம் இருக்காதல்லவா? நானே நினைக்கத் தயங்கும் விடயங்களை பிறருக்கு படிக்கத்தருவதா என்ற தயக்கமும் எனக்குண்டுதான். எனினும் இந்த அவலங்களும் மரணங்களும் தழிழர்களின் வரலாறு என்பதால் எழுதுகிறேன். இனி…… புளியங்குளத்திலும் முகமாலையில…

    • 27 replies
    • 6.3k views
  6. இறுதி வணக்கம் - சயந்தன் நான் பார்த்த கணத்தில், வளவன் தன் காலின் கீழே, பச்சைநிற ஈரலிப்பான முதுகில் கருமை நிறப் புள்ளிகளைக் கொண்ட தவளையின் மீது, கையில் ஏந்தியிருந்த உடைந்த கொங்கிறீட் கல்லை நசுக் என்று போட்டான். புளிச் என்ற சத்தம் கேட்டது போலிருந்தது. நான் ஒருவித அசூசையான உணர்வில் ஆட்பட்டு கண்களை மூடி பற்களைக் கடித்தேன். வளவனுக்கு ஆறு வயதும் முழுதாக நிரம்பியிருக்கவில்லை. அவன் எனக்கு மருமகன் முறை, அக்காவின் மகன். பற்றிப்பிடித்திருந்த கை தளர்ந்தால் எந்நேரமும் இடுப்பில் வழியத் தயாராயிருந்த ஒரு தொளதொளத்த காற்சட்டையை மட்டும் அணிந்திருந்தான். உருண்டையான முகத்தில், அலட்சியமான பெரிய கண்களோடு காலையிலிருந்து அவன் வளவு முழுவதும் திரிகிறான். நான் அவனுக்குப் பின்னாலேயே அலைகின்றேன். …

    • 2 replies
    • 1.5k views
  7. இறுமாப்பு கூடாது... ................................. மாவீரன் அலெக்சான்டர் இந்தியாவின் ஒரு பகுதியை கைப்பற்றிய போது. ஒரு நாள் மாலை வீதியில் நகர்வலம் வந்துக் கொண்டிருந்தார். அப்போது தன் எதிரே வயதான யோகி வருவதை கண்டு குதிரையிலிருந்து இறங்கி அவரை தலை வணங்கினார். அந்த யோகியின் கண்கள் சாந்தமும், ஒளியும் நிறைந்து காணப்பட்டது. ” உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் தருகிறேன், என்னுடன் “மெசடோனியா” வந்துவிடுங்கள். உங்கள் வருகையால் என் நாட்டு மக்கள் ஆனந்தம் அடைவார்கள், என் நாடு சுபிற்சம் பெரும்” என்று யோகியை தன் நாட்டிற்கு அழைத்தார் அலேக்சான்டர். யோகியோ, “எனக்கு எதுவும் வேண்டாமய்யா, இந்நாடும், நான் வசிக்கும் காடுகளே எனக்கு போதுமான மகிழ்ச்சியை தருகிறது”, …

  8. ஐரோப்பிய நாடொன்றில் ...அந்த வதிவிடத்தின் மாடியில் ஒரு அறையில் அந்த முதியவர் வாழ்ந்து கொண்டு இருந்தார் ..இளைப்பாற்று ( பென்ஷன்) சம்பளம் எடுப்பவர் போலும்........அவரது அறையின் ஜன்னல் அருகே கதிரையில் உட்கார்ந்த படி போவோர் வருவோரை பார்த்துக் கொண்டிருப்பது .. பிடித்தமான பொழுது போக்கு. மாதத்தில் ஒரு தடவை வங்கி போன்ற இடங்களுக்கு செல்லும்போது தனக்கு தேவையான் சமையல் பொருட்களை வாங்கி வருவார். தினசரி பத்திரிகை படிப்பார். அவை அவரது குடியிருப்பின் வாயிலுக்கு வந்து விழும். ........இப்பொது பனி கொட்டும் காலம். குடிமனைச்சொந்தகாரர் தான் அவர்களது நடை பாதையை சுத்தம் செய்ய வேண்டும். சிலர் தாங்களாகவே செய்வார்கள் சிலர் வாடகைக்கு கூலியாட்களை அமர்த்தி செய்வார்கள். அந்த வேலையை செய்யும் கூலியாள…

    • 5 replies
    • 888 views
  9. இலக்கிய பாடல்கள் ஊடாக ஒரு இளம் பெண்ணின் கதை: "திலோ அவனுக்காக காத்திருந்த்தாள்" / பகுதி:01 [ஒரு புது முயற்சி] “கன்றும் உண்ணாது கலத்தினுள் படாது நல் ஆன் தீம் பால் நிலத்தில் உக்கா அங்கு எனக்கு அகாது என்னைக்கும் உதவாது பசலை உணீஇயர் வேண்டும் திதலை அல்குல் என் மாமைக் கவினே." கன்றும் குடிக்காமல், பாத்திரத்திலும் கறக்காமல், நிலத்தில் வீணே வழிந்து போகும் பசுவின் பாலைப் போல, எனக்கும் உதவாமல், என் தலைவனுக்கும் இல்லாமல் என் அழகும் என் மாந்தளிர் மேனியும் விணாகிக் கொண்டிருக்கின்றதே -- இப்படி ஏங்கி தவித்து இருந்தவளுக்கு இன்று ஒரு பௌர்ணமி. ".... திங்கள் நாள் நிறை மதியத்து அனையை; இருள் …

  10. இலக்கிய வெறுப்பை சமாளிப்பது எப்படி? ஆர். அபிலாஷ் நான் எழுத வந்து ஒன்பது வருடங்கள் ஆகின்றன. நான் கடைபிடிக்கும் ஒரு தற்காப்பு நடவடிக்கை இது: இலக்கியவாதிகள் அல்லது வாசகர்களுடன் மது அருந்த மாட்டேன். அல்லது நான்குக்கு மேல் இலக்கியவாதிகள் குழுமியிருக்கும் அறைக்குள் மாட்டிக் கொள்ள மாட்டேன். ஏனென்றால் இந்த இரு சந்தர்பங்களிலும் இலக்கியவாதிகளுக்கே பிரத்யேகமாக உள்ள வெறுப்பு ஒரு ஆவி போல் வெளியே வருவதை காண நேரிடும். இது என்னுடைய தனிப்பட்ட நம்பிக்கை: நம் இலக்கியவாதிகளுக்குள் கண்மூடித்தன்மான வெறுப்பு பீறிடுகிறது. இந்த வெறுப்பை யார் மீது காட்டலாம் என அவகாசம் தேடிக் காத்திருப்பார்கள். பொதுவாக யாராவது சர்ச்சையில் மாட்டினால் அதற்கு சம்மந்தமில்லாதவர்கள் வந்து அவர் ம…

  11. வேலையால் வந்த களைப்பு தீர ,தேனீர் குடிப்பதற்காக கேத்தலின் பட்டனை அழுத்தியவன் ,கப்பை கழுவி சமையலறை மேசையில் வைத்து விட்டு தேயிலை பாக்கை தேடினான்.வழமையாக பாவிக்கும் லிப்டன் தீர்ந்து போயிருந்தது.டில்மா தேயிலை பெட்டி அவனைபார்த்து சிரித்து"ஆபத்துக்கு பாவமில்லை என்னை குடித்து பார்" என்பது போல் தோன்றியது. எத்தனை தரம் சொன்னாலும், உவள் சிங்களவனுக்கு பிழைப்பு காட்டுறது என்றே அடம் பிடிக்கிறாள் என புறுபுறுத்தபடியே அக்கம் பக்கம் பாரத்தவன் ,தன்னை ஒருத்தரும் கவனிக்கவில்லை என்று உறுதிபடுத்திக்கொண்டு டில்மா தேயிலை பக்கற்றை கோப்பையினுள் போட்டு சுடுதண்ணியை ஊற்றி ஊற வைத்து பிளிந்தெடுத்த தேயிலை பக்கற்றை குப்பை தொட்டியில் எறிந்தவன், பாலை கலந்து ருசிக்கத் தொடங்கினான்,மனம் குணம் எல்லாம…

  12. பி.ப 5 : 20 இலக்கு நகர்கிறது.... இண்டைக்கு விட்டால் இனி இந்த இலக்கை பிடிக்க முடியாது.. இந்த இரண்டு வசனமும் தான் மதனின் மனசில் விடாமல் ஒலித்து கொண்டிருந்தது. கொஞ்சம் வியர்த்து தான் போய் இருந்தான். அவன் ஒரு இயக்கி மட்டும் தான். அதை செய்ய வேண்டியவனுக்காக தான் இவ்வளவு காத்திருப்பும். வசந்தன் எங்கே.? ஒரு வேளை சுத்தி வளைப்புக்குள் மாட்டுப்பட்டிருப்பனோ.? இல்லை.. மனசை மாத்தி இருப்பானோ.? ச்சே ச்சே அப்படி இருக்காது அவன் என்னை விட உறுதியானவன் நிச்சயமா வருவான். தன்னை தானே கேள்வியும் கேட்டு சமாதானமும்படுத்தி கொண்டிருந்தான். நேரமாகிறது இலக்கு நகர தொடங்கிவிட்டது இன்னும் பத்து இருபது நிமிசத்திலே இந்த இடத்தை விட்டு போயிடும். அதுக்கு பிறகு இலக்கை நெருங்கவே…

  13. 90களின் காலைப்பொழுது எப்பொழுதுமே ரசிக்க கூடியதாகவோ, அல்லது சேவல் கூவல்களுடனோ திருகோணமலைக்கு விடிவது இல்லை. திருமலைக்கு மட்டுமல்ல பல இடங்களுக்கும் அப்படிதான். இதே போன்ற ஜூன் மாதத்தில் ஒருநாளும் அப்படித்தான் துப்பாக்கி வேட்டுக்களின் அதிரல்களுடன் திருமலை நகரமே திடிரெண்டு விழித்து கொண்டது. ஆனால், ஒருவனுக்கு மட்டும் அன்றைய இரவு தூக்கம் இல்லாமல் வெறும் கனவுகளால் மட்டும் நிரம்பி இருந்தது. அவனது செல்ல குழந்தை அவனை தூங்க விடாது, அவனது கனவுகளை முழுவதுமாக ஆக்கிரமித்து இருந்தது. இந்த குழந்தையை எப்படி வளர்ப்பது? என்ன படிக்க வைப்பது? என்ன என்ன எல்லாம் செய்ய வேண்டும் என்ற கனவுகளுக்கு மத்தியில் அந்த குழந்தையின் சிறு சிறு அழுகை சினுங்கல்களையும், தன் மனைவியின் தாய்மை உணர்வுகளையும் ரசித்தவ…

    • 0 replies
    • 1.2k views
  14. தொடர் 1 வதனிக்கு ஒரே குழப்பமாக இருந்தது... இவளுக்கு என்ன நடந்தது... அந்தப் பெண்ணுக்கும் இவளுக்கும் என்ன தொடர்பு... ஏன் இப்படி சோர்ந்து போயிருக்கிறாள்... கேள்விகள் அவளைத் துளைத்தெடுத்துக் கொண்டிருந்தன... மாதுரியையே கண்வெட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.. நேரம் காலை 10 மணியைத் தாண்டிக்கொண்டிருந்தது.. வதனியின் பிள்ளைகள் பாடசாலைக்கும், கணவன் வேலைக்கும் போய் விட்டால் வீடு நிசப்தமாகிவிடும். வீட்டுக்குள்ளே நிரம்பிக் கொண்டிருந்த குளிர், அறையின் நிசப்தத்தை உறுதிப்படுத்தும் கடிகாரத்தின் துடிப்பொலி, எப்பொழுதும் அந்த வீட்டில் கமழ்ந்து கொண்டிருக்கும் மல்லிகை வாசனை, அந்த அறையை அலங்கரித்துக் கொண்டிருக்கும் அழகிய பூங்கொத்துக்கள்... சிறிய மேசை மீது அமைதியாகவே அமர்ந்திருக்கும் சிறி…

    • 33 replies
    • 3.3k views
  15. இலவ(ஈழ)ம் காத்தவர்கள் சீறா லியோனின் லுங்கி விமான நிலையம்..நையீரியாவிலிருந்து வந்த விமானம் தரைதட்டுகின்றது. றோகன். சோம்பல் முறித்தபடி பக்கத்தேயிருந்த தாய்லாந்து அழகி நுயும் மை பார்த்து வந்துவிட்டோம். உனக்கு இந்தத் தடைவை புதுவிதமான அனுபவங்களாக இருக்கப்போகின்றது. எந்தச் சந்தர்ப்பத்திலும். சோர்வோ கோபமோ அடைந்து விடாதே எனக்காக எல்லாத்தையும் அனுசரித்துநடந்துகொள் என்றான்.மெல்லிதாக புன்னகைத்தவள் றோகனின் தோளில் சாய்ந்தபடி உனக்கொன்று தெரியுமா நான் எத்தனையோ ஆண்களுடன் உறவு வைத்திருக்கிறேன எத்தனை பேர் என்கிற கணக்குக்கூடத் தெரியாது ஆனால் உன்னை மட்டும்தான் நம்பி இப்படி தனியாக நாடு விட்டு வந்திருக்கிறேன். உனக்காக நான் மரணம்வரை வரவும்தயார். என்றவளின் கன்னங்களை மெதுவாக தடவிய றோகான். என…

  16. இலவம் பஞ்சு .......... நகரிலே பிரபமான ஒரு கலாசாலை , ஆண்டு விழா தமிழ் தேசீய முறைப்படி உயர் வகுப்பு ஆண்கள் பட்டு வேட்டி உடுத்து ,பெண்கள் சேலை கட்டி ,பொட்டும் பூவுமாக அந்த மண்டபம் கலகலபாக இருந்தது .விழா நாயகன் ,அதிபர் ,ஊர் பெரியவர் எல்லோரும் உரை ஆற்றி முடிய , நிகழ்ச்சிகள் தொடங்கின . நடனம் ,நாடகம், வில்லுப்பாட்டு என்று ஒரே கொண்டாட்டம் , ராகவனுக்கு இருப்பு கொள்ள வில்லை மீனாலக்ஸ்மி எனும் மீனு குட்டி இடம் தன் எண்ணத்தை சொல்ல .....மீனு ஆழகானவள் பண்பானவள் ,வசதி படைத்தவள் என்றாலும் கர்வமர்றவள் எல்லாராலும் விரும்பபட்டவள் .படிப்பிலும் கெட்டிக்காரி . ராகவன் உள்ளம் தன் மீனுக்குட்டியிடம் எப்படியாவது பேசி தன் உள்ளதை சொல்லிவ…

  17. இலுப்பைப் பூ ரகசியம் இலுப்பைப் பூ ரகசியம் தமயந்தி ப ண்ருட்டி வழியாகப் போகும்போது காற்றில் சிறகு கட்டி அலைந்த இலுப்பைப் பூவின் வாசம் ஏனோ அமுதாவை நினைவு படுத்தியது. அமுதாவும் நானும் அந்தப் பெண்கள் விடுதியைவிட்டு வெளியேறியது ஒரு துரதிர்ஷ்டம் சார்ந்த சுவாரஸ்யமான அனுபவம். ஓர் அதிகாலையில், எங்கள் அறைக்குள் இருவர் நின்றிருந்தனர்.அன்றைக்கு நான் 12 மணிக்கு மேல் தூங்கியதாக ஞாபகம். எங்கள் அறையிலிருந்த காமாட்சிதான் மு…

  18. Started by jkpadalai,

    “உணவு சங்கிலி என்பது சுற்றாடலில் உள்ள ..” அரியலிங்கம் மாஸ்டர் ஒரு வலதுகைக்காரர். இடதுகை கரும்பலகையில் விறுவிறுவென்று எழுதிக்கொண்டிருக்கும்போதே, வலது கை லோங்க்ஸ் பொக்கெட்டில் வறு வறுவென்று சொறிந்துகொண்டிருக்கும். ரிவிரச ஒபரேஷன் முடிந்த ‘கையுடன்’ கழுத்தடியில் ஜெயசிக்குறு ஒபரேஷன் ஆரம்பிக்கும். நீங்கள் மைதானம் பக்கம் உள்ள மிடில் ஸ்கூல் கழிப்பறைக்கு ஒதுங்கினால், கிழக்கேயிருந்து சரியாக நான்காவது அறையின் உள் கூரையில் “சொறியலிங்கம் ஒரு சொறி….” என்று கரித்துண்டால் எழுதப்பட்டு, மிகுதிப்பகுதி, மாஸ்டரின் யாரோ ஒரு ஆஸ்தான மாணவனால் அழிக்கப்பட்டு இருப்பதை கவனிக்கலாம். பக்கத்திலேயே முருகானந்தம் மிஸ்ஸின்… “சேர்” என்று யாரோ கூப்பிட, மாஸ்டர் திரும்பி பார்க்காமலேயே சொன்னார்…

    • 11 replies
    • 1.9k views
  19. இலையுதிர் காலம் - சிறுகதை சிறுகதை: ஹேமி கிருஷ், ஓவியங்கள்: ஸ்யாம் இலையுதிர்காலம் ஆரம்பமாயிருந்தது, சாலையெங்கும் சருகுகள் உதிர்ந்திருந்தன. அந்த மளிகைக் கடைவாசல் முழுவதும் பாதாம் இலைகள் உதிர்ந்திருந்தன. மளிகைக் கடையின் ஷட்டரைத் திறந்துகொண்டு வெளிவந்தான் கதிர். குளிர் பட்டவுடன் மயிர்க்கால்கள் சிலிர்த்தன. கைகளைக் குறுக்கே கட்டிக்கொண்டான். என்றைக்காவது லோடு வரும் நாள்கள் இப்படிக் கடையிலேயே தங்குவதுண்டு. வாசல் முன் விரவியிருந்த சருகுகளைப் பெருக்க முனைந்தான். இரவின் பனியினால் சருகுகள் நமத்துப்போயிருந்தன. இதுவே மாலையாக இருந்தால் பகல் வெயிலால் காய்ந்த சருகுகள் மொறுமொறுவென இருக்கும். அதன் மீது அங்குமிங்கும் சரக் சரக்கென்று நடப்பான். இலைகள்…

  20. இலையுதிர் காலம்! பாட்டி விசாலத்தின் பெயரை முதியோர் இல்லத்தில் பதிவு செய்து விட்டு வந்த பின்னும் மூன்று நாட்களாக அந்தத் தகவலை தாயிடம் சொல்லத் தயங்கினான் சதீஷ். ""ஏன் இப்படி பயந்து சாகறீங்க?'' என்று எரிந்து விழுந்தாள் அவன் மனைவி சத்யா. ""இல்லை... அம்மாவுக்கு இது பெரிய ஷாக்காய் இருக்கும்'' ""இதப்பாருங்க... மாமியாரைப் பார்த்துக்கலாம். அது என் டியூட்டி. ஆனா, மாமியாரோட மாமியாரைப் பார்த்துக்கறதெல்லாம் டூ மச்...'' அவன் ஒன்றும் சொல்லாமல் மவுனமாய் இருந்தான். ""அடுத்த வாரம் அனுப்பணும்ன்னா இப்பவே சொன்னாத் தான் அவங்களுக்குப் பேக் பண்ண டைம் கிடைக்கும். சைக்காலஜிக்கலா தயாராகவும் முடியும். கிழவி இப்ப கோவிலுக்குப் போயிருக்கா. அதனால, இப்ப…

  21. இல் அறம் வீட்டில் அவன் கூட அவளும் இருந்தாள். மனைவி. என்றாலும் அவன் ஏனோ தன்னைத் தனியனாகவே உணர நேர்ந்தது. அவளை அவனுக்குப் பிடிக்கவில்லை. அவனுக்குப் பிடிக்கவில்லை என்பதை அவளும் உணர்ந்தாள். இதற்கு என்ன செய்ய தெரியவில்லை. அவளால் என்ன செய்ய முடியும்? அவள் அருகில் வந்தாலே அவனிடம் ஓர் விறைப்பு வந்தாப் போலிருந்தது. கனிவு அல்ல இறுக்கம் அது. ஒரு பெண்ணை இத்தனை கிட்டத்தில் ஒருவனால் வெறுக்க முடியுமா, ஒதுக்கி அலட்சியப்படுத்த முடியுமா என்று தெரியவில்லை. முதலில் ஆச்சர்யமும் பிறகு அதிர்ச்சியும் அவளுக்கு ஏற்பட்டன. அழுகை வரவில்லை. அவளுக்கு அழவே வராது. துக்கிரி என்றும் பீடை என்றும் ப…

  22. இல்லாள்: ஜேகே சாவு வீடுகளில் பிரேதம் எடுக்கும்போது எழுகின்ற ஒப்பாரி ஒலியைப்போல மழை வீரிட்டுக் கொட்டிக்கொண்டிருந்தது. கிளிநொச்சி நிலையத்திலிருந்து ரயில் மறுபடியும் புறப்பட்டது. மிருதுளா தன் செல்பேசியிலிருந்த பயண வழிகாட்டியைத் திரும்பவும் எடுத்துப் பார்த்தாள். கொடிகாமம் கழிந்தால் அடுத்தது யாழ்ப்பாணம் ரயில் நிலையம் வந்து சேர்ந்துவிடும். அவள் தன் கைப்பையினுள் கடவுச்சீட்டு, கடனட்டை, இலங்கை ரூபாய்கள் எல்லாமே பத்திரமாக இருக்கிறதா என்று மீண்டுமொருமுறை உறுதிப்படுத்திக்கொண்டாள். யாழ்ப்பாணத்தில் ரயில் எத்தனை நிமிடங்கள் தரித்து நிற்கும் என்பதை ஊகிக்கமுடியவில்லை. முதலில் அந்த நிலையத்தை அவள் தவறவிடாமலிருப்பது முக்கியம். இந்த மழையில் அதன் பெயர்ப்பலகை மறைந்துபோகலாம். ரயிலினுள்ளே…

    • 7 replies
    • 894 views
  23. இல்வாழ்வு தந்த இயலாமை கனமான அந்த அல்பத்தை தூக்க முடியாமல் சிரமப்பட்டு தூக்கிக்கொண்டு, அங்காலயும் இங்காலயும் சாய்ந்து சாய்ந்து மகள் ஜனனி ஓவர் ஆக்சன் வேற போட்டுக்கொண்டு, "அம்மா அம்மா பிடியுங்கோ" என்று சத்தம் போட்டுக்கொண்டு வருவதைப் பார்த்ததும் மேனகாவுக்குச் சிரிப்புத்தான் வந்தது. "இப்ப என்னத்துக்கு ஜனனி இதைத் தூக்கிக் கொண்டு வாறீங்கள்? அம்மாட்டா கேட்டா எடுத்துத் தந்திருப்பன்தானே?" "அம்மா நான் உங்கட கல்யாண வீட்டுப் படம் பார்த்துக் கனநாள்தானே.. வாங்கோ பார்ப்பம். நான்; அதில நிக்கிற ஆக்களெல்லாம் யார் யாரெண்டு சொல்லுவனாம் நீங்கள் நான் சொல்றதெல்லாம் சரியோ என்று பார்ப்பீங்களாம். சரியோ?" "ம்... மகாராணி சொன்னா அதுக்கு மறுபேச்சு இருக்கா? சரி சொல்லுங்கோ மகாராணி..."…

    • 8 replies
    • 1.9k views
  24. ♥ ♥குரல் தழுதழுக்க, என் முன்னாள் காதலியின் கடிதத்தப் படித்து முடித்த என் மனைவி நந்தினி, ''யாரு இந்த ஜெஸ்ஸி?' என்றாள். அப்போது அவளின் விழியோரம் எட்டிப்பார்த்த கண்ணீர், அடுத்து நான் சொல்லப்போகும் வார்த்தைகளைக் கேட்டு, கன்னத்தில் வழிவதற் காகக் காத்திருந்தது. நான் குரலில் எவ்வித உணர்ச்சியும் இன்றி, ''இந்த லெட்டர் உனக்கு எப்படிக் கிடைச்சது?' என்றேன். ♥''உங்களோட ஒரு பழைய புத்தகத்துல இருந்துச்சு' என்ற நந்தினி, படுக்கை அறையில் இருந்து குழந்தையின் சிணுங்கல் சத்தம் கேட்க... வேகமாக உள்ளே சென்றாள். ♥நான் பால்கனிக்குச் சென்று ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துக்கொண்டு வெளியே பார்த்தேன். டெல்லியின் ஜனவரி இரவுக் குளிருக்கும் மனதில் பரவியிருந்த மெல்லிய சோகத்துக்கும் சிகரெட் புகை இ…

  25. ஒரு தனித்துவமான பண்பாட்டின் நல்ல அடையாளம் அதன் தனித்துவமான இசை. தனித்துவமான பண்பாடு இல்லாமல் இனமோ, தேசியமோ இருக்க முடியாது. தனித்துவம் மிக்க தூய்மையான இசையை தருபவன் அந்த இனத்தின், தேசியத்தின் பெரும் சொத்து. இளையராஜா எங்களின் சொத்து ஒரு நாள் என்னுடைய மனைவி என்னிடம் கேட்டார். „உங்களுக்கு இளையராஜாவை நேரில் சந்தித்து பேச விருப்பமா?'. உடனடியாகவே என்னுடய பதில் 'இல்லை' என்பதாகவே இருந்தது. அந்த மனிதன் தன்னுடைய இசை மூலம் எங்களுடன் தினமும் பேசிக் கொண்டிருக்கிறான். அவனுடைய புல்லாங்குழல் எங்களுடன் கூடவே பயணித்துக் கொண்டிருக்கிறது. நாங்கள் துள்ளிக் குதிக்கும் போது அவன் இசை எங்களோடு சேர்ந்து துள்ளுகிறது. சோர்ந்து வாடி இருக்கும் போது அவன் இசை தலை கோதிச் செல்கிறது. என…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.