கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
1976 அதிகாலை வேளை சிலிர்ப்புடன் தொடங்கியது . இலேசான மார்கழி மாதத்து குளிரும் , பிள்ளையார் கோயிலடி மணியோசையும் , அம்மாவின் அடுப்படிச் சண்டை ஒலியும் , மாட்டுக் கொட்டிலில் நந்தினியிடம் இருந்து அண்ணை பித்தளைச் செம்பில் பால்கறக்கும் சர்..... என்ற ஒலியும் படுக்கையில் கிடந்த சிறுவனான வர்ணனுக்கு இதமாகவே இருந்தன . அப்பொழுது அவனிடம் சிறு வயதுக் குழப்படியும் கற்பனைகளுமே அதிகம் . தும்பிக்கு வாலில் கயிறு கட்டி பறக்க விடுவதும் , கோயில் கேணியடியில் பேத்தை மீன்கள் பிடிப்பதும் , தரவைக்குள் மாடுகள் மேயப் புதினம் பார்ப்பதும் அவனின் முக்கிய பொழுதுபோக்காக இருந்தன . இன்று என்ன செய்யலாம் என்று கற்பனை பண்ணியவாறே மீண்டும் போர்வையைக் குளிருக்கு இதமாகப் போர்த்தியவாறே படுக்கையில் குப்பறக் கவிண்டு பட…
-
- 25 replies
- 2.9k views
-
-
காலத்தால் கைவிடப்பட்டவனை வரலாறு எங்கே வாழவைக்கப் போகிறது.....? 2வாரங்கள் முன்னொரு ஞாயிற்றுக்கிழமை விடிய அவனது தொலைபேசிதான் அவளை நித்திரையால் எழுப்பியது. அக்கா நான் *** கதைக்கிறன். ஏனக்கு ஒரு உதவி வேணும் அதான் எடுத்தனான்.....ஸ்கைப் வருவியளோ கதைக்க......? அத்தோடு தொடர்பறுந்தது. ஆசிய நாடுகளுக்குள்ளே ஐக்கியநாடுகள் சபையில் அகதி அந்தஸ்த்திற்கு பதிந்துவிட்டு சிறைகளில் இருக்கிற பலர் இப்படித்தான் வந்திருக்கிறார்கள். ஒன்றில் சிறையிருக்கும் நாடுகளில் தமக்கான உதவிகோரல் அல்லது இலங்கை போகிறோம் உதவியென்றே பல அழைப்புகள் வந்திருக்கிறது. அப்படியான ஒன்றாயே இவனது அழைப்பையும் நினைத்தாள். ஸ்கைப் போனாலும் ஓயாத தொடர்புகள் வந்து நிறைந்து விடுவதால் அவனை மறந்து போயிருந்தாள். நேற்று ஸ்கை…
-
- 15 replies
- 2.9k views
-
-
வாசலில் புத்தம் புதிய ரொயாட்டா கார் வந்து நின்றதும்.. ஓடிச் சென்று.. வாங்கோ.. உங்களுக்காகத் தான் காத்திருக்கிறோம் என்றபடி காரின் கதவுகளை திறந்துவிட்டார் மணப்பெண்ணின் அப்பா சுந்தரேசன். வேளைக்கு வருவம் என்று தான் வெளிக்கிட்டம் சம்பந்தி ஆனால் ரபிக் ஜாமில சிக்கிக்கிட்டம் அதுதான் லேட்டாப் போச்சு என்றார் மாப்பிள்ளையின் அப்பா சந்திரகாசன். அது பறுவாயில்லை.. லேட்டா என்றாலும் வந்து சேர்ந்தீங்களே. அது சந்தோசம். எங்க மாப்பிள்ளைத் தம்பியைக் காணேல்ல.. கனடாவில இருந்து லண்டன் வந்ததும் களைச்சுப் போட்டாரோ..?! இல்ல அவன் இரண்டு கிழமை லீவில தான் வந்தவன். அதுக்குள்ள ஒரு கிழமை ஓடிப் போச்சே என்ற கவலையில இருக்கிறான். அந்தா பின் சீற்றில இருந்து இறங்கி வாறான்.. நீங்கள் காணேல்லைப…
-
- 14 replies
- 2.9k views
-
-
பகுதி (1) (படபடப்பாக திருமதி அருந்ததி வீட்டினுள் நுழைகிறார்.) அருந்ததி: என்ன வேலை.. என்ன வேலை.. (தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த அரண், சத்தத்தை குறைக்கிறான்.) அரண்: இன்றைக்கு நேரத்துக்கு வந்திட்டீங்கள்.. உடம்புக்கு ஏதாலும் சுகமில்லையே? அருந்ததி: தொடங்கியாச்சா.. இந்த விசாரணைக்கொன்றும் குறைச்சலில்லை.. நேரத்துக்கு வந்தாலும் விசாரணை.. பிந்தி வந்தாலும் விசாரணை.. மனுசி என்ன பாடுபட்டுப்போட்டு வாறாள் என்ற கவலை இல்லை.. வீட்டில இருந்து ரீவிய பாக்கிறதும், அதில போற சீரியல்ல வாறவங்களைப் பாத்து அழுறதும்தானே உம்மடை வேலை.. வேறை என்ன வேலை இங்கை...? அரண்: ஏன் என்னோடை கோபிக்கிறீங்கள்.. நான் இப்ப என்ன செய்யேலை எண்டு எரிஞ்சு விழூறியள்..? அருந்ததி…
-
- 23 replies
- 2.9k views
-
-
திருக்கார்த்தியல் - சிறுகதை இன்னும் இரண்டு நாளில் திருக்கார்த்திகை. மருத்துவாழ் மலையில் பெரிய தீபத்தை ஏற்றுவார்கள். ஊர் முழுக்கக் கொழுக்கட்டையின் மணம் கிறங்கடிக்கும். சைக்கிள் கடையில், பழைய டயர்கள் விற்பனைக்குக் குவியும். சொக்கப்பனை கொளுத்துவதுபோல முள்கள் நிறைந்த ஒடைமரத்தைக் கொளுத்துவார்கள். செந்தமிழ் தங்கியிருந்த ஹாஸ்டல், கன்னியாகுமரிக்கு அருகில் உள்ள கோவளத்துக்கும் மும்மூர்த்திபுரத்துக்கும் இடையில் இருக்கும் மன்னத்தேவன் கோயிலின் பின்புறம் இருந்தது. செந்தமிழுக்கு ஐந்து வயதாகும்போது, அவன் அம்மா ஹாஸ்டலில் சேர்த்துவிட்டாள். மும்மூர்த்திபுரம் தொடக்கப் பள்ளியில் படித்துவிட்டு, சாலையூர் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்க வந்தான். மெலிந்த தேகம்,…
-
- 0 replies
- 2.9k views
-
-
பள்ளிக்குப்; போவதற்காய் புறப்பட்டுச் சென்ற செந்தூரன் அன்றைக்கும் அழுது கொண்டே திரும்பி வந்து விட்டான். அன்று தான் வேலை விடயமாக வெளியூர் சென்றுவிட்டுத் திரும்பி வந்திருந்த தகப்பன் “ஏன் தம்பி பள்ளிக்கூடம் போகாமல் திரும்பிட்டாய். என்ன பிரச்சினை’’ என்று ஆச்சரியத்துடனும் கவலையுடனும் கேட்டார். “மூலைவீட்டிலை இருக்கிற அந்தக் கொழுத்த நாய் நான் பள்ளிக்கூடம் போகும் போது கத்திக் கத்திக் குலைக்குது அப்பா. இப்ப ஒரு கிழமையா நான் பள்ளிக்கூடம் வெளிக்கிட்டுப் போறதும் திரும்பி வாறதுமா இருக்கிறன்" கவலையுடன் சொன்னான் செந்தூரன். சின்னப்பிள்ளைக்கு விளங்கும் விதமாகத் தகப்பன் சொன்னார் “தம்பி அந்த நாய் படிக்க இல்லை எல்லோ. அதாலை ஆக்கள் படிக்கப் போறதைப் பாத்தால் அந்த நாய்க்குப…
-
- 9 replies
- 2.9k views
-
-
புலியின்.... தொழிற்சாலையில், வேலை செய்த... எறும்பு. ஒரு காட்டில் வாழ்நாள் முழுக்க வேட்டையாடி அலுத்துப்போன புலி ஒன்னு ஒரு தொழிற்சாலை ஆரம்பிச்சுது. அங்கே ஒரு எறும்பு வேலை செஞ்சுது. அதுபாட்டுக்கு வரும் சுறுசுறுப்பா எல்லா வேலைகளையும் செஞ்சு முடிச்சிட்டு சாயந்திரம் ஆனா வீட்டுக்கு போயிடும். புலியாருக்கு ஏக சந்தோசம் கணிசமான லாபமும் கிடைச்சுது. நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, நம்ம ஆட்சியாளர்களுக்கு தோனுற மாதிரி நடு ராத்திரியில் திடீர்ன்னு புலியாருக்கு ஒரு ஐடியா தோனுச்சு. எறும்பு தனியாவே வேலை செய்யுதே அதை கண்காணிக்கற அளவுக்கு நமக்கும் போதுமான அறிவு இல்லை, நாம எறும்பை கண்காணிக்கவும் ஆலோசனை சொல்லவும் ஒரு உற்பத்தி மேலாளரை (production manager) நி…
-
- 0 replies
- 2.9k views
-
-
இப்பவென்றாற் போல.... அழுகையாய் வந்தது. யாரிடமும் கதைக்கவோ சிரிக்கவோ முடியாத நிலையில் உதடுகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொண்டது. காடுகள் மலைகள் தண்ணீர் நிரம்பிய கடல் கிணறுகள் என நிறையவே என்னை அங்குமிங்குமாய் அலைத்து இழுத்துக் கொண்டு ஓடுமாப்போல அலைகளும் கடல்களும் என்னை உள்ளிழுப்பது போலிருந்தது. கண்களுக்குள் எட்டிய பிள்ளைகளின் கைகள் என்னைவிட்டுத் தொலைவாகின.....நான் தனியனாய் எல்லாவற்றையும் எல்லோரையும் தொலைத்து.... கோழியின் கூவலும் மெல்லிய இசையுமாக மணிக்கூடு தனது இருப்பை உறுதிப்படுத்தி எழுப்புகிறது. நேரம் அதிகாலை 4.20. வேலைக்குப் போகும் அவசரத்தில் என்னவன் எழுந்து போகிறான். அட இதுவரையும் கண்டது கனவா ? பிள்ளைகள் உறக்கம் கலையாமல் தங்கள் படுக்கைகளில்....கதவு இடுக்குகளால் …
-
- 16 replies
- 2.9k views
-
-
முயல் சுருக்கு கண்கள் - சிறுகதை அகரமுதல்வன் - ஓவியங்கள்: செந்தில் மிகப்பரந்த மாலையில் நடந்துவரும் கிழவருக்கு, மெலிந்த அந்தியின் ஒளி மேற்கில் இருந்து கூசியது. ஒரு சாயலில் கண்களை மூடித் திறந்தார். கோடுபோல நடந்துபோகும் தனது நிழலை ஊடறுத்துப் பறக்கும் மணிப்புறாவைப் பார்க்க அவருக்குத் தோன்றவில்லை. மணிப்புறாவின் அலகில் கிழவர் தொங்கி நின்றதைப்போல அந்தரத்தின் அழகு நிழல் காட்டியது. பாலையின் குரலாகத் தொய்வற்று முன்னேறும் அவரின் பின்னே, நடந்துபோகும் அமலனின் வலதுபக்கத் தோளில் தொங்கிக் கொண்டிருக்கிறது உடும்பு. மூச்சிரைக்க நடக்கும் அவன் காலடிக்கு இடையில் காடு பெருகுகிறது. கிழவர், காலைக் கழுவி, குதிக்காலைத் திருப்பிப் பார்த்து வீட்டுக்குள் சென்றார். உடும்பை வ…
-
- 0 replies
- 2.9k views
-
-
நானும் என் ஈழமும் 5 கடந்த ஞாயிறு நடந்த நாட்டுப்பற்றாளர் தினம் மனதில் பல நினைவுகளை விதைத்து சென்றுவிட்டது. என் வாழ்வில் சந்தித்த சிலர் தம்மை பற்றி பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்துவிட்டு சென்றுவிடுவார்கள். இவர்களை பார்த்து பெருமைபடுவதா இல்லை வருத்தப்படுவதா? "என்ன ஆனாலும் சரி பபா படிச்சு பெரிய ஆளா வரணும். அதை இந்த முகிலன் அண்ணா பார்க்கணும்" அடிக்கடி என் முகிலன் அண்ணா சொல்லும் வார்த்தை. முதன் முதலில் பட்டமளிப்பு விழாவிற்கு மேடையேறிய போது , என்னை அறியாமல் என் கண்கள் முகிலன் அண்ணா இருக்கின்றாரா என பார்வையாளர்களை பார்த்தது. இன்றுவரை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாத விடயங்களில் இதுவும் ஒன்று. எப்பொழுது நாங்கள் ஊருக்கு சென்றாலும் முகிலன் அண்ணாவை பார்க்காமல் …
-
- 17 replies
- 2.9k views
-
-
அதிகாலை நேரம்.. சிறைக்கதவுகள் தட்டப்படும் சத்தம் கேட்டு கண்விழித்தான் குட்டிமணி. சிறைவாழ்க்கையில் சிறைக்கதவுகள் தட்டப்படுவதும் திட்டு விழுவதும் ஒன்றும் புதியவை அல்ல. ஆனால் அன்று அது வழமைக்கு மாறாக இருப்பதை குட்டிமணி உள்ளுணர்வால் உணர்ந்திருந்த போதிலும் வழமை என்றே எண்ணிக்கொண்டான். "அடோ.. பறத் தெமழ.. தம்ச ஒயா ஒக்கம கொட்டி நெய்த.." என்று சிங்களத்தில் திட்டிக்கொண்டு முகமூடிக் கும்பல் ஒன்று கொழும்பு வெலிகடையில் இருக்கும் சிறையின் சிறைக் கதவுகளை உடைத்துத் தள்ளிக் கொண்டு உட்புகுந்து கொண்டனர். "இங்க யாரடா குட்டிமணி" என்று ஒருவன் சிங்களத்தில் கத்த.. மாத்தையா.. "எயா மேக்க இன்னே.." என்று காவலுக்கு நின்ற சிங்களச் சிறைக்காவலன் காட்டிக் கொடுக்க குட்டிமணி, கொலைவெறியோடு அவனை தேட…
-
- 8 replies
- 2.9k views
-
-
பகுதி 1 'கெதியாக் கதவைப்பூட்டு 'அந்த கட்டையைப்போட்டு இறுக்கிச்சாத்து 'என் இரட்டைச்சகோதரி அவசரப்படுத்தினாள். அவசரப்பட்டு செய்ததாலோ என்னவோ கதவு பூட்டப்படவே இல்லை. 'திராங்கைப்போட்டனியே...ச்சோ சந்திக்கு வந்திட்டாங்கள்'...'கையும் நடுங்குது என்னால் சாத்த முடியேல்லை....'ச்ச்சும்மா இறுக்கி மூடிவிட்டுச் சாய்ந்து நிற்பமா...அவங்கள் போற வரைக்கும்...........!!! அவளைப்பார்த்து நெஞ்சு பதறப் பதறப் பதட்டம் மேலோங்கக் கேட்டேன்.. மிகுதி..... http://www.karumpu.com/post/2009/02/22/eelam1.aspx
-
- 17 replies
- 2.9k views
-
-
மம்மி..... கதைப்புத்தகத்தில் கலந்திருந்த சுஜாதா நிமிர்ந்தாள் மம்மி நான் ஜெயிச்சுட்டேன் மம்மி கையில் கப்போடு கட்டிப்பிடித்த பாலாவை வாரியணைத்து நெற்றியில் முத்தமிட்டாள். கண்கள் கலங்கின. என் செல்லக்குட்டி நீ எப்போதும் ஜெயிக்கணும்டா. படிப்பிலும் எந்த போட்டியாகினும் நீ வெற்றி பெறணும் என் செல்லத்தங்கம் என வாரியணைத்தாள். நான் பெரிய சம்பியனாகினால் என்ன மம்மி தருவீங்க என கண்கள் அகல விரித்து பாலா தாயை அன்போடு கேட்டான். எதுவானாலும் தருவேன்டா எனதன்பு செல்லமே என சுஜாதா வாஞ்சையுடன் கட்டியணைத்து முத்தமழை பொழிந்தாள் என்ன மம்மியோடு கொஞ்சல் என கேட்டுக்கொண்டே வந்த ரமேஷை கண்டதும் செல்லப்பைய்யன் பாலா தனது வெற்றியை தந்தயோடும் தாயோடும் சேர்த்து களித்தான். இருவரும் அவனை மாறி…
-
- 18 replies
- 2.9k views
-
-
1983: ஒரு சில்க் கதை - சிறுகதை சிறுகதை: ஜி.ஆர்.சுரேந்தர்நாத், ஓவியங்கள்: பிரேம் டாவின்ஸி டைரி 1983 18. 1. 1983 `இன்று நானும் ஆனந்தும் மோகனும் சிவாவும் காலேஜ் கட்டடித்துவிட்டு, தஞ்சாவூர் சென்று சில்க் ஸ்மிதா நடித்த `கோழிகூவுது’ படம் பார்த்தோம்... வாழ்நாள் முழுவதும் என் கண்களில் வேறு காட்சி ஏதும் தெரியாமல், சில்க் ஸ்மிதா மட்டுமே நிரந்தரமாகத் தெரிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? படத்தின் டைட்டிலிலேயே சிலுக்கு வெள்ளை நிற தாவணியில், நூற்றாண்டுக்காலம் புதைத்துவைத்திருந்த ஒயினைப் போன்ற போதையூட்டும் கண்களால் பார்த்தபடி, உதட்டுக்குள் சிரித்தபோது, பவுர்ணமி நிலவைக் கன்னத்தில் அடக்கிக்கொண்டு சிரிக்கும் சிரிப்பில் அப்படி ஒரு வெளிச்சம். `பூவே..…
-
- 1 reply
- 2.9k views
-
-
சிவாவும்,கண்ணணும் பள்ளி தோழர்கள் சிறுவயதில் இருந்து ஒன்றாக படித்தார்கள் பெற்றோரும் குடும்ப நண்பர்கள் இதனால் அவர்களின் நட்பிலும் பிணைப்பி அதிகமாக இருந்தது விளையாட்டு,டியூசன் போன்றவற்றிற்கு போகும் போது ஒன்றாக செல்வார்கள். க.போ.த உயர்தரம் இருவரும் கணிதபிரிவில் படிப்பதிற்காக முடிவு செய்தனர் வழமையான அந்த வயதில் இளைஞர்களிற்கு ஏற்படும் காதல்,கள்ள தம் ,பனைமரத்து உற்சாக பானம் போன்ற பழக்கங்கள் ஏனைய நண்பர்களுடன் சேர்ந்து பழகி கொண்டார்கள்,ஆனால் இருவரும் படிப்பில் கவனம் செலுத்தினார்கள்,க.போ.த பரிட்சைகள் முடிந்தவுடன் ஏதோ பயங்கர சாதனை ஒன்றை முடித்த நினைப்பில் அதிகமாக ஊரை சுற்றினாம் கண்ணண்.சிவா தனது படிப்பு முடிந்தவுடன் ஆங்கில வகுப்புகளும்,கோயில்களிற்கு செல்வதும் விரதங்கள் பிடிப்பதா…
-
- 13 replies
- 2.9k views
-
-
நான்காம் தோட்டா - சிறுகதை “பாதுகாப்புடன் வாழ விரும்புபவர்கள், உயிர்வாழவே உரிமையற்றவர்கள்.” பொக்கை வாய் அவிழ்த்துப் புன்னகை உதிர்த்தார் காந்தி. எதிராளியை வாதிட முடியாமற்செய்யும் புன்னகை; துப்பாக்கியுடன் வரும் ஒருவனை, தயங்கச்செய்யும் புன்னகை. டெல்லி டி.ஐ.ஜி-யும், காந்தியின் உதவியாளர் கல்யாணமும் பதிலற்று நின்றிருந்தார்கள். நேற்று போலீஸ் சூப்பரின்டெண்டென்ட், காந்திக்குப் பாதுகாப்பு வழங்குவதைப் பற்றிப் பேசிச் சென்றிருந்தார். காந்திக்கு அதில் விருப்பமில்லை. இது இரண்டாவது முயற்சி. ஏற்கெனவே அல்புகர்க் சாலையில் அமைந்துள்ள அந்த பிர்லா இல்லத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீஸ்காரர்கள் சீருடையின்றி ஆங்காங்கே திரிகிறார்கள் என்பதை காந்தி க…
-
- 0 replies
- 2.9k views
-
-
அந்த மாலைப்பொழுதில்........... மாலைநேரம். பொழுது போகவில்லை. என்ன செய்யலாம் என்று யோசித்தபடியே யாழ்களம், திண்ணைபக்கம் வந்தும் பார்த்தேன். அங்கேயும் இருக்க பிடிக்காமல், வெளியே சென்று கொஞ்சம் ஓடிவிட்டு வரலாமோ என்று யோசித்துவிட்டு, அதற்கான கால்சட்டை, டிசோ்ட்,சப்பாத்து எல்லாம் டிப்டப்பாக போட்டு ஓடத்தொடங்கினேன். குறிப்பிட்ட தூரம் ஓடிவிட்டு திரும்ப வீட்டை நோக்கி ஒடிக்கொண்டிருந்தபோதுதான் கவனிச்சன் சோடி சோடியாய் வெள்ளைகள் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருந்ததை. பார்க்க கண்ணுக்கு குளிர்ச்சியாய் இருந்தது. என் ஒட்டத்தின் வேகமும் கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்தது. முத்தம் அதுதரும் சொர்க்கம். எனக்கும் ஒண்ணு மாட்டுப்படட்டும் இதையே மிஞ்சுடுறேனா இல்லையா என் பார்ப்போம் என மனசுக்குள் வைராக்…
-
- 20 replies
- 2.9k views
-
-
ஒரு கோப்பை காபி - சிறுகதை சிறுகதை: ஜெயமோகன், ஓவியங்கள்: ஸ்யாம் நான் மார்த்தாவைத் தொலைபேசியில் தொடர்புகொண்டபோது, அவள் கணவன்தான் எடுத்தான். மார்த்தா ஓய்வு நாளில் செல்பேசியைப் பயன்படுத்துவதில்லை. அது நீண்ட வார இறுதி. ``ஹாய், நான் சாம்’’ என்றான். என் பெயரைச் சொன்னதும், உற்சாகமாக ``ஹாய், எப்படி இருக்கிறாய்?” என்றான். நான் உற்சாகத்தைக் காட்ட முயன்றாலும் என் குரல் காட்டிக்கொடுத்தது. ``நலமாக இருக்கிறேன்...” என்றேன். “எல்லாம் சுமுகமாகப் போய்க்கொண்டிருக்கிறது.” அவன் ``என்ன ஆயிற்று? நான் தெரிந்துகொள்ளலாமா?” என்றான். ``எடுத்துச் சொல்லும்படி நிகழ்ச்சி ஒன்றும் இல்லை. ஆனால்...’’ என்று தயங்கினேன். ``நான் மார்த்தாவைச் சந்திக்க வேண்டும…
-
- 1 reply
- 2.9k views
-
-
நிம்மதியும் மகிழ்ச்சியும் கிடைக்குமா? ஒரு பெரிய பணக்காரன். அவனுக்கோ மனதில் திருப்தியும் அமைதியும் இல்லை. பணத்தால் அடையக்கூடிய சுகமெல்லாம் அடைந்த பின்னும் அவனுக்குள் ஒரு வெற்றிடம். தன் செல்வமனைத்தையும் ஒரு பெட்டியில் வைத்து அங்கு வந்த ஒரு ஞானியைப் போய்ப் பார்த்தான். அவரிடம், ''சுவாமி, என்னுடைய சொத்து முழுவதையும் எடுத்துக் கொள்ளுங்கள். எனக்கு நிம்மதியையும் மகிழ்ச்சியையும் தாருங்கள். ஞானி சிரித்தார். அடுத்த கணம் அந்தப் பெட்டியைத் தூக்கிக் கொண்டு ஓட ஆரம்பித்தார். செல்வந்தனுக்கோ பயங்கர அதிர்ச்சி. வாழ்நாள் முழுவதும் தேடிய சொத்தை ஒரு போலிச் சாமியாரிடம் கொடுத்து ஏமாந்து போய் விட்டோமே என்ற கவலையுடன் அவரைப் பின் தொடர்ந்து ஓடினான். ஞானி எங்க…
-
- 11 replies
- 2.9k views
-
-
-
பசை வாளி இந்த வார ஒரு பேப்பரில் வெளியான எனது அனுபவ தொடர் கடந்த பேப்பரில் வெள்ளையடித்த மதிலில் தாரால் எழுதியதை படித்திருப்பீர்கள் எனவே இந்த பேப்பரில் சுவரொட்டி(நோட்டீஸ்) ஒட்டியதை பற்றிய ஒரு பதிவு . இதுவும் எண்பதுகளின் ஆரம்பத்து நினைவுதான். இந்த காலகட்டத்தில் முளைத்த பல இயக்கங்களும் தங்கள் தோற்றத்தை அல்லது இருப்பை வெளிக்காட்ட இலங்கையரசை எதிர்த்தும் தமிழ் மக்களிடம் விடுதலை உணர்வை ஏற்படுத்தவும் தினமும் ஏதாவது ஒரு சுவரொட்டி ஊரின் மதிற்சுவர்கள் . சங்ககடை .தாபால்கந்தோர் பாடசாலை .கோயில் சுவர் இப்படி எங்கெங்கு எல்லாம் ஒட்ட முடியுமோ அங்கெல்லாம் ஒட்டியிருப்பார்கள். இப்படி அந்த நாளில் அதிகமானசுவரொட்டி ஒட்டிய இயக்கம் எது என்று ஒரு போட்டி வைத்திருந்தால் அதில்…
-
- 17 replies
- 2.9k views
-
-
என்னை நினைத்தால் எனக்கே வெறுப்பாய் இருக்கிறது நானா இப்படி நடந்து கொண்டேன்...அன்று ஞாயிற்றுக்கிழமை நேரம் கழித்து எழும்பி என்ன இண்டைக்கு மத்தியானம் சாப்பிடலாம் என யோசித்து கேபாப் கடையில கேபாப் வாங்கி சாப்பிடலாம் என தீர்மானித்தேன்[ஒரு கிழமையாய் கேபாப் சாப்பிட ஆசையாய் இருந்தது]...நான் இருக்கும் பகுதியில் துருக்கிகாரர்கள் தான் அதிகம்...மதிய நேரம் வந்ததும் சாப்பாடு வாங்குவதற்கு முதல் கொஞ்ச நேரம் நடப்போம் எனத் தீர்மானித்து நடக்கத் தொடங்கினேன்...நடந்து கொண்டு இருக்கையில் இரு பெண்கள் ஒரு குழந்தையை தள்ளு வண்டியில் வைத்து எனக்கு நேரெதிரே வந்து கொண்டு இருந்தவர்கள் அநேகமாக ரூமேனியர்களாய் இருப்பார்கள் என்னைக் கண்டதும் ஓடி வந்து ஒரு கை சங்கிலியைக் காட்டி அதை வாங்கிக் கொள்ளுமாறு கேட்டார்…
-
- 23 replies
- 2.9k views
-
-
என் இடுப்பில் ஒரு கம்பளிப்பூச்சி! சிறுகதை என் இடுப்பில் ஒரு கம்பளிப்பூச்சி! ஜ.ரா.சுந்தரேசன் உ றுத்தறதை அவர்கிட்டே சொல்லிடலாமா? இதுவரைக்கும் அவர்கிட்டே நான் எதையுமே மறைச்சதில்லை. ஆனா, எங்க மாமி ஒருத்தி சொல்லுவா, சிலதை மறைக்கறதிலே தப்பில்லே... சிலதை மறைச்சுத்தான் ஆகணும்னு! அந்த ரெண்டிலே இது எந்…
-
- 2 replies
- 2.9k views
-
-
அன்பு நண்பர்களே இது என் மனதில் உள்ள முதல் கிறுக்கள், எழுத்து & சொற் பிழைகள் இருந்தால் மன்னித்து அறியத் தாருங்கள் மாலை நெருங்குகின்றது என்பதை குளக்கட்டில் இருந்து நம்மட ஊர் கறுப்பியில் இருந்து பமிலா அண்டர்சன் வரை கிளு கிளு கதைகளை அளந்து விட்டுக் கொண்டிருந்த எங்களை கொக்குகளும் நாரைகளும் போட்ட சத்தம் கன நேரம் அவைகள் கூட்டுக்கு கூட்டமாக பறந்து போவதை திரும்பி பார்க்க வைத்தன. தூக்கணங் குருவிகளும் குளக்கட்டில் நின்ற பனை ஓலைகளில் தொங்கிக் கொண்டிருக்கும் தங்கள் கூடுகளில் இருந்து எங்களின் ஆபாசக் கதைகளை தங்கள் குஞ்சுகள் கேட்கக் கூடாது என்று கூட்டம் கூட்டமாக பறந்து பறந்து கீச்..கீச் என்று கத்திக் கொண்டிருந்தன. வாய்க்கால் ஓரங்களில் காய்த்திருக்கும் நரி பயந்தங்காய்களை ப…
-
- 8 replies
- 2.9k views
-
-
தேக வலை - சிறுகதை சிறுகதை: தமிழ்மகன், ஓவியங்கள்: ஸ்யாம் அம்மாவின் கற்பைச் சந்தேகிப்பது அனிதாவுக்கு வருத்தமாகத்தான் இருந்தது. தொடர்ச்சியான சில சம்பவங்கள், அம்மாவைப் பற்றி அப்படி யோசிக்க வைத்துவிட்டது. கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகி முதல் நுகத்தடியைக் கழுத்தில் சுமக்கத் தொடங்கியிருந்தாள் அனிதா. கொஞ்சம் சரியான வேலை கிடைக்கும்வரை ரமேஷைக் காதலிக்கும் திட்டத்தைத் தள்ளிவைத்திருந்தாள். இந்த நேரத்தில்தான் அம்மாவின் புதிய நடவடிக்கைகளைக் கவனித்தாள். சந்தேகத்துக்கான காரணங்கள் சாதகமாக இருந்தன. அம்மாவின் கைப்பையில் இருந்த அந்த மருந்துச் சீட்டு. அது கருக்கலைப்புக்கான மருந்து என்பதை ‘நெட்’ உதவியால் அனிதா உறுதி செய்திருந்தாள். அடுத்தது, அம்மாவின் கார் டேஷ் போர்டில் இருந்…
-
- 0 replies
- 2.9k views
-