Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. ....................பொதுவாக கணவனுடன் சந்தோஷமாக வாழாத மனைவிகள் எப்போதுமே குடும்பப் படம் கணவனுடன் சேர்ந்து எடுக்கும்போது பழி வேண்டுவதைப் பதிவு செய்ய ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது போல முகத்தை உம் என்று வைத்திருப்பார்கள் என்று பலமுறை கவனித்து இருக்கிறேன். சில பெண்கள் தற்காலிகமாக அந்த வாழ்வியல் அவலத்தை மறைத்து ஒரு புன்சிரிப்பைக் கொழுவிக்கொண்டு புத்திசாலித்தனமாக புன்னகைத்து மறைப்பார்கள். இந்தப் படத்தில அப்படி ஒரு வைக்கல் வண்டில் சாய்ஞ்சு விழ அதில மாட்டினவன் அப்பன் பெயரைக் கேட்ட கதைப்போல ஒரு சந்தேக நிழல் இருந்தது................... Naavuk Arasan ஒரு கேள்வி பல விடைகள் ... இது வரைக்கும் எழுதப்படாத ஒரு கதை, அல்லது பல கதைகள் சில மனிதர்களிடம் இன்னமும் விடை தெ…

    • 0 replies
    • 2.1k views
  2. Started by Kavallur Kanmani,

    வெண்ணிலா வானத்தில் முழுமதி ஒளிவீசிக் கொண்டிருந்தது. அன்று போயா விடுமுறை. எங்கும் கடைகள் மூடப்பட்டிருந்ததால் வீதி வெறிச்சோடிக் கிடந்தது. அந்த அகலமான வீதியில் தன்னந்தனியாக நடந்துகொண்டிருந்த அருணிற்கு சொந்த மண்ணின் காற்றைச் சுவாசிப்பது சுகமாகவே இருந்தாலும் சுதந்திரக் காற்றை எப்போ சுவாசிக்கப் போகிறோம் என்று அங்கலாய்ப்பாகவே இருந்தது. ஜந்து வருடங்களாக திரைகடலோடித் திரவியம் தேடிவிட்டு நேற்றுத்தான் அருண் நாடு திரும்பி இருந்தான். தன் சொந்தமண்ணில் நடைபெற்றுவரும் அவலங்களை அப்பப்போ செய்திகள் மூலம் அறிந்த அருணிற்கு மனதுக்குள் இனம் புரியாத ஏதோ ஒரு உணர்வு. ஒரு விதமாக ஒப்பந்தத்தை முடித்துக்கொண்டு தனது நாட்டிற்குத் திரும்பி வந்தாலும் தன் அன்னையையும் தங்கைகளையும் பார்க்க இன்னும் வழ…

  3. காதல் ‘‘உங்களை காதலிச்சி கல்யாணம் பண்ணிக்கிட்டது எவ்வளவு தப்புன்னு இப்பதான் புரியுது!’’ - முகம் சிவக்க மாலா கத்தினாள். ‘‘இங்க மட்டும் என்னா வாழுதாம்..? அதேதான்! நீ என்னிக்கு என் வாழ்க்கைல வந்தியோ... அன்னில இருந்தே எனக்கு நரகம்தான்!’’ - பிரஷர் எகிற, குதித்தான் கணேசன். ‘‘கோபத்தை சாப்பாட்டுல காமிக்காதீங்க! டிபன் சாப்பிட்டுட்டு போங்க...’’‘‘நீயாச்சு, உன் டிபனுமாச்சு!’’ - விருட்டென வெளியேறினான்.‘‘உங்களுக்கு அவ்வளவுன்னா... எனக்கு மட்டும் மானம், ரோஷம் இருக்காதா?’’ - சடாரென்று கிளம்பிப்போய் காருக்குள் ஏறினாள் மாலா. ஷூட்டிங் ஸ்பாட்டில்... ‘‘ஸ்டார்ட்... கேமரா... ரோல்!’’ ‘‘டார்லிங், உங்களைப் பார்த்த பிறகுதான் என் வாழ்க்கையே பிரகாசமாச்சு! இப்படியே என்னைக்குமே இருந்துடக் கூட…

  4. கம்போடியா பரிசு - சிறுகதை தமிழ்மகன் - ஓவியங்கள்: ஸ்யாம் தோளில் பாந்தமாக அழுத்திய அந்த விரல்கள் சரவணனு டையவை என நினைத்தேன். மிக மிருதுவாக அழுத்திய படி இருந்தன அந்த விரல்கள். எதிரில் அமர்ந்திருந்த ரமேஷ் சிரிக்கவேதான் சந்தேகம் வந்தது. கண்களைத் தாழ்த்தி, அழுத்திய அந்த விரல்களைக் கவனித்தேன். இரண்டு கைகளின் விரல்களிலும் செக்கச் சிவப்பாய் நகப்பூச்சு. திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தேன். இன்னும் சிவப்பாய் உதட்டுச் சாயம் பூசிய கறுப்பு ஸ்கர்ட் போட்ட ஒரு பெண் நின்றிருந்தாள். மேலும் திடுக்கிட்டு எழுந்து நின்றேன். அந்தப் பெண் சிரித்தாள். ``உட்கார்’’ என்றாள் ஆங்கிலத்தில். ராகம்போல இழுத்துப் பேசும் அவளின் உச்சரிப்பு பாணியும், கெஞ்சலான அல்லது கொஞ்சல…

  5. பெருங்கருணையும் பேராற்றலும் உடைய மாவீரராக, சமூக – சமயச் சீர்திருத்தவாதியாக, பொதுவுடைமைவாதியாக, நவீன தொழில்நுட்பவாதியாக, பிரிட்டிஷாருக்குச் சிம்மசொப்பனமாக, மைசூரின் புலியாக…. சிறந்த மன்னராகவும் நல்ல குடிமகனாகவும் வாழ்ந்த ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த மாமனிதர் திப்புசுல்தான். திப்பு சுல்தான் பதவிக்கு வந்தது முதல் இறக்கும் வரை அவரின் முகத்துக்கு முன்னால் சில எதிரிகளும் முதுகுக்குப் பின்னால் பல துரோகிகளும் அவரைத் தாக்கத் தயார்நிலையில் காத்திருந்தனர். திப்பு சுல்தான் தன் மன, உடல், அறிவு வலிமையால் அவர்களைத் தன் வாழ்நாள் முழுவதும் ஒடுக்கியபடியே இருந்தார். உலகில் எந்தப் பேரரசருக்கும் இல்லாத நெருக்கடிகள் திப்புசுல்தானுக்கு இருந்தன. அவற்றைத் தகர்த்தபடியே அவர் தன்னை மைசூரில் நில…

  6. Started by நவீனன்,

    உறவுகள் "பார்த்தீங்களா...எங்கண்ணான்னா அண்ணாதான்...'' தேவகி அவள் கணவன் ஸ்ரீநிவாசனிடம் துள்ளலோடு சொன்னாள். கையில் அந்தச் சேலை பளபளத்துக் கொண்டிருந்தது. எவ்வளவு அற்புதமான டிசைன்...? புடவை தேர்வு செய்யவும் ஆழ்ந்த ரசனையுடன் கூடிய ஒரு கற்பனை வளம் வேண்டும்தான். நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள் தேவகி. பெண்களுக்கு எத்தனை சேலை வாங்கினாலும் திருப்தியே வருவதில்லை. புதிது புதிதாய்க் கட்டிக் கொள்வதில் அப்படியொரு உற்சாகம். பீரோவைத் திறந்தால், காத்திருந்ததுபோல் ஒன்வொன்றாய் வழுக்கி வழுக்கிக் கீழே விழும் புடவைகளைப் பார்த்துக் கொண்டேயிருக்கலாம். ஸ்ரீநிவாசன், கண்ணாடி முன் நிற்கும் அவளைப் பார்த்தான். புடவையினால் அவளுக்கு அழகா? அவளால் புட…

  7. யாருக்கும் என்னை நிரூபித்துக் காட்ட வேண்டிய அவசியங்கள் எதுவும் எனக்கில்லை. அப்படி ஒரு நிலை ஏற்பட்டிருந்தால் அது தேசம் நெட், ரயாகரன் என்னைப் பற்றி எழுதத் துவங்கிய போதே நான் இதை எழுதியிருப்பேன். தனிநபர் தூற்றல்கள், வசவுகள், இது பற்றி நான் கவலைப்பட்டிருந்தால் ஆதவன் தீட்சண்யாவுக்கு மட்டும் நான் பத்து பதில் கட்டுரைகள் எழுதியிருக்க வேண்டும். சோபா சக்தி எழுதியிருக்கும் சமீபத்திய பதிவுகளும் சரி, ஏற்கனவே எழுதியவர்களும் சரி என் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகளில் சில உண்மைகளும் பல பொய்களுமாக கலந்து கட்டி எழுதுகிறார்கள். சோபா சக்தியைப் பொறுத்தவரை சில விஷயங்களில் நான் பேசாததை பேசியதாகச் சொல்கிறார். அவர் நிறுவ நினைக்கும் விம்பத்தைக் கட்டமைக்க நான் எழுதிய கட்டுரைகளில் இருந்து சில வரிக…

    • 9 replies
    • 2.1k views
  8. நன்றி: விகடன் இணைப்பு: http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=90628 எங்கள் ஊர் ரொம்ப அழகான ஊர். எங்கள் அக்ரஹாரத் தெரு ரொம்ப அழகானது. எங்கள் அக்ரஹாரத்து மனிதர்களும் ரொம்ப அழகானவர்கள். அழகு என்றால் நீங்கள் என்னவென்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்களோ, எனக்குத் தெரியாது. என்னைப் பொறுத்தவரை ஒன்றின் நினைவே சுகமளிக்கிறது என்றால்... அது ரொம்ப அழகாகத்தான் இருக்க வேண்டும். 35 வருஷங்களுக்கு முன்னால் அங்கே அந்தத் தெருவில் ஒரு பழங்காலத்து வீட்டின் கர்ப்பக் கிரகம் மாதிரி இருளடைந்த அறையில் பிறந்து, அந்தத் தெருப் புழுதியிலே விளையாடி, அந்த மனிதர்களின் அன்புக்கும் ஆத்திரத்துக்கும் ஆளாகி வளர்ந்து, இப்போது பிரிந்து, 25 வருஷங்கள் ஆன பிறகும் அந்த நினைவுகள், அனுபவங…

  9. வேலையால் வந்த களைப்பு தீர ,தேனீர் குடிப்பதற்காக கேத்தலின் பட்டனை அழுத்தியவன் ,கப்பை கழுவி சமையலறை மேசையில் வைத்து விட்டு தேயிலை பாக்கை தேடினான்.வழமையாக பாவிக்கும் லிப்டன் தீர்ந்து போயிருந்தது.டில்மா தேயிலை பெட்டி அவனைபார்த்து சிரித்து"ஆபத்துக்கு பாவமில்லை என்னை குடித்து பார்" என்பது போல் தோன்றியது. எத்தனை தரம் சொன்னாலும், உவள் சிங்களவனுக்கு பிழைப்பு காட்டுறது என்றே அடம் பிடிக்கிறாள் என புறுபுறுத்தபடியே அக்கம் பக்கம் பாரத்தவன் ,தன்னை ஒருத்தரும் கவனிக்கவில்லை என்று உறுதிபடுத்திக்கொண்டு டில்மா தேயிலை பக்கற்றை கோப்பையினுள் போட்டு சுடுதண்ணியை ஊற்றி ஊற வைத்து பிளிந்தெடுத்த தேயிலை பக்கற்றை குப்பை தொட்டியில் எறிந்தவன், பாலை கலந்து ருசிக்கத் தொடங்கினான்,மனம் குணம் எல்லாம…

  10. தமிழ்த் துரோகி — பூ அரசு கையை பிளேட்டால் வெட்டி, கூட்டணிக்காரரிற்கு பொட்டு வைத்து விட்டு தமிழீழம் கிடைக்கும் வரை கலியாணம் கட்ட மாட்டேன் என்று அறுவைதாசன் சபதம் எதுவும் செய்யவில்லை. ஆனாலும் அவனுக்கு வயது வட்டுக்குள்ளே போன பிறகும் கலியாணம் நடக்கவில்லை. எந்தப் பெட்டையும் அவனை ஏறெடுத்து பார்த்ததில்லை. "தும்பிக்கையான் துணை" திருமண சேவை நடத்தும் சுந்தரம் சித்தப்பா காட்டும் பெட்டைகளின் படங்களை இவனுக்கு பிடிக்கவில்லை. அவனின்ரை தாய் தான் எங்கடை பரம்பரையின்ரை பேர் உன்னோடை முடியிறதோ எண்டு அழுது குழறி விடாமல் தொடர்ந்து பொம்பிளை பார்த்துக்கொண்டு இருந்தாள். சலரோகம், ரத்தக்கொதிப்பு தான் உங்கடை பரம்பரைச் சொத்து. இதுவெல்லாம் ஒரு பரம்பரை என்று அறுவை தாயிடம் எரிந்து விழுந்தாலும் யா…

  11. ஊர் கோவில் விரதம் என்று ஐக்கிய இராச்சியத்தில் சின்னத்துரை வீட்டில் பறக்கும், நீந்தும், நாலு காலில் ஓடும் உயிர் இனங்களை பொரித்து, வறுத்து, அவித்து உண்ண தடை. வேலையால் திரும்பிய சின்னத்துரையரை சவர்மா கடை வாசலடியில் வந்த வாசம் நிறுத்தி, அவரது வயிற்றிற்கும் மூளைக்கும் போரை தொடக்கி வைத்தது. அந்த போரில் அவரது தொந்தி வயிறு உடன் வெற்றி பெற்றது. சின்னா: ஒரு கோழி சவர்மா. நல்ல உறைப்பா போடுங்கோ. சவர்மா: நல்ல உறைப்பாவாகவா? சின்னா: ஓம். நாங்கள் நல்ல உறைப்பு சாப்பிடுவம். சவர்மா: நீ ஸ்ரீ லங்கனா? சின்னா: இல்லை, ஸ்ரீ லங்காவில் இருந்து தப்பி வந்த ஒரு ஈழ தமிழன். நீ எந்த நாடு? சவர்மா: லெபனான். ஸ்ரீ லங்கா பிரச்சினையை பற்றி கேள்வி பட்டிருக்கிறேன். ஏன் உங்களை கொல்…

    • 12 replies
    • 2.1k views
  12. Started by பொன்னி,

    என் பிரியமான தோழிக்கு, நான் நலம். நீயும் நலமுடன் இருப்பாய் என்று நம்புகிறேன். குழந்தைகள் நலமாய் இருக்கிறார்கள். என்னுடன் குப்பை கொட்ட வந்தவளும் நலமாய் இருக்கிறாள். என்ன, உங்களை கட்டி எனனாத்தை கண்டேன் என்று இடைக்கிடை சொல்லி வெறுப்பேத்துகிறாள். இது உங்கள் பெண் குலத்துக்கே உரிய புராணம் என்று என்னால் புறக்கணிக்க முடியவில்லை. இன்று ஒரு படம் பார்த்தேன். அதன் பலன் தான் இந்த கடிதம். செரனின் போக்கிசம். நேரம் இருந்தால் நீயும் எடுத்து பார். நான் தனிமையில் இருந்த போது, நீ அனுப்பும் கடிதங்களும், இன்று என்ன கறி என்ற கிண்டலும், என் வருசங்களை நிமிடங்கள் ஆக்கின. அவற்றில் சிலவற்றை நான் இன்னமும் பொக்கிசமாய் வைத்திருக்கிறேன். சில வேளை எடுத்து மீண்டும் படிப்பது உண்டு. என்னை அறியாம…

    • 16 replies
    • 2k views
  13. கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்தும் சிறுகதைப் போட்டி – 2018 அகரன்November 02, 2018 in: நிகழ்வுகள் கனடாவில் கடந்த 25 வருடங்களாகப் பல்வேறு வழிகளில் கலை, இலக்கிய சேவையாற்றிவரும் கனடா தமிழ் எழுத்தாளர் இணையம், தனது 25வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தும் உலகளாவிய சிறுகதைப் போட்டி. பரிசு பெறும் எழுத்தாளர்களுக்காகப் 16 பரிசுகள், மொத்தம் இலங்கை நாணயம் 170,000 ரூபாய்களும்;, சான்றிதழ்களும் காத்திருக்கிறன. பரிசுபெறுகின்றவர்கள் வாழும் நாடுகளில் உள்ள நாணயப் பெறுமதிக்கு ஏற்ப அவர்களுக்குரிய பரிசு, நாணய மாற்றம் செய்யப்படும் முதலாவது பரிசு இலங்கை ரூபாய்கள் – 50,000 (அமரர் பண்டிதர் எவ். எக்ஸ். அலெக்ஸாந்தர் ஞாபகார்த்தமாக.) இரண்டாவது பரிசு இலங்கை …

  14. 'இஞ்சரப்பா இவ போன்வீட்டக்கா குரல் போல கிடக்கு. என்னென்டு ஒருக்கா போய் பாருங்கோவன்' பக்கத்தில் நித்திரையிலிருந்த கணவனை எழுப்பினார் லதா. லதாவிற்கு பக்கத்து வீட்டு அக்காவின் மேல் எப்போதுமே தனி அன்பு. லதாவிற்கு தென்மராட்சியில் பிறந்த வீடு, வாழ வந்ததோ வடமராட்சியில். வந்த புதிதில் தங்கை போல அனைத்து கொண்டவர் தான் இந்த போன் வீட்டு அக்கா. வசதியில் எந்தவொரு குறையும் இல்லாத குடும்பம். ஊரிலேயே முதன் முதலில் தொலைபேசி வைத்திருந்தவர்கள் என்பதால் 'போன்வீட்டுக்காரர்' ஆகிப்போன குடும்பம். 'இவன் ராஜாவையும் எழுப்பணை. ராத்திரில வந்து கூப்பிடுறா என்ன பிரச்சனையோ' என மகனையும் எழுப்ப சொன்னபடி படி படுக்கையில் இருந்து எழும்பி வாசலுக்கு வந்தார் லதாவின் கணவர் திருநாவுக்கரசு. 'என்னக்கா …

  15. வெட்டுக்கத்தி - சிறுகதை குமாரநந்தன் - ஓவியங்கள்: ஸ்யாம் அவர்கள் வெகுநேரம் அங்கே சுற்றிக்கொண்டிருந்தார்கள். வெயில் மிதமாக இருந்தது. காலை நேரத்தின் அடையாளமாய் சீருடை அணிந்த பள்ளி மாணவர்கள், மாணவிகள் சாலையில் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் கறிக்கடையைத் திரும்பவும் நோட்டமிட்டார்கள். இளைஞன் ஒருவன் கறி வெட்டிக்கொண்டிருந்தான். மெள்ள கடைப் பக்கம் நகர்ந்து சைகை காட்டினார்கள். அந்த இளைஞன் ஏறிட்டுப் பார்த்துவிட்டு ‘காசு கொடு’ என்பது போலக் கையை நீட்டினான். வந்த இருவரில் வெள்ளைச் சட்டை அணிந்திருந்தவன் உள் பாக்கெட்டில் கைவிட்டு நூறு ரூபாய் நோட்டுகளை எடுத்து நீட்டினான். இளைஞன் பணத்தை வாங்கி, கறி வெட்டும் கட்டைக்கு அப்பால் இருந்த பெட்டியில் வ…

    • 1 reply
    • 2k views
  16. டொமினிக் சிறுகதை: பவாசெல்லதுரை, ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு இரண்டாம் போகம் நெல் விளைந்து முற்றி, நிலம் பொன்னிறமாக உருமாறியிருந்தது. பார்க்கிற எவரையும் வசீகரிக்கும் அழகு. தன் அழகில் தானே பெருமிதம்கொள்ளும் தருணம், அறுவடைக்குக் கொஞ்சம் முந்தைய நாட்களில்தான் ஒரு வயலுக்கு வாய்க்கிறது. வழக்கத்தைவிட இன்று அதிகாலை விஜயத்தில் எனக்கு நிதானம் கூடியிருந்தது. வரப்புகளில் பனியில் நனைந்த விதவிதமான வண்ணங்களில் புடவைகள். தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு அவை வண்ணக்கோடுகள். கூர்ந்து கவனிக்கிறேன். எல்லா புடவைகளின் நுனியும் நெல்வயலின் ஒரு மையத்தில் குவிந்திருக்கிறது. இந்தக் கனவின் விரிவு நம்ப முடியாததாகவும் ஆச்சர்யங்களைக் க…

  17. அன்று மேலதிகாரி வரவில்லை அதனால் சுரேசும்,புஞ்சி பண்டாவும் அதிகமாகவே தங்களது தேநீர் இடைவேளையை எடுத்து கொண்டனர் இருவரும் ஒரே நாடு ஆனால் வடக்கு தெற்கு என்று இரு துருவங்களிள் இருந்து குடிபெயர்ந்து சிட்னியில் ஒரு வேளை ஸ்தலத்தில் தொடர்ந்து ஜந்து வருடங்களாக பணி புரிகிறார்கள்.முதலில் வேலை ஸ்தலத்தில் சேர்ந்தவன் சுரேஷ் தான் பின்பு இணைந்தவர் புஞ்சிபண்டா. பல இனமக்கள் பணி புரியும் அந்த ஸ்தலத்தில் புஞ்சிக்கு சுரேசை முதலில் கண்டவுன்ட ஏதோ ஒரு வித உணர்வில் தான் சிறிலங்கா என்று சொல்லி தன்னை அறிமுகபடுத்தினான் சுரேசும் பதிலிற்கு தானும் சிறிலங்கா என்று சொல்லி விட்டான் ஆனால் அவன் தமிழா,சிங்களமா என்று அறிய ஆவலா இருந்தான். அதை போல் புஞ்சியும் ஆதங்கபட்டு தான் இருந்திருப்பான் இருவரும் மா…

    • 8 replies
    • 2k views
  18. ஏப்ரல் 1994 இல் இந்தியா டுடேயில் வெளிவந்த ஈழத்து சிறந்த எழுத்தாளர் 'உமா வரதராஜன்' அவர்களால் எழுதப்பட்ட பலரால் வாசிக்கப்பட்டு வேறு சில மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்ட சிறுகதை. கதையின் பின்புலம் பிரேமதாசா காலத்தை போன்று தோற்றினும் இன்றைய காலத்தையும் வென்ற சிறு கதை ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- அரசனின் வருகை உமா வரதராஜன் மூடுண்ட அந்த நகரத்துக்கு அரசன் வரும் நாள் அண்மித்துக் கொண்டிருந்தது. யுத்தத்தில் இடிந்து போன கோயிலைக் கட்டும் பணிகளை ஆரம்பித்து வைக்க அவன் வருவதாகச் சொன்னார்கள். அரசனின் வருகை பற்றிய அறிவிப்புகளை …

  19. அது மாசி மாசி மாதத்தின் ஆரம்ப நாட்கள் ... சுதந்திர தினத்தன்று புதுக்குடியிருப்பில் தனது கொடியினை ஏற்றியே தீருவேன் என்று கங்கணம் கட்டி நின்ற சிங்கள படைகளுக்கும் வீரதலைவனின் சொல் கேட்டு மக்களை காக்க நின்ற மானமா வீர்களுக்கும் இடையை கடும் சண்டை புதுக்குடியிருப்பை சூழ இடம்பெற்று கொண்டிருந்தது. வேவு தகவல்கள் மூலம் பகைவனின் எறிகணை சேமிப்பு இடம் பற்றிய தகவல் அறிந்த புலிகள் படையணி ,அதனை கைப்பற்றவும் எதிரிக்கு தக்க பதிலடி கொடுக்கவும் ஒரு வலிந்த தாக்குதலுக்கு திட்டமிட்டனர். அதில் ஒரு மகளிர் அணியில் பூங்கொடியும் இணைக்கபட்டாள். அன்று அவள் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை. கொடிய பகைவனுக்கு பதிலடி கொடுக்கும் அந்த தருணத்துக்காக அவள் ஏங்கிய பலன் அன்று அவளுக்கு கிடைத்திருந்தது. அ…

  20. அந்த நீண்டு இருக்கும் வயல் வரப்போடு ஒட்டிய குறுகலான பாதை அதோடு ஒட்டி இருக்கும் தாமரைக்குளத்தை தாண்டியவுடன் அந்த பாதை விரிந்து ஊரி றோட்டில் ஏறுகிறது.மழை அடிச்சு வெள்ளம் வந்தால் குளத்துக்கும் வயலுக்கும் வித்தியாசம் தெரியாது. .இந்த மெயின் றோட்டில் இருந்து இந்த பரந்த வயல் வெளியூடாக ஊரி றோட்டில் தொடங்கும் இடத்தில் இருக்கும் ஊர் மனைகளை பார்த்தால் மிகவும் தூரத்தில் இருப்பது மாதிரி தான் தெரியும். வயல் விளைச்சல் இல்லாத காலங்களில் குளமும் வற்ற வயலும் சும்மா கிடக்க ; அதனூடாக குறுக்கலாக நடந்து சிலர் தூரத்தை குறுக்க முனைய, வேறு சிலர் அதை தொடர ,,தொடர அங்கு ...அதனூடாக பாதை ஒன்று புதிதாக மலர்ந்து விடும். அதனூடாக தான் கொஞ்ச நாளாக .... .....கொஞ்ச நாளாக எ…

    • 8 replies
    • 2k views
  21. விகடனில் வெளியான இந்த கதை எனக்கு பிடிச்சிருந்தது.. ஆறாவது அறிவு கழுத்துப் பட்டையை இறுக்கிக்கொண்டு இன்னொரு முறை கண்ணாடியில் முகம் பார்த்தார் டாக்டர் ராம்நாராயண். மோவாயில் நரை தொட்டு அடர்த்தியாகப் படர்ந்திருந்த தாடியையும், கொஞ்சமாக முன் பக்கம் வெற்று மண்டையைக் காட்டிவிட்டுச் சரிந்த கேசத்தையும் வாஞ்சையாகத் தடவினார். மூப்பின் அடையாளங்கள் துவங்கிய, ஆராய்ச்சி, பரிசோதனை என்று கழிந்த சுவாரஸ்யமற்ற வாழ்க்கைச் சுழற்சியில், எந்தப் பெண்ணும் ஆர்வம் காட்டாத அந்த முகத்தின் மேல் திடீரென்று பிரியம் வந்தவர் போல் பராமரித்தார். இன்னும் அரை மணியில் பத்திரிகைக்காரர்கள், தொலைக்காட்சி நிலையங்கள், செய்தி நிறுவனங்கள் என மொய்த்து புகைப்படம் எடுத்துத் தள்…

    • 5 replies
    • 2k views
  22. காத்திருப்பு தமிழ்நதி ஓவியம் : ஜீவா புகைப்படங்கள் ; அனாமிகா வெயில் எரிக்கும் ஜூலை மாதத்தின் பின்மதியப் பொழுதொன்றில், அப்போதுதான் பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பி வந்து சாப்பிடவென்று குசினிக்குள் அமர்ந்த கோகுலனை, அம்மாவிடமிருந்து பிரித்து ஜீப்பினுள் இராணுவம் எறிந்தபோது அவனுக்கு வயது பதினேழு. உள்ளங்கைக் குழி கொள்ளுமளவு எண்ணெய் வைத்து வாரினாலும் அடங்காத அடர்ந்த தலைமயிரில் ஒருவனும் கால்களில் இருவருமாகப் பிடித்துத் தூக்கிக்கொண்டுபோய் எறிந்தார்கள். அப்போது கோகுலனின் அப்பா வயலுக்குப் போயிருந்தார். கதறியபடி ஜீப்பினருகில் ஓடிச்சென்ற ஞானம்மாவை ஒருவன் ஓங்கி அறைந்தான். உலர்ந்த சருகொன்று கிளையிலிருந்து மண்ணில் வீழ்வதென அவர் ஓசையெழுப்பாது புழுதியில் சரிந்தார். ஜீப்பின…

  23. (1) பெண். அவளுக்குள்தான் எத்தனை சொரூபங்கள். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு அனுபவமாய், பாடமாய், படிப்பினையாய், பாவமாய், கதையாய், காவியமாய்.. பெண்னை நம்பாதே.. அவள் சிரித்துச் சிரித்தே கழுத்தாறுப்பாள் என்பவர் ஒருபுறம். பெண் இல்லாமல் ஒரு மனித வாழ்வா? வாழ்வின் பாதியே அவள்தானே என்பவர் மறுபுறம். ஆனால் அவன் அவளை அன்பின் அவதரிப்பாய் நினைத்தான். வாழ்வின் ஆதாரமாய் ஆராதித்தான். ஆனால் இன்று அவனது நினைவுகள் கனவுகளாய் கசங்கிவிட்டன. ஆராதனைகள் வெறும் அலட்டல்களாய் அருகிவிட்டன. ஆயிரமாயிரமாய் ஊற்றெடுத்த எண்ணக் கற்பனைகள் யாவும், அந்தரத்திலே அவலட்ணமாய் அவன் முகத்தில் சேறாய் வந்தொட்டி நாறியபோது, அதைத் தாங்க முடியாது ஆற்றாமையால் துடித்தான். உணர்வுகளின் சரிவைத் தாங்க …

    • 15 replies
    • 2k views
  24. அக்காவுக்கும் பொதுமன்னிப்புக் கிடைக்கும். 19வது வருடத்தை இவ்வருடத்தோடு நிறைக்கிறது காலம். மகனுக்கு இப்போ 18வயது ஆரம்பமாகப் போகிறது. அவன் எப்படியிருப்பான் என்னென்ன கனவுகளுடன் பறந்துதிரிவான் என்றதெல்லாம் அறிய வேணும் போலும் அவனைப் பார்க்க வேணும்போலையும் இருக்கும். எல்லா அம்மாக்களைப் போலவும் அவளது குழந்தையைப் பற்றி ஆயிரமாயிரம் ஆசைகள். ஆனால் எல்லா ஆசைகளும் உள்மனசுக்குள் சுனாமியலையாய் அடிக்க கண்ணீரால் நனையும் அவளது கனவுகளை யாராலும் புரிந்து கொள்ள முடிவதில்லை. இத்தனை வருடங்களிலும் எத்தனையோ பேர் உள்ளே வந்தார்கள் போனார்கள். அவளும் தனக்கும் ஒருநாள் விடியுமென்றுதான் காத்திருந்தாள். தீர்ப்பு ஆயள்தண்டனையென்றாகிய பின்னர் எல்லாக் கனவுகளும் ஒரேயடியாய் சாம்பலாகிப்போச்சு. இருளுக்…

    • 8 replies
    • 2k views
  25. வடுகநாதம் சிறுகதை: என்.ஸ்ரீராம், ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு இருள் அடர்ந்த பனி இரவு. நடுச்சாம வேளை. தோட்டத்து வீட்டின் உள் அறையில் படுத்திருந்த நான் ஏதோ சத்தம் கேட்டு, கண்விழித்தேன். நாய்கள் குரைப்பதும், ஆட்கள் விசில் அடிப்பதும் மாறி மாறிக் கேட்கத் தொடங்கின. கிழக்குப்புறத்தில் இருந்துதான் சத்தம். நான் அவசரமாக எழுந்து ஆசாரத்துக் கயிற்றுக்கட்டிலில் அசந்து தூங்கிக் கொண்டிருந்த அப்பாவை எழுப்பினேன். எழுந்ததும் ஏதோ ஆபத்து என உணர்ந்துகொண்டார். வெளித்திண்ணை விட்டத்தில் செருகியிருந்த குத்தீட்டியை உருவி எடுத்துக்கொண்டு, விசில் சத்தம் கேட்கும் கிழப் புறத்துத் தோட்டத்தை நோக்கி ஓடினார். அதற்குள், வடக்கே செங்கா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.