கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
கடலில் இருந்து வீசிய உப்புக்காற்று உடலுக்கு இதமாகவும் மனசுக்கு சுகமாகவும் இருந்தது. கடற்காற்றை அளைந்தபடி வண்டி பாலத்தின்மீது சென்றது. ஆயத்தடியில் நிறுத்தும்படி குரல் கொடுத்தேன். என்னுடைய பத்தொன்பது வயது மகனும் கூடவே இறங்கிக் கொண்டான். மகளும் மனைவியும் வண்டியிலே வீடு நோக்கிய பயணத்தை தொடர்ந்தார்கள். கைதடியையும் கோப்பாயையும் இணைக்கும் பாலத்தின் கைதடி அந்தலைக்குப் பெயர் ‘ஆயம்’. கடலின் கைதடிக் கரையோரமாக கோடைகாலத்தில் பெருமளவு உப்பு விளைந்திருக்கும். இந்த உப்பினை அறுவடைசெய்தோரிடம் அந்தக் காலத்தில் வரி அறவிடப்பட்டதாம். அந்தக்காலம் என்பது ஆங்கிலேயர் ஆண்டகாலம். உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் தீர்வை ‘ஆயத்தீர்வை’ என அழைக்கப்பட்டதாகவும், அது வ…
-
- 2 replies
- 890 views
-
-
புலரியில் மறைந்த மஞ்சள் கடல் – ப.தெய்வீகன் மயானத்துக்குப் பின்னாலிருந்த மஞ்சள்நிற கடுகு வயலிலிருந்து வந்த காற்று கருங்கல் மதிலின் மேலால் பாய்ந்து உள்ளே நுழைந்தது. அந்தியின் சூரியக்கதிர்களில் அசைந்துகொண்டிருந்த பெருமரங்களில் மோதியது. படர்ந்துநின்ற கொரம்பியா மரங்கள் சின்னதொரு ஆட்டத்தோடு அசைவை நிறுத்திக்கொண்டன. கல்லறைகளுக்கு அருகில் வரிசையாக நின்ற எப்கரிஸ் பூக்கள் தங்கள் இதழ்களை தரையில் சொரிந்தன. பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த சித்திர வட்டக்கற்களுக்கு கீழே பிறப்பும் இறப்பும் இரங்கற் கவிதைகளும் பதித்த கல்லறைகளின் மீது சில இலைகள் பறந்துசென்று விழுந்தன. நான் அந்த மயானத்தின் தென்கிழக்கு மூலையிலிருந்த கல்குடிசைக்கு முன்னால் வேலைக் களைப்போடு அமர்ந்திருந்திருந்து எச்சிலில் மு…
-
- 2 replies
- 938 views
-
-
நவீனத் தமிழ் இலக்கிய நட்சத்திரமாக ஆவதற்கு பத்து டிப்ஸ்கள் (ஆண் எழுத்தாளர்களுக்கானது) 1. நான் பிறக்கும்போதே பேனாவுடன் பிறந்தவன்; எனது மூதாதைகள் லத்தீன் அமெரிக்கா/ ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நவீன எழுத்தாளர்கள். 2. தமிழில் எனக்கு முன்னோடிகள் கிடையாது; நான் தமிழ் இலக்கியங்களை வாசித்ததுமில்லை, வாசிப்பதுமில்லை; என்னைத் தவிர தமிழ் இலக்கியத்தில் கொம்பன்கள் எவனும் கிடையாது. 3. தமிழில் எனக்கு முன்பு கவிதையோ சிறுகதையோ இல்லை; நகுலன் மட்டுமே அதற்கான முயற்சிகளைச் செய்து பார்த்துத் தோற்றுப் போயிருந்தார். -இவை நீங்கள் விட வேண்டிய அதிரடி அறிக்கைகள். இனி, உங்களுக்கான தகுதிகள்: 4. தமிழ்ச் சொற்களையும் வாக்கியங்களையும் இலக்கணப் பிழையோடு எழுதத் தெரிந்திருக்க வேண்டும். உப்பு…
-
- 3 replies
- 1k views
-
-
பயிற்சி ‘‘ஏண்டா ஆறுமுகம்... உன் மேல நம்ம முதலாளி நிறைய மரியாதை வச்சிருக்கார். அவர்கிட்ட உன் மகன் சோமுவுக்கு டிரைவர் வேலை கேட்டா நிச்சயம் தருவார். நல்ல வருமானம் கிடைக்கும். அதை விட்டுட்டு வேற ஒரு கம்பெனியில அவனை நைட் வாட்ச்மேன் வேலைக்கு விட்டிருக்கியே... இது நல்லாவா இருக்கு?’’ என்றார் நண்பர் சம்பத்.ஆறுமுகம் அர்த்தப் புன்னகை பூத்தார்.‘‘நம்ம கம்பெனி பஸ் எல்லாமே மதுரை, திருச்சி, கோவைன்னு நைட் சர்வீஸ்தான் ஓடுது. என் மகன் சோமு நல்லாத்தான் வண்டி ஓட்டுறான். ஆனா, ராத்திரி பயணத்துல வண்டி ஓட்ட நம்மை மாதிரி பயிற்சியும் பக்குவமும் தேவை. ஒரு வருஷம் இந்த வாட்ச்மேன் வேலையைப் பார்த்தா என் மகனுக்கு ராத்திரி கண் விழிக்கிற பயிற்சி வந்துடும். அப்புறம் அவன் நம்ம கம்பென…
-
- 1 reply
- 1.1k views
-
-
வெள்ளிப்பாதசரம்!… ( சிறுகதை )…. – இலங்கையர்கோன் (த. சிவஞானசுந்தரம்) அகரன்June 17, 2018 சிறப்புச் சிறுகதைகள் (2) – மூத்த படைப்பாளர்களின் சிறுகதைகளை இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் – இலங்கையர்கோன் எழுதிய ‘வெள்ளிப்பாதசரம்’ என்ற சிறுகதை இடம்பெறுகின்றது. தன் வீட்டுக்கு ஒரு அடுக்குப் பெட்டியும் தனக்கு ஒரு தையற் பெட்டியும் வாங்கவேண்டும் என்று நினைத்து வந்தவளுடைய உள்ளம் விம்மும்படி கோவில் வீதியெல்லாம் பெட்டிகளும் கடகங்களும் மலைமலையாய்க் குவிந்திருந்தன. குஞ்சுப்பெட்டி, அடுக்குப்பெட்டி, தையற்பெட்டி, மூடற்பெட்டி, பின்னற்பெட்டி… ஊ! எத்தனை வகை! அருகில் மாட்டை அவிழ்த்து அதன் வாயில் பொங்கிய நுரையை வழித்து அதன் மினுமினுக்கும் கரிய முதுகில் தேய்ப்பதில் க…
-
- 0 replies
- 6.5k views
-
-
அம்மாவின் கைமணம்! கல்யாணத்துக்கு இன்னும் இருபது நாள்தானப்பா இருக்கு.. இன்னமும் ஒங்க சித்தப்பா, அத்தைகளுக்கு பத்திரிகை கொடுக்கலையே..'' ""என்னப்பா செய்றது. நேரம் சரியா இருக்கே.. என்னோட ஆபீஸ் ஆட்களுக்கு இன்று கொடுத்து முடிக்கல. தபால்ல அனுப்புவோம்னு சொன்னா கேக்க மாட்டீங்கிறிங்க.. நேர்லதான் போய் கொடுக்கணும்னு சொல்றீங்க.. அதுலயும் நானும் ஒங்க கூட வரணும்ங்கிறீங்க'' ""இல்லப்பா. என்னோட ஒடம்பொறப்புக்களுக்கும் மூணாவது மனுஷாளுக்கு அனுப்புற மாதிரி தபால்ல அனுப்புறது சரி இல்லப்பா. நாம எல்லாரும் நேர்ல போய்த் தர்றதுதான் மரியாத..'' ""அப்ப கொஞ்சம் பொறுங்க.. என்னோட வேல…
-
- 0 replies
- 871 views
-
-
அவள் பெயர் தமிழச்சி -ராஜேஷ்குமார் ராஜேஷ்குமார் நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு... அவள் பெயர் தமிழச்சி ஜன்னலுக்கு வெளியே அமெரிக்காவின் மின்னிசோட்டா நகரம், அந்த ராத்திரி 10 மணி வேளையில் மின்மினிப் பூச்சிகளின் …
-
- 1 reply
- 2k views
-
-
1996ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 26ம் திகதி, மதிய வேளை, பனிக்கால நாட்கள். குளிர் ஊருக்குள் படிந்துபோயிருந்தது. நான் வடமேற்கு நோர்வேயில் உள்ள ஒரு வைத்தியசாலையின் மகப்பேற்றுப் பிரிவில் நின்றிருந்தேன். கனிவான தாதியர், அமைதியான அறை, மெதுவான இசை, தாங்கொணா வேதனையில் ஒருவர், மற்றும் நான். மகப்பேற்றுத் தாதியின் கட்டளைகள், அன்பான வார்த்தைகளுக்கு மத்தியில் ஒரு அலரல். ஒரு பிரசவம் நடந்து கொண்டிருந்தது, அங்கு. இரத்தமும், சதையும், நீரும் கலந்ததொரு குழந்தையை கையிலெடுத்து, தொப்புள் கொடியை வெட்ட என்னை அழைத்த போது பயத்தில் மறுத்துவிட, ஒரு தாதி அதை வெட்டினார். குழந்தையை எடுத்துப்போய் சுத்தப்படுத்தி, தலையைச் சுற்றி தொப்பி போன்றதொன்றை இட்டு, அளந்து, நிறுத்து, ஊசி போட்டு என் கையில் தந்த போத…
-
- 11 replies
- 1.7k views
-
-
கம்பியூட்டர் மவுசை பிடிக்க தெரியாத ஒரு கால கட்டம் 2001 அல்லது 2002 ஆண்டு என்று நினைக்கிறேன் . தட்டி தடுமாறி கஸ்டப்பட்டு தடுமாறி இணைய பக்கங்களில் வலம் வந்த பொழுது யாழ் இணையம் அகப்பட்டது . அதில் அழகு தமிழில் விவாதம் செய்து கொண்டிருந்தனர் .அதை ரசித்து ஆச்சரிய படுவதுடன் எப்படி என்று ஆவல் மேலோங்கியது . முயன்று பார்க்க முடியாமா என்ற ஆதங்கமும் இயலாமாயுமே முதலில் ஏற்பட்டது . அவ்விணையத்தில் குழந்தை பிள்ளை கூட தமிழில் எழுத கூடிய மாதிரியான பொறிமுறையை அவர்கள் அமைத்து வைத்திருந்தமையால் வாழ் நிலை ஓட்டத்தில் இந்த கம்பியூட்டருடன் எதுவும் சம்பந்த படாத இதுவும் தமிழ் எழுதி பார்த்தது ..அவ் இணையத்தின் சக நண்பர்களுடன் கதைத்து பார்த்தது ..மெல்ல மெல்ல தயக்கத்துடன் விவாதித்து பார்த…
-
- 3 replies
- 1.6k views
-
-
ஆசை! ஆசையாய்........... என்னையும் வாழவிடுங்கோ! ஓ! வழமைபோல இரண்டு நாள் வந்தான் பாவி, பிறகு இந்தத் திக்குத் திசையிலேயே ஆளைக் காணமென்று ஆளாளுக்கும் திட்டுகிறது கேட்குது. எனக்குக் கொஞ்ச நாளா மனசு சரியில்லை. அந்தக் கதையையும் கட்டாயம் உங்களுக்குச் சொல்லவேணும் அப்பொழுதுதான் எனக்கும் ஒரு ஆறுதலாக இருக்கும். அண்மையில் நண்பரொருவர் இதயநோயால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து பார்க்கச் சென்றிருந்தேன். அப்பொழுது அண்ணை உங்களுக்குத் தெரியுமே உங்களுக்கு வந்திருக்கிற வருத்தத்தின் தீவிரம்? ஓ ! ஓ! தெரியாமலே சா! கிட்ட வந்திட்டது தெரியும், முடிஞ்சவரை சாகிற காலத்தைக் கொஞ்ச் ஒத்திப்போடலாம் என்று நினைக்கிறன். உங்களிடம் இருக்கிற கெட்ட பழக்கத்தை விட்டியளென்றாலே கனகாலத்துக்கு வ…
-
- 12 replies
- 2.5k views
-
-
இன்று எங்களை எமது தொழிலகத்திலிருந்து ஒரு தொழிற்சாலை காட்டக் கூட்டிப்போயிருந்தார்கள்.நாங்கள் ஏழு பேர் போய் இருந்தோம். அந்த தொழிற்சாலை எனது எதிர்பார்ப்பை மீறி மிகப்பெரிதாகவும் மிகவும் நவீனமானதாயும் இருந்தது.எமது காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற் சாலையைப்போல் நான்கு மடங்காவது பெரிதாக இருக்கும்.இது உணவு தயாரிக்கும் தொழிற்சாலை.அந்த தொழிற்சாலையில் வெறும் இரு நூற்றி அறுபது ஊழியர்களே கடமை செய்கிறார்கள். கிட்டத்தட்ட முழுக்க கொம்பியுட்டர் ஊடாக இயக்கப்படுகிறது. எனக்கு மனதில் ஏதோ குடையத்தொடங்கியது.எங்களுக்கு நாடு இல்லை. இருந்தால் நாங்களும் இதை மாதிரி போடுவம். சமாதான காலத்தில் ஒரு முறை வெளி நாடு வந்து போயிருந்தேன். அப்ப எதையும் புதிதாய் கண்டால் அதை விளாவாரியாய் படமெடுத்து அது சம்…
-
- 13 replies
- 1.4k views
-
-
சுற்றிச் சுழலும் ரொமான்ஸ்கள்! சுத்தேசி ரொமான்ஸ் படத்தில் சுஷாந்த் சிங், பரினீத்தி சோப்ரா தற்கொலைக்கு முயல மாட்டேன் ஒருபோதும் - நான். அது கோழைகளின் பேராயுதம். நான் ஓட்டிச்செல்லும் இருசக்கர வாகனத்தின் மீது எதிர்வாகனம் எதுவும் வந்து மோதி எனை கொல்லட்டும். * என் பேருந்துப்பயணத்தில்... அதிவேக ஓட்டுநரின் அலட்சியத்தால் அந்த பாலம் பிளந்து பேருந்து சுக்குநூறாகி சிதைந்து அழியட்டும் என்னையும் பலியாக்கி. * நீண்டதூர ரயில் பயணத்தில் நியாயமான கோரிக்கையி…
-
- 0 replies
- 1k views
-
-
ஒரு நிமிடக் கதை - எடை ரயிலுக்காகக் காத்திருந்தார் மாதவன். எடை பார்க்கும் மெஷின் கண்ணில்படவே, ஏறி நின்று ஒரு ரூபாய் காசைப் போட்டார். ஒரு மாற்றமும் இல்லை. மெஷின் அமைதியாக இருந்தது. ‘சே..’ என்று அலுத்தபடி பக்கத்தில் இருந்த கடைக்குச் சென்று தண்ணீர் பாட்டில் வாங்கினார். “மெஷின் கொஞ்சநாளா ரிப்பேரா இருக்கு சார்.. யாரும் கவனிக்க மாட்டேங் கறாங்க. போடுற காசெல்லாம் வேஸ்ட் ஆயிடுது” என்றார் கடைக்காரர். அதே சமயம் ஏதோ சத்தம் கேட்டுத் திரும்பினார் மாதவன். ஒரு கிராமத்து தம்பதி மெஷின் பக்கம் வந்தார்கள். பக்கத்தில் சென்று அவர்களை எச்சரிப்பதற்குள் அவர்களுடைய சின்ன மகள் மெஷினில் ஏறி காசு போட்டாள். சிறிது நேரம…
-
- 1 reply
- 1.3k views
-
-
அவளுக்கு ஒரு "வாரிசு " .......... அமைதியான அந்த கிராமத்தின் ....இளங்கதிரவன் மெல் ல ஒளி பரப்ப் தொடங்கிய அந்த காலை வேளையில் குயிலினமும் பறவை களின் ஆர்ப்பரிபுகளுடனும் பொழுது புலர்ந்தது . காலை பஸ் பயணத்துக்கு மகனை எழுப்ப தேநீர்க்குவளையுடன் செல்லம்மா .அவன் கணேசு அண்மையில் உள்ள நரகத்தில் மரக்கறி வியாபாரம் செய்பவன். எழுந்து காலை க்கடனை முடித்து தேநீரை குடித்து தாயிடம் விடைபெற்றான். அவள் தானும் தேநீர் பருகி ,கூட்டு மாறு எடுத்து முன் முற்றத்தை நீர் தெளித்து கூட்டுகையில் அவள் நினைவு ...கடந்த காலம் நோக்கி சென்றது . செல்லம்மா , ஆசைப்பிள்ளை தங்கம்மா தம்பதியருக்கு மூத்த பெண் . இரண்டாவது பெண்ணியே எல்லோரும் திருமணதுக்காய் கேட்டனர் . ஏன் எனில் இவள் செல்லம்…
-
- 11 replies
- 1.6k views
-
-
கோட்லஸ் மாமி சந்தைக்குபோட்டு வீடடை வரேக்கை நேரம்போனதால மொபைல் மாமி வீட்டுவழியால போகவேண்டியதாப்போயிற்று. மாமி வெயில் எறிச்சபடியா வீட்டுமுத்தத்தில இருக்கிற சினன பூந்தோட்டத்தில நின்றா. நான் வந்தது வேறை கார் என்றாலும் யாரிது எஙகடை ஆள் என்று கட்டாயம் பாத்து இருப்பா. அவை வீட்டு வாசல்ல ஒரு ஸபீட் பிறேக் இருக்கு. அதால சிலோ பண்ணவேண்டியதாப்போச்சு. இப்பவே லோக்கல்ல இருக்கிற சொந்தங்களுக்கு ஏன் தெரிந்தவர்களுக்கும் என்னைக்கண்ட செய்தி போயிருக்கும். மாமி எப்பவும் கோட்லஸ் போனோடை தான் இருப்பா. ஒன்று மாறி ஒன்று என்று இங்கை இருக்கிற ஆக்களுக்கு போன் பண்ணி கதைத்துக்கொண்டு இருப்பா. அதோடை வெளிநாட்டுக்கும் காட்ல போன்பண்ணி கதைச்சு இங்கத்தையான் செய்திகளை அங்க தொகுத்து…
-
- 5 replies
- 3.2k views
-
-
பிரித்தானியாவின் நிழல் ரயில் பாதையினூடாக பயணம் செய்து மான்சி தான் வர வேண்டிய இடத்திற்கு வந்து சேர்ந்தாள்...அங்கு தான் அவர் வரச் சொல்லி இருக்கிறார்...அவர் ஒரு மனநல வைத்தியர்..அந்த இடத்திலில் இருந்து பத்து நிமிடம் நடந்தால் அவர் வேலை செய்யும் ஆஸ்பத்திரி இருக்கிறதாகவும் ரயிலை விட்டு வெளியில் வந்தால் தான் வந்து கூட்டி செல்வதாகவும் சொல்லி இருக்கிறார்...தனக்கு எப்படி அவனோடு தொடர்பு ஏற்பட்டது கடந்த காலத்தை அசை போட்டவாறே மான்சி ரயிலை விட்டு இறங்குறாள். மான்சிக்கு அதிகம் நண்பிகள் இல்லை ஒரு சிலரே உள்ளனர்...அப்படி அவவோடு நெருங்கிப் பழகிய நண்பி ஒருத்தி லண்டனின் தூரப் பகுதிக்கு இடம் பெயர்ந்தார்...அவ் நண்பியோடு முதலில் தொலைபேசியில் உரையாடிக் கொள்வாள் மான்சி...காலப் போக்கில் இருவரும…
-
- 20 replies
- 3k views
-
-
வாரணாசி - சிறுகதை நரன் - ஓவியங்கள்: ரமணன் பெரும்பாலும் ஒரே மாதிரியான சிறிய ரெட்டைத் திண்ணைகளும், திண்ணையின் மேலிருந்து சரியும் தாழ்வார ஓட்டு முகப்பை இரண்டு மரத்தூண்களும் தாங்கிக்கொண்டிருக்கும் படியான வளைவான செருகு ஓடு வேயப்பட்ட வீடுகள் இருக்கும் பழைமையான தெருவுக்குள் அந்த வாகனம் நுழைந்தது. எல்லா வீட்டின் முற்றங்களிலும் விடுபடாமல் நெளிவு நெளிவான வெள்ளை நிறக் கோலங்கள் இருந்தன. பாலாமணி கையைக் காட்டி, கோலமிடப்படாத இடதுபக்க வீட்டின் முற்றத்தில் வாகனத்தை நிறுத்தச் சொன்னான். வெளியே வயதான நான்கைந்து ஆண்கள் நின்றுகொண்டிருந்தார்கள். இறங்கி, வண்டியின் முகப்பைத் தெருவிலிருந்து வெளியேறும் பாதை நோக்கித் திருப்பி நிறுத்துமாறு ஓட்டுநரிடம் சொன்னான். பாலாமணியி…
-
- 1 reply
- 3.1k views
-
-
என்ர நிலமையை முதலாவதா எழுது… XXXXஅக்காவும் XXXXXXஅண்ணையும் இங்காலை வாங்கோ…. உங்களைத்தான் இங்காலை வாங்கோ…. அத்தனைபேருக்குள்ளும் அவளையும் அவனையும் இனம்காட்டி அழைத்தவன் எதிரியின் இனத்தைச் சேர்ந்தவனில்லை. இவர்கள் பணியாற்றி அரசியல் பிரிவில் அவனும் பணியாற்றியவன். தூXXன் என்ற பெயரைக் கொண்டவன். அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனின் மெய்ப்பாதுகாவலராக இருந்தவன். யுத்தம் முடிந்து நிராயுதபாணிகளாய் நிரையில் நின்றவர்களில் பலரை புலிகள் என்பதை இனங்காட்டி மக்களிடமிருந்து பிரித்தெடுத்துக் கொண்டிருந்தான் அவன். எதிரியின் இதயக்கூட்டையே தொட்டுத்திரும்பிய விடுதலையமைப்பின் பலம் நம்பிக்கை யாவும் இன்று தவிடுபொடியாய்…..புலியே புலியைக்காட்டிக் கொடுக்கும் நிலமைக்கு…
-
- 0 replies
- 1.1k views
-
-
எங்கள் வீட்டு தோட்டத்துக்கு எப்போது இவ்வளவு அணில்கள் வந்தது என்று சரியாக கணிக்க இயலவில்லை. முன்பெல்லாம் ஓரிரு அணில்கள் ஓடிப்பிடித்து விளையாடுவதை கண்டிருந்தேன். இப்போது பார்த்தால் இருபது முப்பது அணில்கள் தென்னைமரங்கள் மீது ஏறியும், இறங்கியும் விளையாடிக் கொண்டிருக்கின்றன. தென்னைமரத்தின் மீது மட்டுமல்ல, அவ்வப்போது தரையிறங்கி தரைமார்க்கமாகவே போர்டிகோவுக்கு முன்னால் இருக்கும் கொய்யாமரத்துக்கும் வந்துவிடுவதுண்டு. ஏதேனும் ஒன்றிரண்டு கொய்யாப் பிஞ்சுகள் இருந்தாலும் கூட விட்டுவைப்பதில்லை. துவர்ப்பாக இருக்கும் கொய்யாப்பிஞ்சுகள் அணில்களுக்கு எப்படித்தான் பிடிக்கிறதோ? கொய்யாமரத்தின் எல்லாப் பிஞ்சுகளையும் கபளீகரம் செய்த அணில்கூட்டத்தின் பார்வை அடுத்தக்கட்டமாக செம்பருத்திச் செடியின…
-
- 3 replies
- 5.8k views
-
-
பாடசாலை மணி அடித்தவுடன் சிவகொளுந்து தன்னுடைய பறியை (புத்தகபையை) தோளிள் மாட்டி கொண்டு,பிள்ளைகள் எழுந்து வரிசையாக போக வேண்டும் சரியோ மற்ற வகுப்பு பெடியன்கள் போல கத்தி கொண்டு போறதில்லை யாராவதும் அந்த மாதிரி கத்தினியளோ பிறகு நான் வாத்தியாக இருக்க மாட்டன் பொலிஸ்காரன் மாதிரி தான் இருப்பன் என்று கூறி மாணவர்களை வீடு செல்வதிற்கு வழி அனுப்பி வைத்தார்.இதனால் இவரை டிஸிபிளீன் சிவகொழுந்தர் என்று தான் பாடசாலையில் உள்ளோர்கள் அழைப்பார்கள். மாணவர்கள் எல்லோரும் சென்றவுன்ட தானும் வெளியே வந்து சிறிது நேரம் வகுப்பாறை வாசலில் நின்று தான் வீடு செல்வார். சிவகொளுந்தருக்கு இரு ஆண்பிள்ளைகள் உண்டு,மனைவி கமலா பேரழகி என்று இல்லை ஆனாலும் யாழலகி (அதாவது சாதாரண யாழ்பாணத்து பொம்பிளையின் அழகு).கொ…
-
- 19 replies
- 3k views
-
-
காதலின் விலை எனக்கு ஒரு அண்ணாவும் அக்காவும் இருந்தார்கள்.அண்ணாதான் மூப்பு . அக்காவைவிட எனக்கு பத்து வயது குறைவு.அதனால் நான் வீட்டில் சின்னப்பிள்ளை.எனது அப்புவும் அம்மாவும் பெரிதாக படித்திருக்கவில்லை.எங்களையும் பெரிய படிப்பு படிக்கோணும் என்ற நினைப்பும் அவர்களிடம் இருக்கவில்லை.அப்பு தோட்டம் தான்.வருசத்தில ஒருக்கா வயலும் விதைக்கும்.வீட்டில பஞ்சம் இல்லை. ஆனால் அப்பு சரியான பிடிச்சிறாவி. அண்ணனுக்கும் அந்தக்குணம் தொத்தினதோ பிறப்பிலேயோ வந்ததோ தெரியவில்லை. அம்மா ஒரு பாவி. அப்புவுக்கு சரியான பயம். நான் விரும்பி கல்யாணம் கட்டினதால அப்புவும் அண்ணாவும் சேர்ந்து என்ர வீட்டுத்தொடர்பை அறுத்துப்போட்டாங்கள். என்ர மனுசிக்கும் தாய் மட்டும்தான் இருந்தது. அதுவும் தொண்ணூற்றி ஒன…
-
- 15 replies
- 1.5k views
-
-
ஒரு நடுத்தர குடும்பத்தில் மூத்தவளாக பிறந்து சின்னனில் இருந்து வறுமையோடு வளர்ந்து,பெரிய பிள்ளையானதில் இருந்து மூத்த பொம்பிள்ளை பிள்ளைக்கு படிப்பு தேவையில்லை என்று சீக்கிரமாகவே கல்யாணம் கட்டிக் கொடுக்க வேண்டும் என தாயால் சொல்லி வளர்க்கப் பட்டு அதுவும் வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு தான் கட்டிக் கொடுக்க வேண்டும் என பிடிவாதமாக இருந்து...பதினெட்டு வயசானதும் எதிர்கால வாழ்க்கை பற்றிய அவளது விருப்பத்தை கொஞ்சம் கூட செவி மடுக்காமல்...நாள் ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் சோகேஸ் பொம்மையை அலங்கரிப்பது போல் அவளை அலங்கரித்து,ஸ்டூடியோவுக்கு அழைத்து சென்று படம்,படமாய் பிடித்து... விற்றனர் கடைசியில் அவளை கொஞ்சம் கூட அவளுக்கு பிடிக்காத வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு புலத்திற்கு வந்து நிம்மதியா…
-
- 16 replies
- 1.4k views
-
-
” அரோகரா “-அலெக்ஸ் பரந்தாமன் ” யாழ்ப்பாணம்… வாங்க…வாங்க… யாப்பனய…. என்ட … என்ட… என்ட…” கொழும்பு- கோட்டை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் பேருந்து ஒன்றின் நடத்துனர் இருமொழிகளிலும் மாறிமாறிப் பயணிகளை அழைப்பது ஆரியசிங்கவுக்குத் தெரிந்தது. உடனே அவன் அந்த இடத்தை நோக்கி நடந்தான். இரவு ஏழு மணியளவில் குறிப்பிட்டதொகைப் பயணிகளுடன் பேருந்து யாழ். நோக்கிப் புறப்படு கிறது. இடையில் சில இடங்களில் நிறுத்தப்பட்டு, மீண்டும் புறப்பட்ட பேருந்து, அதிகாலை நான்கு முப்பது மணியளவில், கொடிகாமத்தை வந்தடை கிறது. ஆரியசிங்க பேருந்தைவிட்டுக் கீழே இறங்கினான். அன்று சந்தைநாளாகையால், வியாபாரிகளின் நடமாட்டமும் விற்பனைப்பொருள்களைக் கொண்டுவருவோர் எண்ணிக்கை அதிகமா…
-
- 3 replies
- 1.2k views
-
-
ஒரு நீதிக்கதை August 30, 2021 முன்னொரு காலத்தில், ஒரு ஓவியர் வாழ்ந்துவந்தார். அவர் அழகான ஓவியம் ஒன்றை வரைந்து, கண்ணாடியின் எதிரே மாட்டிவைத்தார். ஓவியத்தைக் கண்ணாடி மூலமாகப் பார்த்தால், அது தொலைவில் மிக மிக மென்மையாகவும், சாதாரணமாகத் தெரிவதைவிட இரண்டு மடங்கு அழகாகத் தெரிவதாகவும் சொன்னார். அவர் வீட்டில் வளர்ந்துவந்த பூனை இந்த ஓவியத்தின் சிறப்பு குறித்துத் தன் நண்பர்களான காட்டு விலங்குகளிடம் சொன்னது. காட்டு விலங்குகள் வீட்டுப் பூனை மீது பெரும் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தன. ஏனென்றால், பூனை நல்ல கல்வியறிவும், கலாச்சார அறிவும் பெற்றிருந்தது. மேலும், அது காட்டு விலங்குகளுக்குத் தெரியாத எவ்வளவோ விஷயங்களைப் பற்றி அவ்வப்போது பேசும், அவர்கள…
-
- 7 replies
- 996 views
-
-
எப்போதோ உன்னுடன் நான் வாழ்ந்த ஞாபகம் -சினேகிதி- அன்பான தன் சிறிய குடும்பத்துடன் வாழ்ந்தவள் ஆதிரை.சின்ன வயது முதலே படிப்படியாக பல வெற்றிகளைக் கல்வியில் அடைந்து மிகுந்த புகழுடன் இருந்தாள்.இனப்பிரச்சனையால் சொந்த ஊரை விட்டு நீங்கும் துன்பத்தை ஆதிரை குடும்பமும் ஏற்க வேண்டியதாயிற்று.கொழும்புக்க
-
- 30 replies
- 4.7k views
-