கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3070 topics in this forum
-
வைகறைக்கனவு (சிறுகதை) – தமிழினி ஜெயக்குமாரன் ‘மலரினி ஓடிக் கொண்டிருந்தாள். வேகமாக மிக மிக வேகமாக. பூமி அவளது கால்களுக்கு கீழே ஒரு மின்சார ரயிலின் வேகத்தில் பின்னோக்கி நகர்வதைப் போலிருந்தது. நிலத்தைத் தொட்டும் தொடாமலும் உதைத்தெழும்பும் ஒரு மானின் லாவகத்துடன் அவளது கால்கள் அசைந்து கொண்டிருந்தன. பிடரி மயிரை சிலுப்பிக் கொண்டு காட்டுப் பாதைகளையும் கட்டாந்தரைகளையும் கடந்து காற்றிலே பறக்கும் வேகக் குதிரையாகயாகவே மாறிவிட்டிருந்தாள் அவள். ஆஹா… எத்தனை இனிமையானதொரு அனுபவம் என எண்ணுவதற்குள்ளாகவே அவளது உடல் பாரமாகக் கனப்பதைப் போலிந்தது. ஒரு அங்குலம் கூட அசைக்க முடியாதபடி பெரும் பாராங்கல்லொன்றுடன் இறுக்கப் பிணைத்து கட்டி விட்டதைப் போல… “ஆ….ஐயோ…அம்மா” உடம்பு முழுவதையும் கொத்திக்…
-
- 3 replies
- 775 views
-
-
கோடை விடுமுறையும் தாயகத்தின் ஏக்கங்களும் வணக்கம் சொந்தங்களே.! பனி தேசங்களில் கோடை விடுமுறை ஆரம்பமாகிவிட்டது…இப்போதெல்லாம் தாயகத்தின் காலநிலை வருடம்பூராகவும் தகிப்பாகவும் வரட்சியாகவும் இருந்தாலும்சொந்தங்களின் வருகையால் பல மனங்களில் வசந்தம் தற்காலிகப்பூச்சொரியஆரம்பித்து விட்டது. திருமண வைபவங்கள் ,ஆலயத்தின் பெருந்திருவிழாக்கள் ,மஞ்சள் மணக்கும் புனித நீராட்டுதல்கள் ,புன்னகையோடு சேர்த்தே பொன்னகைக்கான முதலீடுகள் இன்னும் குளிருட்டிய வாகனங்கள் ,போத்தல் தண்ணீர்,சுற்றுலா மையங்கள்,நாகரீக அலைபேசிகள் .இவை தான் இப்போது இங்கு அதிகம் கலந்துரையாடப்படும் தலைப்புகள்.போர் தின்றது போக நெஞ்சில் மிஞ்சியிருக்கும் இனிப்புக்களை கிண்டியெடுத்து அசைபோட்டுக்கொள்கிறது தாயகத்தின் முதல…
-
- 2 replies
- 1.2k views
-
-
சாதல் என்பது... பொ. கருணாகரமூர்த்தி ஓவியங்கள்: ஞானப்பிரகாசம் ஸ்தபதி பெர்லினில் கேப்பர்னிக் என்கிற பசுமையான பகுதியில் அமைந்திருக்கிறது எங்கள் வளமனை. பின்பக்கச் சாளரத்தைத் திறந்தால் மரங்கள் செறிவான காடு, அதற்குள் ஐதான இழைகளுடையதும் தொய்வானதுமான, ஒரு சிலந்திவலைபோல குறுக்கும் நெடுக்குமாக சிறுசிறு பாதைகள் (புறோமினேட்ஸ்) காலாற உள்ளே நடப்பவர்களுக்கும் குதிரைகளில் சவாரி செய்பவர்களுக்குமாக உள்ளவை. காட்டின் எல்லைவரை நடந்தால் இறுதியில் கேப்பர்னிக் ஸ்ப்றே (கடலேரி) வரும். கோடைகாலத்தில் ஏரியின் தீரத்தின் முழுநீளத்துக்கும் முகாம் வண்டிகள் நிறுத்தப்பட்டிருக்கும், மக்கள் தனித்தனியாகவும் சிறு சிறு கூடாரங்கள் அமைத்தும் முகாமிடுவர், கிறில் போடுவர், நீச்சலடிப்பர். காட்டினுள் இருந்து இரவில் …
-
- 0 replies
- 671 views
-
-
மஞ்சள் சுவாலை (சிறுகதை) .................................................... அன்று நாங்களொரு தீர்மானத்திற்கு வந்திருந்தோம். பரந்தனில் இருந்து கரடிப்போக்கு சந்தியை நோக்கி ஜீவனேசன் தன் லுமாலாவை வேகமாக மிதித்துக்கொண்டிருந்தான்.நான் அவனுக்கு உதவியாக பெடல் போட்டபடி அவனுக்கு பேச்சு கொடுத்து கொண்டிருந்தேன். இடைக்கிட அவன் வியர்வை என் கன்னத்தில் சிந்தியது . மூச்சிரைக்க என்னை ஏற்றிக்கொண்டு கரடி போக்கு சந்திக்கும் பரந்தன் சந்திக்கும் இடையில் இருக்கும் வயல் வெளியின் எதிர்காற்றுக்கு ஈடுகொடுத்து சைக்கிளை செலுத்தி கொண்டிருந்தான் ஜீவனேசன்.அவன் பருத்த தேகத்தின் பலத்திற்கு முன்னால் எதிர்காற்று ஒரு பொருட்டல்ல என்றே தோன்றியது எனக்கு “டேய் குண்டா எனக்கு பயமாகிடக்கு ” “ஏன் டா” “மாட்டினம் உ…
-
- 0 replies
- 745 views
-
-
ஆண்கள் உலகம் நமகெல்லாம் அறிமுகபடுத்தப்படுவது அப்பா மூலம் தான். இருப்பினும் அதை இன்னும் சுவாரஸ்யமாக்குவது சகோதரனே. ரிக்கி மார்டினையும், WWF ராக்கையும், கிரிகெட்டின் சகல சூட்சுமங்களையும் நமக்கு அறிமுகப்படுத்துவது அவனே! நிலைக்கண்ணாடி முன் AXE வாசனையை தருவதற்கும், கண்ணாடியில் ஒட்டியிருக்கும் ஸ்டிக்கர் பொட்டுக்காக கடுப்படிபதற்காகவும் எனக்கு ஒரு தம்பி இருக்கிறான். எண்ணிலடங்கா நினைவுகள் என் தம்பியோடு இருக்கின்றன எனினும் இந்த பதிவு அதில் ஒரு துளி - மத்திய தர வர்க்கத்துக்கே உரிய கோட்பாட்டின் படி பொறியியல் படித்து, கொஞ்ச காலம் சில பல உப்புமா கம்பெனிகெல்லாம் கோடு எழுதிக்கொடுத்து ஒரு வழியாக ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் ப்ராஜெக்ட் லீடர் ஆனான். அவர்கள் அதோடு விடாமல் H1B யும், அமெரிக்க கன…
-
- 0 replies
- 563 views
-
-
-
சதைகள் – அனோஜன் பாலகிருஷ்ணன். குருநாகல் புகையிரத நிலையத்தில் நியோன் வெளிச்சத்தில் நுளம்புகளை விரட்டிக்கொண்டு நின்றேன். குலுங்கலுடன் சிலுப்பி அதிர்ந்து புகையிரதம் பிளட்ஃபோமில் என் கால்விளிம்பருகே பாரிய உலோக அதிர்வுடன் நின்றது. அதிஷ்டவசமாக ஜன்னல் இருக்கை கிடைத்தது. ஆசுவாசப்படுத்திக்கொண்டு அமர்ந்தேன். வேகமாக இருட்டில் பதுங்கிய தென்னைமரங்கள் நீண்ட இலைகளுடன் என்னைக் கடந்துகொண்டிருக்க, தடக் தடக் ஒலிகள் காதின் சவ்வுகளை அதிர்வித்துக்கொண்டிருந்தன. சூடான மூச்சுக்காற்று என் மூக்கிலிருந்து புறப்பட்டு என் நெஞ்சில் மையம்கொண்டது. நேரத்தைப் பார்த்தேன் ஏழுமணியைக் கடந்திருந்தது. கொட்டுவை போய்ச்சேர பதினொரு மணியாகும். புகையிரதக் குலுங்கல் மத்தியிலும் பக்கத்திலிருந்த சிங்களவர் மூக்குக் க…
-
- 0 replies
- 1.4k views
-
-
பூதக்கண்ணாடி கதையாசிரியர்: ஜே.பி.சாணக்யா பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு, எங்கள் ஊரில் நடந்து முடிந்திருந்த அந்தச் சம்பவங்களைப் பற்றி முழுமையாகச் சொல்ல முடியாது என்றாலும் அவற்றைப் பற்றிய குறைந்தபட்ச விவரிப்புகள்கூட அவற்றின் தீவிரத்தை உங்களுக்கு உணர்த்திவிடும் என்பதாலும் நானும் அச்சம்பவங்களின் சாட்சிகளில் ஒருவனாய் இருப்பதாலும் இவற்றை உங்களுக்குத் துணிந்து சொல்கிறேன். நமக்கு அருகிலுள்ள மனிதர்கள் பற்றிய எச்சரிக்கை உணர்வுகளை இவை எனக்குத் தந்திருப்பினும், அவற்றிலிருந்து மெய்ஞ்ஞானிகள் தவிர்த்து, ஒருவருக்கும் பயனற்றதாகவே அவை முடிந்துவிடும். எங்களுக்கும் வத்சலாவுக்கும் நேர்ந்ததைப் போல. இளவழகனுக்கு நான்காவது வயது நடந்துகொண்டிருந்த ஒரு நாளில் அவன் அம்மா மனப்பிறழ்வுற்ற வேசியாகப…
-
- 0 replies
- 883 views
-
-
நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக்கொண்டிருந்தார் அந்நியன் மெல்லிய பனித்தூவிக்கொண்டிருக்க ஓர் உருவம் நடந்து போய்க்கொண்டிருக்கின்றது. மனிதர்களின் மனங்களுக்குப் பலவர்ணங்கள் இருப்பதுபோல, பனியிற்கும் பல உருமாற்றங்கள் நிகழ்கின்றன. இப்போது பெய்யும் பனி, பூக்கள் சொரிவதைப் போன்று மென்மையானது. பனிக்காலம் தாண்டி வசந்தத்தில் பிறழ்வாய் பொழிகின்றதெனினும் இதற்கென்று ஓர் அழகுண்டு. உடலை உறையச் செய்யும் காற்றில்லாது, நிலத்தை முத்தமிடும் எந்தப் பனியும் எவரையும் அலுக்கச் செய்வதுமில்லை. இது காலையா அல்லது மாலையா என்ற தடுமாற்றங்களைத் தருகின்ற வானம், கரும்சாம்பல் போர்வையைப் போர்த்திய ஒரு பொழுது. அந்நியன் தேர்ந்தெடுத்த இந்த இடம், பெரும் கூட்டத்திடையே தனித்து நிற்கும் ஒரு அமைதியான பெண…
-
- 0 replies
- 351 views
-
-
ஆராதனா - அனோஜன் பாலகிருஷ்ணன். அபத்தமான தருணங்களில் ஒன்று பஸ் பயணம்.அதுவும் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வருவது மகா எரிச்சலை கிளப்பியது.மெல்ல மெல்ல தன்னிலை இழந்து அரைத்தூக்கத்தில் இருந்தேன். ஏஸி பஸ்க்கு ஆசைப்பட்டதின் விளைவாக குளிர் தாங்காமல் அவதிப்பட்டு குல்லா சகிதம் சில கிழவர்கள் குறட்டை விட்டு பஸ் எஞ்சின் சத்தத்தை முறியடித்தனர். சுற்றிப்பார்த்தேன் கவனிக்கத்தக்கவகையில் ஒரு இளமை ததும்பிய பெண்களையும் காணவில்லை. என் பின்னால் சுவட்டருடன் இருந்த ஒரு கிழவர் என் பிராணத்தை வேண்டனும் என்ற நோக்கத்தில் இருந்தார்போலும்,என்னால் சீட்டை பின்னால் மடிக்க முடியவில்லை.கொஞ்சம் மடித்தால் “கால் வைக்க முடியவில்லை தம்பி..கொஞ்சம் நிமித்திரியலே……” சம்பந்தம் இல்லாத சத்தங்கள்,முகங்கள். இ…
-
- 2 replies
- 731 views
-
-
"இன்று செவ்வாய்க்கிழமை. வேலைவிட்டு நேரத்திற்கே கிளம்பி வந்துவிட்டது வசதியாகி விட்டது. இன்றும் அவள் வருவாள். கடந்த இரண்டரை வருடங்களாகக் கண்களாலேயே மட்டும் பேசிக்கொள்ளும் எமது உணர்வுகள் மாற்றங்கள் ஏதுமின்றி இன்றைக்கும் தொடரும்" என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டே காரிற்குள் காத்திருந்தேன். பிண்னனியில் இலளையாராஜாவின் பாடல்கள் மெதுவாக மனதைத் தாலாட்டிக்கொண்டிருக்க அவள் வரும் வழி பார்த்துக் காத்திருந்தேன். நேரம் நெருங்க நெருங்க மனது துடிப்பது எனக்கு வெளியே கேட்டது. என்னைத் தாண்டிச் சென்றுகொண்டிருந்த காரெல்லாவற்றையும் மனம் அங்கலாய்ப்புடன் பர்த்துக்கொண்டது. அவளில்லை. சரி, 3 மணியாகிறது, இனிக் கிளம்பலாம் என்று நான் நினைத்திருக்க அவளது சாம்பல் நிறக் கார் வீதியின் ஆரம்பத்தில் திரும்…
-
- 45 replies
- 4.5k views
-
-
ஒரு மூன்றுவருடங்கள் இருக்கும். இருள் கெளவ்விய மாலைப் பொழுதில் ஆயிரக் கணக்கானவர் மத்தியில் ஒழுங்காகக் அடுக்கப்பட்டிருந்தன அவை. சாம்பலும், கறுப்புடன் இடையிடையே வெள்ளையும் கொண்டு பூசப்பட்ட கல்லறைகள். ஒவ்வொரு கல்லறையின் தலையிலும் மண்ணுக்காக மரித்துப் போன தெய்வங்களின் திருவுருவப் படங்கள். நானும் மாவீரர் குடும்பம்தான், ஆனால் எதற்கு முன்னால் போய் நிற்பது?அங்கிருந்த எல்லோருக்கும் மலர்தூவ எனக்கு ஆசைதான், ஆனால் ஒவ்வொரு படத்தினதும் முன்னால் அந்ததந்தக் குடும்பங்கள் அழுதுகொண்டிருக்க நான் எப்படி...........முடியவில்லை. முகவரி தெரியாத கல்லறை தேடிக் கண்களும், கூடவே கால்களும் சேர்ந்துகொள்ள அடுக்கப்பட்டிருந்த கல்லறைகளிலே அதனைத் தேடிக் கொண்டிருந்தேன். ஒரு ஓரத்தில் அது இருந்தது. படம…
-
- 6 replies
- 1.4k views
-
-
கடுகு கதை - மருமகள் ராசாத்தியம்மா ...... வச்ச கண் மாறாமல் .......தொலைக்காட்சி தொடர் ஒன்றை பார்த்துகொண்டு இருந்தார் . தொலைக்காட்சி தொடரில் முக்கிய விடயம் "மருமகளை கொடுமைபடுத்தும் மாமியின் தொடர் " . கண் கலங்கிய படியும் வாய்க்குள் மாமியாரை திட்டியபடியும் முணுமுணுத்த படி கவலையோடு பார்த்துகொண்டிருந்தார் ......ராசத்தியம்மா ....!!! ராசாத்தி ...ராசாத்தி ....!!! கூப்பிட்டபடி ராசாத்தியின் கணவர் கோபாலபிள்ளை வீட்டுக்குள் நுழைந்தார் . கடும் வெய்யில் நடுவில் வெளியில் சென்று வந்த கோபாலபிள்ளை ...கொஞ்சம் தண்ணிகொண்டுவா ராசாத்தி ..... என்னா வெய்யிலப்பா என்று சளித்தபடி கேட்டார் .....!!! அந்த நொடியில் ராசாத்தியின் குரல் கடுமையானது ... உரத்த குரலில் அது சரி இந்த கொளுத்தும் வெய்யிலில் எங்…
-
- 0 replies
- 2k views
-
-
கமக்காரன் நட்சத்திரன் செவ்விந்தியன் தைப் பொங்கலுக்கு முதல்நாள் காலையில் கொடிகாமம் வீதியில் நெல்லியடிச்சந்தை நோக்கி மடித்துக் கட்டிய சாரம் மட்டுமே கட்டியிருந்த ஒல்லியன் ஒருத்தன் தோளில் அரைச்சாக்கு நிறைந்த பயறோடு போய்க்கொண்டிருந்தான். ஆயம் என்ற சிற்றூரில் வசிக்கும் அவன் கொஞ்சம் கொஞ்சமாக உவர் ஏறி தரிசாக மாறிவரும் தன்னுடைய சிறு தோட்டத்தில் கடுமையாக மாரடித்து அறுவடை செய்தது அந்தளவுதான். வீட்டில் கொஞ்சம் பழஞ்சோற்றை மனுசிக்கு ஆரோ கொடுத்தது என்ற அருமையான பச்சை மிளகாய்த் துண்டுகளோடும் வழமையான வெங்காயத்தோடும் சாப்பிட்டிருந்தான். மனுசி இஞ்சி போட்டுத்தந்த பிளேன் டீயையும் உள்ளங்கையில் போட்ட ஒரு சொட்டு சீனியில் நக்கி நக்கிக் குடித்திருந்தான். நெல்லு வெட்டிய வெற்று வயல்…
-
- 47 replies
- 10.1k views
-
-
தாயின் கணச்சூடு ----------------------------- பரபரப்பான நகர வாழ்க்கை (நரக வாழ்க்கை ) ஆதவன் அதிகாலையில் எல்லோரையும் உட்சாகபடுத்தும் வண்ணம் எழுகிறான் அவனுக்கென தன் கடமையை தவறாமல் செய்கிறான் என்று முணுமுணுத்தபடி என் கடமைக்கு ஆயத்தம் ஆகினேன் நான் . என் பெயரும் ஆதவன் ......! என் குடும்பம் ஒரு அழகான அளவான குடும்பம். எல்லோருக்கும் காலை நேரம் என்றால் நகர புறத்தில் வீடு ஒரு போர்களம் தான் எல்லாவற்றையும் கவனித்து விட்டு வேலைக்கு போகும் முன் மேல் மாடியில் இருக்கும் என் அம்மாவிடம் முகத்தை காட்டிவிட்டு வேலைக்கு செல்வதுதான் ஆதவனின் வழமையான செயல். அம்மா " பூரணம் " எண்பது வயதை தாண்டி வாழ்க்கையின் இறுதியோடு போராடும் ஆத்மா ஜீவன். அப்பாவை இழந்து மூன்று வருடங்களாக அவரின் நினைவுகளோ…
-
- 8 replies
- 5.9k views
-
-
ஒரு கணத்துக்கு அப்பால் - ஜெயமோகன் வயது வந்தவர்களுக்கானது! அப்பாவின் கண்கள் விரிவதை கண்டு வியப்புடன் திரும்பிப்பார்த்தான். அவர் விசைப்பலகையில் கைத்தவறுதாலாக அழுத்தி திரையின் ஓரத்தில் துடித்துக்கொண்டிருந்த சிறியவண்ணப்படத்தை முழுமையாக விரித்திருந்தார். பெரிய முலைகள் கொண்ட ஒரு பெண் கால்களை ஒரு முக்காலியில் தூக்கி வைத்து நின்றிருந்தாள். அவளுடைய மழிக்கப்பட்ட யோனி செந்நிற அடுக்குகளாக விரிந்திருந்தது. இளநீலநிற நகச்சாயம் பூசப்பட்ட விரல்களால் அவ்விதழ்களின் மேல்நுனியை அகற்றியிருந்தாள். இன்னொரு கையில் கரியநிறமான செயற்கை ஆண்குறி. கீழே ஒரு கணத்துக்கு அப்பால் என்ற வரிகள் மின்னி மின்னி அணைந்தன அப்பா சுட்டுவிரலால் அந்தப்படத்தைச் சுட்டிக்காட்டினார். அவர் பார்வையை திருப்பும்பொருட்…
-
- 1 reply
- 908 views
-
-
பருப்பு கோமகன் குரங்கு அப்பம் பிரித்த கதையாக சமாதானம் பேசவந்தோம் என்று அந்நியப்படைகள் ஈழ மண்ணில் மூலை முடுக்கெல்லாம் பரவியிருந்த காலத்தில் எல்லரோரையும் போல பருப்பின் வாழ்கையிலும் இரண்டு பெரிய சூறாவளிகள் அடித்து பருப்பின் வாழ்கையையே புரட்டிப்போட்டன. கோண்டாவிலிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பெடியளுக்கு கதிரவேலர் ஓர் கடவுளாகவே இருந்தார். அந்த நேரத்தில் அமைதிப்படைகள் நடத்தும் சுற்றிவளைப்பில் சந்தேகத்தின் பேரில் கைதாகும் பெடியளை, கதிரவேலர் தனது ஆங்கில அறிவாலும், பிரைஜைகள் குழுவின் தலைவர் என்ற முறையிலும் அமைதிப்படை முகாம்களுக்கு சென்று கைதான பெடியளை மீட்டு வருவதுண்டு. இந்த தொடர்பால் அமைதிப்படைக்கும் கதிரவேலருக்கும் ஓர் சிநேகபூர்வமான தொடர்புகள் இருந்தது. கதிரவேல…
-
- 2 replies
- 1.2k views
-
-
அம்மா என்னும் தெய்வம் கஜன் எண்பது வயதாகியும் ,இருபது வயது குமரி போல் ஓயாமல் சுழன்று கொண்டு இருக்கும் எனது அம்மா , பாத்ரூமில் சறுக்கி விழுந்ததிலிருந்து ,கடந்த இரண்டு மாதகாலமாக படுத்த படுக்கையாய் மட்டுமே இருக்கின்றார்.விழுந்த வலியை விட இயங்காமல் இருப்பதே அந்தக்கிழவிக்கு மேலும்மேலும் வலியைக் கொடுத்தது, அந்தக் கால கிழவி அல்லவா , சோம்பல் என்றாலே என்னவென்று அறியாத கிழவி அவள். திடீரென்று மூச்சு வாங்கியது கிழவிக்கு , பயந்து போன நான் இன்றுதான் வைத்திய சாலைக்கு கொண்டு வந்தேன்.அம்மா என்னை விட்டுபோய் விடுவாளோ என்ற ஏக்கம் திடீரென்று என்னைப்பற்றிக்கொண்டது என்றுமில்லாதவாறு இன்றைக்கு. கணவன் என்னை விட்டு பிரிந்து வேறோத்தியுடன் சென்ற பின், இருந்த ஒரு மகளும் தான் பாய் பிரண்டுடன் சென…
-
- 2 replies
- 2.7k views
-
-
நல்ல காலம் பிறக்குது 1:50 PM Posted by Siva Sri No Comment நல்ல காலம் பிறக்குது இந்தக் கிழமை கட்டாயம் பாரிசுக்கு போகவேண்டும் காரணம் என் சிறுவயது நண்பன் சிவாவின் அழைப்பு.கட்டாயம் நீ வரவேணும் டிக்கெட் போட்டு தரலாம் ஏனெண்டால் இண்டைக்கு நான் இந்தளவு மகிழ்ச்சியாய் இருக்கிறதுக்கு காரணம் நீ தாண்டா என்று தொடர்ந்து வற்புறுத்தியதால் மறுக்க முடியாமல் போவதாக முடிவெடுத்து விட்டேன்.எனது நகரத்தில் இருந்து பாரிசுக்கு அதி வேக ரயிலே ஆறு மணித்தியாலம் ஓடும் அதனால் விமானத்தில் போனால் நேரத்தை மிச்சம் பிடிக்கலாம் இரண்டு நிகழ்வும் அடுத்தடுத்த நாளில் வருவதால் போகலாம் என்று முடிவெடுத்து முதலாளியிடம் மென்முறயில் இரண்டு நாள் லீவு கேட்டதும் முகத்தை சுளித்து முடியாது என்றான்.எனவே அடுத்து வ…
-
- 0 replies
- 1.1k views
-
-
‘சாத்தானின் மைந்தன்’ - இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் (லண்டன்) 29.04.1945 (இரவு) தூரத்தில் கேட்டுக்கொண்டிருக்கும் பீரங்கிகளின் வெடிச்சப்தம் அதல பாதாளத்தில் அமைக்கப்பட்டிருந்த பங்கரில் வாழும் அந்த நாயை மிகவும் பயப்படுத்திவிட்டது. வெளியில் ஓடியாடித்திரிந்த அந்த அல்ஸேஸியன் நாய் கடந்த சில மாதங்களாக இந்த பங்கரில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இயற்கை வெளிச்சத்தைக் கண்டே எத்தனையோ மாதங்களாகி விட்டன. பங்கரின் குறுகிய பாதைகளில் அங்குமிங்குமாகத்தெரியும் சின்ன வெளிச்சங்கள் ஏதோ ஒரு குகையில் இருட்டில் அகப்பட்ட உணர்வையே கொடுப்பதால் அந்த அல்ஸேஸியன் நாய் என்னேரமும் ஏதோ ஒரு பயத்தில் மனமுடைந்து போயிருக்கிறது. வெளிச்சமற்ற சவப்பெட்டியில் வாழ்வது போலிருப்பதாக அந்த நாய் உணர்கிறது. வெள…
-
- 2 replies
- 1.4k views
-
-
அப்போதெல்லாம் பள்ளி விடுமுறை விட்டால் எங்கள் சொந்த ஊரான கிராமத்திற்கு செல்வது வழக்கம். நான் அரைக்கால் சட்டை அணிந்த காலம் அது. மூன்றாம் வகுப்பு படிக்கும் போதே தனியாக ஊருக்கு சென்று வந்து விடுவேன். தேர்வு சமயத்தில் என் தாத்தா இறந்து விட்டார் என்று செய்தி வந்தது. அம்மாவும் அப்பாவும் உடனே ஊருக்கு கிளம்பி விட்டார்கள். நானும் என் தம்பியும் தேர்வு எழுத வேண்டுமென்பதால் மதியத்திற்கு மேல் ஆள் விட்டு அழைத்து கொள்வதாக முடிவு. ஆனால் நாங்கள் முன்னரே தேர்வு எழுதி முடித்து விட்டு ஊருக்கு தனியாக கிளம்பி சென்று விட்டோம். அன்று முதல் நான் தனியாக ஊருக்கு செல்ல அனுமதி கிடைத்தது. அப்படி தான் ஒரு நாள் நான் ஊருக்கு புறப்பட்டேன். பேருந்திலிருந்து இறங்கி இரண்டு கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டும…
-
- 0 replies
- 1.7k views
-
-
விம்பம் இதமான காலை நேரம். இளவேனிற் காலத்தின் ஆரம்பம். ஆங்காங்கு புள்ளினங்களின் கீச் ;கீச்’ ஒலி. ஐன்னல் திரைச்சீலை இடைவெளிகளினூடாககதிரவனின் ஒளிக்கீற்று கட்டிலில் விழ ஆரம்பித்தது. ராதி மெதுவாகப் புரண்டு படுத்தாள். மெல்லிய திரும்பலிலேயே வயிற்றுக்குள் குழந்தை உதைத்தது.‘’அம்மா’’ என்ற வார்த்தை அவளையறியாமலேயே தன்னிச்சையாய் உதிர்ந்தது. ரமேஸ் அதிகாலையிலேயே எழுந்து வேலைக்குப் போய்விட்டதால் பக்கத்துப் படுக்கை வெறுமையாய்க் கிடந்தது. ரமேஸ் அவன்தான் எவ்வளவு நல்ல கணவன். மெல்ல எழுந்து திரைச்சீலைகளை நீக்கி விட்டாள். கண்ணாடி ஐன்னலூடாக வீதியில் அவசரம் அவசரமாக அசையும் மக்கள் கூட்டம். அவளது நினைவுகள் தான் பிறந்து வளர்ந்த அந்த அழகிய கிராமத்தை அச…
-
- 26 replies
- 5k views
-
-
சரோஜா அம்மா அன்று விடிந்ததிலிருந்து பரபரத்துக்கொண்டிருந்தார். அவரிடம் ஒரு உற்சாகம் ஒட்டிக் கொண்டிருந்தது. இவரின் பரபரப்பை பார்த்த அவர் கணவர் சரோஜா அம்மாவை கொஞ்சம் ஆசுவாசப்படுத்தும் விதமாக „இங்க பாரு இப்படி ஓடி ஓடி எல்லாவற்றையும் தயார் படுத்திக்கொண்டு உம்முடைய உடம்பை கெடுக்க வேண்டாம் . நீ இப்படி எல்லாம் ஆர்ப்பரிக்கிறதுக்கு உன்னுடைய மருமகன் இன்று வருவானோ, என்னவோ தெரியாது . அவனுக்கு தானே எங்களை அவ்வளவாக பிடிப்பது இல்லை. ஆகவே இந்த ஆர்பாட்டங்களை விட்டு விட்டு எனக்கும் உனக்கும் கோப்பி போட்டுகொண்டு வந்து இந்த கதிரையில கொஞ்சம் அமரும்“ . சிறு கண்டிப்புடனும், கரிசனையுடனும் குமரேசன் கூறினார் . அதற்கு „என்னங்க சொல்றீங்க ? இன்றைக்கு உங்களுக்கு 80வது வயது பிறந்த நாள் . மகள் ரதி கட்…
-
- 5 replies
- 1.8k views
-
-
மூன்றாம் வகுப்பாக இருக்கலாம் தென்னை மட்டையில் பட் செய்து நெதர்லாந்தில் இருந்து வந்த உருளைக்கிழங்கு விதை பெட்டியில் ஒரு பகுதியை வெட்டி விக்கெட் ஆக்கி, வீட்டிற்கு முன் இருந்த ஒழுங்கையில் டென்னிஸ் பந்துடன் தொடங்கியது கிரிக்கெட் பைத்தியம் . பாடசாலை முடிய பின்னேரம் ,சனி ஞாயிறு காலை மாலை என விளையாட்டுத்தான் .எனது அண்ணர் ,தம்பி, அடுத்த விட்டுக்கார பகி ,சுதா என்று ஐந்து பேரும் தான் டீம் .மாறி மாறி பந்து எறிவதும் பாட்டிங் செய்வதும் என்று அலுக்காமல் விளையாடுவோம் .தம்பிக்கும் பக்கத்துக்கு விட்டு பகிக்கும் அவ்வளவு ஆர்வம் இல்லை இருந்தாலும் நாங்கள் கொடுக்கும் அலுப்பால் அவர்களும் வருவார்கள் .பக்கத்துக்கு வீட்டு சுதா மட்டும் இடக்கை ஆட்டக்காரன். விடுமுறை என்றால் காலை எட்டுமணிக்கே கதவை…
-
- 21 replies
- 2.4k views
-
-
நட்சத்திரக் குழந்தைகள் - பி. எஸ். ராமையா (மணிக்கொடி எழுத்தாளர்) ’அப்பா நட்சத்திரங்களுக்குக் கூட அப்பா உண்டோ?’ ‘உண்டு அம்மா!’ ‘அவர் யார் அப்பா?’ ‘சுவாமி.’ ‘சுவாமியா? அப்பா! அவர் கூட உன்னைப்போலத்தானே இருப்பார்? நட்சத்திரம் ரொம்ப அழகாயிருக்கே. அவர் அப்பா கூட அழகாத்தானே இருப்பார்?’ ‘ஆமாம் அம்மா! சுவாமியினுடைய அழகைப் போல வேறு யாருக்கும் அழகு இல்லை.’ ’சுவாமி கூட உன்னைப் போல நல்லவர்தானே?’ ‘ஆமாம்’ ‘ஆமாம். எனக்குக்கூடத் தெரியறது. சுவாமி ரொம்ப.... ரொம்ப நல்லவர். நட்சத்திரமே பளிச்சின்னு அவ்வளவு நன்னாயிருக்கே. அவா அப்பா எப்படி இருப்பார்!’ ‘அவர் ரொம்ப நல்லவர். நம்மையெல்லாம் விடப் பெரியவர்.’ ‘அப்பா! நட்சத்திரம் எப்போ பிறக்கும்?’ ‘சாயங்காலத்தில்.’ ‘எப்படியப…
-
- 0 replies
- 2.3k views
-