Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. என்ட வாழ்க்கையில் நான் கண்ட,கேட்ட,நடந்த மறக்க முடியாத சம்பவங்களை தொடராக எழுதப் போறேன்.நீங்களும் உங்கள் வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான சம்பவங்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். சம்பவம் 1: அப்பாவின் வேலை மாற்றம் காரணமாக நாங்கள் அந்த புது ஊருக்கு குடி பெயர்ந்தோம்.அப்பா முதலே அந்த ஊருக்கு வந்து வீடு எல்லாம் இருப்பதற்கு பார்த்து வைத்து விட்டு வந்த படியால் நாங்கள் நேரே அந்த வீட்டுக்கு குடி பெயர்ந்தோம்.அந்த வீடு நகரத்தின் மையத்தில் இருந்தது.முக்கியமான பாடசாலைகள்,அரச வைத்தியசாலை எல்லாம் பக்கத்தில் இருந்தது.நாங்கள் இருந்த வீதியில் அண்ணாமார் தங்கி படிக்கும் விடுதி இருந்தது.அந்த விடுதியின் இரு வீடுகள் தள்ளி ஒரு அம்மாவும் அவர‌து வயதிற்கு வந்த மகளும் இருந்தார்கள்[அந்த அக்கா…

    • 40 replies
    • 6.7k views
  2. சீதாவனம் – ஜி .விஜயபத்மா சூர்ய அஸ்தமனம் துவங்கி விட்டது… காட்டுக்குள் …இருளுடன் , குளிரும் போட்டி போட்டுக்கொண்டு ….பரவத் துவங்கியிருந்தது . துறவிகளுக்கு வரக்கூடாத கவலை வால்மீகியின் முகத்தில் தென்பட்டது .. அவர் தன்னை தானே சமாதனப்படுத்திகொண்டு , வேக வேகமாக நடக்க ஆரம்பித்தார் . அவர் தன் தலையை இருபுறமும் திருப்பி பார்த்தபடி ஆட்டி ,ஆட்டிக்கொண்டு நடக்கும் வேகமும் ,நாலாப்புறமும் துலாவும் கண்களையும் பார்த்தால் காட்டிற்குள் அவர் யாரையோ தேடுகிறார் என்பது புலப்படுகிறது .. கண்களுக்கு எட்டிய வரையில் தூரத்தில் வெயில் விலகிக்கொள்ள ,இருளை விருப்பத்துடன் போர்த்திக் கொள்ளும் பயிர்களின் மங்கலான , கருமஞ்சள் நிறம் தவிர வேறு எதுவும் தெரியவில்லை ..இன்று ஏனோ காட்டின் மொத்த மரங்களும் சத்தி…

  3. பெய்யெனப் பெய்யும் மழை குமரன் கிருஷ்ணன் முன் குறிப்பு: 1. ஒப்பு மொழி [compatible language]: கி.பி 2300 வாக்கில் உருவாகி கடந்த நூறாண்டுகளாய் உலக மக்கள் அனைவராலும் பேசப்படும் மொழி. 2.இந்தக் கதையில் வரும் உரையாடல்கள் அனைத்தும் ஒப்பு மொழியில் பேசப்பட்டதாகும். நமக்கு அம்மொழி பரிச்சயம் இல்லை என்பதால் தமிழில் அவை மொழி பெயர்க்கப்பட்டு உள்ளன. 3. சர்வதேச மழை நினைவு தினம்: உலக நகரங்களில் மழை பொழிவது நின்று போய் சுமார் முன்னூறு ஆண்டுகள் ஆகி விட்டன. இறுதியாக பதிவு செய்யப்பட்ட மழை ஆகஸ்ட் 30, 2070ல் பெய்ததாய் பழங்கால‌ அரசாங்க ஆவணங்கள் குறிப்பிடுவதால், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 30, மழை நினைவு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. 4. ஆதிவாசிகள் தீவு: “நாகரிகம்” அடையாத‌ மனிதர்கள்…

  4. காதலென்னும் கற்பிதம்.... அன்புள்ள ...... ( உன்னை மறந்து போனதற்கான கடைசி சாட்சியாய் இந்தக் கடிதம்.) தெரிந்தோ தெரியாமலோ காதல் ஒரு முடிவற்ற வேரைப் போல் உடல் முழுக்க சுற்றிப் படர்ந்திருக்கும் மரம் நான். என்னால் யாரையும் வெறுக்க முடியாது, காயப்படுத்துகிறவர்களையும் சேர்த்து காதலிக்கும் சாபம் பெற்றவன் நான். காதலின் மகத்துவம் காயப்படுதலில்தான் இருக்கிறதென நம்புகிறவன். அதனாலேயே நீ தந்த எந்தவொரு காயமும் எனக்கு பிரதானமாய் தெரிந்திருக்கவில்லை. நமக்கிடையிலான காதல் விளையாட்டுத் தனமாய் துவங்கி முடிந்ததில் நம்மைத் தவிர அதிகமும் வியப்பு கொண்டது வேறு யாராகவும் இருக்க முடியாது. அந்த நாட்களை திரும்பிப் பார்க்கையில் எப்படி வாழக் கூடாதென்பதற்கு உதாரணமாய் சில விசயங்களை நீ கற்றுக் கொள்வாய் என…

  5. Started by கிருபன்,

    ஆண் மழை எஸ். ராமகிருஷ்ணன் வெளியே மழை பெய்யத் துவங்கியிருந்தது. இன்று விடுமுறை நாள். சுனந்தாவும் வீட்டி லிருந்தாள். ஜன்னலுக்கு அப்பால் தெரியும் கருத்தமேகங்களைப் பார்த்த படியே அவசரமாக வீட்டின் வெளியே சென்று மழையை அளப்பதற்கான மழைமானியை வைத்தேன். சிறிய தோட்டமது. சுனந்தா நிறைய பூச்செடிகளை வைத்து வளர்த்து வருகிறாள். வானிலிருந்து மழைத் துளிகள் வேகமாக இறங்கத் துவங்கின. அப்பாவிடமிருந்து நான் கற்றுக் கொண்ட ஒன்றே ஒன்று, மழை பெய் யும்போது அதை அளவிட வேண்டும் என்பது தான். எனக்கு இந்தப் பழக்கம் திருமணத்தின் பிறகுதான் துவங்கியது. எதற்காக இப்படி மழையை அளவிடுகிறேன் என்று புரியவில்லை. ஆனால் அதில் இனம் புரியாத ஈடுபாடு குவிந்து விட்டது. அப்பா தான் வேலை பார்த்த ஊர்களில் பெய்த …

    • 2 replies
    • 2.5k views
  6. Started by கிருபன்,

    ஸ்நேகிதி சத்யராஜ்குமார் இதோ இவன்தான் அனிதாவின் வாழ்க்கையைச் சின்னாபின்னமாக்கியவன். அந்த அமெரிக்கப் பெருநகரத்தில் திடுமென அவள் எதிரில் நிற்கிறான். அவனுடைய அரைக்கை சட்டைக்குக் கீழே மணிக்கட்டில் இன்னமும் அந்தத் தழும்பு ஒரு கருப்புக் கோடாய் அப்படியே இருக்கிறது. நியாயமாய் அவள் பார்வையில் கோபத் தீ பற்றி எரிய வேண்டும். அல்லது வெடுக்கென்று முகத்தைத் திருப்பிக் கொண்டு போயிருக்கவும் செய்யலாம். ஆனால் முன்வரிசைப் பற்கள் பளிச்சிட அழகாய்ச் சிரிக்கிறாள். பெரிய கண்களை இன்னும் விரித்து ஆச்சரியமாய்க் கூவுகிறாள். இது அனிதாவின் சுபாவம். அவளுக்குக் கோபப்படத் தெரியாது. இந்தச் சுபாவம்தான் அவள் வாழ்க்கையைக் கலைத்துப் போட்டது. “டேய் ரஞ்சித்? அமெரிக்காவிலா இருக்கே? எப்படா வந்தே?” சான் …

  7. Started by கிருபன்,

    பொலிடோல் நடேசன் (மிருக வைத்தியர் - அவுஸ்திரேலியா) ஆண் இளைஞனாக இருக்கும் காலத்தில் தனது காமத்தின் வீரியத்தால் தனக்குரிய பெண்ணை வசப்படுத்தி வைத்திருக்கலாம் என நினைக்கிறான். மத்திய வயதில் பணத்தால் அது முடியும் என மனம் சொல்லுகிறது வயதான காலத்தில் பிள்ளைகள், குடும்பம் என்பன பெண்களை கட்டுக்குள் வைத்திருக்கும் என அவன் தீர்மானிக்கிறான். இப்படியான ஆண்களின் சிந்தனையைத் தாண்டிச்செல்லும்; அன்னா கரினாக்கள் ரஷ்யாவில் மட்டுமல்ல இலங்கையின் ஒவ்வொரு கிராமங்களிலும் இருக்கிறார்கள். என்பதை புரிந்து கொள்ளும் சந்தர்ப்பம் எனக்கு எண்பதாம் ஆண்டுகளில் கிடைத்தது. அந்த அனுபவம் மிகவும் வித்தியாசமானது. மருத்துவர்களுக்கு மட்டுமே இறந்த மனிதர்களின் உடலை வெட்டி உள்ளுறுப்புகளை கூறாக்கி பார்க்கும் …

  8. மாலதி டீச்சர் .......அப்போது மூன்று வயது இருக்கும். என் அண்ணா பள்ளிக்கு போகும் போதெல்லாம் நானும் அடம் பிடிப்பேன் கூட போகவேணு மென்று . ஏற்கனவே அண்ணவின் பை தண்ணீர் போத்தல் மத்திய உணவு பெட்டி என்று தோளில் மாட்டி பல முறை ஒத்திகை பார்த்தாயிற்று . அந்த சுப நாளும் வந்தது . முதலில் பாலர் வகுப்பு என்னும் .( அரிவரி )வகுப்பு . முதல் நாள் அதிகாலயே எழுந்து விட்டேனாம். அப்பா அப்போது பட்டணத்தில் வேலைபார்த்துக் கொண்டிருந்தார். எனது நச்ச்ரிப்பு தாங்காமல் அம்மா கடிதம் எழுதி எனக்கு தேவையாதை ஒரு நண்பர் மூலம் கொடுத்து விட்டிருந்தார் . பள்ளிக்கு போகுமுன்பே அதை பிரித்து ஒத்திகை பார்த்தாயிற்று. அந்த சுப நாள் ஒரு திங்கட்கிழமை. மாத ஆரம் பம என எண்ணுகிறேன். அங்கு இரு பெண ஆசிரியைக ளும் ஒரு தலை…

  9. புதிய குரல்கள் புதிய தடுமாற்றங்கள் :தமிழ்ச் சிறுகதை , இன்று… ஒன்று பத்துவருடம் முன்பு சொல்லப்பட்ட நகைச்சுவைத் துணுக்கு இது. நவீனச் சிறுகதையை எழுதுவது எப்படி? ”முதலில் சிறுகதையை ஒழுங்காக எழுதிவிடவேண்டும். அதன்பிறகு ஒன்று விட்டு ஒன்று வீதம் சொற்றொடர்களைப் பொறுக்கிச் சேர்த்து வரிசைப்படுத்தினால் நவீனச்சிறுகதை ஆகிவிடும்.” ஆம்,சொற்றொடர்ச்சிக்கல்களை உருவாக்குவதே நவீனச்சிறுகதை என்ற எண்ணம் எழுத்தாளர்களில் ஒருசாராரிடம் வலுவாகவே இருந்தது. உண்மையில் சிக்கலான சொற்றொடர்கள் கொண்ட படைப்புகள் உருவாவதற்கான காரணங்கள் பல இருந்தன. ஏராளமான எழுத்தாளர்களுக்கு தமிழில் போதிய பயிற்சி இல்லை. எளிய நேரடிச் சித்தரிப்பை அளிக்கவே திண்டாடக்கூடியவர்கள். திடீரென்று மனம் செயல்படும் சிடுக்குகள…

  10. Started by sOliyAn,

    1. கதை ஒளி: என்ர முருகனே http://www.youtube.com/watch?v=4SwPFY557lI நாடோடிக்கதை கதைசொல்லி: சுஜீத்ஜி ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, படத்தொகுப்பு: Eternalicon Santhan தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா" + "சுஜீத்ஜி" வெளியீடு: www.kathaisolli.com

    • 183 replies
    • 15.9k views
  11. மனக்கணிதம் - சுதாராஜ் - தாமரா வீட்டை விட்டுப் போய் பத்து நாட்களாகிறது! இன்றைக்கு வருவாளோ.. இன்றைக்கு வருவாளோ, என எண்ணி ஏமாந்த பொழுதுகளைப் போலவே இன்றைய நாளும் போய் விடுமோ என்ற ஏக்கம் மனதை ஆக்கிரமித்திருக்கிறது. சோகம் அவனைக் குப்புறப் போட்டு அழுத்தியது. படுக்கையிலிருந்து எழவும் மனதில்லை. அழவேண்டும் போன்றதொரு உணர்வு தொண்டையை அடைத்துக்கொண்டிருக்கிறது. அழுகை எதற்காக? தாமராவுக்காகவா? தாமரா வீட்டை விட்டுப் போன நாளிலிருந்து அவனுக்கு, தான் தனிமைப்பட்டுப்போனது போன்றதொரு விரக்தி மனதை எரித்துக்கொண்டிருந்தது. தன் உணர்வுகளை அவள் புரிந்து கொள்ளவில்லையே என மனம் வெதும்புகிறது. அப்படி அலட்சியப்படுத்தினால் அதற்கு அழுகை ஏன்? தாமரா தனக்கு யார்? என்ன உறவு? உறவு ஏதுமில்லையெனில் ஒன்றுமே இல்…

  12. வைர விழா (சவால் சிறுகதை) முன் குறிப்பு: மக்களே!!! சவால் சிறுகதையாம். ஏதோ நம்மால முடிஞ்சே இலக்கியப்பணி. சிகப்புல உள்ள வாசகங்கள் இடம் பெற்றிருக்கனுமாம். காமினி கெட்டவள் இல்லையாம். ப்ளாஷ் பேக் எழுதக் கூடாதாம். அப்பப்பா... எவ்வளவு நிபந்தனைகள். விறுவிறுப்பா(அப்படின்னு எனக்கு நினைப்பு) கதை ஒரே நாள்ல நடக்கற மாதிரி எழுதியிருக்கேன். முயற்சி எப்புடின்னு நீங்களே சொல்லுங்க. விடியற்காலை 5:45 மணி: அண்ணா நகர் 18th கிராஸ். சூரியன் மாமனைப் பார்த்து பேசுவோமா வேண்டாமா என்று வெட்கப்பட்ட பெண்போல் தொடுவானத்தில் எட்டிப்பார்த்தது. பால்காரர்களும் பேப்பர்காரர்களும் ஓசோன் காற்றை சுவாசித்தபடி கர்ம சிரத்தையாக வீடு வீடாக பாலிட்டார்கள், பேப்பரிட்டார்கள். "சொத்" என்று கதவில் மோதி படியில் விழுந…

  13. புத்தரின் தொப்பி ஜீ.முருகன் இப்போது கனவுகள் அதிகம் வருகின்றன. நிம்மதியான தூக்கம் என்பது அரிதாகி விட்டது. இதற்கு நான் புதிதாக வாங்கியிருக்கும் கட்டில்தான் காரணம் என்றால் நீங்க நம்பமாட்டீர்கள். இடது பக்கம் சாய்ந்து படுத்தால் நல்ல கனவுகளும், வலது பக்கம் சாய்ந்து படுத்தால் கெட்ட கனவுகளும் வருகின்றன என்றால் மொத்தமாகவே நம்பமாட்டீர்கள். தயவு செய்து நீங்கள் நம்பவேண்டும். நான் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. தூங்கிய சிறிது நேரத்திலேயே கனவுகள் தொடங்கிவிடுகின்றன. கனவுகளின் விபரீதமான கணத்தில் திடுக்கிட்டு விழித்துப் பார்த்தால் பத்து நிமிடம்தான் தூங்கியிருப்பது தெரிகிறது. ஆனால் பத்து மணி நேரம் நிகழக்கூடிய சம்பவங்களைக் கொண்டதாக இருக்கின்றன கனவுகள். சில கனவுகள் பன…

  14. முகவுரை! இன்னும் சரியாக மூன்று மணித்தியாலங்களில் பூமி தூள் தூளாக வெடித்து அழியப்போகிறது என்று காலை ஐந்து மணிக்கு எழும்பி சுருட்டை பற்றவைக்கும் கந்தசாமிக்கு தெரிந்திருக்க ஞாயமில்லை. கந்தசாமிக்கென்ன? நல்லூர் கந்தசாமிக்கு கூட தெரியாது. அவன் கோயிலுக்கு மேலாக மெல்ல மெல்ல உதித்துக்கொண்டு இருக்கும் சூரியனுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மூன்று மணிநேரமே அவகாசம் இருந்தாலும் கந்தசாமி பற்றி தெரியாமல் கலக்ஸி பற்றி பேசுவதில் அர்த்தமில்லை. ஸோ இரத்தின சுருக்கம்! யாழ்ப்பாணம், வைமன் றோட்டு சந்தியில் இருக்கும் பாரதியார் சிலையிலிருந்து கந்தர்மடம் நோக்கி போகும் அரசடி வீதியில், ஒரு ஐந்து ஆறு வீடுகள் தள்ளிப்போனால் ஒரு இராணுவ முகாம் வரும். அந்த முகாமுக்கு பக்கத்து வீட்டில் தான் …

    • 4 replies
    • 2.1k views
  15. சதா சண்டித்தனம் செய்யும் ஒருவனை வீட்டில் பூட்டி வைக்கலாம். நான்கு அடி கொடுத்து அடக்கப் பார்க்கலாம். பேசாமல் முறைத்துக்கொண்டு மௌன வதை செய்யலாம். அதிக பட்சம் சோறு போடாமல் கூட இருக்கலாம். யாராவது உணவகத்தில் வேலைக்குச் சேர்த்து விடுவார்களா? என் அம்மாவுக்கு இதுபோன்ற திட்டமெல்லாம் எங்கிருந்துதான் வருமோ. சபா மாமாதான் இனி உன்னை மேய்க்க லாயக்கு என கழுத்தைப் பிடித்து தள்ளாதக் குறையாக அனுப்பியே விட்டார். சபா மாமா என்றாலே எனக்கு நடுங்கும். சபா மாநிலத்தில் போலிஸ் வேலை செய்யப்போனவர், மேலதிகாரி ஏதோ திட்டினான் என்பதால் நான்கு அறையும் கூடவே வேலையையும் திரும்ப கொடுத்துவிட்டு தீபகற்பத்திற்கு வந்து சேர்ந்துவிட்டார். சபாவில் குறிப்பிட்ட ஒரு இன பெண்களுக்குக் கறுத்த கட்டை என்றால் கொள்ளை …

  16. சிறுகதையா...........? தொடர்கதையா.......? கதவைத் திறப்பதற்கு முன்னரே சத்தம் வெளியாலே பெரிசாய்க் கேட்டது. ஞானமண்ணையின்ரை பெருத்த குரல் கோபக் கனலாய் வெடித்துப் சிதறிக் கொண்டிருந்தது. சந்திராக்கா ரெலிபோன் அடிச்சுக் கூப்பிட்டதால் தான் நான் இங்கே உடனே வந்தனான். வாடா வா... அப்ப சொல்லச் சொல்ல எல்லாத்தையும் பிழையெண்டு பேசுவாய்... இப்ப வந்து கேள்.... எல்லாம் எங்கே வந்து நிக்குதெண்டு. அண்ணை முதலிலே இந்தச் சத்தம் போடுறதை கொஞ்சம் நிப்பாட்டுங்கோ.. அக்கம் பக்கத்தவன் கேட்டிட்டு பொலிசுக்கு அடிச்சுச் சொல்லப் போறான். ஜயோ.... இப்ப எத்தனை தரம் சொல்லிப் போட்டன்... இந்த மனுசன் ஏதோ குடி முளுகிப் போனது போலே ஆர்ப்பாட்டம் செய்து உந்தத் துள்ளல் துள்ளிக் கொண்டிருக்கிறது. யேய்... சும்மா கதையாத…

    • 0 replies
    • 1.9k views
  17. https://www.youtube.com/watch?v=ApUVBLDxITM எழுத்தாளர் புதுமைபித்தன் அவர்கள் கலைமகளில் எழுதிய செல்லம்மாள் என்ற சிறுகதையை மேலே உள்ள வீடியோவில் காட்சி படுத்தி இருக்கிறார்கள் . கீழே உள்ள இணைப்பில் அவர் எழுதிய செல்லம்மாள் என்ற சிறுகதை இருக்கிறது. இந்த சிறுகதையை இதுவரை படிக்காதவர்கள் வீடியோவை பார்க்கு முன் வாசித்தால் நன்றாக இருக்கும்<br /> http://azhiyasudargal.blogspot.co.uk/2009/07/blog-post_6534.html<br /> பொதுவாக தீவிர வாசிப்பு என்னிடம் இல்லை என்று எனது பால்ய நண்பர்கள் ஒரு குற்றச்சாட்டாக வைப்பதுண்டு ..ஆனால் எதையும் யாரும் விவரிக்கும் பொழுது உன்னிப்பாக கேட்க தவறுவதுவில்லை,, ஒரு ஜெயகாந்தன் ,ஒரு இந்திரா பார்த்தசாரதி போன்றவர்களுக்கு மேல் வாசித்த…

    • 0 replies
    • 3.2k views
  18. முகவரி தொலைத்த முகங்கள். மலைகள் இதளிற்காக.. சாத்திரி..பிரான்ஸ் ஸ்பெயின் நாட்டின் கலிலா என்கிற கடற்கரை நகரத்தின் அடுக்குமாடி குடியிருப்புக்களில் ஒன்றில்தான் வரதனின் வீடும் இருந்தது.அவரிற்கு இரண்டு பிள்ளைகள் மூத்தவன் வரதனைப் போலவே கப்பல் மாலுமி ஆனால் ஒரு உல்லாசப் படகின் மாலுமியாக இருக்கின்றான். மகள் பாசிலோனா நகரில் தங்கியிருந்து உயர் கல்வி பயில்கிறாள்.மனைவி இரண்டு வருடங்களிற்கு முன்னர் தான் நோய்வாய்ப் பட்டு இறந்து போயிருந்தாள். இப்போ இந்த வீட்டில் வரதனும் அவரது வளர்ப்பு நாயான புலி மட்டுமே. மகள் ஆசைப் பட்டு கேட்டதற்காக அந்த நாய்க்குட்டியை வரதன் வாங்கிக் கொடுத்திருந்தார். அதற்கு என்ன பெயர் வைக்கலாமென அனைவரும் ஆலோசித்தபொழுது மகள் ரைகர் என்று வைப்போம் என…

  19. கிழவனின் உயிர் சயந்தன் “பொழுதுவிடிந்து வெளிச்சம் பரவியதும், புதைத்த இடத்தில் பூ வைக்கலாமென்று போனால், ஆண்டவரே, பச்சைப் பிள்ளையை மூடிய குழியில் மண்ணைக் கிளறிப் போட்டிருந்தார்கள். என்னால் தாங்க முடியவில்லை..” மர்மக்கதையொன்றின், முதலாவது முடிச்சை இலாவகமாக முடிவதுபோல நடேசுக் கிழவர் ஆரம்பித்தபோது நான் நிமிர்ந்து உட்கார்ந்து தலையை அவரிடத்தில் சரித்தேன். இம்மாதிரியான திகில் கதைகளை – ஏழு மலை, தாண்டி ஒரு குகைக்குள் கிளியின் உடலில் உயிரைப் பதுக்கி வைத்திருக்கும், மந்திரவாதிகளின் கதைகளை – வெள்ளை இறகுகள் முதுகில் முளைத்த கேட்ட வரம் தரும் தேவதைகளின் கதைகளை இப்பொழுது யாரும் பிள்ளைகளுக்குச் சொல்வதில்லை. “வாயைத் திற.. அல்லது ஆமிக்காரனிடம் பிடித்துக்கொடுப்பேன்” என்று நேற்றுப்பி…

  20. Started by கிருபன்,

    மழலை தெளிவத்தை ஜோசப் திடீரென்று தான் அது நடந்தது! எத்தனை பேர் இருக்கின்றோம். யாருமே எதிர்பார்க்கவில்லை. மம்மி என்று அன்பொழுக அழைக்கப்படும் அம்மா மிம்மி என்று பாசத்துடன் அழைக்கப்படும் அம்மம்மா. பெரியம்மா, பெரியப்பா, குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் சாந்தி… எத்தனை பேர்! அந்த இரண்டு வயதுக் குழந்தையைச் சுற்றி இத்தனை பேர் இருந்தும் இது எப்படி நடந்தது! எப்படி நடந்தது… எப்படி நடந்தது… என்று எத்தனை தடவை கேட்டாலும் பதில் ஒன்றும் கிடைக்கப்போவதில்லை. எப்படி என்கின்ற விவரணங்களை எல்லாம் மீறி மேவிக் கொண்டு அது நடந்துதான் இருக்கிறது. அதுவும் திடீரென்று யாருமே எதிர் பார்த்திராத விதத்தில். இரண்டு வயதுப் பெண் பிஞ்சின் குஞ்சு விரல்களுக்கு எட்டும் உயரத்தில் குள…

  21. விதியை வென்ற மதி! ஒரு நகரத்திற்கு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே! ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள். அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே! மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும்;வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும். இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது. இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப் பொருத்தமானவன். ஆக, மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின் தலையெழுத்து, ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம். இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்தே யாரும் அந்தப் பதவிக்கு ஆசைபடாமலி…

  22. லண்டன்அகதி இளைய அப்துல்லாஹ் லண்டனில் எறிக்கும் வெயில்தான் வெள்ளைக்காரருக்கு பிடிக்கும். ஆனால் எனக்கு குளிர்தான் பிடிக்கும். காரணம் பல. பகலில் அந்த வெக்கையில் கட்டிலில் படுக்க முடியாது வியர்த்து ஒழுகும். இரவில் யன்னலைத் திறந்தாலும் அவியும். கட்டில் சூடு கிளைமேட் எல்லாம் சேர்ந்து வேகும் நித்திரை வராது. சிலர் வேர்வை ஒழுக ஒழுக படுப்பார்கள். என்னால் முடியாது. இப்பொழுது குளிர்காலம். எல்லோரும் குளிர் உடுப்புக்கு மாறி விட்டார்கள். ஹவுன்ஸ்லோவில் இருந்து எமது வீட்டுக்கு போகும் பாதைக்கு செல்ல கொஞ்சம் வேகமாக நடந்தால் பத்து நிமிடம் நடக்க வேண்டும். நடந்து தான் போகிறேன். குளிர் முகத்தில் அறைகிறது. மழை தூறப்போகிறது. வெள்ளைக்காரர் சொல்லுவினம் வைபையும் வெதரையும் நம்ப முடியாது எண்டு. …

  23. நோக்கியாவும் கயல்விழியும்! நெல்சன் சேவியர் இந்தக் கதையை நான் என்றுதான் ஆரம்பிக்க வேண்டும் என்று எனக்கும் ஆசை. ஆனால் இந்தக் கதையில் வரும் நான் என்பது என்னைக் குறிக்கும் என்பதாலும் என்னை உங்களுக்கு முன்பே தெரியும் என்பதும்தான் என்னுடைய பிரச்சினை. மேலும் அடுத்து நிறையக் கதைகளை நான் எழுத வேண்டி இருப்பதால்தான் யோசிக்கிறேன். பரவாயில்லை, நான் என்றே சொல்கிறேன். ஏனெனில் இது என்னுடைய கதை. நான்தான் அதை சொல்லியாக வேண்டும். இந்தக் கதை முடிந்ததும் நீங்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பீர்கள் என்பதுதான் கவலை. இப்படிக் கவலைப்பட்டால் நான் எப்படி எழுத்தாளன் ஆக முடியும்? நான் உங்களுக்குத் தெரிந்த இளைஞன்தான். என்னுடைய வயது ஒரு நல்ல வயதுதான். என்னுடைய பிரச்சினையே நான் காதலிக்காமல் போய்…

  24. ஒரு மனிதன் பல கதைகள்! கே.எஸ்.சுதாகர் மனோகரன் மாலை நேரங்களில்தான் அங்கு போவான். விரிவுரைகள் இல்லாத புதன், வியாழன் மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அவனுக்கு அங்கு வேலை காத்திருக்கும். பெரியதொரு வளவிற்குள் அந்த வீடு தனிமையில் இருக்கும். காரை கேற்றுக்குச் சமீபமாக நிறுத்திவிட்டு கொழுவியிருக்கும் கேற்றைத் திறந்து கொண்டு உள்ளே போனால், முற்றத்திலே சாய்வணைக்கதிரையில் சரிந்தபடி ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டு நியூமன் இருப்பார். நியூமன் (Robert Newman) ஒரு வெள்ளைக்காரன். கேற்றிலிருந்து வீட்டின் வாசல்வரை செல்லும் பாதையின் இருமருங்கிலும் அழகாக புல் வெட்டப்பட்டிருக்கும். சாய்வணைக்கதிரைக்குப் பக்கத்தில் ஒரு குட்டி மேசையும், இவனுக்கான கதிரையும் இருக்கும். மேசைக்குக்கீழே விரிக்கப்பட்டி…

  25. முதல் காதல் எத்தனை வயதில் என்று கேட்கும் நண்பர்களுக்கு மட்டுமல்ல எனக்கே என் கண்களில் தெறிக்கிறது ஒரு நக்ஷத்திர ஆச்சர்யம். 3 வயதில் என்ற என்னுடைய பதிலுக்கு வேறு என்ன செய்ய முடியும் ? நினைவுக்கே வராத அந்த வயதில் நான் பார்த்தாக இரண்டு பேர் மட்டுமே நினைவில் இருக்கிறார்கள். ஒன்று. அழ அழ அம்மாவிடம் என்னை விட்டு சென்ற அம்மாச்சி. மற்றொன்று, இலங்கை பயங்கரம் பற்றிய கண்காட்சி ஒன்றில் அப்பா கை நீட்டி சுட்டி காண்பித்த புலியுடன் நின்று கொண்டிருந்த இளம் வயது பிரபாகரன். பார்த்தவுடன் என்ன தோன்றியது என்று ஞாபகம் இல்லை. ஆனால் ஞாபகம் தெரிந்த முதல் நாளில் அன்பையும் தோன்ற வைத்த முதல் மனிதர். வயதானவர்கள் கூடி நிற்கும் கூட்டத்தில் வேடிக்கை பொருளாக என்னை வைத்து விளையாடும் சிறு வ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.