கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3071 topics in this forum
-
பிறந்தநாள்: ஒரு நிமிடக் கதை இன்று என் ஒரே மகன் கந்தர்வுக்கு பிறந்த நாள். நாங்கள் ஆனந்தமாக கொண்டாடி மகிழ என் கணவர் இப்போது உடன் இல்லை. வேலை நிமித்தமாய் மும்பை சென்றுள்ளார். “சித்ரா, என்னால கந்து பிறந்தநாளுக்கு வர முடியாது. அதுக்காக அப்படியே விட்டுடாதே... அவனுக்கு பிடிச்ச மாதிரி ரெண்டு, மூணு ட்ரெஸ் எடுத்துக் கொடுத்து காலையில மணக்குள விநாயகர் கோயிலுக்கு அழைச்சுட்டுப் போ. அப்படியே அன்னை ஆசிரமத்துல இருக்கிற என் அம்மாகிட்டேயும் அவனை அழைச்சுப் போய் அவங்க கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்க வை.” “சரிங்க...” “ நான் ஆன்லைன்ல சற்குரு ஹோட்டல்ல நூறு பேருக்கு டின்னர் ஆர்டர் பண்ணியிருக்கேன். வ…
-
- 1 reply
- 1.4k views
-
-
பாண்டிபஜார் பீடா 'ரெண்டு நிமிஷம் வெயிட் பண்ணுங்க... முதல் போணியாகட்டும்' என்று பீடாக்கடை கோபாலகிருஷ்ணா சொன்னான்.''ஏன்... என்னுதே முதல் போணியா இருக்கட்டுமே?'' என கடைக் கண்ணாடி அலமாரி மீது ஒரு ரூபாயை எடுத்துவைத்தார் வெங்கையா.இரண்டு ஸ்பெஷல் பீடாக்களை ஒரு காகிதத் துண்டில் பொட்டலம் கட்டி வெங்கையாவிடம் கொடுத்தான் கோபாலகிருஷ்ணா. கடை கல்லாப்பெட்டியில் சில்லறை இல்லை. அவன் சட்டைப் பையில் இருந்து அரை ரூபாய் நாணயத்தை எடுத்து, வெங்கையாவிடம் கொடுக்க வந்தான்.'உன்கிட்டேயே இருக்கட்டும். நாளைக்குப் போணி' எனச் சொல்லிவிட்டு, பாண்டிபஜார் பக்கம் வந்தார் வெங்கையா.அப்போதுதான் ஒவ்வொரு கடையாகத் திறந்துகொண்டிருந்தார்கள். கீதா கபேயும் அதன் பக்கத்தில் இருந்த வெற்றிலை பாக்குக் கடையிலும் மட்டும், …
-
- 1 reply
- 599 views
-
-
இது யோ.கர்ணனின் வலைத்தளத்திலிருந்து பதிகிறேன். எழுத்து எண்ணம் யாவும் கர்ணன். யுத்தத்தின் பின் வீடுகளிற்கு திரும்பிக் கொண்டிருக்கும் முன்னாள்ப் போராளிகள் சந்திக்கும் நெருக்கடிகள் பற்றி பல்வேறு இடங்களிலும் பலரும் பதிவு செய்திருக்கிறார்கள். ஆகவே நான் புதிதாக எதனையும் இங்கு குறிப்பிடவில்லை. அவர்கள் பற்றி, அவர்களது நிலைமை பற்றி இந்த உலகத்திற்கு குறிப்பாக தமிழ் சமூகத்திற்கு மிகத் தெளிவாகவே தெரியும். ஆயினும் காக்கப்படும் கள்ள மௌனத்தின் அர்த்தம் மிகக் கேவலமானது. இதுபற்றி ஒருவர் குறிப்பிடும் போது எழுதியிருந்தார் – ‘அவர்கள் வெற்றிகளிற்கு மட்டுமே உரிமை கோருவார்கள்’ என. உண்மைதான் அதனைச் சிறு திருத்தத்துடன் ஏற்றுக் கொள்ளலாம். வெற்றிபெற்றவர்களிற்கு மட்டுமே அவர்கள் உரிமை கோரு…
-
- 1 reply
- 895 views
-
-
ரங்கராட்டினம் - சிறுகதை நர்சிம், ஓவியங்கள்: செந்தில் அந்தத் தளம் பரபரப்பில் பற்றி எரியத் தொடங்கியிருந்தது. படப்பிடிப்புத் தளம் என்ற பெயர் எல்லாம் வெளியே உள்ளவர்களுக்குத்தான். இங்குள்ள எங்களுக்கு அது ‘ஸ்பாட்.’ அதுவும் என்னைப் போன்ற புதியவனுக்குத் திகுதிகுவென உடலில் நெருப்பு எரிவது போன்ற பிரமையை ஏற்படுத்திவிடும். ஒரே நேரத்தில் பலர், பல வேலைகளைச் செய்துகொண்டிருக்கும்போது எழும் இயற்கையான சத்தம்தான். ஆனால், எல்லாமே செயற்கைக்காக. எந்த நொடியிலும் இயக்குநர் வந்துவிடுவார். அவர் வருவதற்கு முன்னர் செட்டில் எல்லாம் பேசியது பேசியபடி இருக்க வேண்டும் என்பதைத் தாரகமாக வரித்துக்கொண்டு, ஒரு போர்ப்படைத் தளபதிபோல் சத்தம் கொடுக்கும் விக்டரைப் பார்த்துக்கொண்டிருப…
-
- 1 reply
- 2.5k views
-
-
மாற வேண்டாம்! சாரு தன் கணவர் மாதவனைப் பற்றி இப்படித்தான் புலம்புவாள்...‘பெரிய கம்பெனியில் ஜெனரல் மேனேஜர்னு பேர். என்ன சம்பளம் வாங்கி என்ன புண்ணியம்? மனுஷன் எச்சில் கையால் காக்கா ஓட்ட மாட்டார். வீட்டுக்கு அரிசி, பருப்பு கூட கெமிக்கல் பேலன்ஸில் அளந்து அளந்து வாங்குவார்... தரித்திரம்! மாப்பிள்ளை, பொண்ணுங்க விசேஷம்னு வந்தா கூட இருக்கறதுலயே மலிவான ரகத்துல துணிமணி வாங்கித் தருவார்.’ ‘‘ஏங்க, போகும்போது பணத்தை தலையில கட்டிக்கிட்டா போகப் போறோம்? கொஞ்சம் தாராளமாத்தான் செலவழியுங்களேன்!’’ என்றாள் ஒரு நாள்.மாதவன் புன்னகைத்து பதில் சொன்னார்... ‘‘என் குடும்பம் ரொம்பப் பெருசு!’’‘‘இருந்த ரெண்டு பொண்ணுங்களையும் கட்டிக் கொடுத்தாச்சு. இதுக்கு மேல யாருக்கு சம்பாதிக்கணும்? …
-
- 1 reply
- 1.6k views
-
-
மண்ணை தொடாத மழைத்துளி! எல்லாம் முடிந்து விட்டது; கால்கள் துணியாய் துவள, அந்த பருத்த மரத்தின் மீது சாய்ந்து நின்றாள், மீனாட்சி. அனிச்சையாக விழிகள் நீரை சிந்தின. துடைக்க வேண்டும் என்ற உணர்வு கூட இல்லை. சில பார்மாலிட்டிகளை முடிக்க, வக்கீலுடன் அப்பா போய் விட, தனியே நின்றாள், மீனாட்சி. 'மிச்சமிருக்கிற வாழ்க்கை மொத்தமும் தனியாத்தான் நிற்கணுமா...' உள்ளே ஏதோ புரண்டு வந்தது. எதிர்பார்த்த முடிவு தான் என்றாலும், ஆற்றமாட்டாமல் அடிவயிறு குழைந்தது. ஆசை ஆசையாய், தொங்கத் தொ…
-
- 1 reply
- 624 views
-
-
மொழிபெயர்ப்புச் சிறுகதை : மூன்று வேண்டுகோள்கள் – குமாரி (தமிழில் – எம். ரிஷான் ஷெரீப்) ரிஷான் ஷெரீப் ஒவ்வொரு விதமாக வேண்டுகோள்களை முன் வைக்க முடியும். அவற்றுக்கான மறுமொழிகள் – அவை மிகவும் மாறுபட்டதாகவும் அமையலாம் இல்லையா? வேண்டுமென்றால் கைவிட்டுவிடவும், கண்டு கொள்ளாமலிருக்கவும் கூட முடியும். இவை மூன்று தாய்மார்களின் வேண்டுகோள்கள்… I என்டயா? என்ட பேர் ஸ்ரீநாச்சி. காவன்னா ஸ்ரீநாச்சி. என்ட பேர்ல என்ன இருக்கப் போகுது? மனுஷனா வாழச்சுதந்திரம் இல்லண்டா பேருல மட்டும் என்ன பயனிருக்கப் போகுது? மண்ணோட முட்டி மோதி ஏலுமான விதத்தில எதையாவது வேக வச்சுத் திண்டுபோட்டு யாருக்கும் எந்தத் தீங்குமில்லாம சீவிச்சு வந்த சனங்கள் நாங்கள். தெரிஞ்ச காலத்து…
-
- 1 reply
- 845 views
-
-
கன்னி கறுப்பியின் குப்பைச் சேவல் கன்னி கறுப்பியின் குப்பைச் சேவல் காலில் முள் குத்தியிருக்கிறது; கல் குத்தியிருக்கிறது; துரு பிடித்த ஆணி,குதிரை லாடம் எல்லாம் குத்தியிருக்கிறது. மனுசனாய் பிறந்தவன்வாழ்வதற்காக அனுபவிக்கிற தொந்தரவுகளில் இதுவும் ஒன்று. பிறந்ததில்இருந்து செருப்பே இல்லாமல் நடக்கிற பாட்டப்பனுக்கு அவையெல்லாம்ஒரு பொருட்டாகவே இருந்ததில்லை. ஆனால் இன்றைக்கு அவனுக்குவருத்தமாகிவிட்டது. மனுசனாகப் பிறந்து வெறும் காலில் நடப்பதைவிடஆடு மாடாக பிறந்திருக்கலாம் என்று நினைத்துக்கொண்டான் அவன்.எருமையாகப் பிறந்திருந்தால் குறைந்தபட்சம் செருப்பு வாங்கும்தொந்தரவாவது இல்லாமல் இருந்திருக்கும். நாலு கால் எருமைக்குமுரட்டுக் குளம்பு இருக்கிறத…
-
- 1 reply
- 1.2k views
-
-
நிலவிலே பேசுவோம்!… என்.கே.ரகுநாதன். சிறப்புச் சிறுகதைகள் (1) – மூத்த படைப்பாளர்களின் சிறுகதைகளை இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் – என்.கே.ரகுநாதன் எழுதிய ‘நிலவிலே பேசுவோம்’ என்ற சிறுகதை இடம்பெறுகின்றது. தொடரும் காலங்களில் ஏனைய சிறுகதைகள் வெளிவரும். மாலையிலே மது ஒழிப்புக் கூட்டம் நடைபெற்றது! ஆயிரக்கணக்கான மக்கள்திரண்டிருந்த அந்த மாபெருங் கூட்டத்திலே ஆண் சிங்கம்போலத் தோன்றி,மதுவினால் ஏற்படும் தீமைகளையும், அது ஒழிக்கப்பட வேண்டியஅவசியத்தையும், அதற்கான வழி வகைகளையும் அள்ளி விளாசி, இடையிடையேகாந்தியத்தைப் பூசி, அழகு தமிழிலே அனல் பறக்கப் பேசிவிட்டுச் சற்று முன்புதான்வந்திருந்தார் ஸ்ரீமான் சிவப்பிரகாசம் அவர்கள். அப்பொழுது மணி எட்டு இருக்க…
-
- 1 reply
- 1.6k views
-
-
சுந்தரேசன் வீடு கலகலப்பாக இருந்தது. அவரது ஒரே பெண்ணான ஹரிணிக்கு அன்று, பெண் பார்க்கும் வைபவம். "அப்பா, ஒவ்வொருத்தரா வந்து பார்த்துட்டு போறதுக்கு, நான் ஒண்ணும் பொருட்காட்சி இல்ல. ஒரு பையன பாருங்க, குடும்பத்த விசாரிங்க; என் போட்டோவ காட்டுங்க. எல்லாம் புடிச்சிருந்தா... பெண் பார்க்க வரட்டும்...' என்று, ஹரிணி கறாராக சொல்லியிருந்தாள், அதன்படியே, அவரது மருமகளின், தூரத்து உறவினரான ரமேஷ் பற்றி, சுந்தரேசனுக்கு தெரிந்தது. கொஞ்சம் தெரிந்த இடம் என்பதால், மருமகள் மூலமாகவே விசாரித்து, மற்ற விவரங்களை சேகரித்து, கடைசியில் ரமேஷையும் நேரில் பார்த்தார். பையன் களையாக இருந்தான். அப்பா இல்லை; அம்மா மட்டும். சொந்த வீடு, கை நிறைய சம்பளம்; அதுவும், ஒரு பெரிய நிறுவனத்தில். ஹரிணியின் போட்டோவைப் …
-
- 1 reply
- 1.2k views
-
-
1983: ஒரு சில்க் கதை - சிறுகதை சிறுகதை: ஜி.ஆர்.சுரேந்தர்நாத், ஓவியங்கள்: பிரேம் டாவின்ஸி டைரி 1983 18. 1. 1983 `இன்று நானும் ஆனந்தும் மோகனும் சிவாவும் காலேஜ் கட்டடித்துவிட்டு, தஞ்சாவூர் சென்று சில்க் ஸ்மிதா நடித்த `கோழிகூவுது’ படம் பார்த்தோம்... வாழ்நாள் முழுவதும் என் கண்களில் வேறு காட்சி ஏதும் தெரியாமல், சில்க் ஸ்மிதா மட்டுமே நிரந்தரமாகத் தெரிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? படத்தின் டைட்டிலிலேயே சிலுக்கு வெள்ளை நிற தாவணியில், நூற்றாண்டுக்காலம் புதைத்துவைத்திருந்த ஒயினைப் போன்ற போதையூட்டும் கண்களால் பார்த்தபடி, உதட்டுக்குள் சிரித்தபோது, பவுர்ணமி நிலவைக் கன்னத்தில் அடக்கிக்கொண்டு சிரிக்கும் சிரிப்பில் அப்படி ஒரு வெளிச்சம். `பூவே..…
-
- 1 reply
- 2.9k views
-
-
நேர்த்திக் கடன் - எஸ்.அகஸ்தியர்- - எழுத்தாளர் எஸ்.அகஸ்தியரின் நினைவு தினம் டிசம்பர் 8. அவரது நினைவாக இச்சிறுகதை பிரசுரமாகின்றது. இதனை அனுப்பியுதவிய அவரது புதல்வி நவஜோதி யோகரட்னம் அவர்களுக்கு நன்றி. - பதிவுகள்.காம் - ‘உவள் ஒரு சரியான திடுமலிக் குமரி, சோக்கான வெள்ளைப் பொட்டை. அறுவாள் நல்ல சட்டையாப் போட்டுக்கொண்டு ஒதுக்கமா நில்லாம, இந்த நடுச்சந்தியில் இளிச்சுப் பிடிச்சுக்கொண்டு என்ன கண்டறியாத விடுப்புப் பாக்குது....!’ ‘போச்சுடா, ஆரோ அவசரமாக வாறான். வாறவனும் இளவட்டம் தான்....?’ ‘உவள் ஒரு நாய்ப் பிறவி, சிரிச்சமணீயம் அவனைத் தேடியல்லோ போறாள்? படு தோறை....’ ‘சனியன் இளிக்கிற விறுத்தத்தைப்பார். மூதேவி, போற வாறவங்களுக்கெல்லாம் வாயத் துற…
-
- 1 reply
- 791 views
-
-
ஒரு காட்டில் வயசாகி போன🐱 புலி ஒன்னு ஒரு தொழிற்சாலை ஆரம்பிச்சுது. அங்கே ஒரு எறும்பு🐜 வேலை செஞ்சுது. அதுபாட்டுக்கு வரும் சுறுசுறுப்பா எல்லா வேலைகளையும் செஞ்சு முடிச்சிட்டு சாயந்திரம் ஆனா வீட்டுக்கு போயிடும். புலியாருக்கு ஏக சந்தோசம் கணிசமான லாபமும் கிடைச்சுது. நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, நம்மூர்ல பணம் படைச்சவனுக்கு தோணுற மாதிரி நடு ராத்திரியில் திடீர்ன்னு புலியாருக்கு ஒரு ஐடியா தோணுச்சு. எறும்பு தனியாவே வேலை செய்யுதே அதை கண்காணிக்கற அளவுக்கு நமக்கும் போதுமான அறிவு இல்லை, நாம எறும்பை கண்காணிக்கவும் ஆலோசனை சொல்லவும் ஒரு உற்பத்தி மேலாளரை (production manager) நியமித்தால் உற்பத்தி அதிகமாகும்னு ஒரு தேனியை கொண்டு வந்தது. அந்த தேனியும் வேலையில் ஒரு புலிதான். ப…
-
- 1 reply
- 562 views
-
-
பேரழகியின் புகைப்படம் - நாராயணிகண்ணகி ஞாயிறன்று அம்மாவுடன் உட்கார்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தேன். மணமகன் தேவையில் லதாவின் புகைப்படத்தைப் பார்த்த அம்மா உறைந்த மாதிரி ஆகிவிட்டாள். கண்கள் பழைய நினைவுகளுக்கு ஓடி விட்டது. என்றாலும் எதையோ வென்றுவிட்ட ஆர்ப் பரிப்பு மௌனத்திலும் வெயிலாய் சுட்டிருக்க வேண்டும். அடுத்த நபரின் புகைப்படம் தொலைக்காட்சியில் வந்தும் நெஞ்சில் லதாவின் பிம்பம் அகலவில்லை. தேவதை என்று சொல்வதை விட மேலான வார்த்தை உண்டா? அழகி எனும் சொல்லிற்குள் சுருக்கி விட விருப்பம் இல்லை. பேரழகி என்று சொல்வதே குறைவான மதிப்பீடு போல்தான் படுகிறது. அழகு என்பதற்கு ஆயிரம் பேர் ஆயிரம் விளக்கங்கள். அந்த ஆயிரங்களையும் தாண்டும் சில அழகுக்குறிப்புகள் இருக்கிறது. கா…
-
- 1 reply
- 1.8k views
-
-
வழிகாட்டிய வா(ரி)சு அது ஒரு தனியார் தொழிலகம். அந்த நிறுவனத்தில் பேண்ட் ஜிப், லெதர் பேக் ஜிப் முதலியன உற்பத்தி செய்யப்படுகின்றன. சிப்காட் தொழில் வளாகத்தில் இந்த நிறுவனம் இயங்குகிறது. ஐநூறு தொழிலாளர்கள் ஜிப் ஆலையில் வேலை பார்க்கிறார்கள். ஐம்பது பேர் நிர்வாகப் பிரிவில் மேனேஜர், உதவி மேனேஜர், உதவி அலுவலர், உதவியாட்கள், கணக்காளர் போன்ற பதவிகளில் அங்கம் வகிக்கிறார்கள். நிர்வாகப் பிரிவில் பணிபுரியும் அலுவலர்களில் முக்கியமானவர்களை அழைத்து தலைமை அலுவலகம் அவ்வப்போது பயிற்சிகள் தரும். இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ள நமக்கு வாய்ப்புக் கிடைக்காதா..? என்று எல்லோருமே ஆவலாய் எதிர்பார்ப்பார்கள். "ஆபீஸில் உள்ள உதவி மேன…
-
- 1 reply
- 665 views
-
-
குமர்ப்பிள்ளை - சிறுகதை அ.முத்துலிங்கம் - ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி கீழ்க்காணும் சம்பவத்தைப் படித்தவுடன் நீங்கள் நம்பினால் அது கற்பனை; நம்பாவிட்டால் அது உண்மை. நீங்கள்தான் முடிவுசெய்ய வேண்டும். வெளிநாட்டில் என் தொழிலை வளர்த்து, நான் நிறைய சம்பாதித்தேன். மனைவி போன பிறகு நான்கு பிள்ளைகளும் நான்கு நாடுகளில் தங்கிவிட்டார்கள். குளிர் கூடக்கூட பகல் குறையும் நாடு அது. என் பிறந்த ஊரில் மீதி வாழ்நாளைக் கழிக்க வேண்டும் என்ற விருப்பம் எனக்கு. போர் முடிந்ததும் யாழ்ப்பாணத்துக்குப் போய், நான் பிறந்து வளர்ந்த வீட்டைத் திருத்தி எடுத்துத் தங்கினேன். இருபது வருடங்களுக்குப் பிறகு என் சொந்த ஊரைப் பார்க்கிறேன். உடையாத ஒரு வீட்டைக்கூடக் காண முடியவில்லை. கோயில்க…
-
- 1 reply
- 2.8k views
-
-
ஒரு நிமிடக் கதை: மதிப்பெண் பாஸ்கரின் வீட்டுக்கு வந்து பேசிக் கொண்டிருந்த பக்கத்து வீட்டு ராகவன் கிளம்பிச் சென்றதும், மனைவி ரோகிணியிடம் வந்தார் பாஸ்கர். “பக்கத்து வீட்டுக்காரரான ராக வனோட நாம நல்லாத்தான் பழகு றோம். ஆனாலும் அவருக்கு நம்ம மேல அசூயையும் பொறா மையும்தான் இருக்குபோல!” சொன்னார் பாஸ்கர். “ஏன் அப்படி சொல்றீங்க? இவ்வளவு நேரம் நல்லாத்தானே பேசிட்டுப் போனார்” நிதானமாகக் கேட்டாள் ரோகிணி. “நல்லா பேசிட்டிருந்தாரா? இவ் வளவு நேரம் தன்னைப் பற்றியும் தன் தம்பிகளைப் பற்றியுமே கர்வமா பேசிட்டிருந்தாரு. கவ னிச்சல்ல?” “ஆமா கேட்டுட்டுத்தான் இருந் தேன். அவர் எப்படி மளிகை கடை நடத்தி முன்னுக…
-
- 1 reply
- 2.8k views
-
-
அரம்பை - ஷோபாசக்தி நான் மாலையில் வீடு திரும்பும்போது, என்னுடைய குதிரை வண்டிக்குக் குறுக்கே சென்ற குடிகாரர்கள் இருவரை வண்டிச் சாரதி சவுக்கால் அடித்துவிட்டான். “இறைவனால் கட்டப்பட்ட இலண்டன் நகரம் இப்போது குடிகாரர்களதும் போக்கிரிகளதும் சத்திரமாகிவிட்டது” எனச் சலிப்பாகச் சொல்லிக்கொண்டே, இரட்டைக் குதிரைகளை அவன் விரட்டினான். விடிந்தால் 26-ம் தேதி ஜூலை 1833. பிரிட்டிஷ் சாம்ராஜியத்தின் வரலாற்றில் மிக முக்கியமான நாள். எங்களது காலனிய நாடுகளில் அடிமை முறையை ஒழிப்பதற்கான மூன்றாவது சட்டவாக்க வரைவு நாடாளுமன்றக் கீழவையான பொதுச்சபையில் விவாதத்திற்கு வரயிருக்கிறது. இம்முறை இந்தச் சட்டம், நாடாளுமன்றத்தின் இரு அவைகளினதும் ஒப்புதலோடு நிறைவேறுவதற்கு எல்லா வாய்ப்புகளுமுள்ளன. ஆனால், இல…
-
- 1 reply
- 1k views
-
-
அறை எண் 22 சோவென விழும் அருவியின் இரைச்சல் பொங்கியெழும் ஆனந்தத்தையும் தரவல்லதாக இருந்தது. நீண்ட நேரம் அதன் நீரலையில் ஆடியிருக்க வேண்டும். தலைமுடி பிடரியோடு ஒட்டியிருந்தது. ஆடைகள் ஈரமாக உடலைக் கவ்விக் கொண்டிருந்தன. ஈரத்தை உதறி முடிக்கும் முன் நீர்ச்சுழி மலை முகட்டின் எல்லை நோக்கி உந்தத் தொடங்கியது. மாபெரும் உந்தலால் திடீரென கீழே விழ... பள்ளம் பள்ளம்... விழுகையில் ஒரு கணம் மூச்சு நின்றுவிடுவது போல் ஒரு நெஞ்சடைப்பு. திடீரென சுவாசம் முட்டித் திரும்புகையில் ஒரு நீண்ட ஆற்றின் அலைகளில் அடித்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தாள் சொப்னா. ஆற்றின் இரு மருங்கிலும் புதர்கள், நாணல்கள், கோரைப்புற்கள். நீரின் நடு நடுவே பாறைத்திட்டுக்கள். பாறைகளின் மேல் மோதிக் கொள்ளாம…
-
- 1 reply
- 1.4k views
-
-
தன்னைத் தவிர முழு உலகமும் சுறுசுறுப்புடன் இயங்குவதாக காட்சியளிக்கும் மாநகரத்தின் ஞாயிற்றுக் கிழமையை செய்தித்தாள் போடும் சிறுவர்கள் தூக்கம் கலைந்த வேகத்துடன் எழுப்பிக் கொண்டிருந்தனர். படுக்கையில் இருந்த வெங்கட்ராமன் விழித்தபோது மணி சரியாக ஆறு. அலாரமில்லாமல் டாணென்று எழுந்து விடுவதாக சிலர் பீற்றிக் கொள்வதைப் போல அவர் பெருமையடிக்கமாட்டார் என்றாலும் அப்படித்தன் கச்சிதமாக எழுந்திருப்பார். சில நாட்களில் பேப்பர் பொத்தென்று விழும் சப்தமும் வெங்கட்ராமன் துயிலெழும் மூகூர்த்தமும் சொல்லி வைத்தாற் போல பொருந்தி வரும். இன்றும் பொருந்தித்தான் வந்தது. பல் துலக்கியவாறே ஓய்வுநாள் தரும் துவக்கக் களிப்புடன் தலைப்புச் செய்திகளை மேய ஆரம்பித்தார். வாரநாட்களில் சில மணித்துளிகள…
-
- 1 reply
- 902 views
-
-
ஒருநிமிடக் கதை: ஏமாறு... ஏமாற்று! சதாவிற்கு மிகவும் அதிகமாகக் கோபம் எட்டிப்பார்த்தது. வெளியில் காட்ட முடியாத இயலாமை, கார்க் கதவை ஒரு ஆர். டி. எக்ஸ் வெடியின் சத்தத்தோடு அடித்துச் சாத்துவதில் வெளிப்பட்டது. பின்ன ...கோபம் வருமா வராதா..? இந்த டிரைவர், அவர் கத்திக்கொண்டேதான் இருக்கிறார்.. இங்கே வேண்டாம் தள்ளிப்போ என்று.... கேட்காமல் காரை மிகச்சரியாக... இந்தத் தெரு குப்பை எடுக்கும் பையன். என்ன பேர்...ஆங்.குமார்... அவன் பக்கமாக நிறுத்தித் தொலைக்கிறான். டிரைவரிடம் சத்தம் போட முடியாது மாசக்கணக்கில் லீவ் போட்டுவிடுவான். அதான் வாயில்லா அந்த கார் கதவு, அடியை வாங்கிக்கொண்டது. சதாவு…
-
- 1 reply
- 1.3k views
-
-
A/L படிக்கிற நேரத்திலும் ஒரு பெண்ணை வன் சைட் லவ் பண்ணினேன். நான் லவ் பண்ணுறது அவளுக்குத் தெரியும். அதனால் என்னுடன் பேசும்போது ஒரு இடைவெளி விட்டே பேசுவாள். ஒரு நாள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ப்ரொபோஸ் பண்ணினேன். அவள் என்னை ஒரு நண்பனாக மட்டுமே பார்ப்பதாகக் கூறி என்னை ரிஜெக்ட் பண்ணிவிட்டாள். "இதெல்லாம் காரணம் இல்ல, உண்மையான காரணம் சொல்லு?" என்று நான் நச்சரிக்கவும் என்னுடைய தொடர்பு எல்லாத்தையும் துண்டித்து விட்டாள். காலம் உருண்டோடியது. இரண்டு மாதங்களுக்கு முன்பு அவளை ஃபேஸ்புக்ல பார்த்தேன். ரிக்குவெஸ்ட் கொடுத்ததும் அக்செப்ட் பண்ணிவிட்டாள். இப்போது அவளுக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் இருப்பதைக் கண்டேன். போஸ்ட்களுக்கு ரியாக்சன் போடுவது மட்டுமே …
-
- 1 reply
- 1.2k views
-
-
ஒருபிடி சோறு!…. இரசிகமணி கனக.செந்திநாதன். சிறப்புச் சிறுகதைகள் (10) – மூத்த படைப்பாளர்களின் சிறுகதைகளை இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் – கனக.செந்திநாதன் எழுதிய ‘ஒருபிடி சோறு’ என்ற சிறுகதை இடம்பெறுகின்றது. தொடரும் காலங்களில் ஏனைய சிறுகதைகள் வெளிவரும். யாழ்ப்பாண மாதா மலடி என்று பெயர் கேளாமல் சத்திரசிகிச்சையோடு பெற்றெடுத்த நொண்டிக் குழந்தை தொண்டைமான் ஆறு. கடலிலே இருந்து வெட்டப்பட்ட அந்த உப்பங்கழிக்கு ‘ஆறு’ என்று பெயரிட்டதே விசித்திரம். அதனிலும் விசித்திரம் அந்தக் கழிக்கரையில் முருகப்பெருமான் இருக்க எண்ணங் கொண்ட கதை. இந்த விசித்திரமான முருகன் பல திருவிளையாடல்களைப் புரிய, சாதி பேதமில்லாமல் எல்லா நோயாளரும் அவனைத் தஞ்சமடைந்திருந்தனர். இப்…
-
- 1 reply
- 2.1k views
-
-
அப்படித்தான் 'அது' எனக்குக் கிடைத்தது! - புஷ்பா தங்கதுரை புஷ்பா தங்கதுரை நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு... அப்படித்தான் 'அது' எனக்குக் கிடைத்தது! - கோவிண்ட்! என்றார் மேனேஜர். - யெஸ் சார்! என்றேன். …
-
- 1 reply
- 1.7k views
-
-
பேயோட்டி வினையூக்கி முதலில் சாமியார் ஆகவேண்டும் என்றுதான் நினைத்தேன். இத்தாலியில் சாமியார் வேடங்களுக்கு வங்காள தேசத்தவர்களும் ஹரே கிருஷ்ணா குழுமமும் பிரபலம் ஆகிவிட்டதால் , சொகுசா இருக்கிற ஒரு வேலை என்ன என தேடிய பொழுது சிக்கிய தொழில் தான் 'பேயோட்டி' ... ஆங்கிலத்தில் Ghost Buster , Exorcist எனச் சொல்லுவார்கள். ஸ்டைலாக பில்டிங் காண்டிராக்டர் என்பது போல நான் எனக்கு வைத்துக் கொண்ட தொழில் பெயர் Para Normal Scientist. பேய் வீடுகளில் இருக்கும் பேய்களை ஒட்டுவதற்குத்தான் என் முதல் முன்னுரிமை. மனிதர்களுக்குப் பேய் பிடித்ததாக சொன்னால் நான் எதுவும் செய்ய மாட்டேன், நல்ல மன நல மருத்துவரைப் பரிந்துரைப்பேன். என்னுடைய பாட்டி ஒரு முறை தனக்கு யாரோ செய்வினை வைத்து விட்டதாகவும் அந்த செய்…
-
- 1 reply
- 866 views
-