கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
மோகனம் : அனோஜன் பாலகிருஷ்ணன் 1 “ஹலோ…மிஸ்டர் சதாஷிவம்?” எதிர் முனையில் இனிய நடுத்தரவயது பெண்ணின் குரல் ஒலித்தது. தொலைக்காட்சியின் ஒலியை தொலையியக்கியால் குறைந்தேன். “எஸ்…” “நாங்கள் வூட்கிரீன் பொலிஸ் பிரிவிலிருந்து தொடர்பு கொள்கிறோம்” வழுக்கிச் செல்லும் தூய பிரித்தானிய உச்சரிப்பில் வார்த்தைகள் ஒலித்தன. பொலிஸ் என்றவுடன் என் உடல் என்னையும் மீறி சிறிதாக விழிப்புக் கொண்டது. “சொல்லுங்கள்,” “உங்கள் மகனது பெயர் செந்தூரன்தானே?” “ ஆமாம்” “உறுதிப்படுத்தியமைக்கு நன்றி. செந்தூரனும், அவரது நண்பர் கெல்வினும் ஸ்டாவூட் பூங்காவில் தாக்கப்பட்டுள்ளார்கள். சிறிய வன்முறைச்சம்பவம்…” “ஹோ…என் மகனுக்கு?” முடிந்தவரை பதட்டத்தை வெளிக்காட்டாமல் என்னை நிதானித்த…
-
- 9 replies
- 1.4k views
-
-
ஒரு விஷயமாக! ‘வா ழ்க்கை என்பது சஸ்பென்ஸ்களின் தோரணம்!’ என்ற பொன்மொழியை எங்கோ, எதிலோ படித்திருக்கிறேன். நூற்றுக்கு நூறு அந்தப் பொன்மொழி சரியே! மறுக்கிறவர்கள் தயவு செய்து டி.வி-யில் வரும் மெகா சீரியல் களைப் பார்க்கவும். ஒவ்வொரு எபிஸோடின் இறுதியிலும் ஏதாவது ஒரு சஸ்பென்ஸ் கட்டாயம் இருக்கும். அது சாதா சஸ்பென்ஸாகக்கூட இருக்கலாம். ஆனாலும், அது கூட நமது ஆவலை எக்கச்சக்கமாகத் தூண்டிவிட்டு விடும். …
-
- 1 reply
- 1.4k views
-
-
இவன் - அகரமுதல்வன் ஓவியங்கள் : செந்தில் இவனுக்குச் சொந்தவூர் யாழ்ப்பாணம். இரண்டு காதுகளும் கேட்காது. இயக்கம் அடிச்சுத்தான் காது கேட்காமல் போனது. இரண்டாயிரத்து பன்னிரண்டாம் ஆண்டு நாட்டிலயிருந்து வெளியேறி சென்னையில இருந்திருக்கிறான். அடுத்த ரெண்டு வருஷம் கழிச்சு களவாய்க் கனடாவிற்குப் போய்த் திரும்ப ஒரு மாத லீவில இப்ப சென்னைக்கு வந்திருக்கிறான். இன்னும் பத்து நாளில கலியாணம். இது இவனுக்கு இரண்டாவது கலியாணம்தான். முதல் மனிசியும் பிள்ளையும் முள்ளிவாய்க்காலில செத்துப்போயிட்டினம். இந்தக் கதையை நான் முடித்துக்கொள்ள சரியாக ஏழரை நிமிடங்கள் ஆகும். கதை நிகழத் தொடங்கிற்று. பத்து நாள்களில் கலியாணப் பந்தலில் மாப்பிளை வேஷத்தோடு இருக்கப்போகிற இவன் சிறைச்சாலையில்தான் என…
-
- 1 reply
- 1.4k views
-
-
திருவையாறு -எஸ். சங்கரநாராயணன் கண்மூடிக் கிடந்தாலும் சூட்சுமம் மெல்ல தாமரையாய் மலர்ந்தது. சூரியனை மனசு உள்வாங்கிக் கொண்டதோ. இது எந்த நாழிகை தெரியாது. ராம ராம என மனசில் துடிப்பு. கண்ணைத் திறக்கா விட்டாலும் மனம் முதலில் விழித்துவிட்டது. வெளியே எங்கோ பெயர் தெரியாத பறவை ஒன்று சிறகடித்து சிற்றொலி ஒன்றை எழுப்புவதைக் கேட்டார். ட்விட். தேன் சொட்டினாப் போல… என்ன ஸ்வரம் அது, என்று மனசு யோசித்தது. உலகின் ஒலிகள் ஸ்வரங்களால் ஆளப்படுகின்றன. வாழ்க்கை சுருதியிலும் ஸ்வரங்களிலுமாகப் பிரித்தாளப் பட்டு பிணைக்கப் பட்டுக் கிடக்கிறது. பகலைவிட இரவின் பிரத்யேக ஒலிகள் அற்புதமானவை. பிசிறற்ற அவற்றின் துல்லியம் கவிதைத் திவலைகள். மெல்ல எழுந்து உட்கார்ந்தார். கண்ணைத் திறக்கவில்லை. …
-
- 0 replies
- 1.4k views
-
-
மாரியம்மன் கஞ்சியும் அந்தோணிசாமியும் நாகரத்தினம் கிருஷ்ணா ஜூன் மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை. வீட்டின் பின்புறமிருக்கிற தோட்டம். கோடைவெயிலை சுமந்தபடி அலையும் காற்று. காற்றின் அலைச்சலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் செரீஸ்மரத்தின் கிளைகளும், கைவிரல்கள் போல பிரிந்த அவற்றின் கொப்புகளும் அசைந்துகொண்டிருந்தன. மண்தரையெங்கும் பரவலாக நாவல்போல உலர்ந்த செரீஸ் பழங்கள், உதிர்ந்த இலைகள், மிலாறுகள். இரு செரீஸ் மரங்களுக்கிடையில் நான்குக்கு இரண்டு ச.மீட்டரில் அமைந்த மரக்குடில். பிளாஸ்டிக் நாற்காலியொன்றில் கால்களைப் பின்புறமாக மடித்து அந்தோணிசாமி உட்கார்ந்திருந்தார். பார்வை அவருக்கு நேர் எதிரே, இனி தேறாது என்றிருந்த வாழைமரத்தின் மீது நிலைத்திருக்கிறது. அரையில் முழங்கால் மூட்டுவரை இறங்கி…
-
- 1 reply
- 1.4k views
-
-
ஸ்லீப்பர் செல்' தீபாவளி! விடிந்தால் தீபாவளி; கையில், மொபைல் போனுடன், ஆழ்ந்த, 'ஸ்லீப்'பில் இருந்த தாண்டவராயனை, அதிரடியாக எழுப்பினாள், மனைவி அலமேலு... ''உங்களுக்கென்ன பெரிய, 'ஸ்லீப்பர் செல்'லுன்னு நெனைப்பா... கையில செல்லை பிடிச்சு, குறட்டை விட்டு தூங்கினுக்கிறீங்க... ராத்திரி, பிரேக்கிங் நியூஸ்ல, அந்த ரிசாட்காரங்களுக்கு ஒரு ஆளு குறையுதுன்னு சொன்னாங்கல்ல... பொழைக்கத் தெரிஞ்ச ஜன்மமாயிருந்தா, எப்படா விடியும்ன்னு தூங்காம காத்திருந்து, விடிஞ்சதும் ஓடிப் போய் ஆதரவு கொடுத்து, தலைவர் தர்றத வாங்கிக்கினு வரும்...'' என்று அர்ச்சித்தவள், ''சட்டுபுட்டுன்னு தலைக்கு ஊத்துகினு, தீபாவளி பலகாரம் சாப்பிட்டுட்டு, ரிசார்ட்டுக்கு ஓடப்பார…
-
- 0 replies
- 1.4k views
-
-
பிரிந்தது ஓர் உயிர் அவன் எனக்கு அறிமுகமாகியது 2008ம் ஆண்டு யூலைமாதம் என்றே நினைவில் இருக்கிறது. என்னைப் போல் அவனும் கறுப்பன். காலம் எம்மை பலமாய் இணைத்துப்போட்டது. நான் எங்கு சென்றாலும் அதிகமாக என்னுடயே வருவான். நானின்றி அவன் எங்கும் சென்றது கிடையாது. எனது சுமைகளை எதுவித முகச்சுளிப்பின்றியும் தாங்கிக்கொள்ளும் பெரிய மனது அவனிடமிருந்தது. நானும் அவனின் சுமைகளை சுமந்து திரிந்திருக்கிறேன். என்னைக் கண்டவர்கள் அனைவரும் அவனையும் நிட்சயமாகக் கண்டிருப்பார்கள். அவ்வளவு ஒற்றுமை எம்மிடையே இருந்தது. நாம் இணைந்து வெளிநாட்டுப் பயணங்களும் செய்திருக்கிறோம். நான் களைத்துப்போகும் போதெல்லாம் அன்புடன், தோளில் கைபோட்டு எதையாவது உண் அல்லது குடி என்று கூறும் நண்பன் அவன். இன்று …
-
- 12 replies
- 1.4k views
-
-
அனைவருக்கும் வணக்கம். இது எனது கன்னி முயற்சி. அதனால் முழுவதுமாக எழுதவில்லை. தயவு செய்து உங்கள் கருத்துக்களை முன்வைக்கவும். ////////////////////////////////////////// எங்கும் ஒரே களோபரம். எல்லோரும் சுறுசுறுப்புடன் இயங்கிக்கொண்டிருந்தார்கள். நேரத்துடன் நித்திரை விட்டெழுந்து குளித்து நல்ல உடை உடுத்திக்கொண்டு வளாகம் நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்துகொண்டிருந்தார்கள். அன்று புது மாணவர்கள் வரும் நாள். அது தான் இத்தனை சுறுசுறுப்பு. பொதுவாகவே பொறியியல் மாணவிகளை 'காய்ந்ததுகள்' என்று தான் சொல்லுவார்கள். கணக்கிலே மட்டுமே கவனம் செலுத்துவதனாலோ என்னவோ. அத்தி பூத்தால் போல சிலர் மட்டும் விதி விலக்காக வருவதுண்டு. அப்படி தான் ஒருத்தியும் இந்த முறை வருவதால் தான் இத்தனை ஆர்ப்பா…
-
- 11 replies
- 1.4k views
-
-
10 செகண்ட் கதைகள் ஓவியங்கள்: ஸ்யாம் ட்ரீட்மெண்ட் ``கண் வலின்னு பையன் அழுறான்...'' என்றவரிடம், ``காலைல 50MB, மதியம் 50MB, நைட்டு 50MB மட்டும் மொபைல பார்க்கச் சொல்லுங்க... சரியாயிடும்'' என்றார், டாக்டர். - சி.சாமிநாதன் லாஸ்ட் ஸீன் ``கடைசியா எப்ப பார்த்தீங்க?'' என விசாரித்த போலீஸ்காரரிடம் வாட்ஸ்அப் லாஸ்ட் ஸீனைக் காட்டினார் பக்கத்து வீட்டுக்காரர். - கிருஷ்ணகுமார் காதல் ``நம்ம பொண்ணு லவ் பண்ண ஆரம்பிச்சுட்டான்னு எப்படி சொல்ற!'' ``நேத்து சேலை கட்டிப் பார்த்தாள்!'' - கி.ரவிக்குமார் கதை ``சும்மாச் சும்மா கதை கேட்டு நச்சரிக்கக் கூடாது. பாட்டியை சீரியல் பார்க்கவிடு...'' என்றாள் அம்மா! - பெ.பாண்டியன் என் ஆளு அவள் என் ஆளு என்ப…
-
- 0 replies
- 1.4k views
-
-
10 செகண்ட் கதைகள் ஓவியங்கள்: செந்தில் நெருக்கடி நடந்துபோனால், அரைமணி நேரத்துக்குள் போய்விடும் அலுவலகத்துக்கு ஒரு மணி நேரம் ஊர்ந்தபடியே காரில் போனான் ராகுல்! - கே.சதீஷ் புரிதல் ``ஹாய் டாட்!’’ என்ற வாட்ஸ் அப் மெசேஜ் பார்த்து மகளுக்கு `டாப் அப்’ செய்தார் அப்பா! - கி.ரவிக்குமார் சுறுசுறுப்பு “ஹோம் ஒர்க் எழுத முடியல...தூக்கம் வருதும்மா...” என்றவனிடம், மொபைலை நீட்டியதும் எழுந்து உட்கார்ந்தான்! - சி.சாமிநாதன் பிரார்த்தனை படம் பார்த்துக்கொண்டிருக்கையில் பேயின் ஆசை நிறைவேற கடவுளை பிரார்த்தித்தது குழந்தை! - பெ.பாண்டியன் தனிமை ஆயிரமாவது ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட்டை அக்செப்ட் செய்துவிட்டு, ஃபீலிங் லோன்லி …
-
- 0 replies
- 1.4k views
-
-
[size=3] பெண்களை விளங்கிக் கொள்ள முடியாது என்பார்கள். எனாக்கு சின்ன விடயங்களையே விளங்கிக் கொள்ள முடிவதில்லை, இந்த லட்சணத்தில் பெண்களை எப்படி புரிந்து கொள்ள முடியும். பள்ளிக்கூடத்தில் வாத்திமார்கள் உனக்கு படிப்பை தவிர மிச்சம் எல்லாம் ஏறும் என்று அடிக்கடி அன்பாக ஆசிர்வாதங்களை வாரி வழங்குவார்கள்.[/size][size=3] எங்களது கல்லூரி ஆண்களால், ஆண்களிற்கு, ஆண்களிற்காக நடத்தப்பட்ட ஒரு காய்ஞ்சு போன பூமி. சொன்னால் நம்ப மாட்டீர்கள் ஒரு ஆசிரியையோ, ஒரு பெண் ஊழியரோ கிடையாது. கல்லூரி விடுதியில் கூட பெரியபண்டா, சின்னபண்டா என்று சிங்கள தொழிலாளிகள் தான் வேலை செய்தார்கள்.[/size][size=3] இது இப்படி என்றால் ஊரிலே இருந்த பெட்டைகள் ரொம்ப விவரமா இருந்தாளுகள். முயல் பிடிக்கிற நாயை மூஞ்சியைப் பா…
-
- 2 replies
- 1.4k views
-
-
இன்று எங்களை எமது தொழிலகத்திலிருந்து ஒரு தொழிற்சாலை காட்டக் கூட்டிப்போயிருந்தார்கள்.நாங்கள் ஏழு பேர் போய் இருந்தோம். அந்த தொழிற்சாலை எனது எதிர்பார்ப்பை மீறி மிகப்பெரிதாகவும் மிகவும் நவீனமானதாயும் இருந்தது.எமது காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற் சாலையைப்போல் நான்கு மடங்காவது பெரிதாக இருக்கும்.இது உணவு தயாரிக்கும் தொழிற்சாலை.அந்த தொழிற்சாலையில் வெறும் இரு நூற்றி அறுபது ஊழியர்களே கடமை செய்கிறார்கள். கிட்டத்தட்ட முழுக்க கொம்பியுட்டர் ஊடாக இயக்கப்படுகிறது. எனக்கு மனதில் ஏதோ குடையத்தொடங்கியது.எங்களுக்கு நாடு இல்லை. இருந்தால் நாங்களும் இதை மாதிரி போடுவம். சமாதான காலத்தில் ஒரு முறை வெளி நாடு வந்து போயிருந்தேன். அப்ப எதையும் புதிதாய் கண்டால் அதை விளாவாரியாய் படமெடுத்து அது சம்…
-
- 13 replies
- 1.4k views
-
-
அக்கா யோ.கர்ணன் அக்காவிற்கு துப்பரவாக அசோக்கை பிடிக்கவில்லை. ஏதோ பெரிய அரியண்டமொன்றை பார்க்கிற மாதிரித்தான் பார்த்தாள். அவள் ஏற்கனவே நுட்பம் பார்க்கிறவள். அசோக் வேற கொஞ்சம் ஊத்தையாக இருந்தது. அசோக்கை முதல்முதல் காணேக்க, அவள் முகம் கோணலாததை பார்க்க மாட்டியள். அவளின்ர இந்த சிடுசிடுத்த முகத்தை பார்த்திட்டுதான், சிறுவன் குரங்கென்று ஆளை கூப்பிடுறனான். அவளுக்கு அசோக்கை பிடிக்காமல் போனதற்கு படிக்கிற காலத்தில நடந்த சம்பவமொன்றும் காரணமாயிருக்கலாமென்று நினைக்கிறன். அக்காவோட படிச்ச பொடியள்ளயே வலு காவாலிப் பொடியன் ஒருத்தன் இருந்திருக்கிறான். அவனின்ர பெயரும் அசோக்தான். அவனுக்கு என்ன காத்துக் கறுப்படிச்சதோ தெரியாது, அக்காவில காதல் வந்திட்டுது. அவன் எங்கட றோட்டா…
-
- 13 replies
- 1.4k views
-
-
கூட்டிலிருந்து சிறகடித்து வானளக்கும் எம் ஊர்க் கதைக்குருவிகள். எம்.கே.முருகானந்தன் என்னை இன்று எமது கதைகளின் கதையைத்தான் பேச அழைத்துள்ளார்கள். நான் கூட்டிலிருந்து சிறகடித்து வானளக்கும் எம் ஊர்க் கதைக்குருவிகளின் கதைச் சொல்கிறேன். ஊர்கள் சிறியன. பெருநாடுகளின் தள வள ஆளனி வலுக்குகளுடன் ஒப்பிடுகiயில் சிற்றூரிலும் சிறியது எமது நாடு. அதில் இலங்கை பூராவும் ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் தமிழ்பேசும் சமூகங்கள் ஏனைய உலக சமூகங்களுடன் ஒப்பிடுகையில் கணக்கில் கொள்ள முடியாதவை. நுணுக்குக் கண்ணாடிகளால் தேட வேண்டியவை. இருந்தபோதும் நாற்திசைகளிலிருந்தும் உலகளாவ எமது குரல் ஓங்காரமாக ஒலிக்கிறது. அதுவும் இனிய தமிழில் ஒலிக்கிறது. கதைகளாக, கவிதை…
-
- 2 replies
- 1.4k views
-
-
<iframe frameborder="0" height="400" src="https://www.mixcloud.com/widget/iframe/?feed=https%3A%2F%2Fwww.mixcloud.com%2FThayagam%2Fsathurangam-290216%2F&light=1" width="100%"></iframe> <i> </i><br /> மறைந்த பிரபல எழுத்தாளர் செங்கைஆழியானின் நினைவு பகிர்வு நிகழ்ச்சி அவுஸ்திரேலியாவிலிருந்து ஒலிபரப்பாகும் தாயகம் வானொலியில் நடைபெற்றது. எனது வகுப்பு தோழனும் பிரபல எழுத்தாளருமான ரஞ்சகுமார் அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களில் ஒருவர் அந்த நீண்ட நேரம் நடைபெற்ற உரையாடலில் தொடக்க நேயராக இந்த சின்னக்குட்டியும் வானலைகளில் சிறிது நேரம் கலந்து கொண்டது என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன் தாயகம் தமிழ் ஒலிபரப்புச்சே…
-
- 3 replies
- 1.4k views
-
-
சித்திரப்பேழைகதைகள் ‘தமிழீழத்தை ஆதரிக்கும் மாவோயிஸ்டுக்கு மணமகள் தேவை’ என்று அமரேசன் செய்திருந்த விளம்பரத்தைப் பார்த்துத்தான், முப்பது வருடங்களுக்கு முன்னால் அவரை யசோதா பதிவுத் திருமணம் செய்துகொண்டார். அப்போது அமரேசனுக்கு முப்பத்து நான்கு வயது. யசோதாவுக்கு இருபத்தெட்டு வயது. சென்ற வருடத்தின் கொடுங்குளிர் காலத்தில், அமரேசன் புற்றுநோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரது தொண்டையில் துளையிட்டுப் புகுத்தப்பட்டிருந்த மெல்லிய குழாய் காரணமாக அவரால் பேச முடியவில்லை. அவர் பேசுவதற்கு முயற்சிக்கவே கூடாது என்றுதான் மருத்துவர்கள் கண்டிப்பாக உத்தரவிட்டிருந்தார்கள். அந்த நிலையிலும் அமரேசனின் முகம் வேதனையால் நெளிந்து விரிய, அவர் சில வார்த்தைகளைத் த…
-
-
- 5 replies
- 1.4k views
-
-
------------------------------------------------------------ ------------------------------------------------------------ ------------------------------------------------------------ ------------------------------------------------------------
-
- 1 reply
- 1.4k views
-
-
எழுதியவர்: ரவி நடராஜன் அது ஒரு வழக்கமான வட அமெரிக்க நாள். காலையானதைக் கடிகார அலாரம் அறிவித்ததில் நாள் ஆரம்பமானது. அலுவலகம் கிளம்புவதற்கு இன்னும் 1.5 மணி நேரமே உள்ளது. அதற்குள், செய்ய வேண்டியவை ஏராளம். ஒரு வழியாக, காலை வேலைகளை (அதாவது ஒரு 30 நிமிட தேகப் பயிற்சி, 45 நிமிட காலைக் கடன்கள்,, 15 நிமிட சிற்றுண்டி தயாரிப்பு மற்றும் உண்பது) முடித்து காரை விரட்டி, அலுவலத்திற்கு பயணம். முதலில் இந்த சிக்னலை யாராவது சரி செய்ய மாட்டார்களா என்று அலுத்துக் கொள்ளும் அளவிற்கு, 30 செகண்டுகள் எவ்வளவு மெதுவாக நகர்ந்து பச்சையானவுடன், அடுத்த சிக்னலுக்கு விரைய வேண்டும். ஒரு வேளை, சிக்னலில் 30 செகண்டுகள் படிப்படியாகக் குறைவதை காட்டாவிட்டால், அவ்வளவு அலுத்துக் கொள்ள மாட்டோமா? என்னுடைய …
-
- 1 reply
- 1.4k views
-
-
கடற்கரையில் ஒரு நாடகம் – பால்ஸாக் – தமிழில்: ராஜேந்திரன் ஏறத்தாழ அனைத்து இளைஞர்களும் ஒரு திசைமானியை அவர்களது கற்பனையில் வைத்துள்ளனர். அதைக் கொண்டு எதிர்காலப் பாதையை நிர்மாணிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றனர். திசைமானியை விரித்துப் பரந்த கண்ணோட்டத்தில் பார்வையைச் செலுத்தும் வேளையில், அதற்கேற்ற மன உறுதியும் வாய்த்து விட்டால் உலகமே அவர்களுடையதாகும். இருப்பினும் ஒருவரது உள்ளார்ந்த வாழ்வில் நிகழும் அந்த அதிசயம் இளமைப் பருவத்திற்கே உரியதாகும். அது இருபத்தியிரண்டு முதல் இருபத்தியெட்டு வயதிற்குள்ளாக அனைவருக்கும் வாய்க்கும். அக்காலக் கட்டத்தில் மாபெரும் எண்ணங்களும், புதிய சிந்தனைகளும் தோன்றும். ஏனெனில் அது பெருமளவிலான ஆசைகளைத் தோற்றுவிக்கும் பருவம். அப்பர…
-
- 0 replies
- 1.4k views
-
-
மின்னல் - இசையும் கதையும் எழுதியவர் - லண்டனிலிருந்து வீ.எஸ்.குமார் தயாரிப்பு - தமிழ்வெப்றேடியோ தமிழ்வெப்றேடியோ.கொம்
-
- 1 reply
- 1.4k views
-
-
முறை அப்பாவின் கம்பெனி என்றாலும், அதில் பதவியேற்க தனக்கு மெக்கானிக்கல் எஞ்சினியரிங் பட்டமும் எம்.பி.ஏவும் தேவை என்பதை உணர்ந்திருந்தான் சரவணன். முறையாக அந்தப் படிப்புகளை முடித்துவிட்டு அவன் பதவி ஏற்றபோது அப்பா மோகனசுந்தரம் பூரித்துப் போனார். ‘‘சரவணா, நம் சொந்தங்கள் எல்லாரும் உன் கல்யாண விஷயமா தொந்தரவு செய்யறாங்க! நல்ல பொண்ணா பார்த்துடலாமா?’’ கேட்டார் மகனிடம். ‘‘செய்யலாம்பா! ஆனா அதுக்கு முன்னாடி முறைப்படி சில விஷயங்களை முடிக்க வேண்டியிருக்கு. நான் படிக்கும்போதே கூடப் படிச்ச வந்தனா என்கிற பொண்ணைக் காதலிச்சி, ரகசியமா பதிவுத் திருமணமும் செய்துக்கிட்டேன். கொஞ்ச நாள்லயே எங்களுக்குள்ள எதுவும் ஒத்துப்போகாம விலகிட்டோம்! அவள் மும்பைல வேலை கிடைச்சு போயிட்டா. இப்ப…
-
- 2 replies
- 1.4k views
-
-
"இன்னொரு இடத்தில் பேசுதல்..." உலோகத்தின் எழுத்துக்கள் கற்சுறா இடங்களில் காவிழாய்ச் செடிகள் முளைத்திருந்த இடங்களில் தகரைப்பற்றைகள் முளைத்திருந்த இடங்களில் குப்பைமேனிகள் முளைத்திருந்த இடங்களில்தான் உன்னைக் காலாற நடாத்திப் போனேன். காண்டாவன வெக்கையில் கருகிப்போகாத காலத்தில்தானே உனது கால்களை ஊன்றினாய்? பருவத்தின் கால்கள் இடங்களை அளையாதிருந்ததா? மரணத்தின் வெக்கையில் கருகியதா உன்பாதம்? மரணங்கள் உடலில் நிகழ்வதல்ல. நாட்காட்டிகளால் நினைவுறுத்தும் ஒவ்வொரு நாட்களிலும் மரணத்தைக் கடக்கவேண்டியிருக்கிறது. நினைவுகளால் மரணம் வேறு வேறு நிறங்கள் பூசப்பட்டிருக்கிறது. நாட்களைத் தாண்டுதல் என்பதே நடைபெற்று முடிந்…
-
- 2 replies
- 1.4k views
-
-
அன்பார்ந்த தமிழீழ மக்களே அருளினியன் [சற்றே பெரிய சிறுகதை இது தயவு செய்து பொறுமையாக வாசியுங்கள்] நான் சின்னப்பிள்ளையா முதலாம் ஆண்டு படிக்கேக்க எங்கட ஊருக்கு பக்கத்து ஊரில ஒரு ஐயா இருந்தவர் நெட்டையா ஒற்றை பனை மரம் போல இருக்கும் அவரோட ஒரிஜினல் பெயர் வந்து பரமேஸ்வரன்,ஆனா பரமேஸ்வரன் எண்டு சொன்னா யாருக்கும் தெரியாது.நெட்டை பரமர் எண்டோ அல்லது,நெட்டை ஐயா எண்டா யாழ்ப்பாணத்திற்கே தெரியும்,ஏன் ஐயா எண்டா எங்கட ஊரச் சுத்தி இருக்கிற பெரும்பாலான ஊருக்கு தெரியும். மனிசன் பழைய கம்யூனிசக்காரன் வெள்ளை வேட்டி,வெள்ளை சட்டை போட்டு அவர் நடந்து வாரத பார்த்தா அச் சொட்டா MGR மாதிரி இருக்கும்,எம் சி ஆர் போல மனிசனும் சும்மா தகதக எண்டு பொன் நிறத்தில மின்னுவார்,ஆளிண்ட தோற்றமே பாக்கி…
-
- 2 replies
- 1.3k views
-
-
நாளேட்டின் பக்கத்தில் நனையும் ஓர் பொழுதில்………. அதிகாலைப் பனியில் அரைறாத்தல் பாணுக்காய் ஆலாய் பறந்த அந்த அம்மையாரின் காலம் அது. கூப்பன் அரிசியில் அரைநேரக் கஞ்சியும் மரவள்ளிக் கிழங்கும் மக்கள் உயிர்வாழ ஒத்துழைப்புச் செய்தன. பத்தாம் வகுப்பு சித்தியடைந்தபின் தொடர்ந்து படிக்க வேண்டுமென்ற எனது ஆசை நிறைவேறப்படாமல் வீட்டு நிலமை. காரணம் எங்கள் ஊர் பாடசாலைகளில் உயர்தர வகுப்பு ஆரம்பிக்கப் படவில்லை. நகரப் பள்ளிக்குச் சென்றுவருவதும் கடினம். எனக்கோ எப்படியாவது மேலே படித்து ஓர் ஆசிரியையாக வரவேண்டுமென்ற கனவு. ஏப்படியோ முயற்சி செய்து ஓர் நகரப் பாடசாலையில் அனுமதி கிடைத்து விட்டது. ஆனாலும் விடுதியில் தங்கிப் படிக்க வசதியில்லை. எனவே அதிபர் ஆசிரியர்கள் உதவியுடன் என்னைப் போல் எதிர்காலக் க…
-
- 7 replies
- 1.3k views
-
-
ஊருக்குள் நூறு பெண்.... மட்டுவில் ஞானக்குமாரன் அந்தப் பெண்களோடு பேசிய பின்னால் தான் அவருக்கு இப்படி ஒரு ஞானம் வந்திருக்கோணும். நெஞ்சு இறுக்கம் அடைவது போலவும் அடிமனதிலே சில பேர் சேர்ந்து சம்மட்டியால் அடிப்பது போலவும் ஒரு வலி. அவரிடம் கடைசியாக வந்த சுகன்யாவுக்கு 20 வயது தான் ஆகிறது. மூன்று வயதிலே ஒன்றும் இரண்டுவயதிலே இன்னொன்றுமாக இரண்டு குழந்தைகளை கையிலே கொடுத்துவிட்டு அவளது கணவன் போய்விட்டான். இங்கே நடக்கக் கூடிய வழமையான செயற்கைச் சாவிலே ஒன்றாக அவனது பெயரையும் காலம் இணைத்துக் கொண்டது. வறுமையோடு போராடும் பெற்றோர் ஒரு பக்கம் வெறுமையாகிப் போன வாழ்க்கை மறுபக்கமுமாகித் தவிக்கின்ற சுகன்யாவின் கதையைக் கேட்கக் கேட்க கவலையாகத் தான் இருந்தது. இதுவரையிலும் ஒரு பன்னிரண்ட…
-
- 2 replies
- 1.3k views
-