கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3071 topics in this forum
-
மஞ்சள் நிற நோட்டீஸு! மஞ்சள் நிற நோட்டீஸு! த டுப்புச் சுவர்கள், விபத்துக்கள் நடக்காமலிருக்கக் கட்டப் படுபவை. ஆனால், தடுப்புச் சுவரில் மோதி ஒருவன் காயம் பட்டுக்கொள்வது என விதியிருந்தால், யார் என்ன செய்ய முடியும்? கார்த்திகேயனுக்கு அது நிகழ்ந்தது. இருபத்து மூன்று வயது நிரம்பியிராத இளைஞன் அவன். பன்னிரண்டாம் வகுப்பு முடித்து, எவ்வளவோ பல காலங்கள் முடிந்துவிட்டதான சோர்வு அவனுக்குத் தட்டியிருந்தது. வெட்டியாக ஊரைச் சுற்றுகிறான் என்ற ‘நற்பெயர்’ வேறு! அப்…
-
- 1 reply
- 1.2k views
-
-
அசோகா சக்கரவர்த்தி தன் ரதத்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது எதிரே ஒரு புத்தத்துறவி வந்து கொண்டிருப்பதைக் கவனித்ததும் ரதத்திலிருந்து இறங்கி வந்து அவர் காலில் விழுந்து வணங்கினார். அதைக் கவனித்த அவரது தளபதிக்கு மாமன்னர் ஒரு பரதேசியின் காலில் விழுவதா என்று வருத்தம் ஏற்பட்டது. அதை அரண்மனைக்கு வந்ததும் மன்னரிடமே வெளிப்படுத்தினார். மன்னரோ அவரது வினாவுக்கு விடையளிக்காமல் ஒரு ஆட்டுத்தலை, ஒரு புலித்தலை, ஒரு மனிதத்தலை மூன்றும் உடனே வேண்டும் என ஒரு வினோதமான ஆணையிட்டார். மூன்று தலைகளும் கொண்டு வரப்பட்டன. மன்னர் மூன்றையும் சந்தையில் விற்றுவரச் சொன்னார். ஆட்டுத்தலை உடனே விலை போயிற்று.புலித்தலையை வாங்கப் பலரும் யோசித்தனர். இறுதியில் ஒரு வேட்டைக்காரர் தன் வீட்டு சுவற்றில் …
-
- 1 reply
- 1.2k views
-
-
ஒரு நிமிடக் கதைகள் இந்த வயசுக்கு மேல... “ஏகப்பட்ட செலவு செய்து கம்பெனியை கம்ப்யூட்டரைஸ் பண்ணியிருக்கு தெரியுமில்லே! இப்பப் போய் ‘கம்ப்யூட்…
-
- 1 reply
- 4.3k views
-
-
அரசன் அன்றே கொன்றால் லியனகே நின்று கொல்வார் இளங்கோ-டிசே 'எழுதியதால் கடத்தப்பட்டு காணாமற்போனவர்களின் மனைவிகள், பிள்ளைகள் சார்பாக உங்களை இங்கு வரவேற்கின்றோம்' என ஒரு பெண்மணி, காலி இலக்கிய விழாவுக்கு வந்தவர்களுக்கு துண்டுப்பிரசுரம் கொடுத்துக்கொண்டிருந்தார். வசந்த அப்போதுதான் புகையிரத நிலையத்தில் இறங்கி பிரபல்யம் வாய்ந்த காலி கிரிக்கெட் மைதானத்தைத் தாண்டி நடந்து வந்துகொண்டிருந்தான். அன்று வெள்ளிக்கிழமை என்பதால் அது வசந்த அவனது காதலியைச் சந்திக்கும் நாளாக இருந்தது. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த நயோமிக்கு கடல் மீது அளவற்ற விருப்பு இருந்தது. நீர்கொழும்பு, அறுகம்பே, ஹிக்கடுவ, பாசிக்குடா என கடற்கரைகளைத் தேடி அடிக்கடி வசந்தவும், நயோமியும் போய்க்கொண்டிர…
-
- 1 reply
- 1.1k views
-
-
முள்ளில் ஒரு சேலை விமலி! என்ன பிள்ளை நீ செய்யுற வேலை? முதலிலே போய் அவரின்ரை காலிலே விழுந்து கும்பிடு மோனை. அப்பா இல்லாத இடத்திலே ஒரு தகப்பனுக்குத் தகப்பனாக இருந்து உன்னை வளர்த்து இப்படியொரு நல்ல வாழ்க்கையை அமைச்சுத் தந்த மனுசன். ஓடி வந்து என்ரை காலிலே விழுகிறாய்! போ போ பிள்ளை. அம்மா இப்படித்தான் சொல்லுவாள் என்று விமலிக்குத் தெரியும். அப்படியிருந்தும் அம்மாவின் காலிலே தான் முதலில் விழுந்து கும்பிட்டாள். அவர் அவரென்று அம்மா சொல்வது அக்காளின் கணவனை. அவளின் அத்தானை. அத்தான்! அவர் அக்காளுக்கு மட்டும் அத்தானாக நடக்க நினைத்திருந்தால் வாய் குளிரக் கோடி முறை அத்தான் அத்தானென்று விமலி கூப்பிட்டிருப்பாள்.…
-
- 1 reply
- 1.5k views
-
-
மொட்டை மொட்டையடித்துக்கொண்டிருந்தேன். என் தலையை நானே. தெருவில் போவோர் வருவோர் எல்லாம் நின்று வேடிக்கை பார்த்துச் சென்றனர். பெரிதாய் அது குறித்து எனக்கு ஏதும் அக்கறையில்லை. எப்பவுமே அவர்களை மதிப்பதில்லை. தெருவில் நுழைந்ததுமே படைநோய் கண்டவனின் கைகளாய் மூளை சொறியத்துவங்கும். அநியாயத்திற்கு சுயநலமிகள். ஒரு குடம் தண்ணியைக் கூட எடுத்துக்கொள்ள அனுமதிக்காதவன் (ஆனால் இவன் காவேரி பங்கீடு குறித்து நியாயவாதியாக பேசிக்கொண்டே இருப்பான்.) ஒருவன் சோற்றுக்கையால் காக்காவைக்கூட துரத்தாதவன். காக்கா எங்கு இருக்கென கேட்காதீங்க. ரொம்ப காலமாக சொல்லப்பட்டிருப்பதால் அவன் குறித்து இதைத்தான் சொல்லத் தோன்றுகிறது. இன்னொருவன் இருக்கான். ஏதாவது நன்கொடை பொதுவிஷயம் என போனால் வீட்டினுள்ளே இருந்…
-
- 1 reply
- 4.4k views
-
-
என்ர ராசாவுக்கு கிறிஸ்டி நல்லரெத்தினம் யன்னலருகே இருந்த மேசையின் மூலையில் சிறு தொட்டியில் வைக்கப்பட்டிருந்த ரோஜா செடிக்கு கிளாசில் இருந்த தண்ணீரை ஊற்றிவிட்டு, அதன் மிருதுவான இலைகளை தடவிக்கொடுத்தார் முருகேசர். ஊற்றிய நீரை உறுஞ்சிய தொட்டிமண்ணை விரலினால் கிளறி ஈரப்பதத்தை பரிசோதித்த திருப்தியுடன் வெற்று கிளாசை மேசையில் வைத்தார். அந்த அறையில் உயிர்ப்புடன் இருந்தது அவரும் அந்தச் செடியும்தான்! அவரது அறை அத்தனை பெரியது அல்ல. ஒரு கட்டில் மூலையில் அவரது உடமைகளையும் உடைகளையும் வைக்க ஒரு கப்போர்ட், சாய்ந்திருக்க ஒரு சாய்மனைக்கதிரை, சுவரில் பதித்திருக்கும் 15″ டி.வி, அதன் கீழ் ஒரு மேசை, மூலையில் உறங்கும் அவர் கைத்தடி, குளியலறையையும் டொயிலெட்டையும் இணைக…
-
- 1 reply
- 901 views
-
-
சுருக்குப் பை By சிந்துஜன் நமஷி ஒரு கார்காலத்தின் இரவில் இடி, மழை, மின்னலொடு என் வாழ்க்கைக்குள் வந்தவன் காந்தன் அண்ணா. காட்டாறு தாண்டிப் போன நிலம் போல என் தளத்தின் நியாயங்களை எல்லாம் கலைத்துவிட்டு போனவன் . ஒரு கள ஆய்விற்காக அப்போது நான் பியகமவில் இருந்தேன். அழகான மலையடி வார கிராமம் அது. ஏற்றுமதி ஊக்குவிப்பு வலயம் என்ற பெயரில் பல தொழில்சாலைகள் அந்தக் கிராமத்தைச் சுற்றி இருந்ததால் தூர இடங்களில் இருந்து வேலைக்கு வருபவர்களுக்கு உணவும், தங்குமிடமும் வழங்குவது பெரும் வியாபாரமாக மாறிப்போய் இருந்தது. ஆட்டோக்காரன் தான் என்னை ‘மெனிக்கே’ வீட்டிற்குக் கூட்டிச் சென்றான். சிங்களத்தில் ‘மெனிக்’ என்றால் மாணிக்கம் தவிர அவளுக்கும் பெயருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை…
-
- 1 reply
- 756 views
-
-
ஓர் ஆனந்த பைரவியும் சில அபஸ்வரங்களும் கதையாசிரியர்: ராஜேஷ்குமார் ‘தண்ணீர்ப்பந்தல் பாளையம் ஊராட்சி ஒன்றியம் உங்களை மகிழ்வுடன் வரவேற்கின்றது’ என்கிற பெயர்ப்பலகை கிராமத்து எல்லையிலேயே வரவேற்க, தம்முடைய காரின் வேகத்தைக் குறைத்தான் ரகுராம். காரின் பின் சீட்டில் உட்கார்ந்திருந்த மூன்று நண்பர்களைத் திரும்பிப் பார்த்தான். “கிராமத்துக்குள்ளே நுழையப் போறோம். அதோ! அந்த வேப்பமரத்துக்குக் கீழே ஒரு பெட்டிக்கடை தெரியுது. அங்கே விசாரிச்சா ராமசாமி வாத்தியார் வீடு எங்கே இருக்குன்னு சொல்லுவாங்க… கேட்டுடலாமா?” “ம்… கேட்டுட வேண்டியதுதான்!” உச்சிவெயில்மண்டையில் உறைக்கிற அந்த மத்தியான நேரத்தில் மண்ரோட்டுப் புழ…
-
- 1 reply
- 1k views
-
-
சக்கைக் குழி - சிறுகதை சிறுகதை: எஸ்.செந்தில்குமார், ஓவியங்கள்: செந்தில் மலைப்பாதையில் பேருந்து வளைந்து திரும்பி மெதுவாக நகர்ந்துசென்றது. பேருந்தின் முன்விளக்கின் வெளிச்சம் விழுந்த இடத்தைச் சக்திவேல் பார்த்தான். தேயிலைத் தோட்டத்திலிருந்து ஒன்றன்பின் ஒன்றாக இரண்டு காட்டுப்பன்றிகள் பாதையின் குறுக்கே ஓடி, சரிவிலிருந்து தோட்டத்துக்குள் நுழைந்தன. பன்றிகள் உறுமிய ஓசையும் தேயிலைச் செடியின் ஊடே ஓடிய சலசலப்பும் கேட்டன. ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார். விடிவதற்கு இன்னமும் நேரம் இருந்தது. பனிக்காற்றுடன் தேயிலையின் மணமும் காற்றில் பரவியிருந்தது. பின்னிருக்கைப் பயணிகள் சிகரெட்டைப் பற்றவைக்கும் சத்தமும் அதைத் தொடர்ந்து புகையிலை கருகும் வாசமும் பேருந்து முழுக்க நிறைந்…
-
- 1 reply
- 3.5k views
-
-
விடியுமா? - கு.ப.ரா. தந்தியைக் கண்டு எல்லோரும் இடிந்து உட்கார்ந்துபோனோம். அதில் கண்டிருந்த விஷயம் எங்களுக்கு அர்த்தமே ஆகவில்லைபோல் இருந்தது. ‘சிவராமையர் - டேஞ்சரஸ்-’ என்ற இரண்டு வார்த்தைகளே இருந்தன. தந்தி சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியிலிருந்து வந்திருந்தது. என் தமக்கை இரண்டு மாதங்களுக்கு முன்புதான் சென்னையிலிருந்து வந்தாள். அப்பொழுது எங்கள் அத்திம்பேர் நன்றாகக் குணமடைந்து விட்டார். க்ஷயத்தின் சின்னம் கொஞ்சம்கூட இல்லையென்று பிரபல வைத்தியர்கள் நிச்சயமாகச் சொல்லிவிட்டார்கள். ஓங்கித் தலையில் அடித்ததுபோலக் குஞ்சம்மாள் பிரமை தட்டிப் போய் உட்கார்ந்திருந்தாள். எங்கள் எல்லோருடைய மனத்திலும் ஒரு பெருத்த போர் நடந்து கொண்டிருந்…
-
- 1 reply
- 567 views
-
-
1980 மார்கழி 22 – செவ்வாய்க்கிழமை காலை எட்டுமணி நடேசன் குணதாசாவின் அலறல் குளியலறையில் இருந்து கேட்டது காலையில் இலங்கை வானொலியின் வர்த்தக ஒலிபரப்பை மெதுவான சத்தத்துடன் கேட்டபடி வேலைக்கு புறப்படத் தயாராக இருந்தேன். அந்த வீட்டில் என்னுடன் வசிக்கும் மற்ற இருவரும் சிங்களவர்கள் என்பதால் நாகரீகம் கருதி தமிழ் வானொலி ஒலிபரப்பின் ஓசையை குறைத்துக் கேட்பது எனது வழக்கம். நெடுஞ்சாலைப் பொறியியலாளரான எனக்கு, இந்த வீடு அரசாங்கத்தால் கெக்கிராவை பிரதேசத்தில் கொடுக்கப்பட்டது. என்னுடன் அங்கிருந்த ஒருவர் எனது உதவியாளர். மற்றவர் விருந்தினர் யோசப் மாத்தையா யோசப் மத்தையா. உள்ளே வாருங்கள் – சிங்களத்தில் அழைக்கும் குரல் குளியலறையிலிருந்து தொடர்கிறது. உடனே குளியலறைக்குள் நான…
-
- 1 reply
- 11.2k views
-
-
கி.நடராசன் அப்துல் ரவூப் சட்டென விழித்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்தார். யாரோ கதவைத் தட்டியது போல இருந்தது. மங்கலான பச்சை ஒளியில் அவரது மனைவியும், குழந்தையும் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருப்பதை கவனித்தார். குழந்தையின் உடலிலிருந்து இனிய பால்மணம் அந்த அறை எங்கும் தாய்மையை நிரப்பிக் கொண்டு இருந்தது. அப்துல் ரவூப் மணியைப் பார்த்தார். நள்ளிரவு ஒரு மணியைத் தாண்டி இருந்தது. அப்பொழுது கடப்பாறை கொண்டு வீட்டின் கதவை இடிப்பது போல் பலமாக பலர் சேர்ந்து தட்டுவது கேட்டது. இந்த நடுநிசியில் யார் இப்படி…? கதவை திறக்காவிடில் உடைத்து விடுவார்களோ என்ற பயத்தில் விரைந்து சென்று திறந்தார். அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றார் அப்துல் ரவூப். ஒரு பெரிய போலிஸ் பட்டாளமே அங்கே…
-
- 1 reply
- 1.4k views
-
-
களம் - ஜெயமோகன் அதிகாலைமுதலே அரங்கேற்றக் களத்தில் அஸ்தினாபுரத்துக் குடிமக்கள் ரதங்களிலும் , குதிரைகளிலும் ,மூடுவண்டிகளிலும் வந்து குவிய ஆரம்பித்த ஒலி அரண்மனையை சூழ்ந்து கொண்டது.அரண்மனையில் இருநாட்களுக்கு முன்னரே பரபரப்பு பெருகி ,அதன் உச்சத்தில் ஒவ்வொருவரும் பிறரை மறந்து தங்கள் வேகங்களில் விரையவே முழுமுற்றான ஓர் ஒழுங்கின்மை எங்கும் நிறைந்திருந்தது . தன் தனிப்பட்ட பயிற்சிக்களத்தில் துரியோதனன் இடைவிடாத ஆயுதப்பயிற்சியில் ஈடுபட்டிருக்க, அர்ச்சுனன் துரோணருடன் விற்பயிற்சியில் தன்னை இழந்திருந்தான். குருகுலத்து இளவரசர்கள் அனைவருமே பதற்றத்துடன் பயிற்சியில் ஈடுபட்டிருக்கையில் பீமன் மட்டும் மடைப்பள்ளியில் சமையலுக்காக தென்னாட்டிலிருந்து வரவழைக்கப்பட்டிருந்த விற்பன்னர்களிடமிருந…
-
- 1 reply
- 957 views
-
-
தூங்காத கண்ணென்று ஒன்று சிறுகதை: ஹேமி கிருஷ், ஓவியங்கள்: ஸ்யாம் அலுவலகத்தில் இருந்து இரவு வீட்டுக்கு வந்ததும் அம்மா ஆரம்பித்தாள்... ''எல்லாம் என் நேரம். நான் என்ன சொன்னாலும்...'' - அவள் மேற்கொண்டு சொன்ன எதையும் நான் காதில் வாங்கவே இல்லை. திருமணமான 30 வயதுப் பெண், கணவனுடன் சேர்ந்து வாழாமல் தனியே இருந்தால், அம்மாவின் புலம்பல்கள் எதுவாக இருக்கும் என உங்களுக்குத் தெரியும்தானே? இரவு உணவு சாப்பிட்டதும் அறைக்குத் திரும்பினேன். எட்வினின் நினைவு, கடந்த ஒரு வாரமாகவே மனதைப் போட்டுப் பிசைந்தது. இப்போது ஏன் அடிக்கடி அவன் ஞாபகம் வருகிறது... அதுவும் இத்தனை வருடங்கள் கழித்து? எங்கள் வீட்டில் இருந்து இரண்டு வீடு தள்ளி இருக்கும் வேதா அக்கா வீட்டின் மொட்டைமா…
-
- 1 reply
- 3.7k views
-
-
எனக்கு நினைவிருக்கிறது அந்த முற்றத்தில் நிற்கும் மரம். பள்ளிக் கூட நாட்களிலும் சரி விடுமுறை நாட்களிலும் சரி நாங்கள் அதிகமாக விளையாடி மகிழ்வது அதன் நிழலில்தான். அப்பொழுதெல்லாம் எனக்கு அந்த மரத்தின் மேல் ஒரு கோபம் இருந்தது. அம்மாவிற்கு கோபம் வரும் பொழுதெல்லாம் என்னை அடிப்பதற்கு கையில் எதாவது குச்சி கிடைக்காதா என்று தேடும்பொழுது கைக்கு எட்டிய தூரத்தில் கிடைப்பது அந்த முற்றத்து வேம்பு மரக் குச்சிதான். குச்சி கையில் கிடைத்து விட்டால் அவ்வளவுதான் முட்டிக்கு கீழ் வீங்கிவிடும். இதற்காகவே நான் என்ன செய்தேன் தெரியுமா? கைக்கெட்டும் கிளைகளை எல்லாம் அம்மாவிற்கு தெரியாம வெட்டி விட்டேன். அதற்கும் குச்சி சிதற சிதற வாங்கி இருக்கிறேன். என்னதான் இருந்தாலும் அந்த மரம் எங்களுக்கு …
-
- 1 reply
- 2.1k views
-
-
ஒரு கணத்துக்கு அப்பால் - ஜெயமோகன் வயது வந்தவர்களுக்கானது! அப்பாவின் கண்கள் விரிவதை கண்டு வியப்புடன் திரும்பிப்பார்த்தான். அவர் விசைப்பலகையில் கைத்தவறுதாலாக அழுத்தி திரையின் ஓரத்தில் துடித்துக்கொண்டிருந்த சிறியவண்ணப்படத்தை முழுமையாக விரித்திருந்தார். பெரிய முலைகள் கொண்ட ஒரு பெண் கால்களை ஒரு முக்காலியில் தூக்கி வைத்து நின்றிருந்தாள். அவளுடைய மழிக்கப்பட்ட யோனி செந்நிற அடுக்குகளாக விரிந்திருந்தது. இளநீலநிற நகச்சாயம் பூசப்பட்ட விரல்களால் அவ்விதழ்களின் மேல்நுனியை அகற்றியிருந்தாள். இன்னொரு கையில் கரியநிறமான செயற்கை ஆண்குறி. கீழே ஒரு கணத்துக்கு அப்பால் என்ற வரிகள் மின்னி மின்னி அணைந்தன அப்பா சுட்டுவிரலால் அந்தப்படத்தைச் சுட்டிக்காட்டினார். அவர் பார்வையை திருப்பும்பொருட்…
-
- 1 reply
- 908 views
-
-
சொந்தக்காரன்! - வ.ந.கிரிதரன்- - புகலிட அனுபவ சிறுகதை கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலங்களாக விடாமல் உறை பனி (snow) மழை பொழிந்து கொண்டிருந்தது. வீதிகளெல்லாம் உறை பனி படிந்து, படர்ந்து ..போதாதற்குக் குளிர் வேறு. சோமசுந்தரம் மணியைப் பார்த்தார். இரவு மணி பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. அவரிற்கு இந்தக் குளிரிலை, கொட்டுகின்ற உறை பனி மழையில் நனைந்தபடி வேலைக்குச் செல்லவே விருப்பமில்லாமலிருந்தது. ஊரங்கிக் கிடக்கும் இந்தச் சமயத்தில் சாமத்துக் கோழியாக அலைய வேண்டியிருக்கிறதே என்று நொந்து கொள்ளத்தான் முடிந்தது. ஊரிலை அவர் ஒரு பௌதிக ஆசிரியர். அவரிடம் பயின்ற எத்தனை மாணவர்கள் 'டாக்டர்கள்', 'எஞ்சினியர்கள்' என்று வந்திருக்கின்றார்கள்..ஆனால் ..இங்கோ அவரோ ஏழு நாட்களும் வே…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஒரு நிமிடக் கதைகள் நிழல் நிஜமாகுமா? அ ரசியல், கிரிக்கெட் என அரட்டையில் ஈடுபட்டு இருந்தது நண்பர்கள் குழு. ‘‘சே... சூப்பர் எட்டுக்குக்கூட இந்தியா வர முடியலேங்கிறது கேவலமா இருக்கு’’ என்றான் ஒருவன். “நல்லா விளையாடறவங்களை அணியில சே…
-
- 1 reply
- 1.6k views
-
-
கே.எஸ் பாலச்சந்திரன் நடிக்கும் அடைக்கலம் -- நாடகம்
-
- 1 reply
- 1.4k views
-
-
வைர விழா (சவால் சிறுகதை) முன் குறிப்பு: மக்களே!!! சவால் சிறுகதையாம். ஏதோ நம்மால முடிஞ்சே இலக்கியப்பணி. சிகப்புல உள்ள வாசகங்கள் இடம் பெற்றிருக்கனுமாம். காமினி கெட்டவள் இல்லையாம். ப்ளாஷ் பேக் எழுதக் கூடாதாம். அப்பப்பா... எவ்வளவு நிபந்தனைகள். விறுவிறுப்பா(அப்படின்னு எனக்கு நினைப்பு) கதை ஒரே நாள்ல நடக்கற மாதிரி எழுதியிருக்கேன். முயற்சி எப்புடின்னு நீங்களே சொல்லுங்க. விடியற்காலை 5:45 மணி: அண்ணா நகர் 18th கிராஸ். சூரியன் மாமனைப் பார்த்து பேசுவோமா வேண்டாமா என்று வெட்கப்பட்ட பெண்போல் தொடுவானத்தில் எட்டிப்பார்த்தது. பால்காரர்களும் பேப்பர்காரர்களும் ஓசோன் காற்றை சுவாசித்தபடி கர்ம சிரத்தையாக வீடு வீடாக பாலிட்டார்கள், பேப்பரிட்டார்கள். "சொத்" என்று கதவில் மோதி படியில் விழுந…
-
- 1 reply
- 1.4k views
-
-
கெட்ட குமாரன் - சிறுகதை எஸ்.கே.பி.கருணா, ஓவியங்கள்: ஷ்யாம் எங்கள் பள்ளிக்குள் நுழைய மொத்தம் 37 வழிகள் இருந்தன! அதில் ஹெட்மாஸ்டருக்குத் தெரிந்த அதிகாரபூர்வ வழிகள் மூன்றுதான். கனகராஜ், சாலமன் போன்ற பள்ளியின் பியூன்களுக்குத் தெரிந்தது எட்டு வழிகள். மீதம் உள்ள 26 வழிகளும் எங்களைப் போன்ற மாணவர்கள் மட்டுமே அறிந்தது. ஒவ்வொரு திருட்டு வழியும் கண்டுபிடிக்கப் படும்போதெல்லாம், இன்னொரு ரகசிய வழி திறக்கப்பட்டுக்கொண்டே இருக்கும். எங்கள் நகரின் மையத்தில் பிரமாண்டமாக நிலைகொண்டிருக்கும் எனது பள்ளிக்கும் அதன் மாணவர்களுக்குமான அந்தரங்க சிநேகிதம் அது. தினமும் காலை மிகச் சரியாக 8.50-க்குப் பள்ளியின் பிரதான நுழைவாயில் இழுத்து மூடப்படும்போது, பள்ளிக்கு வெளியில் கு…
-
- 1 reply
- 3.1k views
-
-
குடந்தை பஸ் நிலையம். மார்க்கட் இழந்த நடிகையைப் போல சீந்துவார் இன்றி, நின்று கொண்டிருந்தது.அந்த டப்பா பஸ். ஓட்டுநர் ராசு வண்டிக்கு அடியில் அமர்ந்தவாறு கவலையுடன் பாகங்களைப் பரிசோதித்துக் கொண்டு இருந்தான். ஹூம்.. அடுத்த எஃப்.சி. வரை வேற ஒரு ஸ்பேர் பார்ட்டும் மாத்தாம இந்த டப்பாவை ஓட்டியாகணும்...! சுப்பய்யர் பஸ் சர்வீஸ் ஒரு காலத்தில் ஓஹோ என்று ஓடியது. 12 வண்டிகள். ஆனால் சுப்பய்யருக்கு ஏகப்பட்ட பொண் குழந்தைகள். எல்லாத்தையும் கட்டிக் கொடுக்க கொட்டிக் கொடுத்தும் வட்டிக் கொடுத்தும் அழிச்சது போக இந்த டப்பா மட்டும் மீதி. இன்னொரு பொண்னு இருக்கு. அதுக்காக இந்த ரூட்டை இழுத்துப் பிடிச்சுட்டு இருக்காரு சுப்பய்யரு. ராசுவோட அப்பாவும் இந்தக் கம்பெனியில டிரைவரா இருந்தாரு. அப்ப…
-
- 1 reply
- 1.4k views
-
-
தண்டனை! அதிகாலை ஐந்து மணி- முகத்தைக் கழுவி, துடைத்த துண்டை தோளில் போட்டபடி, பழைய சைக்கிளை வெளியே எடுத்தான் ரத்தினம். கட்டடம் கட்டும் மேஸ்திரி அவன். சத்தம் கேட்டு விழித்துக்கொண்டாள், அழகேஸ்வரி. ''யோவ்... நாழி வளத்தாம சீக்கிரம் போயிட்டு வா... வேல நிறைய கிடக்கு,'' பதிலுக்குத் தலையை அசைத்தபடி மெதுவாய் சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தான். 10 நிமிடத்தில் மெயின் ரோட்டிலிருக்கும் அரச மரத்தடி டீக்கடையை வந்தடைந்தான். அப்போது தான் பாய்லரை பற்ற வைத்து, முதல் குவளை டீயை ஆத்தி முடித்தான் கடை மாஸ்ட…
-
- 1 reply
- 1.3k views
-
-
கனவுக் கன்னி 'கனவுக்கன்னி' என்ற வார்த்தை எப்போது தமிழில் அறிமுகமாகியிருக்கும்? நிச்சயம் அது தனித் தமிழ் வார்த்தை கிடையாது. எல்லோருக்குமே தான் நேசிக்கும் நடிகைகள் கனவில் வந்து விடுகிறார்களா என்ன? எனக்குத் தெரியாது. ஆனால் ஒரு நாள் நடிகை கஜோல் என்னுடைய கனவில் வந்து ஆச்சரியம் தந்தார். கஜோலை எனக்கு அவ்வளவு பிடிக்கும். இப்போது அவர் கொஞ்சம் குண்டாகி விட்டார். என் கனவில் ரொம்பவே ஒல்லியாக, கௌபாய் உடை அணிந்து, தற்காப்பு வித்தைகளை எனக்கு செய்து காட்டினார். கௌபாய் உடை என்றாலும் அந்தத் தொப்பியை அவர் அணிந்திருக்கவில்லை. கராத்தே ஸ்டெப்சுகளை செய்து காட்டி விட்டு, என்னைத் தாக்க வரும் போது, நான் திருப…
-
- 1 reply
- 1.2k views
-