கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
நந்தினி என்றொரு தேவதை ரிஷபன் ஞாயிறு காலை எட்டுமணிக்கு மீனாட்சி மெஸ்ஸில் எதுவும் கிடைக்காது என்று சின்னக் குழந்தைக் கூடத் தெரியும்.இருந்தாலும் சங்கர் மெஸ் வாசலில் வந்து நின்றான். ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் தொங்குகிற வாசல் திரைச் சீலை பற்றாக்குறையாய் காற்றில் ஆடியது. "ஸா... ர்" வாய் 'ஸாரை' அழைத்தாலும் மனசு நந்தினிக்காக ஏங்கியது. "யா... ரு?" ஆண் குரல் கேட்டது. நடராஜன், நந்தினியின் அண்ணன்.மெஸ்ஸுக்குச் சொந்தக்காரன் .. "நான்தான்..." "நான்தான்னா யாரு... ஏய் நந்தினி.. போய்ப் பாருடி..." நடராஜனின் இரைச்சல் வாசலுக்குக் கேட்டது. "ஹாய்...!" கிசுகிசுப்பாய் கையாட்டினான். "என்ன...?" "இன்னிக்கு ஊருக்குப் போகலே. மீல்ஸ…
-
- 1 reply
- 1.3k views
-
-
மனைவி சூரியன் இன்னும் விழிக்கவில்லை. இன்னும் சிறிது நேரம் தூங்கிவிட்டு எழுந்திருக்கலாம் என நினைத்து மேகப் போர்வைக்குள் நுழைந்தது சூரியன். கட்டிலில் படுத்திருந்த நான் தலைமாட்டில் வைத்திருந்த செல்போனை தட்டி, மணி பார்த்தேன். 5 ஆக 5 நிமிடங்கள் இருந்தன. பக்கத்தில் படுத்திருந்த மனைவி எப்போதோ எழுந்து போயிருந்தாள். தனித்தனி போர்வைக்குள் படுத்திருந்த பிள்ளைகள் இரண்டும் இப்போது ஒரே போர்வைக்குள் படுத்திருந்தனர். அண்ணனின் வயிற்றின் மீது காலைப் போட்டு வசதியாக படுத்திருந்தாள் எனது மகள். இதெல்லாம் காலை நேரத்து ஆச்சரியங்கள். காலை எழுந்தது முதல் இரவு படுக்கும் வரைக்கும் சண்டை போட்டுக் கொள்ளும் இரண்டும் இப்போது அமைதியா…
-
- 0 replies
- 1.3k views
-
-
சோளகம் பெயர்ந்துவிட்டது. சித்திரைமாதக் கழிவில் ஏற்படும் இடி மின்னற் புயுலுடன் சோளம் வீசத் தொடங்கிவிட்டது. மூன்று நாட்கள் இடைவிட்டு விட்டு மழை பொழிந்து தீர்த்தது. "ஒரு வரியமும் இல்லாதமாதிரி, இந்தமுறை சித்திரைக் குழப்பம் ஓமோம் சரியான மழை.....!" என்று வாங்கு மூலையில் இருந்த படி பொன்னு ஆச்சி முணுமுணுத்தாள். பொன்னு ஆச்சி முணு முணுத்தது, தலைவாசல் திண்ணையில் குந்தி இருந்து குளிருக்கு அடக்கமாகச் சுருட்டுப் புகைத்துக் கொண்டிருந்த கொக்கர்' மாரி முத்தரின் காதுகள் விழவே செய்தது. 'என்ன முணுமுணுக்கிறாய்' என்பதுபோல மனைவியை நிமிர்ந்து பார்த்தார். உர்'ரென்ற இரைச்சலோடு வீசிய காற்றினால், முற்றத்துப் பனையிலிருந்து பிடிகழன்ற கங்குமட்டை ஒன்று 'தொப்'பென்று தலைவாசல் கூரையில் விழ…
-
- 0 replies
- 1.3k views
-
-
மீன் முள்ளின் இரவு - பா.திருச்செந்தாழை ஓவியம் : ரமணன் புறநகர்ப் பகுதியின் கடைசி வீட்டில் வசிப்பவன் நான். என் வீட்டையடுத்து விரியும் புதர்மண்டிய நிலக்காட்சியையும், கைவிடப்பட்ட தூரத்துக் குவாரியின் தனிமையையும் ரசிப்பதற்கென்றே கடைசி வீட்டுக்காரனானேன். நகரங்கள் மென்று துப்பும் எச்சங்களின் மீது அருவருப்படைந்து மரங்கள் நடந்து விலகிச் செல்வதையும், துர்கனவின் வரைபடம்போல நகரின் சித்திரத்தை அஞ்சியபடி எளிய பறவைகள் தத்தி ஓடுவதையும், வழியின்றி பார்த்தபடியிருக்கும் கடைசி வீட்டுக்காரர்களின் முகத்தில், புத்தனின் மிகவும் தேய்ந்த நிழலை அவ்வப்போது காண முடியும். மேலும், இங்கே பன்றி வேட்டைக்குப் பழக்கப்படுத்தப்பட்ட வேட்டை நாய்களை, பருவங்கள் தீர்ந்து கிழடான பின் அவ…
-
- 1 reply
- 1.3k views
-
-
டிஜிட்டல் செத்தவீடு! நேரம் அகாலத்தைக் கடந்திருந்தது. இன்னும் சிலமணித்தியாலங்களில் பொழுது பொலபொலவென விடிந்துவிடும். ஆனாலும் சூரியனின் கதிர்கள் பூமியைத் தொடுவதற்கிடையில் வேலை முடிந்துவிட வேண்டும் என்ற அவசரத்துடன் அந்த மோட்டார் சைக்கிள் பனியைக் குடித்துக்கொண்டு விரைந்து கொண்டிருந்தது. அரைமணித்தியாலப் பயணத்தின் பின் ஸ்ரூடியோ ஒன்றின் முன்னால் அந்தமோட்டார் சைக்கிள் தன் செயற்பாட்டை நிறுத்திக்கொள்ள, ஸ்ரூடியோவின் கதவு தட்டப்பட்டது. கொலைகளும் கொள்ளைகளும் மலிந்துவிட்ட சூழலில் நள்ளிரவு தாண்டிய பின்னர், இருட்டு வேளையில் கதவு பலமாகத் தட்டப்பட்டதால் அதற்குள் உறங்கிக் கொண்டிருந்த பணியாளர்கள் இருவருக்கும் ஈரற்குலை ஒருநொடியில் தீய்ந்தே போய்விட்டது. நடப்பது நடக்கட்டும் என்ற நினை…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஒரு நிமிடக் கதை: கடி "என்னது...உடம்பு அரிக்கிறதா....எரிச்சலா...அரிப்பா?" கோமதியிடம் நூறாவது முறையாகக் கேள்வி கேட்கப்பட்டது. இந்தக் கேள்விகளுக்கான ஆரம்பம் நேற்று அவள் சொன்ன சில வார்த்தைகள்...அவை " என்னன்னு தெரியலை... ஒரு வாரமாகவே இரவு முழுவதும் உடல் அரிக்கிறது. தூங்கப் போகும்போது இருப்பதில்லை...." சொல்லிமுடிப்பதற்குள் தலைக்குத்தலை முடிவுகள் சொல்லப்பட்டது.. " கோமதி... வீட்டிலே சுகர் ஹிஸ்டரி இருக்கு...எனக்கென்னவோ இது அதன் அறிகுறி போல்தான் தெரிகிறது" இது கணவர். " அம்மா, எதைச்சாப்பிட்ட....எனக்கென்னவோ அலர்ஜிதான்னு தோணறது..." இது மகன். …
-
- 1 reply
- 1.3k views
-
-
சொல்லின்றி அமையா உலகு: எஸ்.ராமகிருஷ்ணன் புது வருடம் பிறந்திருக்கிறது. புத்தாண்டின் இரவில் எங்கு பார்த்தாலும் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துச் சொல்கிறார்கள்... கை அசைக்கிறார்கள். உற்சாகத்தில் ஒருவன் சாலை நடுவே நின்று பலூனைப் பறக்கவிடுகிறான். மகிழ்ச்சி நகர் எங்கும் நடனம் ஆடுகிறது. காரில் செல்பவர்கள் கண்ணாடியை இறக்கிவிட்டுக் கத்துகிறார்கள். இந்த வாழ்த்தொலிகள், தன்னுடைய சந்தோஷத்தை முன்பின் அறியாத ஒருவரோடு பகிர்ந்துªகாள்வது என்ற பழக்கம் ஏன் மற்ற எந்த நாளிலும் இருப்பதே இல்லை என்று ஆதங்கமாக இருந்தது. புத்தாண்டு வாழ்த்துச் சொல்லும்போது ஒன்றைக் கவனித்தேன். யாருக்கும் சுயமாக வாழ்த்துச் சொல்லத் தெரியவில்லை. 'ஹேப்பி நியூ இயர்' என்ற ஒரே ஒரு சொல்லை மட்டுமே அத்தனை பேரும் திரும்பத்…
-
- 2 replies
- 1.3k views
-
-
என்னடி நிஷா நட்டு நடுராத்திரில எழும்பி இருந்து அழுகிறா... என்று.. தனது 6 வயதேயான.. மகளை வெறித்துக் கொண்டிருந்தார்.. அம்மா தனம். தனமும் குடும்பமும்.. ஜேர்மனிக்கு அகதி என்று போய்..15 வருசம் கழித்து இப்ப தான் சொந்த ஊரான யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு குக்கிராமத்திற்கு வந்திருக்கிறார்கள். அந்த நிலையில்.. வந்த அன்றே நடுநிசியில்.. நிஷாவின் அழுகைக்கு காரணம் தெரியாமல் அம்மா தனம்.. காட்டுக் கத்து கத்திக் கொண்டிருந்தாள். சொல்லண்டி.. என்ன வேணும். உடம்புக்கு ஏதேனும் செய்யுதே. வாயத் திறந்து சொல்லண்டி.. சொன்னா தானே தெரியும். என்ன.. வெக்கையாக் கிடக்கே. அம்மா னேய்.. அங்கை இருந்து அனுப்பின காசுகளை என்னன செய்தனீ. உந்த வீட்டுக்கு கரண்டும் போட்டு.. ஒரு பானும் வாங்கி வைக்க முடியாமலோன இருந்த…
-
- 10 replies
- 1.3k views
-
-
[size=4]ஒரு ஊர்ல.... ஐய்யய்யோ வழக்கம்போல ஆரம்பிச்சிட்டன்!!! பரவாயில்லை.... அப்படித்தான் ஆரம்பிக்கணும். ஒரு நாள் ஐன்ஸ்டீன், தான் குடியிருந்த சாலை வழியாக சென்றிருக்கிறார். வழக்கமாக அவர் பயணிக்கும் பாதை என்றாலும் அவரது கவனம் ஒரு போதும் அதற்கு முதல் அந்த வீதியிலமைந்திருந்த அப்பிள் தோட்டத்தின் பக்கம் போயிருக்கவில்லை. ஆனால் ஒரு நாள் அதனை கண்டு அதிர்ச்சியடைந்து அந்த இடத்திலேயே சிந்தனையில் மூழ்கியிருந்தார்.[/size] [size=4]இநிலையில் அந்த வழியாக வந்த சிறுவன் தன்னை அவதானிக்கொண்டிருப்பதை உணர்ந்து ஆழ்ந்த சிந்தனையிலிருந்து சற்று வெளியே வந்த ஐன்ஸ்டீன் சிறுவனைப் பார்த்து 'இந்த அப்பிள் தோட்டத்திலுள்ள அனைத்து மரங்களிலும் அப்பிள் காய்த்திருக்கிறது ஆனாலும் (மரத்தைக்கா…
-
- 3 replies
- 1.3k views
-
-
[size=4]நீண்ட காலங்கள் கடந்து போய்விட்டாலும், குருமூர்த்தியின், முகம் மட்டும் இன்னும் மனத்திரையை விட்டு அகன்ற பாடாயில்லை. இவ்வளவுக்கும் குருமூர்த்தி, ஒரு பிரபலமான மனிதனோ, அல்லது எம்மால் ஏற்றுக்கொள்ளப் பட்ட தேச வழமைகளின் படி, ஒரு சாதாரண மனிதனோ கூட அல்ல.[/size] [size=4]சுத்தமான, கலப்படமில்லாத தமிழில் சொன்னால், ஒரு விசரன்.[/size] [size=4]நடராசா அண்ணையின்ர, கன்ரீனுக்கு முன்னால, இருந்த மரத்துக்குக் கீழ, இருந்த படி, ஒரு இருபது பக்க, அப்பியாசக் கொப்பியில், ஏதாவது எழுதியபடி இருப்பான். ஆனால், வாய் திறந்து ஒரு வார்த்தை பேசியதை, நாங்கள் ஒருவரும் கேட்டது, கிடையாது. ஒரு வேளை, ஊமையாக இருக்கலாம் போலும் என நாங்கள் நினைத்து, அவனை, நாங்கள் கரைச்சல் படுத்துவதும் கிடையாது![/size] […
-
- 19 replies
- 1.3k views
-
-
[size=6]நம்பிக்கையும் காசில்லாமல் கனவாகிறது. [/size] Posted by சாந்தி ரமேஷ் வவுனியன் Tuesday, June 26, 2012 அண்ணை இப்பத்தான் அண்மையில தடுப்பிலயிருந்து வெளியில வந்தவர். 25வரியம் இயக்கத்தில இருந்தவர். ஒரு நல்ல களமுனைச்சண்டைக்காரனும் கூட. அவருக்குத் தெரிஞ்சதெல்லாம் சுடுகலனும் , கனரகமும் அதுகளை இயக்கிற வகையளுமே. ஆயுதங்களோடை அண்ணை காடுகளெல்லாம் நடந்து திரிஞ்சவர். தாயகக்கனவை நெஞ்சில சுமந்தபடி அண்ணை உருவாக்கிய போராளிகள் அண்ணையின் கையிலை வீரச்சாவான நேரங்களிலயெல்லாம் அண்ணை தன்ரை கண்ணீரை மறைச்சு இலட்சியத்தை இறுக்கமாவே வரிச்சுக் கொண்டு இயங்கின மனிசன். 2006மாவிலாற்றில சண்டை துவங்கினோடனும் மாவிலாற்றில சண்டைக்களத்தில நிண்டார். பிறகு சம்பூர் , மூதூர் , கொக்க…
-
- 6 replies
- 1.3k views
-
-
தண்டனை! அதிகாலை ஐந்து மணி- முகத்தைக் கழுவி, துடைத்த துண்டை தோளில் போட்டபடி, பழைய சைக்கிளை வெளியே எடுத்தான் ரத்தினம். கட்டடம் கட்டும் மேஸ்திரி அவன். சத்தம் கேட்டு விழித்துக்கொண்டாள், அழகேஸ்வரி. ''யோவ்... நாழி வளத்தாம சீக்கிரம் போயிட்டு வா... வேல நிறைய கிடக்கு,'' பதிலுக்குத் தலையை அசைத்தபடி மெதுவாய் சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தான். 10 நிமிடத்தில் மெயின் ரோட்டிலிருக்கும் அரச மரத்தடி டீக்கடையை வந்தடைந்தான். அப்போது தான் பாய்லரை பற்ற வைத்து, முதல் குவளை டீயை ஆத்தி முடித்தான் கடை மாஸ்ட…
-
- 1 reply
- 1.3k views
-
-
நித்தியா...... சிறுகதை -இளங்கவி சில மைகள் நடந்து வந்த களைப்பில், அவளுக்குப் பரிச்சயப்பட்ட இடமான அந்த இடத்தில் புதிதாக முளைத்திருந்த அந்தப்பெட்டிக்கடையடியில் வந்து நின்று கொண்டாள் நித்தியா..... நாவெல்லாம் வறண்டு தலைசுற்றுவது போல வர உடனடியாக ஒரு மரத்தின் கீழ் அமர்ந்துகொண்டவள் கடைக்காரரைப் பார்த்து ''அண்ணை கொஞ்சம் தண்ணி தாறியள...கொஞ்சம் தலைச்சுத்துது....'' எனவும் கடைக்காரர் அவளைப்பார்த்து '' தங்கச்சி இங்க போத்தல் தண்ணி விக்குறத்துக்குத்தான் இருக்கு, இந்த சின்னப்பபோத்தல் தான் குறைஞ்ச்ச விலை... நூறு ரூபாய் மற்றதெல்லாம் விலை கூட...'' என்றார். தன்னிடம் காசில்லாத நிலமைய அவரிடம் கூறவும், ''இப்படிப் பார்த்துப்பார்த்து எல்லாருக்கும் சும்மா கொடுத்தால்…
-
- 3 replies
- 1.3k views
-
-
பொதுச்சுடர் - தெய்வீகன் விமானம் தரைதட்டியபோது உயிர்நாடியில் அலாரம் சொட்டியது. காலம் என்னை புதியதோர் நிலத்தில் பிரசவித்தது. விமான நிலையங்களில் ஒருவன் கழுத்தில் இரண்டு தலைகளோடு வந்திறங்கினால்கூட புதினமில்லை. கடவுச்சீட்டிற்குள் இரண்டு தலைகளிருந்தால்தான் அதகளப்படுவார்கள். இங்கு எல்லோருமே கடவுச்சீட்டுகள்தான். தடித்த இரண்டு அட்டைகளாலான அந்த சிறிய புத்தகத்துக்குத்தான் மரியாதை. இலங்கையிலிருந்து ஏறும்போதும் சரி, மலேசியாவில் மாறும்போதும் சரி, இப்போதும்கூட மானிடத்தின் இந்த அட்டை வாழ்வு எவ்வளவு அஜீரணமானது என்பதை எண்ணியபடியே நடந்தேன். …
-
- 4 replies
- 1.3k views
-
-
நான் ஜன்னலருகே உட்கார்ந்திருக்கிறேன்-ஜெயகாந்தன் ஆமாம்; நான் ஜன்னலண்டைதான் உக்காந்துண்டிருக்கேன்… அதுக்கென்னவாம்? உட்காரப்படாதோ?… அப்படித்தான் உட்காருவேன். இன்னிக்கி நேத்திக்கா நான் இப்படி உக்காந்துண்டிருக்கேன்… அடீ அம்மா! எவ்வளவோ காலமா உக்காந்துண்டுதான் இருக்கேன். இனிமேலும் உக்காந்துண்டுதான் இருப்பேன். என்ன தப்பு? இல்லே, யாருக்கு என்ன நஷ்டம்? பெரீசா எப்போ பார்த்தாலும் இதையே ஒரு வழக்காப் பேசிண்டு இருக்கேளே… ‘ஜன்னலண்டையே உக்காந்துண்டிருக்கா… உக்காந்துண்டிருக்கா’ன்னு. ஜன்னலண்டை உட்காரப்படாதோ? ஜன்னலண்டையே போகப் படாதோjayakanthan_185_1_050408 ? அப்படீன்னா வீட்டுக்கு ஜன்னல்னு ஒண்ணு எதுக்காக வெக்கணும்கறேன்! ஒண்ணா? இந்த வீட்டுக்கு ரெண்டு ஜன்னல் இருக்கு; பார்த்துக்கோங்கோ. தெருவ…
-
- 2 replies
- 1.3k views
-
-
கடந்த 1991-ம் ஆண்டு ஏப்ரல் மாதம்... இப்போதும் என் மனதுக்குள் அட்சதை தூவும் சத்தம் கேட்கிறது. நானும் நளினியும் திருப்பதியில் திருமணம் செய்துகொண்டு புதுமணத் தம்பதியாக சென்னை திரும்பினோம். மனதுக்குள் ஆயிரமாயிரம் கற்பனைகள். சினிமா காதலுக்கே உரிய கனவுகளைப் போல் நிறைய குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளவும், கொஞ்சி மகிழவும் ஆசைப்பட்டோம். ஆனால், தலைப்பிள்ளையைத் தக்கவைக்கக்கூட போராட வேண்டிய நிலை வரும் என்பதை எந்த சொப்பனமும் எங்களுக்குச் சொல்லவில்லை. அதிகாரிகளின் ஆசை வார்த்தைகளுக்கு நானும் நளினியும் மசியாத நிலையில்... அவர்களின் கவனம் எங்களின் இரண்டரை மாத சிசுவின் மீது திரும்பியது. 'இதுவரை நடந்த விசாரணைகள் எல்லாம் சாதாரணம்தான்... இனிதான் மொத்தச் சித்ரவதைகளும் இருக்கு. மரியாதைய…
-
- 3 replies
- 1.3k views
-
-
வனாந்திர ராஜா மிகைய்ல் பிரிஸ்வின் (ருஷ்யா) தமிழில் எஸ். சங்கரநாராயணன் ஒரு கோடைநாளில் நடந்தது இது! மழைக்கு முந்தைய வனாந்திரம் பற்றி இப்போது சொல்கிறேன்! ஒவ்வொரு சின்ன இலையும், பைன்மரத்தின் ஒவ்வொரு ஊசியும் முதல்மழையின் முதல்துளியை அனுபவிக்க ஆவேசப் பட்டன. ஒவ்வொரு சிற்றுயிரும்கூட மழை பற்றிய சுத்த சுயமான பிரக்ஞையில் உறைந்து கிடந்தன. எல்லாவற்றையும் பார்த்தபடி நான் போனேன். எல்லாமே, மனிதர்களைப் போலவே, என்னைத் திரும்பிப் பார்த்தன, ஏதோ நான்தான் கடவுள்போல!.... மழையை அனுப்பச் சொல்லி என்னிடம் அவை கெஞ்சுவதாய் எனக்குள் சொல்லிக் கொண்டேன்! "வாங்க பெரியவரே...." நான் மழையிடம் பிரார்த்தனை செய்தேன். "நாங்க காத்துக் காத்து அலுத்துப் போனம்யா. எப்பிடிய…
-
- 1 reply
- 1.3k views
-
-
பறவைகளைத் தின்ன விரும்பிய சிலந்தியின் கதை. - வ.ஐ.ச.ஜெயபாலன் இலங்கை யாராலும் வெற்றிகொள்ளமுடியாத ஒரு கொழுத்த சிலந்தி என்கிறேன். சாப்பாட்டுக்கு இன்னும் எத்தனை நாடகளுக்கு பூச்சிகளையே வேட்டையாடுவது என அந்தக் கொழுத்த சிலந்தி சிந்தனை செய்தது. . இனி கழுகு, நாரை, மயில் போன்ற பெரிய பெரிய பறவைகளையே உண்ணவேண்டுமென அந்தக் கொழுத்த சிலந்தி முடிவு செய்தது. . பெரிய பறவைகளைப் பிடித்து சாப்பிடும் ஆசையில் அந்தச் சிலந்தி தனது கரையோரங்களில் வலைகள் பின்னி வைச்சிருக்கு. தனது இராசதந்திரம் புரியாமல் முட்டாள் நாரைகள் ஏற்கனவே அம்பாந்தோட்டையிலும் கொழும்பு போட் சிற்றியிலும் தான் பின்னிவைத்த வலையில் வந்துமாட்டிக்கொண்டுவிட்டதென அந்தச் சிலந்தி குதூகலிக்கிறது.. இலங்கை சிலந்தி வடகிழக்கில் விரித்த …
-
- 3 replies
- 1.3k views
-
-
கனவுக் கன்னி 'கனவுக்கன்னி' என்ற வார்த்தை எப்போது தமிழில் அறிமுகமாகியிருக்கும்? நிச்சயம் அது தனித் தமிழ் வார்த்தை கிடையாது. எல்லோருக்குமே தான் நேசிக்கும் நடிகைகள் கனவில் வந்து விடுகிறார்களா என்ன? எனக்குத் தெரியாது. ஆனால் ஒரு நாள் நடிகை கஜோல் என்னுடைய கனவில் வந்து ஆச்சரியம் தந்தார். கஜோலை எனக்கு அவ்வளவு பிடிக்கும். இப்போது அவர் கொஞ்சம் குண்டாகி விட்டார். என் கனவில் ரொம்பவே ஒல்லியாக, கௌபாய் உடை அணிந்து, தற்காப்பு வித்தைகளை எனக்கு செய்து காட்டினார். கௌபாய் உடை என்றாலும் அந்தத் தொப்பியை அவர் அணிந்திருக்கவில்லை. கராத்தே ஸ்டெப்சுகளை செய்து காட்டி விட்டு, என்னைத் தாக்க வரும் போது, நான் திருப…
-
- 1 reply
- 1.3k views
-
-
அதிசயம் யேசு மாட்டு கொட்டகையில் பிறந்தது மட்டுமல்ல அப்படி ஒன்று எங்கள் வீட்டிலும் நடந்தது.அது நடந்ததுக்கு தடங்கள் இல்லை இப்ப என்ற மாதிரி,எங்கள் வீட்டு அதிசயத்துக்கான தடங்களும் இப்ப இல்லை .என்றாலும் இன்று போல அந்த நாள் அது நடந்த நேரம் இப்பவும் என் முன் திரைபடம் போல ஓடி கொண்டிருக்கிறது ..வேறு ஒன்றுமில்லை எனக்கு அதிசயமாக இருந்தது .உங்களுக்கு எப்படி இருக்கும் என்று தெரியாது . நத்தார் பிறக்கும் இரவு ஒரு பதினொரு பன்னிரண்டு மணிக்கும் இடையில் தான் அது நடந்தது என்று நினைக்கிறன் .கொட்டும் மழை வேறை அன்றைய காலையிலிருந்து. அடியென்றால் அந்த மாதிரி விடாமால் ஓரே அடி .அந்த மழை எல்லாரையும் வெளிக்கிட விடாமால் வீட்டுக்குள்ளை அன்று முழுவதும் கட்டி போட்டது போதாதுக்கு அன்று இரவும் நித்திரை கொள்…
-
- 13 replies
- 1.3k views
-
-
ப்ரியம் என்பது.. என்னைப் பொறுத்தவரை ப்ரியத்தை சொல்லாமலிருப்பது. அம்புட்டுதான்.. இளம் பிராயத்தில் ஏதேனுமொரு காரணத்துக்காக வீட்டில் பட்டினிப் போராட்டம் நடத்துவதுண்டு. உன் வயிறு.. உன் பசி.. என்று பேசாமல் போகாமல் அம்மா எப்போதும் என்னை சாப்பிடச் சொல்லி கெஞ்சியபடியே இருப்பாள். என் அம்மாவை பிளாக் மெயில் பண்ண வேண்டுமென்றால் உண்ணாவிரதம் இருந்தால் போதும். பலவாறாக கெஞ்சுவாள். நாம்தான் பெரிய கிரிமினல் ஆச்சே. எந்த கெஞ்சலுக்கும் எப்படிப்பட்ட கண்ணீருக்கும் மசிந்ததில்லையே.. நான் செத்தா நீ சாப்புடுவியாடா என்று கூட கெஞ்சுவாள். ம்ஹூம். சாப்பிட மாட்டேனே.. ஒரு முறையாவது எதற்காக நீ என்னை சாப்பிட வைக்க இத்தனை மெனக்கெடுகிறாய். ஒரு வேளை சாப்பிடாவிட்டால் நான் செத்தா போய்விடுவேன் என்று ஒர…
-
- 1 reply
- 1.3k views
-
-
குண்டுமழைக்குள்ளிருந்து... (நினைவேட்டின் அழிக்கமுடியாத பக்கங்கள்) வழங்கியவர் - எஸ்.பி.ஜெ.கேதரன் சொந்தங்களே... இறுதி யுத்தகாலப்பகுதியில் என்னைச்சூழ நடந்தவற்றை அப்படியே மற்றவர்களும் அறியும்படி எழுதவேண்டுமென்று எனக்கிருந்த நோக்கத்தின் பயனாக நான் கொஞ்சம் எழுதியிருக்கிறேன் என்று ஏற்கெனவே கூறியிருக்கிறேனல்லவா.அப்படி எழுதியதுவும்,எழுதப்போவதுவும் உங்களால் பொறுமையாகப் படிக்க முடிகிறதா? அல்லது உங்களது நிதானத்தை சோதிக்கிறதா? தொடர்ந்து எழுதலாமா? எழுதியதை அப்படியே நிறுத்திவிடவா? என்ற கேள்விகள் மனதில் எழுந்ததன் விளைவாக... நான் எழுதியவற்றிலிருந்து ஒரு பகுதியை மட்டும் இந்தப்பதிவினூடாக உங்களுடன் பகிர்ந்து,உங்கள் கருத்தையறியலாமென்று நினைத்தேன்.இந்தப் பகுதி அடுத்த ப…
-
- 5 replies
- 1.3k views
-
-
காணும் முகம் தோறும் - சிறுகதை நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு... எஸ்.செந்தில்குமார், ஓவியங்கள்: செந்தில் ஜெனிஃபர் டீச்சரிடம் அவளது தோழி செல்லம்மாள் 1,48,000 ரூபாய் கடனாகக் கேட்ட மறுதினம், அவரின் 10 பவுன் செயின் காணாமல்போய்விட்டது. அந்தச் செயினில் சிலுவை டாலர் கோத்திருந்தார்கள். அது, பார்ப்பதற்கு அழகாக இருக்கும். டீச்சர் தினமும் காலையில் விழித்ததும், அந்தச் சிலுவையைக் கண்களில் ஒற்றிக்கொள்வாள். ஜெனிஃபர் வேலை செய்யும் பள்ளியின் மைதானத்தில் அந்தத் தங்கச் சங்கிலி காணாமல் போய்விட்டதாக, தனது தலைமை ஆசிரியரிடம் அவள் புகார் செய்தாள். சில மாணவர்களும், கூடவே பள்ளிக் காவலாளிகளும் தேடினார்கள். நாள் முழுக்கத் தேடியும…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஒரு நிமிடக் கதை: காதலின் பொன் வீதியில் சேகரின் பிள்ளைக்குக் கல்யாணம் நிச்சயமாகி இருந்த செய்தியைக்கேள்விப்பட்டு , அவனைப்பார்க்கச்சென்றேன். " வா சரவணா... இன்னும் நிச்சயதார்த்த தேதி முடிவுசெய்யவில்லை. அப்புறம் சொல்ல நினைத்தேன்" அவன் கைகளைப்பிடித்து குலுக்கினேன். " நமக்குள் என்ன பார்மாலிடீஸ், ஆமாம், உன் பையனும் உன்னைப்போல் ரொமாண்டிக்கா, அதான் லவ் மேரேஜ்ஜா?" அவன் மிகவும் அவசரமாக " சே..சே..இல்லடா.... இது நாங்க பார்த்து செஞ்சு வைக்கும் கல்யாணம் தான்.என்ன , பையனும் பொண்ணும் ஒரே காலேஜ், ஆனால் டிபார்ட்மெண்ட் வேற பாரு , சந்திச்சிருப்பாங்க ஆன…
-
- 1 reply
- 1.3k views
-
-
மாடும் மனிதனும் விந்தன் மயிலைக் காளைகள் இரண்டுக்கும் கோமா என்று கேள்விப் பட்டதிலிருந்து மன்னார்குடி மாணிக்கம் பிள்ளையின் மனம் சரியாகவே இல்லை. பொழுது விடிந்ததும் மாட்டு வைத்தியரை அழைத்துக் கொண்டு வந்து, அவற்றுக்கு வேண்டிய சிகிச்சையை அளிக்குமாறு பணித்துவிட்டு வெளியே வந்தார். பத்துப் பன்னிரண்டு பேர் அவருடைய வரவை எதிர்பார்த்து வாசலில் காத்துக் கொண்டு இருந்தனர். "என்னடா பயல்களா, என்ன சேதி?'' "பத்து நாளாப் பட்டினிங்க; பண்ணையிலே ஏதாச்சும்...!'' "வேலைதானே? அதற்குத்தான் இங்கே ஏகப்பட்ட ஆட்கள் இருக்கேடா!'' "முனியனுக்கு மூணு நாளாக் காய்ச்சல்னு கேள்விப்பட்டோம்...!'' "ஆமாம், அதற்கென்ன இப்போது?'' "அவனுக்குப் பதிலா எங்களில் யாரையாச்சும்...!'' …
-
- 0 replies
- 1.3k views
-