கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
நான் முதல் முதல் கர்ப்பமான போது எனக்கு 16வயதும் 5மாதங்களுமே நிரம்பியிருந்தன. திருமணமாகிய முதல் மாதமே நான் கர்ப்பமாகி விட்டேன் என்ற போது எனது வயதை நினைத்து எல்லோரும் பயப் பட்டார்கள். எனக்கு அதன் விளைவுகள் ஒன்றும் அப்போது பெரிதாகத் தெரியவில்லை. போகப் போகத்தான் குமட்டல், சத்தி, ஏதோ ஒரு வித அசௌகரியமான தன்மை.. என்று எல்லாவற்றையும் உணர்ந்தேன். அப்போது மனதில் பெரிதளவான சிந்தனைகள் இல்லை. முதல் 5மாதங்களும் எப்போதும் சோர்வு. பசிக்கும். சாப்பிட மனம் வராது. நேரம் காலம் தெரியாமல் ஆழ்ந்த நித்திரை. முதல் மாதம் முற்றாக உடல் மெலிந்து விட்டது. இரண்டாம் மூன்றாம் மாதங்களில் வயிற்றின் அடிப்பகுதி எனது பார்வைக்கு மட்டும் மெதுவாக வெளித் தெரியத் தொடங்கியது. நான்காவது ஐந்தா…
-
- 10 replies
- 3.3k views
- 1 follower
-
-
என்னமாதிரி ராஜா படகு ஒன்று வெளிக்கிடப்போகுது போவமா? என்று கேட்டார் குமார் அண்ண ? எங்க அண்ண அவுஸ்ரேலியாதான் ம்கும் உங்களுக்கு செய்தி தெரியாதோ? இப்ப கடற்படை எங்க கப்பல் கிளம்பினாலும் அங்க வந்து அள்ளிக்கொண்டு போய் கோட்ஸ்ல ஒப்படைச்சு ஜெயிலில போட்டு கேச போடுறான் நாள் மாதம், வருசக்கணக்கா இழுபட என்னால முடியாது. இந்த முறை அப்படி நடக்காது என்ன நம்பு ம் உங்கள நம்பலாம் நீங்கதான் கடலையே கரைச்சு குடிச்சவர் ஆச்சே. ம் சொல்லுறன் குமார் அண்ண! என்று சொல்ல சரி ஆனால் இதைப்பற்றி மூச்சும் விடக்கூடாது சரி அண்ண யாரிட்டயும் சொல்ல மாட்டன் . இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்க நாட்டில் உள்ள மக்கள் நாட்டை விட்டு கடலாலும் , வானாலும் நாட்டை விட்டு ஓடிக்கொண்டே இ…
-
- 43 replies
- 3.6k views
- 1 follower
-
-
இனிய உறவுகளே !. இன்று அருணா அண்ணாவின் நினைவு நாள். அவரை நினைத்து நான் எழுதிய தொடரின் சில பாகங்களை இங்கே இணைக்கிறேன். பாகம் பத்து புதுக்குடியிருப்பு - ஒட்டிசுட்டான் வீதி அதில் ஒரு நூற்றைம்பது மீற்றரில் சிங்கள ராணுவத்தை மறித்து வைத்திருந்தார்கள் புலிகள் . இண்டைக்கு பிடித்துவிடுவோம். நாளைக்கு பிடித்துவிடுவோம் என்று வாய் கூசாமல் சொல்லி சொல்லி ராணுவ பேச்சாளனின் வார்த்தைகள், பொய்யாகி போய் இரண்டு வாரங்கள். கடுமையான சண்டை. நெருப்பு சுவர்களாக புலிகள். சுடுகாடாக புதுக்குடியிருப்பு. புதுக்குடியிருப்பு.... அது ஒரு அழகான நகரம். பரந்தனையும் முல்லைத்தீவையும் ஒட்டிசுட்டானையும் இரணைப்பாலையும் இணைக்கும் நாச்சந்த…
-
- 6 replies
- 1.8k views
-
-
கடற்கன்னி ஒருநாள் முழுவதும் பிரகாசித்து அன்றைய நாளை முடிக்க தென் மேற்கு திசையை நோக்கி நகர ......, நாள் முழுவதும் பறந்து திரிந்து தமது குஞ்சு களுக்கு இரைதேடி கொண்டு தமது கூட்டுக்கு திரும்பிக்கொண்டு இருந்தன ..... பறவைகள், இருள் மெல்ல ..... மெல்ல .... கவ்வ தொடங்கியது கடல் அலையின் ஓசையைவிட காகம் கத்தும் சத்தமே காதை கிழித்தது சுற்றும் முற்றும் பார்த்த வண்ணம் மோட்டர் சைக்கிளில் ராஜனும் ரஞ்சனுமாக முன்னே சென்றுகொண்டு இருக்கின்றனர் வோக்கியில் ரோமியோ ......ரோமியோ என கூப்பிடும் சத்தம் என்பக்கத்தில் நின்றவரின் வோக்கியில் கேட்டது அதக்கு ரகு ஓம் சொல்லுங்கோ ....... தங்கோ, என்ன வென்றால் இன்று நிலைமைகள் சரியாகவுள்ளது இன்றைக்கே அதை ஏற்பாடு செய்யலாம் என்று சொன்ன போது என்மனதில…
-
- 6 replies
- 2k views
-
-
அன்று மேலதிகாரி வரவில்லை அதனால் சுரேசும்,புஞ்சி பண்டாவும் அதிகமாகவே தங்களது தேநீர் இடைவேளையை எடுத்து கொண்டனர் இருவரும் ஒரே நாடு ஆனால் வடக்கு தெற்கு என்று இரு துருவங்களிள் இருந்து குடிபெயர்ந்து சிட்னியில் ஒரு வேளை ஸ்தலத்தில் தொடர்ந்து ஜந்து வருடங்களாக பணி புரிகிறார்கள்.முதலில் வேலை ஸ்தலத்தில் சேர்ந்தவன் சுரேஷ் தான் பின்பு இணைந்தவர் புஞ்சிபண்டா. பல இனமக்கள் பணி புரியும் அந்த ஸ்தலத்தில் புஞ்சிக்கு சுரேசை முதலில் கண்டவுன்ட ஏதோ ஒரு வித உணர்வில் தான் சிறிலங்கா என்று சொல்லி தன்னை அறிமுகபடுத்தினான் சுரேசும் பதிலிற்கு தானும் சிறிலங்கா என்று சொல்லி விட்டான் ஆனால் அவன் தமிழா,சிங்களமா என்று அறிய ஆவலா இருந்தான். அதை போல் புஞ்சியும் ஆதங்கபட்டு தான் இருந்திருப்பான் இருவரும் மா…
-
- 8 replies
- 2k views
-
-
மத்திய சிறைவாசி எண்: 3718 - சிறுகதை அன்புள்ள விஜி… நினைவின் எல்லா திருப்பங்களும் ரணங்களால் நிரம்பியிருக்கச் சபிக்கப்பட்டவர்கள் நாம். ஒவ்வொரு முறை உன்னைப் பார்த்துவிட்டுத் திரும்பும்போதும், சிறைச்சாலையின் உயர்ந்த சுவர்களுக்குள்ளாக நீ படும் அவஸ்தைகளை உன் முகம் உணர்த்திவிடுகிறது. அடிக்கடி வந்து பார்க்கச் சொல்கிறாய். எங்கனம் சாத்தியம்? ‘எதுக்கு இந்த மாமாவை அடிக்கடி பார்க்கப்போறம்மா?’ என ஆதிரா கேட்கிறாள். சில கேள்விகளுக்கு மெளனத்தையே பதிலாகச் சொல்வது எத்தனை சிக்கலானது தெரியுமா? என்னை எதிர்நோக்குகிற அநேகரும் என் முதுகுக்குப் பின்னால் சத்தமாகவே இதைக் கேட்கிறார்கள். அதற்கான பதிலையும் தெரிந்துவைத்திருப்பது போல் சிரித்துக்கொள்கிறார்கள். இப்போது எல்லாம…
-
- 0 replies
- 1.3k views
-
-
கைப்பாவை வெள்ளிக்கிழமை என்றாலே குதூகலம்தான். எப்படியும் காலை நேரம் முழுக்க அடுத்த வாரத்திற்கான முன்னேற்பாட்டுக் கலந்துரையாடல் கூட்டங்கள் இருக்கும். அவை நடந்து முடிந்து தத்தம் இருக்கைகளுக்குச் செல்லும் போது நண்பகல் உணவு வேளை வந்து விடும். வார ஈறில் நீ என்ன செய்யப் போகிறாய் எனக் கேட்பதும், நான் என்ன செய்யப் போகிறேன் எனச் சொல்வதிலுமாக ஓரிரு மணி நேரங்கள் கழியும். பிறகென்ன? வார ஈறும், அதையொட்டிய விடுமுறை நாட்களும்தான். மகிழ்ச்சி! அந்நினைப்பினால் மேலிட்ட மனத் துள்ளாட்டத்தினூடாக வந்து கொண்டிருந்த என்னை, அலேக்காகத் தூக்கியது கமகம வாசனை. தகவல் தொழில்நுட்பப் பொறியாளராக நான் வேலை பார்க்கும் நிறுவனத்திலிருந்துதான் கமழ்ந்தடிக்கிறது அந்த நறுமணம். நான் குடியிருக்கும் மி…
-
- 3 replies
- 671 views
-
-
தஸ்தயெவ்ஸ்கியின் மண்ணில்! எம்.ஏ.சுசீலா மதுரையிலுள்ள பாத்திமாக் கல்லூரியில் 36 ஆண்டுக் காலம் தமிழ்த்துறைப் பேராசிரியராகவும் இடையில் இரு ஆண்டுகள் துணை முதல்வராகவும் பணியாற்றியவர். சிறுகதைப்படைப்பு, பெண்ணிய ஆய்வு என்னும் இருதளங்களிலும் இயங்கி வருபவர். இவரது முதல் சிறுகதையான ’ஓர் உயிர் விலை போகிறது’ என்னும் ஆக்கம், 1979ஆம் ஆண்டு கல்கி வார இதழ் நடத்திய அமரர் கல்கி நினைவுச் சிறுகதை போட்டியில் முதற்பரிசு பெற, இவர் அறிமுக எழுத்தாளராக அங்கீகாரம் பெற்றார். தொடர்ந்து 80 க்கும் மேற்பட்ட இவரதுசிறுகதைகளும், கட்டுரைகளும் பல வார மாத இதழ்களில் வெளி வந்துள்ளன; இவரது சில கதைகள், ஆங்கிலம், மலையாளம், கன்னடம்…
-
- 8 replies
- 3.7k views
-
-
அழகான வயல் வெளிகளும் உயர்ந்த மரங்களும் நிழல் பரப்பி நிற்க ,சிறு நீரோடைகளும் , விவசாயத்தை நம்பி வாழும் மக்களும் கொண்ட அந்தக்குக் கிராமம். சொக்கனும் அவன் மனைவியும் ஆணும் பெண்ணுமாக இரு பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்தான். அவ்வூர் மக்கள் மிகுந்த முயற்சி உள்ளவர்கள். ஆடு மாடுகள் மேய்ப்பதும் , தென்னையின் ஓலைகள் பின்னி வியாபாரத்துக்கு அனுப்புவதும் , சிலர் குளங்குட்டை களில் மீன் பிடிப்பதையும் கொண்டவர்கள். சொக்கனும் நெற்பயிர்ச்செய்கையில் மிகுந்த அனுபவமும் ஆர்வமும் உள்ளவன். ஓலையால் வேயப்படட ஒரு வீடும் , சில மாடு கன்றுகளும் தான் அவனுக்கு சொந்தம். அவ்வூரில் சற்று வசதிபடைத்த ஒரு நிலச்சொந்தக் காரரிடம் நாலு வயல் காணிகளை குத்தகைக்கு எடுத்து அவனும் மனைவியும் நெற்பயிர…
-
- 2 replies
- 768 views
-
-
முதுமையின் பிடிக்குள் இருக்கும் போதுதான் பழைய நினைவுகளை ஆறுதலாக அசை போட முடிகிறது. எனது மாமி அதாவது எனது மனைவியின் தாயார் (சிவா தியாகராஜா) 87வது வயதை நோக்கி இப்போ பயணித்துக் கொண்டிருக்கிறார். அவர் தனது வாழ்க்கையின் பெரும் நினைவுகளை அசை போடும்போது மனதில் தட்டுப் படுவதை அப்பப்போ எழுதி வைத்துவிடுவது அவரது வழக்கம். அப்படி அவர் எழுதிக் குவித்திருப்பது ஏகத்துக்கு இருக்கிறது. ஒருவர் எங்களை விட்டு மறைந்ததன் பின்னால் முப்பத்தியொரு நாளிலோ அல்லது ஓராண்டு நினைவிலோ அவரைப் பற்றி அஞ்சலிப் புத்தகம் அச்சடித்து ஊருக்குத் தந்துவிடுகிறோம். அதில் அவரைப் பெருமைப் படுத்துகிறோம் என்ற திருப்தி எங்களுக்கு கிடைத்து விடுகிறது. ஒருவர் மறைந்த பின்னால் பெருமைப் படுத்துவதை விட வாழும் போதே சிறப்பித்…
-
- 6 replies
- 1.3k views
-
-
ஒரு நிமிடக் கதை கடவுள் ஒரு கணக்கன்! கிழித்த நாராக ஆஸ்பத்திரி படுக்கையில் கிடந்தாள் உமா.…
-
- 0 replies
- 1.1k views
-
-
சோதனை மாலதி தன் வீட்டிலுள்ள பூஜை அறைக்குள் உட்கார்ந்திருந்தாள். கண்களை மூடியபடி இறைவனிடம் பிரார்த்தனைகளைக் கூறத் தொடங்கினாள். பொதுவான வழிபாடு முடிந்ததும் ஒவ்வொருவர் சார்பிலுமான வேண்டுதலைத் துவங்கினாள். ‘‘அம்மாவுக்கு மூட்டு வலி தொடங்கி இருக்கு. அது அதிகமாகாமல் சரியாயிடணும். இதற்கு உன் அருள் வேண்டும்...’’ கூடத்தில் அம்மா வாய்விட்டு எதையோ அரற்றிக் கொண்டிருந்தாள். ‘‘இப்ப பார்த்து இந்த மாலதிக்கு நொய்டாவுக்கு மாற்றலாகியிருக்கே. அது எங்கேயோ தில்லியைத் தாண்டி இருக்காமே. பதவி உயர்வு இப்ப ரொம்ப அவசியமா? சோதனைகளைத்தான் வேண்டிய மட்டும் அனுபவிச்சாச்சே...’’ கூடத்தில் அம்மா இப்படி தனக்குத்தானே அடிக்கடி உரத்துப் பேசிக் கொண்டிருப்பதும் அதனால் பூஜை அறையில் மாலதிய…
-
- 0 replies
- 835 views
-
-
ஆண்களைப் பார்த்தால் நம்ப மாட்டாள் போன ஆகஸ்ட்டில் அம்மா இறந்து விட்டாள். திடுமென்று இறந்துவிட்டாள். இப்போது அம்மா இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். அம்மா கண்டிப்பானவள். அவள் பார்வையே ஒரு தினுசாக இருக்கும். எதாவது சொல்லிக்கொண்டே இருப்பாள். டிரஸ் சரியாகப் போட்டுக் கொள்ளவில்லை என்றால் திட்டுவாள். "ஏன் எல்லாம் தெரியும்படி டிரஸ் செய்துக்கிறே?'' என்பாள். நான் வயதுக்கு வருவதற்கு முன்னாலேயிருந்து அம்மாவின் நச்சரிப்பு தொடர்ந்துகொண்டே இருக்கும். இப்போது எனக்குக் கல்யாணம் ஆகி என் பெண் பத்மஜா பெரியவளாகப் போகிறாள். எட்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கிறாள். …
-
- 0 replies
- 1.5k views
-
-
இந்தியருக்கு விளையாட்டு ஈழத்துக்கு சீவன் போகுது! "முள் வேலிக்குள்ளே வாடும் தமிழ் ஈழம் போல் ஆனேனே. அன்பே உன் அன்பில் நானே தனி நாடாகி போவேனே" இந்திய தமிழரான யுகபாரதி என்னும் கவிஞர் ராஜபாட்டை என்ற திரைப்படத்துக்காக எழுதிய பாடலின் சரணத்தில் வரும் வரிகள் இவை. வாசிக்கும் போது கோபம் பொத்துக்கொண்டு வந்ததாக நண்பன் சொன்னான். எனக்கு வரவில்லை. இப்போதெல்லாம் கோபம் ஏனோ வருவதில்லை. அடி வாங்கி அடி வாங்கி மரத்து போய்விட்டது. சின்னவயதில் ஆகாயத்தால் வந்து எங்களுக்கு பருப்பு போட்டீர்கள். எடுத்து தின்றோம். ருசியாக இருந்தது. இன்றைக்கு நாங்கள் திருப்பிக்கொடுக்கும் நேரம். ஏழைக்குசேலர்கள் நாங்கள். அவல் தானே தரமுடியும். எடுத்து கொள்ளுங்கள். அட ஒருவர் செய்…
-
- 2 replies
- 996 views
-
-
இந்த சின்னக்குட்டி நித்திரை கொள்ளுறாரோ வாட்டர் பம்மாலை தண்ணி இறைக்கிறோரோ என்ற மாதிரி கிடக்கு விடுற சத்தம்..இவற்றை குறட்டை சத்தம் மெதுவாக கேட்க தொடங்கி தீடிரென்று சுருதி கூடி பிறகு அந்த சத்தங்களே ஒன்றுக்கொண்டு அவைக்குளை சண்டை படுறமாதிரி ஒலி எழுப்பும் .சில வேளை ஏழு ஸ்வரங்களை வைச்சு வித்தியாசமான மெட்டு அமைத்து விடுற மாதிரி இருந்தாலும் அநேகமாக கேட்கிற ஆக்களுக்கு அரியண்டமாய் தான் http://sinnakuddy.blogspot.com/2007/11/blog-post_16.html
-
- 11 replies
- 2.7k views
-
-
தங்கமாளின் தாயும் தந்தையும் 'தங்கம்' என்று பெயர் வைத்ததே அவள் உடல் முழுவதும் தங்க நகைகளால் அலங்கரித்து பார்க்க வேண்டும் என்ற ஆசையால் தான். தங்கம் என்ற பெயர் பெற்றதின் நேரப்பலன் அவள் காதில் இன்றுவரை ஒரு பொட்டுத்தங்கம் அணியும் புண்ணியம் கிடைக்கவில்லை, ஆனால் குணம் தங்கம். வாலிபத்தில் மஞ்சள்கயிறு கட்டியவன் கட்டிய கடமைக்கு வயிற்றில் குழந்தையைக் கொடுத்து விட்டு போய்ச் சேர்ந்து விட்டான். ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு இருந்தவனும் படிப்பை பாதியில் விட்டுவிட்டு எங்கோ ஓடிப்போனான். கூலி வேலை செய்தால் தான் அவளுக்குச்சாப்பாடு அல்லது அரைப்பட்னி தான். கடவுளே கதி என்று காலத்தை ஓட்டி வந்தால். காணாமல் போன மகன் ஒருநாள் திடீர் என்று வந்து நின்றான்...! வந்தவன் தனியாக வரவி…
-
- 3 replies
- 896 views
-
-
வாழ்க்கை வாழ்வதற்கே! வாழ்க்கையின் பொருள் பற்றி சமீபத்தில் நான் படித்த ஒரு கதை இங்கே. ஒரு கல்லூரியில் ஒன்றாக படித்த சில மாணவர்கள், படித்து முடித்து சில ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே கல்லூரியில் சந்திக்கின்றனர். அப்போது, கல்லூரி வாழ்க்கையைப் போல வெளி உலக வாழ்க்கை சந்தோசமானதாக இல்லை என்றும் வாழ்க்கை மிகவும் கடினமாக இருக்கின்றது என்றும் அலுத்துக் கொள்கின்றனர். அப்போது அங்கு வந்த அவர்களது முன்னாள் பேராசிரியர் அவர்களை தன் வீட்டிற்கு தேநீர் விருந்துக்கு அழைக்கிறார். சுவையில் சிறந்த அவர் வீட்டு தேநீர் கல்லூரி மாணவர்கள் மத்தியில் மிகவும் பிரசித்தமானது. அவரது வீட்டில் தேநீர் பல்வேறு விதமான கோப்பைகளில் பரிமாறப் படுகின்றது. சில கோப்பைகள் சாதாரணமானவை, சில கோப்…
-
- 12 replies
- 7.1k views
-
-
ஒரு நிமிடக் கதை: விழுதுகள் தோட்டத்தில் சாய்ந்து கிடந்த மரங்களை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார் அருணகிரி. “பாருங்க , புள்ளைய போல பாத்து பாத்து முப்பது வருஷமா வளர்த்து வந்தீங்க.. ஒரே நாள்ல அடிச்ச புயல்ல எல்லாம் சாஞ்சிடுச்சு” என்றார் அவரது மனைவி கமலா. அருணகிரி ஓய்வு பெற்ற அரசு அலுவலர். எழுபது வயதாகிறது உழைத்து சம்பாத்தித்து கட்டிய வீட்டைச் சுற்றி தென்னை, மா, கொய்யா, வாழை என மரங்களை நட்டு ஆசையாக வளர்த்து வந்தார். அவரின் இரண்டு மகன்களும் வெளிநாட்டில் செட்டிலான பிறகு, அவருக்கும், கமலாவுக்கும் அந்த மரங்கள்தான் துணை. அதிகாலை நேரத்தில் நடை பயிற்சி செய்யவும், நண்பகலில் ஆ…
-
- 0 replies
- 726 views
-
-
மம்மூதன் - சிறுகதை வரவணை செந்தில், ஓவியங்கள்: ஸ்யாம் பந்தடித் தெருக்கள் சந்திக்கும் இடத்தில் வெளிர் சந்தன நூற்பாவுகளைத் தகதகக்கும் பச்சை நிறச் சாயத்தில் முக்கி எடுத்துக்கொண்டிருந்தனர் பட்டு நூல்காரர்கள். ஒரு கையில் வேல்கம்பும், மறுகையில் சோழவந்தான் கொழுந்து வெற்றிலையும், கதுப்பில் அடக்கிய பாக்குமாக அவர்களிடம் சுண்ணாம்பு கேட்டுக்கொண்டிருந்தார் தலையாரி பொன்னன். ``ஏப்பா ஏய்... வடக்க இருந்துவந்த தலையாரியா, நாயக்கர் கூப்புடுறாரு...’’ என்று திடுதிடுவென ஓடிவந்து காவல்காரன் அழைக்கவும், பாக்கைத் துப்பிவிட்டு, வேல் முனையைப் பின்பக்கமாகத் திருப்பிக் கையிடுக்கில் வைத்துக்கொண்டு, குனிந்து பவ்யமாக மஹாலுக்குள் ஓட்டமும் நடையுமாகத் தலையாரி நுழைந்தார்.…
-
- 0 replies
- 3.3k views
-
-
இதழில் கதை கணவன் யார் மீதோ பயங்கர கோபமாக சண்டைக்கு புறப்படுகிறான் என்பதை புரிந்துகொள்கிறாள் மனைவி. அவன் சட்டையை மாட்டிக்கொண்டு மேலிருந்து பொத்தான்களை பொருத்த இவள் மேலிருந்து கழற்ற ஆரம்பிக்கிறாள். "என்ன செய்கிறாய்.."கோபமாக "எங்கே புறப்பட்டு விட்டீர்கள் "அவன் கண்களை வாஞ்சையோடு நோக்கியவாறு கேட்கிறாள் "வெளியே ஒரு வேலை இருக்கிறது" "எனக்கு தெரியும் சண்டைக்கு போகிறீர்கள்.." "ம் என்னையே சீண்டி பார்க்கிறார்கள் அவர்களை அடித்தால்தான் மனம் ஆறும்" "நீங்கள் வீர்ர்தான் ஆனால் அடித்தால் பகை வளரும் வஞ்சம் வைத்து காத்திருப்பார்கள் என்னிலோ குழந்தையிலோ கூட பகைமையை காட்ட முனைவார்கள்" "தொட்டுவிடுவார்களா உன்னையோ பிள்ளையையோ" "என் பேச்…
-
- 4 replies
- 938 views
-
-
காலம் உனக்கொரு பாட்டெழுதும் : ஈழத்து எழுத்தாளர் ரஞ்சகுமார் 80 களின் ஈழத்தில் இருந்து வந்த மிகச் சிறந்த சிறுகதை தொகுப்பான மோகவாசல் தொகுதியில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு சிறுகதை --- வெகுநாட்களுக்குப் பிறகு இன்று குளியல். இன்றையப் போத்தின் உதயகாலமே புதிய தோற்றத்துடன் எழுந்தது. மிகவும் வித்தியாசமாக, ஒரு சித்திரை மாதத்தின் கதகதப்பான விடியலாக இன்றிச் சற்றே குளிரூட்டியபடி, ஒவ்வொரு மயிர்க்காலிலும் நுழைந்து கிச்சு கிச்சு மூட்டுகிற குளிர். இளவெயிலில் பசைபரவிய பெருமிலைகளை வி¡¢த்துக் காட்டியபடி, எங்கு பார்த்தாலும் புகையிலைத் தோட்டங்கள் தொ¢ந்தன. கனவேகமாக நீரை உமிழ்ந்து கொண்டிருந்தன வாட்டர் பம்ப்புகள். புகையிலையின் இனிய மயக்கந்தரும் நெடியுடன் சேர்ந்து மண்ணென்ணெய் எ¡¢ந…
-
- 13 replies
- 3.1k views
-
-
பாதை - சிறுகதை கவிதைக்காரன் இளங்கோ - ஓவியங்கள்: ஸ்யாம் திங்கட்கிழமை காலை நேரப் பரபரப்பைத் தவிர்க்க திட்டமெல்லாம் போட்டு ஒவ்வொரு வாரமும் தோற்றுதான்போகிறாள் ரம்யா. ஞாயிற்றுக்கிழமைகளின் அசமந்தக் காலையிலேயே அதை முடிவுசெய்வாள். ஆனாலும் முடிவதில்லை. ரயில்வே டிக்கெட் கவுன்ட்டரில் டிரெயின் நீளத்துக்கு ஒரு க்யூ நிற்கிறது. சனிக்கிழமையே மாதாந்திர பாஸை ரெனியூவல் செய்திருக்க வேண்டும். விட்டாச்சு. தாம்பரம் போகும் டிரெயின், மூன்றாவது நடைமேடையிலிருந்து கிளம்பக் காத்திருக்கிறது. ஏற்கெனவே லேடீஸ் ஸ்பெஷலைத் தவற விட்டுவிட்டாள். இது சூப்பர் ஃபாஸ்ட். `சட்டென மாம்பலம் ஸ்டேஷன் போய்விடலாம்’ என, மனக்கணக்கு வேகமாக ஓடியது. …
-
- 0 replies
- 1.8k views
-
-
அவளை நீங்களும் அறிவீர்கள்! - ச.பாலமுருகன் ச.பாலமுருகன் நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு... அவளை நீங்களும் அறிவீர்கள்! நடுப் பகலில்கூட சூரிய ஒளியை மட்டுப்படுத்தி அனுமதிக்கும் அடர் வனம் அது. மாலையில் பொழிந்த ஆலங்கட்டி மழையால் நிலம் நன்கு குளிர்ந்திருந்தது. வனத…
-
- 0 replies
- 820 views
-
-
அப்பாவைப் பார்க்கணும்! அருண் வயசு 27. சிவந்த நிறம். எடுப்பான மூக்கு. அழகான உருண்டை முகம். இன்றைய இளைய தலைமுறை இளைஞன். ஒரே ஒரு சின்ன விசயம் இடறல். இன்றைய இளைஞர்கள் விருப்பம் போல் கொஞ்சமாய் முடி உள்ள தாடி வைத்துக் கொள்ளப் பிடிக்காது. ஒரு நாள் விட்டு மறுநாள் முகச் சவரம் செய்து கொள்வான். மீசையும் அளவாய் அழகாய் இருக்கும். இவனைக் கடக்கும் எந்தப் பெண்ணும் ஓரக் கண்ணாலோ, அடிக்கண்ணாலோ பார்க்காமல் போகமாட்டார்கள். அந்த அளவிற்கு இவனுக்கு உடல்மொழி, முக வசீகரம், கண்கள் கவர்ச்சி. அம்மாவுடன் பேச நேரம் பார்த்துக் கொண்டிருந்த இவனுக்கு இந்த ஞாயிற்றுக்கிழமை மணி 10. 10 நேரம் வசதியாக அமைந்தது. அம்மா …
-
- 2 replies
- 1.9k views
-
-
அன்ரி எங்க சேன்ஸ்பரில இருந்தோ வாறீங்கள். என்ன ஒபர் (Offer) போட்டிருக்காங்கள்...?! என்ன வழமை போல.. வாழைப்பழமும்.. ஒரேஜ்சும்.. அப்பிள் பையும் தான்.. பை வன் கெட் வன் பிறி என்று போட்டிருக்கிறாங்கள். அவ்வளவு தானா. அது சரி அன்ரி.. இன்றைக்கு இரவு சனல் 4 இல ஊரைப் பற்றி வீடியோ காட்டப் போகினமாம்.. பார்க்கல்லையோ..??! பார்த்து என்னத்த தம்பி ஆகப் போகுது. அவங்களும் காட்டிறதை காட்டிறாங்கள்.. உலகம் ஒன்றும் உருப்படியா செய்யுதுல்லையே. இப்படியே இவன் காட்ட பதிலுக்கு அவன் தான் ஒன்றைக் காட்ட..எண்டு எங்கட பிரச்சனை இழுபட்டுக் கொண்டெல்லோ போகுது. நாங்கள் அவசரப்படுறது போல.. உலகம் ஆதாரமில்லாமல் எடுத்தேன் கவுத்தன் என்று ஒன்றும் செய்யேலாது தானே அன்ரி. இந்தியா.. சீனா.. ரஷ்சியா என்ற…
-
- 2 replies
- 1.3k views
-