Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. Started by nunavilan,

    விடியுமா? - கு.ப.ரா. தந்தியைக் கண்டு எல்லோரும் இடிந்து உட்கார்ந்துபோனோம். அதில் கண்டிருந்த விஷயம் எங்களுக்கு அர்த்தமே ஆகவில்லைபோல் இருந்தது. ‘சிவராமையர் - டேஞ்சரஸ்-’ என்ற இரண்டு வார்த்தைகளே இருந்தன. தந்தி சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியிலிருந்து வந்திருந்தது. என் தமக்கை இரண்டு மாதங்களுக்கு முன்புதான் சென்னையிலிருந்து வந்தாள். அப்பொழுது எங்கள் அத்திம்பேர் நன்றாகக் குணமடைந்து விட்டார். க்ஷயத்தின் சின்னம் கொஞ்சம்கூட இல்லையென்று பிரபல வைத்தியர்கள் நிச்சயமாகச் சொல்லிவிட்டார்கள். ஓங்கித் தலையில் அடித்ததுபோலக் குஞ்சம்மாள் பிரமை தட்டிப் போய் உட்கார்ந்திருந்தாள். எங்கள் எல்லோருடைய மனத்திலும் ஒரு பெருத்த போர் நடந்து கொண்டிருந்…

    • 1 reply
    • 569 views
  2. Started by ஏராளன்,

    12/21/2022 மனத்தடை எல்லாமே கைகூடி வரும்; செய்துவிடலாமென்கின்ற துணிவிருந்தால். மாந்தனுக்குத் தடையாக இருப்பது அவனுடைய சொந்த மனத்தடைதான். நம்மில் எல்லாருக்குமே மனத்தடை இருக்கின்றது; நம்மால் இவ்வளவுதான் செய்ய முடியும், இதனைச் செய்ய முடியாது எனப் பலவாறாக. மனம் அனுமதிக்குமேயானால் முயற்சிகளுக்கு எல்லையே இல்லை. What you believe, why you are! What you eat, how you are! What you think, what you are! எப்போதெல்லாம் தாயகம் செல்கின்றேனோ அப்போதெல்லாம் ஈரோட்டு உறவினர்களைச் சந்திப்பது வழக்கம். கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாகச் சொல்லிக் கொண்டு இருந்ததுதான். தோட்டத்தைச் சென்று பார்க்க வேண்டுமென்பது. கைகூடி வ…

  3. Started by nunavilan,

    இரசவாதம்! தெலுங்கில் : பி.அஜய்பிரசாத் | தமிழில் : பொருநை க.மாரியப்பன் தெலுங்கில் : பி.அஜய்பிரசாத் | தமிழில் : பொருநை க.மாரியப்பன் சிறுகதை - தெலுங்கு மூல ஆசிரியர் : பி.அஜய் ப்ரசாத் - தெலுங்கு மூல ஆசிரியர் : பி.அஜய் ப்ரசாத் - பி.அஜய் ப்ரசாத் (முழுப் பெயர் - பாதர்ல பிரசன்ன அஜய் ப்ரசாத்) ஆந்திரமாநிலம், குண்டூர் மாவட்டம், நகரிகல்லு கிராமத்தில் ஜூன் 9, 1972இல் பிறந்தவர். 2005ஆம் ஆண்டு முதல் தெலுங்கில் சிறுகதைகளை எழுதி வருகிறார். இவரின் கதைத் தொகுதி 2018ஆம் ஆண்டு “லோயா மரிகொன்னு கதலு” என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது. இவரின் இரண்டாவது கதைத் தொகுதி “காலி பொரலு” ஆகும். இவரின் கதைக…

  4. மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன் வலையேற்றியது: RAMPRASATH | நேரம்: 8:37 AM | வகை: கதைகள், பிரபஞ்சன் "தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்." என்றார் எச்.எம். "எந்த அற்புத மரி?" என்றேன் நான். "இந்த ஸ்கூல்ல தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றெட்டு அற்புத மரி இருக்காளா ஓய்? எந்த அற்புத மரிங்கறீர்? அதான் அந்த பத்தாம் வகுப்பு அற்புத மரிங்காணும்." தினத்தாளை மடித்து வைத்து விட்டு, அந்த அற்புத மரியின் முகத்தை மனசுக்கு கொண்டுவர முயற்சித்தேன். வந்துவிட்டாள். எப்போதும் சுயிங்கம் மெல்லுகிற, அப்படி மெல்லுவதன் மூலமாக இந்தப் பள்ளிக்கூடம், அதன் ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள், சட்டதிட்டங்கள், ஒழுங்கு விதிகள் எல்லாவற்றையும் அலட்சியப…

  5. உயிர்தரிப்பு – ப.தெய்வீகன் 01 மூண்டு அணைந்த காட்டுத்தீயினால் எரிந்த பெருமரங்களின் எச்சங்கள் தூரத்தில் தெரிந்தன. கம்பீரமற்ற தரவை நிலத்தைக் கிழித்து பல கிலோ மீற்றர்களுக்கு நீண்டிருந்த புறநகர் நெடுஞ்சாலையில் நாங்கள் பயணித்தோம். மெல்பேர்னின் மேற்குத் திசை வழியாகச் சென்று பண்ணைப்பகுதிகளை தொட்டுவிட்டால், நாம் செல்லும் இடம் வந்துவிடுமென வரைபடத்தில்ஏற்கனவே பார்த்திருந்தேன். வாகனத்துக்குள்ளிருந்த மூன்று பேரையும்விட பேரச்சம்தழும்பிக்கொண்டிருந்த என்னுள் இறுக்கம் கூடியது. கண்ணாடி வழியாகத் தெரியும் பூமியை பார்க்கத்தொடங்கினேன். அடர்பசுமை நிறைந்த பண்ணை நிலங்கள் தெரியத்தொடங்கின. அடுத்து வந்த வயல்களில் அறுத்த புல்லுக்கட்டுகள் பெரும் எண்ணிக்கையில் சுர…

  6. வலசை – கார்த்திக் பாலசுப்ரமணியன் நாங்கள் இந்த அப்பார்ட்மண்ட்டுக்கு குடிவந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. பூரணிக்கு ஃபிளைட் டிக்கெட் உறுதியானவுடன் முதல் காரியமாக வீடு பார்க்க ஆரம்பித்துவிட்டேன். சிட்னியில் நினைத்தவுடன் வீடு அமைவது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. அதுவும் ஹோம்புஷ் போன்று இந்தியர்கள் அதிகம் தங்கியிருக்கும் இடங்களில் கிடைப்பது இன்னுமே கடினம். இந்தப் பகுதியைச் சுற்றி ஈழத் தமிழர்களும் வசிக்கிறார்கள். இந்த அப்பார்ட்மண்ட்டிலிருந்து நடந்து போகும் தொலைவில் ஒரு இந்தியன் ஸ்டோர் இருக்கிறது. இந்தியச் சமையலுக்குஉகந்த அத்தனை மளிகைப் பொருட்களும் அங்கே கிடைக்கும். அரிசி, பருப்பு, சர்க்கரையிலிருந்து குங்குமம்,சந்தனம் பத்தி முதலான பக்திப் பொருட்கள் உட்பட எல்லாமும் கிடைக்க…

    • 1 reply
    • 1.1k views
  7. இசைவு இராசேந்திர சோழன் நடேசனுக்கு மாமியார் வீடு ரொம்ப சௌகரியம். நல்ல வசதியும்கூட. போய்விட்டால் போதும். மாப்பிள்ளை வந்துட்டார், மாப்பிள்ளை வந்துட்டார் என்று அமர்க்களம் செய்துவிடுவார்கள். கடைசீ மருமகப்பிள்ளை நடேசன். ஏக கடைசீ என்றால் நாலைந்து மருமகப் பிள்ளைகளில் கடைசீ என்று அர்த்தம் இல்லை. இரண்டே மருமகப் பிள்ளைகளில் இரண்டாவது மருமகன். இளைய மருமகன். மாமிக்கு ரெண்டே பெண்டுகள். மூத்த பெண்ணைத் திண்டிவனத்தில் ஒரு டெய்லருக்குக் கொடுத்திருந்தார்கள். இளையவள்தான் நடேசனுக்கு சம்சாரம். அதற்குப் பிறகு மாமிக்குக் குழந்தைகள் பெற்றுக்கொள்ள வயது இல்லை என்று கருதியோ அல்லது மாமனாருக்கு வசதிப்படாமலோ போயிருக்கலாம். இதனால் நடேசனின் சம்சாரத்திற்குப் பிறகு இளசுகள் யாரும் வீட்டில் இல்ல…

  8. 10,000 டாலர்... பரிசு பெற்ற, கார் சாரதி. ஒருவர் காரில் தன் மனைவி , அம்மா எல்லோருடனும் சென்று கொண்டிருந்தார். நீண்ட நேரமாக அவரை ஒரு போலிஸ் ஜீப் தொடர்ந்துக் கொண்டிருந்தது. சிறிது நேரத்துக்கு பிறகு போலிஸ் ஜீப் அவர் காரை முந்திக்கொண்டு சென்று, அவர் கார் முன் நின்றது.இறங்கி வந்த போலிஸ் , அவரிடம் 'குட் ஈவ்னிங் சார்.. 'அவர் 'குட் ஈவ்னிங், ஏதாவது பிச்சனையா?'. போலிஸ், 'நாங்கள்,, உங்கள் காரை அரை மணி நேரமாக கவனித்து வருகிறோம்...... "நீங்கள் போக்குவரத்து விதிகளை மீறாமல், ஸ்பீட் லிமிட்டை ஒரு மைல் கூட அதிகரிக்காமல், சக டிரைவர்களை மதித்து காரை ஓட்டிய விதத்தை நாங்கள் பாராட்டுகின்றோம்." அதனால…

  9. சமரசம் மலர்ஸ் by நெற்கொழு தாசன் July 31, 2022 என்னதான் இருந்தாலும் கொடியாள் ஆளொரு விண்ணிதான் என தன்னையறியாமல் உரத்துக் கூறிவிட்டதை உணர்ந்து, தான் கூறியதை யாராவது கவனித்திருப்பார்களா எனத் திரும்பிப் பார்த்தார் உலகளந்தபிள்ளை. குரல் கொட்டாவியோடு கலந்திருந்ததாலோ என்னவோ ஒருவருக்கும் விளங்கியிருக்கவில்லை. மெல்லிய புன்னகையோடு திருப்திப்பட்டுக்கொண்டார். இருந்தபடியே தோளில் கொழுவியிருந்த பைக்குள் கையைவிட்டு யாருக்கும் தெரியாமல் விரல்களை மடித்து எண்ணிப் பார்த்தார். திரும்பி எங்கோ பராக்கு பார்ப்பவர் போலப் பாவனை செய்தபடி மீண்டும் ஒருமுறை மனதால் கணக்கிட்டார். மெதுவாகத் தலையாட்டி இதுவரை எல்லாம் சரியாகத்தான் போகிறது. ஆள் வந்தவுடன் காசைக் கொடுத்துவிட்டு …

    • 3 replies
    • 982 views
  10. பார்வை தாட்சாயணி பச்சை வைப்பர் இழைக்கண்ணாடிகள் இருபக்கமும் கூரைகளாய் வளைந்து இறங்கிய கூடாரம். மழைத்துளிகள் வளைந்த விளிம்புகளில் சிறு பிள்ளைகள் சறுக்கி விழுவது போல விழுந்து வழிந்தன. வெளிமுற்றத்தின் குடை நிழலொன்றில் மழைக்கு ஒதுங்கியபடி அந்தக் கூடாரத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் தரணிகா. அவள் வந்து பத்து நிமிடங்கள் ஆகியிருந்தன, கீதாஞ்சலி இன்னும் வரவில்லை. மழையின் சாரல்கள் அவளது பயணத்தில் இடையூறு தந்திருக்கக் கூடும் என நினைத்தாள். வானம் காலையில் வெயிலின் பளிச்சிடலோடு சிறிது தகதகப்போடு தான் இருந்தது. நாலைந்து நிமிடங்களுக்குள் திடுமென்று சூழ்ந்த இருண்மையின் நெருக்கத்தை எப்படி விலக்குவது?. அதற்குப் பிறகு சூழ்ந்த சாம்பல் நிறம் சூழலை ஒரு இ…

    • 1 reply
    • 1.5k views
  11. Started by ரஞ்சித்,

    ஆசான் 1988..... இதுதான் அந்த ஆண்டு. சரியாக இருக்கும். என் வாழ்நாளில் நான் சந்தித்த இன்னொரு ஆளுமையின் கதை இது. யாழ்ப்பாணத்து நரக வாழ்விலிருந்து விடுதலை பெற்றுக்கொண்டு மட்டக்களப்பிற்கு வந்து சேர்ந்திருந்த ஆரம்ப நாட்கள். புதிய இடம், புதிய மனிதர்கள், இவை எல்லாவற்றிற்கும் புதியவனாக நான் என்று என்னை நான் நிலைபெறச்செய்ய பகீரதப் பிரயத்தனம் செய்திகொண்டிருந்த நாட்கள் அவை. சித்தியின் தயவில் அநாதைகள் விடுதியில் சேர்க்கப்பட்டு, மறுநாளே மிக்கேல் கல்லூரி வாசலில் கட்டைக் காற்சட்டை அணிந்துகொண்டு கமலா டீச்சரின் வரவிற்காக காத்திருந்த அந்தக் காலை இன்னமும் ஞாபகத்தில் இருக்கிறது. விசாலமான பாடசாலை, இரைச்சலான மாணவர் கூட்டம், உயர்ந்த இரும்புக் கதவுகளுக்குப் பின்னால் தெரிந்த …

  12. கள்ள வீசா – ஒரு கனவு May 10, 2022 — அகரன் — பாரிசுக்கு வந்து ஒன்பது வருடமும் 25 நாட்களும் கடந்தபோது எனக்கு அகதி அடைக்கலம் கிடைத்தது. அன்று வெள்ளிக்கிழமை. ஊரில் தூக்கத்தின்போதுநாளொரு கனவு வருவது உண்டு. எப்போது நாடுகளிள் எல்லைகளை கடக்கும் இலட்சியத்தில் இறங்கினேனோ அன்றில் இருந்து எனக்கு கனவு வந்ததாக நினைவில்லை. விதிவிலக்காக இன்று வெள்ளிக்கிழமை அதிகாலைகனவு ஒன்று எங்கிருந்து வந்ததோ தெரியவில்லை. கனவிற்கும் விசாகிடைத்ததற்கும் சாமி சம்மந்தம் இருக்குமோவென்று யோசித்தேன். ஒரு சாமியுமில்லை. சம்மந்தமுமில்லை. கனவு கண்டெழும்பி அதன் நினைவுகளோடு காலை பத்துமணிக்கு வேலைக்குச் சென்றேன். கனவைப்பற்றி ஏன் சொல்கிறேன் என்று எனக்கு தெரியவில்லை. அதுவல்ல நான் சொல்ல…

  13. தினமும் சைக்கிள் ஓட்டுபவனால் இந்தியா மட்டுமல்ல உலக பொருளாதாரமே சீரழியும்... ஆச்சரியமா இருக்கா? தொடர்ந்து படிங்க..... ஏன்னா அவன் கார் வாங்க மாட்டான்... அதற்காக கடன் வாங்கவும் மாட்டான்... வட்டியும் கட்ட மாட்டான்... பேங்க் பைனான்ஸ் கம்பெனிக்கு சல்லி பைசாவுக்குகூட பிரயோஜனம் இல்லாதவன்... கார் இன்சூரன்ஸ் பண்றதுக்கு வர மாட்டான்... இந்த பெட்ரோல் டீசல்..... ம்ஹூம்... வாய்ப்பே இல்ல... இவனால அமெரிக்கா, சவுதி அரேபியாவுக்கும் கூட எந்த பயனும் இல்ல... சர்வீஸ் ஸ்பேர் பார்ட்ஸ் எதற்கும் இவன் செலவு செய்யறது இல்ல... பார்க்கிங் கட்டணம்னு பெருசா எங்கேயும் செலுத்த மாட்டான்... இதெல்…

  14. முழுவதும் ஆண்களே உள்ள ஊருக்கு சென்ற பெரியவருக்கு ஒரே ஆச்சரியம்!! அந்த ஊரில் உள்ள ஆண்கள் எவ்வாறு தங்கள் காமப்பசியை தீர்த்து கொள்வார்கள்? என்று. பொறுமையாக இருந்த பெரியவர் அங்குள்ள ஆண்களிடம் நீங்கள் அனைவரும் ஆண்களாக இருக்கிறீர்களே உங்கள் காம பசியை எப்படி தீர்த்துக்கொள்வீர்கள் என்று கேட்டார். அதற்கு பதிலளித்த ஆண்கள், நாளை காலை பக்கத்தில் இருக்கும் ஆற்றின் அருகில் வந்தீங்கன்னா உங்களுக்கே அது புரியும் என்றனர். அடுத்த நாள் காலை ஆவலுடன் நதிக்கரைக்கு சென்ற பெரியவர் அங்கிருந்த ஆண்கள் ஒரு பெரிய கழுதையுடன் நின்று கொண்டிருப்பதை கண்டார். அதில் ஒரு ஆண் பெரியவரிடம் சொன்னார், 'நீங்கள் எங்க விருந்தாளி, முதலில் நீங்கள் …

  15. சீனிவாசன் ஒரு ஓட்டல் நடத்தி வந்தார்! அவர் கடையில்... தொட்டுக் கொள்ள சீனி கொடுப்பார்கள்! . ஆனால் சீனி விலை உயர்வின் காரணமாக சீனி கொடுக்க முடியவில்லை! . ஒரு போர்டு எழுதி போட்டார்! "இன்று முதல் தோசைக்கு சீனி கிடையாது" . கிச்சாமி அந்த ஓட்டலுக்கு வாடிக்கையாளர்! சாப்பிட போனார் ! முதலில் ஒரு தோசை வாங்கினார்! . இரண்டாவது ஒரு தோசை வாங்கினார்! சீனி கேட்டார்! . முதலாளி சொன்னார்! சீனி கிடையாது! . கிச்சாமி சொன்னார் போர்டை படியுங்கள் " முதல் தோசைக்கு மட்டும் கிடையாது! . இது இரண்டாவது தோசை! முதலாளி தலையில் தட்டி கொண்டே சீனி கொடுத்தார்! . அடுத்த நாள் போர்டு ஐ மாற்றி எழுதினார் "இனி மேல் தோசைக்கு சீனி கிடை…

  16. புலியின்.... தொழிற்சாலையில், வேலை செய்த... எறும்பு. ஒரு காட்டில் வாழ்நாள் முழுக்க வேட்டையாடி அலுத்துப்போன புலி ஒன்னு ஒரு தொழிற்சாலை ஆரம்பிச்சுது. அங்கே ஒரு எறும்பு வேலை செஞ்சுது. அதுபாட்டுக்கு வரும் சுறுசுறுப்பா எல்லா வேலைகளையும் செஞ்சு முடிச்சிட்டு சாயந்திரம் ஆனா வீட்டுக்கு போயிடும். புலியாருக்கு ஏக சந்தோசம் கணிசமான லாபமும் கிடைச்சுது. நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, நம்ம ஆட்சியாளர்களுக்கு தோனுற மாதிரி நடு ராத்திரியில் திடீர்ன்னு புலியாருக்கு ஒரு ஐடியா தோனுச்சு. எறும்பு தனியாவே வேலை செய்யுதே அதை கண்காணிக்கற அளவுக்கு நமக்கும் போதுமான அறிவு இல்லை, நாம எறும்பை கண்காணிக்கவும் ஆலோசனை சொல்லவும் ஒரு உற்பத்தி மேலாளரை (production manager) நி…

  17. கற்கனைக்கதை ஒன்று (ஒன்றா?) சொல்வேன் கேளுங்கள் உங்கள் வீட்டில் உட்கார்ந்து கொள்ளுங்கள் இப்பொழுது கண்களை இறுக மூடிக்கொள்ளுங்கள் .... ....... ...... உங்கள் வீட்டின் அசையாப்பொருள் அனைத்துக்கும் (சுவர் கதவு உட்பட) கண் காது உள்ளது என்று நினைத்துக்கொள்ளுங்கள் .... ...... ..... உங்களது வீட்டில் நடந்தவைகளை அசை போடுங்கள் .... .... ... இப்போ கதை சொல்லி நானல்ல நீங்கள் ... .... யாவும் கற்பனை அல்ல நிஐம் ... ... முற்றும்🤣🙏

  18. வஸ்திராபகரணம் - ரா. செந்தில்குமார் ரயில் புறப்படுவதற்கு இன்னும் சில நிமிடங்கள் இருந்தன. வார விடுமுறைக்கு ஊருக்கு வந்து, சென்னைக்குத் திரும்பும் இளைஞர்கள் சிலர், பிளாட்பார்மில் இருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து அலைபேசியைப் பார்த்துக்கொண்டிருந்தனர். மிளகாய்ப்பொடி தூவிக் கொண்டுவந்திருந்த இட்லிப் பொட்டலத்தைப் பிரித்து ஒரு நடுத்தர வயது பெண், தனது கணவனிடம் கொடுத்தார். அதிலிருந்து மிளகாய் காரத்துடன் கலந்த நல்லெண்ணெய் வாடை வீசியது. பின்புறம் நிற்கும் மூன்றாம் வகுப்புப் பெட்டியில் ஏறுவதற்கு ஒரு வயதான அம்மா வேகமாக நடக்க முயன்று, மூச்சு வாங்கினார். அவருக்குச் சிறிது தூரம் முன்பு சென்ற அந்தம்மாவின் கணவர், அவ்வபோது நின்று, பின்பக்கம் திரும்பி, ”வேகமா வாங்குறேன்.. ஆடி அசைஞ்சு வந்த…

    • 1 reply
    • 576 views
  19. முடிவற்ற கண் – ஜிஃப்ரி ஹாசன் அதிகாலை ஆரவாரங்களுக்கிடையே மனிதக் குரல் போல ஒரு சத்தம் தொனித்தது. அந்தரித்து வெளியேறும் ஈனக் குரல் போன்ற ஒலி. வாசலில் ஒரு சிறுமி பிளாஸ்டிக் வாளியுடன் நின்றிருந்தாள். அவளது ஒருபக்க கன்னம் தீயில் வெந்து சதைகள் உருக்கி வார்த்த ஈயக்குழம்பாட்டம் பொத்தென்று நின்றது. ஒரு கண் இருக்கிறதா இல்லையா என்பதை நன்றாக உற்றுப் பார்த்தால்தான் விளங்கும் போல் இருந்தது. அந்தப் பக்கப் புருவமும் சீரின்றி தழும்பு போல தெரிந்தது. இலேசாக தலை ஆடிக் கொண்டிருந்தது. அது ஒரு சீரற்ற அசைவு போலிருந்தது. பேசும் போது எதையோ மென்று முழுங்குவது போல தொண்டை அசைந்தது. சில கணங்கள் திடுக்கிட்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் பஷீர். வீட்டுக்கூரையில் காகங்கள் எழுப்பும் சன்னத ஒலியை…

  20. ஸ்மைலி – அனங்கன் கண்களை பத்துநிமிடத்திற்கு மேல் மூடிக்கொண்டிருக்க முடியவில்லை. எண்ணங்கள் அணுத்துகள்கள் என ஒன்றுடன் ஒன்று மோதி வெடித்துச் சிதறுகின்றன. கண்களைத் திறந்தவுடன் ஏற்படும் ஆறுதல் சிறுதுநேரத்தில் நெடுஞ்சாலைகளில் வரிசையாக வரும் வாகனம் போன்ற எண்ணங்களால் கலைந்துவிடுகின்றது. தான் அந்த நெடுஞ்சாலையைக் கடக்க நினைப்பவள் போல தொடர் அர்த்தமற்ற எண்ண வரிசையை வெறித்துப்பார்த்துகொண்டிருந்தாள். எழுந்து மொபைலை எடுத்து செயலிக்குள் சென்று அவர்கள் உரையாடல்களை படிக்க ஆரம்பித்தாள். தன் முகங்களாகவும் அவன் முகங்களாகவும் மாறிப்போன இளிப்பான்களை பார்த்துகொண்டு செல்வது காலவெளியில் நிரந்தரமாக சிக்கிக்கொண்டதுபோல் இருந்தது. தான் பேசின சொற்களை மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டு, அதே…

  21. ஓவியாவின் கனவுகள் மண்ணுக்காய் மரணத்தை சுமந்தவன் மலரவன். அவன் உயிர் எறிந்து சென்று பத்து வருடம் ஆகிவிட்டது. பாவம் இவன் குடும்பம் இப்போ படும் பாடு போதும். ஒன்றாகவே விடுதலைக்கு போன ஓவியாவை திருமணம் செய்தவன். நாம் தமிழர் விடுதலைக்காய் நாளும் பொழுதும் உழைத்த குடும்பம். இரவு பகலாய் எதிரி எம் மண்ணில் நுழையாமல் எல்லையில் நின்று கண் முழித்து காவல் நின்றவள் ஓவியா. இறுதி யுத்தத்தில் இவன் போன பின் எல்லாமே இழந்த பின் மலரவனின் மனைவி ஓவியாவுக்கும் இவள் நான்கு குழந்தைகளுக்கும் எதுக்கும் இப்போ வழி இல்லை. நான்கு பிள்ளைகள் நாளாந்தம் குடும்பம் ஓட்டுவதே கடினம். ஓவியா இப்போ கூலி வேலை செய்து குடும்பத்தை ஓட்டுகிறாள். அவள் படும் பாடு இப்போ பெரும் பாடு அவள் சுமக்கின்ற வலியோ தீராது. ஒரு க…

  22. Started by nunavilan,

    புதிர் புலம்பெயர் தேசத்திலிருந்து வந்து நாட்டில் கால் பதித்த வேளைமுதல் ஒரு கால் நூற்றாண்டுக் காலத்தின் மாற்றங்கள், அவன் பார்வையெங்கும் நிறைந்திருந்தன. தொலைக்காட்சிச் செய்திகள் வழி மனதில் விரிந்திருந்த கட்டமைப்புகள் காட்சி நிஜங்களுடன் மிக ஒத்துப்போனதில் அவன் பெரிய ஆச்சரியமெதனையும் அடைந்துவிடவில்லை. ஆனால் பிறந்து வளர்ந்து ஓடியாடி விளையாடிய தன்னூர் வந்தபோது…? பௌதீகத்தில் எந்த மாற்றமும் அற்றதாய் இன்னும் அது பழைமையின் பிடியில் இருந்துகொண்டிருந்தது. அவனுக்கு அதிசயம் வந்தது. இறுதி யுத்தத்தில் விழுந்த ஆழமான வடுக்கள் முற்றாகத் தீர்ந்ததாகவன்றி, யுத்தமே அந்த இடத்தைத் தாண்டிச் செல்லவில்லைப்போல, காலமே தன் தடம் பதிக்க அஞ்சி விலகிச் சென்றதான தோற்றங்கொண்டு இருந்தது. …

    • 0 replies
    • 986 views
  23. Started by nunavilan,

    பெருமாள் உச்சியிலிருந்து அடித்துச் சப்பளித்ததுபோல் அடர்ந்து சடைத்து கட்டையாக நின்றிருந்த அந்த முதிர் பூவரசு இன்னும் நின்றிருந்தது கண்டபோது, அந்த வீட்டில் ஒருகாலத்தில் குடியிருந்த பெருமாளதும் அவரது குடும்பத்தினதும் ஞாபகம் துரைசிங்கத்தினது மனத்தில் சாரலடித்தது. மிகவும் அண்டி வராமல் விலகியிருந்த சக மனிதர்கள் இவ்வாறான எதிர்பாராத் தருணங்களில்தான் மனத்தில் உயிர்கொண்டெழுகிறார்கள். முப்பது முப்பத்தைந்து வருஷங்களுக்கு முன்னால் அந்த ஊருக்கு குடும்பமாய் வந்து மலேசியா பென்சன்காரர் பொன்னம்பலத்தின் வெறுவீட்டில் அவர் புதிதாகக் குடியேறியபோது, அயல் சிறுவர்களிடத்திலெல்லாம் பெரும் குதூகலிப்பு ஏற்பட்டுப்போனது. அது பெரும்பாலும் நீண்டநாட்கள் நீடிக்கவில்லையென்றே சொல்லமுடிகிறது…

    • 1 reply
    • 720 views
  24. ஹெச். எச். ஆண்டர்சன் (1837) பல ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு அரசன் இருந்தான், அவர் அணிகலன்கள் மற்றும் புதிய ஆடைகளை உணர்ச்சியுடன் விரும்பி, தனது பணத்தை அதற்கே செலவழித்தார். அவர் தனது வீரர்களிடம் வெளியே சென்று, ஒரு புதிய உடையில் காட்டுவதற்காக மட்டுமே தியேட்டருக்கு அல்லது காட்டுக்குள் ஒரு நடைக்குச் சென்றார். நாளின் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் அவர் ஒரு சிறப்பு கேமிசோலை வைத்திருந்தார், மேலும் ராஜாக்களைப் பற்றி அவர்கள் சொல்வது போல்: "ராஜா கவுன்சிலில் இருக்கிறார்", எனவே அவர்கள் எப்போதும் அவரைப் பற்றி சொன்னார்கள்: "ராஜா டிரஸ்ஸிங் அறையில் இருக்கிறார்." ராஜா வாழ்ந்த நகரம் பெரியதாகவும், கலகலப்பாகவும் இருந்தது, அதனால் ஒவ்வொரு நாளும் வெளிநாட்டு விருந்தினர்கள் வருகிறார்கள், ஒ…

    • 2 replies
    • 1k views
  25. பொறுப்புத் துறப்பு: கதையைப் படித்து மனவுளைச்சல் ஏற்பட்டால் இணைத்தவர் பொறுப்பில்லை. சடம் - ஜெயமோகன் olaichuvadiJanuary 1, 2022 “சிஜ்ஜடம்” என்றார் சாமியார். நல்ல கறுப்பு நிறம். தாடியும் தலைமயிரும் ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து சிக்கலான சடைக்கொத்தாக இருந்தது. வாய்க்குள் பற்கள் மண்நிறத்தில் இருந்தன. அசையாமல் நிலைகுத்திய கண்கள். சுடலைப்பிள்ளை பக்கத்தில் இருந்த தரகு நாராயணனைப் பார்த்தார். “தாயளி, என்னல அவன் சொல்லுகான்?” “அவரு மஹான்” என்றார் தரகு நாராயாணன். “சாமி தத்துவம் சொல்லுது” “மயிரு தத்துவம்… அள்ளையிலே ஒரு சவுட்டு சவுட்டினா அண்டி உருண்டு அண்ணாக்கிலே கேறி இருக்கும்… அப்ப பேச்ச நிப்பாட்டுவான்… ஏல நாம கேக்குத கேள்விக்கு அவனுக்கு பதில் தெரியுமாண…

    • 4 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.