கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3071 topics in this forum
-
ஒரு ஊரில் ஒரு மாடும்,கோழியும் இணைபிரியா நண்பர்களாக இருந்து வந்தார்கள். இவர்கள் இருவரும் எங்கு சென்றாலும் சேர்ந்தே செல்லுவது வழக்கம். ஒரு நாள் மாடு கோழியை கூப்பிட்டு பக்கத்து கிராமத்துக்குக்கு போய் வருவோமா என்று கேட்டது. உடனே கோழி சம்மதித்தது.இருவரும் சேர்ந்து பக்கத்து கிராமத்தை அடைந்தனர். கிராமத்தை நெருங்கியவுடன் குழந்தைகள் விளையாடும் சத்தம் கேட்டது.உடனே மாடு கோழியைப் பார்த்து நண்பா இது என்ன சத்தம்.என்று கேட்டது. கோழி உடனே வேகமாக சென்று அந்த இடத்தை பார்த்துவிட்டு வந்து மாட்டிடம் அந்த குழந்தைகள் பாவம் என்று சொன்னது. உடனே மாடு கேட்டது ஏன் பாவம் என்று சொல்லுகிறாய். கோழி சொன்னது அந்த இடம் ஒரு அனாதை ஆசிரமம்.அங்கு இருக்கும் குழந்தைகளுக்க…
-
- 1 reply
- 1k views
-
-
பர்மா ராணி சிறுகதை: லஷ்மி சரவணகுமார், ஓவியங்கள்: ஸ்யாம் 2010 – தாஸ் சவோக் – டெல்லி – பின்பனிக்காலம். வினோத்துக்கு, இந்த மொத்தப் பயணமும் விளங்கிக்கொள்ள முடியாததாகவே இருக்கிறது. மூடிக்கிடந்த கடந்த காலத்தின் ரகசியப் பக்கங்கள், இந்தத் தேடலின் ஒவ்வொரு தருணத்திலும் திறந்துசெல்வதைக் கண்கூடாகப் பார்த்தான். அவன் தேடும் தனியொரு மனிதராக அல்லாமல், ஒரு நூற்றாண்டின் ரகசியமாகவே மாறியிருந்தார் ஜாவேத். புதிய புதிய சுவாரஸ்யங்களைத் தந்த அந்த ரகசியத்தின் எழுதப்படாத, விநோதமான பாத்திரம் இவன். `தமிழ் சினிமா – நேற்றின் நிழல்’ என்னும் பெயரில், சினிமாவின் கடந்த காலத்தைக் கொண்டாடும்விதமாக நடக்கும் நிகழ்வின் அபூர்வமான ஒரு தருணத்தில்தான், ஜாவேதைப் பற்றி முதலில் தெரிந்துகொண…
-
- 1 reply
- 2.3k views
-
-
தேவ இரகசியம் - படித்ததில் பிடித்த கதை ஒரு தாய் அப்போதுதான் ஒரு குழந்தையை பிரசவித்திருந்தாள். அந்தக் குழந்தையின் தந்தை ஒரு வாரத்துக்கு முன்னால்தான் இறந்து போனான். எமதர்மன் ஒரு எமதூதனை அனுப்பி “அந்த அம்மாவுடைய உயிரை எடுத்துக் கொண்டு வந்துவிடு” என்றான். இந்த எமதூதன் “ஐயோ பாவம் அப்பாவும் இல்லை, அம்மாவையும் நான் எடுத்துக் கொண்டு போய்விட்டால் இந்தக் குழந்தைக்கு யார் கதி” என்று தாயின் உயிரைக் கவராமல் திரும்பி விட்டான். நீங்களெல்லாம் அந்த நிலையில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு என்று ஒரு எண்ணங்களை, அளவுகோல்களை வைத்திருக்கிறீர்கள். எமதூதன…
-
- 1 reply
- 743 views
-
-
யாமினி அம்மா - சிறுகதை போகன் சங்கர், ஓவியங்கள்: ஸ்யாம் அந்த இடத்துக்கு அவர்கள் எப்படி வந்து சேர்ந்தார்கள் என்று தெரியவில்லை. ஏன் வந்து சேர்ந்தார்கள் என்பதும் சரியாகத் தெரியவில்லை. எதனிடம் இருந்தோ தப்பித்து வந்திருக்கிறார்கள். நான் அவர்களிடம் எதற்குப் போய்ச் சேர்ந்தேன், எப்படிப் போய்ச் சேர்ந்தேன் என்பதற்கும் அதே காரணம்தான். எதனிடம் இருந்தோ தப்பித்துக்கொள்ள... ''இந்த ஊர்ல தங்க, ஒரு இடம் கிடைக்குமா?'' என்றதற்கு ஒரு கணம், அங்கிருந்த ஒரே டீக்கடையில் நெடுநேரம் மௌனம் நிலவியது. கடைசியாக ''ஏன் இங்கே தங்கணும்?'' என்றார் ஒருவர் சற்றே விரோதமாக. நான் தயங்கி, ''நான் ஒரு எழுத்துக்காரன்'' என்றேன். யாரும் பேசாது இருந்தார்கள். நெய்யாறு புழையின் ஈர…
-
- 1 reply
- 2.5k views
-
-
குயில்களும் கழுகுகளும் மதன மாளிகையில் மந்திர மாலைகளாம் உதய காலம் வரை உன்னத லீலைகளாம்... டி.எம்.செளந்தரராஜ னுடைய ஆண்மை செறிந்த கம்பீரக் குரலில் ஞானசேகரன் மேடையில் பாடியதை நான் மேடைக்கு முன்னால் கூட்டத்தோடு கூட்டமாக நின்று ரசித்துக் கொண்டிருந்தபோது, ஜேம்ஸ் வந்து என் தோளில் கை வைத்தான். ‘‘சின்னையா, அடுத்தது ஒங்க பாட்டுதான். ஸ்டேஜுக்கு வாங்க...’’ பேங்கோஸ் வாசிப்பதில் ஜேம்ஸ் ஓர் அசகாய சூரன். ‘ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்; நிலவில் குளிரில்லை...’ என்கிற எம்ஜிஆர். பாடலில் வருகிற நீளமான ஸோலோ பேங்கோஸ் அசத்தலை ஜேம்ஸ், முழங்கால்களுக்கிடையே இடுக்கிய தன் தோல் வாத்தியத்தில் வாசித்து அனைவரிடமும் அப்ளாஸ் வாங்குவான். ‘மதன மாளிகையில்...’ பேங்கோஸ் த…
-
- 1 reply
- 1.3k views
-
-
உன்னைக் கண்டதும் கடைக்காரன் மேல் உதட்டை மடித்து நாய்போல பற்களைக் காட்டினான். உறுமுவதுபோல என்ன வேண்டுமென்று கேட்டான். ‘ஐந்து சதத்துக்கு உப்பு’ என்று நீ சொன்னாய். உன் கையில் காசு இல்லை என்பது அவனுக்குத் தெரியும். ‘உன் அம்மாவிடம் 12 ரூபாய் 30 சதம் அவ தர வேண்டும் என்று சொல்’ என்றான். நீ மேலும் கொஞ்ச நேரம் நின்றாய். அவன் உன்னை ‘ஓடு ஓடு’ என்று விரட்டினான். நீ திரும்பியபோது உன் அம்மா உடுத்துத் தயாராக இருந்தார். கல்யாண வீடுகளுக்குப் போகும்போது அணியும் சிவப்பு மஞ்சள் சேலை. கீழே கரை கொஞ்சம் தேய்ந்துபோய்க் கிடந்தது. கண்களில் கறுப்புக்கோடு வரைந்திருந்தார். ஒரு கைப்பைகூட காணப்பட்டது. தலை வாரி இழுத்து முடிந்து சினிமாக்களில் வருவதுபோல வட்டமான ஒரு கொண்டை. கல்வீட்டுக்காரர் மக…
-
- 1 reply
- 908 views
-
-
ஒரு நிமிட கதை: பிரேஸ்லெட் வரவர ஞாபகமறதி அதிகமாகிக்கொண்டே போகிறது. இரவில் இரண்டாவது காட்சி சினிமாவுக்கு செல்வதே தவறு. அதுவும் டூ வீலரில் பெட்ரோல் இருக்கிறதா இல்லையா என்று கவனிக்காமல் செல்வது அதைவிட பெரிய தவறு என்று மனதுக்குள் புலம்பிக்கொண்டே டூவீலரை உருட்டிக்கொண்டு சென்றேன். இரவு 2 மணி ஆகிவிட்டதால் என்னைத் தவிர யாரும் இல்லை. மனதுக்குள் ஒருவித அச்சம். இன்னும் ஒரு தெருவைத் தாண்டிவிட்டால் வீடு வந்துவிடும். அந்த நேரத்தில் குறுக்கு சந்தில் இருந்து ஓடிவந்த ஒருவன் முரட்டுத்தனமாக என் மீது மோதினான். வண்டியோடு சேர்த்து நானும் கீழே விழுந்தேன். ஒரு நிமிடத்தில் சுதாரித்து எழுந்த நான், என் கையைப் பார்த்தேன். ஐயோ என் பிரேஸ்லெட்! சில அடிதூரம் ஓட…
-
- 1 reply
- 1.3k views
-
-
ஏ.டி.எம் இருட்டு நேரம். பைபாஸ் ேராட்டின் ஒதுக்குப்புறத்திலிருந்தது அந்த ஏ.டி.எம். வாசலில் வாட்ச்மேன் உடையில் நின்றிருந்த ஆதி, நண்பன் மூர்த்தி அங்கு வந்ததும் உற்சாகமானான். ‘‘சீக்கிரம் வேலையை ஆரம்பிச்சுடு. யாராவது வந்தா ஏ.டி.எம் ரிப்பேர்னு திருப்பி அனுப்பிடறேன்!’’ என்று பரபரத்தான். உள்ளே நுழைந்த மூர்த்தி கர்சீப்பை முகத்தில் கட்டிக் கொண்டான். ரகசிய கேமராவிற்கு முதுகைக் காட்டியபடி வேலையை ஆரம்பித்தான். அடுத்த ஒரு மணி நேரத்தில் விஷயம் தெரிந்து விசாரணைக்கு வந்திருந்த இன்ஸ்பெக்டர் மதியழகன் குழம்பினார். ‘காலையில இருந்து வேற யாருமே இங்கே வரல. சாட்சி இல்ல. ரகசிய கேமராவில் முகம் பதியலை. எப்படி திருட்டைக் கண்டுபிடிக்கலாம்!’ என்று யோசனையுடன் சுற்றி வந்தவரின் கண்ணில…
-
- 1 reply
- 1.3k views
-
-
அம்பலம் - நெற்கொழுதாசன் Yulanie நீங்கள் புலிகளுக்காக வந்திருந்தால் திரும்பிச் சென்றுவிடுங்கள் என அனுராதபுரச் சிறையருகே வைத்து சிங்களம் மட்டும் பேசுகின்ற இளைஞர்களால் தமிழை மட்டும் பேசுகிறவர்களுக்கு கூறிய நாளில் இந்தக் கதையை எழுத ஆரம்பித்தேன். கதையை எழுதி முடித்த நாளில் பிரபாகரனோடு இயக்கத்தை தொடங்கி அதன் உபதலைவராகவும் இருந்த ராகவன், பிரபாகரனின் போராட்டம் அர்த்தமற்றது என்று ஒரு தொலைக்காட்சியில் சொல்லிக்கொண்டிருந்தார். 0 0 0 கிணற்றை சுற்றி இருந்த வட்ட கல் கட்டினை முன்வைத்தே பிரச்சனை ஆரம்பமாகியிருந்தது. பொதுக் கிணறுகளுக்கே இப்படியான வட்டக்கல் கட்டினை காட்டுவதாக சொல்லிக்கொண்ருந்தார் பொன்னுசாமி. வத்தாக் கிணறு என்று பெயர்பெற்ற அந்தக் கிணற்றை தனது …
-
- 1 reply
- 1.4k views
-
-
-
ஒரு நிமிடக் கதைகள் விசாரிப்பு பத்து நாட்களாக மருத்துவமனையில் சிகிச்ச…
-
- 1 reply
- 1.2k views
-
-
உரு – ப. தெய்வீகன் 1 மானிப்பாய் இந்துக் கல்லூரிக்கு முன்பாக உள்ள ஒழுங்கை வழியாக நன்றாக உள்ளே சென்றால் ஒரு காளி கோயில் வரும். பெரிய சடைத்த ஆலமரத்துக்குக் கீழ் சிறியதொரு கோயிலாக கனகாலமாக அந்தக் கோயில் அங்குள்ளது. நவாலி வேலக்கை பிள்ளையார் கோவில் கொடியேறும் காலப் பகுதியில் அந்தக் கோயிலுக்கு காவடி எடுக்க நேர்த்தி வைப்பவர்களை இந்தக் காளி கோவிலுக்கு அழைத்து வந்து இங்கு தான் முள்ளு குத்துவார்கள். பின்னர் அவர்களை ஆடி ஆடி சங்கரப்பிள்ளை வீதிக்கு அழைத்துச் சென்று லோட்டன் வீதி வழியாக வேலக்கை பிள்ளையார் கோவிலுக்கு கூட்டிப் போவார்கள். எனக்கு பத்து வயதாக இருக்கும் போது இந்தக் காளி கோவிலில் தான் முதல் தடவையாக காவடிக்கு முள்ளுக் குத்துவதைப் பார்த்தேன். அன்றைய தினம் வேலக…
-
- 1 reply
- 1.1k views
-
-
சுமைகளும் சோகங்களும் வாழ்க்கையாக ........... புலத்தில் அவள்வாளும் நாட்டில் அதிகாலை தொலை பேசி சினுக்கியது .தூக்ககலக்கத்தில் சாதனா பேசிய போது அவளின் சிறிய தாய் கடும் சுகவீனமாகி இறுதி மூச்சு விடுவதற்காக போராடுகிறாள் என்பது . அதன் பிறகு அவளுக்கு தூக்கமே வரவில்லை .அருகில் கணவன் மது போதை மயக்கத்தில் குறட்டை விட்டு தூங்கி கொண்டு இருந்தான் . நேரம் அதி காலை மூன்று மணி .அவள் எண்ண அலை தாயகம் நோக்கி ...... சிறிய தாய் பெற்ற பத்துடன் தானும் பதினோராவதாக வாழ்ந்த காலம் .அமுதன் அகிலன் வருணன் ஆதவன் அருனோதயன் என்று ஐந்து ஆண்களும் வதனா மீனா அர்ச்சனா அமுதா அகிலா என்று ஐந்து பெண்களுமாக ,சுந்தாரதார் பெற்று எடுத்த பிள்ளைகளில் அருனோதயன் எனும் அருணா கடை குட்டி. . சுந்தரத்…
-
- 1 reply
- 1.2k views
-
-
மான்டேஜ் மனசு 18: மாறாக் காதலின் பொக்கிஷங்கள்! பல ஆண்டுகளுக்குப் பிறகு குமார் செல்போனில் அழைத்தான். ''என்ன பண்ற மாப்ள'' ''அலுவலகத்துல இருக்கேன் டா. என்ன விஷயம்?'' ''நானும் சென்னையிலதான் இருக்கேன். உன் ஆபிஸ் எங்கே?'' ''மவுன்ட் ரோடு'' ''சூப்பர் மாப்ள. நான் தேனாம்பேட்டையிலதான் வீடு எடுத்து தங்கி இருக்கேன். வந்து ஒரு மாசம்தான் ஆச்சு'' ''சூப்பர் டா. சந்திக்கலாமா'' ''நிச்சயமா'' ''சரி சாயந்திரம் பேசுறேன்'' என்று உரையாடலுக்குத் திரையிட்டு பணிகளில் கவனம் செலுத்தினேன். இன்றைய இரவை எப்படிக் கழிக்கலாம் என்ற யோசனையுடன் இருந்தபோ…
-
- 1 reply
- 2.5k views
-
-
சோமசுந்தரம் செய்த கொலைகள் - சிறுகதை சிறுகதை: கணேசகுமாரன், ஓவியங்கள்: ரமணன் ``நீங்க ஏங்க அக்யூஸ்ட் மாதிரி கை கட்டிக்கிட்டு ஓரமா நிக்கிறீங்க? இங்க வந்து ஒக்காருங்க.’’ சோமசுந்தரம் அங்கு இருந்த நாற்காலியில் அமரும் முன், தான் குற்றவாளி அல்ல என்பதிலிருந்த மன நெருடலைத் தீர்க்க முனைந்தான். இரண்டு போலீஸ்காரர்களுடன் இந்தக் கிராமத்துக்கு வரும் முன்னரே மனதுக்குள் ஊனச்சந்தேகம் நகர்ந்தபடியிருந்தது. அவர்கள் மூவரும் காத்திருந்த அந்த வீட்டுவாசலில், மரம் ஒன்று வெள்ளைப் பூக்களை உதிர்த்திருந்தது. மரத்தின் பெயர் தெரியவில்லை. வெயில் தன் கொதிப்பை இளஞ்சூடாக மாற்றியிருக்க, ஒரு காகம் வெயில் நனைத்தபடி பறந்தது. சோமசுந்தரத்துக்கு, தன்னை யாரும் `டிரைவர்’ எனச் சொல்வது பிடி…
-
- 1 reply
- 3.1k views
-
-
ஓர் ஊரில் ஒரு கிழவி.. அவளது ஒரு பேத்திக்கு லண்டனில் அவளால் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியாத பெயரைக் கொண்ட ஒரு ஊரின் மண்டபத்தில் கலியாணம் நடந்த 6ம் நாள். இன்னொரு பேத்தி சாமத்தியப்படுவதற்கு சரியாக 25 நாட்கள் முன்பாக அம்மம்மா செத்துப்போனா. அவ சாவுக்கு நான் தான் காரணம் என்றாகிப்போனேன். என்னை கொலைகாரனாக்கி விட்டு அம்மம்மா செத்துப்போனா. சாகிற வயசுதான் சுமார் 60தைக் கடந்து விட்டிருந்தா. தீராத நோயாளியைப்போல மாத்திரைகளும் கையுமாய் வாழ்ந்து கொண்டிருந்தவள் தான் அவ. ஆனாலும் அவ அதிஸ்டக்காரி. மறுபடியும் தான் வாழ்ந்த ஊரிலேயே செத்துப்போகிற வாய்ப்பு அவ வயுசுக்காரிகளிலேயே அவவுக்குத்தான் கிடைத்திருக்கிறது. அந்த ஊர் அவவுக்கு மிக நெருக்கமானது. கணவன் பக்கத்து வீட்டுக்காரியோடு ஓடிப்போ…
-
- 1 reply
- 1.3k views
-
-
ஸ்ரீவாணி மேடம் பொத்தூரி விஜயலட்சுமி மூலம் : பொத்தூரி விஜயலட்சுமி தமிழாக்கம் : ராஜி ரகுநாதன் பத்மாவும் சாவித்திரியும் பேருந்து நிலையத்தில் நின்றிருந்தார்கள். அவர்கள் இருவரும் ஒரு கவர்ன்மென்ட் அண்டர்டேக்கிங் கம்பெனியில் பணி புரிகிறார்கள். கம்பெனி பேருந்துக்காகக் காத்திருந்தார்கள். பொழுது போவதற்காக ஏதேதோ கதை பேசிக் கொண்டிருந்தார்கள். பத்மா திடீரென்று பேச்சை நிறுத்திவிட்டு, “அதோ அங்கே வருவது ஸ்ரீவாணி மேடம் தானே?” என்றாள். “எங்கே?” என்று கேட்டாள் சாவித்திரி. “அதோ, நடந்து வர்றாங்க பார்” என்றாள் பத்மா. “சீ சீ அவுங்களாக இருக்காது. ஸ்ரீவாணி மேடம் ஏன் நடந்து வரப் போறாங்க? காரில் தான் வருவாங்க. யாரையோ …
-
-
- 1 reply
- 825 views
- 1 follower
-
-
பிரியாணி - சிறுகதை மலையாள மூலம்: சந்தோஷ் ஏச்சிக்கானம், தமிழில்: கே.வி.ஜெயஸ்ரீஓவியங்கள்: அனில் கே.எஸ் கோபால் யாதவ் செருக்களையில் இருந்து இப்போதுதான் பஸ் ஏறியிருக்கிறான். கூடவே கதிரேசனும் மூன்று வங்காளிப் பையன்களும் வருகிறார்கள் என்பது உறுதியாகிவிட்டது. பஸ் தீயாய்ப் பாய்ந்துவந்தாலும் பொய்நாச்சியை அடையக் குறைந்தது இருபது நிமிடங்களாவது ஆகும். அதுவரைக்கும் நாம் கலந்தன் ஹாஜியாரைப் பற்றி பேசிக்கொண்டிருக்கலாம். கடந்த ஜனவரியில் எண்பத்தாறு வயதைக் கடந்திருக்கும் ஹாஜியார், அந்தக் காலத்தில் தளங்கரையில் இருந்து துபாய்க்கு மரக்கலம் ஓட்டிப்போன பலசாலி. அவருக்கு நினைவு தவறிவிட்டது என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. நான்கு மனைவிகளில் குஞ்ஞீபியை மறந்துவிட்டது …
-
- 1 reply
- 7.3k views
-
-
தட்சணை பலரும் முகம் சுளித்தனர்.‘‘ஏண்டி பங்கஜம், குருக்கள் நல்லா வசதியாத்தானே இருக்கார். அவர் ஒரே பையன் அமெரிக்காவுல செட்டில் ஆகியிருக்கான். மாசா மாசம் பணம் அனுப்பிடறான். அப்படி இருந்தும் அல்பமா தட்சணையை இப்படி அல்பமா வாய்விட்டுக் கேட்கறது நல்லாவா இருக்கு?’’ எனக் கேட்டாள் கல்யாணி. ‘‘அடிப் போடி, ‘காசேதான் கடவுளடா’ ஆசாமி அவரு. கோயில் நடை சாத்தற நேரம்... சீக்கிரம் பிராகாரம் சுத்திட்டு கிளம்பலாம்!’’ என்றாள் பங்கஜம். சுற்றிய பின் இருவரும் ஓரமாய் உட்கார்ந்தனர்.அப்பொழுது மூச்சிரைக்க ஒரு இளைஞன் கோயிலுக்குள் நுழைந்து, ‘‘சாமி...’’ என அந்த குருக்களை அணுகி, கொஞ்சம் தயங்கி நின்றான். கேட்டுக் கேட்டு வாங்கிய மொத்த தட்சணை பணத்தையும் அள்ளி அவனிடம் கொடுத்த குருக்கள், ‘‘க…
-
- 1 reply
- 1.2k views
-
-
நன்றி சுந்தரத்துக்கு நல்ல பசி. காரை விட்டு இறங்கியதுமே, ‘சாந்தி பவன் உயர்தர உணவகம்’ என்ற போர்டைப் பார்த்ததும் ஆறுதலாய் இருந்தது. பசி தீர சாப்பிட்டான். சாப்பாடு மிகவும் அருமை. வீட்டில் சாப்பிடுவதைப் போன்ற உணர்வு. பல ஊர்களில் ஹோட்டலில் சாப்பிட்டவன் என்பதால், இது வயிற்றைக் கெடுக்காத இயல்பான ருசியுள்ள உணவு என்பது அவனுக்கு புரிந்தது. சர்வரைக் கூப்பிட்டான். ‘‘இங்க சாப்பாடு தயார் பண்ற சமையல்காரர் யாரு? அவரோட பேசணும்!’’ ‘‘ஏன் சார்?’’ ‘‘சாப்பாடு ரொம்பப் பிரமாதம். அவரைப் பாராட்டணும்!’’ ‘‘வழக்கமா சமைக்கிறவர் இன்னைக்கு திடீர்னு லீவு. அதனால இன்னிக்கு சமையல் நான்தான் சார்!’’ ‘‘சாப்பாடு ரொம்ப பிரமாதம். எங்க குடும்பத்துக்கு ஒரு சமையல்காரர் தேவை. நல்ல சம்பளம் கொடுப்ப…
-
- 1 reply
- 1.7k views
-
-
பொப்பி என்பது புனைபெயர் ஷோபாசக்தி பூமியில் ஆதி காலம் முதலே இந்தக் கதை இருக்கிறது. எனினும், பிரெஞ்சு இளைஞனான பேர்னா பப்டிஸ்ட் ஆந்ரே இந்தக் கதைக்குள் பத்து வருடங்களுக்கு முன்புதான் வந்தான். அப்போது, அவனுக்கு இருபத்தாறு வயது. ‘கலே’ நகரத்துக் கடற்கரை வீதியிலுள்ள சின்னஞ் சிறிய ‘வெஸ்டர்ன் யூனியன்’ கிளையின் கூண்டுக்குள் தனியாளாக உட்கார்ந்தவாறே அலுப்பூட்டும் பணியைச் செய்துகொண்டும், நாள் முழுவதும் தனிமையில் உழன்றுகொண்டுமிருந்தான். இந்தக் கதையில் இன்னொரு முதன்மைப் பாத்திரமாக இருக்கும் இளம் பெண்ணுடைய பெயர் பொப்பி. அந்தப் பெண்ணின் உண்மையான பெயர், நாடு, இனம், தாய்மொழி, மதம் போன்ற விவரங்களைச் சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்தக் கதையில் குறிப்பிட முடியவில்லை. இந்தக் கதைக்காக மட்டு…
-
-
- 1 reply
- 314 views
-
-
எழுதியவர்: ரவி நடராஜன் அது ஒரு வழக்கமான வட அமெரிக்க நாள். காலையானதைக் கடிகார அலாரம் அறிவித்ததில் நாள் ஆரம்பமானது. அலுவலகம் கிளம்புவதற்கு இன்னும் 1.5 மணி நேரமே உள்ளது. அதற்குள், செய்ய வேண்டியவை ஏராளம். ஒரு வழியாக, காலை வேலைகளை (அதாவது ஒரு 30 நிமிட தேகப் பயிற்சி, 45 நிமிட காலைக் கடன்கள்,, 15 நிமிட சிற்றுண்டி தயாரிப்பு மற்றும் உண்பது) முடித்து காரை விரட்டி, அலுவலத்திற்கு பயணம். முதலில் இந்த சிக்னலை யாராவது சரி செய்ய மாட்டார்களா என்று அலுத்துக் கொள்ளும் அளவிற்கு, 30 செகண்டுகள் எவ்வளவு மெதுவாக நகர்ந்து பச்சையானவுடன், அடுத்த சிக்னலுக்கு விரைய வேண்டும். ஒரு வேளை, சிக்னலில் 30 செகண்டுகள் படிப்படியாகக் குறைவதை காட்டாவிட்டால், அவ்வளவு அலுத்துக் கொள்ள மாட்டோமா? என்னுடைய …
-
- 1 reply
- 1.4k views
-
-
ஒரு நிமிடக் கதை- மனசு விவாகரத்து கிடைத்து விட்டது. நிர்மலா நீதிபதியை நன்றியோடு பார்த்தாள். நரேனின் முகம் வாடிப்போயிருந்தது. குமரன் மகளிடம் வந்தார். “இனி என்னம்மா பண்ணப் போறே?” என்று கேட்டார். “அப்பா!... என்னைக் கொஞ்சம் தனியா விடுங்க. ஆண்டவன் இருக்கான்!” ஏனோ தெரியவில்லை. முதல் பார்வையிலே அவளுக்கு நரேனை பிடிக்காமல் போய்விட்டது. வீட்டில் சொல்லிப் பார்த்தாள். எடுபடவில்லை. அப்பா பிடிவாதமாக இருந்தார். கல்யாணத்தை முடித்தார். ஒட்டுதல் இல்லாமலே ஆரம்பித்த வாழ்க்கை. வெறுப்பைத்தான் தந்தது. அவள் மனசை தொடும் விதமாக நரேன் இல்லை. அதற்கு அவன் முயற்சி செய்யவும் இல்லை. வாழ்க்கையை ரசித்து வாழ விரும்பியவள் நிர்மலா. அது முடியாமல் போகவே விவாகரத்துக்கு அடிப…
-
- 1 reply
- 1.7k views
-
-
சிறுகதை: யாதுமானவள்! - ஶ்ரீரஞ்சனி - - ஶ்ரீரஞ்சனி - சிறுகதை 14 டிசம்பர் 2025 இதுதான் நான் தனித்துச் செல்லும் முதல் பயணம். விமானத்தின் பின்பகுதியில்தான் என் இருக்கை இருந்தது. சூட்கேசை என்னுடன் இழுத்துக்கொண்டு சென்ற நான் என் இருக்கையில் கைப்பையை வைத்துவிட்டு, சூட்கேசை மேல் இறாக்கையில் வைப்பதற்குப் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தேன். எட்டக்கூடிய உயரத்தில் அது இல்லையே என எனக்குக் கவலையாக இருந்தது. என் இருக்கையின் பக்கத்தில் இருந்த இளம் பெண் எழுந்து, உதவிவேண்டுமா என ஆங்கிலத்தில் கேட்டபடி உதவிசெய்ய முன்வந்தா. கேட்காமலேயே உதவிசெய்ய முன்வந்த அவவுக்கு வாயாராவும் மனதாரவும் நன்றிகூறியபடி ஆசுவாசத்துடன் அமர்ந்துகொண்டேன். சற்றுநேரத்தில், “நீங்க சுவிற்சிலாந்திலா இருக்கிறீங்க?” என அவவிடம்…
-
-
- 1 reply
- 238 views
-
-
ஒரு நிமிடக் கதை: விழுதுகள் அ+ அ- தோட்டத்தில் சாய்ந்து கிடந்த மரங்களை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார் அருணகிரி. “பாருங்க , புள்ளைய போல பாத்து பாத்து முப்பது வருஷமா வளர்த்து வந்தீங்க.. ஒரே நாள்ல அடிச்ச புயல்ல எல்லாம் சாஞ்சிடுச்சு” என்றார் அவரது மனைவி கமலா. அருணகிரி ஓய்வு பெற்ற அரசு அலுவலர். எழுபது வயதாகிறது உழைத்து சம்பாத்தித்து கட்டிய வீட்டைச் சுற்றி தென்னை, மா, கொய்யா, வாழை என மரங்களை நட்டு ஆசையாக வளர்த்து வந்தார். அவரின் இரண்டு மகன்களும் வெளிநாட்டில் செட்டிலான பிறகு, அவருக்கும், கமலாவுக்கும் அந்த மரங்கள்தான் துணை. அதிகாலை நேரத்தில் நடை பயிற்சி …
-
- 1 reply
- 1.2k views
-