கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
சிறுவர் மீதான பாலியல் வன்முறைகள் பல வழிகளில் மேற்கொள்ளப்படுகின்றன. தவறான எண்ணத்துடனான தொடுகை நேரடியான பாலியல் அத்துமீறல் மற்றும் பாலியல் ரீதியிலான கி;ண்டல் கதைகள் என்பனவாகவும் இன்னும் விரிவாகவும் சொல்லிச் செல்லலாம். மேலும் அவர்களின் வறுமையைப் பயன்படுத்திச் சமூகத்தால் பாலியற் தொழிலாளர்களாக்கப்படுவதும் கூட ஒரு வகையில் வன்முறைதான். பாலியல் ரீதியான பேச்சுக்கள் அச்சிறார்களின் மனதில் என்றும் நிலைக்கும் தாக்கங்களை ஏற்படுத்துகின்றது. அவை மனதைத் துன்புறுத்தி வெறுப்புணர்வுடன் தங்கிவிடுகின்றன. அவர்களைச் சுற்றியுள்ள உறவு நட்பு அயல் பாடசாலை மற்றும் வழிபாட்டுத்தலங்கள் போன்றவற்றிலிருந்து இவை நிகழ்த்தப்படுகின்றன. பாதுகாக்க வேண்டியவர்களும் அரவணைப்புக்கும் ஆறுதலுக்குமானவர்களே அவற்றைச்…
-
- 3 replies
- 1.1k views
-
-
பயிற்சி ‘‘ஏண்டா ஆறுமுகம்... உன் மேல நம்ம முதலாளி நிறைய மரியாதை வச்சிருக்கார். அவர்கிட்ட உன் மகன் சோமுவுக்கு டிரைவர் வேலை கேட்டா நிச்சயம் தருவார். நல்ல வருமானம் கிடைக்கும். அதை விட்டுட்டு வேற ஒரு கம்பெனியில அவனை நைட் வாட்ச்மேன் வேலைக்கு விட்டிருக்கியே... இது நல்லாவா இருக்கு?’’ என்றார் நண்பர் சம்பத்.ஆறுமுகம் அர்த்தப் புன்னகை பூத்தார்.‘‘நம்ம கம்பெனி பஸ் எல்லாமே மதுரை, திருச்சி, கோவைன்னு நைட் சர்வீஸ்தான் ஓடுது. என் மகன் சோமு நல்லாத்தான் வண்டி ஓட்டுறான். ஆனா, ராத்திரி பயணத்துல வண்டி ஓட்ட நம்மை மாதிரி பயிற்சியும் பக்குவமும் தேவை. ஒரு வருஷம் இந்த வாட்ச்மேன் வேலையைப் பார்த்தா என் மகனுக்கு ராத்திரி கண் விழிக்கிற பயிற்சி வந்துடும். அப்புறம் அவன் நம்ம கம்பென…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஒரு பையன் முட்டை கூடைகளுடன் மிதிவண்டியில் சென்றான். கல் தடுக்கி மிதிவண்டியுடன் விழுந்துவிட்டான்.முட்டைகள் அணைத்தும் உடைந்துவிட்டன. கூட்டம் கூடி விட்டது. வழக்கம்போல் இலவச உபதேசங்கள்.: பாத்து போக கூடாதா? " " என்னடா... கவனம் இல்லாம சைக்கிள் ஓட்டுற?" அப்போது ஒரு பெரியவர் அங்கு வந்தார். அடடா...ஒரு சின்ன பையன் இப்படி விழுந்து விட்டானே!! அவனது முதலாளிக்கு இவன்தானே பதில் சொல்லணும்? எதோ என்னால் முடிந்த உதவி என என ஒரு பத்து ரூபாயை குடுத்தார். அதோடு " தம்பி இங்கே இருப்பவர்கள் நல்ல மனிதர்கள். உபதேசம் மட்டுமில்ல ஆளுக்கு கொஞ்சம் பணமும் தருவார்கள். வாங்கிகொள்' என்றார். மக்களும் இவரது செய்கை பேச்சை பார்த்து பணம் தந்தார்கள். முட்டை உடைந்ததைவிட அதிக பணம் சேர…
-
- 1 reply
- 1.1k views
- 1 follower
-
-
நடந்து வந்த காலச் சுவடுகளில் திரும்பிப் பார்க்க விளைகிறேன்...... வாழ்க்கையின் வெற்றிடங்களினூடு பயணிக்கும் ஒவ்வொரு தறுவாயும் இந்த எண்ணம் வந்துபோகிறது ஆனந்தங்கள், அருவருப்புகள், ஏமாற்றங்கள், இழப்புகள், ஆற்றமுடியாச் சோகங்கள் என்று எத்தனை பார்த்தாயிற்று? பெருநதி, சிற்றோடையாகி, வற்றுப்போன வறட்டுப் பாலை நிலத்தில் நின்று இன்று திரும்பிப்பார்க்கிறேன். அன்னை மடியிலும் அரவணைப்பிலும் ஓடித்திரிந்த சிறுவயது நாட்கள்..... பாசமறிய தந்தையுடனான எனது கசப்பான அனுபவங்கள்... அநாதையாக மட்டக்களப்பில் எனது விடலைப்பருவம்... கொழும்பில் அலைக்கழிந்த் நாட்கள்... திருமணம், வெளிநாடென்று என்ன செய்கிறேன் என்றே தெரியாமல் காலவோட்டத்தில் பயணித்து விட்டேன் …
-
- 12 replies
- 1.1k views
-
-
விருந்து! குத்து விளக்கு வடிவில் சீரியல் செட், மஞ்சள், பச்சை வண்ணத்தை சிதறிக் கொண்டிருக்க, அதன் பக்கத்தில் வணக்கம் சொல்லும் வளையல் அணிந்த பெண் கைகள் இரண்டு அழகாய் ஜொலித்துக் கொண்டு இருந்தன. இரண்டு புறமும் அழகாய், அடர்த்தியான வாழை மரங்கள் கட்டப்பட்டு இருக்க, அதன் உச்சியில் தென்னை குருத்து கட்டப்பட்டு இருந்தது. இரண்டு நாட்களுக்கு முன் நடப்பட்ட பந்தக்காலின் உச்சியில், மஞ்சள் துணியில் நவதானிய மூட்டை புஷ்டியாக காட்சி தந்தது. வாசல் முழுக்க தென்னை தடுக்கு வேயப்பட்டு இருக்க, அந்த விசாலமான இடத்தில், 'இன்ஸ்டென்ட்' நட்பு கிடைத்த சின்ன குழந்தைகள் ஓடிப்பிடித்தும், ஒளிந்தும் விளையாடிக் கொண்டு இருந்தன. வாச…
-
- 1 reply
- 1.1k views
-
-
மை நேம் இஸ் மாறவர்மபாண்டியன்! இரு வார சிறுகதை கால இயந்திரம் என்று சொல்வார்களே... டைம் மெஷின்; அதெல்லாம் உண்மையாக இருக்கும் என நான் கற்பனையில் கூட நினைத்ததில்லை - கடந்த வினாடி வரை! ஓரிரண்டு ஆங்கில சினிமாக்களில் பார்த்து ரசித்ததுடன் சரி. ஆனால், கால இயந்திரம் என்பதும் நிஜமே என உணர்ந்து கொள்ளும் ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைத்தது என்றால் நம்புவீர்களா..? மதுரை அருகே திருமங்கலத்தில் எனது பக்கத்து வீட்டுக்காரர் டாக்டர் சாமியப்பன். டாக்டர் என்றால்... மருந்து மாத்திரை கொடுத்து ஊசி போடுபவர் அல்ல. ஊசிக்கும், இவருக்கும் ஊசிமுனையளவு கூட சம்பந்தமில்லை. இவர் விஞ்ஞான விஷயங்களில் எக்கச்சக்கமாய் ஆராய்ச்சி செய்து, தலையெல்ல…
-
- 1 reply
- 1.1k views
-
-
நேற்று ஒரு அழகான தோழியை.. கன நாளைக்குப் பின்.. சந்திச்சு மனம் நெகிழ பேசிப் பழகினதில் இருந்து மனசில் ஒரே மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சியோடு நித்திரைக்குப் போனனா.. நடுநிசியில்.. பேச்சுவார்த்தைக்குப் போகச் சொல்லி மக்கள் சார்பில் ஒரு அழைப்பு... யாரோட பேச்சு வார்த்தை.. வேற யாரு.. பிரபாகரன் அரசியலை விட்டு விலகினால் நான் அரசியல் செய்யாமல் விலகிக் கொள்வேன் என்று மார்தட்டித் தட்டியே யாழ்ப்பாணத்தை வன்னியை சிங்களவனோட சேர்ந்து சுடுகாடாக்கிய டக்கிளசு கும்பலோட தானாம். ஏன் அவையோட பேச்சு வார்த்தை.. பிரபாகரனை தானே உலகத்தை விட்டே விலக்கி வைச்சிட்டீங்க.. இருந்தும்.. நீங்க என்ன இன்னும் அரசியலில் இருந்தும் விலகல்ல.. கொலை.. கப்பம்... பஞ்சமா பாதகங்கள்... காட்டிக்கொடுப்புக்கள…
-
- 13 replies
- 1.1k views
-
-
பகை நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்புசிறுகதை: நர்சிம், ஓவியங்கள்: ஸ்யாம் மயானம் ஸ்தம்பித்தது. எல்லோருடைய பார்வையும் செல்வத்தின் மீது குவிந்திருந்தது. குமாரசாமி அய்யா, செல்வத்தைப் பார்த்துக் கத்தியதால்தான் இந்த அமைதி. மயானத்தில் ஒரு நொடி மயான அமைதி. `எங்கே... செல்வம் பதிலுக்கு ஏதாவது சொல்லி, மீண்டும் பெரிய சண்டை மூண்டுவிடப்போகிறதோ' என்ற அச்ச முடிச்சு, ஒவ்வொருவரின் பார்வையிலும் விழுந்திருந்தது. மீண்டும் கத்தினார் குமாரசாமி. “ஏன்டா, இங்கன என்ன கொமரியா கொள்ளையில போயிட்டா? `போறேன் போறேன்'னு இழுத்துக்கிட்டுக்கெடந்த கெழவி, கல்யாணச்சாவாப் போயிருக்கா. ஒம் பொண்டாட்டி நெற மாசமா இருக்காளாம்ல... அப்ப நீ காட்டுப் பக்கம் வரலாமா, ஆகுமா, என்னா இதுக்கு…
-
- 0 replies
- 1.1k views
-
-
-
காதலர் தினத்திற்காக எழுதிய கதை சற்றுக் காலதாமதாக வருகிறது. வாசிச்சப் போட்டு அப்படியே போகாமல் உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்கள். தெளிவு முற்றத்தில் வேப்ப மரத்தின் கீழே போடப்பட்டிருந்த சாய்மணைக் கதிரையிலே சாய்ந்திருந்த றஜீவன் சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். வளர்ப்பு நாய் அவனருகே வந்து தன் முன்னங் கால்களால் சுரண்டி அவனை விளையாட அழைத்தது. வழமை போல அதனுடன் சேர்ந்து விளையாடவோ அல்லது அதன் செயற்பாட்டை ரசிக்கும் மனநிலையிலோ றஜீவன் இல்லை என்பது அந்த ஐந்தறிவு ஜீவனுக்கு எப்படித் தெரியப் போகிறது. தகப்பனார் காலையில் பேசிய விடயம் தொடர்பாக அவன் ஒரு தீர்மானத்தை மேற்கொள்ள முடியாது குழம்பிப் போயிருந்தான். மீண்டும் மீண்டும் அந்த வார்த்தைகள் றஜீவனின் மனத்திரையில் தோன்றிக் கொண்டிர…
-
- 1 reply
- 1.1k views
-
-
கைபேசிக்குள் நுழைந்த கடல் திமிங்கலம் அப்படியொரு ராட்சச ஜந்துவை இதுவரை அவன் பார்த்ததில்லை. அதன் பிளந்த வாயில் இருந்து கூரிய பற்கள் நீட்டிக் கொண்டு இருந்தன. சற்றுமுன் அதன் வாய்க்குள் விழுந்த இரையைக் கடித்து விழுங்கியதற்கான ரத்த வாடை அவனைச் சுற்றி பரவிக் கொண்டிருந்தது. ஆனாலும் பசி தாளாமல் இவனை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தது, அந்த ஜந்து. "நிச்சயமாக இந்த ஜந்துவுக்கு இரையாகிவிடுவோம்' என்றதொரு பயம் இவனை முழுமையாகப் பிடித்திருந்தது. ஆச்சரியம் என்னவென்றால் அந்த ஜந்துவிடமிருந்து தப்பிக்கும் லாவகம் அவனுக்குத் தெரிந்தே இருந்தது. அதை அவன் விரும்பவில்லை. அதே சமயம் மாட்டிக்கொள்ளவும் விருப்பமில்லை. இன்னத…
-
- 0 replies
- 1.1k views
-
-
முதற்காதல் வ.ந.கிரிதரன் - நீண்ட நாட்களின் பின் நண்பனைச் சந்தித்தேன். வழக்கத்துக்கு மாறாக மகிழ்ச்சியுடனிருந்தான். இவனைக் கண்டதும் எனக்குப் பழைய ஞாபகங்கள் சில எழுந்தன. பதின்ம வயதினில் இவனொருத்தியின் மேல் காதல் மிகுந்திருந்தான். அதை அவளுக்கும் தெரியப்படுத்தியிருந்தான். அவளோ அதைத்தூக்கி எறிந்துவிட்டுச் சென்று விட்டாள். ஆனால் அவள் மீதான காதலை மட்டும் இவன் விடவேயில்லை. அவளையே நினைத்துக்கொண்டிருந்தான். எப்பொழுதும் அவனுடன் கதைக்கும்போதும் உரையாடலில் நிச்சயம் அவளது பெயரும் வரும். நீண்ட காலமாக அவளைப்பற்றிய தகவல்கள் கிடைக்காததால் அவன் பல்வேறு நினைவுகளில் மூழ்கியிருந்தான். யுத்தபூமியில் அவள் இன்னும் இருக்கின்றாளா என்றும் சந்தேகப்பட்டான். இந்நிலையில் யுத்தம்…
-
- 0 replies
- 1.1k views
-
-
களவாணி மழை சிறுகதை: தமிழச்சி தங்கபாண்டியன், ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு முன்நெத்திச் சுருக்கங்களில் வழிந்தோடும் வியர்வையைக் கூடத் துடைக்காமல் வேகு வேகென்று வந்து நின்றவனைப் பார்த்து, “ந்தா... சோத்தண்ணி குடிக்கிறியா?” என்ற பாண்டியம்மாளின் குரலைச் சட்டை செய்யாமல் தொழுவத்துக்குள் நுழைந்தான் பெரியாம்பிளை. மாடு, கன்னுகளுக்குத் தண்ணி ரொப்பும் சிமென்டுத் தொட்டி கால்வாசிக்குத்தான் இருந்தது. “சவக் கழுதை, சப்பணங்கொட்டி ஒக்காந்துகிட்டுக் கிடக்கா, தண்ணி ரொப்பாம” என்று முனகிக்கொண்டே தண்ணியை அள்ளி எடுத்து முகம், கை, காலில் சோமாறிக்கொண்டான். மூக்கு விடைக்கத் திரும்பிய நெற மாசச் சிங்கி, அவனது அருகாமையை உணர்ந்தாற்போல் அசைந்துகொடுத்தது…
-
- 0 replies
- 1.1k views
-
-
யார் புத்திசாலி? கதையாசிரியர்: சூர்யா அலுவலகத்தின் ஒட்டு மொத்த பார்வையும் ஒரே நேரத்தில் ஈர்க்கக் கூடிய ஆற்றல் அவளிடம் அப்படி என்ன இருக்கிறதெனத் தெரியவில்லை. அவள் என்னவோ பார்ப்பதற்கு சுமாரான அழகோடுதான் இருக்கறாள். சரி………சரி…… நான் பொய் சொல்ல மாட்டேன். (மானசீகமாக சத்தியம் செய்து கொண்டு 2 மாதங்கள் ஆகிறது. எல்லாவற்றிற்கும் காரணம் அந்த சத்திய சோதனை புத்தகம்தான்) அவள் சற்று கூடுதலான அழகோடுதான் இருக்கிறாள். அதற்காக ஒட்டு மொத்த அலுவலகமும் அவள் காலடியில் விழுந்துவிட வேண்டுமா என்ன?. அனைவரும் தன்னைப் பார்த்து ரசிக்கிறார்கள் என்கிற கர்வம் அவளது முகத்தில் அப்பட்டமாகத் தெரிகிறது. என்னவொரு கர்வமான நடை அது. அதை கூட கவனிக்கமல், அவளது கர்வத்தைக் கண்டு கோபப்படாமல், இதோ அருகில்…
-
- 3 replies
- 1.1k views
-
-
நீயெல்லாம் எதுக்கு படிக்க வர்ற? பரிமளா டீச்சரின் மனது "திக்திக்' கென அடித்துக் கொண்டது. இன்று பள்ளிக்கூடத்தில் ரிசல்ட். தன்னிடம் ஒன்பதாவது படிக்கும் முத்துப்பிரியா பாஸ் பண்ணியிருக்கக் கூடாது என்று வேண்டிக் கொண்டே இருந்தாள். கடந்த ஒரு மாதமாக நடந்த சம்பவங்கள் பரிமளாவிற்கு ஞாபகம் வந்து திகிலூட்டின. கடந்த மாதம் நடந்த ரிசல்ட் கமிட்டி கூட்டத்திலேயே முத்துப்பிரியாவை பத்தாம் வகுப்பிற்கு பாஸ் போடக் கூடாது என்று தலைமையாசிரியரிடம் சொல்லி இருந்தாள் பரிமளா. ""சார் முத்துப்பிரியாவுக்கு எழுதப் படிக்கக் கூட வரல சார், உருப்படியா ஒரு பாரா படிக்கத் தெரியாது சார். இவளை பத்தாம் வகுப்புக்கு பாஸ் போடறது நமக்குத் தா…
-
- 0 replies
- 1.1k views
-
-
லெப்.கேணல் ஜொனி(விக்கினேஸ்வரன்: விஜயகுமார்) பருத்திதுறை(குட்டலை) இவர் பேராதனை பல்கலை கழகத்தில் பெளதீக விஞ்ஞான மாணவகாய் கல்வி கற்று கொண்டிருந்த காலத்தில் தன்னை விடுதலை போராட்டத்திற்காய் இணைத்த ஒரு போராளி.இந்தியா விடுதலை புலிகளிற்கும் பயிற்சி வழங்க முன்வந்த போது தலைவர் தொலை தொடர்பு மற்றும் அது சம்பந்தமான தொழில்நுட்ப பயிற்சிகளிற்கு ஜொனியை தெரிவு செய்து அனுப்பிருந்தார். அப்போது புலிகளிடம் தொலை தொடர்பு வசதிகள் அவ்வளவாக இல்லாத கால கட்டம் யாராவது மிக நம்பிக்கையான ஒருவர்தான் செய்திகளை காவிசென்று மற்றைய போராளிகளிற்கு தெரிவிப்பது வழைமை அப்படி புலிகளின் ஆரம்பகாலத்தில் இருந்தே பல இரகசிய செய்திகளைதாங்கி எடுத்து செல்பராக இருந்தவர்களில் முக்கியமானவர் ஜெனி. …
-
- 2 replies
- 1.1k views
-
-
எட்டாப் புத்தகம்! பொன்னம்பி அவனிடம் ஒரு கேள்வியை எழுப்பி இருந்தான்."நீ (அரசியல்)அமைப்பிலே வேலை செய்யாமல் வெளியிலே போய் பயிற்சி எடுக்கணும் என்று அவசரப்படுகிறாய்.உனக்குத் தெரியுமா, இங்கே(தளத்திலே) வேலை செய்வது தான் முக்கியமானது,ஒரு காலத்தில் உணர்வாய்!"என்றான். இதையெல்லாம் நின்று நிதானிக்கும் நிலையில் அவன் இருக்கவில்லை.. .மனோவும் ,சதிஸும் ...கிராமத்திலிருந்து பயிற்சிற்குச் சென்ற பிறகு இவனுக்கு மன அலைகள் அடிப்பது அதிகமாகியிருந்தன. .மனோ,அவனுடன் சிறு வயதிலிருந்து படித்த நல்ல நண்பன்.சதாசிவம் வாத்தியாரின் பல பிள்ளைகளில் ஒருத்தன். ரமேஸினுடைய அம்மாவும் அங்கே படிப்பிக்கிற சந்திரா ஆசிரியை தான். சதிஸ் கிராமத்தில் இருந்து வட்டுக்கோட்டையில் படித்திருக…
-
- 0 replies
- 1.1k views
-
-
சமையல் கடிகாரத்தைப் பார்த்தபடியே எழுந்த ‘சமையல் திலகம்’ சரஸ்வதி, அரக்கப் பரக்கக் குளித்து ஒரு வாய் காபி மட்டும் போட்டுக் குடித்தாள். நேற்று இரவு ஒரு சமையல் போட்டிக்கு நடுவராகச் சென்றவள் வீடு திரும்ப பதினோரு மணிக்கு மேல் ஆகிவிட்டது. இரவு சரியான தூக்கமில்லை. முகம் உப்பியிருக்க, மிதமான மேக்கப் போட்டுக்கொண்டு கிளம்பினாள். சரஸ்வதியின் கார் அந்த ஸ்டூடியோவுக்குள் நுழைந்தது. அவசர அவசரமாய் அடுத்த வார ‘நளபாகம்’ எபிசோடுக்கு ஆயத்தமானாள். கேமரா முன் சிரித்தபடியே, ‘மைசூர் மசாலா தோசை செய்வது எப்படி?’ என்று செய்து காட்டினாள். முடித்ததும் மணியைப் பார்த்தால் மதியம் பன்னிரண்டு. காலையிலிருந்து எதுவும் சாப்பிடாதது தலையைச் சுற்றியது. ஸ்டூடியோவில் கொடுத்த கா…
-
- 1 reply
- 1.1k views
-
-
பிரம்மோபதேசம் சுப்பிரமணியனுக்கு உபநயனம்! அதாவது பூணூல் கல்யாணம் என்கிற பிரம்மோபதேசம். முகூர்த்த நாள் எல்லாம் குறித்தாகிவிட்டது. ஒற்றைப் படை வயதில்தான் பூணூல் போட வேண்டும் என்பது சம்பிரதாயம்! ஏழாவது வயதில் பூணூல் போடுவது சிலாக்கியம். காமம் மனதில் நுழைவதற்கு முன் பூணூல் போட்டு விட வேண்டும். சுப்பிரமணியனுக்கு இப்போது பதின்மூன்று வயது பிறந்திருக்கிறது. கல்யாண முஹூர்த்தம் எளிதில் கிடைத்துவிடும் பூணூலுக்கு முஹூர்த்தம் கிடைப்பது அவ்வளவு சுலபம் இல்லை. "எல்லாருக்கும் சொன்னோம். ஆனால் அண்ணாவுக்கு சொல்ல வேண்டாமா?' என்றாள் அம்மா. அம்மாவின் ஒரே அண்ணா ருத்ரமூர்த்தி சாஸ்திரிகள் மிகவும் ஆச்சாரமானவர். அடுத்தவர்கள் வீ…
-
- 0 replies
- 1.1k views
-
-
முதுமைப்பசி! காலையில் எழுந்ததும், மொட்டை மாடியில் இருக்கும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது தான் அலமேலுவின் முதல் வேலை. காய்கறி செடி, பூச்செடி என்று ஒவ்வொரு செடிக்கும் பார்த்து பார்த்து, பக்குவமாக தண்ணீர் ஊற்றுவாள். அவரைக் கொடி படர்ந்திருந்த பந்தலின் ஓரத்தில் கட்டி விடப்பட்டிருந்த கூண்டில், இரண்டு தேன் சிட்டுகள் கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்ததை மகிழ்ச்சியுடன் பார்த்தாள். தன் குடும்பத்திற்காக உழைத்து, பிள்ளைகளுக்காக வளைந்து, தேவையற்ற பொருளாக தனிமைப்படுத்தப்பட்ட அலமேலுவுக்கு, செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதும், தேன் சிட்டுகளை பார்த்து ரசிப்பது மட்டுமே ஆனந்தம். அலமேலுவுக்கு மொத்தம் ஐந்து பிள்ளைகள்.…
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 1 reply
- 1.1k views
- 1 follower
-
-
நடந்தது நடந்துவிட்டது! ‘‘ச ரி... நடந்தது நடந்து போச்சு! இனிமே நடக்கறது நல்ல தாவே நடக்கும். நம்பிக்கை யோடு இரு. ஒண்ணு சொல்றேன், நல்லாக் கேட்டுக்கோ. எது ஒண்ணும் நிரந்தரமில்லே. வர்றப்ப யார் கூட வந்தே? நினைச்சுப் பார். நம்ம கூடவே யாரும் இருக்கப் போறதில்லே, கடைசி வரைக்கும்! அவங்க அவங்க காரியம் முடிஞ்சதும் புறப்பட்டுப் போயிட்டே இருக் கிறதுதான் உலக நியதி! கீதையிலே சொன்னாப்ல, ‘இருக்கிறது இல்லாமல் போவது கிடையாத…
-
- 1 reply
- 1.1k views
-
-
வடலி பதிப்பகமும் இலங்கையின் தினக்குரல் பத்திரிகையும் இணைந்து சர்வதேச ரீதியில் இளம்படைப்பாளிகளிற்கான சிறுகதை போட்டியொன்றை நடத்துகின்றது. இது குறித்த அறிவித்தல் இன்று வடலி இணையத்தளத்திலும் தினக்குரல் பத்திரிகையிலும் வெளியாகியுள்ளது. ஈழத்தின் வாழ்வையும், மனிதர்களையும், அவர்களது பாடுகளையும் எந்த அரசியல் மற்றும் இலாப நோக்கங்களுமற்று வடலி பதிப்பகம் நூலாக்கி வருகின்றது. எல்லாவிதமான ஒடுக்குமுறைகளிற்கும் எதிரான குரல்களிற்கு ஆதரவாக செயற்பட்டு வரும் பதிப்பகம். சர்வதேச ரீதியிலான போட்டியாக இது இருந்தாலும், இலங்கையிலேயே அதிக கவனம் கொள்கிறது. இலங்கையிலள்ள தமிழ்பேசும் சிறுபான்மையினங்கள் அடிப்படையில் ஒரேவிதமான நெருக்கடிகளை எதிர்கொள்கின்ற போதும், மதம் மற்றும் வாழ்விட மாற்றங்க…
-
- 0 replies
- 1.1k views
-
-
இந்த மரத்தின் கதையைக் கேளுங்கள்..(முழுவதுமாகப் படிக்கவும் ) சில வருடங்களுக்கு முன், ஒரு அழகான ஊரில் ஒரு பெரிய ஆப்பிள் மரம் இருந்தது. அந்த மரத்துடன் விளையாடுவதையே ஒரு சிறுவன் வழக்கமாக கொண்டிருந்தான்.தினமும் அந்த மரத்தை பார்க்க கண்டிப்பாக வந்திடுவான்.அந்த மரமும் அவனுடன் விளையாடி மகிழ்ந்தது. ஆப்பிள்களை பறித்து விளையாடுவது ,மரக்கிளையில் தொங்குவது, மரத்தைக் கட்டிக் கொள்வது என்று சின்ன சின்ன குறும்புகள் செய்து விளையாடிக் கொண்டிருந்தான். அவனை பார்க்கும் போதும், அவனுடன் விளையாடும் போதும் அந்த மரத்திற்கு அளவற்ற மகிழ்ச்சி. சிறுவன் கொஞ்சம் பெரியவன் ஆனதும் ஒரு நாள் மரத்தை பார்க்க வந்தான்.அவனை பார்த்ததும் மரம் "வா வந்து என்னுடன் விளையாடு " என்று ஆசையாக அழைத்தது. சிறுவன் "இல்…
-
- 0 replies
- 1.1k views
-
-
எழுதியவர் உமா வரதராஜன் இரண்டாம் ஈழப்போரின் ஆரம்பத்தில் (பிரேமதாசா காலம்) நடந்த சம்பவங்களை மையமாக வைத்து வந்த கதை. இக்கதை வேற்று மொழிகளிலும் மொழிபெயர்க்கப்ப்பட்டுள்ளது. மூடுண்ட அந்த நகரத்துக்கு அரசன் வரும் நாள் அண்மித்துக் கொண்டிருந்தது. யுத்தத்தில் இடிந்து போன கோயிலைக் கட்டும் பணிகளை ஆரம்பித்து வைக்க அவன் வருவதாகச் சொன்னார்கள். அரசனின் வருகை பற்றிய அறிவிப்புகளை உடம்பில் ஒட்டிக் கொண்டு எருமைகள் எல்லாம் நகரத்து வீதிகளில் அலைந்து திரிந்தன. முரசுகள் சந்து பொந்துகளெங்கும் சென்று அதிர்ந்தன. ரத்த ஆற்றின் கரையில் அந்த நகரம் இருந்தது. சிறு காற்றுக்கு உரசி, தீப்பற்றி எங்கும் மூளும் மூங்கில்கள் நிறைந்த நகரம் அது. கடைசி யுத்தம் மூன்று வருஷங்களின் முன்னால் நட…
-
- 0 replies
- 1.1k views
-