கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3080 topics in this forum
-
டார்வினின் வால் கிறிஸ்டி அவன் அருகே வந்து “ஒரு பெயர் வைக்கலாமா?” என்றபோது அவன் ஏதும் பேசாமல் அவள் கண்களையே பார்த்தான். அக்கண்களிலிருக்கும் குழந்தைமை அவனுக்கு எப்போதும் ஆசுவாசமளிக்கும். “சொல்லுங்க அங்கிள் என்ன பெயர்” என்றாள் மறுபடியும் அழுத்தமாக. பிறகு அவளே ஒருகணம் யோசிப்பது போல பாவனைக் காட்டி “டார்வின்” என்றாள். அவன் ஆச்சர்யமாக நிமிர்ந்தான். எதற்காக அப்பெயரை தேர்ந்தெடுத்தாளெனக் கேட்கத் தோன்றவில்லை. ஏதோவொரு வகையில் ஒரு அடையாளத்திற்கு அப்போதைக்கு அப்பெயர் தேவையாகத்தான் பட்டது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் அக்கணத்திலிருந்து இருவருடைய பிரக்ஞையிலும் டார்வின் என்ற சொல் உச்சரிக்கத் துவங்கியது. இந்த பெயர் அவளின் வளர்ப்பு பூனைக்கோ நாய்க்கோ அல்ல அவா்கள் பிடிக்கப் போக…
-
- 0 replies
- 1k views
-
-
அ.முத்துலிங்கம் விருது சமீபத்தில் ஒரு விருது வழங்கும் விழாவுக்குப் போயிருந்தேன். பலவிதமான பரிசுகளும், விருதுகளும் வழங்கினார்கள். எல்லாமே மகிழ்ச்சியான விசயம்தான்.ஒருவரைப் பாராட்டுவது எப்போதுமே வரவேற்கப் படவேண்டிய நிகழ்ச்சிதான். ஒருவருக்கு அவருடைய அதீத வணிக வளர்ச்சியைப் பாராட்டி விருது வழங்கினார்கள். சென்ற வருடம் அவருடைய லாபம் 3 மில்லியன் டொலர் மட்டுமே. நடப்புவருடம் அவருடைய லாபம் 10 மில்லியன் டொலர். ஒரு வருடத்திலே லாபத்தை மூன்று மடங் காகப் பெருக்கியிருக்கிறார். அசுர சாதனை. நிச்சயம் பாராட்டப்படவேண்டியவர்தான். இப்படியான வணிக மேதைகளைப் பார்க்கும்போது மெலிண்டாவையும், பில் கேட்சையும் நினைத்துக் கொள்வேன். உலகத்திலேயே அதிகசெல்வம் சே…
-
- 1 reply
- 1k views
-
-
நாணயம் சில வருடங்களுக்கு முன் நண்பரொருவர் மூலம் அறிமுகமான சுந்தரம் பத்தர் அயல் ஊரில் வசிப்பவர் . அந்த குடும்பத்தில் இருந்த மாப்பிள்ளைக்கு பெண் பார்க்க ஆரம்பித்த பொது ..அயல் ஊரில் பெண் கிடைக்கவே ...திருமணம் நிச்சயமாகி கலியாணத்துக்கு நாள் குறித்தார்கள். மாப்பிள்ளை வீடடார் நகைகள் செய்வது சுந்தரம் பத்தரிடம். பெண் வீட்ட்ருக்கும் அறிமுகமாகி அவர்களும் அங்கு ஓடர் கொடுத்தனர். திருமணம் இனிதே நடந்தது . வாழ்க்கையும் ஆரம்பமாகியது . காலம் உருண்டோடியது . நாட்டில் ஏற்படட இன அழிப்பின் போது பல் கஷ்டங்களை தாண்டி .வெளிநாட்டுக்கு அகதியானார்கள் இந்த மாப்பிள்ளையும் பெண்ணும். அங்கம் காலங்கள் உருண்டோடின ஆணும்பெண்ணுமாய் இரு குழந்தைகளும் அவர்களுக்கு கிடைத்தனர். மிகுந்த கஷ்ட பட…
-
- 3 replies
- 1k views
- 1 follower
-
-
ஒரு நிமிடக் கதைகள் ஒரு நிமிடக் கதைகள் எதிர்முனையில் எவனோ ஒருவன்..! காலையில்.…
-
- 0 replies
- 1k views
-
-
மூன்றாம் திருநாள்! மூன்றாம் திருநாள்! சி.முருகேஷ் பாபு ‘‘அ வனை ஏன்டே கூட்டிட்டு வந்தீங்க... படிக்கிற புள்ளைக்கு இதெல்லாம் என்னத்துக்கு..?’’ என்னோடு வந்த முத்துக்குமாரையும் சுப்பிரமணியையும் கடிந்துகொண்டார் சித்தப்பா. எல்லோரும் திருநெல்வேலி பஸ் ஸ்டாண்டில் நின்றுகொண்டு இருந்தோம். எங்கள் ஊர் அம்மன் கோயிலில் கொடைவிழாவுக்கு காப்புக்…
-
- 1 reply
- 1k views
-
-
நிபந்தனை ‘‘இந்த வீட்டு லொகேஷனுக்கும் இருக்கிற வசதிகளுக்கும் பத்தாயிரம் ரூபாய்கூட வாடகை கொடுக்கலாம். சுவற்றில் ஆணி அடிக்கிற பழக்கமெல்லாம் எங்களுக்குக் கிடையாது. நானும் என் மனைவியும் வேலைக்குப் போறதால, குழாய்த் தண்ணீர் அதிகம் செலவாகாது. கரென்ட் யூனிட்டுக்கு நீங்க இரண்டு ரூபாய் அதிகமா வசூலிச்சுக்கலாம். எங்க உறவுக்காரங்க யாரும் இங்க வந்து தங்கமாட்டாங்க. லேட் நைட் வந்து பெல் அடிக்கிற பழக்கமே எங்களுக்கு இல்ல. ஓகேன்னா, இப்பவே ஒரு வருஷ அட்வான்ஸை கொடுத்துடறேன்!’’ - வீட்டுக்காரர் கோபாலிடம் சொல்லி முடித்தான் பாலு.மனைவி காட்டிய சைகையைப் புரிந்துகொண்டு, யோசித்து பதில் சொல்வதாகச் சொல்லி பாலுவை…
-
- 0 replies
- 1k views
-
-
அம்மா எப்போ தூங்குவான்னு தெரியாது, காலைல எந்திரிச்சுப் பாத்தா சாமி படத்துக்கு முன்னாடி நின்னு கண்ண மூடிக்கிட்டு நிப்பா, வாய் மட்டும் முணுமுணுக்குறது தெரியும், சாமிக்கிட்ட என்ன வேண்டுவான்னு தெரியாது, அநேகமா ஊர்லயே சாமிக்கிட்ட அதிக நேரம் பேசுறது அம்மாவாத்தான் இருக்கும்...... கோயில் பூசாரி கூட சாமியவிட மத்தவங்ககிட்டத்தான் அதிக நேரம் பேசிப் பாத்திருக்கேன், கிட்டத்தட்ட 10 வருஷத்துக்கு மேல அம்மாவும் சாமிகிட்ட ஏதோ வேண்டிக்கிட்டேதான் இருக்கா, ஆனா, அவ வாழ்க்கைல வேண்டுறது எதுவும் நடந்த மாதிரித் தெரியல.... அம்மாவோட வாழ்க்கை ரொம்ப நீளமானது, அம்மாவோட கதைய சின்ன வயசுல கேக்குறப்பவெல்லாம், கண்ணு விரிச்சு படம் பாக்குற மாதிரி இருக்கும், வெள்ளக்காரங்கிட்ட கணக்கு எழுதுற வேல…
-
- 4 replies
- 1k views
-
-
புத்தரின் மௌனம்: நெற்கொழுதாசன் ஓவியம்: திண்டுக்கல் தமிழ்ப்பித்தன் பிற்சேர்க்கை புளோமினில் அடுக்குமாடியொன்றில் வசித்துவந்த பங்களாதேசை சேர்ந்த பெண் கொலை செய்யப்பட்டமுறை பிரான்ஸ் போலீசாரை அதிர்ச்சிக்குளாக்கி இருந்தது. அவள் தோளிலிருந்து இடைப் பகுதிவரை கூரிய ஆயுதமொன்றால் பிளந்து குரூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தாள். சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யபபட்டதாகவும் அன்றைய பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியிருந்தன. 0 பல்பொருள் அங்காடியில் அவனைக் கண்டபோது விலகிச்சென்றுவிடலாம் என்றுதான் நினைத்தேன். அதற்குள் அவன் என்னை அடையாளம் கண்டுவிட்டிருந்தான். மிக நெருக்கமாக வந்து “நீங்கள் றஞ்சித்தானே?” எனக் கேட்டான். நான் அவனை அடையாளம் கண்டுகொள்ளாதவன் …
-
- 5 replies
- 1k views
-
-
ஜூடோ - ப.தெய்வீகன் அமெரிக்காவின் அரிசோனா சிறை வளாகத்தில் கைதிகளுக்கான கிறிஸ்துமஸ் நிகழ்வுகள் ஏற்பாடாயிருந்தன. அன்றைய தினம்தான் போதைப்பொருள் கடத்தலில் சம்பந்தப்பட்ட ஈழத்தமிழ் கைதியான ரொக்ஸி சிறைக்குக் கொண்டுவரப்பட்டான். அதிகாரிகளின் கட்டளைப்படி கிறிஸ்துமஸ் உணவுக்கான வரிசையில் நின்றான். பல வகையான உணவுகள் பரிமாறப்பட்ட மேசைக்கு அருகில் சென்றபோது, ரொக்ஸிக்கு முன்னால் சென்றவன் கடதாசித் தட்டை எடுத்துக் கொடுத்தான். வறுத்த சோற்றையும் அதற்கு மேல் வார்க்கப்பட்ட குழம்பையும் எடுத்துக்கொண்டு, அவன் பின்னாலேயே ரொக்ஸியும் நடந்தான். வேறு கைதிகள் இல்லாத இடத்தில் இருவரும் குந்தினார்கள். பாதி வறண்ட வழிகள், பள்ளத்தில் வற்றிப்போன கன்னங்கள், தடித்த உதடுகள். தனது பெயர் ஜூடோ என்று கூறினான். ரொ…
-
- 2 replies
- 1k views
-
-
நிலங்கீழ்வீடு பொ.கருணாகரமூர்த்தி எமது 15 வருஷ கனடியவாழ்வின் அருஞ்சேமிப்பில் இந்தவீட்டை நோபிள் ரியல் எஸ்டேட்ஸ் என்கிற ஒரு குழுமத்தின் அனுசரணையுடன்தான் வாங்கினோம். இங்கே வீடுகளைவாங்கும் தமிழர்கள் அநேகமாகச் செய்வதைப்போலவே நாங்களும் இவ்வீட்டை நிலவறைகள் உள்ள வீடாகத்தேர்வுசெய்தோம். ஆனாலொன்று எப்படி ஒரு அடுக்ககத்தின் உச்சிமாடத்தில் கூரைமுகடுகளுக்குள் அமைந்த வீடுகளை குடியிருப்பாளர்கள் தவிர்த்துக்கொள்வார்களோ, அதேபோல் இந்த நிலங்கீழமைந்த வீடுகளும் குடியிருப்பாளர்களின் முதல் விருப்புக்குரியவையல்ல. நிலங்கீழ்வீட்டையும் யாருக்காவது வாடகைக்கு விட்டால் அவர்கள் தரக்கூடிய வாடகையும் எமது மாதாந்த தவணைத்தொகையைச் செலுத்துவதற்கு உதவும் என்பதே இவ்வீட்டைத் தேர்வுசெய்ததின் சூக்…
-
- 1 reply
- 1k views
-
-
என்று சொந்த ஊரைவிட்டு புறப்பட்டோமோ அன்றே உணர்விளக்கத் தொடங்கிவிட்டன எமது சம்பிரதாயங்களும் பண்பாடுகளும்.....! அதற்கு கார்த்திகை விளக்கீடு ஒன்றும்விதிவிலக்கல்ல. நான் கடைசியாக விளக்கீட்டை விளக்கீடாக கொண்டாடி 15 வருடங்கள் கடந்துவிட்டன. மாலை 5 மணிக்கே அயலவர் வீடுகளில் "மாவிலி சங்கிலி இராசாவே வருசம் வருசம் வந்து போ..." என்ற பாடல்களுடன் விளக்கீடு அமர்க்களப்படும். குறைந்தது இரண்டு நாட்களுக்கு முதலே சீமைக் கிழுவையில் தடிகள் வெட்டி ஒன்றரை அடி உயரத்தில் பந்தம் சுற்றி விளக்கீட்டை வரவேற்கத் தயாராவோம். நீங்கள் எல்லோரும் எப்படியோ நானறியேன். நான் வளர்த்த பொன்வண்டுக்கு சாப்பாட்டுக்கு சீமைக்கிழுவை குருத்து வேணும் எண்டு சண்டைபிடித்து குருத்து பிடுங்கிய ஞாபகம் இன்னு…
-
- 1 reply
- 1k views
-
-
ஒரு நிமிடக் கதை: பெண் புத்தி "கதவைப்பூட்டிக்கொள். ராத்திரி சமையல் போனிலே சொல்றேன். எங்கேயும் வெளியே போகாதே " சாந்தி அலுவலகம் கிளம்பிய பத்தாவது நிமிடம் ராஜி பக்கத்துவீட்டுக்குக் குதித்தபடி சென்றாள். * மாமி, சமையல் முடிச்சுட்டீங்களா....ஓ.. ஆரம்பிக்கிறீங்களா...கொடுங்க நான் காய் வெட்டித்தரேன்.... குழம்புக்கா..." கேட்டபடி வேலை செய்யத்தொடங்கினாள். " என்ன ராஜி...நேத்து என்ன ஏதாவது முக்கியமா நடந்துதா?" வம்பு கேட்கத்தொடங்கினாள் மாமி. இது அன்றாடம் நடப்பது தான். ராஜியை சாந்தி வீட்டில் முழு நேர வேலைக்கு வைத்திருந்தாள். வீட்டில் யாரும் இல்லாதபோது, ராஜி பக்கத்துவீட்டுக்கு…
-
- 0 replies
- 1k views
-
-
ஒரு கவடு தூரம் -வாசுதேவன் பாரிஸ் முதலாவது குறிச்சியில் உள்ள உணவகமொன்றில் சமையற்காரனாக வேலை செய்யும் கண்ணன் பிரஞ்சுக் குடியுரிமை பெற்றுக்கொண்ட வேகத்திலேயே கம்யூனிஸ்ட் கட்சி உறுபினராகவும் தன்னைப் பதிவு செய்துகொண்டிருந்தான். அதற்கு மூன்று வருடங்களுக்கு முன்னரே பிரஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பான தொழிற்சங்கத்திலும் உறுப்புரிமை பெற்றிருந்தான். தொழிற் சங்கத்தில் இணைந்ததிலிருந்து சிறிது சிறிதாக இடதுசாரிச் சிந்தனை அவனை ஆக்கிரமித்துக்கொண்டது. தொழிற்சங்கக் குறிச்சிப்பொறுப்பாளனான டானியல் ப்ரௌவ்ஸ்கிதான் கண்ணனுக்கு கம்யூனிசச் சிந்தனைகளின் கதவுகளைத் திறந்துவிட்டவன். கண்ணனுக்கும் ப்ரௌவ்ஸ்கிக்கும் இடையில் ஒரு முக்கியமான பொதுவிடயம் உண்டு. ப்ரௌவ்ஸ்கி பரிசில் கோவில் வீதிய…
-
- 0 replies
- 1k views
-
-
"சித்தப்பா பூங்கா" தர்ஷன் அருளானந்தன் சமீப நாட்களில் எல்லாம் பஸ் ஏறுவதற்காக ஓராம் கட்டை சந்திக்கு வந்தால் அவனுக்குள் தோன்றி மறைந்து கொண்டிருக்கும் அந்தக் கனவு தன் உள்ளத்தில் எங்கேயோ ஒரு புல்லாங்குழல் இனிமையானதோ, துன்பகரமானதோ எனப் புரியாத ஒரு இராகத்தை மீட்டிக் கொண்டிருக்கின்றது. அவ்வளவு எல்லையற்றதாக இருந்தது அவனது மகிழ்ச்சியும், வேதனையும்.கண்களைத் செருகி கனவில் வந்த சித்திரங்களை ஆராய்ந்தான். விசித்திரமான சீருடையுடன் அழகான மனிதர்களின் அரைப்பட போட்டோக்கள் மதில்கள் முழுவதும் தெரிந்தன.'வீரவணக்கம்' என்னும் தலையங்கத்தின் கீழே. விசித்திரமான மந்திரப் பாட்டுப் பொட்டியில் இருந்து துள்ளலும் , இனிமையுமான சங்கீதம் பரவிக் கொண்டிருந்தது. கிளைகளும் மரங்களும், இலைகளும் பூக்க…
-
- 0 replies
- 1k views
-
-
அதிர்ஷ்டம் ‘‘புது காராம் புது கார். சனியன். இது வந்த நேரமே சரியில்லை. வாங்கி ஒரு வாரம்தான் ஆச்சு. இதை வாங்கின நேரம், உங்க தம்பி இறந்துட்டார். நீங்க சீட்டு கட்டின பத்து லட்ச ரூபாய் பணத்தோட அந்தக் கம்பெனிக்காரன் ஓடிட்டான். முதல்ல இதை வித்துத் தொலையுங்க!” - மனைவியின் பிடுங்கல் தாங்காமல் காரை அடி மாட்டு விலைக்கு விற்றுவிட்டு வந்தான் கணேசன். ஒரு வாரம் போயிருக்கும். ஞாயிற்றுக்கிழமை திடீரென காலிங்பெல் அடிக்க, கதவைத் திறந்தான். காரை வாங்கிய மணிசர்மா நின்றிருந்தார். ‘காரைத் திருப்பிக் கொடுக்க வர்றாரா? இவர் வீட்டில் என்ன நடந்ததோ’ - மனதில் கிலி கண்டு நின்றான் கணேசன். ‘‘என்ன சார் அசந்து போய் நிற்கறீங்க? ரொம்ப அதிர்ஷ்டமான கார் சார் இது. இதை வாங்கிய மூணே நாள்ல என்…
-
- 1 reply
- 1k views
-
-
மனதில் தோன்றிய எண்ணங்கள் சரியான இடத்தில் ஆரம்பிக்கவில்லையென்றால் பயணம் எளிதாக இல்லாமல் போகலாம். வாழ்கையில் அந்த சரியான இடம் எது என்றே தோன்றாமல் குழம்பிக் கொண்டிருக்க, மிகச் சரியான இடத்தில் ஆரம்பித்திருந்தும், தொடர்ந்த பயணங்கள் திருப்தியை அளிக்காமல் திசை மாறி நீர்த்துப் போகலாம். அந்த மாதிரியான நிலைமை நிஜவாழ்கையில் பலருக்கு நடக்குது. சிலரோட வெற்றியும் தோல்வியும் சுற்றியுள்ள மனிதர்களால் மட்டுமில்லை, சூழ்ந்து வரும் நிலைமைகளாலும் ஏற்படலாம். சின்னக்காவின் உண்மையான பெயர் யாருக்கும் ஊருக்குள்ள அவா உசிரோடு இருந்த காலத்தில் தெரியாது, அது என்ன என்று , இந்தக் கதையின் முடிவில் நடந்த சம்பவத்தில் ஒரு நாள் அவா உயிர் இல்லாமால்ப் போன அந்த நா…
-
- 0 replies
- 1k views
-
-
அந்திமத் தேடல் செத்துப் போய் விடுவோமோ என முதல் முறையாக எனக்கு பயம் தொற்றிக் கொண்டது. என்னுடைய வயது, அனுபவம், தேசாந்திரியாக ஊர் சுற்றியது, மழை, வெள்ளம், நெருப்பு...இப்படி இயற்கையை மூர்க்கமாக எதிர் கொண்ட போதெல்லாம் கூட, இறப்பு என்னைத் தழுவி விடுமோ என நான் எப்போதும் அஞ்சியதில்லை. கேவலம், பசியால் செத்து விடுவோமோ...? பசியின் கோரத்தால் குடல் மேலெழுந்து, மூச்சே கழுத்தை நெறிக்கிறது. என்னுடைய வயசு என்ன இருக்கும்? தோற்றத்தைக் கொண்டு கணிப்பவர்கள் எனக்கு 70, 80 வயது இருக்கும் எனச் சொல்வார்கள். வயிறு என்று ஒன்று இருந்தால்தானே பசி எடுப்பதில் நியாயமிருக்கும்?! கடைசியாக எப்போது, என்ன சாப்பிட்டேன…
-
- 2 replies
- 1k views
-
-
-
- 0 replies
- 1k views
-
-
தரிசனம் -இளங்கோ கிருஷ்ணன் இன்று காலை நான் கடவுளைப் பார்த்தேன். சரி, சிரிக்க வேண்டாம். நிஜமாகவே பார்த்தேன் என்று நான் சொன்னால் நீங்கள் நம்பத்தான் வேண்டும். ஏனென்றால், நான் கதாசிரியன். கதாசிரியன் சொல்வதை நம்பத் தொடங்குவதுதான் கதை கேட்பதன் முதல் தகுதி. சரி, கடவுளைப் பார்த்தேன் என்றேன் அல்லவா? எங்கு பார்த்தேன் என்று சொல்லவில்லையே, கோயம்பேடு மார்க்கெட்டில்தான் தரிசனம். அதுவும் ஒருமுறை அல்ல; இரு முறை. அதை தரிசனம் என்று சொல்லலாமா தெரியவில்லை. என் கண் எதிரே தட்டுப்பட்டார். அதுவும் நான் எதிர்பார்க்காத நேரத்தில். எத்தனையோ கோடி பக்தர்கள் எத்தனை எத்தனையோ வழிகளில் தேடித் திரிகிறார்கள். நாள்தோறும் ஆறுகால பூஜை செய்து, விரதம் இருந்து, சஷ்டி படித்து, சபரிமலைக்கு மாலை போட்…
-
- 0 replies
- 1k views
-
-
ஒரு நீதிக்கதை August 30, 2021 முன்னொரு காலத்தில், ஒரு ஓவியர் வாழ்ந்துவந்தார். அவர் அழகான ஓவியம் ஒன்றை வரைந்து, கண்ணாடியின் எதிரே மாட்டிவைத்தார். ஓவியத்தைக் கண்ணாடி மூலமாகப் பார்த்தால், அது தொலைவில் மிக மிக மென்மையாகவும், சாதாரணமாகத் தெரிவதைவிட இரண்டு மடங்கு அழகாகத் தெரிவதாகவும் சொன்னார். அவர் வீட்டில் வளர்ந்துவந்த பூனை இந்த ஓவியத்தின் சிறப்பு குறித்துத் தன் நண்பர்களான காட்டு விலங்குகளிடம் சொன்னது. காட்டு விலங்குகள் வீட்டுப் பூனை மீது பெரும் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தன. ஏனென்றால், பூனை நல்ல கல்வியறிவும், கலாச்சார அறிவும் பெற்றிருந்தது. மேலும், அது காட்டு விலங்குகளுக்குத் தெரியாத எவ்வளவோ விஷயங்களைப் பற்றி அவ்வப்போது பேசும், அவர்கள…
-
- 7 replies
- 1k views
-
-
எங்க ஊர் -கலைச்செல்வி ஊரின் மையத்திலிருந்தது அந்த வேம்பு. ஆலமரம் போல தழைத்து நிறைந்திருந்த அதன் படர்வான நிழலில் கிழக்கு நோக்கி ஒரு கருத்த பிள்ளையார் அமர்ந்திருந்தார். கூடவே ஒரு சூலமும். எண்ணெய் மினுங்கிய அவர் மேனியில் வேம்பின் இலையும் பூவும் உதிர்ந்து ஒரு மாதிரியாக புனிதம் குவிந்திருந்தது. ‘‘நம்பூர போட்டோ எடுத்து வெளிநாட்டு நீஸ் பேப்பர்ல்லாம் போடுவாங்களாம்...’’ தகவல் வந்ததையடுத்து பெண்கள் காலை வேலையை ஒதுக்கி விட்டு குளித்து முடித்திருந்தனர். சராசரியாக எல்லோருக்குமே மெல்லிய உடல்தான். அதனை இறுக கவ்விக் கிடந்தது மெல்லிய சின்தெடிக் ரவிக்கைகள். இளந்தாரி பெண்கள் சீவி முடிந்த கூந்தலில் கனகாம்பரப் பூ சூடியிருந்தனர். நடுத்தர வயது பெண்களுக்கு பூக்களின் மீது அத்தனை ஆர்வமில…
-
- 0 replies
- 1k views
-
-
லண்டனில் தெருக்களில் கடந்த வார இறுதியில் தொடங்கிய so call வன்முறை இங்கிலாந்து பல பாகங்களிலும் பரவி இப்பொழுது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது.Darcus Howe என்ற கறுப்பின லண்டனிலும் வாழும் எழுத்தாளருடன் நேர்முக உரையாடலை பிபிசி தொலைகாட்சி அத்தருணம் நடத்தியது. நேர்முக உரையாடலின் பொழுது அறிவிப்பாளரின் கேள்விக்கு ஒன்றுக்கு பதிலளித்த இவ் எழுத்தாளர் இதை கலவரம் என்று கூற மாட்டேன் இதை மக்கள் எழுச்சி என்றே தான் கூறுவேன் என பதிலளித்தார்.லண்டனில் கறுப்பு இனத்தவர் ஒருவர் தமிழ் நாட்டு என்கவுண்டர் பாணியில் சுட்டு கொல்லப் பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் லண்டன் வாழும் கறுப்பு சமூகத்தனிரால் ஏற்ப்படுத்தப் பட்டட எதிர்ப்பு ஊர்வலம் ஆர்ப்பட்டம் பின் கலவரமாக வெடித்தது .பல கடைகள் உடைக…
-
- 1 reply
- 1k views
-
-
ஸ்கிரிப்ட் ஆதவனே கூட இதை எதிர்பார்க்கவில்லை. அவனது பேய்ப்பட ஸ்கிரிப்ட், தயாரிப்பாளரை வெகுவாகக் கவர்ந்துவிட்டது.‘‘சூப்பர் தம்பி, இப்போதைய ட்ரெண்டுக்கு இந்தப் படம் பெரிய ஹிட்டாகும். நாளைக்கே வந்து அட்வான்ஸ் வாங்கிக்கோ. நீ நல்ல வார்த்தைகளா போட்டுப் பேசறே! அதனால டயலாக்கும் நீயே எழுதிடு. படம் தொடர்பான எல்லா வேலைகளையும் உடனே ஆரம்பிச்சிடுவோம்’’ என்று தயாரிப்பாளர் சொல்ல, ஆதவனின் இதயம் பேயைப் போலத் துள்ளிக் குதிக்க ஆரம்பித்தது. மறு நாள்...அட்வான்ஸ் வாங்கிக்கொள்ள தயாரிப்பாளரின் ஆபீஸுக்கு உற்சாகமாகப் போனான் ஆதவன்.ஆபீஸ் பூட்டியிருந்தது.அந்த அலுவலகத்தை ஒரு சுற்று சுற்றி வந்தான். தன்னுடைய படத்தின் பெரும்பாலான காட்சிகளை இந்த ஆபீஸிலும் அதைச் சுத்தியுமே வைத்துக்கொள்ளலா…
-
- 2 replies
- 1k views
-
-
8.8.2015 காலை 6.30 மணியளவில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், கிராமத்தில் இருந்து வந்திருக்கும் ஒரு தாயும் மகளும், அண்ணா அரங்கத்திற்கு வழிகேட்டபடி நின்றுள்ளனர். 8.30 மணிக்கு துவங்க இருக்கும் பி.எஸ்.சி அக்ரிகல்ச்சர் படிப்பிற்கான கவுன்சிலிங்கில்கலந்துகொள்வதற்காக, திருச்சிக்கு அருகேயுள்ள சிறு கிராமத்தில் இருந்து வந்திருப்பதாக கூறியுள்ளனர். ஆனால் விவசாயக் கூலியான படிக்காத அந்த தாய்க்கும், அந்த சிறுமிக்கும், அந்த படிப்பிற்கான கலந்தாய்வு கோயம்புத்தூரில் நடக்கிறது என்பது தெரிந்திருக்கவில்லை. ஏதோ தவறான தகவலின்படி சென்னைக்கு வந்துவிட்டனர். காலையில் அங்கே நடைப்பயிற்சி செல்பவர்கள் சிலர் இந்த விவரங்களை கேட்டறிந்து, கலந்தாய்வு நடப்பது கோயம்புத்தூரில் என்ற விவரத்தைக் கூறியிருக்கி…
-
- 1 reply
- 1k views
-
-
இந்தச் சுவடுகளின் பின்னால் - அல்லையூர்சி.விஜயன் (இத்தாலி) அவளைப் பார்த்தால் யாரெனத் தோன்றும்! அவளுக்கு வயது பத்து. பார்த்தால் கண்கள் ஏமாந்துதான் விடுகின்றது! உணர்ச்சிகளின் கூட்டு மனித வடிவம். அப்படியாயின் அவள் யார்? வண்ணத்துப் பூச்சியின் காலங்கள் போலவே வாழவேண்டிய வயது! இந்த வாழ்க்கைக்கு யார் பொறுப்பு? வீதியிலுள்ள குப்பை கூளங்களையெல்லாம்...... துருவித் துருவி பார்க்கிறாளே! இவள் மனதை யார் துருவுவார்? இவளின்று சோகங்களுக்குச் சொந்தக்காரி...... ஏக்கங்களுக்கு எஜமானி. இவள் வெளிச்சங்களை நிராகரித்தவள் அல்ல...... வெளிச்சம்தான் இவளை நிராகரித்தது! 'மனதுக்கும், நினைவுக்கும் ஒரே பாதை!" நம்புகின்றீர்களா? காற்று வழி வரும் வாசம் மாதிரி..... கால் தூண்டும் இடமெல்லாம் இவளைக் காணலாம். பசிய…
-
- 0 replies
- 1k views
-