வேரும் விழுதும்
கலைகள் | கலைஞர்கள்
வேரும் விழுதும் பகுதியில் கலைகள், கலைஞர்கள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் கலைகள், கலைஞர்கள் பற்றிய அவசியமான கட்டுரைகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
இசை சம்பந்தமான பதிவுகள் "இலக்கியமும் இசையும்" என்ற புதிய பகுதியிலேயே இணைக்கப்படல்வேண்டும்.
389 topics in this forum
-
வானவில் பெண்கள்: ஊரடங்கிலும் அடங்காத கலைச் சேவை வானவில் பெண்கள்: ஊரடங்கிலும் அடங்காத கலைச் சேவை க்ருஷ்ணி அலை ஓய்ந்த பிறகு கடலில் இறங்கலாம் என்று நினைப்பதைப் போன்றதுதான் கரோனா நோய்த்தொற்று முடிவுக்கு வரும்வரை நம் பணிகளை ஒத்திப்போடுவதும். எதையும் எதிர்கொள்ளும் சூழலும் கொஞ்சம் சமயோசிதமும் இருந்தால் நெருக்கடி காலத்தில்கூடச் செயலாற்ற முடியும் என்கிறார் ஓவியர் சத்யா கௌதமன். தான் அறிந்த கலையை விழிப்புணர்வு ஏற்படுத்தும் கருவியாகப் பயன்படுத்துவதுடன் தன்னால் இயன்ற அளவுக்குச் சேவை செய்வதற்கான வாய்ப்பாகவும் இதை இவர் பயன்படுத்திவருகிறார் சிங்கப்பூரில் வசித்துவரும் சத்யா, கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்தவர். அப்பா எல்.ஐ.சி. நிறுவனத்தில் பண…
-
- 0 replies
- 1.1k views
-
-
கனடிய தமிழ் பாடகியும் தமிழ் திரையுலகில் பாடகியாக அறிமுகமாகியுள்ளவருமான ஐஸ்வர்யா சந்துருவுடனான ஒரு சந்திப்பு.
-
- 2 replies
- 1.1k views
-
-
அது 80 களின் நடுப்பகுதி, இளைஞானி இளையராஜா ராஜா உச்சத்தில் இருந்த காலம். அவரைப்போலவே அவரது இசைக்கலைஞர்களும். மணிரத்னம் அப்போது தனது தனித்துவத்தைக் காட்டத் தொடங்கியிருக்கவில்லை . ஆனால் அவரால் ராஜாவிடம் அருமையான பாடல்களைத் தனது படங்களுக்கு வாங்கிக் கொள்ளும் திறமை அப்போதே இருந்தது. அப்போது அவர் ஒரு படத்தை இயக்கியிருந்தார். அதில் இழந்த காதலியை நினைத்து நாயகன் பாடுவதாக ஒரு காட்சி. ராஜா மணிரத்னத்தின் எதிர்பார்ப்பைப் புரிந்து கொண்டு இதயத்தின் அடியிலிருந்து வெளிப்படும் மெட்டொன்றைப் போட, பாடலும் எழுதப்பட்டாயிற்று. அடுத்த நாள் பிரசாத் ஸ்டூடியோவில் பாடலின் ஒலிப்பதிவு என்று ராஜாவின் உதவியாளர் இசைக்கலைஞர்களுக்கு அறிவித்திருந்தார். அனேகமான பாடல் பதிவுகளுக்கு நான்கு தொடக்கம் 6 மணித்த…
-
- 0 replies
- 1.1k views
-
-
சூரியனோடு பேசுதல் இன்று காலை கனடாவி வாழும் கவிஞன் திருமாவளவனுடன் முகநூலுல் அளவளாவியபோது நேற்று உங்கள் கவிதை தொகுப்பு சூரியனோடு பேசுதல் கேட்டு செல்லத்துரை வந்தான். மீண்டும் அந்த தொகுப்பை வசித்தேன் என்றார். 29 வருடங்களுக்குப்பிறகு எனது முதல் தொகுப்பு இப்பவும் வாசிக்கப்படுகிறது என்பது வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. நமக்கென்றொரு புல்வெளி எனது முதலாவது கவிதைத் தொகுப்பு. அது 1986ல் நான் கோவையில் தலைமறைவாய் இருந்தபோது என் பாதுகாப்புக் கருதி அவசரம் அவசரமாக அட்டைப் படமாக என் போட்டோவுடன்வெளியிடப் பட்ட தொகுப்பு. அதனை தோழர் ஜமுனா ராஜேந்திரனும் நண்பர்களும் வெளியிட்டார்கள். அது என் சுயபாதுகாப்புக்கான சரியான திட்டமிடலாக அமைந்தது. அது உமாமகேஸ்வரனோடு முரண்பாடுகள் முற்றி இரு…
-
- 2 replies
- 1k views
-
-
நாம் ஈழத்தை கோருவதற்கு வலுவான இரண்டு காரணங்கள் அல்லது ஆதாரங்கள் அல்லது நியாயங்கள் உள்ளன. ஒன்று ஈழம் தமிழர்களின் பூர்வீக நாடு என்ற வரலாறு. மற்றையது எமக்கு எதிரான இன அழிப்பும் நில அபகரிப்பும். காற்றுவெளி மின் இதழுக்காக தீபச்செல்வன் வழங்கிய நேர்காணல் இது. http://www.yaavarum.com/archives/2323
-
- 0 replies
- 1k views
-
-
ஐஸ்வர்யா அசுர வாத்தியமான நாகஸ்வரத்துக்கு இணையான லய வாத்தியம் தவில். எந்த ஒலிபெருக்கியின் துணையும் இல்லாமல் இடியைப் போல் ஒலிக்கக் கூடிய வாத்தியம். ஆண்கள் மட்டுமே கையாளத் தகுந்த இந்த வாத்தியத்தை அரிதாகக் கையில் எடுத்து, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புஷ்பராணி திருச்செல்வம் புகழ்பெற்ற பெண் தவில் கலைஞராக மிளிர்ந்திருக்கிறார். இவருக்கு அடுத்துத் தவில் வாசிப்பில் சுடர்விட்டுக் கொண்டிருப்பவர், பெங்களூரில் வசிக்கும் ஐஸ்வர்யா நந்தகோபாலா. தந்தை ராஜகோபாலிடம்தான் ஐஸ்வர்யா தவில் கற்றுக்கொண்டிருக்கிறார். ஏறக்குறைய 250 பேருக்குத் தவில் வாசிக்கக் கற்றுக் கொடுத்த ராஜகோபால், தன் மகள் ஐஸ்வர்யாவுக்கு முதலில் தவில் வாசிக்கக் கற்றுக் கொடுக்கவில்லை. தவிலையே தொடக்கூடாது என்று கண்டிப்பாகச் சொல்லியிர…
-
- 0 replies
- 1k views
-
-
குட்டி ரேவதி சந்திப்பு – பிரிவினை கோஷங்களும் முற்போக்கு அரசியலும் ரா.கிரிதரன் கடந்த ஜூலை மாதம் 20 ஆம் தேதி, லண்டன் தமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம் அமைப்பின் அழைப்பின் பெயரில், கவிஞர் குட்டி ரேவதி `பெண் கவிதையும் சமூக மாற்றமும்` என்ற தலைப்பில் உரையாடினார். கவிஞர் மாதுமை வழிப்படுத்திய இக்கூட்டத்தில், எழுத்தாளர் யமுனா ராஜேந்திரன் மற்றும் பல இலங்கைத் தமிழ் வாசகர்கள் கலந்துகொண்டனர். வரலாற்றுப் பிரக்ஞை என்றால் வீசை என்ன விலை, நம்மைச் சுற்றியிருக்கும் அதிகார மதங்களின் உலகளாவிய அழித்தொழித்தல் பற்றிய அறியாமை, இந்தியப் பண்பாடு மற்றும் மதச் சிந்தனைகள் பற்றிய அவதூறு, `முற்போக்கு அறிவுஜீவி` எனும் பட்டத்துடன் பன்முக இந்திய மரபு பற்றிய அற்பத்தனமான இழிச்சொற்கள், `மூத்தகுடிக்…
-
- 1 reply
- 1k views
-
-
லதா தீதி (அக்கா) என்று பலராலும் செல்லமாக அழைக்கப்படும் லதா மங்கேஷ்கர், உலகிலேயே மிக அதிக எண்ணிக்கையில் பாடல்களைப் பாடியிருக்கிறார். அதற்காக கின்னஸ் புத்தகத்திலும் இடம்பிடித்திருக்கிறார். லதா மங்கேஷ்கர் என்னும் இந்த இசைக்குயில், 1942-ல் தன் கானத்தை இசைக்கத் தொடங்கியது. கிட்டத்தட்ட எழுபது வருடங்களுக்கும் மேலாகத் தெவிட்டாத தன் தேன் குரலால் ரசிகர்களைத் தன் இசையின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பெருமையும் லதா மங்கேஷ்கருக்கு உண்டு. எப்போதும் நிற்காத நதியாக, உட்காராத காற்றாகப் பாடலையே தன் சுவாசமாகக் கொண்டு இயங்கிவருகிறார். சுமார் 980க்கும் அதிகமான இந்திப் படங்களில் பாடி மாபெரும் சாதனை நிகழ்த்தியுள்ளார். இந்த வயதிலும் இன்னிசை வழங்கிவருகிறார். இவர், ஆஷா போஸ்லே, ஹ்ருதயநாத் மங்கேஷ…
-
- 0 replies
- 1k views
-
-
-
- 0 replies
- 1k views
-
-
காடோடி, உலகின் மிகப் பெரிய ஆதிக் காடுகளில் ஒன்றான போர்னியோ காட்டின் அழிவை, காட்டழிப்பின் அரசியலை அழுத்தமான குரலில் சொல்லும் நாவல். இந்த நாவலைப் படித்து முடிப்பவர்கள் ஒரே ஒரு மரத்தை வெட்ட நினைத்தாலும், அவர்களுடைய மனசு வலிக்கும். இந்நாவலை எழுதியுள்ள நன்னிலத்தைச் சேர்ந்த சூழலியலாளர் நக்கீரன், உத்வேகம் பெற்றுவரும் பசுமை இலக்கியத்தின் முதன்மை எழுத்தாளர்களில் ஒருவர். கவிஞர், குழந்தை இலக்கியவாதி, பேச்சாளர் என பல முகங்கள் கொண்ட இவருடைய முதல் நாவல் இது. கவிதை மொழியும் கதைக்கான கூறுகளும் கூடிவந்த புதுமையான சூழலியல் எழுத்து இவருடையது. மூன்றாம் உலக நாடுகளில் கண்ணுக்குத் தெரியாமல் களவாடப்படும் மறைநீர் (Virtual water) போன்ற சூழலியல் கருத்தாக்கங்களை பரவலாக்கியவர். காட்டழிப்பைப் பற்…
-
- 0 replies
- 1k views
-
-
கவிஞர் காசி ஆனந்தன் அவர்களின் நேர்காணல் சிறகு சிறப்பு நிருபர் கேள்வி: உங்கள் பிறப்பு, இளமைக்காலம், பூர்வீகம் பற்றி கூறுங்கள்? பதில்: நான் தமிழீழத்தின் தென்பகுதியில் மீன்பாடும் தேன்நாடு என்று அழைக்கப்படுகின்ற மட்டக்களப்பு பகுதியில் நாவற்குடா என்னும் சிற்றூரில் பிறந்தேன். சித்திரை மாதம் 4ம் நாள் 1938ம் ஆண்டு நான் பிறந்தேன். 4.4.1938 என்னுடைய பிறந்த நாள். நாவற்குடா என்னுடைய அம்மாவினுடைய ஊர். அதே மட்டக்களப்பில் அமிர்தகலி எனது தந்தையாருடைய ஊர். அங்கேதான் நான் வளர்ந்தேன். இந்த அமிர்தகலி என்கிற சிற்றூரையும், நாவற்குடா என்கிற சிற்றூரையும் இணைப்பதுபோல, மீன்கள் பாடுவதாகச் சொல்லப்படும் அந்த அழகிய நீல உப்பேரி, 15 கல் தொலைவுக்கு நீண்டு நெடிதாகிக் கிடக்கிறது.…
-
- 1 reply
- 1k views
-
-
ஷேக்ஸ்பியர் மனைவியின் வீடு தோட்டத்தில் தாகூர் ஷேக்ஸ்பியர் வீட்டின் உட்புறம் பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த ஒரு கவிஞனால் 21-ம் நூற்றாண்டில் என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்திவிட முடியும்? அந்தக் கவிஞன் ஷேக்ஸ்பியராக இருந்தால், தான் பிறந்து, வாழ்ந்த சிறு நகரத்தை வர்த்தகமும் வரலாறும் சந்திக்கும் புள்ளியாக மாற்ற முடியும். ஏவான் நதிக்கரையின் மீது அமைந்துள்ள ஸ்ட்ராட்ஃபோர்ட் அப்பான் ஏவான் என்ற சிறுநகரத்தின் பொருளாதாரத்திற்குப் பெருமளவில் பங்களித்துக்கொண்டிருப்பது ஷேக்ஸ்பியர்தான். இலக்கிய ஆர்வலர்களின் மெக்கா என்று அழைக்கப்படும் ஸ்ட்ராட்ஃபோர்ட் அப்பான் ஏவானில் ஷேக்ஸ்பியர் பிறந்த வீடு, திருமணத்திற்கு முன்பு அவரது மனைவி ஆன் ஹாத்வே வாழ்ந்த வீடு, ஷேக்ஸ்பியரின் ம…
-
- 0 replies
- 1k views
-
-
-
வன்முறைக்குட்பட்ட பெண்ணை திருமணம் செய்கின்ற பக்குவம் நம் சமுதாயத்தில் எத்தனை பேருக்குண்டு? (கேஷாயினி எட்மண்ட், மீரா, இலங்கை) இலங்கையின் மீன் பாடும் தேன் நாடாம் மட்டக்கிளப்பைச் சேர்ந்த கேஷாயினி எட்மண்ட் "மீரா" என்ற புனைபெயரில் தமிழ் இலக்கியவெளியில் அறிமுகமானவர். , யங் ஏசியா ஊடகநிறுவனத்தில் தயாரிப்பாளராக பணியாற்றிய மீரா தற்போது பெண்ணியம் இணையத்தின் ஆசிரியர்களுள் ஒருவராகவும், சுதந்திர ஊடகவியலாளராகவும் பணியாற்றி வருகின்றார். திரைப்பட மற்றும் ஊடக கல்லூரியில் பட்டப்படிப்பினை பூர்த்தி செய்துள்ள மீரா பல்கலைக்கழகத்தில் கட்டடப்பொறியியல் மாணவியாக கல்விகற்று வருகின்றார். இசை , கவிதை எழுதுதல் சமூக நோக்கு ,ஊடகம் போன்ற துறைகளில் செயல்பட்டு வரும் பன்முக ஆற்றல் உள்…
-
- 1 reply
- 1k views
-
-
அன்னக்கிளியும் கவிக்குயிலும் பத்ரகாளியும் வெளிவந்ததற்குப் பிறகான காலகட்டம் அது. இளையராஜா என்னும் மாய மகுடிக்காரர் தமிழ் சினிமாவின் இசை ரசிகர்களை, பாம்புகளாக ஆட்டி வைத்துக்கொண்டிருந்த தருணம். அதுவரை நாங்கள் பார்த்த இயற்கைக் காட்சிகளுக்கு வயலின் கோர்வையால் வண்ணமேற்றி, எங்கள் கற்பனையை விரித்த இசைக் கலைஞனின் வசந்த காலம். நான் என்பது அப்போது நான் மட்டுமல்ல. முருகேசன், வாசு, பாலு, ஞானசேகரன், கார்த்தி, சேகர் என்ற நண்பர் குழாம். தினமும் எல்லோரும், தளத்தெரு என்ற எங்கள் கிராமத்திலிருந்து, இரண்டு கி.மீ. தூரத்திலிருந்த காரைக்காலுக்கு சைக்கிள் களில் பயணிப்போம். இப்போதைய பழைய பேருந்து நிலையத்துக்கு எதிரே இருந்த ஆறுமுகம் ஸ்வீட் ஸ்டால்தான் எங்களுக்குப் பிடித்தமான இலவச இசையரங்கம். கடையின…
-
- 0 replies
- 1k views
-
-
சந்திவெளிக் கலைஞர்களின் கொரோனா கூத்து–சில குறிப்புக்கள்.. ஒரு இனமானது காலம் கடந்தும் வாழ்ந்து கொண்டிருக்கின்றது என்றால் அவ் இனத்தின் பண்பாட்டுப் பாரம்பரியங்கள்; தொடர்ந்து சந்ததி ஈர்ப்பின் ஊடாக கடத்தப்பட்டு அது பேணப்பட்டு வருகின்றமையே காரணமாகும். தமிழர்கள் மிக நீண்ட காலங்களாக வாழ்ந்து வருபவர்கள். தனித்துவம் வாய்ந்த பண்பாட்டை கொண்டவர்கள்.மொழி, இலக்கியம்,கலை போன்ற துறைகளில் கிறிஸ்துவுக்கு முந்திய நூற்றாண்டுகளிலேயே உயர்நிலை எட்டி இருந்தவர்கள். இயல், இசை,நாடகம் எனும் முத்தமிழில் ஒன்றான நாடகத்தை முன்னிறுத்தி தொன்று தொட்டு தமிழர் நாடககலையில் ஈடுபட்டுவருகின்றனர். தொல்காப்பியம்,சிலப்பதிகாரம் ஆகிய நூல்களில் நாடகம் பற்றிய குறிப்புக்கள் காணப்படுவதினை நாம் வரலாற்று ஆத…
-
- 0 replies
- 995 views
-
-
“நீங்கள் என்மீது காட்டுகின்ற அன்புக்கு எனக்கு கிடைக்கும் இந்த விருதை உங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்”. என்றார் டொமினிக் ஜீவா. -மல்லியப்புசந்தி திலகர்- ஈழத்து தமிழ் சிற்றிதழ் வரலாற்றில் 401 இதழ்களை தொடர்ச்சியாக வெளியிட்டு சாதனை படைத்த மல்லிகை டொமினிக் ஜீவா அவர்களுக்கு கனேடிய தமிழ் இலக்கிய தோட்டம் வழங்கிய சிறப்பு இயல்விருது வழங்கும் விழா கடந்த வியாழன் 17-07-2014 அன்று கொழும்புத் தமிழச்சங்கத்தில் இடம்பெற்றது. பேராசிரியர் எஸ்தில்லைநாதன் தலைமையில் நடைபெற்ற விழாவில் பெருந்திரளான இலக்கிய ஆர்வலர்களும் ஜீவாவின் அபிமானிகளும் கலந்து சிறப்பித்தனர். விளிம்பு நிலை சமூகத்தில் இருந்து எழுந்த ஜீவாவின் இலக்கிய பிரவேசம் அதுவரை இருந்து வந்த ஈழத்து தமிழ் இலக்கிய பாரம்பரியத்து…
-
- 1 reply
- 992 views
-
-
http://www.thesun.co.uk/sol/homepage/showbiz/bizarre/4118447/MIAlife-of-the-girl-in-brthe-Super-Bowl-storm.html
-
- 0 replies
- 989 views
-
-
-
- 4 replies
- 981 views
-
-
வாசிப்பும், யோசிப்பும் 107 : ஜெயபாலனின் 'கள்ளிப்பலகையும், கண்ணீர்த்துளிகளும் (மேலும் சில முகநூல் குறிப்புகள்).' Wednesday, 12 August 2015 04:14 - வ.ந.கிரிதரன் - எழுத்தாளர் வ.ஐ.ச. ஜெயபாலனை மீண்டும் முகநூலில் சந்தித்தபொழுது எழுந்த நினைவலைகளின் பதிவிது. கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனென்று பலராலும் அறியப்படுபவர்; அண்மைக்காலமாக இந்திய மத்திய அரசின் விருதுபெற்ற நடிகராகவும் 'ஆடுகளம்' ஜெயபாலன் என்றும் அறியப்படுகின்றார். கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனென்று அறியப்பட்டாலும் , இலக்கியத்தின் பல்துறைகளிலும் தன் ஆளுமையைப்பதித்தவர், பதித்து வருபவர் இவர் என்பதால் எழுத்தாளர் வ.ஐ.ச.ஜெயபாலன் என்று இவரை அழைப்பதே பொருத்தமானதென்று படுகிறது. இன்று சிறிது முரட்டுத்தனம் மிக்கவராகவும், சிறந்த கவிஞர்களிலொ…
-
- 0 replies
- 968 views
-
-
தனிநாயகம் அடிகளார் & நூற்றாண்டு நினைவுக் கருத்தரங்கு கிருஷ்ண பிரபு லயோலா கல்லூரியும் காலச்சுவடு பதிப்பகமும் இணைந்து கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி பேராசிரியர் சேவியர் தனிநாயகம் அடிகளார் – 100 நினைவுக் கருத்தரங்கு என்ற முழுநாள் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தன. அதனை முன்னிட்டுப் பல்வேறு அமர்வுகளில், தனிநாயகம் அடிகளார் தமிழ் மொழிக்கு ஆற்றிய அரும்பணிகளைக் குறிப்பிட்டுக் கல்விப்புலத்தில் இயங்கும் ஆய்வாளர்கள் பலர் கட்டுரைகள் வாசித்தார்கள். “தனது முப்பதாவது வயதில் தமிழ் படிக்க ஆரம்பித்திருந்தாலும், தமிழ்மொழியின் செழுமைக்கும் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கும் தனிநாயகம் அடிகளார் ஆற்றிய தமிழ்ப்பணி முக்கியத்துவம் வாய்ந்தது. எனினும் தனிநாயகம் அடிகளார் பணிகளைச் சுட்டும் ஆளுமைச் சித்தி…
-
- 0 replies
- 958 views
-
-
ஈழத்துப் பாடல்கள் - பகுதி ஒன்று எழுபதுகளில் இலங்கையில் இருந்து ஒலித்த தமிழ் பொப்பிசை பாடல்கள் அந்த நாட்டின் கடல்களைக் கடந்தும் அந்த சின்னத் தீவை திரும்பிப் பார்க்க வைத்தவை. துள்ளல் இசை என்றால் இலங்கை இசைதான் என்ற அளவுக்கு அவை பலரையும் ஈர்த்திருந்தன. ஆனால், மேற்கத்தை பாணி இசையாக கருதப்படும் பொப் இசையை மையமாகக் கொண்ட இப்படியான பாடல்கள் மாத்திரந்தான் இலங்கை தமிழர்களின் இசையின் அடையாளம் என்று சொல்லிவிட முடியாது. அங்கு வாழும் தமிழர்களின் இசை முயற்சிகள் என்பன அவற்றையும் கடந்து அவர்களின் வாழ்வின் பல அம்சங்களோடும் கலந்தவை. அவர்களின் தெய்வ வழிபாடுகளை அடிப்படையாகக் கொண்ட சடங்குப் பாடல்கள் அவற்றில் ஓரளவுக்கு மூத்தவை, அதேவேளை…
-
- 1 reply
- 956 views
-
-
தன்னறம் இலக்கிய விருது – 2024 jeyamohanNovember 10, 2024 ஷோபா சக்திக்கு வாழ்த்துக்கள் ஜெ எண்பதுகளின் காலகட்டத்திலேயே எழுதத் தொடங்கிய எழுத்தாளர் ஷோபா சக்தி, அப்போதிருந்து இன்று வரையிலான நாற்பதாண்டு காலகட்டத்தில் சுய வாழ்வு அலைக்கழிக்கபட்ட காலங்களின் இருள் பாதை நெடுகிலும் வாழவனுபவங்களைக் கதைகளாக்கி விதைத்து வருபவர். எழுத்தைக் கடவுளாகவும் சாத்தானாகவும் நம்புகிறவார். சென்று சேர்ந்த எல்லா நிலங்களிலும் அவர் சுமந்தலையும் நிலத்தின் ரத்தம் செறித்தக் கதைகளை சொல்லி வருகிறார். தொண்ணூறுகளின் காலகட்டத்தில் இருந்து குறிப்பிடத் தகுந்த பங்களிப்பையும், தீவிரமான செயல்பாடுகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு புனைவுப் பரப்பில் தனக்குரிய தனி பயணத்தை கொண்டிருப்பவர். அ…
-
-
- 6 replies
- 956 views
-
-
பூமணி - கி.ராஜநாராயணன் - வண்ணநிலவன் எண்பதுகளின் தொடக்கத்தில் இலக்கியக் கோட்டி பிடித்து எழுத்தாளராவதைத் தவிர வேறு மார்க்கமேயில்லை என்று நாங்கள் (நான், நாறும்பூநாதன், சாரதி, திடவைபொன்னுச்சாமி, அப்பணசாமி) கோவில்பட்டியில் உள்ள காந்தி மைதானத்தின் பொட்டல் வெயிலில் சத்தியம் செய்திருந்தோம். புத்தகங்களைத் தின்று தீர்த்தோம். அதுவரை தெரிந்த உலகமே இப்போது வேறொன்றாய்த் தெரிந்தது. உலக, இந்திய, தமிழ், எழுத்தாளர்களோடு ஏற்பட்ட பரிச்சயம் எங்கள் நடையையே மாற்றிவிட்டது. தரையில் கால் பாவியதாக நினைவில்லை. நாங்கள் வேறு பிறவிகள் என்ற நினைப்பு. பாரதி, புதுமைப்பித்தன், மௌனி, கு. அழகிரிசாமி, கு.ப.ரா., சுந்தர ராமசாமி, கு. சின்னப்ப பாரதி, டி. செல்வராஜ், கி. ராஜநாராயணன், வண்ணதாசன், வண்ணநிலவன், பூம…
-
- 1 reply
- 955 views
-
-
என்னை கவர்ந்த சிறந்த ஆளுமை மேதகு. வே. பிரபாகரன் -----மூத்த ஊடகவிலாளர் B.h. Abdul Hameed-
-
- 1 reply
- 954 views
-