வேரும் விழுதும்
கலைகள் | கலைஞர்கள்
வேரும் விழுதும் பகுதியில் கலைகள், கலைஞர்கள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் கலைகள், கலைஞர்கள் பற்றிய அவசியமான கட்டுரைகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
இசை சம்பந்தமான பதிவுகள் "இலக்கியமும் இசையும்" என்ற புதிய பகுதியிலேயே இணைக்கப்படல்வேண்டும்.
389 topics in this forum
-
கலைஞனைப் புரிந்துகொள்ளல் May 2, 2014 at 10:22pm ஜா. தீபாவின் மொழிபெயர்ப்பில், உலகத் திரைப்படநெறியாளர் பதினைந்து பேரின் நேர்காணல்களைக் கொண்டதான மேதைகளின் குரல்கள் நூலிலிருந்து, நெறியாளர் ஐவரின் கருத்துகளின் சில பகுதிகளை இங்கு தருகிறேன். படைப்பாளிகளின் நேர்காணல்களை நான் எப்போதும் விருப்பத்துடன்படிப்பது வழக்கம்; அவர்களின் கருத்துலகையும், படைப்புச் செயற்பாடையும் புரிந்துகொள்வதற்குத் துணை செய்பவை அவை! சத்யஜித் ரே (இந்தியா). 1. உங்கள் படத்தின் பெண் கதாபாத்திரங்கள்வலுவானவர்களாக இருக்கின்றனர். வங்காளத்தினுடைய சமூக வரலாற்றின் பாதிப்பா இது? · நான் எந்தக் கதையைப் படமாக எடுக்கிறேனோ அந்தப்படத்தின் எழுத்தாளரின் ‘பார்வை’யைத்தான் ந…
-
- 0 replies
- 681 views
-
-
எழுத்தாளர் ஜெயமோகனின் படைப்புலகம் by அரவின் குமார் நூற்றாண்டு வரலாறு கொண்ட நவீனத்தமிழிலக்கிய வரலாற்றில் எண்ணிக்கையாலும் தரத்தாலும் மேம்பட்ட பல படைப்புகளின் வாயிலாக மறுக்கமுடியாத இடத்தைப் பெற்றவர் எழுத்தாளர் ஜெயமோகன். எழுத்தாளர் ஜெயமோகனின் முதன்மையான இலக்கியப் பங்களிப்பாக அவரின் புனைவுலகம், இலக்கிய விமர்சனக் கட்டுரைகள், இந்திய ஞான மரபு கட்டுரைகள், சமூகக்கட்டுரைகள் ஆகியவற்றுடன் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமைப்பின் வாயிலாக முன்னெடுத்து வரும் இலக்கிய, அறிவுலகச் செயற்பாடுகளைக் குறிப்பிடலாம். 1991 ஆம் ஆண்டு ஜெயமோகனின் முதலாவது நாவலான ‘ரப்பர்’ நாவல் வெளிவந்தது. ஜெயமோகனின் நாவல்கள் ஆழமான தத்துவ விசாரங்களையும் அறம் சார்ந்த விவாதங்களையும் முன்வைக்கக்கூடியவை. …
-
- 1 reply
- 669 views
-
-
அம்மா என்றழைத்தாலும்... பெண் இனத்தின் ஒரு பிம்பம் பீடத்தில்- இன்னொன்று மரக்கிளையில். இரண்டுக்கும் சம்பந்தம் உண்டா? ஏன் இந்த முரண்பாடு? சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் அளிக்கப்படும் 'மைல்ஸ் ஃப்ராங்க்ளின் விருது' என்ற மிகச் சிறந்த இலக்கிய விருது, ஆங்கிலேய தந்தைக்கும் ஆஸ்திரேலிய தாய்க்கும் பிறந்த பெண் எழுத்தாளர் ஈவி வைல்டுக்கு அளிக்கப்பட்டது. விருது கிடைத்ததால் ஏற்பட்ட சந்தோஷத்தைவிட இலக்கிய உலகத்தில் இருக்கும் யதார்த்தத்தால் எழுந்த சோகம் தான் அவருக்கு அதிகம். “என்னுடைய வாழ்நாளில், ஒரு ஆண் எழுத்தாளரின் எழுத்து தீவிரமாக எடுத்துக்கொள்ளப் படுவதுபோல எனது எழுத்து நினைக்கப்படும் என்பதை என்னால் கற்பனைகூட செய்ய முடியாது.” என்கிறார். “நான் கர்ப்பமாக இருக்கிறேன். எல்லோரும் என்ன …
-
- 0 replies
- 668 views
-
-
மாற்றுக் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர் அண்ணா. அறிஞர் அண்ணா மறைந்து 45 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், அரசியலில் அவர் காட்டிய நெறிமுறைகள் முன்பு எப்போதையும்விட இன்றுதான் மிகவும் அவசியமாக இருக்கின்றன. முன்பைவிட இன்றுதான் அண்ணா மிகவும் தேவைப்படுகிறார். 1931-ல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயிலும் போது, அவர் பெற்ற அரசியல் உணர்வும், கையாண்ட தன்னிகரற்ற தமிழ், ஆங்கில மொழித் திறனும், ஆளுமை யும் வாழ்நாள் இறுதிவரை ஒளிர்ந்தன. கல்லூரியில் நடைபெற்ற ஆங்கிலக் கட்டுரைப் போட்டியில் ‘மாஸ் கோவில் கொந்தளிக்கும் மக்கள் அணிவகுப்பு’ என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரை ஒரு இலக்கியமாகவே திகழ்கிறது. அந்தக் கட்டுரையில், ‘‘மூலதனம் இன்றியமை யாதது. ஆனால், முதலாளித்துவம் அப்படியன்று. மூலதனம…
-
- 0 replies
- 662 views
-
-
தொண்ணூறுகளின் தொடக்கத்தில் தமிழ் உரைநடையிலும் சிறுகதை களிலும் பெரும் மாற்றத்தை உருவாக்கிய எழுத்தாளர்களில் ஒருவர் எஸ். ராம கிருஷ்ணன். உலக இலக்கியங்கள், சர்வதேசத் திரைப்படம் ஆகியவற்றின் மீது தமிழ் சமூகத்தின் கவனத்தைக் குவித்ததில் எஸ்.ராமகிருஷ்ணனுக்குப் பெரும் பங்கு உண்டு. மகாபாரதத்தை அடிப்படையாக வைத்து இவர் எழுதிய ‘உப பாண்டவம்’ இவரது சிறந்த படைப்புகளில் ஒன்று. இவரது சமீபத்திய நாவல் ‘சஞ்சாரம்’. நாவல், சிறுகதை, சினிமா, பத்திரிகை எழுத்து எனப் பல முகங்களைக் கொண்ட எஸ். ராமகிருஷ்ணனிடம் ‘தி இந்து’ சித்திரை மலருக்காக நடத்திய நேர்காணலின் சுருக்கப்பட்ட வடிவம் இது இன்றுள்ள சிறுகதைகளை எப்படிப் பார்க்கிறீர்கள்… தமிழுக்கென ஒரு கதை சொல்லும் முறை இருக்கிறது. தமிழில் உள்ள அளவுக்கு வேறு…
-
- 0 replies
- 650 views
-
-
-அ.கலைச்செல்வன், சிட்னி, அவுஸ்திரேலியா அன்புள்ள ரஜினிகாந்திற்காக ராஜா அமைத்த " முத்துமணிச் சுடரே … வா.". `இந்தப்பாட்டின் தாள வாத்தியமான Triple Congo வினை வாசித்தவர் யாரென்று எவருக்காவது தெரியுமா ? அதை வாசித்தவர்தான் இசைஞானியின் முதல் ரசிகன்.அவரின் பெயர்.... அவர் ஒரு கிராமத்தவர். நுண்ணிய இசையறிவு , இயற்கை அவருக்கு வழங்கியிருந்த கொடை. அவருடன் இரண்டு சகோதரிகளும் மூன்று சகோதரர்களும் கூடப்பிறதிருந்தார்கள். அவருக்கு நேரே மூத்த சகோதரருக்கு தனது தம்பியிடம் இயற்கையாகவே குடிகொண்டிருக்கும் இசைத்திறமையைப் பற்றி நன்கு தெரிந்திருந்தது. இவ்வளவு திறமை தனது தம்பிக்கு இருந்தும் அந்தத் திறமை தன்னால் புரிந்து கொள்ளப் பட்டது போல உலகால் புரிந்துகொள்ளப் படுவதற்கான வாய்ப்பு கிடைக்கவ…
-
- 0 replies
- 647 views
-
-
கவிஞர் மேமன்கவிக்கு இலங்கையில் தேசிய கலாபூஷண விருது! நவம்பர் 10, 2021 –முருகபூபதி இலங்கை அரசின் புத்தசாசன, சமய கலாசார அலுவல்கள் அமைச்சு, கலாசார அலுவல்கள் திணைக்களம், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், கிறிஸ்துவ மத அலுவல்கள் திணைக்களம் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அனைத்தும் ஒன்றிணைந்து வழங்கும் தேசிய கலாபூஷணம் விருது இம்முறை எமது இலக்கிய நண்பர் மேமன்கவிக்கும் கிடைத்திருக்கிறது. எம்முடன் நீண்ட நெடுங்காலமாக இணைந்து பயணித்துவரும் இலக்கிய நண்பர் மேமன்கவியை வாழ்த்தியவாறு இந்தப்பதிவைத் தொடருகின்றேன். தாம்பேசும் தாய்மொழிக்கு எழுத்தில் வரிவடிவம் இல்லாத இலட்சசோப இலட்சம் மக்கள் போன்று, இவர் பேசும் மேமன் மொழிக்கும் வரிவடி…
-
- 0 replies
- 644 views
-
-
எழுத்தாளர் ஜெயமோகன்| கோப்புப் படம். எண்பதுகளின் இறுதியில் எழுதத் தொடங்கிய ஜெயமோகன் தமிழ் இலக்கிய உலகின் பிரதான ஆளுமைகளில் ஒருவர். நாவல், சிறுகதை, விமர்சனம், தத்துவம், வரலாறு எனப் பல தளங்களில் இயங்கும் இவர், பெரும் விவாதங்களையும் தொடர்ந்து உருவாக்கிவருபவர். தற்போது மகாபாரத இதிகாசத்தை வெண் முரசு என்னும் பொதுத் தலைப்பில் ஒவ்வொரு நாளும் ஒரு அத்தியாயம் எனப் பத்தாண்டுகள் திட்டமிட்டு எழுதத் தொடங்கியிருக்கிறார். மகாபாரதத்தை நாளுக்கொரு அத்தியாயமாக எழுதிவருகிறீர்கள். இதற்கான உந்துதல் எது? மகாபாரதத்தை முழுமையாக எழுதுவது சிறு வயதிலிருந்தே இருந்துவந்த ஒரு கனவு. ஆனால் அதைத் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தேன். ஒரு நாள் காய்ச்சலின் காரணமாக உடல் சோர்ந்திருந்தது. கணிப்பொறியின் முன்னால் உட்க…
-
- 0 replies
- 643 views
-
-
அம்பகாமப் பெருங்காட்டின் போர்க்களத்தில்.நிகழ்வுகளை விபரிக்கின்றது தமிழினி ஜெயக்குமாரனின் கவிதை. யுத்தத்தின் கோர முகத்தை வெளிப்படுத்தும் கவிதை. கவிதையின் ஆரம்பம் நன்றாக வந்திருக்கின்றது. கவிதையின் முதல் பகுதியே முழுக்கவிதையினதும் கூறு பொருளை நிர்ணயித்து விடுகிறது. கவிதை 'போருக்குப் புதல்வரைத் தந்த தாயாக வானம் அழுது கொண்டேயிருந்தது' என்று ஆரம்பமாகின்றது. அம்பகாமப்பெருங்காட்டில் யுத்தம் நடைபெறும் மழை பொழியும் இரவு. மழையை வானத்தாயின் அழுகையாக உவமையாக்கியிருக்கின்றார் கவிஞர். வானத்தாய் ஏன் அழுகின்றாள்? போருக்குத்தன் புதல்வர்களைத்தந்து விட்டதற்காகத்தான் அழுகின்றாள். யுத்தம் நடைபெறும் சமயம் கானகம் வெடியோசையால் அதிர்வுறுகின்றது. அவ்வதிர்வினால் ,மருண்ட யானைக்கூட்டங்கள் குடி பெ…
-
- 0 replies
- 639 views
-
-
வணக்கம் என் நண்பர்களே எமக்கு கிடைத்த முத்துக்களை பற்றி பத்மலிங்கம் ஒரு அருமையான கர்நாடகா சங்கீத முத்து புத்தூரில் பிறந்து எங்களுக்கு பெருமையை தந்த உன்னதமான ஒரு சொத்து http://www.youtube.com/watch?v=1Sts_4UnJxE நன்றி முகனூல்
-
- 0 replies
- 639 views
-
-
"பொங்கும் பூம்புனல்" சுமார் 33 வருடங்களுக்கு முன்பு, ஒலிப்பதிவு செய்யப்பட்டது. கேட்டுப்பாருங்கள்.
-
- 1 reply
- 628 views
-
-
பவளவிழா காணும் பத்மநாப ஐயா: ஓர் அனுபவப் பகிர்வு! ரஞ்சித் ஈழத்து படைப்புலகில் மிகவும் ஆளுமை மிக்க மனிதரான பத்மநாப ஐயா அவர்கள் கடந்த 24ஆம் திகதி தனது 75ஆவது அகவையை நிறைவு செய்துள்ளார். ஈழத்து இலக்கிய உலகில் இலக்கியம், கலை மற்றும் படைப்புலகம் சார்ந்த பத்மநாப ஐயாவின் அளப்பரிய பங்களிப்பை அறியாதவர்கள் எவரும் இருக்கமாட்டார்கள். ஈழத்து தமிழ் இலக்கியத்தின் செழுமைக்கும், வளர்ச்சிக்கும் அயராது தொடர்ந்து தன்னை அர்ப்பணமாக்கியவர் அவர். அந்த வகையில், ஈழத்து தமிழ் இலக்கிய பரப்பில் இருந்து பிரித்துப் பார்க்க முடியாத ஒரு நபராக அவர் இருக்கின்றார். ஆயினும், அவரின் இந்த முகத்துக்கும் அப்பால் அவருடனான அறிமுகம் மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொள்வது அவரின்…
-
- 0 replies
- 628 views
-
-
பத்திரிகையா?ர் நடேசனின் அஞ்சலி தினம் இன்று. இத்துடன் ஐபிசி வானொலி என்னிடம் பெற்ற செவ்வி இணைத்துள்ளேன். * நேர்கானலில் கிழக்கு மாகாணம் மற்றும் வன்னியை புரிந்துகொள்ளுவதே நடேசனுக்குச் செய்யும் உண்மையான அஞ்சலி என்ற கருத்தை வலியுறுத்துகிறேன். * மேலதிகமாக வடகிழக்கு முஸ்லிம் மக்களையும் வடகிழக்கில் புலம்பெயர்ந்து வாழும் மலையக மக்களையும் புரிந்துகொள்ளுவது பற்றியும் சொல்லியிருக்க வேண்டும். விரைவில் முழுமையான ஒரு பதிவை தருவேன்.
-
- 0 replies
- 626 views
-
-
சுமார் நூறு சிறுகதைகளைத் தமிழுக்குக் கொடையாக வழங்கிச் சென்றிருக்கும் புதுமைப்பித்தன் என்ற சொ. விருத்தாசலம் தன் காலத்தின் மிக முக்கியமான அறிவுஜீவிகளுள் ஒருவராக விளங்கியவர். உலகச் சிறுகதைகளைத் தமிழாக்கித் தந்தவர். டி.எஸ். சொக்கலிங்கத்துடன் சேர்ந்து தினமணியிலும் தினசரியிலும் பத்திரிகையாளராகப் பணியாற்றிய அவர், திரைக்கதை எழுதுவதிலும் ஆர்வம்காட்டினார். குடும்பம், சமூகம், நாட்டு நடப்பு இவற்றிலிருந்து விலகிய தனிமனிதனின் அக உலகப் பயணங்களில் சஞ்சாரங்களில், வீணை மீட்டல்போல, தியான நிலைகள்போலச் சிறுகதைகளை வடித்திருப்பவர் மௌனி. மௌனியைச் சிறுகதையின் திருமூலர் என்று பாராட்டிய புதுமைப்பித்தன், சமூக நிகழ்வுப் போக்குகளைப் பரிசீலிப்பவராக அவலங்கள் கண்டு சீற்றம்கொள்பவராக, தனிமனிதனின் சிக்கல்க…
-
- 0 replies
- 621 views
-
-
16 வயதுக்குள் 300இற்கும் அதிகமான நிகழ்ச்சிகளில் நாதஸ்வரம் வாசித்த அரிஹரசுதன் (சிலாபம் திண்ணனூரான்) “உங்களிடம் இருக்கும் சக்தியை முயற்சியின் ஊடாக செயல்படுத்தினால் அது முற்றுப்பெறும். அந்த சக்திக்கு அடிப்படையாக இருப்பது முயற்சியின் மூலக்கூறு. அதையே துணிவு என்கிறோம். துணிவு இருந்தாலே போதும். அதுவே இந்த உலகத்தை சிறிதாகக் காட்டும். தாழ்வு மற்றும் அச்சத்துக்கு தளர்வு கொடுங்கள். அப்போது துணிவு பிறந்துவிடும்” என்கிறார் நாதஸ்வர கலைஞர் என். அரிஹரசுதன். ஒரு திருமண நிகழ்வின் சுதன் நாதஸ்வர இசைக்கருவியை தன் வாயில் வைத்து, தன் இரு கைகளின் விரல்க…
-
- 1 reply
- 615 views
-
-
கனடிய தமிழ் பாடகியும் , தமிழ் திரைப்பட உலகில் பாடகியாக அறிமுகமாகியுள்ள கீத்தியா வர்மன் உடன் ஒரு சந்திப்பு
-
- 0 replies
- 612 views
-
-
பிரான்ஸ் நாட்டில் உள்ள ஒரு சிறிய நகரான கான் நகரில் நடக்கும் இந்தத் திரைப்பட விழாவுக்கு இன்றைக்கு உலகமெங்கும் மிகப் பெரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. கிட்டத்தட்ட ஆஸ்கார் விழாவுக்கு நிகராக கான் திரைப்பட விழா உலக சினிமா ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு களையும் பெற்றுள்ளது. இவ்வளவு பெரிய இந்த விழா உருவானதற்கு ஒரு முக்கியமான அரசியல் பின்னணி உள்ளது. 1932-ல் முசோலினியின் இத்தாலியில் வெனிஸ் நகரத்தில் ஒரு திரைப்பட விழா தொடங்கப்பட்டது. இந்தத் திரைவிழா அந்தக் காலகட்டத்தில் மிகப் பெரிய திரை விழாவாகப் புகழ்பெற்றிருந்தது. வெனிஸ் திரைப்பட விழா விருது அந்நாளைய சினிமா கலைஞர்களின் கனவாக இருந்தது. இந்த விழாவில் பங்கேற்பதை மற்ற நாடுகள் கெளர வமாகக் கருதின. ஆனால் இந்த விழா பிரபலமடைந்த சில நாட்களி…
-
- 0 replies
- 604 views
-
-
ஈழ மண்ணில் பிறந்து, ஆஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்து, பெரும்பான்மை வருடங்களைத் தமிழ்நாட்டில் தமது அயராத இலக்கியப் பணியில் கழித்த எஸ்.பொ என்னும் எஸ்.பொன்னுத்துரை நவம்பர் 26-ம் தேதி காலமானபோது ‘இறுதியில் இந்தச் சாலையில்தான்/ வந்தாக வேண்டும் நான்/ என நன்றாகத் தெரியும்/ ஆனால்/ இன்றுதான் அந்த நாள் என்று/ எனக்குத் தெரியாது நேற்று' என்ற ஜென் கவிதைதான் நினைவுக்கு வந்தது. எழுத்துப் பணி ஒரு போர் ஈழத்தின் ‘இலக்கியப் பொன்னு' என்று செல்லமாக அழைக்கப்படும் எஸ்.பொ.வின் மரணம் முதுமையின் நிசர்சனம் சுமந்தாலும், இழப்பின் துயர் அதனோடு மல்லுக்கு நிற்கிறது. தன்னை மூன்றாம் உலகப் படைப்பாளியாக அறிவித்துக் கொண்ட எஸ்.பொ., ஈழத்தின் இலக்கியத்தை முன்னெடுத்துச் சென்றதன் மூலம் தமிழ் இலக்கியத்தின் …
-
- 0 replies
- 598 views
-
-
-
- 1 reply
- 595 views
-
-
மற்றுமொரு ஈழத்து பாடகி லக்ஸ்மி (கனடா) டி. இமானின் இசையில் பாடி உள்ளார். படம் இன்னும் வெளிவரவில்லை. லக்ஸ்மிக்கு வாழ்த்துக்கள். D Imman Page Liked · 19 hrs via Facebook Mentions · Glad to introduce a Srilankan Tamil singing talent Luksimi Sivaneswaralingam from Toronto,Canada for #Bogan She rendered a Romantic number to Mrs.Thamarai's lyric! கர்நாடக சங்கீதத்தை முறையாக பயின்றவரும் மேற்கத்தையை இசையில் பல்கலைகளக பட்டம் பெற்றவர் என்பதும்( doing masters in waterloo) பரத நாட்டியத்தை முறையாக பயின்றவரும் சுப்பர்…
-
- 1 reply
- 594 views
-
-
தோப்பில் முஹம்மது மீரான், தமிழ் இஸ்லாமியப் படைப்பாளிகளுள் முக்கியமானவர். ‘சாய்வு நாற்காலி’ நாவலுக்காக 1997-ல் சாகித்திய அகாடமி விருதுபெற்றவர். கன்னியாகுமரி மாவட்டத்தின் கேரள - தமிழக எல்லைப் பகுதியில் வாழும் தனித்துவம் மிக்க இஸ்லாமியர்களின் வாழ்க்கையைத் தன் எழுத்துகள் மூலம் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தவர். தற்போது திருநெல்வேலியில் வசிக்கும் தோப்பில், போர்த்துக்கீசியப் படையெடுப்பைப் பின்னணியாகக் கொண்டு புதிய நாவலை எழுதிவருகிறார். உங்கள் பின்னணி பற்றிச் சொல்லுங்கள்... சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேங்காய்ப்பட்டணம். அது மலையாளம், தமிழ் என இரு மொழிகளும் பேசப்படும் ஊர். 1940-ல் நான் பிறந்தேன். பள்ளிப் படிப்பெல் லாம் அங்கு அருகிலேயே படித்தேன். நாகர்கோவிலில் உள்ள தெ…
-
- 0 replies
- 591 views
-
-
A.R. ரஹ்மான், எஸ்.பி.பி போன்ற பல இசை பிரபலங்களிடம் பாராட்டு பெற்ற ஈழத்து Octapad கலைஞன் பானு
-
- 0 replies
- 586 views
-
-
தமிழ் திரை இசை நூலகம் திரு.B.H.அப்துல் ஹமீது அவர்கள் நெகிழ்ச்சியான நினைவுகள்
-
- 0 replies
- 562 views
-
-
திரும்பிப்பார்க்கின்றேன். தாமரைக்கு ஒரு செல்வி – வன்னிமக்களுக்கு ஒரு வன்னியாச்சி. முருகபூபதி ஈழத்து இலக்கிய வளர்ச்சியில்போர்க்கால இடப்பெயர்வு வாழ்வை அழுத்தமாகப் பதிவுசெய்த ஆளுமை ‘ முள்ளும் மலரும் ‘ மகேந்திரனின்இயக்கத்திலும் தாமரைச்செல்வியின் படைப்பு குறும்படமாகியது. எங்கள் நீர்கொழும்பில் நான் அறிந்தவரையில் இற்றைக்கு 70 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய முதலாவது சைவஉணவகம் கணேசன் கபேதான் நீர்கொழும்பில் வீரகேசரி பத்திரிகையின் முதலாவது ஏஜன்ட். வீரகேசரிக்கு தற்பொழுது 85 வயது. கணேசன் கபே இன்றும் இருக்குமானால் அதன் வயது 75. இந்த கணேசன் கபேயில்தான் ஆளுமையும் ஆற்றலும் நிரம்பப்பெற்ற சாதனைப்பெண்மணி தாமரைச்செல்வியின் முதல் நாவல் – வீரகேசரி பிரசுரம் சுமைக…
-
- 0 replies
- 562 views
-
-
இச்சிறுவர்களுக்கு உங்கள் ஆதரவை வழங்குங்கள்
-
- 0 replies
- 559 views
-