விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7839 topics in this forum
-
நாடு திரும்பிய அர்ஜென்டினா அணிக்கு அதிபர் தலைமையில் உற்சாக வரவேற்பு பிரேசில் உலக கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியிடம் தோல்வி கண்டு சாம்பியன் பட்டத்தை இழந்தது. ஆனாலும், இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா அணி போராடிய விதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. போட்டியில் இரண் டாம் இடம் பிடித்த அர்ஜென்டினா அணி நேற்று நாடு திரும்பியது. தலைநகர் பியூனஸ் அயர்சுக்கு விமா னம் மூலம் வந்திறங்கிய அர்ஜென்டினா வீரர்களுக்கு, அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வீரர்கள் வந்த விமானத்தின் பக்க வாட்டில் வீரர்களின் படம் வரையப்பட்டிருந்ததோடு, அர்ஜென்டினாவுக்கு நன்றி’ என்ற வாசகமும் எழுதப்பட்டிருந்தது. விமான நிலையத்தில் இருந்து சிறப்பு பேரு…
-
- 1 reply
- 416 views
-
-
இறுதிப் போட்டிக்கு முன்பே 'உலகக் கோப்பை வெற்றி' அஞ்சல்தலையை அச்சடித்த ஜெர்மனி அர்ஜென்டீனா உடனான இறுதிப் போட்டிக்கு முன்பே 'உலகக் கோப்பை வெற்றி'யை பறைசாற்றும் அஞ்சல்தலையை ஜெர்மனி நாடு அச்சடித்திருக்கிறது. இந்தச் சிறப்பு அஞ்சல்தலைகள் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) முதல் விற்பனைக்கு வரவுள்ளதாக ஜெர்மனி அரசு தெரிவித்துள்ளது, கடந்த 4 உலகக் கோப்பைகளில் அரையிறுதி மற்றும் இறுதிச்சுற்றில் தோல்வி கண்ட ஜெர்மனி, இந்த தடவை இறுதிப்போட்டியில் அர்ஜென்டீனாவை வீழ்த்தி 4-வது முறையாக உலகக் கோப்பையைக் கைப்பற்றியது. இந்த நிலையில், உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி நடைபெறுவதற்கு முன்னதாகவே, தனது அணி வீரர்கள் மீதான நம்பிக்கையால் வெற்றியை கணித்த ஜெர்மன் அரசு, வெற்றி முத்திரைக்க…
-
- 0 replies
- 416 views
-
-
டெஸ்ட் போட்டிகளில் இருந்து மஹேல ஓய்வு தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுடன் இடம்பெறவுள்ள டெஸ்ட் போட்டிகளை அடுத்து தான் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெற போவதாக இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் மஹேல ஜயவர்தன அறிவித்துள்ளார். இது எவராலும் நிர்ப்பந்திக்கப்பட்டு எடுக்கப்பட்ட தீர்மானம் அல்ல என மஹேல ஐயவர்தன இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/articles/2014/07/14/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B…
-
- 0 replies
- 353 views
-
-
உலகக் கோப்பை கால்பந்து: 4வது முறையாக கோப்பையை வென்றது ஜெர்மனி!! ரியோடிஜெனிரோ: உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்தி கோப்பையை 4 வது முறையாக வென்றது ஜெர்மனி. உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவிலுள்ள மரகானா ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இதில் அர்ஜெர்டினா மற்றும் ஜெர்மனி அணிகள் மோதின. கோல் அடிக்காமலே.... ஆட்டத்தின் முதல் பாதியின் முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது பாதியில் தாக்குதல் ஆட்டத்தை வேகப்படுத்திய ஜெர்மனி, அர்ஜென்டினாவுக்கு நெருக்கடி கொடுத்தது. கூடுதல் நேரம் இதனால் 90 நிமிட முடிவிலும் இரு அணியும் கோல் அடிக்காததால் ஆட்ட நடுவர் கூடுதல் நேரம் வழங்கினார். …
-
- 5 replies
- 573 views
-
-
பிரேசில் அணியின் முன்னணி வீரரான நெய்மர் முதுகெலும்பில் முறிவு ஏற்பட்டதற்கு ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொள்ள கேரளா செல்லவிருக்கிறார். கொலம்பியா அணிக்கு எதிராக கால் இறுதி ஆட்டத்தில் பந்தை எடுக்க முயன்ற போது நெய்மரை அந்த அணி வீரர் ஜூவான் ஜூனிகா முழங்கால் மூலம் முதுகில் தாக்கியுள்ளார். இதனால் அவருக்கு முதுகெலும்பில் முறிவு ஏற்பட்டதால் உலக போட்டியில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், இந்த முதுகெலும்பு முறிவை சரிசெய்வதற்காக நெய்மர் கேரளா செல்லவிருக்கிறார். இது தொடர்பாக பிரேசில் கால்பந்து கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் கேரள மாநில முதல்வர் உம்மன் சாண்டியுடன் பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=82017321070…
-
- 3 replies
- 883 views
-
-
அடல்வ் ஹிட்லர் காலத்தில் ஜேர்மனி உலகையே உலுக்கிக் கொண்டிருந்தது. போர்க் காலத்தில் . அது ஒரே நாளில் ஹோலாந்தைக் கைப்பற்றியது. போர்ப் பிரகடனத்தை கேட்டதுமே, போரிற்குப் போகாமலே போலந்து ஜேர்மனியிடம் சரன் அடைந்தது. இங்கிலாந்து கூட ஜேர்மனிக்கு பயந்து தன்னைத் தயார் படுத்துவதற்கான நேரத்தைப் பெற பேச்சுவார்த்தையை நடாத்தியே தப்பியது. குடையை ஊன்றியவாறு நடந்த அந்த இங்கிலாந்தின் பிரதமர் ஹிட்லரிற்கு ஜனநாயக உபதேசம் கூடச் செய்து பார்த்தார். இன்று ஜேர்மனி என்றவுடன் ஹிட்லரூடாகவே உலகம் ஜேர்மனியைப் பாரக்கிறது. அதன் இதர பண்டைய அதீத ஆற்றல்களையும் சிறப்புக்களையும் உலகு பார்க்கத் தவறி விடுகிறது. திறமையும் பலமுமுள்ள ஜேர்மனியை மட்டந் தட்ட உலகே ஹிட்லரையே பாவிக்கிறதெனலாம். முழு உலகினது…
-
- 0 replies
- 361 views
-
-
இலங்கை வீரர் செனநாயக்கே பந்து வீச தடை சமீபத்தில் முடிந்த இங்கிலாந்து தொடரின் போது இலங்கை சுழற்பந்து வீச்சாளர் செனநாயக்கேவின் பந்து வீச்சு சர்ச்சையில் சிக்கியது. அவரது பந்து வீச்சு எறிவது போன்று இருப்பதாக நடுவர்கள் கூறிய புகாரை தொடர்ந்து, அவரது பந்து வீச்சு முறைகளை சிறப்பு நிபுணர்கள் மூலம் ஐ.சி.சி. பரிசோதனை செய்தது. இதன் முடிவில் அவரது பவுலிங் விதிமுறைக்கு புறம்பாக இருப்பதாகவும், எனவே அவருக்கு சர்வதேச கிரிக்கெட்டில் பந்து வீச தடை விதிப்பதாகவும் ஐ.சி.சி. அறிவித்துள்ளது. பந்துவீச்சில் உள்ள சர்ச்சைகளை களைந்து மறுஒப்புதல் பெற்றால் மட்டுமே அவர் இனி பந்து வீச முடியும். http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=125142
-
- 1 reply
- 467 views
-
-
தங்கப் பந்து: இறுதிப் பட்டியலில் நெய்மர் உள்ளிட்ட 10 பேர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் தலைசிறந்த வீரருக்கு வழங்கப்படும் தங்கப் பந்து விருதுக்கான (கோல்டன் பால்) இறுதிப்பட்டியலில் பிரேசிலின் நெய்மர் உள்ளிட்ட 10 பேர் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் 7 பேர் இன்று நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளனர். அர்ஜென்டீனா தரப்பில் கேப்டன் லயோனல் மெஸ்ஸி, ஜேவியர் மாஸ்கெரனோ, ஏஞ்சல் டி மரியா ஆகியோரும், ஜெர்மனி தரப்பில் கேப்டன் பிலிப் லாம், தாமஸ் முல்லர், டோனி குரூஸ், மேட்ஸ் ஹம்மல்ஸ் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் மெஸ்ஸி 4 கோல்களையும், முல்லர் 5 கோல்களையும் அடித்துள்ளனர். கொலம்பியாவுக்கு எதிரான ஆட்டத்தில் காயமடைந்த பிரேசில் வீரர் நெய்மர் 4 கோல்களை அடித்ததன்…
-
- 2 replies
- 557 views
-
-
வரலாற்றை மாற்றுமா ஜெர்மனி? 20-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் இன்று நள்ளிரவு நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் ஐரோப்பாவின் பலம் வாய்ந்த ஜெர்மனியும், தென் அமெரிக்காவைச் சேர்ந்த வலுவான அர்ஜென்டீனாவும் மோதவிருக்கின்றன. இந்த இரு அணிகளும் மூன்றாவது முறையாக இறுதிப் போட்டியில் மோதவிருக்கின்றன. இதற்கு முன்னர் 1986, 1990 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உலகக் கோப்பையின் இறுதி ஆட்டங்களில் இவ்விரு அணிகளும் மோதியுள்ளன. அதில் 1986-ல் அர்ஜென்டீனாவும், 1990-ல் ஜெர்மனியும் வெற்றி பெற்றுள்ளன. வரலாறு மாறுமா? தென் அமெரிக்க கண்டத்தில் இதற்கு முன்னர் நடைபெற்ற 4 உலகக் கோப்பை போட்டிகளிலும் அக்கண்டத்தைச் சேர்ந்த (உருகுவே இருமுறை, ப…
-
- 0 replies
- 618 views
-
-
தென் ஆபிரிக்கா எதிர் இலங்கை; முதலாவது போட்டி இன்று தென் ஆபிரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் கெத்தாராம ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பமாகவுள்ளது. தென் ஆபரிக்கா ஒரு வருடத்திற்கு முன்னர் இங்கு வருகை தந்தபோது 5 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை 4 க்கு 1 என்ற ஆட்டக் கணக்கில் ஏஞ்சலோ மெத்யூஸ் தலைமையிலான இலங்கை தனதாக்கிக்கொண்டிருந்தது. இந்த இரண்டு அணிகளும் இதுவரை விளையாடியுள்ள 56 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 28இல் இலங்கையும் 26இல் தென் ஆபிரிக்காவும் வெற்றிபெற்றுள்ளன. ஒரு போட்டி சமநிலையில் முடிவடைந்ததுடன் மற்றைய போட்டியில் முடிவு…
-
- 5 replies
- 622 views
-
-
பிரேசில்– நெதர்லாந்து நாளை மோதல் 3–வது இடம் யாருக்கு? பிரேசிலியா, ஜூலை. 11– உலக கோப்பை கால்பந்து போட்டி இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. நாளை மறுநாள் (13–ந்தேதி) நடக்கும் இறுதிப்போட்டியில் ஐரோப்பா கண்டத்தை சேர்ந்த ஜெர்மனியும் – தென் அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அர்ஜென்டினாவும் மோதுகின்றன. முதல் அரை இறுதி போட்டியில் ஜெர்மனி அணி 7–1 என்ற கோல் கணக்கில் பிரேசிலை தோற்கடித்தது. 2–வது அரை இறுதியில் அர்ஜென்டினா அணி பெனால்டி ஷூட்டில் 4–2 என்ற கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. அரை இறுதியில் தோற்ற பிரேசில், நெதர்லாந்து அணிகள் 3–வது இடத்துக்கான போட்டியில் நாளை மோதுகின்றன. இந்த ஆட்டம் நாளை நள்ளிரவு 1.30 மணிக்கு நடக்கிறது. போட்டியை நடத்…
-
- 7 replies
- 655 views
-
-
பிரேசில் கால்பந்து வரலாற்றில் இதுவரை சந்தித்திராத தோல்வி! என்னதான் நடந்தது? அந்த ஆட்டத்தைப் பற்றி எப்படித் துவங்குவது? முதல் கோல் விழுந்த 11-வது நிமிடத்தைச் சொல்வதா? அல்லது, 23-வது நிமிடத்திலிருந்து 29-வது நிமிடம் வரை பிரேசிலுக்கு என்ன நடந்ததென்றே தெரியாமல் 4 கோல்கள் அடுத்தடுத்து ஜெர்மனி அடித்ததைச் சொல்வதா? அந்த அரை மணியில் இறுதி வாய்ப்பைக் கோட்டைவிட்ட மனத்தாங்கலில் பிரேசில் ரசிகர்களில் பாதிப் பேர் கண்ணீரும் கவலையுமாக மைதானத்தை விட்டு வெளியேறியதைச் சொல்வதா? அல்லது அதிர்ச்சியை மறந்து, மறைத்து தன் குழந்தையை விட்டு கேமரா முன் டாடா காண்பிக்க வைத்த பிரேசில் பெண்மணியைக் குறிப்பிடுவதா? உண்மையில், பிரேசிலுக்கு என்னதான் நடந்தது? நமக்குமே இன்னும் நம்ப முடியவில்லை. ஆம்! பிரேசில் க…
-
- 1 reply
- 682 views
-
-
சச்சித்ர சேனநாயக்க பந்துவீசுவதற்கு ஐ.சி.சி. தடை 2014-07-12 19:50:00 இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் சச்சித்ர சேனநாயக்கவின் பந்துவீச்சுப்பாணி விதிகளுக்கு முரணானது என சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது. அதனால் சர்வதேச போட்டிகளில் அவர் பந்துவீசுவதற்கு உடனடியாக அமலுக்கு வரும் வகையில் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐ.சி.சி. அறிவித்துள்ளது. பிரிட்டனின் கர்டிவ் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையைடுத்து அவர் அனுமதிக்கப்பட்ட சச்சித்ரவுக்கு இத்தடை விதிக்கப்பட்டுள்ளது. 29 வயதான சச்சித்ர சேனநாயக்க 37 சர்வதேச போட்டிகளில் 40 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். கடந்த மே மாதம் இங்கிலாந்தில் நடைபெற்ற இங்கிலாந்துடனான இரண்டாவது போட்டியில் அவர் 13 ஓட்டங்களு…
-
- 1 reply
- 444 views
-
-
இந்தியாவுக்கு எதிராக ட்ரென்ட் பிறிட்ஜ் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்தின் ஜேம்ஸ் அன்டர்சன் மற்றும் ஜொனத்தன் ரூட் ஆகியோர் பத்தாவது விக்கட்டுக்கான இணைப்பாட்டத்தில் புதிய பதிவு ஒன்றினை நிலைநாட்டியுளனர். நேற்று ஜூலை 10 இருவரும் இணைந்து 198 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர். இங்கிலாந்து தனது ஒன்பதாவது விக்கட்டை 298 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது இழந்தது. இறுதியாக அன்டர்சன் ஆட்டமிழந்தபோது இங்கிலாந்து 496 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இதற்கு முந்தைய பதிவாகச் சரியாக ஒருவருடத்துக்கு (9 ஜூலை 2013) முன்னதாக இதே ட்ரென்ட் பிறிட்ஜ் அரங்கில் இங்கிலாந்துக்கு எதிராக ஆஸியின் அகர் மற்றும் ஹியூஸ் இணை 163 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. பத்தாவது விக்கட் இ…
-
- 0 replies
- 372 views
-
-
உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடரில் உருகுவே, இத்தாலி அணிகளுக்கிடையிலான போட்டியின் போது எதிரணி வீரரை கடித்தமைக்காக உருகுவே நட்சத்திர வீரர் லூயிஸ் சொரஸ் நான்கு மாத தடைக்கு உள்ளானர். அந்த தண்டனையை குறைக்குமாறு கோரி சொரஸ் மற்றும் உருகுவே கால்பந்தாட்ட சம்மேளனதினால் மீள் முறையீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் குறித்த மீள் முறையீட்டை ஏற்பதில்லை என்ற முடிவை சர்வதேசக் கால்பந்தாட்ட சம்மேளனத்தின் மீள் முறையீட்டுக் குழு எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்திற்கு முன்னரும் இதுபோன்ற இரு சம்பவங்களில் சொரஸ் ஈடுப்பட்டமையே இந்த கடும் தண்டனைக்கு காரணம் ஆகும். லூயிஸ் சொரஸ் நான்கு மாதங்களுக்கு கால்பந்தாட்ட மைதானங்களுக்கு செல்ல முடியாது, 9 சர்வதேசப் போட்டிகளில் விளையாட முடியாது என்ற வ…
-
- 0 replies
- 357 views
-
-
இறுதி போட்டியில் முழு கவனம்: ஜெர்மனி வீரர் குளோஸ் ரியோஜெனீரோ, ஜூலை.11– உலக கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி வருகிற 13–ந்தேதி நடக்கிறது. இதில் 3 முறை சாம்பியன் ஜெர்மனி, 2 முறை சாம்பியன் அர்ஜென்டினா மோதுகின்றன. இறுதி ஆட்டம் குறித்து ஜெர்மனியின் முன்னணி வீரர் குளோஸ் கூறியதாவது:– பிரேசிலுக்கு எதிராக அரைஇறுதி போட்டியை மிகவும் ரசித்து விளையாடினோம். அதில் அபார வெற்றி பெற்றோம். ஆனால் அதையே நினைத்து கொண்டிருக்கவில்லை. 24 மணி நேரத்தில் மறந்து விட்டோம். தற்போது அர்ஜென்டினாவுக்கு எதிராக இறுதிப்போட்டி மீதே முழு கவனம் செலுத்தி வருகிறோம். அதில் எங்களது திறன்களை காட்ட வேண்டியது அவசியம். உலக கோப்பையில் அதிக கோல் அடித்து ரொனால்டோ சாதனையை முறியடித்த பெருமையாக உள்ளது. இருந்தபோ…
-
- 8 replies
- 884 views
-
-
லூயிஸ் சுவாரெஸ் 75 மில்லியன் பவுண்டுக்கு பார்சிலோனா அணிக்கு கைமாறினார் பார்சிலோனா, ஜூலை 11- லிவர்பூல் கிளப் அணியில் விளையாடி வந்த லூயிஸ் சுவாரெஸ் பார்சிலோனா அணிக்கு 5 ஆண்டுகள் விளையாடுவதற்காக 75 மில்லியம் பவுண்டுக்கு கைமாறியுள்ளார். பிரேசிலில் நடந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் ரசிகர்கள் மறக்க முடியாத போட்டி ஒன்று எதுவென்றால், அது இத்தாலி-உருகுவே அணிகள் மோதிய போட்டிதான். இப்போட்டியில் உருகுவே வீரர் சுராஸ் இத்தாலி வீரரின் தோள்பட்டையில் கடித்தார். இதனால் இவர் 10 போட்டிகளில் விளையாட முடியாமல் போனது. இது விஷயம் இல்லை. லிவர்பூல் அணிக்காக விளையாடி வந்த இவரை பார்சிலோனா கிளப் அணி 75 மில்லியன் பவுண்டு கொடுத்து இப்போது வாங்கியுள்ளது. இந்த பணம் இந்திய மதிப்…
-
- 1 reply
- 543 views
-
-
உலகக் கோப்பையை ஜெர்மனி கைப்பற்றிட 20 ஆண்டுகள் காத்திருக்கும் இந்திய ரசிகர் ஜெர்மனி அணி உலகக் கோப்பைக் கால்பந்தில் சாம்பியன் ஆவதற்காக விஸ்கி பாட்டில் ஒன்றை 20 ஆண்டுகளாக தன் தோட்டத்தில் புதைத்து வைத்துக் காத்திருக்கிறார் இந்திய கால்பந்து ரசிகர் ஒருவர். புதுல் போரா என்ற அந்த 53 வயது அசாம் மாநில வர்த்தகர் 1994ஆம் ஆண்டு உலகக் கோப்பையை ஜெர்மனி வெல்லும் என்ற நம்பிக்கையில் உயர்தர ஸ்காட்ச் விஸ்கியை வாங்கினார். ஆனால் காலிறுதியில் பல்கேரியாவிடம் ஜெர்மனி 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வி தழுவ வேதனையடைந்த போரா அந்த பாட்டிலை தன் தோட்டத்தில் புதைத்து வைத்தார். .“இந்த முறை ஜெர்மனி அணி ஆடும் ஆட்டம் 20 ஆண்டுகளுக்கு முன்பாக புதைத்த விஸ்கி பாட்டிலை தோண்டி எடுக்க வைத்துள்ளது, ஆனால் …
-
- 4 replies
- 625 views
-
-
உலகக் கோப்பையை மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டீனா வெல்ல வேண்டும் என்று தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார். விளையாட்டில் மெஸ்ஸியின் வரலாறு மிக முக்கியமானது, அவர் நிறைய கோப்பைகளை வென்றிருக்கிறார். இதையும் வெல்ல அவருக்காக நான் விரும்புகிறேன். அவர் எனது நண்பர், பார்சிலோனா அணியில் எனது சகா, கோப்பையை வெல்ல அவருக்கு எனது வாழ்த்துக்கள் என்றார் நெய்மார். ஆனால் அந்த நாட்டு ரசிகர்கள் மற்றும் பத்திரிகைகள் அதனை விரும்பவில்லை. நெதர்லாந்தை வீழ்த்தி அர்ஜென்டீனா அணி இறுதிக்குள் நுழைந்ததை ஓ டயா என்ற செய்தித் தாள், “துர்கனவு தொடர்கிறது’ என்று வர்ணித்துள்ளது. இதேவேளை, இறுதிப் போட்டிக்கு சுமார் 1 லட்சம் அர்ஜென்டீன ரசிகர்கள் மைதானத்திற்குப் படையெடுப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. அர்ஜென் …
-
- 2 replies
- 731 views
-
-
உண்மையில் உதைபந்தாட்டத்தில் சில அனுபவங்களுடன் எழுதுகிறேன் .நெதர்லாந்து தோற்றது உண்மையில் வேதனையாய் இருந்தாலும் .........ஒரு உதை பந்தாட்ட காரன் [வீரன்] என்ற கண்ணோட்டத்தில் எழுதுகிறேன் ..............இன்று நடந்தது உதைபந்தாட்டம் .மிக அருமையாக விளையாடினார்கள் ....................இப்பிடி ஒரு விளையாட்டை பார்க்க உண்மையில் உதைபந்தாட்ட உலகம் குடுத்து வைக்கணும் .....நேற்றும் பார்த்திருப்பார்கள் . இன்றும் பார்த்திருப்பார்கள் ... .......இன்று நேரத்தை ஒதுக்கியதற்கு அதன் பயனை உணர்ந்திருப்பார்கள் ... .............. விளையாட்டின் அனுபவத்தின் பக்குவத்தில் எழுதுகிறேன் .இது தோல்வியல்ல .........இறுதிவரை போராடி ........வெற்றியை எட்டிப்பிடித்தும் ,வெல்லமுடியாமல் போனது சந்தர்ப்பமே .............…
-
- 6 replies
- 822 views
-
-
உலகம் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறது. ஆம், அப்படித்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. காற்பந்தாட்டத்தின் ஜாம்பவான், தொடர்ச்சியாக நட்சத்திரங்களை உருவாக்கிக் கொண்டிருந்த பிரேசிலின் மிகமோசமான தோல்வி, அந்நாட்டு ரசிகர்களை மாத்திரமல்ல, காற்பந்தாட்டத்தின் அனைத்து ரசிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. ஜேர்மனி அணியினரோ, ரசிகர்களோ கூட இவ்வளவு மோசமான தோல்வியொன்றை பிரேசிலுக்கு பரிசளிப்போம் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். அவர்களும் கூட தங்களது பெரு வெற்றி தொடர்பில் ஆச்சரியத்துடனேயே இருப்பார்கள். மனோதிடம் அல்லது ஆன்மபலம் சிறிதாக அடிபடுகின்ற புள்ளி எவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு நேற்றைய பிரேசில் அணியே சாட்சி. 5 தடவை உலகக் கோப்பையை வெற்றி கொண்டவர்கள் …
-
- 0 replies
- 577 views
-
-
பிரேசில் தோல்வி: மலேசிய எம்.பி.யின் 'ஹிட்லர்' ட்வீட்டால் சர்ச்சை உலகக் கோப்பை கால்பந்து அரையிறுதியில், பிரேசிலை ஜெர்மனி வீழ்த்தியவுடன், ஹிட்லரைக் குறிப்பிட்டு மலேசிய அமைச்சர் ட்விட்டரில் பதிந்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. தமது தேச அணி தோல்வியுற்றதால் பிரேசில் ரசிகர்கள் சோகத்திலும், தமது தேச அணியின் அபார வேற்றியால் ஜெர்மனி நாட்டினர் கொண்டாட்டத்திலும் மூழ்கியிருந்த வேளையில், மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் பங் என்பவர் ட்விட்டரில் ஒரு கருத்தைப் பதிவு செய்தார். ஜெர்மனியின் வெற்றியை பாராட்டும் விதமாக, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மிகவும் நன்று... சபாஷ்! ஹிட்லர் நீடூழி வாழ்க!" என்று கூறியிருந்தார். மலேசிய எம்.பி.யின் இந்தக் கருத்துக்கு, பல்வேறு தரப்பில் இர…
-
- 0 replies
- 512 views
-
-
அர்ஜென் ராபன் லயோனல் மெஸ்ஸி உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் 2-வது அரையிறுதியில் நெதர்லாந்தும், அர்ஜென்டீனாவும் இன்று மோதுகின்றன. பலம் வாய்ந்த இந்த இரு அணிகளுமே இறுதிச்சுற்றுக்கு முன்னேற கடுமையாகப் போராடும் என்பதால் இந்தப் போட்டி அனல் பறக்கும் அக்னி பரீட்சையாக இருக்கும். 24 ஆண்டுகளுக்குப் பிறகு அரையிறுதிக்கு முன்னேறியிருக்கும் அர்ஜென்டீனா இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி தங்களுடைய சொந்த கண்டத்தில் நடைபெறும் உலகக் கோப்பையை எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது. அதே நேரத்தில் நெதர்லாந்து அணி மூன்று முறை உலகக் கோப்பையின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியபோதும் இதுவரை கோப்பையைவெல்லவில்லை. தொடர்ந்து நழுவிக் கொண்டிருக்கும் உலகக் கோப்பையை இந்த முறை வென்றுவி…
-
- 0 replies
- 438 views
-
-
WM 2014 ஜெர்மனி கோல் வெள்ளத்தில் மூழ்கியது பிரேசில்; மிராஸ்லாவ் க்லோஸ் உலக சாதனை உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியின் முதல் அரையிறுதியில், ஜெர்மனி சற்றும் எதிர்பாராதவிதமாக 7- 1 என்ற கோல் கணக்கில் பிரேசிலை சின்னாபின்னமாக்கியது. இதன் மூலம் 2002 ஆம் ஆண்டிற்குப் பிறகு உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது ஜெர்மனி. அந்த அணியின் முன்னணி வீரர் மிராஸ்லாவ் க்லோஸ் ஒரு கோல் அடித்து, உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிக கோல்களை (16 கோல்கள்) அடித்த வகையில் ரொனால்டோ சாதனையை முறியடித்தார். இந்த ஆட்டத்தைப் பற்றி எப்படித் துவங்குவது? முதல் கோல் விழுந்த 11-வது நிமிடத்தைச் சொல்வதா? அல்லது, 23வது நிமிடத்திலிருந்து 29வது நிமிடம் வரை பிரேசிலுக்கு என்ன நடந்ததென்றே தெரியாமல் 4 கோல…
-
- 0 replies
- 540 views
-
-
பிரேசில் – ஜெர்மனி முதல் அரையிறுதியில் பலப்பரீட்சை பயிற்சியில் பிரேசில் வீரர்கள் உலகமே பெரும் ஆவலுடன் கண்டுகளித்து வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. அடுத்த உலக சாம்பியன் யார் என்ற கால்பந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பும் உச்சத்தை எட்டியுள்ளது. மொத்தம் 32 அணிகள் பங்கேற்ற இந்த உலகக் கோப்பை போட்டியில் பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டீனா, நெதர்லாந்து ஆகிய பலம் வாய்ந்த 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. இந்த அணிகள் அனைத்துமே இதுவரை எந்த ஆட்டத்திலும் தோல்வியடையவில்லை. புதன்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு பெலோ ஹாரிசோன்ட் நகரில் நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் பிரேசில், ஜெர்மனி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளும் சமபல…
-
- 1 reply
- 535 views
-