Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. இந்தியாவுக்கு எதிராக ட்ரென்ட் பிறிட்ஜ் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்தின் ஜேம்ஸ் அன்டர்சன் மற்றும் ஜொனத்தன் ரூட் ஆகியோர் பத்தாவது விக்கட்டுக்கான இணைப்பாட்டத்தில் புதிய பதிவு ஒன்றினை நிலைநாட்டியுளனர். நேற்று ஜூலை 10 இருவரும் இணைந்து 198 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர். இங்கிலாந்து தனது ஒன்பதாவது விக்கட்டை 298 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது இழந்தது. இறுதியாக அன்டர்சன் ஆட்டமிழந்தபோது இங்கிலாந்து 496 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இதற்கு முந்தைய பதிவாகச் சரியாக ஒருவருடத்துக்கு (9 ஜூலை 2013) முன்னதாக இதே ட்ரென்ட் பிறிட்ஜ் அரங்கில் இங்கிலாந்துக்கு எதிராக ஆஸியின் அகர் மற்றும் ஹியூஸ் இணை 163 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. பத்தாவது விக்கட் இ…

  2. உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடரில் உருகுவே, இத்தாலி அணிகளுக்கிடையிலான போட்டியின் போது எதிரணி வீரரை கடித்தமைக்காக உருகுவே நட்சத்திர வீரர் லூயிஸ் சொரஸ் நான்கு மாத தடைக்கு உள்ளானர். அந்த தண்டனையை குறைக்குமாறு கோரி சொரஸ் மற்றும் உருகுவே கால்பந்தாட்ட சம்மேளனதினால் மீள் முறையீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் குறித்த மீள் முறையீட்டை ஏற்பதில்லை என்ற முடிவை சர்வதேசக் கால்பந்தாட்ட சம்மேளனத்தின் மீள் முறையீட்டுக் குழு எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்திற்கு முன்னரும் இதுபோன்ற இரு சம்பவங்களில் சொரஸ் ஈடுப்பட்டமையே இந்த கடும் தண்டனைக்கு காரணம் ஆகும். லூயிஸ் சொரஸ் நான்கு மாதங்களுக்கு கால்பந்தாட்ட மைதானங்களுக்கு செல்ல முடியாது, 9 சர்வதேசப் போட்டிகளில் விளையாட முடியாது என்ற வ…

    • 0 replies
    • 367 views
  3. பிரேசில் கால்பந்து வரலாற்றில் இதுவரை சந்தித்திராத தோல்வி! என்னதான் நடந்தது? அந்த ஆட்டத்தைப் பற்றி எப்படித் துவங்குவது? முதல் கோல் விழுந்த 11-வது நிமிடத்தைச் சொல்வதா? அல்லது, 23-வது நிமிடத்திலிருந்து 29-வது நிமிடம் வரை பிரேசிலுக்கு என்ன நடந்ததென்றே தெரியாமல் 4 கோல்கள் அடுத்தடுத்து ஜெர்மனி அடித்ததைச் சொல்வதா? அந்த அரை மணியில் இறுதி வாய்ப்பைக் கோட்டைவிட்ட மனத்தாங்கலில் பிரேசில் ரசிகர்களில் பாதிப் பேர் கண்ணீரும் கவலையுமாக மைதானத்தை விட்டு வெளியேறியதைச் சொல்வதா? அல்லது அதிர்ச்சியை மறந்து, மறைத்து தன் குழந்தையை விட்டு கேமரா முன் டாடா காண்பிக்க வைத்த பிரேசில் பெண்மணியைக் குறிப்பிடுவதா? உண்மையில், பிரேசிலுக்கு என்னதான் நடந்தது? நமக்குமே இன்னும் நம்ப முடியவில்லை. ஆம்! பிரேசில் க…

  4. உலகக் கோப்பையை ஜெர்மனி கைப்பற்றிட 20 ஆண்டுகள் காத்திருக்கும் இந்திய ரசிகர் ஜெர்மனி அணி உலகக் கோப்பைக் கால்பந்தில் சாம்பியன் ஆவதற்காக விஸ்கி பாட்டில் ஒன்றை 20 ஆண்டுகளாக தன் தோட்டத்தில் புதைத்து வைத்துக் காத்திருக்கிறார் இந்திய கால்பந்து ரசிகர் ஒருவர். புதுல் போரா என்ற அந்த 53 வயது அசாம் மாநில வர்த்தகர் 1994ஆம் ஆண்டு உலகக் கோப்பையை ஜெர்மனி வெல்லும் என்ற நம்பிக்கையில் உயர்தர ஸ்காட்ச் விஸ்கியை வாங்கினார். ஆனால் காலிறுதியில் பல்கேரியாவிடம் ஜெர்மனி 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வி தழுவ வேதனையடைந்த போரா அந்த பாட்டிலை தன் தோட்டத்தில் புதைத்து வைத்தார். .“இந்த முறை ஜெர்மனி அணி ஆடும் ஆட்டம் 20 ஆண்டுகளுக்கு முன்பாக புதைத்த விஸ்கி பாட்டிலை தோண்டி எடுக்க வைத்துள்ளது, ஆனால் …

  5. லூயிஸ் சுவாரெஸ் 75 மில்லியன் பவுண்டுக்கு பார்சிலோனா அணிக்கு கைமாறினார் பார்சிலோனா, ஜூலை 11- லிவர்பூல் கிளப் அணியில் விளையாடி வந்த லூயிஸ் சுவாரெஸ் பார்சிலோனா அணிக்கு 5 ஆண்டுகள் விளையாடுவதற்காக 75 மில்லியம் பவுண்டுக்கு கைமாறியுள்ளார். பிரேசிலில் நடந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் ரசிகர்கள் மறக்க முடியாத போட்டி ஒன்று எதுவென்றால், அது இத்தாலி-உருகுவே அணிகள் மோதிய போட்டிதான். இப்போட்டியில் உருகுவே வீரர் சுராஸ் இத்தாலி வீரரின் தோள்பட்டையில் கடித்தார். இதனால் இவர் 10 போட்டிகளில் விளையாட முடியாமல் போனது. இது விஷயம் இல்லை. லிவர்பூல் அணிக்காக விளையாடி வந்த இவரை பார்சிலோனா கிளப் அணி 75 மில்லியன் பவுண்டு கொடுத்து இப்போது வாங்கியுள்ளது. இந்த பணம் இந்திய மதிப்…

  6. இறுதி போட்டியில் முழு கவனம்: ஜெர்மனி வீரர் குளோஸ் ரியோஜெனீரோ, ஜூலை.11– உலக கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி வருகிற 13–ந்தேதி நடக்கிறது. இதில் 3 முறை சாம்பியன் ஜெர்மனி, 2 முறை சாம்பியன் அர்ஜென்டினா மோதுகின்றன. இறுதி ஆட்டம் குறித்து ஜெர்மனியின் முன்னணி வீரர் குளோஸ் கூறியதாவது:– பிரேசிலுக்கு எதிராக அரைஇறுதி போட்டியை மிகவும் ரசித்து விளையாடினோம். அதில் அபார வெற்றி பெற்றோம். ஆனால் அதையே நினைத்து கொண்டிருக்கவில்லை. 24 மணி நேரத்தில் மறந்து விட்டோம். தற்போது அர்ஜென்டினாவுக்கு எதிராக இறுதிப்போட்டி மீதே முழு கவனம் செலுத்தி வருகிறோம். அதில் எங்களது திறன்களை காட்ட வேண்டியது அவசியம். உலக கோப்பையில் அதிக கோல் அடித்து ரொனால்டோ சாதனையை முறியடித்த பெருமையாக உள்ளது. இருந்தபோ…

  7. பிரேசில்– நெதர்லாந்து நாளை மோதல் 3–வது இடம் யாருக்கு? பிரேசிலியா, ஜூலை. 11– உலக கோப்பை கால்பந்து போட்டி இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. நாளை மறுநாள் (13–ந்தேதி) நடக்கும் இறுதிப்போட்டியில் ஐரோப்பா கண்டத்தை சேர்ந்த ஜெர்மனியும் – தென் அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அர்ஜென்டினாவும் மோதுகின்றன. முதல் அரை இறுதி போட்டியில் ஜெர்மனி அணி 7–1 என்ற கோல் கணக்கில் பிரேசிலை தோற்கடித்தது. 2–வது அரை இறுதியில் அர்ஜென்டினா அணி பெனால்டி ஷூட்டில் 4–2 என்ற கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. அரை இறுதியில் தோற்ற பிரேசில், நெதர்லாந்து அணிகள் 3–வது இடத்துக்கான போட்டியில் நாளை மோதுகின்றன. இந்த ஆட்டம் நாளை நள்ளிரவு 1.30 மணிக்கு நடக்கிறது. போட்டியை நடத்…

  8. உலகக் கோப்பையை மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டீனா வெல்ல வேண்டும் என்று தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார். விளையாட்டில் மெஸ்ஸியின் வரலாறு மிக முக்கியமானது, அவர் நிறைய கோப்பைகளை வென்றிருக்கிறார். இதையும் வெல்ல அவருக்காக நான் விரும்புகிறேன். அவர் எனது நண்பர், பார்சிலோனா அணியில் எனது சகா, கோப்பையை வெல்ல அவருக்கு எனது வாழ்த்துக்கள் என்றார் நெய்மார். ஆனால் அந்த நாட்டு ரசிகர்கள் மற்றும் பத்திரிகைகள் அதனை விரும்பவில்லை. நெதர்லாந்தை வீழ்த்தி அர்ஜென்டீனா அணி இறுதிக்குள் நுழைந்ததை ஓ டயா என்ற செய்தித் தாள், “துர்கனவு தொடர்கிறது’ என்று வர்ணித்துள்ளது. இதேவேளை, இறுதிப் போட்டிக்கு சுமார் 1 லட்சம் அர்ஜென்டீன ரசிகர்கள் மைதானத்திற்குப் படையெடுப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. அர்ஜென் …

    • 2 replies
    • 741 views
  9. உலகம் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறது. ஆம், அப்படித்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. காற்பந்தாட்டத்தின் ஜாம்பவான், தொடர்ச்சியாக நட்சத்திரங்களை உருவாக்கிக் கொண்டிருந்த பிரேசிலின் மிகமோசமான தோல்வி, அந்நாட்டு ரசிகர்களை மாத்திரமல்ல, காற்பந்தாட்டத்தின் அனைத்து ரசிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. ஜேர்மனி அணியினரோ, ரசிகர்களோ கூட இவ்வளவு மோசமான தோல்வியொன்றை பிரேசிலுக்கு பரிசளிப்போம் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். அவர்களும் கூட தங்களது பெரு வெற்றி தொடர்பில் ஆச்சரியத்துடனேயே இருப்பார்கள். மனோதிடம் அல்லது ஆன்மபலம் சிறிதாக அடிபடுகின்ற புள்ளி எவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு நேற்றைய பிரேசில் அணியே சாட்சி. 5 தடவை உலகக் கோப்பையை வெற்றி கொண்டவர்கள் …

  10. உண்மையில் உதைபந்தாட்டத்தில் சில அனுபவங்களுடன் எழுதுகிறேன் .நெதர்லாந்து தோற்றது உண்மையில் வேதனையாய் இருந்தாலும் .........ஒரு உதை பந்தாட்ட காரன் [வீரன்] என்ற கண்ணோட்டத்தில் எழுதுகிறேன் ..............இன்று நடந்தது உதைபந்தாட்டம் .மிக அருமையாக விளையாடினார்கள் ....................இப்பிடி ஒரு விளையாட்டை பார்க்க உண்மையில் உதைபந்தாட்ட உலகம் குடுத்து வைக்கணும் .....நேற்றும் பார்த்திருப்பார்கள் . இன்றும் பார்த்திருப்பார்கள் ... .......இன்று நேரத்தை ஒதுக்கியதற்கு அதன் பயனை உணர்ந்திருப்பார்கள் ... .............. விளையாட்டின் அனுபவத்தின் பக்குவத்தில் எழுதுகிறேன் .இது தோல்வியல்ல .........இறுதிவரை போராடி ........வெற்றியை எட்டிப்பிடித்தும் ,வெல்லமுடியாமல் போனது சந்தர்ப்பமே .............…

    • 6 replies
    • 830 views
  11. முதல் டெஸ்ட்: முரளி விஜய் சதம் ஜூலை 09, 2014.நாட்டிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் முரளி விஜய், சதம் அடித்து அசத்தினார். இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி நாட்டிங்காமில் நேற்று துவங்கியது. ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் தோனி, ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். இந்திய அணியில் சீனியர் வீரர் காம்பிர், ரோகித் சர்மா இடம்பெறவில்லை. ஸ்டூவர்ட் பின்னி அறிமுக வாய்ப்பு பெற்றார். விஜய் அசத்தல்: இந்திய அணிக்கு முரளி விஜய், ஷிகர் தவான் ஜோடி துவக்கம் தந்தது. ஆண்டர்சன் வீசிய முதல் ஓவரில் முரளி விஜய் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி அடித்தார். தவான் (12) ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் வெளியேறினார். இதன் பின் வ…

  12. பிரேசில் அணியின் முன்னணி வீரரான நெய்மர் முதுகெலும்பில் முறிவு ஏற்பட்டதற்கு ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொள்ள கேரளா செல்லவிருக்கிறார். கொலம்பியா அணிக்கு எதிராக கால் இறுதி ஆட்டத்தில் பந்தை எடுக்க முயன்ற போது நெய்மரை அந்த அணி வீரர் ஜூவான் ஜூனிகா முழங்கால் மூலம் முதுகில் தாக்கியுள்ளார். இதனால் அவருக்கு முதுகெலும்பில் முறிவு ஏற்பட்டதால் உலக போட்டியில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், இந்த முதுகெலும்பு முறிவை சரிசெய்வதற்காக நெய்மர் கேரளா செல்லவிருக்கிறார். இது தொடர்பாக பிரேசில் கால்பந்து கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் கேரள மாநில முதல்வர் உம்மன் சாண்டியுடன் பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=82017321070…

    • 3 replies
    • 893 views
  13. பிரேசில் தோல்வி: மலேசிய எம்.பி.யின் 'ஹிட்லர்' ட்வீட்டால் சர்ச்சை உலகக் கோப்பை கால்பந்து அரையிறுதியில், பிரேசிலை ஜெர்மனி வீழ்த்தியவுடன், ஹிட்லரைக் குறிப்பிட்டு மலேசிய அமைச்சர் ட்விட்டரில் பதிந்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. தமது தேச அணி தோல்வியுற்றதால் பிரேசில் ரசிகர்கள் சோகத்திலும், தமது தேச அணியின் அபார வேற்றியால் ஜெர்மனி நாட்டினர் கொண்டாட்டத்திலும் மூழ்கியிருந்த வேளையில், மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் பங் என்பவர் ட்விட்டரில் ஒரு கருத்தைப் பதிவு செய்தார். ஜெர்மனியின் வெற்றியை பாராட்டும் விதமாக, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மிகவும் நன்று... சபாஷ்! ஹிட்லர் நீடூழி வாழ்க!" என்று கூறியிருந்தார். மலேசிய எம்.பி.யின் இந்தக் கருத்துக்கு, பல்வேறு தரப்பில் இர…

  14. அர்ஜென் ராபன் லயோனல் மெஸ்ஸி உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் 2-வது அரையிறுதியில் நெதர்லாந்தும், அர்ஜென்டீனாவும் இன்று மோதுகின்றன. பலம் வாய்ந்த இந்த இரு அணிகளுமே இறுதிச்சுற்றுக்கு முன்னேற கடுமையாகப் போராடும் என்பதால் இந்தப் போட்டி அனல் பறக்கும் அக்னி பரீட்சையாக இருக்கும். 24 ஆண்டுகளுக்குப் பிறகு அரையிறுதிக்கு முன்னேறியிருக்கும் அர்ஜென்டீனா இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி தங்களுடைய சொந்த கண்டத்தில் நடைபெறும் உலகக் கோப்பையை எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது. அதே நேரத்தில் நெதர்லாந்து அணி மூன்று முறை உலகக் கோப்பையின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியபோதும் இதுவரை கோப்பையைவெல்லவில்லை. தொடர்ந்து நழுவிக் கொண்டிருக்கும் உலகக் கோப்பையை இந்த முறை வென்றுவி…

  15. WM 2014 ஜெர்மனி கோல் வெள்ளத்தில் மூழ்கியது பிரேசில்; மிராஸ்லாவ் க்லோஸ் உலக சாதனை உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியின் முதல் அரையிறுதியில், ஜெர்மனி சற்றும் எதிர்பாராதவிதமாக 7- 1 என்ற கோல் கணக்கில் பிரேசிலை சின்னாபின்னமாக்கியது. இதன் மூலம் 2002 ஆம் ஆண்டிற்குப் பிறகு உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது ஜெர்மனி. அந்த அணியின் முன்னணி வீரர் மிராஸ்லாவ் க்லோஸ் ஒரு கோல் அடித்து, உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிக கோல்களை (16 கோல்கள்) அடித்த வகையில் ரொனால்டோ சாதனையை முறியடித்தார். இந்த ஆட்டத்தைப் பற்றி எப்படித் துவங்குவது? முதல் கோல் விழுந்த 11-வது நிமிடத்தைச் சொல்வதா? அல்லது, 23வது நிமிடத்திலிருந்து 29வது நிமிடம் வரை பிரேசிலுக்கு என்ன நடந்ததென்றே தெரியாமல் 4 கோல…

  16. பிரேசில் – ஜெர்மனி முதல் அரையிறுதியில் பலப்பரீட்சை பயிற்சியில் பிரேசில் வீரர்கள் உலகமே பெரும் ஆவலுடன் கண்டுகளித்து வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. அடுத்த உலக சாம்பியன் யார் என்ற கால்பந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பும் உச்சத்தை எட்டியுள்ளது. மொத்தம் 32 அணிகள் பங்கேற்ற இந்த உலகக் கோப்பை போட்டியில் பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டீனா, நெதர்லாந்து ஆகிய பலம் வாய்ந்த 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. இந்த அணிகள் அனைத்துமே இதுவரை எந்த ஆட்டத்திலும் தோல்வியடையவில்லை. புதன்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு பெலோ ஹாரிசோன்ட் நகரில் நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் பிரேசில், ஜெர்மனி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளும் சமபல…

  17. அர்ஜென்டினாவின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் மரடோனா மெஸ்ஸியை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். முன்னாள் கால்பந்து வீரர் கேரி மற்றும் ஆங்கில தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆகியோர் அர்ஜென்டினா அணியின்போட்டி திறமை பிரேசில் அணியுடன் எப்படி இருக்கிறது என்பது பற்றி விவாதித்தனர். அந்த நிகழ்ச்சியில் முன்னாள் அர்ஜென்டினா அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் மரடோனா கலந்து கொண்டு பேசினார். மரடோனா கணித்தது போல் மெஸ்ஸி உலகக்கிண்ணத்தை வெல்வாரா என்று கேள்வி கேட்கப்பட்டது. இது பற்றி அவர் கூறியதாவது என் கையில் அதிர்ஷ்டத்தின் அடையாளமாய் சே குவேராவை பொறித்துள்ளேன் என்று சிரித்துக் கொண்டே கூறினார். பின்னர் நாங்கள் மிக உயரமாக கட்டப்பட்ட மூன்று மேடைகள் வைத்துள்ளோம். ஒன்று ஆல்ஃபிரடோ டி ஸ்டெபனோ …

  18. பிரேசில் வீரர் நெய்மரை காயப்படுத்திய கொலம்பிய வீரரருக்கு பிரேசில் ரசிகர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். காலிறுதிப் போட்டியில் கொலம்பியா- பிரேசில் அணிகள் மோதின. இதில் நெய்மரை கொலம்பிய அணி வீரர் ஜூவான் ஜூனிகா முழங்கால் மூலம் முதுகில் தாக்கினார். இதனால் அவருக்கு முதுகெலும்பில் முறிவு ஏற்பட்டது. இதன் காரணமாக நெய்மர் உலக போட்டியில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டது. இதனால் பிரேசில் ரசிகர்கள் கொலம்பிய வீரர் ஜூவான் ஜூனிகா மீது கடும் கோபத்தில் உள்ளனர். இந்நிலையில் பிரேசில் ரசிகர் ஒருவர் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் பல ரசிகர்கள் மோசமான வார்த்தைகளால் திட்டிவருகின்றனர். இதற்கிடையே நெய்மரை முதுகில் தாக்கியதற்காக வருத்தம் தெரிவித்த ஜூனிகா கூறும் போது, ‘‘நா…

  19. தென் ஆபிரிக்கா எதிர் இலங்கை; முதலாவது போட்டி இன்று தென் ஆபிரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் கெத்தாராம ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பமாகவுள்ளது. தென் ஆபரிக்கா ஒரு வருடத்திற்கு முன்னர் இங்கு வருகை தந்தபோது 5 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை 4 க்கு 1 என்ற ஆட்டக் கணக்கில் ஏஞ்சலோ மெத்யூஸ் தலைமையிலான இலங்கை தனதாக்கிக்கொண்டிருந்தது. இந்த இரண்டு அணிகளும் இதுவரை விளையாடியுள்ள 56 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 28இல் இலங்கையும் 26இல் தென் ஆபிரிக்காவும் வெற்றிபெற்றுள்ளன. ஒரு போட்டி சமநிலையில் முடிவடைந்ததுடன் மற்றைய போட்டியில் முடிவு…

  20. காயமடைந்து வலியால் துடிக்கும் நெய்மார். | படம்: ஏ.பி. பிரேசில் நட்சத்திரம் நெய்மார் காயமடைந்து இந்த உலகக் கோப்பைப் போட்டியில் இனி விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ள செய்தி பிரேசிலுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலம்பியாவுக்கு எதிராக இன்று அதிகாலை நடைபெற்ற ஹை வோல்டேஜ் காலிறுதியில் பிரேசில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதியில் ஜெர்மனியை சந்திக்கிறது. ஆனால் ஜெர்மனிக்கு எதிரான முக்கியமான அரையிறுதிப் போட்டியில், கோப்பை வெல்லும் கனவுடன் ஆடி வரும் பிரேசில் அணிக்கு அடிமேல் அடி விழுந்துள்ளது. அந்த அணியின் நட்சத்திர வீரர் நெய்மார் போட்டியின் போது கீழே தள்ளிவிடப்பட படுகாயம் அடைந்து ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் செல்லப்பட்டார். இவர் இனி இந்த உலகக் கோப்பை ப…

  21. சச்சின், ஷேன் வோர்ன் தலைமையிலான அணிகளுக்கிடையில் விற்பன்னர்கள் கிரிக்கெட் போட்டி நாளை; லோர்ட்ஸ் விளையாட்டரங்கின் 200 வருட பூர்த்தியைக் கொண்டாடும் வகையில் முன்னாள் கிரிக்கெட் விற்பனர்களையும் சமகால கிரிக்கட் வீரர்களையும் உள்ளடக்கிய இரண்டு அணிகளுக்கு இடையிலான 50 ஓவர் கிரிக்கெட் போட்டி நாளை நடைபெறவுள்ளது. இப் போட்டியில் விளையாடும் மெரில்போன் கிரிக்கெட் கழக (எம்.சி.சி.) அணிக்கு உலக கிரிக்கெட் சாதனை சிகரம் சச்சின் டெண்டுல்கரும் உலக அணிக்கு அவுஸ்திரேலியாவின் சுழல்பந்துவீச்சு நட்சத்திரம் ஷேன் வோர்னும் தலைவர்களாக விளையாடவுள்ளனர். இங்கிலாந்து நேரப்படி காலை 10.45 மணிக்கு ஆரம்பமாகும் இப்போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஸ்கை ஸ்போர்ட் தொலைக்காட்சி சேவைகளில் நேரடியாக ஒளிபரப்ப…

  22. வடமாகாணத்தின் சிறந்த அணியாக சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி வடமாகாணத்தின் 19 வயதுப்பிரிவு சிறந்த துடுப்பாட்ட அணியாக யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி அணி தெரிவு செய்யப்பட்டுள்ளது. சிங்கர் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட மாகாணத்தின் சிறந்த அணிகளுக்கான தெரிவிலேயே சென். ஜோன்ஸ் கல்லூரி அணி வடமாகாணத்தில் சிறந்த அணியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விருது கடந்த ஜுன் 30 ஆம் திகதி கொழும்பு பி.எம்.ஜ.சி.எச் இல் வைத்து வழங்கப்பட்டுள்ளது. நூற்றாண்டுகள் கடந்த வரலாற்றினைக் கொண்ட வடக்கின் மாபெரும் போர்களில் பங்குபற்றும் அணிகளில் ஒன்றான சென். ஜோன்ஸ் கல்லூரி அணி, இவ்வருடம் இடம்பெற்ற வடக்கின் மாபெரும் போரில் வெற்றிபெற்றிருந்தது. வெளிமாவட்ட அணிகளுக்கிடையிலான போட்டியில் மவுண்டன்லெவினி…

  23. இலங்கை கிரிக்கெட்டில் பல முரளிதரன்களை உருவாக்கும் நோக்கில் இன்று ஆஸி.இளைஞர் அணியுடன் யாழ்.மாவட்ட கிரிக்கெட் அணியினர் இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் இன்று மோதுவுள்ளது. யாழ்.மாவட்டக் கிரிக்கெட் தெரிவு அணிக்கும்,ஆஸ்திரேலியா நாட்டில் இருந்து வருகை தந்துள்ள இளைஞர் கிரிக்கெட் அணிக்கும் இடையேயான இருபதுக்கு  இருபது கிரிக்கெட் போட்டி இன்று யாழ்.மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ்.அணியினர் 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்பிற்கு 183 ஓட்டங்களை குவித்தது .பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆஸி.அணி20 ஓவர்கள் நிறைவில் 53 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களை இழந்து படுதோல்வியை தழுவியது. யாழ்ப்பாணத்தில் கிரி…

  24. சுவிஸ் பயிற்சியாளர் ஒற்மார் ஹிற்ஸ்வெல்ட்விடைபெற்றார் சுவிட்சர்லாந்து அணியின் பயிற்சியாளர் ஒட்மார் ஹிட்ஸ்பெல்ட் ஓய்வு பெற்றார். தனது சகோதரர் வின்பிரெட் (81) இறந்த துக்கத்துக்கு இடையிலும் அர்ஜென்டீனாவுக்கு எதிராக ஆடிய சுவிட்சர்லாந்து வீரர்களை உற்சாகப்படுத்திய ஹிட்ஸ்பெல்ட் கனத்த இதயத்துடன் விடைபெறுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “அர்ஜென்டீனாவுடனான இந்தத் தோல்வி 1999 சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியைத்தான் எனக்கு நினைவுபடுத்துகிறது. எனது இதயம் முழுவதும் உணர்ச்சி வசத்தால் நிரம்பியுள்ளது. இதுபோன்ற உணர்ச்சிபூர்வமான தருணங்கள் கால்பந்து விளையாட்டில் மட்டுமே கிடைக்கும். அதனால்தான் கால்பந்தை விரும்புகிறேன்” என்றார். சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் விளை…

  25. உலகக்கோப்பையை வென்றால் நெதர்லாந்துக்கு விநோத வெகுமதி :விண்வெளிப் பயணம் உலகக் கோப்பையை நெதர்லாந்து வென்றால் அந்த அணியில் இடம்பெற்றிருக்கும் 23 வீரர்கள் மற்றும் பயிற்சியாளரை விண்வெளிக்கு அழைத்துச் செல்வோம் என அந்நாட்டைச் சேர்ந்த விண்வெளிப் பயண ஏற்பாட்டு நிறுவனம் அறிவித்துள்ளது. 3 முறை இறுதிப் போட்டி வரை முன்னேறியபோதும் இன்னும் நெதர்லாந்து கோப்பையை வெல்லவில்லை. அதன் கோப்பை கனவு தொடர்ந்து நழுவிக் கொண்டேயிருக்கிறது. உலகக் கோப்பையை வெல்வதற்கு வீரர் களை ஊக்கப்படுத்தினால் மட்டும்போதாது, அவர் களுக்கு மிகப்பெரிய வெகுமதியை அளிக்க வேண்டும் என நெதர்லாந்தைச் சேர்ந்த விண் வெளிப் பயண ஏற்பாட்டு நிறுவனமான ரியூம்டீவார் பெட்ரிப் எஸ்எக்ஸி நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஸ்பெயினுக்கு எத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.