விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7839 topics in this forum
-
-
ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக இதுவரை 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த மோசடியின் மூளையாக செயல்பட்டவன் கிட்டி என்ற உத்தம்ஜெயின். இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் தங்களுடைய உண்மையான அடையாளத்தை மறைத்து போலியான மற்றும் கற்பனையான அடையாள ஆதாரங்களை கொடுத்து செல்போன் சிம்கார்டுகளை பெற்றுள்ளனர். பழைய சிம்கார்டுகளை அழித்து விட்டு மீண்டும் புதிய சிம் கார்டுகளை பெற்று தங்கள் செயல்களை தொடர்ந்துள்ளனர். கைப்பற்றப்பட்ட செல்போன் எண்களின் அழைப்பு விவரங்கள், மடிக்கணினி மற்றும் கணினி ஆகியவற்றில் பதிவாகி உள்ள தகவல்கள் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த புரோக்கர்கள் தங்களுக்கு சாதகமான வகையில் பெட்டிங் அமைத்து சூதாடுபவர்களை தங்களுக்கு லாபம் ஏற்படும்…
-
- 9 replies
- 1.6k views
-
-
ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்ட புகார் தொடர்பாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி குருநாத் மெய்யப்பனிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டனர். அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைத்து, அவரது வீட்டுக்கு நேரடியாக வந்து மும்பை போலீசார் சம்மன் வழங்கினார்கள். இதையடுத்து, குருநாத் மெய்யப்பன் போலீசில் ஆஜராவதற்காக விமானம் மூலம் மும்பை புறப்பட்டு சென்றார். பின்னர் மும்பை சென்ற அவரிடம் குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணை மூன்று மணிநேரம் நடைபெற்றது. விசாராணைக்கு பின் குருநாத்தை கைது செய்துள்ளதாக மும்பை போலீஸ் அறிவித்துள்ளது. கூட்டுச்சதி மோசடி ஆகிய 2 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குருநாத் மெய்யப்பனை இன்று நீதிமன்றத்தில் …
-
- 3 replies
- 499 views
-
-
ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக வீரர்கள் மற்றும் தரகர்கள் கைதாகி வரும் நிலையில், பிசிசிஐ தலைவர் சீனிவாசனின் உறவினரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான குருநாத் மெய்யப்பன் இதில் தொடர்பு கொண்டிருப்பதாக மும்பை போலீசார் சந்தேகம் அடைந்தனர். சூதாட்டத் தரகர்களுடன் தொடர்பு கொண்டிருந்ததாக கைது செய்யப்பட்ட நடிகர் விண்டு தாராசிங்கின் செல்போனை மும்பை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, சென்னை அணியின் தலைவர் குருநாத்துடன் விண்டு தாராசிங் பேசிய அடுத்த நிமிடம் அவர், சூதாட்டத் தரகர்களுடனும் பேசியிருப்பதைக் கண்டறிந்தனர். எனவே, இந்த சூதாட்டத்தில் குருநாத்துக்கும் தொடர்பு இருக்கலாம் என்று மும்பை போலீசார் சந்தேகப்பட்டனர். அதனடிப்படையில் இன்று காலை சென்னை வந்த 3 மும்பை போலீசார் குருநாத்திடமு…
-
- 0 replies
- 389 views
-
-
ஐபிஎல் சூதாட்ட விவகாரம் கிரிக்கெட் உலகில் பூதாகரமாக வெடிக்க துவங்கியுள்ளது. இதுவரை இந்த விவகாரத்தில் ஸ்ரீசாந்த் உள்பட கிரிக்கெட் வீரர்கள் மட்டும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் டெல்லி துவக்க வீரர் ஒருவர் மீது போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். அந்த வீரர் இந்த சீசனில் ஆடிய அனைத்து ஆட்டங்களிலும் சொதப்பலாக ஆடியுள்ளார். அவருக்கு சூதாட்டத்தரகர்களுடன் தொடர்பு இருக்கக்கூடும் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் பாகிஸ்தானை சேர்ந்த நடுவர் ஒருவர் மீதும் போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். போட்டிகளின் போது இல்லாமல் தனிப்பட்ட முறையில் அந்த நடுவர் சூதாட்டத்தரகர்களை தொடர்பு கொண்டிருக்கக்கூடும் என போலீசார் http://di…
-
- 0 replies
- 344 views
-
-
ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட இந்தி நடிகர் வின்டூ சிங்கிற்கு சென்னை ஐபிஎல் அணியுடன் நெருங்கிய தொடர்பு இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மறைந்த நடிகரும் மல்யுத்த வீரருமான தாராசிங்கின் மகன் தான் வின்டூ சிங். சூதாட்டத் தரகர்களுடன் நெருங்கிய தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவரை மும்பை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வின்டூ சிங்கை 3 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த மாதம் 6-ஆம் தேதி நடைபெற்ற சென்னை-மும்பை இடையேயான போட்டியில், தோனியின் மனைவி சாக்சியுடன் அமர்ந்து வின்டூ சிங் போட்டியை ரசித்துள்ளார். இதுதவிர விருந்துகளிலும் வீரர்களுடன் அவர் பங்கேற்றிருப…
-
- 2 replies
- 682 views
-
-
புதுடெல்லி: தமது நண்பனும், புக்கியுமான ஜிஜூ ஜனார்தன் ஆசைக்காட்டியதால்தான், தாம் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்த் கண்ணீர்விட்டு கதறியபடியே ஒப்புக்கொண்டுள்ளார். ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், அங்கித்சவான், அஜித் சந்திலா மற்றும் இடைத்தரகர்கள் என 14 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர் நீதிமன்றத்தில் ஆஜர் இந்நிலையில் கைதான ஸ்ரீசாந்த் உள்பட 3 வீரர்களும் டெல்லி நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிமன்றத்தில் ஸ்ரீசாந்த், தான் ஒரு அப்பாவி என்றும், தன்னை இந்த ஊழலில் சிக்க வைத்துவிட்டனர் என்றும் புலம்பினார். இதனிடையே போலீசார் 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டனர். ஆனால் 5 நாட்…
-
- 10 replies
- 908 views
-
-
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 6-வது சீசன் போட்டிகள் இந்தியாவின் முக்கிய நகரங்களில் கடந்த 1 1/2 மாதங்களாக கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த தடவை எந்த அணிக்கு கோப்பை கிடைக்கும் என்று ரசிகர்கள் எதிர் பார்ப்புகளுடன் இருந்த நிலையில், ஐ.பி.எல். ஆட்டங்களில் சூதாட்டம் நடக்கும் தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூதாட்டத்தில் ஈடுபட்டதாக நேற்று முன்தினம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜித் சண்டிலா உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக சென்னையில் நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் 6 தரகர்கள் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே இன்று மும்பையில் 2 தரகர்கள் பிடிபட்டனர். இதுவரை மொத்தம் 22 பே…
-
- 0 replies
- 376 views
-
-
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 'ஸ்பாட்பிக்சிங்' முறையில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீத் சவான்,முன்னாள் வீரரும், தற்போது புக்கியாக செயல்பட்டவருமான அமித்சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களுடன் தொடர்புடைய 16 புக்கிகளும் மும்பை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் கைதான 4 வீரர்களையும் போலீசார் டெல்லியில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அப்போது கிரிக்கெட் வீரர்கள் சூதாட்டக்காரர்களின் வலையில் வீழ்ந்தது எப்படி என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. சூதாட்டக் காரர்கள் சீசனுக்கு தகுந்தபடி செயல்படுவார்கள். அவர்களுக்கு நாட்டைப் பற்றியோ, நாட்டின் பொருளாதாரத்தை பற்றியோ கவலையில்லை. பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரே குறிக…
-
- 0 replies
- 615 views
-
-
பரபரப்பாக நடைபெற்றுவரும் ஆறாவது ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் சூதாட்ட புகாரில் ராஜஸ்தான் அணி வீரர் ஸ்ரீசாந்த்துடன் சேர்த்து சண்டிலா, சவான் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த். இவர் தற்போது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இவருடன் மற்ற வீரர்களான அங்கித் சவான் மற்றும் அஜித் அந்தூலியா ஆகியோரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகின்றனர். இந்நிலையில், நேற்று ராஜஸ்தான் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் மோதிய போட்டியில்,ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோற்றது. இந்த போட்டி முடிந்த பிறகு ஸ்ரீசாந்த் மும்பையில் உள்ள அவரது நண்பரின் வீட்டிலிருந்தும், பிற வீரர்கள் ராஜஸ்தான் அணி வீ…
-
- 0 replies
- 456 views
-
-
இளைஞர்கள் ஐ.பி.எல்.லை விட டெஸ்ட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்-சந்தீப் பட்டீல் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் தலைமை தேர்வாளராக இருப்பவர் சந்தீப் பட்டீல். இவர் மும்பையில் நடந்த ஒரு விழாவில் கலந்துகொண்டார். அப்போது அவர் கூறியதாவது:- இந்தியாவின் இளம் வயது கிரிக்கெட் வீரர்கள் பணம் கொழிக்கும் ஐ.பி.எல். கிரிக்கெட்டை விட டெஸ்ட் போட்டியில் விளையாடுவதை யோசிக்க வேண்டும். தயது செய்து இளைஞர்கள் உண்மையான கிரிக்கெட் விளையாட வேண்டுமென்றால், அது டெஸ்ட் போட்டிதான். ஐ.பி.எல். போட்டியல்ல. ஐ.பி.எல். போட்டி வந்து பணம் கொடுத்தும் வாங்கிய துரித உணவு வீட்டிற்கு போகும் முன் சாப்பிடுவதற்குச் சமம். உங்களுக்கு, உங்கள் அணிக்கு, நாட்டுக்கு, பெற்றோர்களுக்கு பெயர் வாங்கி கொடுக்க நீங…
-
- 1 reply
- 492 views
-
-
தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவுக்கிண்ணத்திற்கான சுற்றுப்போட்டி பிரான்சின் பாரீஸ் புறநகரில் நேற்று நடைபெற்றுள்ளது. தேசத்தின் குரலின் நினைவாக இந்த ஆண்டு மூன்றாவது ஆண்டாக நடத்தப்படும் விளையாட்டுப்போட்டியில் பாரிசில் உள்ள விளையாட்டு கழகத்தினை சேர்ந்த பல கழகங்கள் விளையாடி தங்கள் திறமைகளை வெளிக்கொணர்ந்துள்ளார்கள். தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் விளையாட்டுத்துறையினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த நிகழ்வு வீரர்களை மேலும் உற்சாக படுத்தியுள்ளது. http://www.sankathi24.com/news/29242/64//d,fullart.aspx
-
- 0 replies
- 325 views
-
-
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கும் கொழும்பு ஆனந்தக் கல்லூரிக்குமிடையிலான சிவகுருநாதர் வெற்றிக்கிண்ணத்திற்கான 2வது கிறிக்கட் போட்டி நேற்று 26.04.2013 யாழ் இந்துக் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியது. சிவஞான வைரவர் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூசைகளை தொடர்ந்து விருந்தினர்கள் மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டனர். ஆரம்ப நிகழ்வில் ஆனந்தா கல்லூரி அதிபர் தமிழிலும் யாழ்ப்பாணம் இந்த்துக்கல்லூரி அதிபர் சிங்களத்திலும் உரையாற்றியமை சிறப்பம்சமாகும்.வீரர்கள் அறிமுகத்தை தொடர்ந்து நாணய சுழற்சி இடம் பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் அணித்தலைவர் முதலில் களத்தடுப்பட்டத்தை தெரிவு செய்தார். இதன் அடிப்படையில் களமிறங்கிய ஆனந்தாக் கல்லூரி 50.2 பந்து பரிமாற்றங்களில் சகல …
-
- 3 replies
- 680 views
-
-
'அரசியல் எங்கள் ஆட்டத்தின் நேர்த்தியை குறைக்காது' இலங்கை வீரர்களை சென்னையில் விளையாட அனுமதிக்காதது தங்களின் ஆட்டத்திற்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்திவிடாது என்று ஹைதரபாத் 'சன் ரைசர்ஸ்' அணியின் கேப்டன் குமார் சங்கக்காரா கூறியுள்ளார். இலங்கைக்கு எதிராக வலுத்துவரும் போராட்டங்களின் ஒரு அங்கமாக ஏப்ரல் 3ஆம் தேதி துவங்க இருக்கும் 6வது ஐ.பி.எல் போட்டிகளில் இலங்கையை சேர்ந்த வீரர்கள் சென்னையில் விளையாடுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இலங்கை வீரர்கள் சென்னை போட்டிகளில் பங்கேற்க்கமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்த ஹைதரபாத் 'சன் ரைசர்ஸ்' அணியின் கேப்டன் குமார் சங்கக்காரா, இந்த விவகாரத்தை பொறுத்தவரை, அரசியல் எங்களை சென…
-
- 21 replies
- 1.9k views
-
-
புனேக்கு எதிரான போட்டியில், கிறிஸ் கெய்ல், 66 பந்தில், 17 சிக்ஸர், 13 பவுண்டரியுடன், 175 ரன் அடிக்க, பெங்களூரு அணி 263/5 ரன் எடுத்தது. பெங்களூருவில் நடந்த ஐபிஎல் தொடரின் 31வது லீக் போட்டியில் புனே வாரியர்ஸ் – பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின. பெங்களூரு அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. புனே அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டன. அஜந்தா மெண்டிஸ், அபிஷேக் நாயர், ராகுல் சர்மா நீக்கப்பட்டனர். அவர்களுக்குப் பதிலாக, அலி முர்டஸா, இஷ்வர் பாண்டே, மிட்ச்செல் மார்ஷ் ஆகியோர் இடம்பெற்றனர். http://youtu.be/8zx7UWNMTCU டாஸ் வென்ற புனே கேப்டன் ஆரோன் ஃபின்ச், ஃபீல்டிங் தேர்வு செய்தார். இந்த முடிவே வினையாகிப் போனது. பெங்களூரு அணிக்கு கிறிஸ் கெய்ல், தில்ஷன் துவக்கம் தந்தனர். …
-
- 9 replies
- 832 views
-
-
பிரிட்டனில் இதுவரை இல்லாத வகையில் குதிரைப் பந்தயப் போட்டிகளில் மிகப் பெரும் மோசடி நடந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இங்கே குதிரைப் பந்தயத்தின் தலைமையகம் என்று கருதப்படும் நாட்டின் கிழக்கேயுள்ள நியூ மார்க்கெட் பகுதியில் இருக்கும் கோடோல்ஃபின் குதிரை லாயத்திலுள்ள 11 குதிரைகளுக்கு ஊக்க மருந்து அளிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள 45 குதிரைகளில் பதினொன்றுக்கு ஊக்க மருந்து அளிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ள நிலையில், கோடோல்ஃபின் குதிரை லாயத்தின் பயிற்சியளர் மஹ்மூத் அல் ஜரூனி, பிரிட்டிஷ் குதிரைப் பந்தய விசாரணை ஆணையத்தின் முன்னர் ஆஜராகவுள்ளார். தடை செய்யப்பட்ட ஊக்க மருந்துகளை குதிரைகளுக்கு அளித்ததையும் அது மிகப் பெரும் தவறு என்பதையும் அல் ஜரூனி ஒப்புக்கொண்டுள்ள…
-
- 0 replies
- 709 views
-
-
அமெரிக்க மரதன் ஓட்டத்தில் இலங்கைக்கு 14வது இடம் அமெரிக்காவில் இடம்பெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த அநுராத குரே 14ஆம் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார். இவ் மரதனம் ஓட்டப் போட்டியை இலங்கை வீரர் இரண்டு மணித்தியாலம் 17 நிமிடம் 53 செக்கன்களில் கடந்துள்ளார். இந்த போட்டியில் 35,000 வீரர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.adaderana.lk/tamil/news.php?nid=38017
-
- 1 reply
- 489 views
-
-
ரியோ 150 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் போல்ட் சாம்பியன் உசெய்ன் போல்ட் பிரசிலின் ரியோ டி ஜனீரோவில் கோபாகபானா கடற்கரையில் நடந்த ஓட்டப்பந்தயப் போட்டியில் 150 மீட்டர் பிரிவில் வெற்றி பெற்றதன் மூலம் புதிய பந்தய பருவத்தை வெற்றிக் கணக்கோடு துவங்கிருக்கிறார் உலகின் அதிவேக மனிதர் என்ற பட்டத்துக்கு சொந்தக்காரரான உசெய்ன் போல்ட். ஆறு முறை ஒலிம்பிக் தங்கம் வென்றவரான உசெய்ன் போல்ட் 14.42 விநாடிகளில் இந்தப் போட்டியில் 150 மீட்டங்களை ஓடிக் கடந்தார். மான்செஸ்டரில் நடந்த ஒரு பந்தயத்தில் 150 மீட்டர் பிரிவில் போல்ட் ஏற்படுத்திய சாதனை நேரத்தை இந்த முறை அவரால் எட்ட முடியவில்லை. இந்த வருடத்தில் இதுதான் தனது முதல் பந்தயம் என்பதால், ஆரம்பத்திலேயே வந்துள்ள வெற்றி மகிழ்ச்சியைத் தருகிறத…
-
- 0 replies
- 383 views
-
-
பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழவினால் ஆண்டு தோறும் நடத்தப்படும் மாவீரர் நினைவு உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி தொடக்கம் பிரான்சில் தமிழர்விளையாட்டுத்துறைபிரான்சுஈழத்தமிழர்உதைபந்தாட்டச்சம்மேளனஆதரவுடன் நடாத்தும் மாவீரர்நினைவுசுமந்தபோட்டிகளிலில் உதைபந்தாட்டப் சுற்றுப்போட்டியின் இறுதிசுற்றான 1வது 2வது இடத்திற்கானபோட்டிகள் இன்றுசெவரோன் மாநகரத்தில் இடம் பெற்றிருந்தது. நல்லூர்ஸ்தான் விளையாட்டுக்கழத்தினருக்கும்,ஈழவர்விளையாட்டுக்கழகத்தினருக்கும் நடைபெற்றபோட்டியில் நல்லூர்ஸ்தான் விளையாட்டுக்கழகத்தினர்வெற்றிபெற்றிருந்தனர். உதயசூரியன் விளையாட்டுக்கழகத்திற்கும்,தமிழர்விளையாட்டுக்கழகம் 93 ற்கும் நடைபெற்றபோட்டியில் தமிழர்விளையாட்டுக்கழகம் -93 வெற்றியீட்டியிருந்தது. Bபிரிவுக்கானபோட்டி…
-
- 0 replies
- 377 views
-
-
-
சினம் கொண்ட பல தமிழர்களின் முயற்சியால் இணையத்தில் பிரேத்தியக முறையில் ஒரு விளையாட்டு மென்பொருளை தயாரித்துள்ளனர் ...ஐந்தாம் நூற்றாண்டில் இலங்கையில் குடியேறி இன்று நாட்டை கையில் வைத்திருக்கும் ராஜபக்ஷேவை தண்டிபதற்காக இந்த விளையாட்டு மென்பொருள் தயாரித்துள்ளனர் ... கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையத்தின் முகவரியை சொடுக்கி அவனுக்கு நீங்கள் விரும்பியதுபோல் தண்டனை கொடுங்கள் .. இது உங்களுக்கு கிடைத்த வாய்ப்பு விளையாடி தண்டனை கொடுக்க தவறாதீர் தமிழர்களே ....!!! http://www.123bee.com/play/show_your_kolaveri/
-
- 2 replies
- 468 views
-
-
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இலங்கை வெளியேற்றப்படலாம்: ஐ.தே.க சர்தேச கிரிக்கெட் கவுன்ஸிலினால் கொடுக்கப்பட்ட காலக்கெடு முடிவதன் முன்னர் 'ஸ்ரீலங்கா கிரிக்கெட்' டின் தேர்தல்களை நடந்த தவறினால் இலங்கை சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து வெளியேற்றப்படலாம் என ஐக்கிய தேசிய கட்சி எச்சரித்தது. முன்னர் வழங்கப்பட்டிருந்த காலக்கெடு இலங்கை கேட்டதற்கு இணங்க 2013 ஆம் ஆண்டு யூலை வரை நீடிக்கப்பட்டது என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், தேர்தல்களை நடத்த இலங்கை போதிய காலத்தை ஐ.சி.சி கொடுத்துவிட்டது. ஆனால் இ…
-
- 2 replies
- 902 views
-
-
கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய அணி வெற்றி இலங்கை துடுப்பாட்டச் சங்கத்தின் ஏற்பாட்டில் பாடசாலைகளின் 19 வயதுப்பிரிவு அணிகளுக்கிடையில் மட்டுப்படுத்தப்படாத பந்துபரிமாற்றங்கள் கொண்ட துடுப்பாட்டப் போட்டி ஒன்றில் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய அணி வெற்றிபெற்றுள்ளது. கடந்த திங்கட்கிழமை மானிப்பாய் இந்து கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மானிப்பாய் இந்து கல்லூரி அணியினை எதிர்த்து கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய அணி மோதியது. நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய மானிப்பாய் இந்து கல்லூரி அணி முதல் இனிங்ஸில் சகல இலக்குகளையும் இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய அணி 173 ஓட்ட…
-
- 46 replies
- 2.3k views
-
-
யாழ் மத்திய கல்லூரி மற்றும் யாழ் பரியோவான் கல்லூரி பங்கெடுக்கும் 107 வது வடக்கின் பெரும் போர் Big Match நாளை மார்ச் 14 இல் ஆரம்பித்து 15 மற்றும் 16ம் திகதி வரை நடைபெற உள்ளது. இது தொடர்பாக யாழ் மத்திய கல்லூரி மாணவர்கள் வெளியிட்டுள்ள நினைவுப்பாடல். மிகவும் நட்போடும்.. பொறுமையோடும்.. உச்ச ஒழுக்கத்தோடும்.. மாணவர்களின் திறன் வளர்க்கும் வகையிலும் போட்டியை இரு பாடசாலை மாணவர்களும்.. நடத்தி முடிக்க வாழ்த்துக்கள். http://youtu.be/05aJkde47mA படங்கள் யாழ் மத்திய கல்லுரி முகநூல். https://www.facebook.com/pages/Jaffna-Central-College/183860113822
-
- 27 replies
- 2k views
-
-
முரளியின் தமிழர் என்ற அடையாளத்தை பகடையாக வைத்து தமிழர்களுக்கு எதிராக முரளியை பாவித்து வரும் சிறீலங்கா கிரிக்கெட் அணியின் முன்னால் அணித் தலைவர் அர்யுனா ரணதுங்கா ஒரு பௌத்த பேரினவாதியாவர். இது சிறீலங்கா கிரிக்கெட் அணியின் அரசியல் முகத்தை வெளிகாட்டியது. தற்போது, அதே கிரிக்கெட் அணி மேலும் அரசியல் மயமாகி வருகிறது. இதன் தொடர்ச்சியாகஇ தற்போது, அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் திறன்குறைவான மகன் அணிக்குள் நுழைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தெரியவருவதாவது, ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமின் ரம்புக்வெல்ல இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணியுடன் கண்டியில் நடைபெறவுள்ள 20-20 போட்டியில் பங்குபற்ற தெரிவு செய்யப்பட்டுள்ள 16 பேர் கொண்ட அ…
-
- 0 replies
- 509 views
-