விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7858 topics in this forum
-
இந்திய பவுலர்களின் மோசமான வீச்சுக்கு கேப்டன்களே காரணம்: இயன் சாப்பல் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் முன்னேற்றத்தைத் தடுப்பது கேப்டன்களின் தவறான அணுகுமுறையே என்கிறார் இயன் சாப்பல். இது குறித்து ஈ.எஸ்.பி.என். கிரிக் இன்ஃபோ இணையதளத்தில் அவர் எழுதிய பத்தி ஒன்றில் கூறியிருப்பது வருமாறு: "உத்தி ரீதியாக, வலுவான இளம் பேட்ஸ்மென்களை சர்வதேச கிரிக்கெட்டிற்கு கொண்டு வருவதில் இந்தியா மற்ற கிரிக்கெட் நாடுகளை விட பல மைல் தூரம் முன்னால் உள்ளது. இது ஆஸ்திரேலியா, மற்றும் தென் ஆப்பிரிக்கா போன்ற வலுவான அணிகளுக்கே பொறாமை ஏற்படுத்துவதாக இருக்கலாம். ஆனால், கேப்டன்சி, பவுலிங், அருகில் கேட்ச் பிடித்தல் ஆகிய பிரிவுகளில் இந்தியா இன்னும் சில தூரம் செல்ல வேண்டியுள்ளது. இந்திய பந்துவீச்சி…
-
- 0 replies
- 889 views
-
-
கோலியின் அதிரடியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா இரண்டாவது ஒருநாள் போட்டியில் அணித் தலைவர் விராட் கோலியின் அபார சதத்தால் அஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா. அஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலியின் அபாரமான சதத்தால் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிககளுக்கிடையிலான 2 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று அவுஸ்திரேலியாவின் அடிலெய்டில் இடம்பெற்றது. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. அந்தவகையில் அவுஸ்திரேலிய அணி சார்பில் பின்ச் 6 ஓட்டங்களுடனும் அலெக்ஸ் கேரி 18 ஓட்டங்களுடனும் கவாஜா 21 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து வெளியேறினார…
-
- 1 reply
- 889 views
-
-
ஒலிம்பிக்கில் இந்திய இசைக்கு அமெரிக்கர்களின் ஆட்டம்
-
- 3 replies
- 889 views
-
-
இலங்கை கனிஷ்ட மெய்வல்லுனர் குழாமில் வட மாகாண வீரர் நெப்தலி ஜொய்சன் 2018ஆம் ஆண்டானது அதிக உள்ளூர் மற்றும் சர்வதேச மெய்வல்லுனர் போட்டித் தொடர்களை கொண்டதாக அமையவுள்ளதால் இலங்கையின் சுவட்டு மற்றும் மைதான நிகழ்ச்சி வீர வீராங்கனைகளுக்கு தங்களது திறமைகளை வெளிக்காட்ட அதிக சந்தர்ப்பத்தினை ஏற்படுத்தி தரும் விதமாக அமையவுள்ளது. இதில் கனிஷ்ட மெய்வல்லுனர் வீரர்கள் அடுத்த வருடத்தில் பல சர்வேதச தொடர்களில் பங்கேற்கவுள்ளனர். இந்நிலையில், குறித்த போட்டித் தொடர்களை முன்னிட்டு வீரர்களை தயார்படுத்தும் நோக்கில் 27 பேர் கொண்ட தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் குழாமை இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்தது. இதில் 17 வீரர்களும…
-
- 0 replies
- 889 views
-
-
-
வங்கதேசத்தை மூழ்கடித்த ராம்தின், டேரன் பிராவோ சாதனை சதங்கள் செயிண்ட் கிட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 3வதும், இறுதியுமான ஒரு நாள் போட்டியில் மேற்கிந்திய அணியின் பேட்டிங் வங்கதேசத்தை மூழ்கடித்தது. முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 338 ரன்கள் விளாச, வங்கதேசம் 247 ரன்களை மட்டுமே எடுத்து படுதோல்வி தழுவியது. இதன் மூலம் 3 ஒருநாள் போட்டிகளிலும் தோல்வி அடைந்தது வங்கதேசம். வெஸ்ட் இண்டீஸ் அணியின் தினேஷ் ராம்தின், டேரன் பிராவோ இணைந்து 3வது விக்கெட்டுக்காக 258 ரன்கள் சேர்த்தது. புதிய ஒருநாள் சாதனையாகும். இதற்கு முன்னர் தென் ஆப்பிரிக்க ஜோடி ஹஷிம் ஆம்லா, ஏ.பி.டிவிலியர்ஸ் பாகிஸ்தானுக்கு எதிராக 3வது விக்கெட்டுக்காகச் சேர்த்த 238 ரன்களே உலக சாதனைய…
-
- 0 replies
- 887 views
-
-
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை 2017 அடுத்த ஆண்டு ஜூன் 17 துவக்கம் ! அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடக்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பையின், அட்டவணை வெளியாகியுள்ளது. இதில் ஆஸ்திரேலியா, நியுஸிலாந்து, இங்கிலாந்து, பங்களாதேஷ் ஆகிய அணிகள் ஏ பிரிவிலும்; இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை ஆகிய அணிகளும் பி பிரிவிலும் சேர்க்கப்பட்டு உள்ளது. vikatan
-
- 4 replies
- 887 views
-
-
Published By: VISHNU 27 AUG, 2024 | 11:02 PM (நெவில் அன்தனி) சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐசிசி) அடுத்த சுயாதீனத் தலைவராக இந்தியாவின் ஜெய் ஷா போட்டியின்றி தெரிவானார். 2019இலிருந்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் கௌரவ செயலாளராகவும் 2021இலிருந்து ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைவராகவும் பதவி வகிக்கும்ஜெய் ஷா, ஐசிசியின் தலைவர் பதவியை டிசம்பர் 1ஆம் திகதி பொறுப்பேற்பார். சமகாலத் தலைவர் க்ரெய்க் பாக்லே, மூன்றாவது முறையாக பதவியேற்க முன்வராத நிலையில் அடுத்த தலைவர் பதவிக்கு ஜெய் ஷாவின் பெயர் மாத்திரமே பிரேரிக்கப்பட்டது. இதனை அடுத்து அவர் போட்டியின்றி தெரிவானார். தலைவர் பதவிக்கு தெரிவானதை அடுத்து, உலகளாவிய…
-
- 5 replies
- 887 views
- 1 follower
-
-
குமார் சங்கக்கார இலங்கை அணித் தலைவர் பதவியை துறக்கத் தீர்மானம்:- அரசியல் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகிறது:- இலங்கை கிரிக்கட் அணியின் தலைவர் குமார் சங்கக்கார தமது தலைவர் பதவியை துறப்பதற்கு தீர்மானித்துள்ளார். பதவியை இராஜினாமா செய்வது குறித்த தீர்மானத்தை இலங்கை கிரிக்கட் சபை நிர்வாகிகளிடம் அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பத்தாம் உலகக் கிண்ணப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியிடம் தோல்வியடைந்ததனைத் தொடர்ந்து குமார் சங்கக்கார இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளார். அணித் தலைவர் பதவியை வேறும் ஒருவர் ஏற்றுக் கொள்வதற்கு இதுவே சிறந்தத் தருணமாக தாம் கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார். 2015ம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டித…
-
- 0 replies
- 887 views
-
-
செயலாளர் பதவியை வகிக்கும் முதலாவது தமிழன் -ஏ.தேவராஜா- "இலங்கை கிரிக்கெட் அணி தற்போது சர்வதேச ரீதியில் மிகவும் பலம் வாய்ந்த ஒரு அணியாகத் திகழ்வதினால், எதிர்வரும் உலக கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் இறுதி ஆட்டம் வரை இலங்கை முன்னேறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது" இவ்வாறு ஸ்ரீலங்கா கிரிக்கெட் இடைக்காலக்குழுவின் செயலாளர் கே.மதிவாணன் தினக்குரலுக்கு அளித்த விசேட பேட்டியில் தெரிவித்தார். இப்பேட்டியில் அவர் முதலில் தன்னைப் பற்றி தெரிவிக்கையில்; எனது சொந்த இடம் பருத்தித்துறை. நான் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியில் கல்வி கற்றேன். சிறுவயதில் இருந்து எனக்கு கிரிக்கெட்டில் மிகவும் ஆர்வம். கல்லூரியின் கிரிக்கெட் அணியில் நான் சிறப்பாக விளையாடியதினால் யாழ். மாவட்ட…
-
- 0 replies
- 887 views
-
-
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு ஆறு பேர் விண்ணப்பம்! In கிாிக்கட் August 2, 2019 5:02 am GMT 0 Comments 1166 by : Anojkiyan இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு ஆறு பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்த நிலையில், பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் கடந்த 30ஆம் திகதியுடன் முடிவடைந்தது. இந்த நிலையில், தற்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உட்பட, அவருடன் 6 பேர் பயிற்சியாளர் பதவிக்கான போட்டியில் உள்ளனர். ஐ.பி.எல்.லில் ஐதராபாத் அணியின் பயிற்சியாளராக இருக்கும…
-
- 2 replies
- 886 views
-
-
ஓராண்டில் லண்டன் ஒலிம்பிக்ஸ் லண்டன் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க ஒராண்டு இருக்கும் நிலையில், அதை குறிக்கும் விதமாக பல்வேறு நிகழ்வுகள் லண்டன் நகரில் நடைபெறுகின்றன. ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் திட்டமிட்டபடி சரியான பாதையில் சென்று கொண்டிருக்கின்றன என போட்டி ஏற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள். எனினும் இன்னும் பல அரங்குகளில் பெரிய அளவில் பணிகள் முடிவுறாமல் உள்ளன என்றாலும், இது வரை சாதிக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து தாங்கள் பெருமை கொள்வதாக லண்டன் ஒலிம்பிக் குழுவின் தலைவர் செபாஸ்டின் கோ தெரிவித்துள்ளார். இந்தப் போட்டிகள் மேட்டுக்குடி மக்களின் ஒரு ஊதாரித்தனம் என்றும், முதலில் எதிர்பார்த்து திட்டமிடப்பட்டதை விட செலவினங்கள் பல மடங்கு உயர்ந்து 15 பில்லியன்…
-
- 2 replies
- 886 views
-
-
இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்சியாளர் டொம் மூடி பதவி விலகினார் இலங்கைக் கிரிக்கட் அணியின் பயிற்சியாளரான ஆஸ்திரேலிய நாட்டவரான டொம் மூடி, இலங்கைக்கான பயிற்சியாளர் என்ற பதவியினைத் தான் தொடர்ந்தும் வகிக்கப் போவதில்லை என்று உத்தியோக பூர்வமாக இலங்கைக் கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபைக்குத்(சிறிலங்கா கிறிக்கட்) தெரிவித்திருக்கிறார். இவரது இந்த அறிவிப்பினை தமிழோசையிடம் உறுதி செய்த சிறிலங்கா கிரிக்கட்டின் செயலாளர் கங்காதரன் மதிவாணன் எதிர்வரும் 31 ம் திகதியுடன் இலங்கை அணியுடன் முடிவடையவுள்ள இவருடனான இரண்டுவருட ஒப்பந்தத்தினை தனது குடும்ப நலன்களைக் கருத்திற் கோண்டே எடுத்தாகத் தம்மிடம் தெரிவித்துள்ளதாகவும், இவரது இந்த முடிவினை சிறிலங்கா கிரிக்கட் திருப்தியாக ஏற்றுக் கொள்வதாகவு…
-
- 1 reply
- 886 views
-
-
நியூஸிலாந்து - இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கு வித்தியாசமான முறையில் தயாரான கிண்ணம் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தத் தொடரின் முதல் ஆட்டம் கிறைஸ்ட்சர்ச் நகரில் நாளை 28 ஆம் திகதி தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடருக்கு குரோவ்-தோர்ப் டிராபி என பெயரிடப்பட்டுள்ளது. மறைந்த நியூஸிலாந்து கிரிக்கெட் வீரர் மார்ட்டின் குரோவ் மற்றும் இங்கிலாந்தின் கிரஹாம் தோர்ப் ஆகியோரை கவுரவிக்கும் விதமாக இந்த நடவடிக்கையை இருநாட்டு கிரிக்கெட் சபைகளும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன. சிறப்பம்சமாக இரு வீரர்களின் மட்டைகளிலிருந்து பெறப்பட்ட மரத்திலிருந்து கோப்பை வட…
-
- 14 replies
- 886 views
- 1 follower
-
-
வெறும் 12 பந்துதான்.. யுவராஜ் சிங்கின் உலக சாதனை சமன்...! மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவின் பிக்பாஷ் தொடரில் விளையாடிய மேற்கு இந்தியத் தீவுகள் வீரர் கிறிஸ் கெய்ல் வெறும் 12 பந்துகளில் அரை சதமடித்து உலக சாதனையை சமன் செய்து விட்டார். டுவென்டி 20 போட்டிகளில் இது நாள் வரை இந்த சாதனையை இந்தியாவின் யவராஜ் சிங்தான் வைத்திருந்தார். தற்போது அதை சமன் செய்துள்ளார் கெய்ல். சமீப காலமாக சர்ச்சையில் சிக்கி வந்த கெய்லுக்கு இந்தப் புதிய சாதனை சற்று ஆறுதல் தரும் என்று நம்பலாம். பிக்பாஷ் சீரிஸ் ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் டுவென்டி 20 தொடர் நடந்து வருகிறது. இதில் மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணியின் சார்பில் ஆடி வருகிறார் கெய்ல். அடிலைடுக்கு எ…
-
- 3 replies
- 885 views
-
-
பாகிஸ்தானில்கூட இவ்வளவு அன்பை நான் அனுபவித்தது இல்லை: ஷாகித் அப்ரிடி கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்தில் ஷாகித் அப்ரிடி | படம்: ஏ.பி. 'பாகிஸ்தானில்கூட இவ்வளவு அன்பை நான் அனுபவித்தது இல்லை' டுவென்டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்தியா வந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷாகித் அப்ரிடி, தனது நாட்டில்கூட இவ்வளவு அன்பை தான் அனுபவித்தது இல்லை என தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் அணியினர் இந்தியா வருவது தள்ளிக்கொண்டே சென்ற நிலையில், நேற்று (சனிக்கிழமை) இரவு பாகிஸ்தான் அணி வீரர்கள் டுவென்டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்தியா வந்தடைந்தனர். வ…
-
- 2 replies
- 885 views
-
-
சம்பியன்ஸ் லீக்: காலிறுதி முதல் லெக் போட்டிகளின் முடிவுகள் ஐரோப்பிய உயர்தர கால்பந்து கழகங்களுக்கிடையில், நடத்தப்படும் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதி முதல் லெக் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. நேற்று ஆரம்பமான காலிறுதி முதல் லெக்கில், இரண்டு போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளின் முழுமையான முடிவுகளை தற்போது பார்க்கலாம், இங்கிலாந்தில் உள்ள டோட்டன்ஹாம் ஹொட்ஸ்பூர் விளையாட்டரங்கில் நடைபெற்ற முதல் போட்டியில், டோட்டன்ஹாம் ஹொட்ஸ்பூர் அணியும், மென்செஸ்டர் சிட்டி அணியும் பலப்பரீட்சை நடத்தின. இரசிகர்களின் உச்சக் கட்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களும் சிறப்பாக விளையாடினர். இரு அணி வீரர்களும்…
-
- 1 reply
- 884 views
-
-
`எப்படி இருக்கீங்க?!’ - கொஞ்சும் தமிழில் மகள் கேட்ட கேள்விக்கு தோனி பதில் தோனி, தனது மகளுடன் தமிழில் உரையாடும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். ஆஸ்திரேலியத் தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ள தோனி, தனது குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு வருகிறார். அவ்வப்போது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு வருகிறார். சமீபத்தில் சத்தீஸ்கரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தோனி, 2011ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டி குறித்த நினைவலைகளைப் பகிர்ந்திருந்தார். யுவராஜுக்கு முன்னதாகத் தாம் களமிறங்கியது ஏன் என்பது குறித்தும் அவர் பேசியிருந்தார். ஓய்வு நாள்களில் தனது மகள் ஸிவாவுடன் இருப்பது போன்ற வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட…
-
- 0 replies
- 884 views
-
-
நான் தெரிவிப்பதற்கெல்லாம் தலையாட்டுபவர் இல்லை ரவிசாஸ்திரி- விராட் கோலி Share நான் தெரிவிப்பதற்கெல்லாம் தலையாட்டுபவரல்ல ரவி சாஸ்திரி என இந்திய அணியின் தலைவர் விராட்கோலி தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவிற்கு இந்திய அணியினர் பயணமாவதற்கு முன்னர் விராட்கோலி இதனை தெரிவித்துள்ளார். நீங்கள் சொல்வதெற்கெல்லாம் ரவிசாஸ்திரி தலையாட்டுவாரா என நிருபர் ஒருவர் விராட்கோலியிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள விராட்கோலி நான் கேள்விப்பட்டதிலேயே மிகவும் வேடிக்கையான விடயம் இதுதான் என குறிப்பிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட்டில் நான் தெரிவித்த பல விடயங்களை அதிகம் நிராகரித்தவர் பயிற்றுவிப்பாளர் ரவிசாஸ்திரிதான் என விராட்கோல…
-
- 0 replies
- 884 views
-
-
[size=2] [/size] [size=2] [/size] [size=2] [/size] [size=2] [/size] [size=2] [/size] [size=2] [/size] [size=2] [/size] [size=2] [/size] [size=2] [/size]
-
- 3 replies
- 883 views
-
-
மெத்தியூஸின் அதிரடியால் தென்னாபிரிக்காவுக்கு வெற்றியிலக்கு 300 மெத்தியூஸின் அசத்தலான துடுப்பாட்டம் காரணமாக இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து 299 ஓட்டங்களை பெற்று, தென்னாபிரிக்க அணிக்கு வெற்றியிலக்காக 300 ஓட்டங்களை நிர்ணியித்துள்ளது. இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் ஐந்தாவதும் இறுதியுமானதுமான போட்டி இன்று கொழும்பு, ஆர்.பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமானது. இதில் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது. அதன்படி இலங்கை அணி சார்பில் களமிறங்கிய நிரோஷன் திக்வெல்ல மற்றும் உபுல் த…
-
- 1 reply
- 883 views
-
-
காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற இலங்கை குத்துச்சண்டை வீரர் மஞ்சு வன்னியராச்சி, தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தி சிக்கியுள்ளார். டில்லியில் 19வது காமன்வெல்த் போட்டி சமீபத்தில் நடந்தது. இதில் பங்கேற்ற இலங்கை அணி, ஒரே ஒரு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் என 3 பதக்கம் மட்டும் வென்றது. இப்போது அந்த தங்கமும் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குத்துச்சண்டை "பாண்டம்வெயிட்' பிரிவில் மஞ்சு வன்னியராச்சி (30) தங்கம் வென்று இருந்தார். இது 72 ஆண்டுகளுக்குப் பின் இலங்கை அணி பெற்ற தங்கப்பதக்கமாகும். ஆனால் இவர் தடைசெய்யப்பட்ட "ஸ்டெராய்டு' என்ற ஊக்கமருந்தை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. இதுகுறித்து லக்பிமா என்ற பத்திரிகை வெளியிட்ட செய்தியில்,"" குத்துச்சண்டையில் ஊக்கத்த…
-
- 2 replies
- 883 views
-
-
அவுஸ்திரேலியாவுடனான முதல் இறுதியாட்டம் 6 விக்கெட்டுகளால் இந்திய அணி வெற்றி [03 - March - 2008] அவுஸ்திரேலியாவில் நடைபெறும் முக்கோண ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் இறுதியாட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை தோற்கடித்துள்ளது. 240 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா 45.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 242 ஓட்டங்கள் எடுத்து முதல் இறுதியாட்டத்தில் வெற்றி பெற்றது. மூன்று இறுதியாட்டங்களைக் கொண்ட இந்தப் போட்டியில் முதல் இறுதியாட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை சிட்னியில் நடைபெற்றது. இந்தியாவுக்கு எதிரான இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் ஆடிய அவுஸ்திரேலியா 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்க…
-
- 0 replies
- 883 views
-
-
இங்கிலாந்து-ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் அணிகள் இடையே வரலாற்று புகழ்மிக்க 'ஆஷஸ்` டெஸ்ட் தொடர் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த போட்டி நடத்தப்படுகிறது. இதன்படி 65-வது ஆஷஸ் டெஸ்ட் கடந்த மாதம் இங்கிலாந்தில் தொடங்கியது. இதில் முதல் 4 டெஸ்டில் இரு அணியும் தலா ஒரு வெற்றி பெற்றன. இரு போட்டி டிராவாகின. இதனால் தொடர் சமன் ஆன நிலையில் கோப்பையை வெல்வது யார் என்பதை நிர்ணயிக்கும் பரபரப்பான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த 20ஆம் தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 332 ரன்களும், ஆஸ்ட்ரேலியா 160 ரன்களும் எடுத்தன. பின்னர் 172 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 9 …
-
- 2 replies
- 883 views
-
-
இந்தியா உள்ளே பங்களாதேஷ் வெளியே ! பங்களாதேஷ் அணியுடனான போட்டியில் இந்திய அணி 28 ஓட்டத்தினால் வெற்றிபெற்று அரையிறுக்குள் நுழைந்துள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 40 ஆவது போட்டி மோர்த்ரசா தலைமையிலான பங்களாதேஷ் மற்றும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு பேர்மிங்கமில் ஆரம்பமானது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 314 ஓட்டங்களை குவித்தது. 315 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பங்களாதேஷ் அணி 48 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 286 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 28 ஓட்டத்தினால் தோல்வியை சந்தித்துள்…
-
- 2 replies
- 883 views
-