விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7840 topics in this forum
-
மெஸ்ஸி 100 ஆர்ஜென்ரினா அணியின் தலைவரும் பார்ஸிலோனா அணியின் நட்சத்திர வீரருமான மெஸ்ஸி பார்ஸிலோனா அணிக்காக தனது 100ஆவது ஆட்டத்தினை நேற்றுமுன்தினம் நிறைவு செய்தார். வெற்றி மேல் வெற்றி குவித்து வரும் மெஸ்ஸிக்கும் பார்ஸி லோனாவுக்கும் ஏனோ தெரியவில்லை இந்த ஆட்டம் வெற்றியைக் கொடுக்கவில்லை. மெஸ்ஸியின் நூறாவது ஆட்டத்தில் உரோமா அணியுடன் பார்ஸிலோனா மோதியது. இந்த ஆட்டத்தின் ஆரம்பத்தில் பார்ஸி லோனாவின் ஆதிக்கம் இருந்த போதிலும் உரோமாவின் முன்களவீரர் ஒருவர் மைதானத்தின் மத்திய பகுதியில் வைத்து பதில்கோலை விளாச ஆட்டம் 1-1 என்று முடிவடைந்தது. உரோமாவை மிக இலகுவாக பார்ஸிலோனா வீழ்த்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட காரணத்தினால் ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தமையானது கிட்டத்தட்ட பார்ஸிலோனாவின் தோல்வி…
-
- 2 replies
- 318 views
-
-
இலங்கை அணியினரின் பஸ்ஸில் பெற்றோல் திருட்டு இங்கிலாந்துக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் பஸ்ஸிலிருந்து திருடர்களால் சுமார் 700 ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான பெற்றோல் திருடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிடில் செக்ஸ் பிராந்திய அணியுடனான 3 போட்டியின் பின்னர் ஹோட்டலிருந்து வெளியேறியபோது இப்பெற்றோல் திருட்டு குறித்து இலங்கை அணியினர் அறிந்துகொண்டதாக அணியின் முகாமையாளர் அநுர தென்னகோன் தெரிவித்துள்ளார். இலங்கை அணியினர் மேற்கு ட்ரைடன் பகுதியில் கிரவுண் பிளாஸா ஹோட்டலில் தங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும் இதனால் இலங்கை அணியின் எந்தவொரு திட்டமும் பாதிக்கப்படவில்லை எனவும் குறித்த பஸ் கம்பனியினால் இப்பிரச்சினை தீர்க்கப்பட்டதாகவும் அ…
-
- 2 replies
- 1.5k views
-
-
ஒலிம்பிக்கிலும் இனி கிரிக்கெட். 2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லொஸ்ஏஞ்சல்ஸ் நகரில் இடம்பெறவுள்ளது. இந்த ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு போட்டியான ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. 1900 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் மட்டும் கிரிக்கெட் இடம் பிடித்தது. அதன் பிறகு விடுப்பட்ட கிரிக்கெட்டை மீண்டும் இணைக்க நூற்றாண்டு கால முயற்சி ஒரு வழியாக வெற்றியின் விளிம்பிற்கு வந்துள்ளது. குறித்த பரிந்துரை பட்டியலில் பிளாக் கால்பந்தாட்டம், பேஸ்பால், சாப்ட்பால் ஆகிய விளையாட்டுகளும் இடம் பெற்றுள்ளன. 141-வது சர்வதேச ஒலிம்பிக்…
-
- 2 replies
- 643 views
- 1 follower
-
-
ஓகே சொன்ன ஐபிஎல் நிர்வாகம்... சி.எஸ்.கேவுக்கு மீண்டும் திரும்பும் டோணி... விசில் போடு! lசூதாட்ட புகார் காரணமாக விளையாடாமல் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மீதான தடை சில மாதங்களுக்கு முன் நீக்கப்பட்டது. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2018ல் நடக்கும் ஐபிஎல் போட்டியில் மீண்டும் விளையாடும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் 2018ல் நடக்கும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்காக மீண்டும் டோணி விளையாடுவாரா என சந்தேகங்கள் எழுப்பப்பட்டது. டோணி சென்னை சூப்பர் கிங்ஸ் உடையில் இருக்கும் போட்டோவும் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் டோணி மீண்டும் சென்னை அணிக்காக விளையாடுவார் என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இன்னும் சில தினங்களில் அவர் அணியில் இண…
-
- 2 replies
- 2.8k views
-
-
கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார் டில்ஷான் சர்வதேச ஒருநாள் மற்றும் இருபதுக்கு-20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறவுள்ளதாக இலங்கை அணியின் சிரேஷ்ட வீரரும் ஆரம்பதுடுப்பாட்ட வீரருமான திலகரட்ண டில்ஷான் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய அணிக்கெதிராக தம்புள்ளையில் இடம்பெறவுள்ள 3 ஆவது ஒருநாள் சர்வதேச போட்டியுடனும் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ள 2 ஆவது இருபதுக்கு-20 போட்டியுடனும் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வுபெறவுள்ளதாக 39 வயதுடைய டில்ஷான் தெரவித்துள்ளார். இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரரான டில்ஷான், 87 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5492 ஓட்டங்களையும் 39 விக்கெட்டுகளையு…
-
- 2 replies
- 447 views
-
-
இந்தியா உள்ளே பங்களாதேஷ் வெளியே ! பங்களாதேஷ் அணியுடனான போட்டியில் இந்திய அணி 28 ஓட்டத்தினால் வெற்றிபெற்று அரையிறுக்குள் நுழைந்துள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 40 ஆவது போட்டி மோர்த்ரசா தலைமையிலான பங்களாதேஷ் மற்றும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு பேர்மிங்கமில் ஆரம்பமானது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 314 ஓட்டங்களை குவித்தது. 315 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பங்களாதேஷ் அணி 48 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 286 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 28 ஓட்டத்தினால் தோல்வியை சந்தித்துள்…
-
- 2 replies
- 881 views
-
-
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் இலங்கை அணி 37 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடியது. இதற்கமைய இலங்கை அணி, இருபது ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 125 ஓட்டங்களை பெற்றது. அணி சார்பில் தனுஸ்க குணதிலக்க அதிகூடுதலாக 30 ஓட்டங்களையும், நிரோசன் திக்வெல்ல 24 ஓட்டங்களையும், லஹிரு மதுசாங்க 20 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பதிலுக்கு துடுப்பாடிய நியூசிலாந்து அணி 16 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 88 ஓட்டங்கள் மாத்திரமே பெற்றது. போட்டியில் இலங்கை அணியின் இருபதுக்கு 20…
-
- 2 replies
- 515 views
-
-
முதலில் துடுப்பாடிய இந்துக்கல்லூரி 50 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் 6 இலக்குகளை இழந்து 491 ஓட்டங்களைக்குவித்தது . யாழ் மாவட்ட பாடசாலைகளின் 17வயதுப் பிரிவு கிறிக்கட் அணிகளிற்கிடையிலான மட்டுப்படுத்திய ஓவர்களைக் கொண்ட போட்டித்தொடர் கடந்த சனிக்கிழமை 07.07.2012 ஆரம்பமாகியது. தனது முதல்ப் போட்டியில் மகாஜனாக் கல்லூரியினை எதிர்கொண்டது யாழ்.இந்து அபாரமாக வெற்றியீட்டியது. இடம்பெற்றுவரும் இரண்டாவது போட்டியில் ஜூனியன் கல்லூரியை இந்துக்கல்லூரி இன்று 09.07.2012 எதிகொள்கின்றது. காலை 9.00 மணியளவில் இந்தப்போட்டி யாழ்.இந்துக்கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியது. நாணயச்சுழற்சியில் வென்ற ஜூனியன் கல்லூரி இந்துக்கல்லூரியை முதலில் துடுப்பெடுத்தாடப்பணித்தது. இதன்படி முதலில் துடுப்பாடிய…
-
- 2 replies
- 754 views
-
-
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி : ஆரம்ப விழா இன்று 11 ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான ஆரம்ப விழா அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு நாடுகளில் இன்று கோலாகலமாக இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 11 ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மண்ணில் 14 அணிகள் பங்கேற்கும் 11 ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நாளை மறுதினம் சனிக்கிழமை 14 ஆம் திகதி தொடங்குகிறது. மார்ச் 29 ஆம் திகதி வரை இடம்பெறும் இத்தொடரில் மொத்தம் 49 போட்டிகள் நடக்கவுள்ளன. உலகக் கிண்ணப் போட்டி ஆரம்பமாக இன்னும் ஒரு நாள் உள்ள நிலையில் தொடக்க விழா இன்று இரண்டு நகரங்களிலும் கோலாகலமாக நடத்த …
-
- 2 replies
- 1k views
-
-
புதிய பயிற்சியாளராக கிளாப் ( Jürgen Klopp) சிலிர்த்தெழுமா லிவர்பூல்? உலகின் சிறந்த கால்பந்து பயிற்சியாளராகக் கருதப்படுப்படும் போர்சியா டோர்ட்மன்ட் அணியின் பயிற்சியாளர் ஜார்ஜியான் கிளாப் ( Jürgen Klopp)நேற்று லிவர்பூல் அணியின் புதிய பயிற்சியாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். இதற்காக மூன்று ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட கிளாப் 15 மில்லியன் டாலர்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த வாரம் டாட்டன்ஹாம் அணிக்கு எதிராக முதல் முறையாக லிவர்பூல் அணி களமிறங்குகிறது. அந்த போட்டிக்கு லிவர்பூல் அணியை முதல் முறையாக வழிநடத்தவுள்ளார் கிளாப். இங்கிலாந்தின் கால்பந்து கிளப்களில் பழமையும் பெருமையும் வாய்ந்த அணி லிவர்பூல். ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் தொடரில் 5 முறை கோப்…
-
- 2 replies
- 290 views
-
-
பிரான்ஸ் தமிழர் கால்பந்தாட்ட சம்மேளனத்தின் முடிவுகள் சில Share பிரான்ஸ் தமிழர் கால்பந்தாட்டச் சம்மேளனம் வடக்கு மாகாண ரீதியாக நடத்தும் கால்பந்தாட்டத் தொடரின் ஆட்டங்கள் சில யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றன. அவற்றில் சிலவற்றின் முடிவுகள்: காலை 8 மணிக்கு இடம்பெற்ற ஆட்டத்தில் குருநகர் பாடும்மீன் விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து புங்குடுதீவு நசரேத் விளையாட்டுக் கழக அணி மோதியது. நிர்ணயிக்கப்பட்ட நிமிடங்களின் நிறைவில் இரண்டு அணிகளும் தலா ஒரு கோலைப் பதிவுசெய்ததை அடுத்து ஆட்…
-
- 2 replies
- 497 views
-
-
13 ம் திகதி நடைபெற்ற மெக்சிக்கோ எதிர் கமேரூன் விளையாட்டில் உதவி மத்தியஸ்த்தராகக் கடமையாற்றிய கொலம்பியாவைச் சேர்ந்த Humberto Clavijo என்பவர் அவரது பணியிலிருந்து உலக உதைபந்தாட்டச் சம்மேளனத்தினால் நீக்கப்பட்டுள்ளார்.இவர் 22 ம் திகதி நடைபெற உள்ள தென் கோரிய எதிர் அல்ஜீரியா விளையாட்டில் உதவி மத்தியஸ்த்தராக தெரிவு செய்யப்பட்டிருந்த நிலையில் இவரது பணி நீக்கம் பலத்த சந்தேகங்களை உருவாக்கியுள்ளது. மெக்சிக்கோ எதிர் கமேரூன் விளையாட்டில் இரு முறை மெக்சிக்கோ அடித்த கோல்கள் இவரது சமிக்ஜையின் படி கோலாக மத்தியஸ்த்தரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.மெக்சிக்கோ வீரர் விதியை மீறியதாக( Off side ) இவர் சமிக்சை செய்திருந்தார்.இந்த விடயத்தில் உலக உதைபந்தாட்டச் சங்கம் இவர் மீது சந்தேகம் கொண்டே இ…
-
- 2 replies
- 521 views
-
-
அவுஸ்திரேலியாவின் வேகப் பந்து வீச்சாளரான பிரட் லீ கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இம் முறை உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடும் தகுதியை இழந்துள்ளார். இவரது காயம் காரணமாக இவரது வைத்தியர் குறைந்தது இரு மாதங்களாவது ஓய்வில் இருக்க வேண்டும் என்று கூறியுன்னார். இவருக்குப் பதிலாக ஸ்ரூவேட் கிளார்க் அணியிலிணைக்கப்பட்டுள்ளார். இதே வேளை தாம் ஓய்வின்றி தொடர்ந்து விளையாடியமையே தமது அணியின் தோல்விக்குக் காரணமென அணித் துணைத்தலைவர் அடம் கில்கிறிஸ் தெரிவித்துள்ளார். வரும் உலகக் கிண்ணப் போட்டிகளில் இனி தமது அணி நாணய சூழற்சியில் வெற்றி பெற்றால் இரண்டாவதா துடுப்பெடுத்தாட அணித் தலைவர் ரிக்கி பொண்டிங் முடிவெடுத்துள்ளார். அதற்காக அவர் கூறும் காரணம் : எதிரணியின் சேஸிங் சாதனையை தட…
-
- 2 replies
- 1.2k views
-
-
இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோருக்கு எதிராக இலங்கை கிரிக்கெட் சபையினால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நடந்து முடிந்த இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை நிறைவுசெய்துகொண்டு நாடு திரும்பிய இவர்கள், கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டின் போது தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் தொடர்பிலேயே இந்த ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பில் நேற்று (21) நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தின் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான தீர்மானத்தை எடுக்குமாறு ஒழுக்காற்றுக்குழுவிடம் …
-
- 2 replies
- 1.4k views
-
-
தேசிய மட்டத்தில் சம்பியனாகிய யாழ் சென் ஜோன்ஸ் இளம் அணி Your browser does not support iframes. அணித் தலைவர் ஏ. அபிஷேக்கின் சகலதுறை ஆட்டத்தின் உதவியோடு 13 வயதுக்கு உட்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையிலான பிரிவு இரண்டுக்கான தேசிய மட்ட கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் முதல் இன்னிங்ஸை வென்ற யாழ் சென் ஜோன்ஸ் கல்லூரி அணி தொடரின் சம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெறும் பாடசாலைகளுக்கு இடையிலான இந்த போட்டியின் இறுதி ஆட்டத்தில் யாழ் தரப்பினர், கலஹிட்டியாவ மத்திய கல்லூரியை எதிர்கொண்டது. கோட்டை, ஆனந்த ஷாஸ்த்ராலயா மைதானத்தில் இன்று (26) நடைபெற்ற நான்கு இன்னிங்ஸ்கள் கொண்ட இந்தப் போட்டியிலும் சென் ஜோன…
-
- 2 replies
- 399 views
-
-
உதை பந்து எண்டால் என்ன? ஆக்களுக்கு உதைஞ்சு விளையாடுறதோ இல்லாடிக்கு பந்துக்கு உதைஞ்சு விளையாடுறதோ? இல்லாட்டிக்கு பந்துக்கு உதையுறமாதிரி பாசாங்கு செய்துகொண்டு ஆக்களுக்கு உதைஞ்சு விளையாடுறதோ? நான் பார்த்த அளவில கால்தடம் போடுறதுக்கு.. ஆக்களிண்ட கையக், கால பிடிச்சு இழுத்து விழுத்துறதுக்கு.. foul விளையாட்டுக்கு போர்த்துக்கல் அணியிட்ட எல்லாரும் பாடம் படிக்கவேணும். அவனுகள் முறைகேடா விளையாடிபோட்டு - மற்றவன இழுத்து விழுத்திப்போட்டு - எதுவும் தெரியாத அப்பாவி பாப்பா மாதிரி நடிக்கிற அழகோ அழகு.. இப்பிடி விளையாடுறது எல்லாராலையும் ஏலாது.. கீழ இருக்கிற விளையாட்டுக்கு பெயர்தான் உதை பந்தோ எண்டு ஒருக்கால் பார்த்து சொல்லுங்கோ..
-
- 2 replies
- 1.3k views
-
-
மகனுடன் கிரிக்கெட் விளையாடும் சங்கா December 23, 2015 இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரா சில விடயங்கள் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். இலங்கை அணியின் நட்சத்திர வீரராக வலம் வந்த சங்கக்காரா, சொந்த மண்ணில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரோடு தனது சர்வதேச சாதனை பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஆனால் தொடர்ந்து டி20 போட்டிகளிலும், இங்கிலாந்தில் நடக்கும் கவுண்டிப் போட்டியிலும் விளையாடி வருகிறார். தற்போது அவுஸ்திரேலியாவில் நடக்கும் பிக் பாஷ் டி20 லீக் போட்டியில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்காக ஆடி வருகிறார். முன்னதாக வங்கதேச பிரீமியர் லீக் போட்டியில் டாக்கா அணிக்கா விளையாடினார். அப்போது 5 வருடங்களுக்கு பிறகு நீங்கள் என்ன …
-
- 2 replies
- 569 views
-
-
வெடிமருந்து கடத்திய கிரிக்கெட் வீரர் கைது வெடி மருந்து கடத்தியதாக மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆன்ட்ரூ ஃபிளெட்ச்சர் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் ஆன்ட்ரூ பிளெட்ச்சர், தற்போது டொமினிக்கா தீவில் உள்ள வின்ட்வேர்ட் ஐலேண்ட் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் டொமினிக்காவில் இருந்து மேற்கிந்தியத் தீவுகளுக்கு செல்ல அவர், அங்குள்ள டக்ளஸ் விமானநிலையத்துக்கு சென்றார். அப்போது அவரை சோதனையிட்ட அதிகாரிகள் ஃபிளெட்சரின் பைகளில் வெடிமருந்து இருப்பதை கண்டுபிடித்தனர். உடனடியாக அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் ஃபிளெட்சரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்…
-
- 2 replies
- 541 views
-
-
குமார் சங்கக்காரவின் ஓய்வு நெருங்குகிறது இந்தியாவுக்கு எதிராக காலியில் நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டி நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார சர்வதேச கிரிக்கெட் விளையாட்டிலிருந்து விடைபெறும் கடைசி டெஸ்ட் போட்டியாக அமையும் என கருதப்படுகின்றது. எவ்வாறாயினும் தேசிய தெரிவுக் குழுவினர் மற்றும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவன இடைக்கால சபை உறுப்பினர்களுடன் நாளை நடைபெறவுள்ள சந்திப்புக்குப் பின்னரே குமார் சங்கக்காரவின் ஓய்வு குறித்த திட்டவட்டமான முடிவு அறிவிக்கப்படவுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி ஆகியவற்றில் மாத்திரமே தான் விளையாடவுள்ளதாக ஏற்கனவே குமா…
-
- 2 replies
- 480 views
-
-
பார்முலா 1 கார்பந்தயம் நாளை தொடக்கம் பார்முலா 1 கார் பந்தயம் ஆஸ்திரேலியாவில் நாளை தொடங்குகிறது. கடந்த ஆண்டு 21 பந்தயங்கள் நடத்தப்பட்டது. இந்த ஆண்டில் 20 சுற்றுகள் நடக்கிறது. மெல்போர்ன்: கார்பந்தய போட்டிகளில் மிகவும் பிரசித்தி பெற்றது ‘பார்முலா 1’ கார்ப்பந்தயமாகும். இந்த ஆண்டுக்கான ‘பார்முலா 1’ கார் பந்தயம் ஆஸ்திரேலியாவில் நாளை தொடங்குகிறது. கடந்த ஆண்டு 21 பந்தயங்கள் நடத்தப்பட்டது. இந்த ஆண்டில் 20 சுற்றுகள் நடக்கிறது. முதல் பந்தயமான ஆஸ்திரேலிய கிராண்ட் பிரீ மெல்போர்னில் நாளை …
-
- 2 replies
- 463 views
-
-
இணையத்தைக் கலக்கும் இலங்கை பந்துவீச்சாளர்! இலங்கை ஜூனியர் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர் கெவின் கோத்திகோடா, தனது வித்தியாசமான பந்துவீச்சு முறையால் இன்டர்நெட் சென்சேஷன் ஆகியிருக்கிறார். Photo Credit: Asian Cricket Council கிரிக்கெட் உலகம் வித்தியாசமான பந்துவீச்சு முறைகொண்ட பல்வேறு பந்துவீச்சாளர்களைக் கண்டிருக்கிறது. அவர்களில் குறிப்பிடத்தக்கவர் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வீரர் பால் ஆடம்ஸ். சைனா மேன் முறையில் பந்துவீசிய பால் ஆடம்ஸ், தலையைச் சுற்றி பந்துவீசுவது கிரிக்கெட் உலகில் பலரையும் புருவம் உயர்த்தச் செய்தது. இடது கை சுழற்பந்துவீச்சாளரான பால் ஆடம்ஸ், தென்னாப்பிரிக்க அணி சார்பாக சர்வதேச டெஸ்ட் போட…
-
- 2 replies
- 928 views
-
-
தென்னாபிரிக்காவை 8 விக்கெட்களால் வெற்றிகொண்டது இந்தியா By VISHNU 29 SEP, 2022 | 01:41 PM (என்.வீ.ஏ.) தென் ஆபிரிக்காவுக்கு எதிராக திருவனந்தபுரத்தில் 28 ஆம் திகதி புதன்கிழமை இரவு நடைபெற்ற முதலாவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்களால் இந்தியா அமோக வெற்றிபெற்றது. இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரில் இந்தியா 1 - 0 என முன்னிலை பெற்றுள்ளது. தென் ஆபிரிக்காவினால் நிர்ணயிக்கப்பட்ட 107 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 16.4 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 110 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. அர்ஷ்தீப…
-
- 2 replies
- 365 views
- 1 follower
-
-
தோனியை விடுவிக்க சென்னை அணி நிர்வாகம் முடிவு? ஐ.பி.எல். போட்டியில் விளையாட சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை அணியின் கேப்டன் தோனி, சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இனி எந்த அணிக்காக விளையாடுவார்கள் என்ற கேள்வி ரசிகர்கள் முன் எழுந்து நிற்கிறது. லோதா கமிட்டியின் தண்டனை விபரம் வெளியிட்ட பின்னர் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாகிகள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். சென்னை சூப்பர் கிங்ஸ் எப்படி ஒரு மிகப் பெரிய பிராண்ட் வேல்யூ உள்ள அணியோ அது போல் தோனியும் பிராண்ட் வேல்யூ மிக்க ஒரு வீரர். எனவே அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடர கட்டாயப்படுத்த வேண்டாம் என்ற முடிவுக்கு சென்னை அணி நிர்வாகத்தினர் வந்திருப்பதாக கூறப்ப…
-
- 2 replies
- 549 views
-
-
ஸ்டோக்ஸ் பவுன்சரில் கீழே விழுந்த முஷ்பிகுர்; தமிம் சதத்திற்கு பிறகு சரிந்த வங்கதேசம் ஸ்டோக்ஸ் பவுன்சரில் தலையில் வாங்கி கீழே விழுந்த முஷ்பிகுர் ரஹிம் எழுந்து நிற்க முயல்கிறார். | படம்: ஏ.எஃப்.பி. 2-வது டெஸ்டில் இங்கிலாந்துக்கு எதிராக சதம் எடுத்த தமிம் இக்பால். | படம்: ஏ.பி. டாக்காவில் இன்று தொடங்கிய இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் முதல் இன்னிங்சில் 220 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆட்ட முடிவில் இங்கிலாந்து குக் (14), டக்கெட் (7), பாலன்ஸ் (…
-
- 2 replies
- 326 views
-
-
எனக்கு சாந்தியைத் தெரியாது! விஜய் விக்கி “தன் வீட்டில் தொலைக்காட்சி வசதி இல்லாத செளந்திரராஜன், ஊரில் வழக்கமாகத் தொலைக்காட்சி பார்க்கும் அந்த வீட்டின் வாசலில் மறுகியபடி நின்றிருந்தார். மிகுந்த தயக்கத்திற்குப் பின் அங்கு நாடகம் பார்த்துக்கொண்டிருந்த வீட்டுக்காரரிடம் ‘எம்மக இன்னைக்கு ஓட்டப்பந்தயம் ஓடுறா, டிவி’ல காட்டுவாகளாம்… ஒரு அஞ்சு நிமிஷம் பாக்கனும்பா…’ என்றதும் சீரியல் பார்த்த பொதுஜனங்கள் கோபத்தில் சீறத்தொடங்கினார்கள். யாரோ ஒரு நல்ல மனிதரின் கரிசனத்தின் விளைவால், பலபேரின் ‘உச்’களுக்கு மத்தியில் விளையாட்டு சேனல் மாற்றப்பட்டது. சில நிமிடங்களில் தன் மகள் ஓடும் அந்தப் போட்டி திரையில் பளிச்சிட்டது. பல சாதனைகள் புரிந்த வெளிநாட்டு வீராங்கனைகளுக்கு மத்தியில் தன் மகள் கொ…
-
- 2 replies
- 1.2k views
-