விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7859 topics in this forum
-
பிரேசில் கால்பந்து வரலாற்றில் இதுவரை சந்தித்திராத தோல்வி! என்னதான் நடந்தது? அந்த ஆட்டத்தைப் பற்றி எப்படித் துவங்குவது? முதல் கோல் விழுந்த 11-வது நிமிடத்தைச் சொல்வதா? அல்லது, 23-வது நிமிடத்திலிருந்து 29-வது நிமிடம் வரை பிரேசிலுக்கு என்ன நடந்ததென்றே தெரியாமல் 4 கோல்கள் அடுத்தடுத்து ஜெர்மனி அடித்ததைச் சொல்வதா? அந்த அரை மணியில் இறுதி வாய்ப்பைக் கோட்டைவிட்ட மனத்தாங்கலில் பிரேசில் ரசிகர்களில் பாதிப் பேர் கண்ணீரும் கவலையுமாக மைதானத்தை விட்டு வெளியேறியதைச் சொல்வதா? அல்லது அதிர்ச்சியை மறந்து, மறைத்து தன் குழந்தையை விட்டு கேமரா முன் டாடா காண்பிக்க வைத்த பிரேசில் பெண்மணியைக் குறிப்பிடுவதா? உண்மையில், பிரேசிலுக்கு என்னதான் நடந்தது? நமக்குமே இன்னும் நம்ப முடியவில்லை. ஆம்! பிரேசில் க…
-
- 1 reply
- 691 views
-
-
8 வருடங்களின் பின் இலங்கையின் தேசிய கால்பந்தாட்ட அணி அறிவிப்பு (நெவில் அன்தனி) வெளிநாட்டு கால்பதாட்ட அணி ஒன்றின் விளையாட்டுத்திறனைக் காணும் வாய்ப்பு எட்டு வருடங்களின் பின்னர் இலங்கை இரசிகர்களுக்கு கிடைக்கவுள்ளது. பங்களாதேஷில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள தெற்காசிய கால்பந்தாட்டப் போட்டிக்கு முன்னோடியாக லிதுவேனிய அணியுடன் இலங்கை அணி விளையாடவுள்ளது. லிதுவேனியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கால்பந்தாட்டப் போட்டி கொழும்பு குதிரைப்பந்தயத் திடலில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இலங்கை அணியில் சிரேஷ்ட அனுபவம்வாய்ந்த ஏழு வீரர்களே இடம்பெறுகின்றனர். முன்னாள் தலைவர்களான சுஜான் ப…
-
- 0 replies
- 691 views
-
-
டோக்கியோ ஒலிம்பிக்கை ரத்து செய்யக் கோரி 2 இலட்சம் கையொப்பங்கள் டோக்கியோ ஒலிம்பிக்கை ரத்து செய்யக் கோரும் ஒரு இணையத்தள விருப்பம் கோரல் மனு கடந்த சில நாட்களில் கிட்டத்தட்ட 2 இலட்சம் கையெழுத்துக்களைப் பெற்றுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக ஏற்கனவே ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள கோடை ஒலிம்பிக்கின் தொடக்கத்திற்கு மூன்று மாதங்களுக்கும் குறைவான கால அவகாசம் உள்ளன. டோக்கியோ உலகளாவிய நிகழ்வை எவ்வாறு நடத்தலாம் மற்றும் தன்னார்வலர்கள், விளையாட்டு வீரர்கள், அதிகாரிகள் மற்றும் ஜப்பானிய பொதுமக்களை கொவிட்-19 இலிருந்து எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருக்க முடியும் என்ற கேள்விகள் இன்னும் உள்ளன. இந் நிலையில் "டோக்கியோ ஒலிம்பிக்கை நிறுத்து" (Stop Tokyo Olympics) என்று இ…
-
- 1 reply
- 690 views
-
-
ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான ‘சுப்பர் ப்ரொவென்ஷியல்’ கிரிக்கெட் போட்டித் தொடரில் தமிழ் பேசும் வீரர்கள் 6 பேர் இடம்பெற்றுள்ளனர். இந்த ஆறு பேரில் இருவர் யாழ்ப்பாணத்திலிருந்தும் , மட்டக்களப்பு, கண்டி மற்றும் கொழும்பிலிருந்து தலா ஒருவருமாக அடங்குகின்றனர். யாழ் மத்திய கல்லூரியின் விஜயகாந்த் வியாஸ்காந்த், கமலாராசா இயலரசன், யாழ் சென்.ஜோன்ஸ் கல்லூரியின் தெய்வேந்திரம் தினோசன் ஆகியோர் தம்புள்ளை அணிக்காகவும், கொழும்பு ஸாஹிரா கல்லூரியின் மொஹமட் சமாஸ் கொழும்பு அணிக்காகவும், கண்டி திரித்துவ கல்லூரியின் அபிஷேக் ஆனந்த குமார், மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் எஸ்.ஷகிர்தன் ஆகியோர் …
-
- 0 replies
- 690 views
-
-
மேற்கிந்தியாவுடனான ஒருநாள் போட்டி தென் ஆபிரிக்கா 6 விக்கெட்டால் வெற்றி [23 - January - 2008] [Font Size - A - A - A] மேற்கிந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆபிரிக்க அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. தென் ஆபிரிக்கா -மேற்கிந்திய அணிகளிடையேயான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நடந்தது. மழை காரணமாக ஆட்டம் தொடங்குவது தாமதமானது. இதனால், ஆட்டம் 36 ஓவர்களாக குறைக்கப்பட்டது. நாணயச் சுழற்சியில் வென்ற தென் ஆபிரிக்க அணி, மேற்கிந்தியாவை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தது. முதலில் ஆடிய மேற்கிந்திய அணி, தென் ஆபிரிக்க வீரர்களின் சிறப்பான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாம…
-
- 0 replies
- 690 views
-
-
கிரிக்கெட்டிலும் இனவெறி: நான் அதை சந்தித்துள்ளேன்- கிறிஸ் கெய்ல் சொல்கிறார் அமெரிக்காவில் காவல் துறையினர் நடத்திய தாக்குதலில் கறுப்பர் இனத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் உயிர் இழந்தார். போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு பகுதிகளில் நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. கறுப்பின மக்கள் இந்த சம்பவம் குறித்து வெஸ்ட் இண்டீஸ் அதிரடி கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியதாவது:- மற்றவர்களை போல கறுப்பு இன மக்களின் வாழ்க்கையும் முக்கியமானதுதான். அவர்களுக்கு என்று தனி வாழ்க்கை முறை கிடையாது. கறுப்பின மக்களை முட்டாள்கள் போல நடத்துவது …
-
- 0 replies
- 690 views
-
-
இலங்கைக்கான பயணத்தை ரத்து செய்த பங்களாதேஷ் அணி! பங்களாதேஷ் அணியின் இலங்கைச் சுற்றுப்பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாகப் பல்வேறு கிரிக்கெட் தொடர்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஜூலை மாதம் பங்களாதேஷ் அணி இலங்கைக்குச் சென்று 3 டெஸ்டுகளில் விளையாட இருந்தது. அந்தத் தொடர் தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல ஆகஸ்டில் பங்களாதேஷ் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எங்கள் வீரர்கள் சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்பதற்கான சூழல் தற்போது இல்லை என பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் எங்களுக்குக் கடிதம் எழுதியுள்ளது. வீரர்கள் பயிற்சியில் ஈடுபட முடியாத சூழலால் இந்த நிலை உள்…
-
- 0 replies
- 689 views
-
-
வரலாற்று சாதனை படைத்த தமிழக மகளிர் கால்பந்தாட்ட அணி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க சென்னை ஆவடி பகுதியில் ஒரு வாடகை வீட்டில் வசிக்கும் விளையாட்டு வீரர் நந்தினி (22) தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளார். முதல்முறையாக தேசிய அளவிலான கோப்பையை வென்ற தமிழக மகளிர் கால்பந்தாட்ட அணியின் தலைவர்தான் நந்தினி. Image captionநந்தினி எளிமையான குடும்ப பின்னணி, அரசுப்பள்ளியில் படித்து, வ…
-
- 0 replies
- 689 views
-
-
T 20 ல் 600 சிக்சர்கள் மற்றும் 600 பவுண்ட்ரிகளை அடித்த முதல் வீரர் கிறிஸ் கெய்ல் December 20, 2015 இருபத்திற்கு இருபது போட்டிகளில் 600 சிக்சர்கள் மற்றும் 600 பவுண்ட்ரிகளை அடித்த முதல் வீரர் என்ற அரிய சாதனையை கிறிஸ் கெய்ல் நேற்று (சனிக்கிழமை) நிகழ்த்தியுள்ளார். அண்மையில் பங்களாதேஷ் பிரீமியர் லீக் பேட்டியில் பரிசால் புல்ஸ் அணிக்காக விளையாடிய கெய்ல், 47 பந்தில் 9 சிக்சர்கள் உள்ளடங்களாக 92 ஓட்டங்களை பெற்றார். அதன்போது அவர் மொத்தம் 598 சிக்சர்கள் அடித்திருந்தார். இந்நிலையில் நேற்று இடம்பெற்ற பிக் பாஷ் லீக்கில் மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணிக்காக களமிறங்கிய கெய்ல் 16 பந்தில் இரண்டு சிக்சர்கள் அடங்களலாக 23 ஓட்டங்களை பெற்றார். நேற்றை அவரது இரண்டு சிக்சர்களுட…
-
- 1 reply
- 689 views
-
-
11 ஆண்டுகளில் டிசம்பர் மாதம் மட்டும் ஏன் தோனிக்கு ஸ்பெஷல்? இந்திய கிரிக்கெட் அணியின் சூப்பர் ஸ்டார் மகேந்திர சிங் தோனிக்கும் டிசம்பர் மாதத்துக்கும் நிறைய நெருக்கம் உண்டு. இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டி, ஒருநாள் போட்டி, டி-20 ஆகிய மூன்றிலும் மகேந்திர சிங் தோனி களமிறங்கியது டிசம்பர் மாதத்தில்தான். கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், டிசம்பர் மாதத்தில் இதே 30-ம் தேதியில்தான் ஓய்வை அறிவித்து, கோடிக்கணக்கான தனது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். இந்தியா மட்டுமல்ல, உலகின் எல்லா நாடுகளிலும் 30 வயதை கடந்த சீனியர் ஸ்டார் வீரர்கள் ஓய்வு பெற்று வருகின்றனர். பிரெண்டன் மெக்கல்லம் தடாலடியாக ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார். தற்போதைய நம்ப…
-
- 0 replies
- 689 views
-
-
கைகுலுக்கல் விவகாரம் கௌதம் கம்பீர் காட்டம் December 30, 2015 இந்தியாவின் உள்ளூர் ஆட்டத்தில் (விஜய் ஹசாரே கிண்ணம்) டெல்லி அணியின் தலைவர் கம்பீர், ஜார்கன்ட் அணியின் வீரரான டோனிக்கு கைகுலுக்க மறுத்ததாக வீடியோ ஒன்று பரவியது. இந்த வீடியோவில் டோனி அனைவருக்கும் கைகுலுக்கும் போது கம்பீர் மட்டும் கைகுலுக்காமல் போவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் இதற்கு கம்பீர், டோனியுடன் கைலுக்குவது போன்ற புகைப்படத்தை பதிவிட்டு முகப்புத்தகத்தில் விளக்கம் அளித்துள்ளார். ‘விஜய் ஹசாரே தொடரின் காலிறுதி ஆட்டத்தில் நானும், டோனியும் கைகுலுக்கி கொண்ட புகைப்படம் இது தான். இந்த கைகுலுக்கல் விவகாரம் மோடி, பாகிஸ்தான் பிரதமர் நாவஸ் செரிப் பேச்சுவார்த்தையை விட பெ…
-
- 0 replies
- 689 views
-
-
ஒரு மாற்றத்துடன் களமிறங்கும் இலங்கை! By A.Pradhap - கராச்சியில் ஆரம்பமாகியுள்ள இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்றுள்ள பாகிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டதுடன், போட்டி சமனிலையில் முடிவடைந்தது. இந்த நிலையில், இன்றைய தினம் ஆரம்பமாகவும் இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடரை தீர்மானிக்கும் போட்டியாக அமையவுள்ளது. இன்றைய போட்டிக்கான அணியின் மாற்றங்களை பொருத்தவரை, இலங்கை அணியானது ஒரு மாற்றத்தை மேற்கொண்டுள்ளது. கசுன் ராஜிதவு…
-
- 0 replies
- 688 views
-
-
பதிவுகள் 2015: திறமையால் தெறிக்கவிட்டு தேசத்துக்குப் பெருமை சேர்த்த சானியா சானியா- ஹிங்கிஸ் பெண்கள் இரட்டையர் போட்டியில் மார்ட்டினா ஹிங்கிஸுடன் இணைந்து பெற்ற விம்பிள்டன் கோப்பை, அமெரிக்க ஓபன் கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள்; விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது; இந்திய கிரிக்கெட் கிளப்பில் (சிசிஐ) வாழ்நாள் உறுப்பினர் அந்தஸ்து; சர்வதேச டென்னிஸ் சங்கத்தின் 2015-ம் ஆண்டின் சிறந்த ஜோடியாக சானியா மிர்சா- மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி தேர்வு. இவை அனைத்தும் 2015-ம் ஆண்டில் டென்னிஸ் நட்சத்திரமான சானியா மிர்சா வசமாகி இருக்கிறது. கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் கலப்பு இரட்டையர், மகளிர் …
-
- 3 replies
- 688 views
-
-
ஐரோப்பிய லீக் கிண்ண தொடர்: இரண்டாவது முறையாக சம்பியன் கிண்ணமேந்தியது செல்சியா அணி! யு.இ.எப்.ஏ. ஐரோப்பிய லீக் கிண்ண தொடரில் செல்சியா அணி, 4-1 என்ற கோல்கள் கணக்கில் ஆர்சனல் அணியை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம், செல்சியா அணி 2013ஆம் ஆண்டு ஐரோப்பிய லீக்கை வென்ற பின் ஐரோப்பிய பட்டம் ஒன்றை வெல்வது இது முதல் முறையாகும். செல்சியா அணியின் ஐந்தாவது ஐரோப்பிய கிண்ணம் இதுவாகும். செல்சியா அணியை விடவும் இங்கிலாந்து கழகங்களில் லிவர்பூல் அணி அதிகமாக 8 முறை ஐரோப்பிய கிண்ணங்களை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. அசர்பைஜான் தலைநகர் பகுவில் விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், இரண்டு அணிகளும் ஆரம்பம் முதல் சிறப்பாக விளையாடின. எனினும் இர…
-
- 0 replies
- 688 views
-
-
இயன் பெல் 187 ரன்கள் விளாசல்; 50 ஓவர்களில் 391 ரன்கள் குவித்த இங்கிலாந்து வெற்றி முத்தரப்பு ஒருநாள் தொடருக்கு முன்பான ஒருநாள் போட்டி ஒன்றில் ஆஸ்திரேலிய பிரைம் மினிஸ்டர் லெவன் அணியை இங்கிலாந்து 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இங்கிலாந்து அணிக்கு இயன் மோர்கன் கேப்டன், ஆஸி. பிரைம் மினிஸ்டர் லெவன் அணிக்கு மைக் ஹஸ்ஸி இல்லாததால் கிறிஸ் ராஜர்ஸ் கேப்டனாக செயல்பட்டார். கான்பராவில் இன்று நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து இயன் பெல்லின் அதிரடி 187 ரன்கள் மூலம் 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 391 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய ஆஸி. பிரைம் மினிஸ்டர் லெவன் அணி அதிரடி மன்னன் கிளென் மேக்ஸ்வெல் 89 பந்துகளில் 136 ரன்களை விளாசியும் 60 ரன்கள் …
-
- 0 replies
- 688 views
-
-
உலகை உலுக்கிய விளையாட்டு மைதான மரணங்கள்! இந்தோனேசியாவில் கால்பந்து மைதானத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 125 போ் உயிரிழந்த நிலையில், இதேபோன்று கடந்த காலங்களிலும் விளையாட்டு மைதானங்களில் பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அவற்றில் முக்கிய சம்பவங்கள் குறித்த விவரம்: ஜன. 20, 1980 கொலம்பியாவில் காளைச் சண்டையைப் பாா்ப்பதற்காக மரத்தால் அமைக்கப்பட்ட நான்கடுக்கு பாா்வையாளா்கள் காலரி இடிந்து விழுந்ததில் 200 போ் உயிரிழப்பு. அக். 20, 1982 ரஷிய தலைநகா் மாஸ்கோவில் கால்பந்து மைதானத்திலிருந்து ரசிகா்கள் வெளியேறும்போது ஏற்பட்ட நெரிசலில் 62 போ் உயிரிழப்பு. மே 28, 1985 பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற ஐரோப்பிய கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் ரசிகா்களுக்கு இடையே ஏற்பட்ட வ…
-
- 2 replies
- 688 views
-
-
வெளிநாட்டுக்கு கிரிக்கெட் வீரர்கள் ஏற்றுமதியை தொடங்கியது சீனா! விளையாட்டுத்துறையில் சீனா கொடி கட்டி பறக்கும் நாடு. ஒலிம்பிக், ஆசிய விளையாட்டு போட்டிகளில் சீனாவின் ஆதிக்கம்தான் மேலோங்கியிருக்கும். ஜிம்னாஸ்டிக் , பளுதூக்குதல் போன்ற பிரிவுகளில் சீன வீரர்- வீராங்கனைகளை அடித்துக் கொள்ள முடியாது. ஆனால் அந்த நாட்டில் கிரிக்கெட் விளையாட்டுக்கு அவ்வளவாக வரவேற்பு கிடையாது. இந்தியாவின் அண்டைநாடாக இருந்த போதிலும், சீனர்கள் கால்பந்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கிரிக்கெட்டுக்கு கொடுப்பது இல்லை. ஹாங்காங் உள்ளிட்ட சில நகரங்களில் கிரிக்கெட் விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவது உண்டு. அந்த வகையில் முதல்முறையாக சீனாவை சேர்ந்த ஒரு கிரிக்கெட் வ…
-
- 0 replies
- 688 views
-
-
ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட இந்தி நடிகர் வின்டூ சிங்கிற்கு சென்னை ஐபிஎல் அணியுடன் நெருங்கிய தொடர்பு இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மறைந்த நடிகரும் மல்யுத்த வீரருமான தாராசிங்கின் மகன் தான் வின்டூ சிங். சூதாட்டத் தரகர்களுடன் நெருங்கிய தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவரை மும்பை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வின்டூ சிங்கை 3 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த மாதம் 6-ஆம் தேதி நடைபெற்ற சென்னை-மும்பை இடையேயான போட்டியில், தோனியின் மனைவி சாக்சியுடன் அமர்ந்து வின்டூ சிங் போட்டியை ரசித்துள்ளார். இதுதவிர விருந்துகளிலும் வீரர்களுடன் அவர் பங்கேற்றிருப…
-
- 2 replies
- 687 views
-
-
2019 உலகக்கோப்பை இறுதி ஆட்டம்: லார்ட்ஸில் நடத்த பரிந்துரை 2019 உலகக் கோப்பை போட்டி இங்கிலாந்தில் நடக்கவுள்ளது. இருபது வருடங்களுக்குப் பிறகு இங்கிலாந்தில் நடக்கவுள்ள உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டம் புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கவேண்டும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஐசிசிக்குப் பரிந்துரை செய்துள்ளது. 2017 மகளிர் உலகக் கோப்பையின் இறுதி ஆட்டத்தையும் லார்ட்ஸில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 1975, 1979, 1983, 1999 ஆகிய ஆண்டுகளில் உலகக்கோப்பை இறுதி ஆட்டங்கள் லார்ட்ஸில் நடைபெற்றுள்ளன. உலகக் கோப்பையின் அரை யிறுதி ஆட்டங்களை மான்செஸ்டர், பர்மிங்காம் (எட்பாஸ்டன்) ஆகிய நகரங்களிலும், தொடக்கப் போட்டியை ஓவலிலும் நடத்த இங்கிலாந்து கிரிக்கெட் வ…
-
- 0 replies
- 687 views
-
-
இதயங்களை வென்ற மேரி கோம்! அரையிறுதியில் தோல்வியுற்றாலும், தன் அர்ப்பணிப்பாலும் முயற்சியாலும் இந்தியர்களின் ஒட்டுமொத்த இதயங்களை வென்றிருக்கிறார், மேரி கோம். ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ள மேரி கோம் கடந்து வந்த பாதை வியக்கத்தக்கது. குத்துச்சண்டை 48 கிலோ பிரிவில் நிகரற்ற வீராங்கனையாகத் திகழ்ந்த மேரி கோம், ஐந்து முறை உலகச் சாம்பியன் பட்ட... த்தைக் கைப்பற்றி, இந்திய மகளிர் குத்துச்சண்டை விளையாட்டுக்கு கௌரவம் சேர்த்தவர். ஒலிம்பிக்கில் முதன் முதலாக மகளிர் குத்துச்சண்டை போட்டி சேர்க்கப்பட்டதுஎன்ற அறிவிப்பு வெளியானதில் தொடங்கி, அதற்காக தன்னை முழு அர்ப்பணிப்புடன் தயார் செய்துகொண்டவர். லண்டன் ஒலிம்பிக…
-
- 0 replies
- 687 views
-
-
சானியா மிர்ஸாவின் 20 வருட விளையாட்டு வாழ்க்கை முடிவுக்கு வந்தது! கட்டுரை தகவல் எழுதியவர்,சாரதா உக்ரா பதவி,மூத்த விளையாட்டு செய்தியாளர், பிபிசி இந்திக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா தமது விளையாட்டு வாழ்க்கையின் கடைசி போட்டியின் முதல் சுற்றில் தோல்வியை சந்திக்க நேரிட்டது. துபாய் ட்யூடி ஃப்ரீ டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், மகளிர் இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ்- சானியா இணை, குதர்மெடோவா, சாம்சோனோவா ஜோடியிடம் 4-6, 0-6 என்ற செட்களில் தோல்வியடைந்தது. இந்த தோ…
-
- 0 replies
- 687 views
- 1 follower
-
-
சொந்த மண்ணில் இந்தியாவிற்கெதிராக இலங்கை பெற்ற சாதனை வெற்றிகள் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில், கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகின்றது என்றால் அங்கே விறுவிறுப்பிற்கும், சுவாரஷ்யங்களிற்கும் எந்தவித பஞ்சமும் காணப்படாது. அந்த வகையில், இந்த இரண்டு ஆசிய கிரிக்கெட் ஜாம்பவான்களுக்குமிடையில் மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளும் கொண்ட தொடர், கிட்டத்தட்ட மூன்று வருடங்களின் பின்னர் இம்மாத இறுதியில் ஆரம்பமாகின்றது. விருந்தாளியாக இலங்கைக்கு வந்துள்ள இந்தியா, தமது சுற்றுப்பயணத்தின் முதற்கட்டமாக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணியுடன் பலப்பரீட்சை நடாத்தவுள்ளது. சகல துறையிலும் சிறப்பித்த இந்திய அணி : பயிற்சிப் போட…
-
- 0 replies
- 686 views
-
-
உலக சம்பியன் இங்கிலாந்தை பந்தாடியது பங்களாதேஷ் Published By: VISHNU 15 MAR, 2023 | 06:37 PM (என்.வீ.ஏ.) மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரில் இருபது 20 உலக சம்பியன் இங்கிலாந்தை 3 - 0 என்ற ஆட்டக் கணக்கில் வீழ்த்தி வரலாற்று தொடர் வெற்றியை பங்களாதேஷ் ஈட்டியது. முதல் இரண்டு போட்டிகளில் ஈட்டிய வெற்றிகளுடன் தொடரை தனதாக்கிக்கொண்டிருந்த பங்களாதேஷ், மிர்பூர் ஷியரே பங்ளா விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்ற கடைசிப் போட்டியில் 16 ஓட்டங்களால் வெற்றியீட்டி தொடரை முழுமையாகக் கைப்பற்றியது. பங்களாதேஷினால் நிர்ணயிக்கப்பட்ட 159 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்க…
-
- 1 reply
- 686 views
- 1 follower
-
-
நான்காவது டெஸ்ட் போட்டியிலும் மண்கவ்வி சாதனை படைத்த இந்திய நட்சத்திர மட்டையணி !!! அவுஸ்த்திரேலியாவில் நடைபெற்றுவந்த ஆஸி இந்திய அணிகளுக்கிடையிலான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிய இந்திய அணி நான்கு போட்டிகளிலும் படுதோல்வியைத் தழுவியதால் 4-0 என்கிற அடிப்படையில் போடர் - கவஸ்கர் வெற்றிக்கிண்ணத்தை பறிகொடுத்தது. உலகின் முதலாவது டெஸ்ட் அணி என்கிற பட்டத்தை கடந்த வருடம் தனதாக்கிய உலகின் பலமான மட்டையாட்டக்காரர்களைக் கொண்ட அணி என்று கூறிக்கொண்ட இந்திய மட்டையாட்ட அணி தழுவியிருக்கும் தோல்வியானது சர்வதேச கிரிக்கெட் வர்ணணையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இங்கிலாந்தில் கடந்த வருட இறுதியில் அது அடைந்த 4-0 என்கிற டெஸ்ட் தொடர் தோல்வியோடு அவுஸ்த்திரேலிய அணியிடம…
-
- 2 replies
- 686 views
-
-
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கும் கொழும்பு ஆனந்தக் கல்லூரிக்குமிடையிலான சிவகுருநாதர் வெற்றிக்கிண்ணத்திற்கான 2வது கிறிக்கட் போட்டி நேற்று 26.04.2013 யாழ் இந்துக் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியது. சிவஞான வைரவர் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூசைகளை தொடர்ந்து விருந்தினர்கள் மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டனர். ஆரம்ப நிகழ்வில் ஆனந்தா கல்லூரி அதிபர் தமிழிலும் யாழ்ப்பாணம் இந்த்துக்கல்லூரி அதிபர் சிங்களத்திலும் உரையாற்றியமை சிறப்பம்சமாகும்.வீரர்கள் அறிமுகத்தை தொடர்ந்து நாணய சுழற்சி இடம் பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் அணித்தலைவர் முதலில் களத்தடுப்பட்டத்தை தெரிவு செய்தார். இதன் அடிப்படையில் களமிறங்கிய ஆனந்தாக் கல்லூரி 50.2 பந்து பரிமாற்றங்களில் சகல …
-
- 3 replies
- 686 views
-