விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
http://www.cricinfo.com/indvrsa2010/engine/current/match/441826.html கோல்கட்டா: டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் தனது நம்பர் - 1 இடத்தை இந்தியா தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளது. தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், இந்திய அணி, ஒரு இன்னிங்ஸ் 58 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. நாக்பூரில் நடந்த முதல் போட்டியில், இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்து 0-1 கணக்கில் பின்தங்கியது. இந்நிலையில், கோல்கட்டா டெஸ்ட் போட்டியில் வென்றால் மட்டுமே, முதலிடத்தை தக்கவைத்துக்கொள்ள முடியும் என்ற நிலையில், இந்திய அணி களமிறங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க அணி, முத…
-
- 1 reply
- 890 views
-
-
நாடு திரும்பிய அர்ஜென்டினா அணிக்கு அதிபர் தலைமையில் உற்சாக வரவேற்பு பிரேசில் உலக கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியிடம் தோல்வி கண்டு சாம்பியன் பட்டத்தை இழந்தது. ஆனாலும், இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா அணி போராடிய விதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. போட்டியில் இரண் டாம் இடம் பிடித்த அர்ஜென்டினா அணி நேற்று நாடு திரும்பியது. தலைநகர் பியூனஸ் அயர்சுக்கு விமா னம் மூலம் வந்திறங்கிய அர்ஜென்டினா வீரர்களுக்கு, அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வீரர்கள் வந்த விமானத்தின் பக்க வாட்டில் வீரர்களின் படம் வரையப்பட்டிருந்ததோடு, அர்ஜென்டினாவுக்கு நன்றி’ என்ற வாசகமும் எழுதப்பட்டிருந்தது. விமான நிலையத்தில் இருந்து சிறப்பு பேரு…
-
- 1 reply
- 424 views
-
-
இந்திய அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு - 20 போட்டியில் முஷ்பிகுர் ரஹிமின் அசத்தலான ஆட்டத்தினால் 7 விக்கெட்டுகளால் பங்களாதேஷ் அணி வெற்றிபெற்றுள்ளது. டெல்லியில் இன்று இரவு 7.00 மணிக்கு ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 148 ஓட்டங்களை பெற்றது. 149 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பங்களாதேஷ் அணி 19.3 ஓவரில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. லிட்டன் தாஸ் 7 ஓட்டத்துடனும், மொஹமட் நைம் 26 ஓட்டத்துடனும், சவுமி சர்கார் 39 ஓட்டத்துடனும் ஆட்டம…
-
- 1 reply
- 554 views
- 1 follower
-
-
மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களுக்கு ஐ.சீ.சீ எச்சரிக்கை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களுக்கு சர்வதேச கிரிக்கட் பேரவை எச்சரிக்கை விடுத்துள்ளது. அண்மையில் நடைபெற்று முடிந்த இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியின் பின்னர், வீரர்கள் நடந்து கொண்ட விதம் அதிருப்தி அளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகக் கிண்ண இறுதிப் போட்டியொன்றின் பின்னர் அணியின் முக்கிய வீரர்கள் வெளியிட்ட கருத்துக்கள் , நடந்து கொண்ட விதம் ஏற்புடையதல்ல என தெரிவித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை டுபாயில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கட் பேரவையின் கூட்டத்தில் இந்த விடயங்கள் பற்றி பேசப்பட்டுள்ளத…
-
- 1 reply
- 638 views
-
-
19 Nov, 2025 | 04:04 PM பாகிஸ்தானில் நடைபெற்றுவரும் மும்முனை ரி20 கிரிக்கெட் தொடரில் இருந்து இலங்கையின் ரி20 அணித் தலைவர் சரித் அசலன்க ஓசையின்றி நீக்கப்பட்டபோது ஆரம்ப கிசுகிசுக்கள் சுகவீனம் என முணுமுணுத்தன. ஆனால், அதற்கு அப்பால் ஒரு கீறல் வீழ்ந்துள்ளதுடன் ஒரு வித்தியாசமான தோற்றம் வெளிப்படுகிறது. பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தைத் தொடர்வதில் ஏற்பட்ட காரசாரமான வாக்குவாதத்தின்போது அணித் தலைவர் வெளிப்படுத்திய அதிருப்தியானது விரிசல்கள் நிறைந்த ஆடுகளத்தில் ஒரு மோசமான எகிறிபாயும் பந்து போன்று அவரைத் திருப்பித் தாக்கியுள்ளது.. தாயகம் திரும்பத் துடித்த மற்றொரு பிரதான வீரரான வேகப்பந்து வீச்சாளர் அசித்த பெர்னாண்டோவும் இதே போன்ற ஒரு இக்கட்டான நிலையை சந்தித்துள்ளார். இவர்கள் இருவரின் க…
-
- 1 reply
- 217 views
- 1 follower
-
-
பந்தின் தன்மையை மாற்றினாரா? - சர்ச்சையில் விராட் கோலி கோலி. | கோப்புப் படம்.| ஏ.எஃப்.பி. பந்தின் தன்மையை செயற்கையான முறையில் மாற்றியதாக பிரிட்டன் சிறுபக்க செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது. ஹோபர்ட் டெஸ்ட்டில் தென் ஆப்பிரிக்க கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் பந்தை சேதப்படுத்தியதாக கூறிய ஐசிசி அவருக்கு 100 சதவீத அபராதம் விதித்துள்ளது. இந்நிலையில் இதே போன்ற விவகாரத்தில் விராட் கோலியும் சிக்கியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக ராஜ்கோட்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸின் போது கோலி தனது சுவிங்கத்தை பயன்படுத்தி பந்தை பளபளக்க செய்வது போன்ற வீடியோ காட்சி தற்போது சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனால் ஐசிசி-யின…
-
- 1 reply
- 526 views
-
-
ஐ.சி.சி. டெஸ்ட் அணியில் இடம்பிடித்த ரங்கன ஹேரத் சர்வதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ள 2016 ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி. டெஸ்ட் அணியில் இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் இடம்பிடித்துள்ளார். ஆண்டுக்கு ஒருமுறை ஐ.சி.சி. டெஸ்ட் அணி அறிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் இந்த வருடம் அறிவி்க்கப்பட்டுள்ள ஐ.சி.சி. டெஸ்ட் அணியில் இலங்கை அணியைச் சேர்ந்த ரங்கன ஹேரத் மற்றும் இந்திய அணியைச் சேர்ந்த அஸ்வின் ஆகியோர் சுழற்பந்துவீச்சாளர்களாக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஐ.சி.சி.டெஸ்ட் அணியின் தலைவரான இங்கிலாந்து அணியின் டெஸ்ட் தலைவர் அலஸ்ரியா குக் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஐ.சி.சி. தெரிவுசெய்துள்ள 2…
-
- 1 reply
- 537 views
-
-
எனது இலக்கு தங்கம்..!' - சிந்து உற்சாகம் சாக்ஷி மாலிக் வெண்கலம் வென்று ஆரம்பித்து வைத்த இந்தியாவின் பதக்கப்பட்டியலை, மேலும் அழகூட்ட இருக்கிறார் பேட்மிட்டன் வீராங்கனை பி.வி.சிந்து. நேற்று நடந்த பேட்மிட்டன் போட்டியில் அனல் பறந்தது. ஆரம்பத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தி வந்தார் சிந்து. உலகின் நம்பர் ஒன் வீரரான கரோலினா மரினை, இன்று மாலை 6.55 மணிக்கு இறுதிப் போட்டியில் எதிர்கொள்கிறார் சிந்து. 49 நிமிடங்கள் நடைபெற்ற போட்டியில், 21-19,21-10 என்ற நேர் செட் கணக்கில் வென்றார் சிந்து. இரண்டாவது செட்டில் திடீரென பி.வி.சிந்து விஸ்வரூபம் எடுத்தார். 11-10 என்ற நிலையில் இருந்து அடுத்த பத்து புள்ளிகளை தொடர்ச்சியாக வென்றார் சிந்து. முடிவில், 21-10 என இரண்டாவது செட்டையும் …
-
- 1 reply
- 669 views
-
-
பிரான்ஸ் அணியில் பிரச்சினை தென்னாப்பிரிக்காவில் நடந்துவரும் கால்பந்தாட்ட உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்றுவரும் பிரான்ஸ் அணியின் வீரர்களுக்கும் அணியின் நிர்வாகிகளுக்கும் இடையில் எழுந்துள்ள ஒரு தகராறு பிரான்ஸில் ஒரு தேசியப் பிரச்சினையாக மாறியிருக்கிறது. பிரான்ஸ் நாட்டு அணியின் வீரரான நிக்கோலா அனேல்கா தமது அணியின் பயிற்சியாளரை தகாத வார்த்தைகளால் திட்டியதால் அவர் போட்டியில் தொடர்ந்து பங்கேற்ற அனுமதிக்கப்படாமல் மீண்டும் நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார். மெக்ஸிகோவுக்கு எதிரான போட்டியில் பிரான்ஸ் நாட்டு அணி 2-0 என்கிற கணக்கில் தோல்வியடைந்தது. அந்தப் போட்டியின் இடைவேளையின் போது நிக்கோலா அனேல்கா தமது பயிற்சியாளரை தகாத வார்த்தைகளால் திட்டியதை அணியில் இருந்த…
-
- 1 reply
- 832 views
-
-
பவர் பிளேவில் 113 ஓட்டங்கள் விளாசி அவுஸ்திரேலியா புதிய சாதனை சர்வதேச ரி 20 கிரிக்கெட் போட்டியில், பவர் பிளே ஓவர்களில் 113 ஓட்டங்கள் குவித்து அவுஸ்திரேலிய அணி புதிய சாதனை படைத்துள்ளது. ஸ்கொட்லாந்து சென்றுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி அந்நாட்டு அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ரி 20 தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதல் போட்டி, எடின்பர்க்கில் நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து அணி, 9 விக்கெட் இழப்பிற்கு 154 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய அவுஸ்திரேலிய அணியில் ஜேக் ஃபிராஸர் டக் அவுட்டானார். எனினும் மற்றொரு தொடக்க வீரரான டிராவிஸ் ஹெட் நாலாபுறமும் பந்துகளை சிதறவிட்டு, ருத்ர தாண்டவமாடினார். பவர் பிளே ஓவர்களான முதல் 6 ஓவர்…
-
- 1 reply
- 479 views
- 1 follower
-
-
05 FEB, 2025 | 01:38 PM (நெவில் அன்தனி) சகலவிதமான ரி20 கிரிக்கெட் போட்டிகளிலும் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர் என்ற சாதனையை ஆப்கானிஸ்தானின் சுழல்பந்துவீச்சு நட்சத்திரம் ராஷித் கான் நிலைநாட்டியுள்ளார். தென் ஆபிரிக்காவில் தற்போது நடைபெற்றுவரும் SA20 கிரிக்கெட் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் கேப் டவுன் அணிக்காக விளையாடிவரும் ராஷித் கான், பார்ல் றோயல்ஸ் அணி வீரர் துனித் வெல்லாலகே கேயை ஆட்டம் இழக்கச் செய்ததன் மூலம் 632ஆவது ரி20 விக்கெட்டைக் கைப்பற்றி புதிய சாதனை நிலைநாட்டினார். MI கேப் டவுன் அணியின் தலைவரான ராஷித் கான் அப் போட்டியில் 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். அத்துடன் இதுவரை 461 ரி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியு…
-
- 1 reply
- 264 views
- 1 follower
-
-
மெத்தியூஸிடம் 5 மணிநேர விசாரணை இலங்கை கிரிக்கெட் அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ், நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் இன்று, சுமார் 5 மணித்தியாலங்களாக வாக்குமூலமளித்தார். பணத்துக்காக ஆட்டநிர்ணயத்தில் ஈடுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக குசால் ஜனித் பெரேரா மற்றும் ரங்கன ஹேரத் ஆகியோர், சர்வதேச கிரிகெட் சபையிடம் முறைப்பாடு செய்திருந்தனர். இது தொடர்பிலேயே வாக்குமூலம் பெறப்பட்டதாக, மெத்தியூஸ் தெரிவித்தார். - See more at: http://www.tamilmirror.lk/164146/%E0%AE%AE-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%AF-%E0%AE%B8-%E0%AE%9F%E0%AE%AE-%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%A8-%E0%AE%B0-%E0%AE%B5-%E0%AE%9…
-
- 1 reply
- 439 views
-
-
ஆஸி. வீரர்களின் சிக்ஸர் மழைக்கு மத்தியில் கில்லி போல பந்துவீசிய வாஷிங்டன் சுந்தர்! 11 சிக்ஸர்கள். 50 ஓவர்களில் 347 ரன்கள். இந்த ரன் மழைக்கு மத்தியில் வாஷிங்டன் சுந்தர் மட்டும் தன்னிரகற்ற பந்துவீச்சாளராக விளங்கினார். அட என்று அத்தனை பேரும் ஆச்சர்யப்படும் பந்துவீச்சு. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள், 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர், 3 போட்டிகள் டி20 தொடர் ஆகியவற்றில் மோதுகின்றன. ஒரு நாள் தொடரின் முதல் ஆட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெறுகிறது. அதை முன்னிட்டு ஆஸ்திரேலியா-இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) தலைவர் லெவன்…
-
- 1 reply
- 443 views
-
-
ஒலிம்பிக் சின்னமாகும் பந்து எறும்புத் தின்னி வரும் 2014ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து போட்டி, பிரேசில் நாட்டில் நடக்கிறது. இதற்காக அரிதான, மிகவும் பொருத்தமான ஒரு அதிகார பூர்வ சின்னத்தை தேர்ந்தெடுத்து இருக்கிறது அந்த நாடு. அது ஒருவகை எறும்புத்தின்னி. ‘பிரேசிலியன் த்ரீ பேண்டட் ஆர்ம டில்லோ’ என்று இதற்குப் பெயர். பெயருக்கு ஏற்றபடி இது பிரேசில் நாட்டில் மட்டுமே வசிக்கிறது. அழிந்துவரும் அரிதான இனம். இதன் உடல் அமைப்பு விநோதமானது. தலை ஒரு பகுதியாகவும், வயிற்றுப் பிரதேசத்தில் ‘வெஸ்டிபுள் டியூப்’ போல மூன்று விசித்திரமான மடிப்புகளுடன் உடல் ஒரு பகுதியாகவும் இருக்கிறது. குட்டியூண்டு வால் பின்னால் நீட்டிக் கொண்டிருக்கும். இதன் உடலின் மேல்பகுதி, ஆமைகளுக…
-
- 1 reply
- 640 views
-
-
இலங்கை – பங்களாதேஷ் இடையிலான போட்டி அட்டவணை வெளியீடு இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பமாகவுள்ள கிரிக்கெட் சுற்றுத் தொடர்களுக்கான போட்டி அட்டவணை நேற்று (14) உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதன்படி, இவ்விரு அணிகளுக்கிடையிலான டெஸ்ட் மற்றும் T-20 தொடர்கள் ஆரம்பமவாதற்கு முன்னர் இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுடனான முத்தரப்பு ஒரு நாள் போட்டித் தொடரை நடத்துவதற்கு அந்நாட்டு கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது. இறுதியாக 2010ஆம் ஆண்டிலேயே பங்களாதேஷில் முத்தரப்பு ஒரு நாள் போட்டித் தொடரொன்று இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 7 போட்டிகளைக் கொண்ட இந்த போட்டித் தொடரின் அனைத்துப் போட்டிகளு…
-
- 1 reply
- 509 views
-
-
36 வயதினிலே... : 26 வயது வீரர்களை விஞ்சும் திறன்; தோனிக்கு ரவி சாஸ்திரி புகழாரம்! ரவிசாஸ்திரி, தோனி. - படம். | விவேக் பெந்த்ரே. தன்னை விட 10 வயது இளம் வீரர்களைக் காட்டிலும் உடல் தகுதியிலும் சுறுசுறுப்பிலும் முன்னிலை வகிக்கிறார் தோனி என்று இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மீண்டுமொரு முறை தோனிக்காக வாதாடியுள்ளார். எனவே தோனியை விமர்சிப்பவர்கள் அவர்கள் 36 வயதில் என்ன சாதித்தார்கள் என்பதைப் பார்க்கட்டும் என்கிறார் ரவிசாஸ்திரி. ரவிசாஸ்திரி இது குறித்து கூறியதாவது: நாங்கள் ஒன்றும் முட்டாள் அல்ல. கடந்த 30-40 ஆண்டுகளாக இந்த கிரிக்கெட்ட…
-
- 1 reply
- 601 views
-
-
குஷியாக்க வந்துவிட்டார்கள் சியர்லீடர்ஸ் வெளிநாடுகளில் பரவலாக காணப்படும் சியர் லீடர்கள் எனப்படும் உற்சாகமூட்டும் அழகிகள் என்ற கான்செப்ட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது இந்தியன் பிரிமீயர் லீக் எனப்படும் ஐபிஎல் நிர்வாகம்தான். 2008ம் ஆண்டு நடந்த முதலாவது ஐபிஎல் தொடரின்போதுதான் இந்த சியர் லீடர் அழகிகளை இந்தியா கண்டு களித்தது. http://tamil-friend.blogspot.com/2011/04/blog-post_8599.html ஒவ்வொரு அணிக்கும் தனித் தனி குழுவாக அழகிகளைக் களம் இறக்கினர். வீரர்கள் ஃபோர், சிக்ஸ் அடிக்கும்போது இந்த அழகிகள் எழுந்து ஆடியதை பார்த்து குஷியானார்கள் ரசிகர்கள். இந்த அழகிகள் ஆட்டத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் இந்தியாவில் அறிமு…
-
- 1 reply
- 1.3k views
-
-
பட மூலாதாரம்,BBC/GETTY IMAGES படக்குறிப்பு, உலகின் நம்பர் ஒன் செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சனை இந்திய வீரரான கார்த்திகேயன் முரளி, கத்தார் மாஸ்டர்ஸ் 2023 போட்டியில் தோற்கடித்துள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் செஸ் உலகத்தின் கதாநாயகனாக கொண்டாடப்படும் நார்வே நாட்டு விளையாட்டு வீரர் மேக்னஸ் கார்ல்சனை இந்திய வீரரான கார்த்திகேயன் முரளி(24), கத்தார் மாஸ்டர்ஸ் 2023 என்ற சர்வதேச ஃபிடே ரேட்டிங் போட்டியில் தோற்கடித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம், அஜர்பைஜானில் நடைபெற்ற செஸ் உலகக்கோப்பை போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் வீரர் பிரக்ஞானந்தா…
-
- 1 reply
- 518 views
- 1 follower
-
-
பிரித்தானிய இலங்கைக்கு விளையாட்டு பிரயாணம் மேற்கொள்ளவேண்டுமா? - சனல் நாலு ஊழல் நிறைந்த சிங்கள அணியுடன் இங்கிலாந்து துடுப்பாட்ட நிகழ்வுக்கு செல்லவேண்டுமா என சனல் நாலு கேள்வி எழுப்பியுள்ளது. கொலைக்களங்கள் என்ற ஆவணப்படம் மூலம் உலகெல்லாம் தமிழின படுகொலையை உலகறியச்செய்த சனல் நாலு பாகம் இரண்டு வெளியிட உள்ள நிலையில் இந்த கேள்வியை இன்று எழுப்பியுள்ளது. Should England's cricket team tour Sri Lanka?? As England's cricket team sets off for Sri Lanka, Channel 4 News Foreign Editor Ben De Pear asks whether the tour should be going ahead given the country's human rights record? With the upcoming broadcast of "Sri Lanka's Killing Fields; War Crimes Unpunis…
-
- 1 reply
- 679 views
-
-
கிரிகெட்டிலிருந்து ஓய்வு பெறுதாக கில்கிறிஸ்ட் அறிவிப்பு சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக ஆஸ்திரேலிய அணியின் சிறந்த விக்கெட் கீப்பரும்,பேட்ஸ்மேனுமான கில்கிறிஸ்ட் அறிவித்துள்ளார். இதன்மூலம் அவரது 12 ஆண்டு கால கிரிக்கெட் ஆட்டம் முடிவுக்கு வருகிறது.அடிலெய்டுவில் தற்போது நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி மற்றும் அடுத்து நடைபெறவுள்ள இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா பங்குபெறும் முத்தரப்பு ஒருநாள் போட்டியுடனும் ஓய்வு பெறப் போவதாக கிறிஸ்ட் அறிவித்துள்ளார். அடிலைடில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் 3 ம் நாள் ஆட்டத்தில் இந்திய கேப்டன் கும்ளேயை கேட்ச் பிடித்து அவுட்டாக்…
-
- 1 reply
- 1.3k views
-
-
நியூஸி. பவுலிங்கை சிதறடித்த ஜானி பேர்ஸ்டோ: காட்டடி சதத்தில் தொடரை வென்றது இங்கிலாந்து 58 பந்துகளில் சதம் கண்ட பேர்ஸ்டோ. - படம். | ஏ.எஃப்.பி. கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற 5-வது, இறுதி ஒருநாள் போட்டியில் பேர்ஸ்டோவின் காட்டடி சதம் மற்றும் அபார பந்து வீச்சில் இங்கிலாந்து அணி நியூஸிலாந்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஒருநாள் தொடரை 3-2 என்று கைப்பற்றியது. முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 223 ரன்களுக்கு மடிய, தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து 32.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்குக் 229 ரன்கள் எடுத்து தொடரைக் கைப்பற்றியது. ராஸ் டெய்லர் அணியில் காயம் காரணமாக இடம்பெறாதது நியூசிலாந…
-
- 1 reply
- 370 views
-
-
ஆசிய கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் அடுத்த இலக்கு உலகக் கோப்பை 9 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ANI இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மறக்க முடியாத தருணங்களில் ஒன்று 2011ஆம் ஆண்டின் ஆண்களுக்கான ஒருநாள் போட்டி உலகக்கோப்பையின் இறுதிப் போட்டி. அதன் இறுதிப் பந்தில் நடந்த அதிரடியின் உணர்வுகளை, நேற்று இந்திய மகளிர் கிரிக்கெட் அணியும் உண்டாக்கியது. பேட்ஸ்மேனின் கோட்டை தாண்டி, லாங் ஆனில் இந்தியாவின் உலகக் கோப்பை வெற்றியை உறுதி செய்த சிக்சரை அடித்துவிட்டு தோனி நின்றிருந்தார். அதேபோல், 11 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று வங்கதேசத்தின் சில்ஹெட்டில் நடந்த ஆசிய கோப்பையின் இறுதிப் போட்டியில் ஸ்மிருதி…
-
- 1 reply
- 400 views
- 1 follower
-
-
போல் ஒக்டோபஸ்ஸின் ஞாபகார்த்தமாக சிலை ஜெர்மனியில் வைக்கப்பட்டுள்ளது போல் ஒக்டோபஸ்ஸிற்கு 2 மீற்றர் உயரமான பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட சிலை ஜெர்மனியில் Oberhausen என்னுமிடத்திலுள்ள நீர்வாழினக் காட்சியகத்தில் ஞபகார்த்தமாக வைக்கப் பட்டுள்ளது. --- http://www.bbc.co.uk/news/world-europe-12247183 --- Paul the Octopus memorial statue unveiled in Germany A monument to the memory of Paul the Octopus, who correctly predicted the results of matches at the World Cup last summer, has been unveiled at an aquarium in Germany. The Sea Life Centre in Oberhausen, Germany was the home of the psychic octopus who became a global star. The tribute shows a ver…
-
- 1 reply
- 1.3k views
-
-
"கால்பந்து ராஜா" பீலே... ஐசியூவில் அனுமதி! பிரேசிலியா: கால்பந்து ஜாம்பவானும், பிரேசில் அணியின் முன்னாள் கேப்டனுமான பீலே உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பீலேயின் உண்மையான பெயர் எட்சன் அரண்டெஸ் டோ நசிமென்டோ. பிரேசில் அணியின் முன்னாள் கேப்டனா கோலோச்சியவர். பீலேவுக்கு தற்போது 74 வயது ஆகிறது. கடந்த 13ம் தேதி பீலேவிற்கு சிறுநீரகக் கல் நீக்கும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் பட்டது. சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய பீலேக்கு நோய்த் தொற்று ஏற்பட்டது. இதன் காரணமாக திங்களன்று மீண்டும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் பீலே. இந்நிலையில், நேற்று இரவு அவரது உடல்நிலை மிகவும் மோசமானதால், பீலே அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப் பட்டதா…
-
- 1 reply
- 420 views
-
-
தரவரிசையில் 2-ஆம் இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவுக்கு 6-ஆம் இட இந்தியா சவால் அளிக்குமா? பிலிப் ஹியூஸ் அகால மரணத்திற்குப் பிறகு கனத்த இதயத்துடன் ஆஸ்திரேலியா நாளை அடிலெய்டில் கிளார்க் தலைமையில் களமிறங்குகிறது. மாறாக உற்சாகமான கோலியின் தலைமையில் புதிய திருப்பம் காண இந்தியா எதிர்கொள்ள தயாராக இருக்கிறது. இந்திய அணியில் புவனேஷ் குமார் ஆடமுடியாது போயுள்ளது ஒரு பின்னடைவே. ஆனாலும் நாளை காலைதான் கூற முடியும் என்று கூறியுள்ளார் கோலி. புவனேஷ் குமார் சிக்கனமாக வீசுவதோடு, தொடக்கத்தில் விக்கெட்டுகளைக் கைப்பற்றும் திறமையை சமீபமாக இங்கிலாந்து அணிக்கு எதிராக நிரூபித்துள்ளார். மேலும், பின்னால் பேட்டிங்கில் களமிறங்கி அருமையான திறமையை வெளிப்படுத்தி ஒரு முழுமையான டெஸ்ட் ஆல்ரவுண்டராக மாற…
-
- 1 reply
- 347 views
-