Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. அணியின் மொத்த ஸ்கோர் 2; அதில் எக்ஸ்ட்ரா ஒரு ரன்! 19 வயதுக்குட்பட்ட மகளிர் கிரிக்கெட் போட்டியில் நாகலாந்து அணி இரண்டு ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. அதில் ஒரு ரன் எக்ஸ்ட்ரா. எதிர் அணிக்கு இந்த அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது கேரளா மகளிர் அணி. மாநிலங்களுக்கு இடையேயான 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் கிரிக்கெட் போட்டி தற்போது பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள ஜே.கே.சி கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் நாகலாந்து- கேரளா அணிகள் மோதின. முதல் முறையாக இந்தப்போட்டியில் களமிறங்கிய நாகலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடக்க வீரர்களாக மென்ஹா-முஸ்கான் ஆகிய…

    • 1 reply
    • 447 views
  2. ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள்: சச்சினுக்கு அடுத்த இடத்தில் சங்கக்காரா உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இன்று நியூசிலாந்துக்கு எதிராக 39 ரன்கள் எடுத்த சங்கக்காரா ஒருநாள் கிரிக்கெட்டில் 13,732 ரன்கள் எடுத்து சச்சினுக்கு அடுத்த இடத்திற்கு வந்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் 18,426 ரன்களுடன் முதலிடம் வகிக்க அதற்கு அடுத்த இடத்தில் முன்னதாக ரிக்கி பாண்டிங் 13,704 ரன்களுடன் இருந்தார். தற்போது 13,732 ரன்களுடன் சங்கக்காரா 2-ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். உலகக்கோப்பை கிரிக்கெடில் சங்கக்காரா 1030 ரன்களை எடுத்துள்ளார். உலகக்கோப்பை கிரிக்கெட்டில் 1000 ரன்களுக்கும் மேல் எடுக்கும் 3-வது இலங்கை வீரர் ஆனார் சங்கக்காரா, மொத்தத்தில் 14-வது வீரர். சச்சின் டெண்டுல்கர் உலகக்கோப்ப…

  3. டெஸ்டில் கிரிக்கெட்டில் விரைவாக 25 முறை 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அஸ்வின் சாதனை இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் விரைவாக 25 முறை 5 வி்க்கெட்டுக்கள் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். பெங்களூருவில் நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 75 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு அஸ்வின் பந்து வீச்சு முக்கிய காரணமாக இருந்தது. முதல் இன்னிங்சில் 49 ஓவர்கள் வீசி 84 ரன்கள்…

  4. பெர்த்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் படுதோல்வி அடைந்த இந்திய அணியை அந்நாட்டு பத்திரிக்கைகள் கடுமையாக விமர்சித்து செய்திகள் வெளியிட்டுள்ளன. இதில் டெஸ்ட் போட்டிகளில் ரன் எடுக்க தவறிய பேட்ஸ்மேன்களை உதவாக்கரைகள் என்றும், கேப்டன் டோணியை செயலற்றவர் என்றும் பழித்துள்ளன. ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் 0-3 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்தது. பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டத்தால் இந்திய அணிக்கு தோல்வி ஏற்பட்டது. எனவே இந்திய பேட்ஸ்மேன்கள் உதவாக்கரைகள் என்றும், கேப்டன் டோணி செயலற்றவர் என்றும் ஆஸ்திரேலிய பத்திரிக்கைகள் செய்திகள் வெளியிட்டுள்ளன. இது குறித்து 'தி ஆஸ்திரேலியன்' என்ற பத்திரிக்கையில் வெளியான செய்தியில் கூறியிர…

  5. ரியோ பாராலிம்பிக்ஸ்: ஒலிம்பிக் வீரரை மிஞ்சிய பாராலிம்பிக் வீரர்கள்! ஒலிம்பிக் போட்டிகள் ரியோவில் கோலாகலமாக நடைபெற்று முடிந்த கையோடு பாராலிம்பிக்ஸ் போட்டிகள் ரியோவில் துவங்கின. இதில் நேற்று பார்வையற்றோர்கான டி13 1500மீ ஒட்டப்பந்தையம் நடைபெற்றது. இதில் நிகழ்த்தப்பட்ட சாதனை உலகையே தரும்பி பார்க்க வைத்துள்ளது. அல்ஜீரியாவின் போவுட் பகா பந்தய தூரத்தை 3 நிமிடம் 49.84 நொடிகளில் கடந்தார். இது ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்றவர் ஓடிய நேரத்தை விட குறைவான நேரமாகும். ஒருவேளை இவர் ஒலிம்பிக்கில் ஓடி இருந்தால் இவருக்கே தங்கம் கிடைத்திருக்கும். ஏனேனில், ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அமேரிக்காவின் மத்தியு சென்ட்ரொவிட்ஸ்-ஏ 1500மீ தூரத்தை கடக்க 3 நிமிடம் 50 நொடிகள்…

  6. கோலியை அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் ஒப்பிட்டு ஆஸ்திரேலிய பத்திரிகை சாடல் டி.ஆர்.எஸ். மற்றும் காயம் ஆகிய பிரச்சினையில் ஆஸ்திரேலிய கேப்டனை குற்றம்சாட்டிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை ட்ரம்புடன் ஒப்பிட்டு ஆஸ்திரேலிய பத்திரிகை சாடியுள்ளது. ராஞ்சி டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டத்தின்போது விராட் கோலியின் தோள்பட்டையில் காயமேற்பட்டது. அதனை ஆஸ்திரேலிய வீரர்கள் கேலி செய்ததாக விமர்சனம் எழுந்தது. இதுகுறித்து குற்றம்சாட்டிய கோலியை அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் ஒப்பிட்டு ‘உலக விளையாட்டின் ட்ரம்ப் ஆகிறார் விராட் கோலி’ என்று வர்ணித்துள்ளது தி டெய்லி டெலிகிராப் என்ற பத்திரிகை. …

  7. ஆர்ஜென்டீனாவை நடத்துவதை மறுக்கிறார் மெஸ்ஸி ஆர்ஜென்டீனா தேசிய கால்பந்தாட்ட அணியில் பிரதான முடிவுகளை தான் எடுப்பதாகக் கூறுவது தன்னை ஆத்திரமூட்டுவதாக, ஆர்ஜென்டீனா தேசிய கால்பந்தா அணியினதும் ஸ்பானியக் கழகமான பார்சிலோனாவினது முன்கள வீரரான லியனல் மெஸ்ஸி தெரிவித்துள்ளார். கடந்த மாதம் இடம்பெற்ற கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்தின் இறுதிச் சுற்று தகுதிகாண் போட்டியில் மூன்று கோல்களைப் பெற்று, உலக் கிண்ணத்துக்கு ஆர்ஜென்டீனா தகுதிபெறுவதை உறுதிசெய்த மெஸ்ஸி, பயிற்சியாளர்களைத் தெரிவுசெய்வதாகவும் கடந்த காலங்களில், குழாமில் யார் இடம்பெறுவது, இடம்பெறக்கூடாது என்பதில் தாக்கம் செலுத்துவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. இந்நிலையில், கருத்துத் தெரிவி…

  8. உலக சம்பியனுக்கு வந்த சோதனை! அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 85 ஓட்டங்களுக்களை மாத்திரம் பெற்றுள்ளது. இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணியுடன் ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதன்படி இன்று லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி 23.4 ஓவர்களை மாத்திரம் எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 85 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. இங்கிலாந்து அணி சார்பில் ரோரி பேர்ன்ஸ் 6 ஓட்டத்துடனும், ஜோசன் ரோய் 5 ஓட்டத்துடனும், ஜோ டென்லி 23 ஓட்டத்துடனும், ஜ…

  9. பாகிஸ்தான் அம்பயர் அசாத் ரவுப்பிற்கு 5 வருட தடை விதித்த பிசிசிஐ மும்பை: பாகிஸ்தான் நடுவர் அசாத் ரவுப் மீதான மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, 5 ஆண்டுகளுக்கு தங்களது போட்டிகளில் இருந்து சஸ்பெண்ட் செய்து இந்திய கிரிக்கெட் வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அசாத் ரவுப் ஐபிஎல் போட்டிகளில் நடுவராக பணியாற்றியவர். அப்போது, சூதாட்ட புக்கிகளிடம் விலை உயர்ந்த பரிசு பொருட்களை அவர் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், 2013ம் ஆண்டு ஐபிஎல் போட்டியின்போது, அசாத் ரவுப் பெட்டிங்கில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து விசாரித்த பிசிசிஐ அசாத் ரவுப்பை, 5 ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட் செய்துள்ளது. ஐபிஎல் உள்ளிட்ட பிசிசிஐ தொடர்பான எந்த ஒரு போட்டிகளிலு…

  10. சூப்பர் ஸ்டார் கலாச்சாரம், இரட்டை ஆதாயப் பதவி: கிரிக்கெட் கமிட்டியிலிருந்து ராஜினாமா செய்த ராமச்சந்திர குஹா குற்றச்சாட்டு ராமச்சந்திர குஹா. | படம்.| கே.முரளிகுமார். உச்ச நீதிமன்றம் நியமித்த பிசிசிஐக்கான நிர்வாகிகள் கமிட்டியின் உறுப்பினர் ராமசந்திர குஹா தன் பதவியை ராஜினாமா செய்ததற்கு பல காரணங்களை கடிதம் மூலம் விளக்கியுள்ளார். உச்ச நீதிமன்றம் நியமித்த கிரிக்கெட் நிர்வாகிகள் கமிட்டியிலிருந்து பிரபல கிரிக்கெட் வரலாற்றறிஞர், கட்டுரையாளர், ஆசிரியர், எழுத்தாளரான ராமச்சந்திர குஹா ராஜினாமா செய்ததற்கு பிசிசிஐ நிர்வாகத்தின் செயல்பாடுகளின் மீது ஏற்பட்டுள்ள அதிருப்தியே காரணம் என்று கூறியுள்ளார். கிரிக்கெட் நிர்வாகிகள் குழு என்…

  11. தோற்றது பரிஸ் ஸா ஜெர்மைன் பிரெஞ்சுக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லீக் 1 தொடரில், லீக் 1 புள்ளிகள் தரவரிசையில் முதலிடத்திலுள்ள பரிஸ் ஸா ஜெர்மைன் இப்பருவகால லீக் 1 தொடரில் முதற்தடவையாக தோற்றுள்ளது. நேற்று இடம்பெற்ற ஸ்ராஸ்பேர்க் அணியுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் பரிஸ் ஸா ஜெர்மைன் தோற்றது. ஸ்ராஸ்பேர்க் சார்பாக நுனோ டா கொஸ்டா, ஸ்டெபனி பஹொஹென் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். பரிஸ் ஸா ஜெர்மைன் சார்பாகப் பெறப்பட்ட கோலை கிலியான் மப்பே பெற்றிருந்தார். ஆர்சனலை வென்றது மன்செஸ்டர் யுனைட்டெட் இங்கிலாந்து கால்பந்தாட்டக்…

  12. எல்லை கடந்து இலங்கை ஆதரவு: காஷ்மீர் சிறுமிகளுக்கு ‘ரக்பி’ பயிற்சி அளிக்கிறார் முன்னாள் அதிபர் மகன் சென்னையில் காஷ்மீர் சிறுமிகள் ரக்பி பயிற்சி எடுத்த காட்சி : கோப்புப் படம் இலங்கை முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே காஷ்மீர் சிறுமி ரக்பி அணிக்கு பயிற்சி அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். மகிந்திரா ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே சிறந்த ரக்பி வீரர். இவர் தற்போது இலங்கை நாடாளுமன்றத்தில் எம்.பி.யாக இருந்து வருகிறார். இலங்கை ஆடவர் ரக்பி அணியின் முன்னாள் கேப்டனாகவும் நமல் ராஜபக்சே இருந்துள்ளார். இந்நிலையில், காஷ்மீர் மாநிலத்தின் ரக்பி மகளிர் அணிக்கு தேவை…

    • 1 reply
    • 334 views
  13. இன்று முல்லைத்தீவில் நடைபெற்ற உதைபந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டியில் செம்மலை உதயசூரியன் அணி வெற்றி பெற்றுள்ளது. வாழ்த்துக்கள். https://www.facebook.com/video/video.php?v=914720025207351

  14. ஸ்பானிய மாடு பிடி விளையாட்டில் இந்த நூற்றாண்டின் முதல் பலி ஸ்பெயின் பிரசித்தி பெற்ற மாடு பிடி நிகழ்வில் , மாடு பிடி வீரர் ஒருவர் மாடால் முட்டிக்கொல்லப்பட்டார். இந்த நூற்றாண்டில் ஒரு மாடுபிடி விளையாட்டு வீரர் மாடால் முட்டிக்கொல்லப்படும் முதல் சம்பவம் இதுவாகும். கொல்லப்பட்டவர் 29 வயதான விக்டர் பேரியோ என்ற ஒரு தொழில்முறை மாடுபிடி விளையாட்டு வீரர். ஸ்பெயினின் கிழக்குப் பகுதி நகரான டெருவெல் என்ற இடத்தில் நடந்த இந்த நிகழ்வு நேரடியாக தொலைக்காட்சிகளால் ஒளிபரப்பப்பட்டுக்கொண்டிருந்தது. மாடு பேரியோவை குத்தித் தூக்கி வீசி,பின்னர் அவரது வலப்புற நெஞ்சில் மூர்க்கமாகக் குத்தித் தூக்கி எறிந்ததை தொலைக்காட்சிக் காட்சிகள் காட்டின. சனிக்கிழமை இந்த சம்பவம…

  15. உலகின் மிகச்சிறந்த முஸ்லீம் விளையாட்டு வீரர் யார் தெரியுமா? பிரான்ஸ் கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜினடேன் ஜிடேனுக்கு இன்று 43வது பிறந்தநாள். இந்த தருணத்தில் அவரை பற்றிய சில அரியத் தகவல்கள் இங்கே... ஜினடேன் ஜிடேன் பிரான்ஸ் நாட்டின் ஹீரேவாக கருதப்படுபவர். கடந்த 1998ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியிலும், 2000ஆம் ஆண்டு ஐரோப்பா கோப்பை கால்பந்து போட்டியிலும் இவர் தலைமையில் பிரான்ஸ் கோப்பையை வென்றது ஜினடேனுக்கு பெரிய அளவில் மத நம்பிக்கை கிடையாது. ஆனாலும் உலகின் மிகச்சிறந்த முஸ்லீம் விளையாட்டு வீரர்களில் ஒருவராக ஜிடேன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜிடேன் தனது மனைவி வெரோனிகா ஃபெர்னான்டசை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 17 வயதில் ஜிடேன் வெரோனிக்காவை சந்தித்ததார். இந்த த…

  16. சீனாவில் 30 கால்பந்து பள்ளிகளை திறக்கும் பிரேசில் நட்சத்திரம் ரொனால்டோ பிரேசில் கால்பந்து நட்சத்திரம் ரொனால்டோ. | கோப்புப் படம். பிரேசில் அணியின் முன்னாள் கால்பந்து நட்சத்திர வீரர் ரொனால்டோ, சீனாவில் 30 கால்பந்து பள்ளிகளை திறக்கிறார். மேலும் கால்பந்தில் சீன இளைஞர்களை புதுவிதமான பயிற்சியின்ஹ் மூலம் உருவாக்க முயற்சி எடுப்பதாக அவர் தெரிவித்தார். சாவோ போலோவில் உள்ள கேம்பினாஸில் தனது கால்பந்து பள்ளியின் தொடக்க விழாவின் போது இத்தகவலை ரொனால்டோ தெரிவித்தார். "வணிக நோக்கம் தவிர, சீனாவில் கால்பந்து பள்ளிகளைத் தொடங்கக் காரணம், அங்கு கால்பந்துக்கு மிகப்பெரிய ரசிகர்கள் உள்ளனர், நிறைய வீரர்கள் விளையாடி வருகின்றனர். சீன அரசும், குடிமை அமைப்புகளும் கூட கால்பந்தை வளர்த்தெடுப்பதில் ம…

  17. 3 வருடம் வீட்டிற்கே போக மாட்டேன் - சுழற்பந்து வீச்சாளர்! கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வரும் 14 ஆம் திகதியுடன் 21 நாட்கள் முடிவடைகிறது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வரவில்லை என்பதால் மேலும் இரண்டு வாரங்கள் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஊரடங்கு உத்தரவை திரும்ப பெற்றபின் மூன்று வருடங்கள் வெளியே தங்க முடியும் என்று சுழற்பந்து வீச்சாளர் சாஹல் தெரிவித்துள்ளார். சாஹல் இதுகுறித்து கூறுகையில் ‘‘லாக்டவுன் முடிந்து நான் விட்டை விட்டு வெளியே சென்றபின், என்னுடைய விட்டுக்கு திரும்பமாட்டேன். இனிமேல் என்னால் வீட்டுக்குள் இதுபோன்று ந…

  18. இந்திய அவுஸ்திரேலிய அணிகளுகிடையில் நாக்பூரில் நடைபெற்ற நான்காவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அவுஸ்திரேலிய அணியை 172 ஓட்டங்களால் வெற்றி கொண்டது. இதன் மூலம் 2-0 என்ற புள்ளிகளின் அடிப்படையில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது. http://www.virakesari.lk/vira/sports/head_view.asp?key_c=131 இனி பாருங்கோ இந்தியன் காறங்கள் தங்களை தாங்கள் பொருமையா கதைபாங்கள்.. தங்கட அணி தான் உலகத்திலையே முதலாவது அணி என்று

  19. இன்சமாம், யூசுப் சாதனை: சமன் செய்த அஸார் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துவரும் அஸார் அலி இந்த வருடத்தில் 1000 ரன்களை கடந்தார். இந்த வருடம் விராட் கோலிக்குப் பிறகு 1000 ரன்களை கடக்கும் 2-வது ஆசிய வீரர் இவர் தான். மேலும் இன்சமாம், யூசுப், மொயின் கான், யூனிஸுக்கு பிறகு 1000 ரன்களை கடக்கும் பாக் வீரர் அஸார் அலி தான். பாக்ஸிங் டே டெஸ்ட்டில் அஸார் அலியின் ஆட்டம் காரணமாக முதல் இன்னிங்ஸில் 300 ரன்களை கடந்து ஆடி வருகிறது பாக் அணி, அஸார் 90 ரன்களில் இருந்த போது மூன்றாவது நடுவர் நாட் அவுட் பட்டனுக்கு பதில் அவுட் பட்டனை அழுத்தியது குறிப்பிடத்தக்கது. http://www.vikatan.com/news/sports/76115-azar-ali-equals-inzamam-recor…

  20. பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் போட்டியில் ஷரபோவா பங்குபற்ற அனுமதி மறுப்பு பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் போட்டிகளில் இரண்டு தடவைகள் சம்பியனான மரியா ஷரபோவாவுக்கும் இவ் வருட பிரெஞ் பகிரங்க டென்னிஸ் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. மரியா ஷரபோவாவுக்கு குருட்டு வாய்ப்பு சீட்டு (வைல்ட் கார்ட்) வழங்க போட்டி ஏற்பாட்டாளர்கள் மறுத்துள்ளனர். தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பாவனையில் சிச்சியதை அடுத்து விதிக்கப்பட்ட 15 மாதத் தடையின்பின்னர் மரியா ஷரபோவா மூன்று டென்னிஸ் போட்டிகளில் விளையாடியுள்ளார். எனினும் மாபெரும் டென்னிஸ் (க்ராண்ட் ஸ்லாம்) போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு அவருக்கு அனுமதி வழங்கப்படவில்ல…

    • 1 reply
    • 451 views
  21. 2 வருட "பிரேக்"குக்குப் பின் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் திரும்பும்.. பிசிசிஐ அறிவிப்பு மும்பை: 2016ல் நடக்கும் 9வது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்குப் பதில் புதிய அணிகள் தற்காலிகமாக இடம் பெறும் என்றும், 2018ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸும், ராஜஸ்தானும் போட்டிக்குத் திரும்பும் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் 9வது ஐபிஎல் தொடரில் 2 புதிய அணிகளுடன் போட்டிகள் நடைபெறும் என்றும் பிசிசிஐ அறிவித்துள்ளது. இதுதொடர்பான முடிவு இன்று மும்பையில் நடந்த கிரிக்கெட் வாரியத்தின் செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டது. இதுகுறித்து பிசிசிஐ அறிக்கை கூறுகையில், நீதிபதி லோதா கமிட்டி, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜ…

  22. கண்ணீருடன் மொகமது ஆமீர் மன்னிப்பு: மனமிளகி ஏற்றுக் கொண்ட பாகிஸ்தான் வீரர்கள் மொகமது ஆமீர். | கோப்புப் படம். பாகிஸ்தானுக்கு தான் ஆட தகுதியற்றவன் என்று மற்ற வீர்ர்கள் நினைத்தால் நான் அணியை விட்டு விலகுகிறேன் என்று பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் மொகமது ஆமீர் உருக்கமாகக் கூறியதையடுத்து அவருக்கு எதிர்ப்பு காட்டிய வீரர்கள் மனமிளகி அவரை ஏற்றுக் கொண்டனர். பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு களங்கம் கற்பித்தவர் என்ற வகையில் ஆமீர் மீண்டும் ஆட கடும் எதிர்ப்பு இருந்து வந்தது. ஸ்பாட் பிக்சிங் குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக் கொண்டு சிறைத் தண்டனையும், தடை உத்தரவையும் பெற்று கடந்து வந்துள்ள திறமை வாய்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் மொகமத…

    • 1 reply
    • 503 views
  23. பயிற்சியாளர் நம் கிரிக்கெட் கலாச்சாரத்தை புரிந்துகொள்பவராக இருக்க வேண்டும்: தோனி தோனி. | படம்: பிடிஐ. இந்திய கிரிக்கெட் அணிகான பயிற்சியாளர் தேடுதல் வேட்டை தொடங்கியுள்ள நிலையில் பல பயிற்சியாளர்களுடன் பணியாற்றிய அனுபவம் பெற்ற தோனி தன் கருத்தை இது குறித்து கூறியுள்ளார். லால்சந்த் ராஜ்புத், கிரெக் சாப்பல், கேரி கர்ஸ்டன், டன்கன் பிளெட்சர், ஸ்டீபன் பிளெமிங், ரவிசாஸ்திரி என்று ஏகப்பட்ட பயிற்சியாளர்களுடன் சுமுகமாக பணியாற்றியுள்ள இந்திய கேப்டன் தோனி, புதிய பயிற்சியாளர் இந்திய கிரிக்கெட் கலாச்சாரத்தைப் புரிந்து கொள்பவராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இது குறித்து ஜிம்பாப்வே தொடருக்கு முந்தைய சந்திப்பில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “…

  24. அட்லாண்டாவில் அமைக்கப்பட்ட சுப்பர் பவுல் விளையாட்டரங்கத்தின் வான்வழி காட்சிகள்! அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தின் தலைநகர் அட்லாண்டாவில் அமைக்கப்பட்டுள்ள மேர்சிடிஸ் பென்ஸ் சுப்பர் பவுல் விளையாட்டரங்கத்தின் வௌிப்புற காட்சிகளை அமெரிக்க சுங்கத்துறை மற்றும் கரையோர பாதுகாப்பு பிரிவு முகவரக துறையினர் வௌியிட்டுள்ளனர். கால்பந்தாட்ட சுற்றுப்போட்டிகளை நடத்துவதற்காக மிகப் பாரிய பொருட் செலவில் உருவாக்கப்பட்ட அதிசொகுசு உள்ளரக அரங்கம் தயார்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதன் கம்பீர தோற்றத்தை உலங்கு வானூர்திகள் மூலம் காட்சிப்படுத்தியுள்ளனர். நியூ இங்கிலாந்தின் தேசபக்தர்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்ஸுக்கு எதிராக அமெரிக்காவின் மிகப்பெரிய நிகழ்ச்சியாக கருதப்படுவதில் எதிர்பார்க்கப்படுவார்…

  25. மிக விரைவாக 10 ஆயிரம் ரன்களை கடந்த 2வது வீரர் திலகரத்னே தில்ஷன்! ஒருநாள் போட்டியில் 10 ஆயிரம் ரன்களை அடித்து இலங்கை வீரர் திலகரத்னே தில்ஷன் புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார். இந்த சாதனையை எட்டிய 11வது வீரர் இவர் ஆவார். ஹம்பான்தொட்டாவில் இலங்கை- பாகிஸ்தான் அணிகள் மோதும் 5வது ஒருநாள் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியில் இலங்கை வீரர் திலகரத்னே தில்ஷன் 55 ரன்கள் எட்டிய போது ஒருநாள் போட்டியில் 10 ஆயிரம் ரன்களை கடந்தார். இலங்கை வீரர்களில் ஜெயசூர்யா, மகிலா ஜெயவர்த்தனே, சஙகக்காரா ஆகியோருக்கு பிறகு இந்த மைல்கல்லை எட்டிய வீரர் இவர். தற்போது 39 வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் தில்ஷன் 318 சர்வதேச போட்டிகளில் விளையாடி 293வது இன்னிங்சில் 10 ஆயிரம் ரன்களை அடித்துள்ளார். அந்த வகையி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.