எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3794 topics in this forum
-
யாழ்தேவி பயணம் 1987 எனது நண்பர் ஒருவர் அனுப்பிய வீடியோ இணைப்பினை இன்று பார்த்தேன் , மிகவும் இனிமையாக இருந்தது. எனது ஆரம்பகால இரயில் பயணங்களை கண் முன்னே நிறுத்தியது இந்த காணொளி, இரயிலில் உள்ள அணைவரும் தமிழர்களாகவே தெரிகின்றனர், ஏன் இரயில் சாரதிகள் கூட தமிழர்களாகவே தெரிகின்றனர் ,இதில் ஒருவர் சவுதியில் வேலை செய்து விட்டு ஊருக்குத் திரும்பிச் செல்கிறார் , அவர் சொல்கிறார் நான் ஊருக்கு திரும்புவதையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் , ஊரில் தொழில் செய்யப்போவதாகவும் சொல்கிறார். எமது ஊரை மிகவும் நேசித்த எம்மை எமது ஊரிலேயே சிதைத்து , சின்னாபின்னமாக்கி வெளிநாடுகளுக்கு அகதிகளாக ஏற்றுமதி செய்த பாவம் இந்திய , இலங்கை இராணுவங்களையே சாரும்.
-
- 3 replies
- 520 views
-
-
-
- 2 replies
- 520 views
-
-
கி.பி 10 ஆம் நூற்றாண்டில் சோழரது நேரடி ஆட்சி இலங்கையில் ஏற்பட்டபோது நாகநாட்டில் இருந்த( தற்போதைய வடகிழக்கு மாகாணம்) தமிழ் அரசும் அவர்களது ஆதிக்கத்துக்கு உட்பட்டது என வரலாற்றாதாரங்கள் மூலம் அறிய முடிகிறது. சோழப்பேரரசின் படையெடுப்பின் மூலம் இப்பிரதேசம் இராஜராஜனின்(கி.பி 985 - கி.பி 1014) ஆதிக்கத்தின்கீழ் வந்தபின் 'இராஜராஜ சதுர்வேதி மங்கலம்' என்றே அழைக்கப்பட்டிருக்கிறது. (சோழர் ஆட்சியின் கீழ் தமிழ்ப் பௌத்தர்களால் நிர்வகிக்கப்பட்ட விகாரை இராசராசப் பெரும் பள்ளி யெனப் பெயர்மாற்றம் செய்யப்படதுபோல்) அதன் பின்னர் அவரது மகன் இராஜேந்திரன் (கி.பி 1012 - கி.பி 1044) காலப்பகுதியில் திருகோணமலை நகரம், இராஜ ராஜ சதுர்வேதி மங்கலம்(கந்தளாய்) என்பவற்றை உள்ளடக்கிய பிரதேசம் 'இராஜேந்திர சோ…
-
- 0 replies
- 520 views
-
-
-
- 0 replies
- 519 views
-
-
கைகள் மாத்திரம்தான் இல்லை! முன்னாள் போராளி வனிதா - குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்:- 08 மார்ச் 2016 கைகள் மாத்திரம்தான் இல்லை! முன்னாள் போராளி வனிதா - குளோபல் தமிழ் விசேட செய்தியாளர் உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு இன்று உலக பெண்கள் தினம். இந்த நாளில் தமிழ் இனத்திற்காக போராடிய ஒரு பெண் போராளியின் கதை இது. தமிழ் இனப் பெண்களின் நிலையையும் முன்னாள் பெண் போராளிகளின் இன்றைய நிலையையும் எடுத்துரைக்க தாயகத்தில் உள்ள பல ஆயிரம் பேரில் ஒருவரது கதையே இது. நாட்டுக்காக போராடிய முன்னாள் போராளிகள் இன்று பல்வேறு சவால்களின் மத்தியிலும் வாழ்ந்து வருகின்றனர். அவ்வாறான பல ஆயிரம் போராளிகளில் வனிதாவும் ஒருவர். மக…
-
- 0 replies
- 518 views
-
-
புதிதாக திறக்கப்பட்ட பலாலி நோக்கிய அச்சுவேலி தோலகட்டி வீதியில் அமைந்துள்ள தமிழீழ மருத்துவப்பிரிவின் மூடு பதுங்ககழி பற்றி பல யூரியூப்பர்கள் சென்று பார்த்து அதிசயிக்கின்றனர். இது 90 ஆண்டு 7மாதம் வெட்டத் தொடங்கப்பட்டது. அதை வெட்டியவர்களுள் நானும் ஒருவன் ஆவேன். இது ஏறத்தாழ 6அடி அகலமும் 8 அடி ஆழமும் இருக்கும். 100 மீட்டர் நீளத்தில் அளவுகொண்டது. ஒரு பக்க வாசல் கொண்டது. அரணத்திற்காக மேலே தண்டவாளம் வைத்து அதன் மேல் காங்கேசன் சீமெந்து தொழில்சாலையில் எடுக்கப்பட்ட சீமெந்தில் கொங்குறீட் போடப்பட்டது. அந்தக் கொங்குறீட் இடைக்கிடை போடப்பட்டிருக்கும். இதன் பக்கவாட்டிலிருந்து எறிகணை வீச்சில் அதிர்வால் கற்கள் கொட்டுப்படாமல் இருக்க அதன் மேல் கம்பிவலை அடிக்கப்பட்டது. உச்சியில…
-
- 0 replies
- 516 views
-
-
“தமிழீழம் கேட்கல்ல, தனி மனிதனுக்கு உள்ள உரிமையதான் கேட்கிறோம்” – முன்னாள் போராளி by Selvaraja Rajasegar - on June 9, 2015 படம் | AP Photo, ASIAN CORRESPONDENT தீபன், விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளியான இவருக்கு நான் வைத்த பெயர். புலிகளின் நிதிப்பிரிவில் உயர் பொறுப்பில் இருந்தவர். இதனால் 2 வருடங்கள் தடுத்துவைக்கப்பட்டு 7 தடுப்பு முகாம்களுக்கு மாற்றப்பட்டிருக்கிறார். தற்போது புனர்வாழ்வு பெற்று சமூகத்தில் வாழ்ந்துவருகிறார். இருந்தும், தடுப்பில் தான் இராணுவத்தால் கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாகத் தெரிவிக்கும் குமார், அதனால், முள்ளந்தண்டில் இரண்டு இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறார். அத்தோடு, சிறுநீரகத்திலும் கோளாறு உள்ளதாகவும் கூறுகிறார்.…
-
- 0 replies
- 516 views
-
-
இலங்கையின் சித்திரவதைகள், பாலியல் வன்முறைகளிலிருந்து உயிர் தப்பியவர்கள் 2009 – 2015 முழுமையான நூல் ஆங்கிலத்தில் உள்ளது: http://assets.gfbv.ch/downloads/stoptorture_report_sri_lanka.pdf “சித்திரவதைக்குள்ளாகி வலியின் அதிஉச்சியிலும் அதன் கொலைக் கரங்களின் பிடியிலும் இருந்து உயிருடன் தப்பிப்பிழைத்தவர்கள், தமக்கு ஏற்பட்ட இக்கதிபோல் இனியும் எவருக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற கரிசனையில் எங்கள் மீது தாராளமாக நம்பிக்கை வைத்துத் தமக்கு ஏற்பட்ட மிகக்கொடூரமான அனுபவங்களை எம்முடன் பகிந்து கொண்ட மனிதர்களுக்கு சமர்ப்பணம்” என்று மேலே சொல்லப்பட்ட இவ்வாய்வறிக்கை காணிக்கையாக்கப்படிருகின்றது. வெளிநாடுகளில் வாழும் முகமறியாத பலர் பாதிப்புக்களுக்கு உள்ளான இந்த மனிதர்களுக்குப் பல்வேறு…
-
- 1 reply
- 515 views
-
-
ஒரு சமூகம் செய்யவேண்டிய பணியைத் தனிமனிதராக முன்னெடுத்து எமது எழுத்துச் செல்வங்கள் பல அழிந்துவிடாமற் காப்பாற்றியவர் குரும்பசிட்டி இரா.கனகரத்தினம். ஆவணக் காப்பு என்ற சொல்லையே அவரிடம் இருந்துதான் அறிந்தேன். இன்று அவர் மீளாத்துயிலில் ஆழ்ந்தார். அவருக்கென் அஞ்சலி!! என இளவாலை விஜேந்திரன் தனது குறிப்பில் பதிவிட்டுள்ளார். 1990களில் கண்டி முல்கம்பலையில் சரிநிகர் பத்திரிகைக்காக இவரை முதலில் சந்தித்து இருக்கிறேன்... பின்னர் கொல்பிட்டியில் உள்ள அலோஅவனியூவில் இரண்டு தடவைகள் சந்தித்த ஞாபகம்... மிகப்பெரும் பணியை தனியொருவராக செய்த இரா கனகரட்ணம் அவர்களின் மறைவு, தமிழ் உலகிற்கு பேரிழப்பு என்றே சொல்ல வேண்டும்.. இரா கனகரட்ணம் அவர்கள் குறித்து பேராசிரியர் சந்திர சேகரன் அவர்கள் எழுதிய கு…
-
- 0 replies
- 515 views
-
-
செப்டம்பர் 13, கொழும்பு: குடியிருப்பு மற்றும் வணிக நோக்கங்களுக்காக அரசு நிலங்களை ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு சட்ட ஆவணங்களை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. உரிமையின் சட்ட ஆவணங்களுக்கு விண்ணப்பிக்க அரசு நிலங்களில் வசிப்பவர்களை அழைத்து தொடர்புடைய அசாதாரண அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது. முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கும், உள்ளூர் பால் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கும், உள்ளூர் உணவுப் பயிர்களை வளர்ப்பதற்கும் அரசு நிலங்களை அதன் உகந்த மட்டத்தில் நிர்வகிப்பதாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது "செழிப்பு மற்றும் சிறப்பின் தரிசனங்கள்" கொள்கை அறிக்கையின் அடிப்படையில் அரசாங்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும் . அதன்படி, அந்த இலக்கை அடைவதற்கான ஒரு முயற்சியாக, இலங்கை குடிமக…
-
- 0 replies
- 515 views
-
-
-
- 2 replies
- 515 views
-
-
யாழ்ப்பாண_நூலகத்தில் எரிந்தது என கூறப்படும் ஓலைச் சுவடிகளில் என்ன இருந்தது ? முன்னுரை : யாழ் பொது நூலகம் என்பது ஈழத் தமிழரின் பெரும் அறிவுப் பெட்டகமாகவே அக்காலத்தில் பார்க்கப்பட்டது.......எமதினத்தின் கல்வி வளர்ச்சியில் மிக முக்கிய இடம் வகித்ததாலோ என்னவோ தெரியவில்லை, சிங்கள காடையரின் தீயிற்கு இரையாகியது. 1981ஆம் ஆண்டு வைகாசி 31ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர் ஈழத் தமிழரின் இந்த அறிவுக்களஞ்சியம் சிங்களக் காடையர்களினால் நெருப்பிடப்பட்டு நீறாகிப் போய்விட்டது. அது மட்டுமல்ல, -) யாழ்ப்பாணம் காட்லிய் கல்லூரியின் நூலகம் , -) யாழிலே மிகப்பெரிய புத்தகசாலையான பூபாலசிங்கம் புத்தகசாலை ஆகியவையும் அன்று எரிக்கப்பட்டது, …
-
- 1 reply
- 514 views
-
-
வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் பருத்தித்துறை முனை பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் பருத்தித்துறை இன்பர்சிட்டி பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் தும்பளை பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் கோப்பாய் ஸ்ரீ சக்ர ஆழ்வார் ஆலயம் பற்றிய பதிவினைக் காணலாம்..!!
-
- 0 replies
- 514 views
-
-
அன்பான எம் இனிய கருணை உள்ளங்களே ! இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வருடத்தில் ஒரு நாள் உணவு வழங்க முன்வாருங்கள். ஒரு நாள் உணவு வழங்க ரூபா 20,000 தேவைப்படுகின்றது. 1.வருடம் ஒன்றில் ஒரு நாளைய உணவை உங்களின் குடும்பத்தின் பெயரால் இக் குழந்தைகளுக்கு வழங்க முடியுமா என்று எண்ணிப்பாருங்கள். 2.உங்களின் அல்லது உங்கள் பிள்ளைகளின் பிறந்த தினத்தின் போதும் கொண்டாட்டங்களின் போதும் இக் குழந்தைகளுக்கு ஒரு நாள் உணவு வழங்குங்கள். 3.காலம் சென்ற உங்கள் குடும்ப உறுப்பினரின் பெயரால் வருடாந்தம் இக் குழந்தைகளுக்கு ஒரு நாள் நாள் உணவு வழங்குங்கள். தர்மம் தலைக…
-
- 0 replies
- 514 views
-
-
1991 நவம்பர் 19 ஆம் திகதி தமிழீழ காவல் துறை ஆரம்பிக்கப்பட்டது. தமிழீழ காவல் துறை என்பது தமிழீழ விடுதலைப் புலிகளால் இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்களில் அவர்களது கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களில் செயற்படுத்தப்பட்ட தமிழ் மக்கள் வாழ்வை மேம்படுத்தி முன்னுதாரணமான தேசத்தை நிறுவி காட்டிய காவல்துறை ஆகும். இன்று மலிந்து கிடைக்கும், கொலை,கொள்ளை, பாலியல் துன்புறுத்தல்கள், காணாமல் போராளிகள், கஞ்சா, போதை, மது கலாச்சார சீரழிவு வாள்வெட்டு, என எம் மக்கள் எம் மண்ணில் படும் வலிகளின் கொடுமை தாளாமல் போராடி வருகிறார்கள். “இருப்பவர்கள் இருந்திருந்தால் இப்படி நிகழுமா?” என பதாகைகள் தூக்கி பொற்காலங்களை மீட்டு பார்க்கிறார்கள். 1991, நவம்பர் 19 இல் யாழ்ப்பாணத்தில் தமிழீழக் காவற்றுறையின் முதலாவத…
-
- 1 reply
- 513 views
-
-
பாலத்துறை அவலம்... நிர்க்கதியாக இரவை கழித்த மக்கள்! நேரடி ரிப்போர்ட் [ வியாழக்கிழமை, 18 பெப்ரவரி 2016, 12:48.50 PM GMT ] கொழும்பு - பாலத்துறை பகுதியில் நேற்று முன்தினம் முன்னறிவித்தல் எதுவுமின்றி வீடுகள் அகற்றப்பட்ட சம்பவத்தை அடுத்து, வீடுகளை இழந்த மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினை குறித்து லங்காசிறி நேற்றிரவு நேரில் சென்று ஆராய்ந்தது. வீடுகளை இழந்த மக்கள் தங்குவதற்கு இடமில்லாத நிலையில் தற்காலிக கூடாரங்களை அமைத்து தங்கிருந்த காட்சிகள் எமது கமெராவில் இவ்வாறு பதிவானது. அத்துடன், சிறுவர்கள், கர்ப்பிணி தாய்மார்கள், முதியவர்கள் என அனைவரும் நிர்க்கதி நிலைக்குள்ளாகியிருந்த காட்சிகளை எம்மால் காணக்கூடியதாக இருந்தது. பா…
-
- 0 replies
- 512 views
-
-
"சங்க காலத்துக் காதல் பிரச்சனை?" சங்ககாலம் எதிர்ப்பற்ற காதல் வாழ்வுக்கு மட்டும் உடனாகி இருந்துவிடவில்லை. பல பாடல்கள் காதல் வாழ்வைப் புகழ்ந்து பேசியிருக்கலாம். ஆனால் சங்க காலத்துக் காதலிலும் பிரச்சனைகள் இருந்தன. அவை ஊர்வம்பாய் பேசப்பட்டன. இதை "அம்பல்" என்றும் "அலர்" என்றும் சங்க கால மக்கள் வழங்கி வந்தனர். "அம்பல்" என்றால் தலைவனும் தலைவியும் கொண்ட களவுக் காதலை பலரும் அறிந்து, பழித்துக் கூறல் என்றும், அலர் என்பது சிலர் மட்டுமே அறிந்து புறங்கூறுதல் என்றும் கருத்து கொள்ளலாம். இது ஒரு வித கிசுகிசு என்று கூட சொல்லலாம். ஊர்வம்பு என்றாலே பொதுவாக பெண்களையே குறிக்கும். "தீ வாய் அலர் வினை மேவல் அம்பற் பெண்டிர்" என்று நற்றிணையில் கபிலர் கூறுகிற…
-
- 0 replies
- 511 views
-
-
ஒக்டோபர் 30; யாழ். முஸ்லிம்களின் நினைவலைகளும் மீள் குடியேற்றமும் படம் | SRILANKA BRIEF 1990 ஒக்டோபர் 30இன் விடியலை நாங்கள் சூரிய உதயமென்றுதான் நினைத்திருந்தோம். ஆனால், அச்சிவப்பின் பின்னணியில் எங்கள் வறுமை, எங்கள் விரக்தி, எங்கள் வாழ்வழிப்பு, எங்கள் வெளியேற்றம் போன்ற பல நிறமூட்டப்பட்டிருக்குமென்று நினைத்தும் பார்க்கவில்லை. ஒரு இனம் அல்லது சமயக் குழுவினை மற்றுமொரு ஒரு இனம் அல்லது சமயக் குழு திட்டமிட்டமுறையில் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பிலிருந்து வன்முறையால் அல்லது பயங்கரவாதத்தால் அழித்தொழித்தல் அல்லது வெளியேற்றுதல் ‘இனச்சுத்திகரிப்பு’ எனப் பொருள்பட்டால், 1990 ஒக்டோபர் 30இல் முஸ்லிம்கள் 2 மணித்தியாலயத்தில் தம் பிறப்பிட பூமியிலிருந்து விர…
-
- 5 replies
- 511 views
-
-
எழுத்தாளர்: தெரியவில்லை பாலன் சூசை அண்ணாவின் மெய்பாதுகாவலராக இருந்த நேரத்தில் தான் நானும் புதியவராக மெய்பாதுகாவலராக இணைந்தேன். அந்த நேரத்தில் சூசை அண்ணா தேவிபுரத்தில் முகாம் அமைத்து இருந்தார். கடற்புலிகளின் இரு முகாம்களை நாங்கள் எங்களுடைய தேவைக்காக பயன்படுத்தி வந்தோம். சூசை அண்ணாவுடன் செல்லும் இடம் எல்லாம் சூசை அண்ணாவின் மெய்பாதுகாவலராக பாலா அண்ணா செல்வார். ஓய்வு எடுக்க மாட்டார். மெய்பாதுகாவலராக இருக்கும் அனைவரும் கட்டாயம் மாறி தான் ஆக வேண்டும். ஆனால் பாலன் அண்ணா மாறமாட்டார். மாற்றி விட சொல்லியும் எமது பொறுப்பாளர் கருணா அண்ணா சொல்ல மாட்டார். பாலா அண்ணாவின் சிந்தனை, அர்ப்பணிப்புத் திறன், அவரின் செயல், வித்தியாசமான பேச்சுத் தமிழ், எந்த வே…
-
- 0 replies
- 511 views
-
-
-
- 1 reply
- 511 views
-
-
எமது தொல்லியல் மரபுரிமை அடையாளங்களை நாமும் பாதுகாக்கலாம் (நேர்காணல்)-பேராசிரியர் பரமு புஸ்பரத்தினம்
-
- 0 replies
- 510 views
-
-
ஆனந்த குமாரசாமி போர்த்துக்கீசியரின் வருகையால் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ மதப்பிரிவுகள் இலங்கையில் தலையெடுத்தது. அடுத்து அவர்களின் மொழியும் நேரிடையாகவும், மறைமுகமாகவும் திணிக்கப்பட்டன. இவர்களின் 150 ஆண்டு ஆட்சிக் காலத்தில்தான் நிலங்களைப் பதிவு செய்யும் முறை அமலாகிறது. ஒல்லாந்தர்கள் காலத்திலே இலங்கையில் வாழ்வோருக்கு முற்றிலும் புதியதானதொரு நீதித்துறை மாற்றங்கள் சட்டமாகின்றன. மதச் சிறுபான்மை இனமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டங்களும் ஏற்படுத்தப்படுகின்றன. இவர்கள் ஆட்சிக் காலத்தில்தான் முஸ்லிம்கள் குடியேற்றப்பட்டார்கள். ஒல்லாந்தர்கள் ஆட்சியைப் பிடிக்கும் முன்னர் வரை இந்து மதத்தவருக்கோ, முஸ்லிம் மதத்தினருக்கோ தனியாகச் சட்டங்கள் எதுவுமில்லை. ஒல்லாந்தர் காலத்தில்தான…
-
- 0 replies
- 510 views
-
-
புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் - பிரான்சின் நிதி உதவியுடன் நடாத்தப்படும் முன் பள்ளிகள் சிலவும் அதன் ஆசிரியர்களின் மாதாந்த ஒன்று கூடலும் பயிற்சிகளும் பரீட்சைகளும்.........
-
- 2 replies
- 509 views
-
-
நந்திக்கடல் தண்ணீரில் விளக்கெரியும் வற்றாப்பளை அம்மனுக்கு இன்று பொங்கல்! வரலாற்றுப் பிரசித்தி பெற்ற முல்லைத்தீவு வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசிப் பொங்கல் விழாவை முன்னிட்டு கடலில் தீர்த்தமெடுத்து அதில் ஒரு வாரம் விளக்கேற்றும் நிகழ்வு இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகின்றது. இந்த ஆலயத்தை அண்டிய பகுதிகளிலேயே முள்ளிவாய்க்கால் இறுதியுத்தம் நடந்தது. ஈழத் தமிழ்மக்களின் வரலாற்றுடன் பின்னிணிப் பிணைந்த இந்த ஆலயம் தமிழ்மக்கள் சந்தித்த முள்ளிவாய்க்கால் அவல வரலாற்றிலும் இரண்டக்கலந்துவிட்டது. 2009ஆம் ஆண்டு மே மாதத்தில் இறுதி யுத்தத்தின் தாக்குமிகு நிகழ்வுகள் இப் பகுதியில் நடைபெற்றுள்ளன. மதுரையிலிருந்து வற்றாப்பளை வந்த கண்ணகியின் சரித்திரம் …
-
- 0 replies
- 508 views
-
-
ரொம்பத்தூரம் - கே .எஸ் .தமிழ்க்கவி பெண்கள் அடிமைத்தளையிலிருந்து விடுபட்டு விட்டார்கள். அவர்களுக்கு கல்வி கற்கும் உரிமை உண்டு வேலைக்குப் போகும் உரிமை உண்டு.சில இடங்களில் உயர் பதவிகளிலும் பெண்கள் இருக்கிறார்கள். இன்னும் ஏன் பெண் விடுதலை பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம்இஅவர்களுக்கு என்னகுறை என்ற குரல் பரவலாக பேசப்படுகிறது. கையிலே விலங்கிட்டு, நான்கு சுவர்களுக்குள் அடைபட்டுக் கிடந்து தான் நினைத்ததைப் பேசவும் தனது கருத்தைச் சொல்லவும் பெண்களில் எத்தனைபேருக்கு சுதந்திரம் உள்ளது? அன்றாட வாழ்க்கையில் எல்லா பெண்களாலும் தாம் விரும்பிய வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடிகிறதா? வேலை செய்யும் இடங்களில், போக்குவரத்துக்களில், வீடுகளில் அவள் எதிர் நோக்கும் பிரச்சனைகளில் எத்தனை சதவீதம்…
-
- 0 replies
- 508 views
-