எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3794 topics in this forum
-
குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்.. வாழ்ந்த ஊரை இராணுவத்தினர் ஆக்கிரமித்த பின்னரும், வாழ்ந்த வீடுகளை இராணுவத்தினர் சூழ்ந்த பின்னரும், என்ன நடந்தாலும் பரவாயில்லை என்றும் எதுவும் நடக்காது என்ற நம்பிக்கையுடனுடன் ஊர் திரும்பும் மக்களின் உணர்வு எதன்பாற்பட்டது என்பதை விபரிக்கவே தேவையில்லை. ஒரே ஒரு தடவை என் வீட்டை பார்க்க வேண்டும், ஒரே ஒரு தடவை என் தெருவை பார்க்க வேண்டும் என்ற தவிப்புடன் இராணுவம் ஆக்கிரமித்த பகுதிகளுக்குச் சென்றவர்கள் பலர் திரும்பி வராத கதைகள் ஈழத்தில் நிறையே நடந்ததுண்டு. அது மாத்திரமல்ல, போர் ஓய்ந்திருந்த சமாதான காலமொன்றில்கூட இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்…
-
- 1 reply
- 1.8k views
-
-
இப்படித்தான் இருக்கிறது தொன்மைக் கிராமமான தென்னமரவடி Editorial / 2018 டிசெம்பர் 18 செவ்வாய்க்கிழமை, மு.ப. 03:15 - ஜெரா இலங்கையின் கடந்த நாள்கள், மிக பரபரப்பானவை. ஜனநாயகத்துக்கும் சர்வாதிகாரத்துக்கும் இடைப்பட்ட போட்டியில், நாட்டு மக்கள் சிக்கியிருந்தனர். அதேசமநேரத்தில், திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குள் இருக்கின்ற தென்னமரவடிக் கிராமம், அபாயமொன்றை எதிர்கொண்டிருந்தது. ஜனநாயத்தை மீட்பதற்காக, நாட்டின் பிற பாகங்களில் உள்ள மக்கள் பதைபதைத்துக் கொண்டிருந்ததைப்போல, தென்னமரவடிக் கிராம மக்கள், தங்கள் பூர்வீகக் கிராமத்தைக் காப்பதற்குப் பதறிக்கொண்டிருந்தனர். இன்று தென்னமரவடி என இக்கிராமம் அழைக்கப்பட்டாலும், “தென்னவன் மரபு அடி” …
-
- 1 reply
- 857 views
-
-
இந்தக் குழந்தைகள் என்ன செய்தனர்? Editorial / 2018 டிசெம்பர் 11 செவ்வாய்க்கிழமை, மு.ப. 02:31 Comments - 0 -ஜெரா போரின் வலியை, அது விட்டுச்சென்ற மானுடப் பேரவலத்தை, இனிவரும் காலம் முழுவதும் தமிழ்த் தலைமுறை சுமக்கப்போகிறது. போரின் உள வடுவும் உடலியல் தாக்கங்களும், இன்னமும் 80 ஆண்டுகளுக்கு நீடிக்குமன, சமூகவியல் ஆய்வாளர்கள் சிலர் தெரிவிக்கின்றனர். எனவே, இந்தத் தொடர்பு அறாத துயரம் பற்றிப் பதிவுசெய்வதும் அவசியமாகிறது. அதிலும், சர்வதேச மனித உரிமைகள் தினம் நேற்று (10) அனுஷ்டிக்கப்பட்ட பின்னணியில், இவர்களின் துயரங்களைப் பதிவுசெய்வது முக்கியமானது. சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம், ஐக்கிய நாடுகளால் அங்கிகரிக்கப்பட்டதை நினைவுகூரும் வகையில், இத்தினம் அனுஷ்டிக்…
-
- 0 replies
- 941 views
-
-
-
- 0 replies
- 550 views
-
-
இரணைமடு அதன் பயன்பாட்டு எல்லையை விஸ்தரிக்குமா? மு.தமிழ்செல்வன் December 2, 2018 இரண்டு வருடங்களின் பின் இரணைமடு முழுமையாக நிரம்பியிருக்கும் காட்சியினை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. என்றார் கிளிநொச்சியின் மூத்த விவசாயி ஒருவர் அவர் மட்டுமல்ல விவசாயத்துறைக்கு வெளியால் உள்ள பலரும் இரணைமடுவை பார்த்து பூரிப்படைகின்றனர். இரணைமடுவின் கீழ் நேரடியாக பயன்பெறுகின்றவர்கள் முதல் எந்தப் பயனையும் பெறாதவர்கள் என கிளிநொச்சியில் அனைவரும் இரணைமடுவை தங்களின் ஒரு பொக்கிசமாக நோக்குகின்றனர். முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் அமைந்துள்ள இரணைமடுகுளத்திற்கு வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களிலிருந்து பிரதானமாக கனகராயன் ஆற்றின் ஊடாக நீர் வருகிறது. ஆனால் இரணைமடுகுள…
-
- 0 replies
- 855 views
-
-
இந்த ரயர் கயிறைப் பற்றி தெரிந்திருக்க வேண்டுமென்றால் நீங்கள் நிச்சயம் ஊர்ப் பக்கம் போயிருக்க வேண்டும்.ஏனென்றால் நானும் ரயர் கயிறை முதன்முதல் பார்த்தது ஊரில் தான். ஊருக்கு போனபோது ஆடுமாடு கட்டும் கொட்டிலில் ரயர் கயிறு தொங்கிக் கொண்டிருந்தது.அப்போது அதைப் பார்த்தேனே தவிர என்ன ஏது என்று ஆராயவில்லை.பின்னர் வீட்டு வேலி அடைக்கும் போது தான் தேவையான சாமான்களில் ரயர் கயிறும் சொன்னார்கள்.அப்போது கூட ரயர் கயிறைப் பற்றி ஆராயும் எண்ணம் எழவில்லை.அவர்கள் சொன்ன சாமான் எல்லாம் வாங்கி வேலி அடைக்க ஆட்களும் வந்தார்கள். வந்தவர்களுடன் அறிமுகமாகி வேலை தொடங்கும் போது நானும் கூடவே நின்று வேலை செய்தேன்.அப்போது தான் ஒருவர் பெரிது பெரிதாக இருக்கும் ரயர் கயிறை தனித்தனி ஆக்குமாறு கூறினார்.எப…
-
- 21 replies
- 2.9k views
-
-
விடுதலைப்புலிகள் அமைப்பின் மாவீரர் தினம் அனுட்டிக்கப்படும் காலம் இது. ஆனால், அவர்களது மடிந்த போராளிகளின் குடும்பத்தினர், குறிப்பாக அவர்களது மனைவி மற்றும் தாய்மார் போர் முடிந்து இவ்வளவு வருடங்கள் கழிந்த பின்னரும் மிகவும் மோசமான நிலையிலேயே இருக்கிறார்கள். அவர்களின் நிலை, உணர்வுகள் குறித்து எமது சமூகத்தின் புரிதலும் கொஞ்சம் சங்கடமாகவே இருக்கின்றது. இவை குறித்து பேச இறந்துபோன இரு விடுதலைப்புலிகளின் குடும்பத்தினரை நாம் சந்தித்தோம். அதுபற்றிய அரங்கம் நிறுவனத்தின் காணொளி.
-
- 1 reply
- 465 views
-
-
தம்பி என்னை தெரியுதா?நான் : இல்லை அம்மாஜெமினியின் அம்மா, ஜெமினியை தெரியுமா?நான் : இல்லை அம்மா...முல்லைத்தீவு தளபதியாய் இருந்தவர். ஈழ வரலாற்றின் ஆணி வேர்களை தெரியாமல் தமிழர் உரிமை பேசுகின்றோமே என்று மனதை பாரமாக்கியது. இன்றைய தினம் கோப்பாய் மாவீரர் தின நினைவேந்தலுக்கு வந்திருந்த அந்த தாய் தனது மகனை ஈழ விடுதலைக்காக கொடுத்துவிட்டு இன்று சன்னதி ஆச்சிரமத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். இன்றைய சமுதாயமாகிய நாங்கள், உரிமை போராட்டத்தின் தியாகங்களை அறியாமலும் ஈழத்தாயினை அனாதையாக ஆச்சிரமத்திலும் இருத்திவிட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ... முகப்புத்தகத்தில் இருந்து ...
-
- 0 replies
- 459 views
-
-
-
என் நேசத்துக்குரிய கரிகாலனே... உன்னிடம் சொல்வதற்கு சில சேதிகள் உண்டு. உன் மீதான எங்களின் ப்ரியம் உனக்கே ஆச்சரியமாய் இருக்கலாம். தேசங்கள் கடந்தும் தமிழால் ஒன்றானஉறவுகளின் இதயங்களில் உனக்கிருக்கும் தனித்துவமான இடம் குறித்து நீ புருவங்களை உயர்த்தலாம். கேள்... இங்கே ஒரு இனக்குழுவினர் தமக்கென்று உண்டாக்கிய தலைவர் மூன்று நாட்களில் நான்கு கட்சி மாறுகிறார்... இன்னொரு இனக்குழுவினரின் தலைவர்கள் தெற்கும் , கிழக்கும் , வடக்கும் என்று அடிபடுகிறார்கள். இன்னொரு குழுவின் தலைவர்கள் அவர்கள் மக்களின் ஊதியத்தைப் எற்றுக்கொடுக்க கூட குரல் கொடுக்க பின்நிற்கிறார்கள். பெரும்பான்மை குழுவொன்று தமக்காய் உண்டாக்கிய தலைமைகள், இல்லாத பகடிகளும் சில்லறை வேலைகளையும்…
-
- 5 replies
- 1.2k views
-
-
மன்னார் நறுவிலிக்குளம் பொது விளையாட்டு மைதானத்தில் இன்று நான்காவது இடத்தில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அகழ்வுப் பணிகளில் இரண்டு அடி ஆழத்தின் கீழ் அதிகமாக பழங்காலத்து மட்பாண்டங்கள் கிடைப்பதோடு, சீன கண்ணாடி குவலை துண்டுகள் வளையல்கள் போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளன என்று அகழ்வுப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்தனர் மன்னார் மாவட்டத்திற்கான நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைப்பதற்காக நறுவிலிக்குளத்தில் ஒதுக்கப்பட்ட காணியில் கட்டுமானப்பணிகள் நடைபெற்றன. இதன் போது நிலத்தடியில் இருந்து அதிகமான மட்பாண்டங்கள் வெளி வந்தன. அதனையடும்மு தொல்பொருள் திணைக்களம் இவ்விடம் தொல்ப…
-
- 1 reply
- 631 views
-
-
மட்டக்களப்பு மக்களை பற்றி சிலர் மக்கள் சொல்வது 'மட்டக்களப்பார் பாயோடு ஒட்ட வைத்து விடுவார்கள்" என்பது. அதாவது மந்திரத்தால ஆட்களை வசியம் செய்து (முக்கியமாக ஆண்களை) விடுவார்கள் என்பது. உண்மையிலேயே அவர்கள் மந்திரத்தால் வசியம் செய்வார்களா என்பது பற்றிய ஒரு சுவாரசியமான பதிவு
-
- 6 replies
- 2.6k views
-
-
மருதோடை: எப்படியிருக்கிறது எல்லை? Editorial / 2018 நவம்பர் 20 செவ்வாய்க்கிழமை, மு.ப. 04:09 Comments - 0 - ஜெரா வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் எல்லையில் இருக்கிறது, மருதோடை - நாவலடி எனும் கிராமம். அதாவது, வடமாகாணத்தின் எல்லைக் கிராமம். அதன் மறுகரையில், அநுராதபுரம் ஆரம்பிக்கிறது. தமிழ், சிங்களம் என்ற இரு இனங்களையும் நிலவியல்பு அடிப்படையில் இயற்கையாகவே பிரித்து வைத்திருக்கும் இந்த எல்லைக்கோட்டை சிதைத்தமையால் உண்டானதே, 2009 வரைக்கும் நீடித்த இனப்போர். இப்போது போர் முடிந்து 10 ஆண்டுகளைத் தொட்டிருக்கிறது இலங்கை. இந்நிலையில், இனப்போருக்குத் தூபமிட்ட எல்லைக் கிராமங்களில் ஒன்றான மருதோடை எப்படியிருக்கிறது? யாரும் இலகுவில் சென்றடைந்துவிட முடியாதள…
-
- 0 replies
- 1k views
-
-
(ஜெரா) இலங்கையின் வடபாகத்தின் தனித்துவங்களுக்குள் முதன்மையானவை எவை எனக் கேட்டால், யாழ்ப்பாண நகரம், ஆரியகுளம் சந்தி, யாழ்ப்பாணக் கோட்டை, நல்லூர் கோவில், வல்லிபுரம், பருத்தித்துறை, மாதகல், கந்தரோடை எனப் பல இடங்களைக் குறிப்பிடலாம். ஆனால், எம்மில் எவருக்கும் இலகுவில் நினைவுக்கு வராத வட பாகத்தின் தனித்துவ அடையாளங்கள்தான், யாழ்ப்பாணத்தைச் சூழக் காணப்படும் தீவுக் கூட்டங்கள். மண்டைதீவு, புங்குடுதீவு, நயினாதீவு, நெடுந்தீவு, காரைநகர் என நீளும் தீவுக்கூட்டங்களுக்குள்தான், வட பாகத்தின் மனித நிலவுகைக்கான தொடக்கம் நிகழ்ந்ததென்பார், பேராசிரியர் பொ. ரகுபதி. அவரின் தொல்லியல் ஆய்வு நூலான “Early Settlement of Jaffna” (யாழ்ப்பாணத்தின் ஆரம்பகாலக் குடியேற்றம்) என்பதில், இந்த விடயம் ஆதாரபூ…
-
- 0 replies
- 535 views
-
-
யாழ்.வல்வையிலிருந்து வேப்ப மரத்தினாலான கப்பல் ஒன்று அமெரிக்காவுக்கு தமிழர்கள் சென்றார்கள், என்றால் நம்பமுடிகிறதா...? கோடிக்கணக்கில் உருவான டைடானிக்கே பாதித் தூரத்தில் மூழ்கிய போது.. ஈழத்தமிழன் உருவாக்கிய பாய் மரமான அன்னபூரணி கப்பல் புயலுக்கும், மழைக்கும் தப்பி ...அமெரிக்கா சென்றது தமிழனின் சாதனை எத்தகையது. அன்னபூரணி அம்மாளின் அமெரிக்கப்பயணம் - 1938 வல்வெட்டித்துறையில் உள்ள மேற்குத்தெரு வாடியில் வைத்து, 1930ஆம் ஆண்டில்> சுந்தரம் மேத்திரியாரினால் உள்ளுர் வேப்ப மரத்தில் தயாரிக்கப்பட்ட “அன்னபூரணி அம்மாள்” என்ற பெயரி லான இரட்டைப்பாய்மரக் கப்பல் 89 அடி நீளமும், 19 அடி அகலமும் கொண்ட ஒரு பாரிய கப்பலாக அந்த நாட்களில் விளங்கியது. அன்னபூரணி என்பது இமய…
-
- 8 replies
- 4.1k views
-
-
யாழ் இடப்பெயர்வு ஒக்ரோபர் 30 – 1995 – 23 வருடங்கள் October 30, 2018 (ஒக்டோபர் 30உடன் யாழ்ப்பாண இடப்பெயர்வு நடந்து 23 வருடங்கள் ஆகின்றன. ஈழத் தமிழர்களின் வாழ்வில் மறக்க முடியாத அந்த இடப்பெயர்வு அவலத்தை பற்றிய இந்தப் பதிவை குளோபல் தமிழ் செய்திகள் மீள் பிரசுரம் செய்யப்படுகிறது) அன்று கந்தசஷ்டி விரதத்தின் கடைசி நாள். விடிந்த போது சாதாரணமாத்தான் விடிந்தது. பலாலி இராணுவ முகாமிலிருந்து யாழ்ப்பாணத்தினை கைப்பற்ற இராணுவத்தினர் தாக்குதலை நடாத்தி வருவதும், அன்றைக்கு சில நாட்கள் முன்பாக அந்த நடவடிக்கையை முறியடிக்க புலிகள் மேற்கொண்ட நடவடிக்கை வெற்றியைத் தராமல் போனதும் அப்போதைய பரபரக்கும் செய்திகள். யுத்த முனையில் இராணுவத்தினரின் கைகள் ஓங்கியிருப்பது பலருக்…
-
- 0 replies
- 488 views
-
-
https://m.youtube.com/watch?v=YRSa2XOThTM இரணைமடு இலங்கைத்தீவில் 7வது பெரிய நீர்த்தேக்கமாக இரணைமடு உள்ளது. இரணைமடு என்ற பெயர் அது இயற்கையாக கனகராயன் ஆறு பண்டைக்காலத்தில் இரு குளங்களாக இருந்ததன் அடிப்படையில் வந்தது. மடு என்பது நீர்த்தேக்கம். சிறந்த ஒரு வண்டல் வெளியான இரணைமடு படுகை தொல்லியல் மையமாகவும் உள்ளது. 3000 ஆண்டுகள் தொன்மையான தொல்பொருட்களும் இரணைமடு படுகையில் உள்ளன. ஆங்கிலேயே ஆட்சிக்காலத்தில் இரணைமடு படுகையில் கனடா- பிரிட்டிஷ் அதிகாரியான சேர்ஹென்றிபாட் 1885ல் அப்போதைய பிரிட்டிஷ் அரச அதிபர் டேக்கிற்கு இரணைமடு நீர்த்தேக்கத்தை அமைக்கும் ஆலோசனையை முன் வைத்தார்.1866ல் பிரிட்டிஸ் நீர்ப்பாசன பொறியிலாளரும் தொல்பொருள் தேடலாளருமான ஹென்றி பாக்கர் இரணைமடு…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஞாபக நடை தந்த சில ஞாபகச் சிதறல்கள் – கணபதி சர்வானந்தா… October 26, 2018 யாழ். சர்வதேசத் திரைப்பட விழா தந்த வித்தியாசமானதொரு அனுபவம். சிறிய சிறிய விடயங்கள்தான் அவை. இருந்தும் வாழ்க்கையை அவை எப்படி அர்த்தப்படுத்துகின்றன. சதா அந்த இடத்தைக் கடந்து செல்லுகிறோம். இருந்தும் அவை பற்றி நாம் வலுவாகச் சிந்திப்பதில்லை. அவை எப்படி சமூகத்தோடு ஒன்றிப் போயிருந்தன என்பது போன்ற விடயங்களில் நாம் அக்கறை கொள்வதுவுமில்லை. ஆனால் அவை ஒரு கல்விசார் விடயமாக முன்னெடுக்கப்படும்போது அவற்றின் பெறுமதிகள் உயர்ந்து கொள்ளுகின்றன. அப்படி யாழ்.மண்ணில் நடைபெற்ற ஒரு நிகழ்வினைப் பற்றிய விபரங்களை இவ்வாரம் உங்களுக்காகத் தருகிறோம். கடந்த ஓக்டோபர் மாதம் யாழ். மண்ணில் முன்னெடுக்கப்பட்ட யா…
-
- 0 replies
- 548 views
-
-
மரணத்தின்போதும் எதிர்ப்பை வெளிப்படுத்திய பூரணலட்சுமி! 28வது ஆண்டு நினைவு "ரகு இல்லையெண்டதால வாறத நிப்பாட்டியிடாதீங்க: எங்கட வீட்டுக்குத்தான் முதல் முதல் வந்தனீங்கள். தொடர்ந்து வராமல் விட்டிடாதீங்க" - வீரச்சாவடைந்த ஒரு மாவீரரின் வீட்டுக்குப் போனபோது அவனது தாயார் பூரணலட்சுமி அழுகையினோ டே ஒரு போராளியிடம் விடுத்த வேண்டுகோள் இது. அந்தப் போராளியிடம் "இந்தாங்க இவன் ரகுவை இயக்கத்துக்கு கூட்டித்துப்போங்க" என்று மகனின் கையைப்பிடித்து ஒப்படைத்தவர் அவர்.குடும்பத்தின் ஒரேயொரு ஆண்மகன் ரகு. அவனுக்கு இரு அக்காமார் இருந்தனர்.இருவருக்கும் திருமணமாகவில்லை. எனினும் தன்மகனைக் குடும்பத்துக்காக உழைக்காமல் இனத்துக்காக அனுப்பி வைக்கிறாரே என்று அந்தப்போராளி வியந்தார். ஓரிரு நாட்களில் …
-
- 0 replies
- 779 views
-
-
ஒல்லாந்தர் காலத்து நாணயம் கண்டெடுப்பு. மூதூர் மத்திய கல்லூரியில், ஒல்லாந்தர் காலத்து VOC நாணயம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. பாடசாலை மாணவன் ஒருவன் பாடசாலை பிரதான வாயிலிற்கு அருகில் குறித்த நாணயத்தை கண்டெடுத்துள்ளான். திருகோணமலை, மூதூர் மத்திய கல்லூரி அமைந்துள்ள இடத்தில், இலங்கையில் ஒல்லாந்தர்களின் முதலாவது கோட்டை அமைக்கப்பட்டிருந்தது என்பதை, இந்நாணயக் கண்டுபிடிப்பும் ஊர்ஜிதப்படுத்துவதாக வரலாற்று ஆய்வாளரும், கல்லூரியின் பிரதி அதிபருமான ஜனாப்.எஸ்.எம்.பிஸ்ரி தெரிவித்துள்ளார். VOC என்பது ஒல்லாந்தர் கால “கிழக்கிந்திய கம்பனி” எனும் பெயரைக் குறிக்கும் சுருக்கக் குறியீடாகும். இந் நாணயம் 1750 ஆம் ஆண்டு பொறிக்கப்பட்டுள்ளது. மூதூர், மத்திய கல்லூரி தேசிய பாடச…
-
- 0 replies
- 715 views
-
-
"போதைப் பொருள் பாவனையை ஒழிப்போம்" சிறப்புரை, மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை - களுவாஞ்சிகுடி, பிரபாகரன் லிசாகரி
-
- 0 replies
- 387 views
-
-
1987 இந்தியப்படைகளின் பவான் இராணுவ நடவடிக்கையும் மறக்க முடியாத துயரங்களும் -: October 11, 2018 குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்… இலங்கை அரசின் இன ஒடுக்குமுறைக்கு எதிராக நடந்த ஈழத்து விடுதலைப் போராட்டத்திற்கான தீர்வு முயற்சிகளுக்கு உதவுகிறோம் என்று முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் இந்திய தன்னலமாக செயற்பட்டது என்பதற்கும் இனப்பிரச்சினைக்கு உகந்த முறையில் தீர்வு காணத் தவறியது என்பதற்கும் 1987இல் நடைபெற்ற பவான் இராணுவ நடவடிக்கை மிகச் சிறந்த உதாரணமாக நினைவுகூறத்தக்கது. இந்திய அரசு தன் நலன்களுக்கு ஏற்பவும் ஈழம் மற்றும் தமிழக மக்களின் நலன்களுக்கு மாறாகவும் இலங்கை அரசுக்கு சாதகமாகவும் காய்களை நகர்த்தி வருவதுடன் வடக்கில் ஆதிக்கம் கொள்வதை அன்…
-
- 0 replies
- 1.3k views
-
-
-
- 1 reply
- 797 views
-
-
இற்றைக்கு 33 வருடங்களுக்கு முன்பு 1985 இன் இறுதிக் காலாண்டில் ஒரு நாள், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துக்கு அண்மையாகப் பரமேஸ்வரா சந்தியில் அமைந்திருந்த முடி திருத்தும் கடையில் எனது தலை மயிரின் வழமையான வடிவத்தை மாற்றியமைக்கும் வேலை நடந்து கொண்டிருந்தது. நீண்ட தூரம் ஒரு முக்கிய வேலைக்காக பேரூந்தில் போகவேண்டி இயக்கத்தால் பணிக்கப்பட்டிருந்தேன். இக்காலத்தில் நான் ஹுசைன் என்ற பெயரில் ஒரு தேசிய அடையாள அட்டை வைத்திருந்தேன். பஷீர் என்ற பெயரில் உள்ள அடையாள அட்டை பாவிக்காமையால் கிடைக்கும் பாதுகாப்பு முக அடையாளயாத்தால் பறி போய்விடக் கூடாது என்ற அக்கறையில் எனது முடி திருத்த வேலை நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்பிரயாணத்தின் போது என்னை எவரும் அடையாளம் கண்டுகொள்ளாதிருக்கச் செய்யப்பட்…
-
- 0 replies
- 786 views
-
-
அப்பா இருக்கிறதாலதானே அம்மா இப்பவும் பொட்டு வைக்கிறார் அவர் வருவார்….. October 7, 2018 அம்மா இப்பவும் பொட்டு வைக்கிறதால அப்பா இருக்கிறார் காணாமல் ஆக்கப்பட்டவரின் மகள் கனியிசை– மு.தமிழ்ச்செல்வன் அப்பா எப்ப வருவார்?, அவர் வருவரா? ஏன் என்ர அப்பாவை இன்னும் விடவில்லை? அப்பா இருக்கிறார்தானே? அப்பா இருக்கிறதாலதானே அம்மா இப்பவும் பொட்டு வைக்கிறா? எனக் கேள்விகளை அடுக்கிக்கொண்டே சென்றால் கனியிசை. 2006 ஆம் ஆண்டு பிறந்த கனியிசை தற்போது ஏழாம் தரத்தில் கல்வி கற்கின்றாள். இவளது தந்தையும் காணாமல் ஆக்கப்பட்டோர்கள் பட்டியலில். 2009.05.16 அன்று உறவினர்களுடன் முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தின் ஊடாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இலட்சக்கணக்கான பொத…
-
- 0 replies
- 742 views
-