எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3784 topics in this forum
-
ஃபிரான்ஸில் இம்மாதம் முதலாம் திகதி கைது செய்யப்பட்ட தமிழீழத்தைச் சேர்ந்த மனித நேய பணியாளர்களை விடுதலை செய்யுமாறு கோரி, எதிர்வரும் 10ஆம் திகதி புதுச்சேரியில் ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெறவுள்ளது. நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற புதுச்சேரி அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீகாந்தா, சிவாஜிலிங்கம், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் அண்மையில் தமிழ்நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டிருந்தனர். இவர்களில் சிறீகாந்தா, சிவாஜிலிங்கம் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற புதுச்சேரி அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டு, தமிழீழ மக்களின் பிரச்சினையை விளக்கி உரையாற்றியிருந்தனர். இதனைத் தொ…
-
- 2 replies
- 1.1k views
-
-
யாழ்ப்பாணத்தில் அறுபது ஆண்டுகளாக பத்திரிகைத் துறையோடும் படப்பிடிப்பு (Photography) துறையோடும் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர் திரு. சங்கர கம்பர் கதிர்வேலு. எங்கே எந்த நிகழ்வு நடந்தாலும் அங்கே 'கமெரா'வோடு நிற்பார் கதிர்வேலு. இதனால், கதிர்வேலுவைத் தெரியாதவர்களும் இல்லை. கதிர்வேலுவுக்குத் தெரியாதவர்களும் யாழ்ப்பாணத்தில் இல்லை. அரசியல், இலக்கியம், கல்வி, சமூகம், நிர்வாகத்துறை என எல்லா இடங்களிலும் கதிர்வேலு செல்வாக்குமிக்க மனிதாராகியே விட்டார். இதற்குக் காரணம் தன்னிடம் இருந்த ஒரு கமெராவும் நேர்மையான தொழில் முறையும்தான் என்கிறார் கதிர்வேலு. இந்த அறுபது ஆண்டுகளில் பல தலைமுறைகள் மாறிவிட்டன. ஆட்களும் தலைவர்களும் நடைமுறைகளும் போக்குகளும் மாறிவிட்டன. ஆனால், கதிர்வேலு மாறவேய…
-
- 2 replies
- 1.1k views
-
-
செல்வச்சந்நிதியானே! எம்மைத்தான் சிங்களம் அழித்தொழுக்க உன்னால் தடுக்கக்கூட முடியவில்லை! உன் தேரையாவது, இனி சிங்கள மிருகங்களிடமிருந்து காப்பாற்றுவாயா? இல்லை உன்னையாவது காப்பாற்றிக் கொள்வாயா? ... மறந்திருப்பாயோ தெரியாது, அந்த கலையழகு மிக்க உன் தேரை சிங்களம் எண்பதுகளில் அழித்தொழித்ததை?
-
- 2 replies
- 1.1k views
-
-
அல்லைபிட்டியில் படுகொலை செய்யப்ப்பட்ட வணபிதா ஜிம் பிறவுண் அடிகளார் சார்ந்த உண்ண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட தமிழீழ திரைப்படம் http://www.tubetamil.com/view_video.php?vi...4ce39b1177295e0 இதனை பார்வையிட DIVX WEB PLAYER என்னும் மென்பொருள் தேவை அதன்னை இந்த இணையத்தில் பெற்றுகொள்லலாம் http://www.divx.com/divx/windows/webplayer/ இதனை இணையத்தில் பிரசுரித்தது சரியா என எனக்கு தெரியவில்லை அப்படி பிழையாயின் இந்த பதிவை நீக்கிவிடுமாறு நிர்வாகத்தினரிடம் வேண்டுகின்றேன்
-
- 0 replies
- 1.1k views
-
-
இன்று ஆடிப்பிறப்பு – ஈழ தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை.! கவிஞர் தீபச்செல்வன் ஆடிப்பிறப்பு என்ற பண்டிகை ஈழ தமிழ் சமூகத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த பண்டிகையாகும். குறிப்பாக ஈழத் தமிழர்கள் இந்தப் பண்டிகையை தமது கலாசார, பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாக கொண்டாடி வந்துள்ளார்கள். அன்றைய நாளில் ஆடிக்கூழும், கொழுக்கட்டையும்தான் சிறப்பு உணவுகள். இந்த உணவுகள்தான் ஆடிப்பிறப்பு பண்டிகை கொண்டாட்டத்தின் அடையாளங்கள். இந்த உணவுகள் ஈழத் தமிழ் மக்களின் பண்பாட்டு உணவுகள். இம்முறையும் ஆடிப்பிறப்பை ஒட்டி ஈழத்தில் பல வீடுகளில் கூழ்காய்ச்சி, கொழுக்கட்டை அவித்து கொண்டாடினாலும் இதையெல்லாம் கொண்டாட முடியாத நிலையிலும் பல வீடுகள்வெளித்துக் கிடக்கின்றன என்பதே சோகமானது. சூ…
-
- 3 replies
- 1.1k views
-
-
டென்மார்க் நாட்டில் முகமதுநபிகளின் கேலிச்சித்திரம் வரைந்து அந்த நாடு பட்ட அவஸ்தை போன்று எதுவும் இந்த காலில்விழுந்து நக்கும் தமிழனால் வராது என்று கனடாவுக்கு நன்கு தெரிந்துதான் துணிந்து இத்தடையை கொண்டுவந்துள்ளார்கள். உண்மையான எங்கள் சமூக கட்டமைப்பின் மேல் நம்பிக்கை இருந்திருந்தால்.எங்கள் சமூகத்தில் இருக்கின்ற,சேவை ஆற்றுகின்ற தமிழர் அமைப்புக்கள், தொடர்பு ஊடகங்கள், கல்விமான்கள்,சமூகப்பெரியோர்
-
- 0 replies
- 1.1k views
-
-
மாங்குளம் பகுதியில் இன்று இடம்பெற்ற மறைந்த ஈழத்து பாடகர் சாந்தன் அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வின்போது சாந்தனின் புகழ்பூத்த பாடல்களில் முதன்மையான பாடலான “இந்தமண் எங்களின் சொந்த மண்“ என்ற பாடல் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் வேண்டுகோளிற்கமைய அவரது அஞ்சலி நிகழ்வில் ஒலிபரப்பப்பட்டது. பாடல் ஒலிபரப்பபட்டதும் கூடியிருந்த மக்கள் அனைவரிலும் ஓர் ஆர்ப்பரிப்பையும் ஆழ்ந்த துயரத்தையும் காணக்கூடியதாக இருந்ததாக அங்கிருந்த தமிழ்கிங்டொத்தின் செய்தியாளர் தெரிவிக்கின்றார். http://www.tamilkingdom.com/2017/02/453_28.html
-
- 1 reply
- 1.1k views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
கடந்தகால யுத்தத்தால் வடமாகாணத்தில் இன்னமும் நூற்றுக்கும் மேற்பட்ட பாடசாலைகள் இயங்காதுள்ள நிலையில் வடமாகாண ஆளுனரின் உத்தரவின்பேரில் 400 மில்லியன் ரூபாய் வன்னி மாவட்டத்தில் வலிந்து குடியேற்றப்பட்டுள்ள சிங்களப் பகுதி உள்ளிட்ட சிங்களப் பாடசாலைகளுக்கும் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளின் நிர்மாண மற்றும் புனரமைப்பிற்கும் வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்தறை அமைச்சினூடாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். இதற்கான விலைக்கேள்விக்கான கோருதல் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரால் பத்திரைகைகளில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார். யுத்தத்தால் அழிவுக்குள்ளான…
-
- 2 replies
- 1.1k views
-
-
கற்றுக்கொள்ளுதல். ஒருவரிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறைய விஷயம் இருக்கு ,அதிலும் நமக்கு மிக மிக பிடித்த அல்லது நாம் மேலாக நேசிக்கும் ஒருவரிடம் இருந்து கற்றுக்கொள்ளுதல் என்பது மிக அலாதியானதும் பிரியத்துடன் கூடியதும் அல்லவா ... அவ்வாறு தலைவர் பிரபாகரன் என்னும் மனிதனிடம் இருந்து கற்றுக்கொள்ள அவ்வாறே நிறைய விஷயம் இருக்கிறது குழந்தைகளுடன் இறங்கி தானும் குழந்தையாகும் குணம், எதிரியை மதிக்கும் விதம் , மிக நீண்ட கால செயற்பாட்டுக்கான தயார் படுத்தல், நாளை என்ன வேணும் எமக்கு என்பதற்கான சரியான திட்டமிடல், ஒவ்வெரு நிர்வாகத்தையும் திறமையின் அடிப்படையிலும் கெட்டித்தனதுடன் கூடிய செயற்பாடு கொண்டு இயங்கும் ஒருவரை இனம்கண்டு கொடுப்பது பொறுப்பை, காயம் அடைத…
-
- 10 replies
- 1.1k views
-
-
துடிதுடித்து சாவைத் தழுவிய 147 பேர் – நவாலிப் படுகொலை – 23 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று!! இலங்கை வான்படையின் வானூர்தித் தாக்குதலில் ஒரே தடவையில் 147 பேரைக் காவு கொண்ட நவாலிப் படுகொலையின் 23ஆவது நினைவு நாள் இன்றாகும். 1995ஆம் ஆண்டு இதே நாளில், ‘லீப்டோர் வேர்ட்’ என்ற முன்னோக்கிப் பாய்தல் இராணுவ நடவடிக்கையினால், நவாலியில் மக்கள் ஏதிலிகளாக தஞ்சமடைந்திருந்தனர். இலங்கை வான்படையின் வானூர்தி 13 குண்டுகளைத் தொடர்ச் சியாக அந்த மக்கள் மீதும், அவர்கள் தஞ்சமடைந்திருந்த ஆலயங்கள் மீ…
-
- 4 replies
- 1.1k views
-
-
-
பல்லடம் நாம் தமிழர் பொதுக்கூட்டத்தில் பால் நியுமன் ஆற்றிய உரை l
-
- 0 replies
- 1.1k views
-
-
‘கிழக்கிலங்கை முஸ்லிம் ஆளுமைக்கு வித்திட்ட சுவாமி விபுலானந்த அடிகளார்’. சாதி மத பேத மற்ற மகானாக வாழ்ந்த ஒரு அற்புத ஞானி- விபுலானந்தர் பற்றிய ஆவணப் படம் சொல்லும் பல அரிய உண்மைகள் March 29, 2021 — இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் — ‘அரங்கம்’ அமைப்பு சார்பில் எடுக்கப் பட்டிருக்கும் ’முத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகள்’ என்ற ஆவணப் படத்தை இன்றைய இளைய தலைமுறை கட்டாயம் பார்ப்பதற்குப் பல உதாரணங்களை இங்கு முன்வைக்கலாம். இந்தச் சிறு கட்டுரையில், சாதி மத பேதமின்றி, யாவருக்கும் கல்வியறிவைக் கொடுக்கவேண்டுமென்ற அவரது கனவால் இன்ற கிழக்கிலங்கை மட்டுமல்ல இலங்கை பூராவும் முஸ்லிம் மக்கள் கல்வியில் முன்னேறியிருப்பதற்கு அவர் செய்த கைங்கரியம் பற்றி ஒரு முஸ்லிம் எழுத்தாளர்…
-
- 0 replies
- 1.1k views
-
-
மின்னல் வேகத் தாக்குதல் -புரட்சி- இரண்டாம் உலகப் போரின் போது ஜேர்மனியர்களினால் பயன்படுத்தப்பட்ட பிலிட்ஸ்ரீக் (Blitzkrieg) என்ற மின்னல் வேகத் தாக்குதல் நடவடிக்கையானது சூழ்ச்சிகர நகர்வுத் தந்திரோபாயத்தின் உச்சக்கட்ட வளர்ச்சியாகவும் பயன்பாடாகவும் கருதப்படுகின்றது. இது தொடர்பாக படைத்துறை மூலோபாய வல்லுநரும் வரலாற்றாசிரியருமான லிட்டெல் ஹாட் கூறுவதாவது; மின்னல் வேக நடவடிக்கையின் தந்திரோபாயமானது நீரால் நிரம்பிய பாரிய குளத்தின் அணைக்கட்டை நீரானது தள்ளுவது அல்லது அமுக்குவது போன்றது. அதாவது நீரானது குளத்தினது அணைக்கட்டின் எல்லா பகுதிகளுக்கும் அமுக்கத்தை பிரயோகிக்கும். எங்கு சிறிய இடைவெளி அல்லது பலவீனம் இருக்கின்றதோ அங்கு நீரானது வெளியேறத் தொடங்கும். முதல…
-
- 0 replies
- 1.1k views
-
-
உலகத் தமிழர்களுக்கும் சுவிஸ் தமிழ் வர்த்தகர்களுக்கும் ஸ்ரீலங்கா பொருட்களை புறக்கணிப்போம் புலம்பெயர் வர்த்தகர்களே வாடிக்கையாளர்களே நீங்க ரெடியா? தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு எமது இலங்கை தமிழ் மக்கள் பிரச்சனையில் இருக்கும் அக்கறை ரொம்பவுமே வரவேற்கத்தக்கது. வெளிநாடுகளில் வாழும் எமது ஈழத்து தமிழ் உறவுகள் (கிட்டத்தட்ட 500,000 தமிழர்கள் அமெரிக்கா, கனடா வில் உள்ளார்கள். 500,000 தமிழர்கள் ஐரோப்பிய நாடுகளில் வசிக்கிறார்கள்) மொத்தமாக 1,000,000 அதிகமான மக்கள் வசிக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் இலங்கை உற்பத்தி பொருட்களாகிய *குளிர்பானங்கள் *பலதரப்பட்ட பிஸ்கட்ஸ் *பலதரப்பட்ட ஜாம் *பால்மாக்கள் *டின் மீன்கள், நூடில்ஸ் உள்ளிட்ட வேறுபல பொருட்களும் இவ் 1,000,000 மக்களில், …
-
- 3 replies
- 1.1k views
-
-
சிறிலங்காவின் வடக்கில் உள்ள கிளிநொச்சிக்கு மேற்குப் புறமாக அமைந்துள்ள உருத்திரபுரம் என்கின்ற கிராமத்தில் அரைவாசி கட்டப்பட்ட மூன்று அறைகளைக் கொண்ட ஒரு வீட்டில் வசிக்கும் 29 வயதான விஜிதரன் மரியதேவதாஸ் இந்த நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் தொடர்பாக விளக்கினார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நுண்கலைப் பட்டதாரியான இவர் சிறிலங்கா இராணுவத்தின் யுத்த நடவடிக்கையின் போது முல்லைத்தீவில் தஞ்சம் கோரியிருந்த பல ஆயிரக்கணக்கான மக்களில் ஒருவராவார். உள்நாட்டு யுத்தம் தீவிரம் பெற்றிருந்த போது, பல ஆயிரக்கணக்கான பொதுமக்களின் உயிர்கள் காவுகொள்ளப்பட்ட போது இதனை விஜிதரன் மரியதேவதாஸ் தனது கண்ணெதிரேலே பார்த்திருந்தார். இவர் தான் கண்ட யுத்தத்தின் கொடிய வலிகளை தனது ஓவியங்கள், சிலைகள், பொருட…
-
- 0 replies
- 1k views
-
-
சிறிலங்காவுக்கான அபிருத்தி உதவிகளை நெதர்லாந்து இடைநிறுத்தியுள்ளதாக அந்நாடு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கின்றது. சிறிலங்கா உட்பட பொஸ்னியா, எரித்திரியா, அல்பானியா, ஆர்மேனியா, மசடோனியா, கம்போடியா ஆகிய நாடுகளின் அபிவிருத்திக்கு வழங்கப்படும் உதவிகளையே நெதர்லாந்து தற்காலிகமாக இடைநிறுத்தியிருக்கின்றது. குழப்பமான அரசியல் நிலை, பாதுகாப்பில்லாத நிலை, பிற நிறுவனங்களிடம் இருந்து அதிகமான உதவிகளைப் பெறுகின்றமையை காரணம் காட்டி மேற்படி நாடுகளுக்கான உதவிகளை இடைநிறுத்துவதாக நெதர்லாந்து அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. அபிவிருத்தி உதவிக்கான இடைநிறுத்தம் தொடர்பாக அந்நாட்டின் அமைச்சர் கூன்டோஸ் அறிவித்திருப்பதுடன் வெளிவிவகார அமைச்சின் இணையத்தளத்திலும் வெளியிடப்பட்டிருக்கின்றது. …
-
- 1 reply
- 1k views
-
-
தமிழர்களின் விடுதலைப் போராட்டம் மாபெரும் வெற்றிகளால் கட்டமைக்கப்பட்டது. இதற்கான முழு உரித்தும் தாயகக் கனவோடு தமது இன்னுயிர்களைக் களமுனைகளில் தியாகம் செய்த வீரர்களுக்கேயுரியது. ""ஒரு போரின் முடிவென்பது ஒரு போராட்டத்தின் முடிவல்ல'' என்பது சேகுவாராவின் வார்த்தை. ஒரு வீரன் சாவடைந்தாலோ அல்லது வீரர்கள் சாவடைந்தாலோ அந்தப் போராட்டமே முற்றுப் பெற்று விட்டதாக அர்த்தமில்லை. அந்தக் கனவைச் சுமந்து இன்னொரு போராளி பயணிக்க தயாராக இருக்கும் வரை அந்த இனம் தோற்றுப் போன இனமாக அடையாளப்படுத்த முடியாது . தமிழர்களின் விடுதலைப் போராட்டமும் அத்தகைய வெற்றி இதோல்விகளாலேயே கட்டமைக்கப்பட்டிருக்கின்றது.பேரினத்துக்கு எதிரான போரில் தமிழர்களுக்கு கிடைத்த மாபெரும்…
-
- 1 reply
- 1k views
-
-
Glasgow வில் நடைபெற இருக்கும் ஆர்ப்பாட்டத்தை பற்றிய தமிழ் இளையோர் அமைப்பின் கருத்துக்களும் கலந்துரையாடலும். அன்று தொடக்கம் இன்று வரை இலங்கையை ஆண்டு வந்த ஜனாதிபதிகள் தமிழ் மக்களினை இனப்படுகொலை செய்வதையே முழுவேலையாக கொண்டுள்ளார்கள். மகிந்த ராஜபக்சே அதற்கு சற்றும் குறைவல்ல அதியுச்ச இனப்படுகொலைகளை அரங்கேற்றியதற்கு இவருக்கு முதலிடம். மூன்று லட்சம் தமிழ் மக்கள் வாழும் பிரித்தானியாவிற்கு எத்தனையோ முறை மஹிந்த வந்து புண்பட்டு திரும்பி சென்ற வரலாறுகள் ஏராளம். மீண்டும் ஒருமுறை ஸ்காட்லான் பகுதியில் இடம்பெற இருக்கும் விளையாட்டு போட்டியில் பங்குபெறவும் அதனை தொடக்கி வைக்கவும் இங்கு வரும் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க அணைத்து தமிழ் மக்களையும் அணிதிரண்டு வருமாறு தமிழ் இளையோர் …
-
- 0 replies
- 1k views
-
-
தமிழீழத்தில் உள்ள ஒவ்வொரு கிராம மக்களுக்கும் போர்க்காலத்திற்குரிய தற்பாதுகாப்பு பயிற்சிகள் இப்போது வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆண்களும் பெண்களும் கணிசமான அளவில் இதில் பங்கேற்றுக் கொண்டிருக்கிறார்கள். நிராயுத பாணிகளாகஇ வெறும் அடையாள அட்டைகளுடன் நிற்கும் அப்பாவி மக்களை சுட்டும்இ வெட்டியும்இ குண்டு வீசியும் கொன்றொழிக்கும் கொடிய கலாச்சாரத்திற்கு மாற்று மருந்து கொடுக்க இந்தப் பயி;ற்சிகள் நடைபெறுகின்றன. இலங்கையில் நடைபெற்ற இனப்போர் காரணமாக இதுவரை ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட நிராயுதபாணிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். பாலியல் பலாத்காரம் உட்பட வர்ணிக்க முடியாத கொடுமைகள் எல்லாம் அங்கு நடந்தேறிவிட்டன. உலக சமுதாயமும்இ ஊடகங்களும் ஐ.நா மன்று…
-
- 0 replies
- 1k views
-
-
குருவிக்காடு யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் உள்ள சரசாலை கிராமத்தில் இருக்கும் சிறிய கண்;டல் காடே குருவிக்காடாகும்.யாழ்ப்பாணத்தின் இயற்கை மரபுரிமை சார்ந்த பறவைகள் சரணாலயமாக காணப்படுகின்றது. மக்களால் அறியப்பட்டிராத இவ் இயற்கை கண்டல் நிலக்காடு ஏராளமான உள்நாட்டு வெளிநாட்டு பறவைகளுக்கும் , நீர் நில உயிரிகளுக்கும் தஞ்சமளிக்கின்றது விதை ,அக்கினிச்சிறகுகள் மற்றும் சகோதர அமைப்புக்களின் ஏற்பாட்டில் , மாதந்தோறும் நடக்கவும் , அறியவும் கொண்டாடவும் தெரிவு செய்யப்படும் மரபுரிமைசார் இருப்புக்களில் மே மாதத்திற்குரிய இயற்கை மரபுரிமைச்சொத்தான குருவிக்காடு நோக்கிய யாத்திரையில் யாத்திரையின் இடம் ,அமைப்பு , ஆவணமாக்கல் என்பவற்றை ஆய்வு செய்யும் ”முன்கள ஆய்வுக்கு ” தயாராவோம். எ…
-
- 3 replies
- 1k views
-
-
ஊடகத்துறையையும் நிர்மூலமாக்கும் அரச பயங்கரவாதம்: ஊடக அமையம் அச்சம் பகவன் Thursday, 04 May 2006 நன்கு திட்டமிட்டதும், காட்டுமிராண்டித் தனமானதும் ஐனநாயக விரோதத் தன்மை கொண்டதுமான கொலைகள் தமிழ் ஊடகவியலாளர்களையும் தமிழ் ஊடகத்துறையையும் நிர்மூலமாக்கும் உள்நோக்குடன் கூடிய அரச பயங்கரவாதத்தின் ஒரு அம்சமாகவே நாம் கருதுகிறோம். இவ்வாறு தமிழ் ஊடகவியளாளர் அமையத்தினால் நடாத்தப்பட்ட கண்டனப் பேரணியின் பின்னர் ஐ.நா. செயலாளர் நாயகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழுவடிவம் வருமாறு:- செயலாளர் நாயகம், ஜக்கியநாடுகள் சபை ஊடாக பொறுப்பதிகாரி, யுனிசெவ் கிளிநொச்சி மதிப்புக்குரிய ஐயா, வணக்கம். தமிழ் ஊடகத்துறை…
-
- 0 replies
- 1k views
-
-
அன்பழகன்: ஜன்னல்களிற்கு வெளியிலிருக்கும் தெருக்களில் நடமாடுபவன்-யோ.கர்ணன் கடந்த சில நாட்களின் முன் அன்பழகனது நினைவுநாள் கடந்து சென்றது. ஓரளவு இணைய பரிச்சயமும், ஈழப்பரிச்சயமும் உள்ளவர்களிற்கு அன்பழகன் யார் என்பது தெரிந்திருக்கும். எல்லோருக்கும் தெரிந்துவிடுமளவிற்கு பிரபலமானவனாக அவன் வாழ்ந்திருக்கவில்லை. யுத்தத்திற்கும் கனவுகளிற்குமிடையில் ஊசலாடியபடி பல்லாயிரம் இளையவர்களில் ஒருவனாக வாழ்ந்தான். அவ்வளவுதான். மரணத்தின் பின்னால்தான் அவன் பெயர் பரவலானது. துயர்மிகு காலமொன்றின் குறியீடாகவே அந்த பெயர் பரவலடைந்திருந்தது. படைப்பாளியாகவும், இணைய பரிச்சயமிக்கவராகவும் அவனது சகோதரன் த.அகிலன் இருந்ததினால் அன்பழகனின் கதை உலகத்திற்கு தெரியவந்தது. கொல்லப்பட்ட தனது சகோதரனது க…
-
- 7 replies
- 1k views
-
-
இங்கை கிலிக் பன்னவும் > Part One http://www.eelaman.net/index.php?option=co...31&Itemid=1 Part 2 http://www.eelaman.net/index.php?option=co...54&Itemid=1
-
- 0 replies
- 1k views
-