அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
நான் தேசபக்தனா என்கிற கேள்வியை அடிக்கடி கேட்க முடிகிறது.. அவர்களுக்கான எனது சிறுபதிலை பதிவு செய்துகொள்ள விரும்புகிறோம்..... இந்திய தேசத்தின் மீதான பக்தி என்பது மக்கள் மீதானதா அல்லது அரசு இயந்திரத்தின் மீதா என்பதான கேள்வி எழுந்த சமயத்தில் தான் இந்தியா என்பது அதன் அதிகார வர்க்கமும், ஆளும் கட்சிகளும், தனிப் பெரும் நிறுவனங்களும் என்று புரிந்தது.. இந்தியா என்கிற கருத்தியலில் நம்மைப் போன்ற சராசரி மக்களுக்கு இடமில்லை.. நம் கருத்துக்களுக்கோ, நேர்மைக்கோ இடமில்லை.. காந்தியோ, அம்பேத்காரோ, பகத்சிங்கோ இன்னபிற தலைவர்களோ கொடுத்துச் சென்ற அறம், மானுடத்தன்மை போன்றவைகளை கட்டிக்காக்கும் தேசமோ இல்லை இது.. இந்த தேசியம் நமக்காக இல்லை... இந்த ஒட்டுமொத்த கும்பலும் தனது சுயநலத்திற்காக கொள்ளையடி…
-
- 0 replies
- 708 views
-
-
[size=5]சொல்புத்திக்காரரா கூட்டமைப்பினர்? - மட்டு நேசன்[/size] 'இம்சை அரசன் 23ம் புலிகேசி' திரைப்படத்தில் அரசி மனோரமாவுக்கு 'இரட்டைக் குழந்தைகள் பிறக்கும்' எனவும் 'மூத்த பிள்ளை சொல்புத்தி - இரண்டாவது பிள்ளை சுயபுத்தி' என ஜாதகத்தைக் கணிக்கும் ஜோதிடர் குறிப்பிடுவார். இதனைக் கேட்கும் மனோரமாவின் சகோதரர் நாசர், சுயபுத்தி உள்ள பிள்ளை இருந்தால் தனது திட்டங்கள் நிறைவேறாது எனக் கருதி அதனைக் கொல்ல ஏற்பாடு செய்வார். சொல்புத்தி உள்ள பிள்ளையை தான் சொல்வதை எல்லாம் கேட்கும் 'மக்கு' இளவரசனாகவே வளர்ப்பார். *** சிங்கள மக்கள் குறிப்பாக பௌத்த சிங்களவர்கள் ரணிலை ஆற்றலுள்ள ஒரு தலைவராகக் கருதவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியினரோ அவரை வெற்றியைப் பெற்றுத் தரும் ஒரு வழிகாட்டியாக எண்ணவில…
-
- 1 reply
- 708 views
-
-
வடக்கு கிழக்கு விவகாரத்தை உலக நீதி மன்றத்திற்கு கொண்டு செல்லலாம் - ச. வி. கிருபாகரன் Posted by: on Aug 20, 2011 இலங்கை தீவின் சுதந்திரத்தை அடுத்து ஆட்சிக்கு வந்த சிறிலங்கா அரசுகள், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை ஏற்க தவறிய காரணத்தினால், தமிழ் மக்கள் 35 வருடகாலமாக ஓர் அகிம்சை போராட்டத்தை நாடத்த வேண்டி ஏற்பட்டது. இப் போராட்டத்தை சிறிலங்காவின் பாதுகாப்பு படைகள் தொடர்ச்சியாக வன்முறை மூலமாக நசுக்கிய காரணத்தினால் அது ஓர் ஆயுதப் போராட்டமாக வெடித்து, தற்பொழுது தமிழிழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரச படைகளுக்கும் இடையில் ஓர் மரபு முறை யுத்தமாக மாறியுள்ளது. இலங்கை தீவின் அரசியல் யாதார்த்த நிலைகளை ஓருவர் எந்தவித பாரபட்சம் அற்ற நிலையில் ஆராய்வாரேயானால்,…
-
- 0 replies
- 708 views
-
-
இது எச்சரிப்பவர் காலம் எங்களதே எதிர்காலம். - வ.ஐ.ச.ஜெயபாலன் . வடக்கு தமிழ் மக்களுக்கு, மல்வத்து பீடாதிபதி கடும் எச்சரிக்கை என்கிற தலைப்பு செய்திகளை வாசிக்கிறபோது நினைவு 1987 அக்டோபர் மாததுக்கு திரும்பிச் செல்கிறது. 1987ல் பாலகுமாருடன் சேர்ந்து சமாதான திட்டம் ஒன்றை வடிமைத்த காலம் நினைவுக்கு வருகிறது. பிரேமதாச பெரும்போரை தூண்டிவிடுகிற எதிர் ராஜதந்திர நடவடிக்கைகளில் ஈடுபட்டார். அன்று பாலகுமார் ஊடாக வலியுறுத்தப் பட்ட திட்டத்தை தோற்கடிப்பதில் இரண்டாம் நிலை தலைவர்கள் சிலர் கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்தனர். யோ போன்றவர்கள் பலகுமாரனையே மேலிடத்தை அடைய விடாமல் தடை போட்டனர். ராஜ தந்திரத்தின் அரிச்சுவடி முதல் எதிரி வலுவானவனாக இருப்பின் எல்லா நிலைகளிலும் முதல் எதிரியை…
-
- 1 reply
- 708 views
-
-
புதிய ஆண்டைத் திட்டமிடுவது – நிலாந்தன். January 2, 2022 ஒரு புதிய அரசியல் ஆண்டில் என்ன காத்திருக்கிறது? அல்லது என்ன செய்ய வேண்டும்? என்று முடிவெடுப்பதெல்லாம் கடந்த ஆண்டின் தொடர்ச்சியாகத்தான் அமைய முடியும். எனவே கடந்த ஆண்டைப்பற்றிய தொகுக்கப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையில்தான் புதிய ஆண்டைத் திட்டமிடலாம். கடந்த ஆண்டில் தமிழ் அரசியலில் ஒப்பீட்டளவில் மூன்று முக்கிய நகர்வுகள் இடம்பெற்றன. முதலாவது- கடந்த மார்ச்மாத ஜெனிவா கூட்டத்தொடரை முன்னிட்டு மூன்று கட்சிகள் ஒருங்கிணைந்து ஒரு கூட்டுக் கோரிக்கையை முன்வைத்தன. இரண்டாவது-கடந்த செப்டம்பர்மாத ஜெனிவா கூட்டத்தொடரை முன்னிட்டு ஐந்து கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு கூட்டு கோரிக்கையை மு…
-
- 2 replies
- 707 views
-
-
இரணைமடு நீர்: யாருக்கு யாரால் யாருக்காக? நிலாந்தன்:- 29 டிசம்பர் 2013 கிட்டத்தட்ட இரண்டு மாதங்களிற்கு முன்பு யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் சில இளைஞர்கள் வீடு வீடாகச் சென்று ஒரு கணக்கெடுப்பு நடத்தினார்கள். அதில் இரணைமடுத் தண்ணீர் உங்களுக்கு வேண்டுமா? இல்லையா? என்று கேட்கப்பட்டது. இது நடந்து சில நாட்களுக்குப் பின் ஒரு மூத்த பிரஜை என்னிடம் கேட்டார், ''யாழ்ப்பாணத்தில் யார் இரணைமடு நீரைக் கேட்டது' எங்களைக் கேட்காமலே முடிவுகளை எடுத்துவிட்டு இப்பொழுது ஏன் கணக்கெடுப்பு நடாத்தப்படுகின்றது? யாழ்ப்பாணத்திற்கு நீர் தேவைதான். ஆனால், அது இரணைமடு நீராகத்தான் இருக்கவேண்டும் என்று யார் கேட்டது? என்று... இதையே தான் மறுவளமாக கிளிநொச்சி விவசாயிகளும் கேட்கிறார்கள். ''எங்களைக…
-
- 0 replies
- 707 views
-
-
ட்ரம்பின் ஐ.நா உரை: பழைய பொய்களும் புதிய கதைகளும் கோவில் திருவிழாக்கள் ஆண்டு தோறும் நடப்பதுபோல, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் வருடாந்தக் கூட்டங்களும் மாறிவிட்டன. வெறுமனே ஒரு சடங்காக, உலகத் தலைவர்கள் உரையாற்றும் இடமாக, பொதுச்சபைக் கூட்டம் நடந்தேறுகின்றது. இன்று, எதையும் பயனுள்ள வகையில் செய்ய இயலாதுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் கையறுநிலை, இதற்கான பிரதான காரணமாகும். ஐ.நா வலுவாகவும் உலக அலுவல்களில் முக்கிய சக்தியாகவும் திகழ்ந்தவொரு காலத்தில், பல வரலாற்றுச் சிறப்பு மிக்க உரைகளை இச்சபை கண்டுள்ளது. அவ்வுரைகள் காலத்தின் கண்ணாடியாக, உலக அலுவல்களின் நிகழ்நிலையைப் பிரதிபலிக்கும் விமர்சனங்களாக அமைந்தும் உள்ளன. …
-
- 2 replies
- 707 views
-
-
அரசின் வியூகத்தை உடைத்த அமெரிக்கா (கே. சஞ்சயன்) ஜெனீவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் இடம்பெற்றுக் கொண்டிருந்த போதும், அதற்கு முன்னரும், அரசதரப்பு செய்து வந்து பிரசாரங்களைப் பொய்ப்பிக்கின்ற வகையில், அமெரிக்க காங்கிரஸில் கடந்தவாரம் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஒரு பிரிவான – போர்க்குற்றங்கள், மனித உரிமைமீறல் விவகாரங்களைக் கையாளும் - குற்றவியல் நீதிப் பணியகமே இந்த அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது. குற்றவியல் நீதிப் பணியகத்துக்குப் பொறுப்பான ஸ்டீபன் ராப், கடந்த பெப்ரவரி மாதத் தொடக்கத்தில் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். அவரது பயணத்தை அடிப்படையாக வைத்து, 2010 ஓகஸ்ட் 11ம் திகதி சமர்ப்பிக்கப்ப…
-
- 0 replies
- 707 views
-
-
சர்வ கட்சி மாநாடு ஒரு நாடகமா? நிலாந்தன். March 27, 2022 சர்வகட்சி மாநாடு எனப்படுவது வளர்ச்சியடைந்த ஜனநாயகங்களில் ஒரு உன்னதமான பயில்வு. முழு நாடும் கட்சி பேதங்களைக் கடந்து தேசியப் பிரக்ஞையோடு ஒன்றிணைந்து முடிவை எடுக்கும் நோக்கத்தோடு சர்வகட்சி மாநாடு கூட்டப்படுவதுண்டு. ஆளுங்கட்சி,எதிர்க்கட்சி சிறிய கட்சி ,பெரிய கட்சி என்ற பேதமின்றி நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் இணைந்து ஒரு பொது முடிவை எட்டுவதற்கான ஒரு மகத்தான ஜனநாயக நடைமுறைதான் சர்வகட்சி மாநாடு ஆகும். ஆனால் இலங்கைத் தீவில் சர்வகட்சி மாநாடு எனப்படுவது அவ்வாறான உன்னதமான ஒரு பயிலுகை அல்ல. இலங்கைத்தீவின் மோசமான அரசியல் கலாச்சாரத்தை பொறுத்தவரை, சர்வகட்சி மாநாடு எனப்படுவது ஒரு தப்பி…
-
- 0 replies
- 707 views
-
-
றோகிஞ்சாக்கள் அடையாளங்காட்டும் பல முகங்கள் அண்மைய நாட்களில், உலகின் எந்த நாட்டு ஊடகங்களையும் தொடர்ச்சியாகப் படிப்பவர்கள், பார்ப்பவர்கள், அல்லது கேட்பவர்கள், “றோகிஞ்சா” என்ற பதத்தை அறிந்திருப்பர். இல்லாவிடின், “றோகிங்கியா”, “ரோஹிஞ்சா”, “ரோஹிங்கியா”, “றோஹிங்கா” என்று, அக்குழுவினரை வேறு பெயரில் அறிந்திருந்தாலும், அவர்களைப் பற்றி நிச்சயமாக அறிந்திருப்பர். இவர்களின் முழுமையான வரலாற்றை அறியாதவர்கள் கூட, கடந்த பல தசாப்தங்களாக, ஒடுக்கப்படும் சமூகமாக இவர்கள் காணப்படுகின்றனர் என்பதை, ஊடகங்களில் எங்காவது மூலைகளில் காணப்படும் செய்தி அறிக்கைகளிலாவது கண்டிருப்பர். ஒரு சமூகத்தின் கலாசாரம், சாதனைகள், அடைவுகள் போன்றன எல்லாவற்றையும் விட, அந்த மக்களின் இழப்புகளும…
-
- 1 reply
- 707 views
-
-
உலக நீதி : காசாவும் முள்ளிவாய்க்காலும் - நிலாந்தன் “அனைத்துலக நீதியின் மாண்பு தராசில் தொங்கிக்கொண்டிருக்கிறது” இவ்வாறு அனைத்துலக நீதிமன்றத்தில் வைத்துக் கூறியிருப்பவர் தென்னாபிரிக்காவின் பிரதிநிதி. காசாவில் இஸ்ரேல் புரியும் இனப்படுகொலைக்கு எதிராகத் தென்னாபிரிக்கா உலக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கிறது. அந்த வழக்கின் தொடக்கத்தில் மேற்கண்டவாறு கூறப்பட்டிருக்கிறது. உலக நீதி மட்டுமல்ல மேற்கு நாடுகளின் அரசியல் அறமும் கூட தராசில் வைக்கப்பட்டிருக்கிறது. முழு உலகத்துக்கும் ஜனநாயகம் மனித உரிமைகள் போன்றவற்றின் மாண்பைக் குறித்து வகுப்பெடுக்கும் மேற்கு நாடுகளின் அரசியல் அறத்தை மிக இளைய ஜனநாயகங்களில் ஒன்று ஆகிய தென்னாபிரிக்கா கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறது. காசாவில்…
-
- 0 replies
- 707 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தடுமாறுவதும் தடம் புரள்வதும் தமிழினத்தை அழிவிக்கு அழைத்துச் செல்லும் திங்கட்கிழமை, 11 ஜூலை 2011 06:04 வெண்ணை திரண்டு வருகையில் தாலி உடைந்தால் ஆபத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தடுமாறுவதும் தடம் புரள்வதும் தமிழினத்தை அழிவிக்கு அழைத்துச் செல்வதோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலத்தையும் ஏக்க நிலைக்கு தள்ளி விடும். ஈழத் தமிழினத்தால் தெரிவு செய்யப்பட்ட ஒரே ஒரு கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பதை ஒட்டி மாறுபட்ட கருத்தில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈழத் தமிழ் மக்கள் எதிர் நோக்குகின்ற பேரழிவைத் தடுக்க முடியுமா என்பது பெரும் கேள்வி எனினும் இன்றைய சூழ்நிலையில் எமக்கு வேறு மாற்று இயக்கமில்லை. விலை போவதற்கென்றே …
-
- 1 reply
- 706 views
-
-
பொதுநலவாய மாநாடும் இந்தியாவும் - யதீந்திரா கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்குகொள்ளுமா, இல்லையா என்னும் வாதப் பிரதிவாதங்கள் தொடர்கின்றன. ஆனால் இந்தியாவின் பக்கத்திலிருந்து உறுதியான செய்திகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இதற்கிடையில், 'டைம்ஸ் ஒப் இந்தியா' கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பதிலாக, இந்தியாவின் துணை குடியரசு தலைவர் ஹமீத் அன்சாரி பங்குபற்றக்கூடுமென்று செய்தியிட்டுள்ளது. இதேபோன்று, சமீப நாட்களாக கொழும்பில் இடம்பெறும் கொமன்வெல்த் மாநாட்டை கடுமையாக விமர்சித்துவரும் கனேடிய பிரதமருக்குப் பதிலாக, பிறிதொரு உயர்மட்டக் குழுவினர் அனுப்பிவைக்கப்படுவர் என்று செய்திகள் வெளியாகியிருந்தன. கடந்த ஆண்டு, 58 வது கொமன்வெல்த் பாராளுமன்ற அமர்வு (Commo…
-
- 0 replies
- 706 views
-
-
எங்களுக்கு திருப்ப அந்த நினைவை வர வைக்காதேங்க அண்ண. அதை நினச்சாலே பயமா இருக்கு சில சம்பவங்கள் செய்திகளோடும் வாய்ப்பேச்சுக்களோடும் முடிந்து விடுகின்றன. அவற்றின் உருவாக்கங்கள் பற்றியோ காரணங்கள் பற்றியோ எந்த தெளிவுபடுத்தல்களும் முன்வைக்கப்படாது போய்விடுகின்றன. சில சம்பவங்களை தூக்கிப்பிடித்து பேசுபவர்கள் அதன் தாக்கங்கள் விளைவுகள் குறித்தும் பின்விளைவுகள் பற்றியும் பார்க்கத் தவறிவிடுகின்றனர். இந்த பிரித்தறிதல் இல்லாத தன்மை சிலரது செயற்பாடுகளுக்கு நல்ல வசதியாக இருக்கிறது. குரைக்கும் நாய் கடிக்காது என்பது போல அவர்கள் எண்ணிக் கொள்வார்கள். பத்திரிகைகளில் வரும் செய்தி அதன் விளக்கங்கள் அன்றன்றே முடிந்து போய்விடுகின்றன. அதனால் எந்தப் புரளியும் எழுந்துவிடப் போவதில்லை என்பதே …
-
- 0 replies
- 706 views
-
-
செத்த வீட்டு அரசியல் - நடராஜா குருபரன் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் மரணம் அனைவவரையும் உலுக்கியுள்ளது. அதிர்வுகள் தொடர்கின்றன. உயிருக்கு உயிரானவளின் மரணம் தந்த வலியால் பெற்றவரும் உற்றவரும் துடிக்கின்றனர். முள்ளிவாய்க்காலில் சுமந்த வலியை நினைவு கூரும் மாதத்தில் மீண்டும் ஒரு துயர் தமிழ் மக்களை சூழ்ந்து கொள்கிறது. பாடசாலைக்கு காலை புறப்பட்ட வித்தியா மறுநாள் காலை பாழடைந்த வீட்டில் பிணமாக மீண்டாள். வித்தியாவின் கொலைக்கான காரணங்கள் இப்போ வெளிவந்துகொண்டு இருக்கின்றன. வித்தியாவின் படுகொலைக்கு காரணமானவர்கள் எனச் சந்தேகிக்கப் படுபவர்கள் மூவர் கைதாகி உள்ளனர் என இலங்கைப் பொலிசும் கூறுகிறது. வித்தியா இறுதிக் கணங்களில் எதிர்கொண்ட நரக வேதனைகள், கொடூரங்களை வைத்தியசாலையின் பிரேதபரி…
-
- 5 replies
- 706 views
-
-
இலங்கை அரசாங்கத்தின் மும்மொழித்திட்டம் நிகழ்ச்சிக்கு அப்துல் கலாம், தமிழ்நாட்டின் தென்னிந்திய விஞ்ஞானிகள் சங்கம், மற்றும் ஜனாதிபதிகள் சங்கத்தின் தடையை மீறி இலங்கை வருகை தந்திருந்தார்! அவரிடம் படலை ஒரு பேட்டி எடுக்க அப்பாய்ண்மன்ட் கேட்ட போது போடாங்கோ என்று சொல்லிவிட, அவர் விஜயம் சம்பந்தமான ஒரு whatever! வணக்கம் அப்துல் கலாம் ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது! அது தானே நாங்க பாலர் வகுப்பிலேயே படிச்சிட்டோமோ உங்களில் எத்தனை பேரு சந்திரனுக்கு போகவேண்டும் என்று விரும்புகிறீர்கள்? சந்திரன் மாஸ்டரை தானே சுட்டிட்டாங்களே ஐயா? மும்மொழி கல்வி அவசியம். நான் எல்லாம் பத்தாம் வகுப்பு வரைக்கும் தாய்மொழியில் படித்த காரணத்தால் தான் இந்த அளவு முன்னேறினேன…
-
- 0 replies
- 706 views
-
-
கிளிநொச்சி மண்ணில் இன்று தீச்சட்டிப் போராட்டம் 75 Views காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டுவரும் சுழற்சி முறையிலான தொடர் போராட்டம் 4 ஆண்டுகளை (1,460 நாட்கள்) எட்டியுள்ளது. Video Player 00:00 00:33 இதனை முன்னிட்டு, இன்று தலையில் தீச்சட்டி ஏந்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை காணாமல் ஆக்கப்படடோரின் உறவுகள் முன்னெடுத்துள்னர். …
-
- 0 replies
- 706 views
-
-
பிரான்ஸ் அரசியல்: தடுமாறுகிறது ஐரோப்பா Editorial / 2018 டிசெம்பர் 03 திங்கட்கிழமை, மு.ப. 01:55 Comments - 0 -ஜனகன் முத்துக்குமார் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனுக்கான ஆதரவு, உள்நாட்டில் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்துள்ள அதேவேளை, பிரான்ஸின் பல்வேறு நகரங்களில் பொதுமக்கள் பேரணிகள் மூலம், அவரது கொள்கைகளுக்கும் அரசாங்கத்துக்கும் எதிர்ப்புகளைத் தொடர்ச்சியாக வெளிப்படுத்துவது தெரிவிப்பது, தொடர்ச்சியாகவே பிரெஞ்சு ஜனாதிபதிக்குக் கடினமானதொரு சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. பிரெஞ்சு அரசியல் விவகாரங்களில் பல ஆய்வாளர்கள், ஜனாதிபதி மக்ரோனின் அரசியல் நிலை பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில், “அவர், முன்னைய ஜனாதிபதிகளான ஃபொஷ்வா ஹொலான்டே, நிக்கோலா சார்க்கோசி ஆகியோரைக் காட்டி…
-
- 0 replies
- 706 views
-
-
நினைவு கூர்தலுக்கான வெளி-2021 ? நிலாந்தன்! May 1, 2021 கடந்த வாரம் கத்தோலிக்க திருச்சபையின் யாழ் மறை மாவட்ட குருமுதல்வர் ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார். தமிழ்மக்கள் இறந்தவர்களை நினைவு கூர்வதற்கு அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என்பதே அது. கத்தோலிக்க திருச்சபையின் உயர்நிலைக் குருவானவர் ஒருவர் அவ்வாறு தெரிவித்திருப்பது முக்கியமானது. அதுவும் மே பதினெட்டை நினைவு கூர்வதற்கு சில கிழமைகளுக்கு முன் அவர் அதைக் கூறியிருந்தார். ஈஸ்டர் குண்டுவெடிப்பை நினைவு கூர்ந்த ஒரு காலகட்டத்தில் அவர் அதைக் கூறியிருந்தார். எனவே அது கூறப்பட்ட காலம் கூறியது யார் என்பவற்றை தொகுத்துப் பார்த்தால் அக்கூற்றுக்கு முக்கியத்துவம் உண்டு. ஏனெனில் கடந்த ஆண்டும் நினைவு கூர்தலை எப்படி ம…
-
- 0 replies
- 706 views
-
-
வடகிழக்கில் அரசின் 100 விகாரைகள்! தமிழர் கலாசார மரபுரிமை அழிப்பு! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் நல்லிணக்கம் என்ற சொல் இலங்கையில் மகிந்த ராஜபக்சவின் காலத்தில்தான் அறிமுகமானது. ஈழத் தமிழ் மக்கள்மீது மிகக் கொடிய இனப்படுகொலை போரை நடாத்திவிட்டு அந்தப் போரரையே நல்லிணக்கத்திற்காக நடத்தியதாக கூறியவர் மகிந்த ராஜபக்ச. அத்துடன் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர், தமிழ் நிலத்தில் இராணுவ ஆக்கிரமிப்புக்களையும் சிங்களக் குடியேற்றங்களையும் தமிழர் கலாசார உரிமை மீறல்களையும் தீவிரவாக முன்னெடுத்தபோது அதற்கு நல்லிணக்க நடவடிக்கை என்றே பெயர் சூட்டினார் மகிந்த ராஜபக்ச. உலகில் மனிதாபிமானத்திற்காக, இனப்படுகொலை போர்…
-
- 0 replies
- 706 views
-
-
[size=5]பனிப்போர்க் கால 13வது திருத்தச் சட்டமும், பின்-பனிப்போர் கால இந்தியாவும் - யதீந்திரா[/size] இன்றைய அர்த்தத்தில் இலங்கை அரசியலின் விவாத மையம், 13வது திருத்தச் சட்டத்தில் தரித்து நிற்கிறது. தெற்கில், அரசியல்வாதிகளையும் தாண்டி புத்திஜீவிகள், அரசியல் அவதானிகள் என்போர் மத்தியிலும் இது ஒரு முக்கிய விடயமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற விவாதம் இலங்கை அரசியலின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகின்ற விவாதமாகும். 1987ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தின் கீழான மாகாணசபை முறைமை ஒன்றுதான், சுதந்திர இலங்கையில் இருக்கின்ற ஒரேயொரு அதிகாரப் பரவலாக்கல் (Decentralization) முறைமை ஆகும். அதனையும் கூட நீக்க அனுமதிப்பதா? என்பதுதான் …
-
- 0 replies
- 706 views
-
-
பான் கீ மூனுக்கு மட்டுமல்ல சர்வதேசத்தின் எந்தவொரு சக்திக்கும் இலங்கையின் உள் விவகாரங்களில் தலையிட அதிகாரம் இல்லை என ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் பிரதான செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து தனக்கு ஆலோசனை வழங்க பான் கீ மூன் நியமித்துள்ள நிபுணர் குழுவை இலங்கைக்குள் நுழைய அனுமதி வழங்கக் கூடாதென அவர் வலியுறுத்தியுள்ளார். அவ்வாறு வழங்கப்படுமாயின் அதனை ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லையென கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் விஜித ஹேரத் தெரிவித்தார். எனினும் குறித்த நிபுணர் குழு இலங்கை வர அரசாங்கம் தற்போது அனுமதி அளித்துள்ளதாகவும், இதன்மூலம் அரசாங்கத்தின் இரட்டைவேடம் வெளியாவதாகவும் அவர் சுட்டிக்க…
-
- 0 replies
- 706 views
-
-
கவர்ச்சியான வங்குரோத்து அரசியல் -என்.கே. அஷோக்பரன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான மறைந்த சௌமியமூர்த்தி தொண்டமான், தன்னுடைய காலத்தைய ஒத்த, வடக்கு-கிழக்குத் தமிழ்த் தலைமைகள் பற்றிக் கருத்துரைக்கும்போது, குறிப்பாக, அன்றைய தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவர்களைப் பற்றிக் கூறும்போது, “அவர்கள், தமது வழக்கை, மிகச் சிறப்பான வகையில் வாதிடவல்ல சட்டத்தரணிகள்; ஆனால், அவர்களுக்கு அர்த்தமுள்ள சலுகைகளை ஈர்த்து எடுத்துக்கொள்ளத் தெரியாது” என்று கூறியதாகச் சில பதிவுகள் கிடைக்கின்றன. இதற்குத் தீவிர தமிழ்த் தேசிய தலைமைகள், உடனடியான பதிலைக் கொண்டிருப்பார்கள். அது, “எமது அரசியல் என்பது, சலுகைகளுக்கு அடிபணியும் அரசியல் அல்ல; மாறாக, கொள்கை வழி பயண…
-
- 2 replies
- 706 views
-
-
எழுக தமிழ் 2019: யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி? – நிலாந்தன்…. September 21, 2019 கொழும்பில் தாமரைக் கோபுரம் திறந்து வைக்கப்பட்ட அதேநாளில் யாழ்ப்பாணத்தில் இரண்டாவது எழுகத்தமிழ் இடம்பெற்றது. தாமரைக் கோபுரம் எனப்படுவது இலங்கைத் தீவு சீனமயப்பட்டு விட்டதைக் குறிக்கும் தென்னாசியாவின் மிக உயரமான குறியீடுகளில் ஒன்று.இலங்கைத்தீவின் பெருமைக்குரிய அடையாளங்களாக இது வரை இருந்து வந்த புராதன சின்னங்களை மீறி நாட்டின் ஒரு நவீன அடையாளமாக அது உயர்த்திக் காட்டப்படுகிறது. சீனா இலங்கைத் தீவின் வரை படத்தை மாற்றி விட்டது. நாட்டுக்கு ஒரு புதிய அடையாளத்தையும் வழங்கியிருக்கிறது. தாமரைக் கோபுரத்தைப் பற்றி வெளிவந்த பெரும்பாலான கார்ட்டூன்களில் கடன்காரர்களாக ம…
-
- 1 reply
- 705 views
-
-
-
- 0 replies
- 705 views
-