அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9226 topics in this forum
-
சிங்கப்பூர் மாநாடும் எதிர்பார்ப்புகளும் - ஜனகன் முத்துக்குமார் ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கும் வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-உன்னுக்கும் இடையில், அண்மையில் நடந்து முடிந்துள்ள சிங்கப்பூர் சந்திப்பு, பலதரப்பினரின் கவனத்தை ஈர்த்திருந்தது. இப்பேச்சுவார்த்தை, ஐ.அமெரிக்க - வட கொரிய உறவுகளை மீளப்புதுப்பிக்கும் எதிர்பார்ப்புடனேயே மேற்கொள்ளப்பட்ட போதிலும், சந்திப்பில் முழுமையாக உடன்பாடு எட்டப்பட்டது எனச் சொல்லுமளவுக்கு, எதுவுமே இருந்திருக்கவில்லை. உண்மையில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வடகொரியத் தலைவர் கிம், வடகொரியாவுக்கான - UNGJIN கொள்கையை நடைமுறைப்படுத்தியிருந்தார். அது, வடகொரியாவின் அண…
-
- 0 replies
- 262 views
-
-
முன்னொரு காலத்தில் வட இந்தியாவில் ஒரு அபூர்வ சம்பவம் (விஞ்ஞான ரீதியில் விளக்க முடியாத பெரும் சம்பவம்) நிகழ்ந்தது. அதில் சுப்பாதேவி என்ற ஒரு மனிதப் பெண்ணை ஆண் சிங்கம் ஒன்று கற்பழிக்க.. அவளுக்கு இரண்டு மனிதக் குழந்தைகள் பிறந்தன. அதில் ஒன்று ஆண் மற்றது பெண். அவற்றில் ஒன்று தான் சிங்கபாகு. அவன் தன் சிங்கத் தந்தையைக் கொன்று விட்டு பின் தன் சொந்த சகோதரியையே மணம் முடித்தும் கொண்டான். அவர்களின் பிள்ளையே விஜயன். அதாவது சிங்கத்தின் இரண்டாம் தலைமுறை குழந்தையான விஜயன் ஒரு கொடியவன். அவனின் கொடுஞ்செயல் கண்டு அவனையும் அவனின் கொடுமைக்கார கூட்டாளிகளையும் கடலில் விட்டனர். அவர்கள் போக்கிடமின்றி அலைந்து காற்றின் திசையில் வந்து சேர்ந்த இடம் தற்போதைய சிறீலங்கா. முந்தைய தம்பபரணி. அதன் பின…
-
- 9 replies
- 3.4k views
- 1 follower
-
-
சிங்கள மேலாதிக்கத்தில் பண்டாரநாயக்கவும் மைத்திரியும் 1956 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற எஸ்.டபிள்யூ.ஆர் .டி பண்டாரநாயக்க தனது அமைச்சரவையை உருவாக்கிய அடுத்த இரண்டு மாதங்களுக்குள் தனிச்சிங்கள சட்டமூலத்தை கொண்டு வந்தார். 1956 ஆம் ஆண்டின் 33 ஆவது இலக்க அரசகரும மொழிகள் சட்டம் என்ற பெயருடைய அச்சட்டமூலத்தின் மூலம் அதுவரை ஆட்சி மொழியாக இருந்த ஆங்கிலம் அகற்றப்பட்டு சிங்கள மொழி அரச கரும மொழியானது மட்டுமன்றி இந்த சட்ட மூலமே தீவெங்கினும் வாழ்ந்து வந்த சிங்கள –தமிழ் இனங்களிடையே முரண்பாடுகளை உருவாக்கக்காரணமாயிற்று. குறிப்பாக தமிழர்கள் செறிந்து வாழ்ந்து வரும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதுடன் அங்குள்ள அரச நிறுவனங்…
-
- 0 replies
- 602 views
-
-
பான் கீ மூனுக்கு மட்டுமல்ல சர்வதேசத்தின் எந்தவொரு சக்திக்கும் இலங்கையின் உள் விவகாரங்களில் தலையிட அதிகாரம் இல்லை என ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் பிரதான செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து தனக்கு ஆலோசனை வழங்க பான் கீ மூன் நியமித்துள்ள நிபுணர் குழுவை இலங்கைக்குள் நுழைய அனுமதி வழங்கக் கூடாதென அவர் வலியுறுத்தியுள்ளார். அவ்வாறு வழங்கப்படுமாயின் அதனை ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லையென கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் விஜித ஹேரத் தெரிவித்தார். எனினும் குறித்த நிபுணர் குழு இலங்கை வர அரசாங்கம் தற்போது அனுமதி அளித்துள்ளதாகவும், இதன்மூலம் அரசாங்கத்தின் இரட்டைவேடம் வெளியாவதாகவும் அவர் சுட்டிக்க…
-
- 0 replies
- 707 views
-
-
சிங்கள ஆட்சியாளர்களின் அச்சத்தை நன்றாகப் பயன்படுத்தும் சீனா
-
- 0 replies
- 547 views
-
-
இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தல் சிங்கள ஆட்சியாளர்களைத் தமிழர்கள் நிராகரிக்கப்போகும் இறுதி நிலை 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு முன்னரான சூழலில் சிங்களக் கட்சிகளிடையே குழப்பங்கள் ஏற்பட்டதில்லை இலங்கை ஒற்றை ஆட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பான நிலைப்பாடுகள், கருத்துக்களில் பிரதான சிங்கள அரசியல் கட்சிகள் மத்தியிலும் ஏனைய சிங்கள அரசியல் பிரதிநிதிகளிடமும் குழப்பங்கள், முரண்பாடுகள் நீடித்துச் செல்கின்றன. இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டால் மாத்திரமே சிங்கள அரசியல் கட்சிகள் நிம்மதியாக அரசியலில் ஈடுபடலாமென்ற நிலை மாறித் தற்போது தமது கட்சிப் பிரச்ச…
-
- 1 reply
- 1.1k views
-
-
சிங்கள இடதுசாரிகளும் பௌத்த மயமாக்கலும் -தென் அமெரிக்க நாடுகளில் கடந்த பத்து ஆண்டுகளில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. அதனை மீட்சி பெறச் செய்யும் முயற்சியில் இடதுசாரிகள் கவனம் செலுத்த வேண்டிய தேவையிருந்தது. இதனாலேயே அங்கு இடதுசாரிகள் தொடர் வெற்றிகளைக் கண்டு வருகின்றனர். ஆனால் இலங்கை இடதுசாரிகள் வெறுமனே சோசலிச சமத்துவம் என்ற கோசத்தை மாத்திரம் முன்வைக்கின்றன. -அ.நிக்ஸன்- உலக அரசியலில் வலதுசாரிக் கட்சிகளின் செல்வாக்குகள் சரிந்தவரும் நிலையில், இடதுசாரிகளின் செல்வாக்குகளும் ஆதரவும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாகத் தென் அமெரிக்க நாடுகளில் கடந்த இரண்டு வருடங்களில் இடதுசாரிகள் அட…
-
- 0 replies
- 512 views
-
-
சிங்கள இனம்: உலகின் குற்றச்சாட்டை எதிர்கொள்ளுமா? இந்தியாவுக்கு பிரித்தானியரால் சுதந்திரம் வழங்கப்பட்ட வேளையில், காந்தியைப் பார்த்து, கேள்வி ஒன்றைக் கேட்டார் பிரித்தானியர் ஒருவர். “எம்மவர்களால் (பிரித்தானியரால்) உங்கள் நாட்டின் அனைத்துச் சொத்துகளும் சூறையாடப்பட்டு விட்டன. இனி எப்படி, ஒன்றுமே இல்லாத உங்கள் நாட்டைக் கட்டி எழுப்பப் போகின்றீர்கள்” என்பதே அந்த வினா ஆகும். “எமது நாட்டின், பௌதீக வளங்களை நீங்கள் சூறையாடி இருக்கலாம். ஆனால், எமது நாட்டு மக்கள், எங்கு தடுக்கி விழுந்தாலும், எம்மைத் தாங்கிப் பிடிக்க, ஏராளமான மனித நேயமுள்ள மனிதர்கள், வாழும் தேசம் நம் பாரத தேசம்” எனப் பதிலடி வழங்கினார் காந…
-
- 0 replies
- 416 views
-
-
சிங்கள இனவாதிகளின் நண்பன் - அவுஸ்த்திரேலியா சில தினங்களுக்கு முன்னர் வாட்ஸ் அப் ஊடாக எனக்குத் தெரிந்த தமிழ் ஆர்வலர் ஒருவரிடமிருந்து குறுஞ்செய்தி ஒன்று வந்திருந்தது. "இதனைப் பகிரவேண்டாம்" என்ற வேண்டுகோளுடன் அவர் ஒரு கடிதத்தினை சேர்த்து அனுப்பியிருந்தார். அதனால், எனது நண்பர் பற்றிய விபரங்களையும், அக்கடிதத்தினை இங்கே இணைப்பதனையும் தவிர்த்துவிட்டு, விபரங்களை மட்டும் விபரிக்கிறேன். இலங்கையில் இன்றைய இனவாத ஆட்சியில் தமிழர் பட்டுவரும் இன்னல்கள் குறித்தும், அண்மையில் நடந்துமுடிந்த மனிதவுரிமைகள் சபையின் இலங்கை தொடர்பான தீர்மானம் குறித்தும் அவுஸ்த்திரேலிய அரசாங்கம் இலங்கைக்குச் சார்பாக அல்லது நடுநிலை என்கிற பெயரில் எதுவுமே செய்யாது தவிர்த்துவருவது தொடர்பான தனது அதி…
-
- 3 replies
- 555 views
-
-
இலங்கையில் தமிழ் மக்கள் மத்தியில் மட்டும்தான் சாதியடக்குமுறை உண்டு என்றும், சிங்கள மக்களிடம் சாதிப் பாகுபாடு இல்லை என்றும், அனேகர் கருதுவது மிகத் தவறானது என கட்டுரையாளர் திபாகரன் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் தனது கட்டுரையில், இருபகுதியினரிடமும் சாதிப் பாகுபாடு வலுவாக உண்டு எனினும் தமிழ் மக்களிடம் சாதிப்பாகுபாட்டில் தீண்டாமை என்கிற அம்சம் உண்டு. ஆனால் சிங்களவர்களிடம் தீண்டாமை என்பது கிடையாது. ஆனால் சிங்கள மக்கள் மத்தியில் இருக்கும் சாதி பேதமானது தமிழ் மக்களிடம் இருக்கின்ற சாதி பேதத்தை விடவும் அரசியல் மத ரீதியில் மிக ஆழமானதும் கடுமையானதும் ஆகும். இது பற்றி தெரிந்து கொள்ளாமல் அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதும் மிகப்பெரும் அரசியல் ரீதியான சமூக ர…
-
- 0 replies
- 501 views
-
-
சிங்கள தேசத்தின் ஜனாதிபதி, தமிழ்த் தேசத்தினதும் ஜனாதிபதியாவாரா? பகுதி 1- December 30, 2019 ராஜா பரமேஸ்வரி… யுத்தம், கொலைகள், காணாமல் போதல்கள், வெள்ளைவான் கடத்தல்கள் போர் குற்றம் என பல நூறு குற்றச்சாட்டுக்களை தாண்டி தனிச் சிங்கள வாக்கில் இலங்கையின் முதலாவது ஆட்சியாளராக ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஸ தெரிவாகி உள்ளார். அரசியல்வாதியாக, கட்சிப் பிரமுகராக அல்லாத முன்னாள் இராணுவ அதிகாரி, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் என்ற இலங்கையின் அரச அதிகாரி ஒருவர் வரலாற்றில் முதலாவது தேர்தலிலேயே பெரும்பான்மை வாக்குகளால் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். ராஜபக்ஸ குடும்ப அரசியலின் வாரிசு, யுத்தத்தை வெற்றிகொண்ட ஜனாதிபதி மகிந்தராஜபக்ஸவின் தம்பி என்ற க…
-
- 0 replies
- 689 views
-
-
இறந்தகால வெற்றிகளையும், தோல்விகளையும், கசப்புக்களையும், அழிவுகளையும், துன்ப துயரங்களையும் பிணங்களாக தோளில் சுமந்தபடி நிகழ்காலத்தினதும் எதிர்காலத்தினதும் வசந்தமான வாழ்வையும் வரலாற்றையும் சேற்றினுள்ளே புதைக்க முடியாது. அரசியல் என்பது தான் சார்ந்த சமூகத்தின் பன்னெடுங்கால வரலாற்றின் தொடர்ச்சியாக எதிர்காலத்திலும் தன்சமூகம் பல்லாயிரம் ஆண்டு காலத்திற்கான தொடர் வாழ்வை நிர்ணயம் செய்வதாக அமைய வேண்டும். ஆனால் தமிழ் தலைவர்களோ கற்பனைகளிலும், தூய இலட்சியவாதங்களிலும் மூழ்கி சாத்தியமற்ற 13ம் திருத்தச் சட்டத்தை பற்றி பேசியே காலத்தை கழித்து தமிழினத்தை தொடர் அழிவுக்கு உட்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அதேநேரம் சிங்கள மக்களினதும், சிங்கள தலைமைகளினதும், பௌத்த மகாசங்கத்தினதும் மன…
-
- 0 replies
- 340 views
-
-
சிங்கள தேசமாகும் தமிழர் தாயகம்’ – நாம் சிந்திக்க வேண்டிய நேரம் இது… – மட்டு.நகரான் 2 Views வடகிழக்கு தமிழர்களின் பகுதிகள் அபகரிக்கப்பட்டுவரும் நிலையில், தமிழர்களின் தாயகத்தினை பாதுகாக்க நாங்கள் என்ன நடவடிக்கைகள் எடுத்தோம் என்பதை அனைவரும் ஒருதரம் சிந்திக்கவேண்டிய காலத்தில் நிற்கின்றோம். நாங்கள் வடகிழக்கில் காணிகள் அபகரிக்கப்படுவதற்கு எதிராக குரல் கொடுக்கின்றோம், போராடுகின்றோம். ஆனால் இருக்கும் காணிகளை பாதுகாப்பதற்கு அல்லது அதனை தக்க வைப்பத்தற்கு எவ்வாறான திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது என்றால், எதுவும் இல்லையென்பதே உண்மையாகும். வடகிழக்கில் உள்ள தமிழர்களின் காணிகளை பெரும்பான்மையினர் அபகரிக்கும்போது அ…
-
- 0 replies
- 531 views
-
-
சிங்கள தேசம் இனியாவது தந்தை செல்வாவை புரிந்துகொள்ளுமா? இன்றைக்கு தந்தை செல்வாவின் நினைவுநாள். தந்தை செல்வா காலமாகி முப்பத்தொன்பது வருடங்கள் ஆகிவிட்டது. 1977 ஏப்ரல் 26 அன்று தந்தை செல்வா காலமானார். இன்னும் ஒரு வருடத்தில் அவர் இறந்து நான்கு தசாப்தங்கள். தந்தை செல்வா என்று ஈழத் தமிழ் மக்களால் அழைக்கப்படும் சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் ஒரு அரசியல்வாதி மாத்திரமல்ல. அவர் பிரசித்தமான ஒரு வழக்கறிஞரும் ஆவார். யாழ்ப்பாணம் தொல்புரத்தை பூர்வீகமாகக் கொண்ட செல்வநாயகத்தின் தந்தை ஒரு ஆசிரியராக இருந்து பின்னர் மலேசியாவுக்கு புலம்பெயர்ந்த காலத்தில் தந்தை செல்வா மலேசியாவின் ஈப்போ நகரில் பிறந்தார். அகில இலங்கை காங்கி…
-
- 0 replies
- 480 views
-
-
புலிகளுக்கு எதிரான இந்திய இராணுவத்தின் `ஒபரேஷன் பவான்' தோல்வி கண்டது ஏன்? [18 - August - 2006] [Font Size - A - A - A] புலிகள் இயக்கத்தினரைத் தோற்கடிக்க வேண்டும்.புலிகள் அமைப்பை தோற்கடிக்க முடியும் ஆனால் அது இலகுவான நடவடிக்கையாக இருக்க முடியாது. 1987 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் திகதி இந்திய அரசு தனது பாதுகாப்புப் படையினரின் `ஒபரேஷன் பவான்' (OPERATION PAWAN) இராணுவ நடவடிக்கையைப் புலிகள் இயக்கத்தினருக்கு எதிராக ஆரம்பித்தது. புலிகள் இயக்கத்தினரை 72 மணி நேரத்துக்குள் அதாவது, 3 நாட்களுக்குள் பின் வாங்கச் செய்வதே இந்திய இராணுவத்தின் உத்தேச குறிக்கோளாக இந்திய தரப்பில் கூறப்பட்டது. அந்தக் குறிக்கோளுடன் இந்திய இராணுவம் புலிகளுக்கு எதிராக தீவிர தாக்குதல்களைத் தொடங்கிய போ…
-
- 2 replies
- 1.7k views
-
-
குற்றச்சாட்டுக்கள் தொடர்பான உண்மை நிலை - -ஷிரால் லக்திலக- ஜனாதிபதியின் இணைப்பாளரும், சிரேஸ்ட்ட சட்டத்தரணியுமான ஷிரால் லக்திலக சிங்களத்தில் ராவய பத்திரிகைக்கு எழுதப்பட்ட கட்டுரையின் தமிழ் வடிவம் இது. இதனை ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அனுப்பி வெளியீட்டிற்காக அனுப்பிவைத்தமைக்கு அமைவாக இங்கு வெளியிடப்படுகிறது... விக்டர் ஐவன், பேராசிரியர் ஜயதேவ உயன்கொட, பேராசிரியர் சரத் விஜயசூரிய மற்றும் மனுவர்ண ஆகியோர்களின் கட்டுரைக்கான பதில் கட்டுரையாகவே இக்கட்டுரை அமைகின்றது. இவர்களின் பகுப்பாய்வானது 'நல்லாட்சி அரசாங்கம் சரிவடைந்து இரண்டாக பிரியும் ஒரு பயணத்தை ஆரம்பித்துள்ளது. ஜனாதிபதி அவர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைமைத்துவத்தைப் பொறுப்பேற்றமை அரசாங்க…
-
- 0 replies
- 535 views
-
-
சிங்கள பாசிச அரசின் கபடம் நிறைந்த சர்வதேச நகர்வுகள் – ஈழத்து நிலவன் - கடந்த ஏப்ரல் மாதம் சிங்கப்பூர் நாட்டில் இரகசியமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அந்தப் பேச்சுவார்த்தையில் என்ன பேசப்பட்டது? எதற்காக அந்தக் கூட்டம் நடைபெற்றது என்பது தொடர்பாக பேச்சுக்களில் கலந்துகொண்ட தனிமனிதர்களோ அல்லது அவர்களினுடைய அமைப்போ இன்றுவரை வெளிப்படுத்தப்படவில்லை. சிங்கப்பூரில் நடைபெற்ற சந்திப்பு தொடர்பில் In Transformation Initiative அமைப்பு வெளியிட்டிருந்த ஊடக அறிக்கை தொடர்பில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை தனது சந்தேகங்களை எழுப்பி இருந்ததுடன், தமிழர் தரப்பின் உண்மையான பிரதிநிதிகள் புறக்கணிக்கப்பட்டமை, இந்த கூட்டங்களை கேள்விக்குறியாக்கியுள்ளத…
-
- 0 replies
- 459 views
-
-
நாவற்குழி மாதகல் முகநூல் + தமிழ்நெட்
-
- 4 replies
- 734 views
-
-
சிங்கள பௌத்த தேசியத்தைப் பிளவுபடச் செய்துள்ள கொழும்பு துறைமுக நகரத் திட்டம் – பி.மாணிக்கவாசகம் April 22, 2021 107 Views இலங்கை ஒரு சிறிய நாடு. சின்னஞ்சிறிய தீவு. இதனை ஒரேயொரு தேசமாகப் பேண வேண்டும். இங்கு பிரிவினைக்கு – நாட்டை இரண்டாகப் பிரிப்பதற்கு இடமளிக்க முடியாது. அவ்வாறு இடமளிப்பது முறையல்ல என்பது சிறீலங்காவின் பொதுவான நிலைப்பாடு. இது இந்த நாட்டு மக்கள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றது. தமிழ் மக்களும் இந்தப் பொதுக் கொள்கையை, பொது நிலைப்பாட்டை, பொதுத் தேசியத்தை ஏற்றுக் கொள்கின்றார்கள். இந்த நாடு இங்கு வாழும் அனைத்து இன மக்களுக்கும், பல்வேறு மதங்களைப் பின்பற்றுபவர்களுக்கும் சொந்தமானது. அவர்கள் தங்கள் தங்களின் தனித்துவமான அடையாளங்களுட…
-
- 0 replies
- 362 views
-
-
இன்று இலங்கை மிகவும் குறிப்பான வரலாற்றுப் பகுதியைக் கடந்து சென்றுகொண்டிருக்கின்றது. தெற்காசியாவில் போராட்டங்களுக்கான காலமாகக் கருதப்படும் நமது அரசியல் சமகாலம் இலங்கையில் சிறுபான்மை தேசிய இனங்களின் போராட்டத்திற்கான அவசியத்தைத் தவிர்க்கமுடியாத ஒன்றாக மாற்றியுள்ளது. அறுபது ஆண்டுகால திட்டமிட்ட தமிழ்த் தேசிய இனங்களின் மீதான அடக்குமுறை என்பது இன்று மேலும் ஒரு புதிய வடிவை எடுத்துள்ளது. இன்று சிங்கள பௌத்த மேலாதிக்க வாதச் சிந்தனைக்கு எதிரானதும், குறுந்தேசியவாத கோட்ப்பாடிற்கு எதிரானதுமான தத்துவார்த்தத் தளத்திலான போராட்டங்கள் அவசியமாகிறது.சிங்கள பௌத்த மேலாதிக்கத்தின் பண்பியல்புகள் குறித்த புரிதல்களின் ஊடாகவே அதனை எதிர்கொள்வது குறித்த முடிபுகளுக்கு முன்வர முடியும். சிங்கள பௌத்தம…
-
- 2 replies
- 1k views
- 1 follower
-
-
சிங்கள பௌத்த மேனியாவும், சமஷ்டி போபியாவும் Sarawanan Nadarasa படம் | மாற்றம் Flickr தளம் ஏறத்தாழ சகல பிரதான தேர்தல் பிரசார மேடைகளிலும் தவறாத பேசுபொருளாக சமஷ்டி குறித்த சர்ச்சை பெரிதாக எழுந்திருந்தத்தை கண்டிருப்பீர்கள். சிங்கள பௌத்த பெரும்பான்மை மக்களுக்கு சமஷ்டி குறித்த பேரச்ச வெருண்ட உணர்வு (phobia) இனவாதிகளால் வளர்க்கப்பட்டு இன்று தாமும் அதற்குள் அகப்பட்டு அந்த நோய்க்கு இலக்காகி உள்ளனர் என்றே கூறவேண்டும். வெறித்தனமான சிங்கள பௌத்த மேலாதிக்க உணர்வென்பது (mania) ஏனைய இனங்களின் மீதான வெறுப்புணர்ச்சியையும், காழ்ப்புணர்ச்சியையும் மிகையாக வளர்த்தெடுத்து அதுவும் ஒரு தீரா நோயாகவும், பரப்பும் நோயாகவும் ஆக்கப்பட்டுள்ளது. சமஷ்டி பற்றி தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமது தேர்தல்…
-
- 0 replies
- 383 views
-
-
சிங்கள பௌத்தர்களின் வாக்குகள் யாருக்கு ? உச்ச நீதிமன்ற தீர்ப்பானது நாட்டில் உருவாகிய அரசியல் நெருக்கடிகளை ஓரளவுக்கே தணிக்க உதவியது என்று தான் கூற வேண்டியுள்ளது. ஏனென்றால் ஜனாதிபதியும் அவரது புதிய நம்பிக்கையான மஹிந்தராஜபக்ஷ மற்றும் அவரது அணியினரும் கூறி வரும் கருத்துக்கள் நாட்டு மக்களை அந்த வகையிலேயே சிந்திக்க தூண்டியுள்ளன. உண்மையைக்கூறப்போனால் நாட்டில் இன்னும் அரசியல் நெருக்கடிகள் முற்றாக தீரவில்லை.என்ன தான் நீதித்துறை ஜனநாயகத்தை நிலை நிறுத்தும் வண்ணம் செயற்பட்டாலும் கூட அதிகார வர்க்கத்திலிருந்தே பழக்கப்பட்டு விட்ட அரசியல் பிரமுகர்கள் அதை மீறி செயற்படும் தந்திரோபாயத்திலிருந்து எப்போதும் விலகிச்செல்ல மாட்டர். நான்கரை வருடங்களுக்கு முன்பு பாராளுமன்றத்தை கலைத்தது…
-
- 0 replies
- 446 views
-
-
சிங்கள மகா சபையின் தோற்றமும் மத-மொழித்-தேசியவாதத்தின் எழுச்சியும் (1956: 😎 என்.சரவணன் July 25, 2020 சிங்கள மகாசபை 19.05.1934 ஆம் ஆண்டு கொழும்பு புறக்கோட்டையில் அமைந்துள்ள ‘பௌத்த மந்திரய’வில் வைத்து அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. மகா கவி ஆனந்த ராஜகருணா, குமாரதுங்க முனிதாச, டீ.எம்.ராஜபக்ச (மகிந்த ராஜபக்சவின் தகப்பனார்) பியதாச சிறிசேன போன்றோர் சிங்கள மகா சபையின் ஸ்தாபகர்களாக காணப்பட்டனர். ஆரம்பத்தில் சிங்கள மகா சபை என்கிற பெயர் பண்டாரநாயக்கவால் வைக்கப்பட்டதல்ல. வேறு இனத்தவர்களையும் இத்துடன் இணைத்துக்கொள்ளும் நோக்குடன் அவர் “சுவதேஷிய மகா சபா” (Swadesiya Maha Sabha – சுதேசிய மகா சபை) என்கிற பெயரையே வைக்க விரும்பினார். ஆனால் பிரபல சிங்கள இலக்கியப் பிரம…
-
- 0 replies
- 484 views
-
-
சிங்கள மக்களின் உதவியை நாடும் இலங்கைத் தமிழ் தாய்மார்கள்... எதாற்காக ? - சிவா பரமேஸ்வரன் (முன்னாள் மூத்த செய்தியாளர் பி.பி.சி. ) இலங்கையில் பதினோரு ஆண்டுகளுக்கு முன்னர் கொடூரமாக முடிவடைந்த யுத்தத்தின் கடைசி நாட்களில் காணாமல்போன மற்றும் கையளிக்கப்பட்ட உறவுகளைக் கண்டுபிடிக்க சிங்கள மக்களின் உதவியை இப்போது தமிழ்த் தாய்மார்கள் கோரியுள்ளனர். தமது உறவுகளை கண்டுபிடித்துக்கொடுக்குமாறு கோரி கடந்த 1200 நாட்களாக அவர்கள் சுழற்சி முறையின் உண்ணாவிரதம் மேற்கொண்டு போராடி வருகின்றனர். எண்ணற்றவர்களை உயிர்ப்பலி கொண்ட கொடூரமான அந்த யுத்தம் 18 மே 2009 அன்று முடிவடைந்துவிட்டதாக அரசு அறிவித்த நிலையில், ஏராளமானவர்கள் அதற்கு முன்னரும் பின்னரும் அரச படைகளிடம் `சரணடைந்தனர்…
-
- 0 replies
- 516 views
-
-
சிங்கள மக்களின் கோபம்... அரசாங்கத்தை அசைக்குமா? நிலாந்தன். அரசியலில், அரசியல் பொருளாதாரம்தான் உண்டு.இலங்கைத்தீவின் பொருளாதார நெருக்கடிக்கு பிரதானமான காரணம் அரசியல்தான். பொருளாதாரத்தை சரியாக முகாமை செய்யத் தவறியமை மட்டும் காரணமல்ல. அது ஒரு உப காரணம்தான். இப்போதிருக்கும் பொருளாதார நெருக்கடியை அரசியல் நீக்கம் செய்து ஒரு பகுதி பொருளாதாரவிமர்சகர்கள் எழுதியும் பேசியும் வருகிறார்கள்.அவர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு இப்போதுள்ள பொருளாதார நெருக்கடியை அதன் அரசியலில் இருந்து பிரித்துப் பேசி வருகிறார்கள் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.இலங்கைத்தீவு இப்பொழுது எதிர்கொள்ளும் நெருக்கடிகள் தனிய பொருளாதாரக் காரணங்களால் மட்டும் ஏற்பட்டவை அல்ல.இப்பொருளாதார நெருக்கடியை அதன் அரசியலை நீக்கிப் பே…
-
- 0 replies
- 592 views
-