அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
சீனா: புதிய கூட்டாளிகளும் பழைய எதிரிகளும் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ சீன கம்யூனிஸ்ட் கட்சி, அதன் 20ஆவது தேசிய காங்கிரஸை ஒக்டோபர் 16 முதல் ஒக்டோபர் 22 வரை நடத்தியது. ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் இம்மாநாட்டில், கட்சியின் 96 மில்லியன் உறுப்பினர்களின் பிரதிநிதிகள், அதன் உயர்மட்ட தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும் கட்சிக்கு எதிர்கால திசையை அமைப்பதற்கும் கூடினார்கள். இந்த ஆண்டு காங்கிரஸின் முக்கிய கருப்பொருள்களில் ஒன்று ‘நவீனமயமாக்கலுக்கான சீனாவின் பாதை’ மூலம், நாட்டின் ‘புத்துணர்ச்சி’ ஆகும். இம்மாநாட்டுக்கு, அதன் பொதுச் செயலாளரான ஷி ஜிங்பிங் சமர்ப்பித்த அறிக்கையில், சீனாவை ‘ஒரு நவீன சோசலிச நாடாக’ கட்டியெழுப்புவதற்கான முன்னோக்கிய வழியை வரைந்துள்…
-
- 0 replies
- 824 views
-
-
சீனா: பொருளாதார அரசியலும் மேலாதிக்க விஸ்தரிப்பும்! பகுதி 1 கொரோனா நெருக்கடி என்பது இந்த நூற்றாண்டின் முதலாவது உலகளாவிய பேரிடர். இதற்கு முந்தைய உலகளாவிய நெருக்கடிகள் என இரண்டு உலகப்போர்களும் கணிப்பிடப்படக்கூடியவை. இன்னொரு வகையில் சொல்வதானால் சற்றேறக்குறைய நூறு ஆண்டுகளுக்குள் மூன்று நெருக்கடிகள் உலகளாவிய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. உயிரழிவுகள், பொருளாதார வீழ்ச்சி சார்ந்தவற்றைப் பொதுவான பாதிப்புகளாகச் சுட்டமுடியும். தவிர உலகமயமாக்கலின் தன்மைகள், உலக அமைதிக்குப் பங்கம், நாடுகளுக்கிடையிலான உறவுகளில் இந்நெருக்கடிகள் விளைவுகளை ஏற்படுத்தின. புதிய இயல்பு அல்லது புதிய வழமை கொரோனா நெருக்கடியின் விளைவுகள் உலகளாவிய மாற்றத்திற்குரிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளன.…
-
- 0 replies
- 454 views
-
-
சீனாவிடமிருந்து... விலகிவரும் இலங்கை, இந்தியாவை நெருங்குகிறது! இலங்கைத்தீவானது, சீனாவிடமிருந்து பெற்றுக்கொண்ட கடன்கள் உட்பட வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதில் பாரிய சிரமங்களை அண்மைய நாட்களில் எதிர்கொண்டுள்ளது. இதனால், பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கான உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காக இலங்கை தனது அண்டை நாடான இந்தியாவின் பக்கமாகத் திரும்பியுள்ளது. சீனாவிடமிருந்து பெறப்பட்ட கடன்களை மீளச் செலுத்தும் செயற்பாடுகளில் இலங்கை தோல்விகளைக் கண்டுள்ளதால் ‘கடன் பொறி’ ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. இந்த நிலையில் கடன்பொறியைத் தவிர்ப்பதற்காகவே இந்தியாவை இலங்கை நாடியுள்ளது. இலங்கையானது சீனாவை முழுமையாகச் சார்ந்திர…
-
- 2 replies
- 544 views
-
-
சீனாவின் ‘ஒருபட்டி ஒருவழி’: புதிய பாதையா, புதிய ஒழுங்கா? தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 மே 02 வியாழக்கிழமை, பி.ப. 06:22 Comments - 0 உலக ஒழுங்கு நிரந்தரமானதல்ல; அது வரலாறு நெடுகிலும் மாறிவந்திருக்கிறது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னரான கெடுபிடிக்காலம், என்றென்றும் நிலைக்கவில்லை. அதைத் தொடர்ந்த அமெரிக்க மய்ய ஒற்றை அதிகார உலகும், நீண்டகாலம் நிலைக்கவில்லை. எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு திகதி உண்டு. அதேபோல, காலமாற்றம் புதிய உலக ஒழுங்குகளை உருவாக்கும். பல சமயங்களில், அவ்வாறு எதிர்பார்க்கப்படுபவை, ஒழுங்குகள் ஆவதில்லை. எதிர்பார்க்காதவை, ஒழுங்குகளாக மாறியுள்ளன. அவ்வகையில், உலகளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் முனைப்புகளை அவதானத்துடன் நோக்க வேண்டியுள்…
-
- 0 replies
- 633 views
-
-
சீனாவின் ‘தடுப்பூசி’ இராஜதந்திரம்! சீனாவின் ‘தடுப்பூசி’ இராஜதந்திரம்! – அகிலன் கள ஆய்வு யாழ். மாவட்ட எம்.பி.க்களான எஸ்.சிறிதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்கள் நேரடியாகச் சென்று கள ஆய்வுகளையும் செய்திருந்தார்கள். வடபகுதியில் சீனா கால் பதிப்பதை ஏற்றுக்கொள்வதற்குத் தமிழ் மக்கள் தயராக இருக்கவில்லை என்பதை இந்த அரசியல்வாதிகளும் பிரதிபலித்தார்கள். அதே வேளையில், இதன் மூலம் தமிழ் மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்து, பொருளாதார நலன்கள் அவர்களுக்குக் கிடைக்கும் என்றால் அதனை அனுமதிக்கலாம், ஆனால், இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக்கு உட்படுத்தாமல் அது செயற்பட வேண்டும் என்ற கருத்து கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால் முன்வைக்கப் பட்டிரு…
-
- 9 replies
- 711 views
- 1 follower
-
-
நாம் தொடர்ந்து விடும் தவறு.. ஹிந்தியாவுக்கு வழங்கும் முக்கியத்துவத்தை.. பன்னாட்டு சமூகத்திற்கு வழங்காதது தான். ஹிந்தியா.. ஈழத்தில் தமிழ் மக்களுக்கு.. தனது மாநிலங்களுக்கு உள்ளதை விட குறைவான அதிகாரப் பரவலாக்கத்தையும்.. ஒன்றுபட்ட இலங்கை என்பதையும் வழியுறுத்தி.. ஏலவே தமிழகத்தில் இருந்து வந்த பிரிவினைவாதம் மீண்டும் வலுப்பெறாத வகைக்கு தான் நடந்து கொள்ளும் என்பதை எம்மவர்கள் சரிவர கணிக்கத்தவறி.. ஹிந்தியாவை தாறுமாறாக நம்பி செய்த நகர்வுகள் தான் பன்னாட்டுச் சமூகமும் ஹிந்தியாவை தாண்டி வந்து உதவக் கூடிய சூழலை உருவாக்கி இருக்கவில்லை. இதனை சொறீலங்கா சிங்களம் நன்கு பயன்படுத்திக் கொண்டது. ஆனால்.. இன்று சூழல் சற்று மாறுபாடானது. இன்று விடுதலைப்புலிகளும் இல்லை.. தமிழர்களிடன் ஆயுதப்…
-
- 0 replies
- 520 views
-
-
சீனாவின் அழுத்தமும் மஹிந்தவின் வியூகமும் வெளிநாட்டு முதலீட்டில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் தொடர்பாக, இலங்கை அரசாங்கம் நிலையான கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை சீனா தீவிரமாக வலியுறுத்த ஆரம்பித்துள்ளது. கிட்டத்தட்ட இதனை ஒரு நிபந்தனையாக விதிக்கின்ற அளவுக்கு சீனா சென்றிருப்பதாகத் தெரிகிறது. மூன்று வாரங்களுக்கு முன்னர், கொழும்பில் தெரிவு செய்யப்பட்ட சில ஊடகவியலாளர்களைச் சந்தித்திருந்தார் சீனத் தூதுவர் யி ஷியாங்லியாங். நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் பெயரைக் குறிப்பிட்டு, கடன்களுக்கான வட்டி வீதம் தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட செய்தியாளர் சந்…
-
- 1 reply
- 391 views
-
-
இலங்கையில் சீனாவின் மீள்வருகை தொடர்பான சமிக்ஞைகளுக்கு மத்தியில் இந்தியாவின் செல்வாக்கினை மீள உறுதிப்படுத்தும் நோக்குடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார். 2015 ஜனவரியில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்றபோது, சீனாவுடனான உறவுகள் தளர்த்தப்படுமென உறுதிமொழி வழங்கியிருந்தார். அதற்கு முன்னர் ஜனாதிபதியாக பதவி வகித்தவர், சீனாவிடமிருந்து பாரியளவான நிதி உதவிகளைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. அன்றைய காலப்பகுதியில், இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை இந்திய உறவில் பொன்னான தருணங்களை வரைவதற்கான உறுதிமொழியினை வழங்கியிருந்தார். அதன் பின்னர் இரண்டு வருடங்கள் கழிந்திருக்கும் நிலைய…
-
- 0 replies
- 393 views
-
-
சீனாவின் ஆத்திரமூட்டல் சீனாவின் ஆத்திரமூட்டல் ஆபத்தில் இலங்கை துடித்துக்கொண்டிருக்கும் போதெல்லாம் எவ்விதமான தயவுதாட்சியம் இன்றியும் எதிர்ப்பார்ப்புகள் இன்றியும் ஓடோடி வந்து உதவிக்கரம் நீட்டிய, நீடிக்கொண்டிருக்கின்ற நாடு என்றால் அது இந்தியாதான். அதனால்தான் என்னவோ இந்தியாவை இலங்கையின் “பெரியண்ணா” என்றழைப்பார்கள். பெரியண்ணாவின் உதவிகளை குறைத்து மதிப்பிடமுடியாது. சுனாமி அனர்த்தத்தின் போது பெரும் சேவைகளை ஆற்றியிருந்தது. உதவிகளையும் செய்திருந்தது. அதன்பின்னர் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களின் போதெல்லாம் வியப்படைய செய்யும் வகையில் உதவிகளைச் செய்திருந்தது. கொரோனா வைரஸின் தாக்கம் தங்களுடைய நாட்டில் தாண்டவமாடிக்கொண்டிருந்த நிலையிலும் “அயலுறவுக்கு முதலிடம்” என்றஅடிப்…
-
- 4 replies
- 429 views
- 1 follower
-
-
சீனாவின் இராஜதந்திர விவேகம் Bharati May 22, 2020 சீனாவின் இராஜதந்திர விவேகம்2020-05-22T11:00:07+00:00Breaking news, அரசியல் களம் இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் ‘ த இந்து ‘ பத்திரிகையில் “கொவிட் — 19 வைரஸ் தொற்றுநோய்கக்குப் பின்னரான உலகிற்கு முகங்கொடுக்க சீனா சிறப்பானமுறையில் தயாராகியிருக்கிறது” என்ற தலைப்பில் இவ்வாரம் ஒரு ஆய்வுக்கட்டுரையொன்றை எழுதியிருக்கிறார். கொரோனா வைரஸ் தொற்றுநோயை சீனா கையாண்ட முறை தொடர்பாக, குறிப்பாக கடந்த வருட இறுதியிலும் இவ்வருட முற்பகுதியிலும் கடைப்பிடித்த அணுகுமுறைகள் தொடர்பாக உலக நாடுகளிடமிருந்து – முக்கியமாக அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளிடமிருந்து – வருகின்ற குற்றச்சாட்டுக்கள் தொட…
-
- 0 replies
- 842 views
-
-
சீனாவின் இராணுவ நோக்கத்துக்கு துணை போகின்றது இலங்கை முன்னைய மகிந்த அரசின் தூரநோக்கற்ற செயற்பாடுகள் நாட்டை அந்நியருக்குத் தாரை வார்த்துக் கொடுக்கின்ற நிலையை உருவாக்கிவிட்டது. இதன் காரணமாகவே, சீனா இராணுவ நோக்கங்களுக்காகவே இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்கிறது என்று அமெரிக்காவின் இராணுவத் தலைமையகமான பென்டகன் கூறுகின்ற நிலை உருவாகியுள்ளது. சிறிய நாடுகளுக்கு உதவிகளை வழங்கி அவற்றை வளைத்துப் போடுகின்ற செயற்பாடுகளைச் சீனா முன்னெடுத்து வருகின்றது. பெரும்பாலான ஆசிய நாடுகளில் சீனா இதைத்தான் செய்து கொண்டிருக்கின்றது. படை பலமும், பொருளாதா…
-
- 0 replies
- 548 views
-
-
சீனாவின் இறுக்கமான பிடியில் சிறிலங்காவின் அமைதியான துறைமுகம் சிறிலங்காவின் தெற்கிலுள்ள அம்பாந்தோட்டைத் துறைமுகமானது ஆட்கள் நடமாட்டமில்லாத பாலைவனமாகக் காட்சியளிக்கின்றது. கடந்த மாத நடுப்பகுதியில் ஒரு நாள் பிற்பகல் இதன் வாயிலுள்ள தேநீர்ச் சாலையில் நின்ற போது ஒரு சில வாகனங்களை மட்டுமே காணமுடிந்தது. ‘முன்னர் பிற்பகலில் 10-15 வரையானவர்கள் தேநீர் அருந்துவதற்காக இங்கு வருவது வழக்கம். ஆனால் கடந்த டிசம்பர் மாதம் சிறிலங்கா அரசாங்கத்தால் இத்துறைமுகம் சீனாவிற்கு விற்கப்பட்டதை அடுத்து இங்கு எவரும் வருவதில்லை’ என தேநீர்ச்சாலையின் உரிமையாளரான வில்சன் தெரிவித்தார். இத்தேநீர்ச்சாலையானது சிறிலங்கா, அதாவது சிலோன், பிரித்தானிய கொலனித்துவத்திலிருந்து சுதந்திரமடைவதற்கு…
-
- 1 reply
- 578 views
-
-
சீனாவின் கடன் பொறியில் சிதைந்த ‘கொழும்பு’ புருஜோத்தமன் தங்கமயில் கொழும்புத் துறைமுக நகர ஆணைக்குழுச் சட்டம், கடந்த வாரம் நடைமுறைக்கு வந்தது. தெற்காசியாவின் பிரதான துறைமுகங்களில் ஒன்றான, கொழும்புத் துறைமுகத்தோடு இணைந்த கடற்பகுதிக்குள் மணலை நிரப்பி, புதிய துறைமுக நகர் உருவாக்கப்பட்டு இருக்கின்றது. கொழும்பு மாவட்டத்தின் ஒரு பகுதியாக துறைமுக நகர், கடந்த நல்லாட்சிக் காலத்தில் இணைக்கப்பட்டாலும், அதன் ஆட்சியுரிமை என்பது, துறைமுக நகர ஆணைக்குழுச் சட்டத்தின் ஊடாக, சீனாவிடம் வழங்கப்பட்டு இருக்கின்றது. நாட்டின் இறைமை, ஒருமைப்பாடு பற்றியெல்லாம், தென் இலங்கையில் கடந்த காலங்களில் பேசிக் கொண்டிருந்த தரப்புகள் எல்லாமும், துறைமுக நகர் விடயத்தில் கிட்டத்தட்ட பேச…
-
- 0 replies
- 839 views
-
-
சீனாவின் கடன் பொறியும் குளோபல் கேட்வே திட்டமும் http://www.samakalam.com/wp-content/uploads/2021/10/Nixon-150x150.png–சீனாவின் கடன் பொறிக்குள் இருந்து இலங்கையை மீட்க அமெரிக்க- இந்திய அரசுகளுக்கு முடியுமா இல்லையா என்பதைவிட, இலங்கை எந்தத் திட்டத்தையும் தனக்குச் சாதகமாக்கி ஈழத்தமிழர் விவகாரத்தைச் சர்வதேச அரங்கில் இருந்து முற்காக நீக்கம் செய்வதற்கான சந்தர்ப்பங்களே அதிகரித்து வருகின்றன– -அ.நிக்ஸன்- இலங்கை போன்ற குறைந்த வளர்ச்சியுடைய நாடுகள் சீனாவின் கடன் பொறிக்குள் சிக்குண்டு இருப்பதாக மேற்கத்தைய ஊடகங்கள் விமர்சித்து வரும் நிலையில், அந்தக் கடன் பொறியில் இருந்து இந்த நாடுகளை மீட்கும் நோக்கில், குளோபல் கேட்வே (Global Gatewa…
-
- 1 reply
- 487 views
-
-
இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு 99 ஆண்டுகால குத்தகைக்கு கொடுத்திருக்கும் ஒப்பந்தம் குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென, இலங்கையின் புதிய ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச தெரிவித்த கருத்து, உலகளாவிய விவாதப் பொருளாகியிருக்கிறது. சீன ஆதரவு ராஜபட்ச சகோதரர்கள், சீனாவுக்குப் பிடிக்காத செயல்களில் ஈடுபடவே மாட்டார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், அதிபர் கோத்தபய இந்திய ஊடகத்துக்கு அளித்த பேட்டியின்போது தெரிவித்த இந்தக் கருத்து, சீனாவின் புதிய பட்டுப்பாதை திட்டத்துக்கு எழுந்துள்ள மற்றோர் இடையூறாகப் பார்க்கப்படுகிறது. இலங்கையின் புதிய அதிபராகப் பதவியேற்றதும் கோத்தபய அளித்த பேட்டியில், இந்தியாவின் நலன்களுக்கு எதிரான எந்த நடவடிக்கையிலும் இலங்கை ஒரு…
-
- 0 replies
- 1k views
-
-
சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள் ஆசியா, ஐரோப்பா மற்றும் ஆபிரிக்க நாடுகளில் 8 ட்ரில்லியன் டொலரை கட்டுமானத் திட்டங்களுக்காக முதலீடு செய்யும் சீனாவின் ஒரு அணை மற்றும் ஒரு பாதைத் திட்டமானது மிகவும் உன்னிப்பாக கண்காணிக்கப்படுகிறது. குறிப்பாக இத்திட்டத்தின் ஊடாக சீனா தனது எத்தகைய நோக்கத்தை நிறைவேற்றுகிறது என்பதை அறியவே இவ்வாறான கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. சீனாவின் இத்திட்டம் தொடர்பாக வொசிங்டனைத் தளமாகக் கொண்டியங்கும் ‘பூகோள அபிவிருத்திக்கான மையம்’ ஆய்வொன்றை மேற்கொண்டுள்ளது. இந்த ஆய்வின் பிரகாரம், சீனாவின் ஒரு அணை ஒரு பாதைத் திட்டமானது சிறிய மற்றும் வறிய நாடுகள் மீது பரந்தளவில் கடன் சுமையை உண்டுபண்ணுவதால், இந்த நாடுகளி…
-
- 0 replies
- 398 views
-
-
சீனாவின் கனவை இந்தியா தகர்த்துவிட்டதா? இலங்கைக்குள் தங்களுடைய கால்களை நன்றாக ஊன்றிக்கொள்வதில், அண்டைய நாடான இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் கடுமையான போட்டிகள் நிலவுகின்றன. இவ்விரு நாடுகளிடமும் அரசாங்கங்கள் கடன்களை வாங்கி குவித்துள்ளமையால், அவ்விரு நாடுகளும் முன்வைக்கும் யோசனைகளுக்கு தலையசைக்க வேண்டிய நிர்ப்பந்தமே இலங்கைக்கு ஏற்பட்டுள்ளது. சீனா பெருந்தொகை கடனை கொடுத்திருந்தாலும், அண்டைய நாடான இந்தியா, இலங்கை எப்போதெல்லாம் பாதிக்கின்றதோ, அப்போதெல்லாம் உதவி ஒத்தாசைகளை நல்கி இருக்கின்றது. எதிர்காலங்களிலும் அவ்வாறான உதவிகளை நாம் இந்தியாவிடம் இருந்து எதிர்பார்க்கமுடியும். இதனை உறுதிப்படுத்தும் வகையில்தான், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய…
-
- 2 replies
- 694 views
-
-
தென்புலத்தில் சீனாவின் கரம் ஓங்கும் போது வடபுலத்தில் காணப்படக்கூடிய இந்திய - சீன எல்லையில் கடும் பதற்றம் ஏற்படும். எனவே தான் இலங்கையின் அரசியல் நிலைப்பாடு இந்தியாவுக்கு முக்கியமாகின்றது. அதற்காக குறுக்கீடுகள் தொடர்பான குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. மறுபுறம் கடந்த ஆட்சியில் இடம்பெற்றதைப்போன்று இலங்கையில் மீண்டும் சீனாவின் கரம் மேலோங்குமாக இருந்தால் அதன் தாக்கம் இந்தியாவுக்கு கடுமையாக இருக்கும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழக துணைத்தலைவர் எம்.அப்துல் ரஹுமான் தெரிவித்தார். இலங்கை என்பது இந்தியர்களுக்கு குறிப்பாக தமிழகத்துக்கு மிகவும் நெருக்கமான நாடாகும். அவ்வகையான நெருக்கமான உணர்வுடன் தான் இலங்கை…
-
- 0 replies
- 673 views
-
-
சீனாவின் செல்நெறியில் திபெத்தை விளங்கிக் கொள்ளல் -நரசிம்மன் புனைகதைகளின் மூலம் ஏமாற்றி, காரியங்களைச் சாதிக்கும் முயற்சிகளில் ‘அழுங்குப்பிடி’யாகத் தொடர்வதையே, திபெத்தில் சீனாவின் செல்நெறியாகக் காணப்படுகின்றது. ஆனால், அந்தப்போக்கை எவரும் கேள்விக்கு உட்படுத்தக் கூடாது என்பதிலும் கவனமாகக் காரியமாற்றுகின்றது. திபெத் ஒருபோதும் சீனப்பேரரசின் கீழ் இருந்ததில்லை என்பது, சீனாவுக்குத் தேவையான மறைக்கப்பட வேண்டிய உண்மை என்பதால், எவரையும் நம்பவைக்கும் விதத்திலும் மிக நேர்த்தியாகவும் ஆனால் தந்திரமாகவும் திபெத் குறித்து பல புனைகதைகள் கட்டியெழுப்பப்பட்டு இருக்கின்றன. வரலாற்றுக் காலம் முதற்கொண்டு, ஆதாரபூர்வமான பல உண்மைகள், தான்தோன்றித்தனமான முறையில், மறைத்தழிக்கும் வகையிலேயே இ…
-
- 0 replies
- 343 views
-
-
சீனாவின் நடவடிக்கையால் இந்தியாவுக்கு ஆபத்து இந்திய இராணுவ நடவடிக்கைகளை கண்காணிக்கும் வகையில் இலங்கையினுள் ரேடார் தளத்தை அமைக்க சீனா முன்வந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த செய்தியை சீனா இதுவரையிலும் மறுக்கவில்லை என்பதை நினைவில் கொள்ளவேண்டும். இலங்கையின் தளத்தைத்தையும் கடற்பரப்பையும் தனது செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் வைத்துக்கொள்வதற்கு சீனா முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றமை ஒன்றும் புதிதல்ல. அத்துடன் இது முதல் தடவையும் அல்ல. 2022 ஓகஸ்ட் இல், சீன உளவுக் கப்பலான 'யுவான் வாங்-5' ஹம்பாந்தோட்டையில் நிறுத்தப்பட்டது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஒரு பெரிய இர…
-
- 5 replies
- 883 views
-
-
ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தால், சீன ஆதிக்கத்துக்கு முடிவு கட்டுவோம் என்று கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது, கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்திருந்தார். சீன நிறுவனங்களுடன் தற்போதைய அரசாங்கத்தினால் செய்து கொள்ளப்பட்ட சட்டவிரோத உடன்பாடுகள் அனைத்தும், செல்லுபடியற்றதாக்கப்படும் என்றும், இந்தியாவைப் புறந்தள்ள அனுமதிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டதை சாதாரணமானதொன்றாக எடுத்துக் கொள்ள முடியாது. அதுவும், ஜனாதிபதித் தேர்தலுக்கான முன்னாயத்தங்கள் நடந்து கொண்டிருக்கின்ற சந்தர்ப்பத்தில் இந்தக் கருத்து முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியாவுக்கும் சீனாவுக்…
-
- 0 replies
- 1.2k views
-
-
சீனாவின் நீர்ப்பரப்பும் ஆய்வும் ஆபத்தும் -சுபத்ரா சீனக் கடற்படையின் Qian Weichang என்ற கப்பல் நான்கு நாட்கள் பயணமாக கொழும்புத் துறைமுகத்துக்கு வந்திருந்தது. அண்மையில் கொழும்புத் துறைமுகத்துக்கு வெளிநாட்டுப் போர்க் கப்பல்கள் அடிக்கடி வருவது வழக்கம் என்பதால், சீனப் போர்க்கப்பல் கொழும்புத் துறைமுகம் வந்தது என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. ஆனால் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்து விட்டுச் சென்றது, போர்க்கப்பல் அல்ல. சீன கடற்படையின் கப்பல் என்ற வகையில் அதில், தற்பாதுகாப்புக்கான சில ஆயுத தளபாடங்கள் இருந்தாலும், அது போர்க்கப்பல் அல்ல. அது ஒரு ஆய்வுக் கப்பல். இன்னும் விரிவாகச் ச…
-
- 1 reply
- 1k views
-
-
சுயாதிபத்தியம் கொண்ட அரசு என்ற வகையில் இலங்கை சீனாவுடன் பணியாற்றுவதற்கு சுதந்திரம் இருக்கின்றது என்ற போதிலும் பெய்ஜிங்குடனான இலங்கையின் உறவுகள் இந்தியாவின் பாதுகாப்பு நலன்களைப் பாதிக்குமாக இருந்தால், இந்தியா அதன் செல்வாக்கைப் பிரயோகிக்கும் என்பதை தெளிவாகக்கூறிவிடவேண்டும் என்றும் சீனாவின் நெருக்கமான அரவணைப்புக்குள் ராஜபக்ஷக்கள் மீண்டும் செல்வதற்கு அனுமதித்து இந்தியா தவறிழைத்துவிடக்கூடாது என்றும் இந்தியாவின் முக்கியமான தேசிய ஆங்கிலப் பத்திரிகைகள் ஆசிரிய தலையங்கங்களில் வலியுறுத்தியிருக்கின்றன. இலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ பதவியேற்றதையடுத்து இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான எதிர்கால உறவுமுறைகள் தொடர்பில் இந்துஸ்தான் ரைம்ஸும் டெக்கான் ஹெரால்டும்…
-
- 5 replies
- 906 views
-
-
சீனாவின் பட்டுப்பாதை ஆராய்ச்சியும் இலங்கையும் உலக பொலிஸ்காரன் என அமெரிக்காவை கூறுகின்றனர். ஆனால் ஆசிய பொலிஸ்காரனாகும் சகல தகுதிகளையும் இப்போது வளர்த்துக்கொண்டுள்ளது சீனா. பொருளாதாரம் ,அரசியல்,தொழில்நுட்பம் என சீனாவின் ஒவ்வொரு நகர்வுகளும் எதிர்கால திட்டமிடல்களும் அமெரிக்காவையே சிந்திக்க வைத்துள்ளது. அண்மைக்காலமாக சீனாவானது வரலாற்று ரீதியாக பல அம்சங்களை நோக்கிய தனது நகர்வை ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் தனது தரை மற்றும் கடல் எல்லைகளை அது மீள்பரிசீலனை செய்யப்போகின்றதோ தெரியவில்லை. எனினும் பண்டைய காலத்தில் வணிகத்தேவைகளுக்காக கடல் மற்றும் தரைப்போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்ட பட்டுப்பாதை தொடர்பில் முதன் முறையாக வாய் திறந்திருக்கிறது சீனா. இது தொடர்பான தனது ஆ…
-
- 0 replies
- 1.6k views
-
-
சீனாவின் பட்டுப்பாதை திட்டம்: தேச எல்லைகளை கடந்த பெருங்கனவின் வரலாறு படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionபட்டுப்பாதை புதிய பட்டுப்பாதை திட்டம் எனும் சீனாவின் கனவுத் திட்டத்தில் இத்தாலியும் இணைந்திருக்கிறது. சீன அதிபர் ஜின்பிங்கின் ரோம் பயணத்தின் போது 2.8 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான 29 ஒப்பந்தத்தில் இத்தாலி மற்றும் சீன தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ஆனால், அதே நேரம் இத்தாலியின் இந்த முடிவானது அதன் மேற்கத்திய கூட்டாளி நாடுகளை கவலையுற செய்துள்ளது. சீனாவின் புதிய பட்டுப்பாதை திட்டத்தில் இணையும் முதல் வளர்ந்த மேற்கத்திய நாடு இத்தாலி. இந்த சூழலில் புதிய பட்டுப்பாதை திட்டம், அது பிறந்த கதை ஆகியவற்றை குறித்து விரிவாக காண்போம். பட்டுப்பா…
-
- 1 reply
- 1.1k views
-