அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
கரும்புள்ளித் தடம் – பி.மாணிக்கவாசகம்… முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு ஒரு விவகாரமாகவே மாறியிருப்பது வருந்தத் தக்கது. தமிழ் இனத்தின் அரசியல் உரிமைப் போராட்ட வரலாற்றில் முள்ளிவாய்க்கால் அவலம் என்பது, மிகமோசமான துன்பியல் சம்பவமாகப் பதிவாகியிருக்கின்றது. பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட அந்தத் துன்பியல் நிகழ்வை நினைவுகூர்வதில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளும் ஏட்டிக்குப் போட்டியான நிலைப்பாடுகளும்கூட முள்ளிவாய்க்கால் சோக நிகழ்வின் நினைவுகூரல் வரலாற்றில் ஒரு கரும் புள்ளியாக இடம் பெற்றிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில், முல்லைத்தீவு மாவட்டத்தின் குறுகியதொரு நிலப்பரப்பில் பொதுமக்களையும் விடுதலைப்புலிகள…
-
- 0 replies
- 582 views
-
-
வாள்வெட்டு வீரரும் வாய்ச்சொல் வீரரும் வடக்கில் வாள்வெட்டுகள், வன்முறைகள், குற்றச் செயல்கள் அதிகரிக்கும் போதெல்லாம், மாகாணசபைக்குப் பொலிஸ் அதிகாரம் பற்றியும் விழிப்புக் குழுக்கள் பற்றியும் பேசப்படுவது வழக்கம். பொலிஸ் தரப்பு, சட்டத்தைச் சரியாக நடைமுறைப்படுத்துவதில்லை; அரசாங்கம், சட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்பதில்லை என்றெல்லாம், விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், வன்முறைகளும், குற்றங்களும் ஒரு சுழற்சியான விடயங்களாக, நடந்து கொண்டுதான் இருக்கின்றன. வாள்வெட்டுகள் போன்ற வன்முறைகள், திடீரென மெலெழும்பும் போது, மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்படுவதும், அது எதிர்ப்புணர்வை ஏற்படுத்தும் போது, அரசாங்கம் அதை அடக்க பொலிஸார…
-
- 0 replies
- 461 views
-
-
போர் வரலாறு நடுநிலையாக ஆவணப்படுத்தப்படுமா? அரசாங்கப் படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையிலான போரில், அரசாங்கப் படைகள் வெற்றி பெற்றதில், அந்த வெற்றியின் போது, நாட்டை ஆட்சி புரிந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பங்கு என்ன? அவர், அந்த வெற்றிக்காகத் தாமாக எந்த முடிவையாவது எடுத்துள்ளாரா? தனிப்பட்ட முறையில் எந்தச் சண்டையிலாவது ஈடுபட்டுள்ளாரா? ஆனால், ஏதோ துட்டகைமுனு, எல்லாளனை நேரில் சந்தித்து, தனிப்பட்ட முறையில் சண்டையிட்டு, வெற்றி கண்டதைப் போல், தானும், பிரபாகரனை நேரில் சந்தித்து, சண்டையிட்டு வெற்றி கண்டதாக, போர் வெற்றியின் முழுப் பெருமையையும் கொள்ளையடித்துக் கொண்டு இருக்கிறார் முன்னாள் ஜனாதிபதி ம…
-
- 1 reply
- 828 views
-
-
தெஹ்ரான் உடன்படிக்கை - ஜனகன் முத்துக்குமார் துருக்கி, ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகளின் ஜனாதிபதிகள், முத்தரப்பு உச்சிமாநாடொன்றை, இம்மாதம் 7ஆம் திகதியன்று, தெஹ்ரானில் நடத்தினர். பல பார்வையாளர்களின் கருத்துப்படி, உச்சிமாநாட்டின் முடிவுகள், சிரியாவின் வடமேற்கில் உள்ள இட்லிப் நகரின் விதியை, குறிப்பாக போராளிக் குழுக்களைத் தகர்த்தல் தொடர்பாகத் தீர்மானிக்க ஏதுவாய் இருந்தது எனக் கருதப்படுகின்றது. இது டமாஸ்கஸ் தொடர்பில் இந்நாடுகள் மேற்கொண்ட கலந்துரையாடல்கள், அதனைத் தொடர்ந்து டமாஸ்கஸிலிருந்து ஆயுததாரிகள் வெளியேற்றப்பட்டமையைத் தொடர்ந்தே, இட்லிப் நகர் தொடர்பான மாநாடு நடைபெற்றுள்ளது. 2017இல் இருந்து, ரஷ்யாவுக்கும் ஈர…
-
- 0 replies
- 473 views
-
-
விக்னேஸ்வரன் இன்னொரு கஜேந்திரகுமாரா? October 4, 2018 பரசுராம் இது அறிக்கைப் போர் காலம். தேர்தல் இன்னும் நெருக்கவில்லையென்பதால், மேடையில் ஏறி பேசாமல், அலுவலகங்களில் இருந்து அறிக்கைகளை தட்டிவிட்டு, பரபரப்பை ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள் அரசியல் கட்சியினர். தமிழ் தேசிய கூட்டமைப்பு, முதலமைச்சர் தரப்பு, ஈ.பி.டி.பி, வடக்கு எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா ஆகிய தரப்பினர் இந்த அறிக்கைப் போரில் முன்வரிசையில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். பொதுவாகவே பேஸ்புக், அறிக்கை விவகாரங்களில் பிய்த்து உதறும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி காரர்கள், இந்த விடயத்தில் திடீரென இவர்களின் விஸ்பரூபத்தை பார்த்து மிரண்டு விட்டார்கள் போல தெரிகிறது. ஆயினும், முதலமைச்சர்தான் இதில் ஒரு அடி முன்னால்…
-
- 0 replies
- 509 views
-
-
தமிழர்களை ஜக்கியப்படுத்திய வன்னி வெள்ளம்- நிலாந்தன் December 30, 2018 வன்னி வெள்ளம் தமிழ் மக்களை ஒன்றுபடுத்தியிருப்பதாக தெரிகிறது. சில கிழமைகளுக்கு முன் காஜாப் புயல் வடக்கையும் தாக்கியது. ஆனால் பெரியளவு சேதம் ஏற்படவில்லை. புயல் வரப்போவதையிட்டு துறைசார் அரச திணைக்களங்கள் முன் கூட்டியே எச்சரித்திருந்தன. முகநூலில் யாழ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஒரு புவியியல் விரிவுரையாளர் தொடர்ச்சியாகத் தகவல்களை வழங்கிக்கொண்டிருந்தார். இது தவிர தன்னார்வ அமைப்புக்களும் தனிநபர்களுமாக பெரும்பாலான முகநூல் உலாவிகள் புயலையிட்டு எச்சரித்துக் கொண்டிருந்தார்கள்;. அவ் எச்சரிக்கைகள் அளவுக்கு மிஞ்சிப் போய்விட்டன என்றும் ஒரு விமர்சனம் எழுந்தது. அனாவசியமாகச் சனங்களைப் பீதிக்குள்ளாக…
-
- 0 replies
- 630 views
-
-
தமிழ் மக்கள் உறுதியான முடிவெடுக்க வேண்டிய நேரமிது | அரசியல் களம் | ஆய்வாளர் அருஸ்
-
- 1 reply
- 432 views
-
-
தமிழ்த் தேசியமும் தமிழரசுக் கட்சியின் தலைமையும் லக்ஸ்மன் தமிழ்த் தேசிய அரசியலானது தமிழர்களுடைய அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காகவேயன்றி, ஒரு அரசியல் கட்சியின், தனிப்பட்ட அரசியல்வாதிகளின் நலன் பேணுவதற்கானல்ல என்பதுடன் அவ்வாறானதாக இருக்கக்கூடாது என்பது அடிப்படை. தேர்தல்கள் வரும்போதும் ஆண்டுகள் பிறக்கும்போதும் வாக்குறுதிகள் பறக்க விடப்படுவதும் உறுதிகள் வழங்கப்படுவதும் தேசிய அரசியலிலும், தமிழர்களுடைய அரசியலிலும் புதிய விடயமல்ல. ஆனாலும், இந்த 2024இல் தமிழர்களின் அரசியல் விடுதலைக்கான சுயநிர்ணய போராட்டத்திற்குச் சிறப்பானதொரு முடிவினை தருகின்ற ஆண்டாக இருக்கவேண்டும் என்று மாத்திரமே எதிர்பார்க்க முடிகிறது. ஏனெனில் எதிர்பார்ப்புகளுடனேயே வருடங்களைக் கடக்க வேண்…
-
-
- 39 replies
- 3.7k views
- 1 follower
-
-
தேசிய அரசாங்கம் தேவையா? முகம்மது தம்பி மரைக்கார் / 2019 பெப்ரவரி 05 செவ்வாய்க்கிழமை, மு.ப. 01:32Comments - 0 Views - 0 தேசிய அரசாங்கமொன்று நாட்டில் இருந்தது. அதற்கு ‘நல்லாட்சி அரசாங்கம்’ என்று பெயர் வைத்திருந்தார்கள். ஆனால், கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதியுடன், தேசிய அரசாங்கம் இல்லாமல் போய்விட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் உருவான மோதல், தேசிய அரசாங்கத்தை இல்லாமலாக்கியது. இப்போது ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. தனிக் கட்சி அல்லது அணியொன்று அமைக்கும் ஆட்சியில், ஜனாதிபதி உள்ளடங்கலாக அமைச்சர்களின் எண்ணிக்கை 30ஐத் தாண்ட…
-
- 0 replies
- 694 views
-
-
Published By: DIGITAL DESK 3 27 FEB, 2024 | 04:00 PM நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் வாழைச்சேனை என்றதும் அங்கு அமைந்துள்ள கடதாசி தொழிற்சாலை தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். என்றாலும் 1990 களில் இத்தொழிற்சாலை மூடப்பட்டதோடு அந்நினைவு பெரும்பாலானவர்களின் மனங்களில் இருந்து நீங்கிவிட்டது. 1947 இல் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் கைத்தொழில் அமைச்சராக ஜோர்ஜ் ஈ.டி.சில்வா பதவி வகித்தார். அப்பதவி 1948 இல் ஜி.ஜி பொன்னம்பலத்திற்கு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1951 இல் வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலைக்கு பொன்னம்பலம் அடிக்கல் நாட்டினார். ஜேர்மன் நாட்டின் உதவித் திட்டத்தின் கீழ் இத்தொழிற்சாலை அமைக்கப்பட்டது. என்றாலும் 1952 இல் நடைபெற்ற…
-
- 0 replies
- 608 views
- 1 follower
-
-
இலங்கையின் அரசியல் அரங்கு களை கட்டிவிட்டது. அரங்காடிகள் எந்த அரங்கில் இணைந்து ஆடி, நடித்து மக்களைக் கவருவதென்பது இம்மாத மத்தியில் தெரிந்துவிடும். ஜனநாயகம் என்ற பெயரில் நடைபெறும் அரசியல் இன்று வியாபாரமாக மட்டுமல்ல விபசாரமாகவும் காணப்படுவதாக உய்த்துணர்ந்தோர் கூறுகின்றனர். அந்த அளவு அரசியலரங்கு அசிங்கப்பட்டுள்ளது. நேற்றுவரை நீ யாரோ, நான் யாரோ என்றிருந்தவர்கள் பதவிகளைப் பெற ஒட்டியுறவாடவும் இணைந்து அரங்காடவும் கட்டியணைக்கவும் தயங்காத நிலையைக் காணலாம் . பொதுமக்களை, வாக்காளர்களை எப்படியாவது ஏமாற்றி தமக்குச் சார்பாக புள்ளடியைப் பெற்று அதன் மூலம் பதவிகளைப் பெற்று வளம் பெற்று வாழ எத்தனிப்போரை அரசியல்வாதிகள் என்கின்றோம். இவர்கள் இணைந்த கூட்டை அரசியல் கட்சிகளென்கின்றோம். கடந்தகால அ…
-
- 0 replies
- 171 views
-
-
இஸ்லாமியப் பயங்கரவாதமும் - பகுத்தறிவற்ற இஸ்லாமிய சிந்தனைமுறையும் 290 க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்று, இலங்கையில் இஸ்லாமிய மதவெறியாட்டத்தை நடத்தியிருக்கின்றது இப் பயங்கரவாதம். இது தனிப்பட்ட மனிதனின் மதச் சுதந்திரத்திற்கு அப்பாற்பட்ட, மனித வெறுப்புகளை அடிப்படையாகக் கொண்டு, ஒருங்கிணைக்கப்பட்ட மதப் பயங்கரவாதமாகும். பெரும்பான்மை இஸ்லாம் மக்களின் மதவழிபாட்டுக்கு முரணானதும் கூட. இருந்த போதும் பயங்கரவாத வழிமுறை, இஸ்லாம் மார்க்கம் என்று கூறிக்கொள்ளும் ஒரு பிரச்சாரத்தின் பின்னணியில் வைத்து அணுகவேண்டியது அவசியமாக இருக்கின்றது. இந்த தற்கொலை தாக்குதலானது இஸ்லாமிய பயங்கரவாதத்தின் பின்னணியில், இலங்கை மற்றும் அன்னிய நாட்டைச் சேர்ந்த மதவெறிக் கும்பலொன்றினால் திட்டமிட்டு நடத…
-
- 0 replies
- 1.4k views
-
-
தமிழ் மக்கள்பொதுச்சபை - நிலாந்தன் “கொள்கை அடித்தளம் இல்லாமல் கட்சிகளை ஒருங்கிணைப்பது தற்காலிகமானது செயற்கையானது என்று சுயாதீனக் குழு நம்புகிறது. தலைவர்களையும் வாக்காளர்களையும் நீண்டகால நோக்கில் பண்படுத்தி வளர்த்தெடுக்க வேண்டும் என்ற அவசியத்தையும் சமூகப் பொறுப்பையும் சுயாதீனக் குழு ஏற்றுக்கொள்கிறது. தமிழ் அரசியலில் சிவில் சமூகங்கள் தலையிடுவது என்பது தமிழ் ஜனநாயகத்தை மேலும் செழிப்பாக்கும். இனிவரும் காலங்களில் தமிழ் அரசியலின் மீதும் கட்சிகளின் மீதும் அதிகரித்த தார்மீகத் தலையீட்டைச் செய்வதற்கு தேவையான வளர்ச்சியைத் தமிழ் சிவில் சமூகங்கள் பெற்றுக் கொள்ளவேண்டும்”. …
-
- 0 replies
- 379 views
-
-
விதுர பிரபாத் முணசிங்க – கௌஷல்யா ஆரியரத்ன முன்னுரை நாம் இன்னும் 2019 ஏப்ரல் 21ஆம் திகதி இந்நாட்டில் இடம்பெற்ற மிலேச்சத்தனமான தற்கொலைக்குண்டுத் தாக்குதல்களின் அதிர்ச்சியில் இருக்கின்றோம்.3 மனிதர்கள் என்ற வகையில் அழிவுகளின்போது உணர்ச்சிவசப்படுவது இயல்பானதொரு விடயமாக இருக்கின்றபோதிலும், அந்த உணர்வுகளின் அடிப்படையில் எடுக்கப்படுகின்ற உடனடி எதிர்ச்செயற்பாடுகள் எமக்குப் பெற்றுக்கொடுத்திருப்பது நன்மையான பெறுபேறுகள் அல்ல என்பதற்கு எமது அண்மைக்கால வரலாறு சான்று பகர்கின்றது. சிவில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னரான பத்தாண்டுகள், 1983 இல் என்ன நடந்தது என்பதை நாம் மறந்துவி…
-
- 0 replies
- 837 views
-
-
தமிழ் - முஸ்லிம் இனவுறவு: பிள்ளையை கிள்ளிவிட்டுத் தொட்டிலை ஆட்டும் அரசியல் மொஹமட் பாதுஷா / 2019 ஓகஸ்ட் 11 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 05:56 Comments - 0 இனங்களுக்கு இடையிலான உறவு பற்றி, ஒவ்வொரு பருவகாலத்திலும் பேசப்படுகின்றது. குறிப்பாக, தமிழ்பேசும் சூழலில், தமிழர் - முஸ்லிம்களுக்கு இடையிலான உறவு பற்றிய கருத்தாடல்கள், தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருவதைக் காணக் கூடியதாக இருக்கின்றது. உண்மையில், பெரும்பாலான சாதாரண, அடிமட்டத் தமிழ், முஸ்லிம் மக்களிடையே, சொல்லிக் கொள்ளும்படியாக எந்தவித இனமுறுகலும் குரோதமும் கிடையாது. இவ்வாறிருக்கையில், அரசியல், மார்க்கம், இயக்கம் ஆகிய பின்னணிகளைக் கொண்ட, இனக் குழுமத்தினரிடையே, மேலும் இனவுறவைப் பலப்படுத்துவதற்கா…
-
- 0 replies
- 822 views
-
-
நல்லாட்சி கட்டுகதைகள்: வடக்கு, கிழக்கிற்கு 65,000 உலோக வீடுகள் படம் | Global Education வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடுத்த நான்கு வருடங்களில் 65 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்கு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சு பல்வேறு ஒப்பந்தக்காரர்களிடம் இருந்தும் 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதி பகுதியில் விலைகோரல்களை கேட்டிருந்தது. சிவில் சமூக அமைப்புகளினால் விடுக்கப்பட்ட அறிக்கையொன்று (ஆங்கிலம், சிங்களம் அல்லது தமிழில் இங்கு கிடைக்கும்) இந்தத் திட்டம் பற்றி முக்கிய கரிசனைகளை எழுப்புகின்றபோதிலும், கருத்தில் கொள்ளப்பட வேண்டிய சில மேலதிக விடயங்களும் அங்கு உள்ளன. மாகாண அல்லது மாவட்ட அதிகாரிகளினால் அதிக அற…
-
- 0 replies
- 445 views
-
-
கீனி மீனி: இலங்கையில் பிரித்தானிய கூலிப்படைகள் உண்மை வலியது; அதலபாதாளத்தில் ஒளித்து வைத்தாலும், உண்மை ஒருநாள் வௌிவந்தே தீரும். உண்மைகள் வெளியாகிற போது, பலவித உணர்வுகளை அது ஏற்படுத்தும். சங்கடம், துரோகம், வேதனை, அதிர்ச்சி போன்றவற்றை, வெளிக்கொணரப்பட்ட உண்மை உருவாக்கிவிடும். இது, உண்மையின் வலிமையையும் ஆழத்தையும் முக்கியத்துவத்தையும் எமக்குப் புரிய வைக்கின்றன. பெரும்பாலும், நீண்ட முயற்சியின் பின்னர் வெளிவரும் உண்மைகளை ஏற்றுக்கொள்ள, ‘பொதுப்புத்தி’ மனநிலை தயாராக இருப்பதில்லை. “இப்படி நடந்திருக்காது” என்ற ஆறுதலுடன், அப்பால் கடந்து போகிறோம். உண்மைகள் கொடியன; அவை, எமது நம்பிக்கைகளில் தீ வைப்பன; எதிர்பார்ப்புகளில் கல்லெறிவன. ‘கீனி மீனி’ என்ற தலைப்ப…
-
- 6 replies
- 1.5k views
-
-
எதிர்க்கட்சிகளின் பலவீனமும் அரசாங்கத்தின் அணுகுமுறையும்! *தமிழ்த்தேசியக் கட்சிகளை தவிர்த்து, தமிழர் தரப்பில் வேறு பிரதிநிதிகளுடன் பேசும் திட்டம் வகுக்கப்படுகிறதா? *எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு போராட்டம் பிசுபிசுத்தால், அநுரவின் நகர்வு மேலோங்கும் *ரணில் – மகிந்த ஊழல் - மக்கள் போராட்ட முன்னணியின் கருத்து நியாயமானது... ------ ----- அநுர அரசாங்கத்துக்கு எதிராக கருத்திட்டு வரும் பிரதான எதிர்க்கட்சிகள் பலவீனம் அடைந்துள்ளன. எதிர்வரும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி கொழும்பு நுகேகொடை நகரில் நடைபெறவுள்ளது. இந்த எதிர்ப்பு போராட்டத்தில் சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி பங்கெடுக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா அறிவித்திருந்தார். அதேபோன்று -- மக்கள் போராட்ட முன்னணியும் …
-
- 0 replies
- 140 views
- 1 follower
-
-
ராஜபக்சேக்களின் கோர தாண்டவங்களின், வெளியே தெரிந்த கதாநாயகன் கோத்தாவாயின், அவர் வலதுகரமாக இருந்து சகல அட்டகாசங்களையும் நடத்திய ரகசிய கதாநாயகர்கள் இருவர். ஒருவர் வாஸ் குணவர்த்தன, அடுத்தவர் அனுர சேனநாயக்க. இருவருமே உயர் போலிஸ் அதிகாரிகள். கப்பம், வெள்ளை வான் கடத்தல், கொலை போன்ற பல விடயங்களில் கோத்தவின் உத்தரவுகளை செயல் படுத்த எந்தவித ஈவு இரக்கம் இன்றி செயல் பட்டவர்கள் இவர்கள். இலக்கம் இல்லா கார்கள், போலிஸ் படையில், இவர்கள் சொன்னதை மறு பேச்சு இன்றி செய்து முடிக்கும் ஒரு குழுவை தெரிந்து அவர்களுக்கு சர்வ அதிகாரங்களும், பணமும் தந்து தமது சகல சமூக விரோத செயல்களையும் செய்து உள்ளார்கள். போலீசாருக்கான அதிகாரத்தினை தவறாக பயன்படுத்தும் இவர்கள் மீது, தவறி நடவடிக்கை …
-
- 2 replies
- 732 views
-
-
ஈழத் தமிழர் இனப்படுகொலை... தமிழகம் மற்றும் இலங்கை தேர்தல் அரசியலில் ஏற்படுத்திய தாக்கங்கள் என்னென்ன? முள்ளிவாய்க்கால் படுகொலை நிகழ்ந்து, 11 ஆண்டுகள் நிறைவடையும் இந்த நாளில், தமிழ் இன அழிப்பு, தமிழக தேர்தல் அரசியல் களத்தில் ஏற்படுத்திய தாக்கம் என்ன என்பது குறித்து விரிவாக அலசுகிறது இந்தக் கட்டுரை. 2006-2011... தமிழகத்தின் ஆட்சிக் கட்டிலில் இருந்தது தி.மு.க. முதல்வராக இருந்தவர் கருணாநிதி. சகல துறைகளிலும், அவரின் அமைச்சர்களும், குடும்ப உறுப்பினர்களும் கோலோச்சிக் கொண்டிருந்த காலகட்டம் அது. ஆட்சி அராஜகத்தின் உச்சத்தை தமிழக மக்கள் உணர்ந்த காலகட்டமும் அதுதான். 2004 தேர்தலில், காங்கிரஸ், பா.ம.க, ம.தி.மு.க, இரண்டு கம்யூ…
-
- 0 replies
- 739 views
-
-
இலங்கை, மொரீஷியஸ் தலைவர்களுடனான மோடியின் இன்றைய தொலைபேசி உரையாடல்கள் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தவை? Rajeevan Arasaratnam May 23, 2020 இலங்கை, மொரீஷியஸ் தலைவர்களுடனான மோடியின் இன்றைய தொலைபேசி உரையாடல்கள் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தவை?2020-05-23T22:24:40+00:00Breaking news, அரசியல் களம் நியுஸ் 18 இந்திய பிரதமர் இன்று இரு முக்கியத்துவம் வாய்ந்த தொலைபேசி உரையாடல்களை மேற்கொண்டார். ஒன்று இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவுடன் மற்றையது மொரீஷியஸ் சகாவுடனானது. இரண்டும் இந்து சமுத்திர தீவுகள்,இதனை விட முக்கியமாக இரு தீவுகளுடனும் சீனா மேற்கொண்டுள்ளதுடன் இந்த தீவுகளில் சீனா தனது காலடிகளை தீவிரமாக பதித்து வருகின்றது. ஜனாதிபதி ர…
-
- 1 reply
- 435 views
-
-
சிங்களப் பெருந்தேசியவாத எழுச்சியில் துரோகியானார் தியாகி -இலட்சுமணன் சிங்களப் பெருந்தேசியவாத எழுச்சியில், சிங்களத் தேசியவாதத் தேசப்பற்று சுருண்டு போயுள்ளது. தேசிய எழுச்சியும் தேசியச் சிந்தனையும் தமிழ் மக்களுக்கு மாத்திரம் அல்ல; அது சிங்கள மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும், உலகில் வாழும் மனித இனக்குழுக்களுக்கும் இயல்பாய் உள்ள உணர்வாகும். அந்த வகையில், இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்பே, இந்தச் சிங்களத் தேசியவாதத் தேசப்பற்றுச் சிந்தனையால், கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டனர். ஆங்கிலேயரின் வெளியேற்றமும் இலங்கையின் சுதந்திரப் பிரகடனமும் இந்நிலைமைகளை மாற்றி அமைத்ததோடு மாத்திரமல்லாமல், இலங்கைத்தீவில் இரண்டாவது பெரும்பான்மை இனமாக இருந்த தமிழ் பேசும்…
-
- 1 reply
- 671 views
-
-
தமிழ் மக்கள் - யார் யாரை வெல்ல வைப்பார்கள்? நிலாந்தன்… July 25, 2020 யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் உங்களுக்கு எத்தனை ஆசனங்கள் கிடைக்கும் ? என்று எந்த கட்சியைக் கேட்டாலும் அவர்கள் கண்ணை மூடிக்கொண்டு கூறுகிறார்கள் குறைந்தது மூன்று ஆசனங்கள் என்று. கட்சிகள் மட்டுமல்ல சுயேட்சை குழுக்களும் அப்படித்தான் நம்புவதாகத் தெரிகிறது. உழைக்கும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பட்டம் சுயேட்சைக் குழு தனக்கு 3 ஆசனங்கள் கிடைக்கும் என்று கூறுகிறது. கிளிநொச்சியில் சந்திரகுமாரின் ஆதரவாளர்களும் அங்கே ஒரு மாற்றம் ஏற்படும் என்று முகநூலில் எழுதுகிறார்கள். ஐந்கரநேசனும் தான் வெல்ல முடியும் என்று நம்புகிறார். ஒரு கூர்மையான அவதானி பகிடியாகச் சொன்னார் “இப்படியே எல்லா …
-
- 1 reply
- 1.1k views
-
-
Wednesday, January 16, 2013 ஒபாமாவும் சித்திரவதையும் Obama and torture ஒபாமா நிர்வாகம் அதன் தாராளவாத மற்றும் “இடது” ஆதரவாளர்களின் முற்போக்கான நடவடிக்கைகளுக்கான சாத்தியப்பாடுகள் பற்றிய ஊகங்களுடன் தன் இரண்டாம் பதவிக்காலத்தினை ஆரம்பிக்க தயாரிக்கையில், மீண்டும் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி தனக்கு முன் பதவியில் இருந்தவருடைய குற்றங்களைத் தொடர்வதுடன் தீவிரப்படுத்துவதையும் நிகழ்வுகள் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. முதல் நான்கு ஆண்டுகள் பதவிக்காலத்தில் ஒபாமாவும் அவருடைய தலைமை அரசாங்க வழக்குத்தொடுனருமான எரிக் ஹோல்டரும் “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்ற பெயரில் CIA ஆல் நடாத்தப்பட்ட சித்திரவதை மற்றும் பிற குற்றங்கள் நடத்தப்பட்டவற்றை குறித்த அனைத்து விசாரணைகளையும்…
-
- 0 replies
- 474 views
-
-
அ.நிக்ஸன் மூத்த பத்திரிகையாளர் (இந்தக் கட்டுரையில் இடம் பெற்றிருப்பவை கட்டுரையாளரின் சொந்த கருத்துகள். இவை பிபிசி தமிழின் கருத்துகள் அல்ல - ஆசிரியர். ) இலங்கையில் பண்டாரநாயகாவின் தனிச்சிங்களச் சட்டத்தின் விளைவுகளையும் முப்பது வருடப் போரையும் இறுதியாக 2009இல் முள்ளிவாய்க்கால் அவலங்களையும் எதிர்கொண்ட தமிழ் மக்களுக்குக் கோட்டாபயவின் ஒரேநாடு ஒரு சட்டம் என்ற வாசகம் அச்சத்தை ஏற்படுத்துமென்றில்லை. ஆனால் இந்த விவகாரத்தை வடக்குக் கிழக்கு, மலையகத் தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றனர்? ஒரேநாடு ஒரு சட்டம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடாளுமன்ற முதல் அமர்வில் நிகழ…
-
- 0 replies
- 397 views
-