அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
மத்தள விடயத்தில் இழுத்தடிக்கிறதா இந்தியா? “இந்திய நிறுவனத்துடன் இணைந்து, மத்தல விமான நிலையத்தை இயக்க முடியும் என்று நம்புகிறோம்; எனவே. எல்லாவற்றையும் சீனா தான் மேற்கொள்ளுகிறது என்று யாரும் இனிமேல் குற்றம்சாட்ட முடியாது” என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் கூறியிருந்தார். அவரது இந்தக் கருத்து, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகளைச் சமநிலையில் வைத்திருப்பதற்காக, இலங்கை அரசாங்கம் நடத்தி வருகின்ற போராட்டத்தை வெளிப்படுத்துவதாக இருந்தது. ஹம்பாந்தோட்டை துறைமுகம், சீனாவின் கைகளுக்குச் சென்றதை இந்தியா விரும்பவில்லை. அது தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று இந்தியா கருதுகிறது. இத்தகைய …
-
- 1 reply
- 594 views
-
-
மாடறுப்பு விவகாரம்: ஜீவகாருண்யம்? ஒவ்வொரு வருடத்திலும் ஒரு குறிப்பிட்ட பருவகாலத்தில் மாடறுப்பு தொடர்பான பிரச்சினை பெரும் பேசுபொருளாகி விடுகின்றது. குறிப்பாக, முஸ்லிம்கள் ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாட எத்தனிக்கின்ற காலப்பகுதியில், மாடுகள் சார்ந்த அரசியலொன்று சூடு பிடிக்கத் தொடங்கி விடுவதைக் காண்கின்றோம். மாடறுப்பு தொடர்பாக, முஸ்லிம்களின் பக்கத்தில் சில தவறுகள் இருப்பதை மறுப்பதற்கில்லை. என்றாலும், மாடறுப்பு தொடர்பாகக் குரல் எழுப்புகின்ற செயற்பாட்டாளர்களும் அமைப்புகளும் வேறு ஒரு நிகழ்ச்சிநிரலின் ஊடாகத் தமக்கு அளிக்கப்பட்ட வேலையைச் செய்வதாகவே எண்ணத் தோன்றுகின்றது. இலங்கையில் மாடுகளுக்காகவும் நா…
-
- 0 replies
- 732 views
-
-
சூடான் உள்நாட்டுப் போர் – பின்னணியில் ரஷ்யாவின் மேலாதிக்க நோக்கம்! ஆப்பிரிக்க கண்டத்தின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது, சூடான். 3.95 கோடி மக்கள்தொகை கொண்ட நாடு. 65 சதவிகித பேர் வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கின்றனர். பெரும்பான்மையான மக்கள் இஸ்லாம் மதத்தை பின்பற்றுகின்றனர். தங்கம், குரோமியம், இரும்பு போன்ற கனிம வளங்கள் நிறைந்து காணப்படுகிறது. அமெரிக்கா, ரஷ்யா போன்ற ஏகாதிபத்திய நாடுகள் அவற்றை போட்டி போட்டுக்கொண்டு கொள்ளையடிக்கின்றன. கடந்த சில வாரங்களாக, சூடான் நாட்டில் ராணுவத்திற்கும் விரைவு ஆதரவுப் படைகள் (Rapid Support Forces – ஆர்.எஸ்.எப்) எனப்படும் துணை ராணுவத்திற்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதன் விளைவாக, கிட்டதட்ட 7 லட…
-
- 1 reply
- 528 views
-
-
நாயும் வண்ணத்துப்பூச்சியும் மூக்கின் மேல் பூசப்பட்ட மலத்தை முகர்ந்து பார்க்கும் மக்களும் - நிலாந்தன் November 11, 2018 மங்கள சமரவீர மைத்திரியை ‘நாயே…..’ என்று திட்டினார். மைத்திரி மங்களவினால்தான் ரணில் இயக்கப்படுகிறார் என்ற தொனிப்பட ‘வண்ணத்திப் பூச்சிகளின் அணியென்று’ அவர்களை விமர்சித்தார். வண்ணாத்திப் பூச்சிகள் என்பது தன்னினச் சேர்க்கையாளர்களைக் குறிக்கும். அதற்கு மங்கள சமரவீர தான் மைத்திரியைப் போல ‘ஒர் அட்டையல்ல’ என்று கூறியுள்ளார். பாம்புடன் இருப்பதைவிட வண்ணாத்துப்பூச்சியுடன் இருப்பதே சிறந்தது என நாடாளுமன்ற உறுப்பினர்; சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கடந்த 5ம் திகதி சுமார் இருபத்தையாயிரம் பேர் கூடியிருந்த ஒரு பொதுக்கூட்டத்தில் வைத்தே மைத…
-
- 0 replies
- 459 views
-
-
-
- 1 reply
- 775 views
-
-
தமிழ் - முஸ்லிம் உறவு: பிட்டும் தேங்காய்ப்பூவும் மொஹமட் பாதுஷா / 2019 ஜனவரி 11 வெள்ளிக்கிழமை, மு.ப. 06:50 பல்லினங்களும் வாழ்கின்ற ஓர் ஆட்புலத்தில், எவ்வாறு சகிப்புத்தன்மையுடனும் பொறுமையுடனும் பரஸ்பரம் புரிந்துணர்வுடனும் நடந்து கொள்வது என்ற பாடத்தை, இலங்கையில் இனவாதிகள் மட்டுமன்றி, சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களில் சிலரும், இன்னும் பட்டறிந்து கொள்ளவில்லையோ என்ற வலுவான சந்தேகத்தை, அண்மைக்கால சம்பவங்கள் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இரண்டு இனங்களைச் சேர்ந்த நபர்களுக்கு இடையில் நடக்கின்ற எல்லா விடயங்களும், இரு இனங்களுக்கும் இடையிலான முரண்பாடுகளாக உருவேற்றப்படுவதையும் சிறிய சம்பவங்கள் ஊதிப் பெருப்பிக்கப்படுவதையும் வெளிப்படையாகவே காணமுடிகின்றது. தேச…
-
- 0 replies
- 1.1k views
-
-
கஞ்சாக் கடத்தலும் வடக்கின் மனநிலையும் புருஜோத்தமன் தங்கமயில் / 2019 ஜனவரி 30 புதன்கிழமை, மு.ப. 01:43 Comments - 0 கடந்த சில மாதங்களுக்கு முன்னர், யாழ்ப்பாணம்- கொழும்புக்கிடையில் அடிக்கடி பயணப்படும் நண்பரோடு, பஸ்ஸுக்காகக் காத்திருக்கும் போது, பேசிக் கொண்டிருந்தேன். அவரின் பயணப்பை முழுக்க, சிறிய பூட்டுகளால் பூட்டப்பட்டிருந்தது. பயணப்பையில் சில ஆடைகளைத் தவிர பெறுமதியான பொருட்கள் எதுவும் இருப்பது மாதிரித் தெரியவில்லை. அவ்வாறு இருக்க, இத்தனை பூட்டுகள் இந்த பயணப்பைக்கு ஏன் போட்டிருக்கிறார் என்று சந்தேகம்? அவரிடமே கேட்டேன். “...பாக்குக்குள் பெரிசாக ஒன்றும் இல்லை. சில உடுப்புகள்தான் இருக்கு. ஆனால், இப்ப வாகனங்களில் கஞ்சா கடத்திறாங்கள். அடிக்கடி பொ…
-
- 0 replies
- 794 views
-
-
சாந்தனுக்குச் செய்யும் உண்மையான அஞ்சலி எது? நிலாந்தன்! சாந்தனின் உடல்... இந்தியாவுக்கும் ஈழத் தமிழர்களுக்கும்; தமிழகத்திற்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான கசப்புணர்வை அதிகப்படுத்தியிருக்கின்றது. அதை இலங்கை அரசாங்கம் விரும்பியிருந்திருக்கும். அந்த உடல் வடக்கிற்கு கொண்டு வரப்பட்ட அதே காலப்பகுதியில், இம்மாதம் முதலாம் திகதி யாழ்ப்பாணத்தின் தீவுப் பகுதிகளில் மூன்று தீவுகளில் மீளப் புதுப்பிக்கும் எரிசக்தி திட்டங்களை இந்தியக் கொம்பனிகளுக்கு வழங்கும் உடன்படிக்கை கைச்சாத்தாகியது. அவை முன்பு சீனக் கொம்பனிகளுக்கு வழங்கப்படவிருந்தன. இந்தியா அதை விரும்பவில்லை, அதைத் தடுக்கின்றது என்று சீனா மறைமுகமாகக் குற்றம் சாட்டியது. எனினும் நீண்ட இழுபறியின் பின் கடந்த முதலாம் தேதி தான் அதற்க…
-
- 0 replies
- 381 views
-
-
எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பிலான மாவட்ட ரீதியான தரவுகளுடனும் எதிர்வுகூறலுடனும் இந்தத் தலைப்பினூடாக உங்களைச் சந்திக்க விழைகிறேன். அந்த அடிப்படையில் கொழும்பு மாவட்டம் தொடர்பிலான எனது கணிப்புடன் விரைவில் சந்திக்கிறேன்.
-
- 7 replies
- 800 views
-
-
மதத்தின் பெயரிலான தீவிரவாத்தின் ஒழிப்பு Editorial / 2019 மே 23 வியாழக்கிழமை, பி.ப. 06:34 Comments - 0 -இலட்சுமணன் உலகளவில் எழுந்திருக்கின்ற கேள்விகள் எல்லாமே, இஸ்லாத்தின் பெயராலும் ஏனைய மதங்களின் பெயராலும் மேற்கொள்ளப்படும் பயங்கரவாதத்தை, எவ்வாறு ஒழிக்க முடியும் என்பதாக இருக்கையில்தான், இலங்கையில் ஈஸ்டர்தினம் தெரிவு செய்யப்பட்டு, தேவாலங்களிலும் நட்சத்திர ஹோட்டல்களிலும் தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன. நாட்டில் ஏற்பட்ட தற்கொலைத் தாக்குதல்களை அடுத்தான அசாதாரண நிலைமையில் மாற்றம் கொண்டுவரப்படுதல்தான், இப்போதைய தேவையாக இருக்கிறது. இந்தத் தாக்குதலுக்கு, கிழக்கின் காத்தான்குடியைச் சேர்ந்தவர் ஆரம்பப் புள்ளியாக இருந்திருக்கிறார் என்ற கரும்புள்ளியுடன…
-
- 0 replies
- 473 views
-
-
பொதுக் கட்டமைப்பும் மூன்று கட்சிகளும்! நிலாந்தன். தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் மூன்று கட்சிகள் ஜனாதிபதியையும் எதிர்க்கட்சி தலைவரையும் சந்தித்திருக்கின்றன. ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியப் பொதுக்கூட்டமைப்புச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக அழைப்பு விடுத்தார்கள். கட்டமைப்பாக அழைக்கவில்லை. ஆனாலும் கட்டமைப்பில் உள்ள பெரும்பாலானவர்களை அழைத்தார்கள்.ஆனால் பொதுக் கட்டமைப்பாக அழைக்கிறோம் என்று அழைப்பில் குறிப்பிடப்படவில்லை. எதற்காக அழைக்கிறோம் என்றும் இரு தரப்புமே கூறவில்லை. இதில் மக்கள் அமைப்பின் பிரதிநிதிகள் ஏழு பேர்களும் மேற்படி இரண்டு சந்திப்புகளுக்கும் செல்லவில்லை. தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நா…
-
- 0 replies
- 447 views
-
-
எழுதியவர் - ஷிரான் இளன்பெருமா ஒக்டோபர் 22 முதல் 24 வரை 16வது பிரிக்ஸ் மாநாடு ரஷ்யாவின் கசான் நகரில் நடைபெற்றது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய பிரதான குழு உறுப்பினர்களுடன், இந்த ஆண்டு எகிப்து, எத்தியோப்பியா, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை முறையாக சேர்க்கப்பட்டன. உச்சிமாநாட்டின் போது, மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, வியட்நாம், நைஜீரியா, உகாண்டா, கியூபா மற்றும் பொலிவியா உட்பட மேலும் 13 நாடுகள் பங்குதாரர் உறுப்பினர்களாக ஆகின. இந்த ஆண்டு, பிரிக்ஸில் அங்கத்துவம் பெற விண்ணப்பித்த உலகளாவிய தெற்கில் இருந்தான வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இணைகிறது. கசான் உச்சிமாநாட்டிற்கு சென்ற இலங்கை தூ…
-
- 1 reply
- 263 views
- 1 follower
-
-
நாடாளுமன்றத் தேர்தல் களம் 2024: உத்தமர்களாகக் கட்டியெழுப்பப்படும் வேட்பாளர்கள்! நிலாந்தன். சுமந்திரன் ஒரு பிரச்சாரக் காணொளியில் கூறுகிறார், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான பேரணியை தானும் சாணக்கியனும்தான் வெற்றிபெற வைத்ததாக.அதற்கு சிவாஜிலிங்கத்தின் அறிக்கை ஒன்றை ஆதாரமாக காட்டுகிறார். ஏனையவர்கள் அந்த பேரணிக்குள் பின்னர் வந்து ஒட்டிக்கொண்டதாகவும் அவர் கூறுகிறார். சுமந்திரனின் பிரச்சார காணொளிகளைக் கேட்கும் எவருக்கும் அவரைவிட உத்தமர் இல்லை என்ற ஒரு தோற்றம்தான் கிடைக்கும். அவர் எவ்வளவு காணிகளை விடுவித்தார்? எவ்வளவு கைதிகளை விடுவித்தார்? எந்தெந்த ராஜதந்திரிகளை சந்தித்தார்?எப்படியெல்லாம் தமிழ் மக்களுக்காக உழைத்தார்? அதை எப்படி அவருடைய எதிரிகள் வேறுவிதமாக வியாக்க…
-
- 0 replies
- 212 views
-
-
Ramanathan Archchuna வைப் பற்றிய Sepal Amarasinghe வின் you tube பதிவினது தமிழாக்கம். பகுதி 1. சில இடங்களில் எனது கருத்துக்களையும் சேர்த்திருக்கிறேன். Ramanathan Archchuna வால் கேட்கப்படும் பிரச்சனை என்ன என்பது தான் you tube பதிவின் தலையங்கம்… இதை சுருக்கமாக சொல்வதானால்…. 1)இப்போது (தமிழர்களுக்கு பழையது) பெரும்பான்மையினருக்கு சமூகவலைத்தளத்தில் மிகவ…
-
-
- 3 replies
- 488 views
-
-
சேகுவராவும் பிடல் காஸ்ரோவும். ஒரு நாட்டின் விடுதலைப் போராட்டத்திற்கு தலைமை தாங்கி நடத்தியும், விடுதலைப் பெற்ற நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றும் பகைவர்களின் இடைவிடாத அழிப்பு வேலைகளிலிருந்து காத்தும் 32 ஆண்டு காலமாக ஈடுஇணையில்லாத தொண்டாற்றிய பெருமைக்குரியவர் பிடல் காஸ்ட்ரோ. சின்னஞ்சிறிய கியூபா நாட்டினை சர்வதிகார ஆட்சியிலிருந்து மீட்பதற்காக போராடிய பிடல் காஸ்ட்ரோவும் அவரது அற்புதமான தோழன் சேகுவேராவும் உலக வரலாற்றில் உன்னதமான இடத்தை பெற்றுள்ளனர். காஸ்ட்ரோவின் ஆட்சியை கவிழ்க்கவும், அவரைப் படுகொலை செய்யவும் அமெரிக்க வல்லரசு இடைவிடாது முயற்சி செய்தது. உலக வல்லரசான அமெரிக்காவின் நயவஞ்சகத்தை பிடல் காஸ்ட்ரோ வெற்றிகரமாக முறியடித்தார். இதன் வ…
-
- 1 reply
- 1.6k views
-
-
சிறுபான்மையினரின் வாக்குகளில்லாமல் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாகியிருக்க முடியுமா என்று கட்டுரையாளர் சகாதேவராஜா தனது கட்டுரையின் மூலம் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் மேலும் தமது கட்டுரையில், இலங்கையின் எட்டாவது ஜனாதிபதித்தேர்தல் முடிந்து நாட்டின் ஏழாவது நிறைவேற்று ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவாகி பதவியேற்பும் நடைபெற்று முடிந்துள்ளது. இந்தநிலையில் மழைவிட்டும் தூவானம் விடவில்லை என்ற பாணியில் அவர் ஜனாதிபதியானது வெறும் பெரும்பான்மையின வாக்குகளால் மட்டும்தானா? என்ற வாதம் தலைதூக்கியுள்ளது. அதற்கு விடைகாணும் நோக்கில் ஓரளவாவது இக்கட்டுரை அமையலாம். பெரும்பான்மையின வாக்குகளால்தான் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகியுள்ளார் என்ற கருத்து சமகாலத்தில் பேசுபொருளாகவுள்…
-
- 0 replies
- 587 views
-
-
இனவெறி கையாளலும் பரந்துபட்ட மக்கள் ஒற்றுமையும் தேர்தலுக்குப் பிந்தைய, இலங்கையின் திசைவழி குறித்த கேள்விகள் ஒருபுறம் இருந்தாலும், தேர்தல் காலங்களில் கட்டவிழ்ந்த இனமேன்மை, பௌத்த மேலாதிக்கம், சிங்களத் தேசியவாதத்தின் வகிபாகம் என்பன இன்னமும் தொடர்கின்றன. இதைத் தொடர்ந்து, பாதுகாக்கும் பணிகளை, அரசியல்வாதிகளும் ஊதிப் பெருப்பிக்கும் காரியங்களை ஊடகங்களும் உணர்ச்சியூட்டும் செயல்களைப் பௌத்த பிக்குகளும் செய்வதைக் கடந்த இரண்டு வாரங்களில் கண்டுள்ளோம். இதில் அரசியல்வாதிகளுக்கு வாய்ப்பு; ஊடகங்களுக்கு இலாபம்; பிக்குகளுக்கு வசதி; ஆனால், சாதாரண மக்களுக்கு என்ன என்ற கேள்வி முக்கியமானது. இனமேன்மை, இனவாதமாகி, இனவெறியாகப் பரிமாணம் பெறுகிற போது, அது மதம் பிடி…
-
- 0 replies
- 447 views
-
-
நம்பிக்கையை நாசமாக்கும் அரசாங்கம் கே. சஞ்சயன் / 2020 ஜனவரி 10 , மு.ப. 10:14 முன்னாள் அமைச்சர்கள் சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன ஆகியோரின் கைது நடவடிக்கைகளை அடுத்து, முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்ட முறை, கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி இருக்கிறது. அதைத் திசை திருப்பி விடுவதற்காகவே, ரஞ்சன் ராமநாயக்கவின் அலைபேசி உரையாடல் பதிவுகள், சமூக ஊடகங்களில் கசியவிடப்பட்டு இருக்கின்றன. சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்ட போது, சபாநாயகருக்குத் தெரியப்படுத்தப்பட இல்லை; நீதிமன்ற உத்தரவும் பெறப்படவில்லை. விதிமுறைகளுக்கு முரணாக, அவர் கைது செய்யப்பட்ட போது, “அது சரியான நடவடிக்கை தான்; பொலிஸார் மீது எந்தத் தவறும் இல்லை” என்று அரசாங்கத…
-
- 0 replies
- 1k views
-
-
தமிழ்த் தலைவர்கள் எதற்கு? கே. சஞ்சயன் / 2020 ஜனவரி 24 அவ்வப்போது நீண்ட அறிக்கைகள், கடிதங்களை வெளியிட்டும், செய்தியாளர் சந்திப்புகளை நடத்தியும் பழைய வரலாற்றை நினைவுபடுத்திக் கொண்டிருப்பவர், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி ஆவார். தான் கூறியபடி தான், தமிழ் மக்களின் வரலாறு நகர்கிறது என்பது போல, தீர்க்கதரிசியாகத் தன்னை் கருதிக் கொண்டு, அவர் அவ்வப்போது வெளியிடும் கருத்துகள், முரண்பாடுகளும் விமர்சனங்களும் நிறைந்தவவையாக இருப்பது வழமை. 2004ஆம் ஆண்டு, நாடாளுமன்றத் தேர்தலின் போது, தமிழரசுக் கட்சிக்கு உயிர் கொடுக்கப்பட்ட விடயத்தை, அவரால் இன்னமும் ஜீரணிக்க முடியாமல் இருக்கிறது. இந்த விடயத்தில், அவர் விடுதலைப் புலிகளைக் கூட விட்டு வைக்க…
-
- 0 replies
- 574 views
-
-
ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் வரலாற்றுப் பொறுப்பு June 24, 2025 — கருணாகரன் — “ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் எதிர்காலச் செயற்பாடுகள் எப்படி இருக்கும்? அதனுடைய அரசியல் எதிர்காலம்?” என்று கொழும்பில் உள்ள மூத்த தமிழ்ப் பத்திரிகையாளர் ஒருவர் கேட்டார். “நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்” – அவரிடமே கேள்வியைத் திருப்பினேன். “என்னால் மதிப்பிடவே முடியவில்லை. காரணம், எதிரும் புதிருமாக உள்ள கட்சிகள் எல்லாம் திடீரென்று ஒரு கூட்டுக்கு வந்துள்ளன. அதற்காக ஒரு உடன்படிக்கையையும் செய்திருக்கிறார்கள். என்றாலும் இதில் யாருடைய கருத்தை –கொள்கையை – நிலைப்பாட்டை யார் ஏற்பது என்ற தெளிவில்லை. இப்போதைய சூழலில் கஜேந்திரகுமாரின் நிலைப்பாடுதான் வலுப்பெற்றுள்ளது போலிருக்கு… இந்தப் போக்குக்கு ஜன…
-
- 0 replies
- 99 views
-
-
மலையகம்: பேரழிவும் மீட்சியும் Photo, Facebook: mariyan.teran காலநிலை மாற்றம் (Climate Change) என்பது பூகோள ரீதியில் ஒரு நீண்டகால சவாலாக இருந்தாலும், வெப்பமண்டலப் பகுதிகளில் அமைந்துள்ள இலங்கையை பொறுத்தவரை, இதன் தாக்கம் தீவிரமானதாகவும் உடனடியானதாகவும் உள்ளது. புவி வெப்பமடைதல் காரணமாக வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடலில் ஏற்படும் மேற்பரப்பு நீரின் வெப்பநிலை அதிகரிப்பு, சூறாவளிகள் (Cyclones) உருவாகும் வீதத்தையும், அதன் தீவிரத்தையும் (Intensity) கணிசமாக உயர்த்தியுள்ளது என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இலங்கையின் நிலப்பரப்பு, அதன் புவியியல் மற்றும் சனத்தொகையின் அடர்த்தி காரணமாக, பருவமழை தொடர்பான வெள்ளப்பெருக்குகள் மற்றும் நிலச்சரிவுகளுக்கு (Landslides) மிக எளிதில் ஆளாகி…
-
- 0 replies
- 170 views
-
-
[size=4]நிறைவேற்று ஜனாதிபதி முறைமையானது இலங்கையில் சர்வதிகாரிகளை உருவாக்கவே பயன்பட்டு வந்திருப்பதை இப்போது தான் தென்னிலங்கை மக்கள் உணரத் தலைப்பட்டிருக்கிறார்கள்.[/size] [size=2] [size=4]இத்தகைய சர்வதிகார ஜனாதிபதி உருவாவதற்கான அரசியல் யாப்பை எழுதி அரங்கேற்றிய கட்சியைச் சேர்ந்தவர்களே இன்று பொதுக்கூட்டு அமைத்துக் கொண்டு ஜனாதிபதி பதவியை இல்லாதொழிக்க வேண்டும் என்று குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளார்கள். இலங்கையைப் பொறுத்தவரையில் ஜனாதிபதி எனும் பதவி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட முதலாவது குடியரசு யாப்பின் மூலம் நடைமுறைப்படுத்தினார். [/size][/size] [size=2] [size=4]1972 மே 22 இல் இந்த யாப்பு அறிமுகமானது. 1970 தேர்தலில் கிடைத்த பெரும்பான்மை ஆசனங்களால்…
-
- 0 replies
- 945 views
-
-
பிரதமர் நியமித்த குழுவின் கதி என்ன? – நஜீப் பின் கபூர் இந்தக் கட்டுரையை நாம் எழுதி நிறைவு செய்கின்ற நேரத்தில் 20 தொடர்பில் புதிய பல அதிரடித் தீர்மானங்களுக்கு அரசு வந்திருக்கின்றது. அதனால் பிரதமர் நியமித்த குழுவால் எந்தப் பயனும் கிடைக்கவில்லை. அவர்களது எந்த சிபார்சுகளும் அதில் உள்வாங்கப்படவில்லை. அது எப்படி வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதோ அதே போன்று தற்போது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட இருக்கின்றது என்று ஆளும் தரப்பினர் தற்போது உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கின்றார்கள். எனவே ஜனாதிபதி விரும்பியவாறுதான் அது தற்போது பாராளுமன்றத்துக்கு விரைவில் வருகின்றது. திருத்தங்கள் இருப்பின் அங்கே பார்த்துக் கொள்ளுங்கள் என்று ஜனாதிபதி கடும் தெனியில் கட்டளை போட்டதால் பிரதமர் …
-
- 0 replies
- 685 views
-
-
துமிந்தவுக்காக மனோ சறுக்கிய இடம் -புருஜோத்தமன் தங்கமயில் மனோ கணேசன், தன்னை ஓர் ‘அரசியல்வாதி’ என்று அழைப்பதைக் காட்டிலும், ‘மனித உரிமைப் போராளி’ என்று அடையாளப்படுத்துவதில் கவனமாக இருப்பவர். சட்டத்துக்கு முரணான கொலைகள், கடத்தல்கள், வலிந்து காணாமல் ஆக்கப்படுதல், கப்பம் கோரல் உள்ளிட்டவற்றுக்கு எதிராகக் கிட்டத்தட்ட இரண்டு தசாப்த காலமாகப் போராடி வந்திருக்கிறார். ஓர் அரசியல்வாதி, மக்களின் குரலாக ஒலிக்க வேண்டியது அவசியமானது. அதுவும், தான் சார்ந்திருக்கும் மக்களின் குரலாக, ஓங்கி ஒலிங்க வேண்டியது தவிர்க்க முடியாதது. மனோ கணேசன் மக்களின் குரலாக, அநேக சந்தர்ப்பங்களில் செயற்பட்டிருக்கிறார். http://static2.tamilmirror.lk/assets/uploads/image_f79bb2fe94.jpg அத…
-
- 5 replies
- 1.3k views
-
-
சமகால அரசியல் தொடர்பான இளைஞர்களின் எதிர்பார்ப்பு எனும் தொனிப்பொருளில் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் கேள்வி பதில் நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.
-
- 19 replies
- 805 views
-