அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9272 topics in this forum
-
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு ஏன்? அப்படிப் பார்க்கிறபோது இன்றைக்கு இலங்கையிலே இருக்கிற தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பாக விடுதலைப் புலிகள் இயக்கம்-எல்.டி.டி.இ. அமைப்பினர் இருக்கிறார்கள். அவர்களுக்குத் துணையாக ஈரோஸ் இருக்கிறார்கள். மற்ற இயக்கங்கள் இல்லை என்று சொல்லவில்லை. இருக்கிறார்கள். அங்கே இருந்து அவர்களால் பணியாற்ற முடியவில்லை. சிங்கள ராணுவத்திற்கு எதிராக அங்கே விடுதலைப் புலிகள்தான் தன்னந்தனியாக நின்று போராடி உயிர்த் தியாகம் செய்து வருகிறார்கள். சொல்வார்களே… கண்ணீரும் செந்நீரும் கொட்டி சுதந்திரப் பயிர்வளர்த்தார்கள் என்று அப்படி அவர்கள் வளர்க்கிறார்கள். பொதுவாக ஆண்கள் செந்நீரைச் சிந்துவார்கள், பெண்கள் கண்ணீரைச் சிந்துவார்கள். ஆனால் இலங்கை தமிழ் பகுதியைப் பொறுத்…
-
- 4 replies
- 1.3k views
-
-
காஷ்மீர் அதிர்வலைகள் – பகுதி 1 புதினப்பணிமனைAug 16, 2019 by in கட்டுரைகள் காஷ்மீர் தெற்காசியாவின் அரசியலில் முக்கிய நகர்வு ஒன்றை கண்டிருக்கிறது. முன்பு இருந்த தனித்துவமான அதிகாரங்களை இழந்து இந்திய மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்பட்டிருக்கிறது. அத்துடன் ஒரு அரசியல் பிராந்தியமாக இருந்த பிரதேசம் இன்று இரண்டு பிரிவுகளாக பிரித்து விடப்பட்டுள்ளது. முன்பு இருந்த காஷ்மீரில் மத்திய அரசினால் எடுக்கப்படும் எந்த தீர்மானத்தையும் மாநில சட்டபேரவையின் ஒப்புதல் இன்றி நடைமுறைப்படுத்த முடியாது என்பது அவற்றில் முக்கியமானது. மேலும் வேற்று மாநிலத்தவர் காஷ்மீரில் நிலம் வாங்க முடியாது. அரச வேலைகளில் வெளிமாநிலத்தவர் தெரிவு செய்யப்பட முடியாது என்பன போன்ற …
-
- 2 replies
- 1.3k views
-
-
வரலாற்றின் திருப்புமுனையில் வரலாறு படைப்போம் காரை துர்க்கா / 2019 ஜூலை 23 செவ்வாய்க்கிழமை, மு.ப. 10:51 Comments - 0 ஈழத்தமிழர் வரலாற்றில் ஜூலை மாதம், கறைகள் படிந்த கறுப்பு மாதமாகவே, கடந்து செல்கின்றது. இவ்வருட ஜூலை மாதமும் இரத்தக்களரியை நோக்கிச் செல்கின்றதா என்ற பயமும் பதற்றமும் தமிழர் மனங்களில் குடிகொண்டு உள்ளது. தமிழர் தேசம் மீது, இரண்டு வகையான போர்கள், பேரினவாத அரசாங்கங்களால் ஏககாலத்தில் தொடுக்கப்பட்டு உள்ளன. முதலாவது, சிங்கள - தமிழ் இனப்பிணக்குத் தொடர்பான தீர்வுத் திட்டங்களைத் திட்டமிட்டவாறு, நொண்டிச் சாட்டுகளைக் கொண்டு காலம் கடத்திச் செல்வது. அதேநேரம், அக்காலப் பகுதியில் வடக்குக் கிழக்கின் தமிழர் இனப்பரம்பலை விரைவாக மாற்றி, அவர்களைப் பலம் கு…
-
- 1 reply
- 1.3k views
-
-
மனிதாபிமான அரசியல் ஈழத்தில் அப்பாவி மக்கள் பாதிக்கப்படும் தொடர் கதை பலக் காலங்களாக தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே வருவதும், அவ்வாறு நிகழும் பொழுதெல்லாம் அண்டை நாடான இந்தியாவில் இருக்கும் ஊடகங்கள் தொடங்கி உலகின் பல ஊடகங்களும் வாய்மூடி பார்த்துக் கொண்டிருப்பதும் வாடிக்கையாக நடக்கும் கதையாகி விட்டது. அதே நேரத்தில் தென்னிலங்கையில் நிகழும் நிகழ்வுகள் தொடங்கி இராணுவம் மீது புலிகள் தொடுக்கும் தாக்குதலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. எந்த மனித உயிரும் அற்பாக கருதப்படக் கூடியவை அல்ல. புலிகளின் குண்டுவெடிப்புகளில் பலியாகும் ஒரு அப்பாவி சிங்களன் உயிருக்கும் புலிகள் பதில் சொல்லியே ஆக வேண்டும். ஒரு அப்பாவி சிங்களன் மடிவது அங்க…
-
- 1 reply
- 1.3k views
-
-
தமிழ்த் தேசியத்தின் புத்துயிர்ப்பும் தமிழ் – முஸ்லிம் உறவும் – பிஸ்மி 2009 மே முள்ளிவாய்க்காலுடன் தனது இறுதி மூச்சினை விட்டு விட்டதாகக் கருதப்பட்ட தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் உறங்கு நிலைக்குச் செல்லுமா அல்லது தன்னை மீள்பரிசீலனைக்கு உள்ளாக்கிக் கொண்டு, புதிய திசையில் அது முன்னோக்கி வீறு நடை போடுமா என்பது இலங்கைச் சமூகங்களின் ஒட்டுமொத்த அரசியல், சமூக விடுதலையை நேசிக்கும் சக்திகளின் எதிர்பார்ப்பாகும். தமிழ்த் தேசியமானது அரசியல், சமூக, பொருளாதார ஒடுக்குமுறையின் எதிர்வினையாற்றல் என்ற வகையில் அது முற்போக்கானது. அது தமிழ் மக்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக விடுதலைக்கான கூறுகளை மாத்திரமல்ல முழு இலங்கையின் விடுதலைக்குமாறு உட்கூறுகளையும் கொண்டிருந்ததாக மூன்று …
-
- 2 replies
- 1.3k views
-
-
யாரிந்த சுரேன் ராகவன்? – கனடா மூர்த்தி என் வெளிநாட்டு நண்பர்களுக்கு கனடியத் தமிழர் பேரவையின் தமிழர் தெருவிழா குறித்து பெருமையுடன் தெரியப்படுத்வதுண்டு. அமெரிக்கா, சிங்கப்பூர் நண்பர்கள் பலர் அதனாலேயே ஓகஸ்ட் மாதத்தில் கனடா வந்திருக்கிறார்கள். இந்த ஆண்டு முற்பகுதியில் யாழ்ப்பாணத்தில் வடமாகாண ஆளுனர் சுரேன் ராகவனை சந்தித்தபோதும் எங்கட தெருவிழா, அதன் பிரம்மாண்டம் என்பன பற்றியும் கதை போயிற்று.“‘கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் ஆகஸ்டில் வர முடியுமா தெரியாது. இப்போதுகூட ஜெனீவாவிற்கு போகுமாறு என்னையும் கேட்டிருக்கிறார்கள். முடிவாகவில்லை” . அதன் பின் ஜெனிவா சென்றார் என்பது நாம் அறிந்ததே. இங்கு, தமிழர் பேரவையின் முக்கிய புள்ளி ஒருவருடன் பேசிக் கொண்ட…
-
- 2 replies
- 1.3k views
-
-
புலிகள் இயக்கத்திற்கு எதிராக விதிக்கப்படும் தடை நடவடிக்கைகளிற்குப் புலம்பெயர்தமிழ் மக்களின் பரப்புரைசெயற்பாடுகளின் பலவீனமே காரணம் என அண்மையில் ஒய்வுநிலை பேராசிரியர் ஒருவர் மிக கூர்மையான கருத்தொன்றை ஊடகங்கள் ஊடாக வெளியிட்டிருந்தார். தமிழீழ ஆதரவு கருத்தேட்ட நடவடிக்கைகள் இடம்பெறுவதில் குறைபாடுள்ளதாக விவாதித்தார். சிங்கள கருத்தேட்ட நடவடிக்கைகள் கனடாவில் வலுவாக இருந்தமையே கனடா புலிகள் மீது விதித்த தடைக்கான முக்கிய காரணம் எனக் காரணம் கூறினார். புலத்தமிழ் சமூகத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக முன்வைக்கப்பட்ட முக்கியமானதொரு விவாதமாக இதுவுள்ளது. விடுதலைப் போரின் வலுவாகத் திகழும் புலத்தமிழ் சமூகம் இந்தப் பரப்புரை முனையில் தன்பணியினை சரியாக செய்யாதுள்ளது என்கின்ற பேராசிரியர…
-
- 0 replies
- 1.3k views
-
-
துமிந்தவுக்காக மனோ சறுக்கிய இடம் -புருஜோத்தமன் தங்கமயில் மனோ கணேசன், தன்னை ஓர் ‘அரசியல்வாதி’ என்று அழைப்பதைக் காட்டிலும், ‘மனித உரிமைப் போராளி’ என்று அடையாளப்படுத்துவதில் கவனமாக இருப்பவர். சட்டத்துக்கு முரணான கொலைகள், கடத்தல்கள், வலிந்து காணாமல் ஆக்கப்படுதல், கப்பம் கோரல் உள்ளிட்டவற்றுக்கு எதிராகக் கிட்டத்தட்ட இரண்டு தசாப்த காலமாகப் போராடி வந்திருக்கிறார். ஓர் அரசியல்வாதி, மக்களின் குரலாக ஒலிக்க வேண்டியது அவசியமானது. அதுவும், தான் சார்ந்திருக்கும் மக்களின் குரலாக, ஓங்கி ஒலிங்க வேண்டியது தவிர்க்க முடியாதது. மனோ கணேசன் மக்களின் குரலாக, அநேக சந்தர்ப்பங்களில் செயற்பட்டிருக்கிறார். http://static2.tamilmirror.lk/assets/uploads/image_f79bb2fe94.jpg அத…
-
- 5 replies
- 1.3k views
-
-
என்ன இப்படித் தலைப்பு எண்டு பாக்கிறியளா? சீலன் பற்றியும் எவ்வாறு ஆரம்பகாலகட்டங்களில் அரசியல் தெளிவற்று குழப்பகரமான நிலைப்பாடுகளோடு இருந்தவர்களால இயக்கம் குழப்பட்டது என்பதைப் பற்றியும் அவற்றை சீலன் எவ்வாறு எதிர் கொண்டான் என்பது பற்றியும் கூறி இருகிறார்.இதனைப் பார்க்கும் போது யாழ்க்களத்தில் சிலரது குழப்பகரமான தெளிவற்ற கருதாடல்கள் தான் நாபகத்தில வந்தது. நீங்களும் பாத்துவிட்டு உங்களது கருத்துக்களை எழுதுங்கள் நானும் எனது கருத்துக்களை எழுதுகிறேன்,முதலில உந்த வீடியோவை இணயத்தில இணைத்த வன்னியனுக்கு நன்றிகள். http://pooraayam.blogspot.com/ //இன்று தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த போராளியும் முதலாவது தாக்குல் தளபதியாயிருந்து வீரச்சாவடைந்தவருமான லெப்.சீலன் அவர்களின்…
-
- 1 reply
- 1.3k views
-
-
புலிகளுக்குப் பின்னர் தமிழர்களின் எதிர்காலம்….? -கே.சஞ்சயன் வடக்கு, கிழக்கிற்கு தனியான ஆட்சிமுறை என்பது நடைமுறைச் சாத்தியமற்ற விடயம் என்று பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில், இலங்கை வந்த இந்திய நாடாளுமன்றக் குழுவிடம் தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் முயற்சிகளில் அரசாங்கம் கொண்டுள்ள இறுக்கமான போக்கை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. கடந்த பெப்ரவரி 4ஆம் திகதி திருகோணமலையில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கிட்டத்தட்ட இதே கருத்தைத் தான் வலியுறுத்தியிருந்தார். இலங்கையில் இன, மத, மொழி அடிப்படையில் நிர்வாக கட்டமைப்புகள் ஒருபோதும் உருவாக்கப்படமாட்டாது என்று…
-
- 0 replies
- 1.3k views
-
-
[size=6]உடைவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு [/size] - யதீந்திரா மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள் முரண்பாடுகள் ஊடகங்களின் பேசு பொருளாகியிருக்கிறன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு கட்சியாக பதிவு செய்வதற்கு தமிழரசுக் கட்சி உடன்பட மறுக்கும் சந்தர்ப்பத்தில், கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய நான்கு கட்சிகளும் இணைந்து கூட்டமைப்பை பதிவு செய்ய முயற்சிப்பதாக செய்திகள் வெளிவந்ததைத் தொடர்ந்தே, இதுவரை அமுங்கிக் கிடந்த உள் முரண்பாடுகள் மீண்டும் அரசியல் அரங்கில் தலைநீட்டியிருக்கிறன. கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தலைமைகளின் அரசியல் அணுகுமுறையை சற்று உற்று நோக்கினால், சிறுவயதில் படித்த அம்புலிமாமாக் கதையில் வரும் வேதாளம் - விக்கிரமாதித்தி…
-
- 4 replies
- 1.3k views
-
-
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் விரைவில் சிங்கள மயமாகுவதிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டுமானால் இலங்கை இந்திய உடன்படிக்கையில் தமிழ் பேசும் மக்களின் வரலாற்று வாழ்விடம் எனக் கூறப்பட்டிருக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட்டு தனியான ஒரு மாகாண சபை ஏற்படுத்தப்பட வேண்டும். சிறுபான்மை மக்களின் உரிமைகளையும் , பிரச்சினைகளையும் பெரும்பான்மையினர் தொடர்ந்து திட்டமிட்டுப் புறக்கணித்து வருவதே இன்று இலங்கையில் ஏற்பட்டுள்ள பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் நாட்டுப் பிரிவினைப் போராட்டத்திற்கும் முக்கிய காரணங்களாகும். இலங்கையின் இனப் பிரச்சினைக்கும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்செயல்களுக்கும் தீர்வு காணும் அவசியத்தையும் இலங்கையில் வாழும் சகல இன மக்களின் பாதுகாப்பு , நல்வாழ்வு ஆக…
-
- 10 replies
- 1.3k views
-
-
-
- 6 replies
- 1.3k views
-
-
இலங்கையில் மாற்றம்... புலம்பெயர்ந்தவர்களால் நடக்கும்!: கவிஞர் சேரனின் பேட்டி ஒருவருக்கு இரண்டு தாய் இருப்பதற்கான சாத்தியங்களைப் போன்றதுதான் இரண்டு தேசங்கள் இருப்பதும். தொடர்ச்சி யான இலங்கை இனப் படுகொலைகள் இரண்டு தேச சாத்தியம் பெற்ற லட்சோப லட்சம் புலம்பெயர்ந்தோரை உருவாக்கியது. வேரைவிட்டு வெகு தூரம் விலகி விழுந்த விதைகளில் ஒருவராக, இன்று கவிதை விருட்சமாக இருப்பவர் கவிஞர் சேரன். தன் 'காடாற்று’, மற்றும் 'எ செகண்ட் சன் ரைஸ்’ நூல்கள் வெளியீட்டு விழாவுக்காகக் கடந்த வாரம் சென்னை வந்திருந்தார். கனடாவில் விண்சர் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் - மானுடவியல் துறை பேராசிரியராக இருப்பவரிடம், இன்றைய புலம்பெயர்ந்தோர் நிலை குறித்துப் பேசினேன்! ''என் 'காடாற்று’ தொகுதியில் இருக்கும் பெர…
-
- 11 replies
- 1.3k views
-
-
ஈழ இனப்படுகொலைகளும் இஸ்லாமிய இயக்கங்களின் பார்வையும் ஜூலை 8ம் தேதியிட்ட உணர்வு பத்திரிக்கையின் விளம்பர சுவரொட்டிகளில் "இலங்கை முஸ்லீம்களுக்கு துரோகம் செய்யும் தமிழக இயக்கங்கள்” என்ற தலைப்பில் ஒட்டப்பட்டிருந்தது அந்தப் பத்திரிக்கையின் நீதி, நேர்மை பற்றி தெரிந்ததால் நாம் எப்போழுதும் வாங்கிப் படிப்பதில்லை. இருப்பினும் என்னதான் துரோகம் இழைக்கப்பட்டது என்று தெரிந்து கொள்ளலாம் என்று நண்பர் "ஒடிக்கி" ஜாபரிடம் வாங்கிப் பார்த்தால் தமிழக முஸ்லீம் மக்களை இருகூறாக்கிய அமைப்பின் இலங்கை கிளையின் சார்பாக வெளிவரும் ஒரு வலைதளத்தில் (www.rasminmisc.blogspot.com) வெளியிடப்பட்ட "இலங்கை முஸ்லீம்களின் பிரச்சனையை ஊறுகாயாக்க வேண்டாம் தமிழக அமைப்புகளுக்கு ஒரு வேண்டுகோள்” என்ற தலைப்பில்…
-
- 1 reply
- 1.3k views
-
-
புலம்பெயர் மக்களின் உதவி: இன்னும் எவ்வளவு காலத்துக்கு? தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ புலப்பெயர்வு ஏற்படுத்திய முக்கியமான விளைவுகளில் ஒன்று, இலங்கையில் இருக்கின்ற உறவுகளுக்கான தொடர்ச்சியான நிதியுதவியை சாத்தியப்படுத்தியமை ஆகும். கடந்த அரைநூற்றாண்டாக, இச்செயற்பாடு தொடர்ந்த வண்ணம் உள்ளது. இலங்கையின் வடக்கு - கிழக்கு பகுதிகள், முழுமையாக இந்த வெளிநாட்டு உதவியால் பயன் அடைந்தன என்று சொல்லவியலாது. ஆனால், வடக்கு - கிழக்கின் பொருளாதார இயங்கியலில், நாட்டுக்குள் வருகின்ற பணம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த வெளிநாட்டுப் பணம், குறிப்பாக வடக்கில் பல்வேறுபட்ட தாக்கங்களை கடந்த ஒரு தசாப்த காலத்தில் ஏற்படுத்தி இருக்கிறது. இன்றுவரை விரிவாக ஆய்வுக்குட்படாத ஒன்றாகவே இது இருக்கிறது. …
-
- 15 replies
- 1.3k views
- 2 followers
-
-
-
- 9 replies
- 1.3k views
-
-
கடந்த சில வருடங்களில், தமிழ் தேசிய உணர்வும், தமிழ் இன விடுதலைத் தாகமும் எவ்வளவு து}ரம் தமிழர்களிடம் வளர்ந்துள்ளதோ அதே அளவு வேகத்தில், அல்லது அதைவிட அதிகமாகவே, சிங்கள தேசிய உணர்வும் சிங்கள இனத்துவேச உணர்வும் சிங்கள மக்களிடையே பலமடங்கு வளர்ந்துள்ளது. இதை தமிழ் மக்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் அவதானிக்க மறந்து விடக்கூடாது. கடந்த சில ஆண்டுகளில் சிங்கள இனம், சிங்கள நாடு, சிங்கள மொழி, சிங்கள அதாவது பௌத்த மதம் போன்றவற்றிற்கு பேராபத்து வந்துள்ளதாக தொடர்ச்சியாக சிங்கள இனவாதிகள் எழுதியும் பேசியும் காட்டியும் திணித்தும் அழுத்தியும் வந்ததனால் மட்டுமல்ல, தமிழினத்தில் தானாக வளர்ந்து வந்துள்ள தமிழின விடுதலை வேகமும் அவர்களை எதிர்த்திசையில் செல்வதற்கும் சிந்திப்பதற்கும் வழியமைத்துக் க…
-
- 0 replies
- 1.3k views
-
-
மன்னார் வளைகுடா பகுதியில் எண்ணெய் அகழ்வுப் பணிக்காக சீனாவையும் சிறிலங்கா அரசாங்கம் அனுமதித்திருப்பதன் மூலம் இந்தியாவின் இறைமைக்கு சிறிலங்காவால் பாரிய நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது. மன்னார் பிரதேசத்தில் 2 ப்ளொக்குகளில் இந்தியாவும் சீனாவும் எண்ணெய் அகழ்வுப் பணிகளை மேற்கொள்ளலாம் என்று சிறிலங்கா அமைச்சரவை தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. தெற்காசிய பிராந்தியத்தின் இரு பெரும் போட்டி வல்லரசுகளாக சீனாவும் இந்தியாவும் உள்ளன. இராஜதந்திர களத்தில் மோதுநர்களாக உள்ள இந்த இரு வல்லரசுகளும் தங்களது ஆளுமையையும் வலுவையும் வெளிக்காட்டுவதற்கான வியூகங்களை தொடர்ச்சியாக கையாண்டு வருகின்றன. இப்படியான நிலையில் மன்னார் வளைகுடாவில் சீனாவை சிறிலங்கா இறக்கிவிட்டிருப்பது என்பது இந்த…
-
- 0 replies
- 1.3k views
-
-
குருதி தோய்ந்த கைகளைச் சுத்தப்படுத்தும் மகிந்த! யுஹான் சண்முகரட்ணம் (தமிழில் ரூபன் சிவராஜா) நோர்வேயின் Klassekampen (The Class Struggle)நாளிதழில் கடந்த வாரம் (09.11.13) வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம் இதுவாகும். கட்டுரையை எழுதிய யுஹான் சண்முகரட்ணம் Klassekampen நாளிதழின் வெளிநாட்டுவிவகாரங்களுக்கான பொறுப்பாசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. மிக மோசமான போர்மீறல் குற்றச்சாட்டுகள் சிறிலங்கா அரசதலைவரை நோக்கி முன்வைக்கப்படுகின்ற நிலையிலும் பொதுநலவாய நாடுகளின் தலைமைத்துவத்தினை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கையேற்கவுள்ளார். பிரித்தானிய இளவரசர் சார்ஸ், பிரித்தானியாவின் தலைமை அமைச்சர் டேவிட் கமரூன் ஆகியோர் உட்பட்ட முக்கிய பிரமுகர்கள் கொழும்ப…
-
- 0 replies
- 1.3k views
-
-
பல வேறுபட்ட முகங்களுடன் செயற்பட்ட கே.பி. தனது லீலைகளைச் சிங்கள அரசுக்குச் சார்பாகத் தற்போது செய்து வருகிறார்.கனடாவில் வாழ்ந்துவந்த சுரேஷ் மாணிக்கவாசகத்தை கனேடியக் காவல்துறையினர் கைது செய்து நாடு கடத்த நடவடிக்கைகளை எடுத்தபோது ‘பெரிய மீன்’பிடிபட்டுவிட்டதாகத் தம்பட்டம் அடித்த சிங்களம், விடுதலைப் புலிகளுக்கு ஆயுத முகவராகச் செயற்பட்டவருக்குச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பு நிகழ்வுகளை நடத்துவதுடன்,சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள் பாதுகாப்பு வழங்கும் நிலையில் கே.பி. இருக்கிறார் என்றால் இவர் எந்தளவு விசுவாசமாக மகிந்தவுக்கு இருக்கிறார் என்பதை ஒரு குழந்தையினாலேயே இலகுவாகவே அறிய முடியும். சுதந்திரப் பறவையாகப் பறக்க அனுமதிக்கப்பட்டிருக்கும் கே.பியைப் பேட்டியெடுக்க டி.பி.எஸ்.…
-
- 7 replies
- 1.3k views
-
-
A9 வீதி ஊடாக பயணிக்க நாம் போராடவில்லை "நாங்கள் எங்களுடைய தேசத்தில் விடுதலையுடன் பயணிக்கவே போராடினோம்" 25 ஜூன் 2013 குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக பிரியதர்சன் அண்மையில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தமிழீழ விடுதலைப் புலிகளின் நிழல் தலைநகரம் எனப்படும் கிளிநொச்சிக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டு ஏ-9 வீதியையும் விடுதலைப் புலிகளின் விமான ஓடுதளத்தையும் திறந்து வைத்தார். இந்தப் வீதியில் நடப்பதற்காக, இந்தப் வீதியில் பயணிப்பதற்காக மக்கள் கனவுகள் வளர்;த்த காலங்களும் உண்டு. உண்மையில் இவ்வீதி ஒரு கனவு வீதி. மறுவளத்தில் இந்த வீதி இலங்கை அரசியலின் இனப்பிரச்சினையை சிக்கலையும் நீளத்தையும் பிளவுகளையும் துண்டிப்புக்களையும் விபரிக்கின்றது. இலங்கை இனப்பிரச்சினையில் இரத்தம் படிந்த வீதியொ…
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழரசை சாகடிக்கும் தலைமைகள்…! January 28, 2024 — அழகு குணசீலன் — தமிழரசுக்கட்சியின் அன்றைய தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் எப்போது “தமிழ்மக்ளை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்” என்று சொன்னாரோ அன்றே இந்தக்கட்சி கலைக்கப்பட்டு இருக்கவேண்டும். தமிழ்மக்களுக்கு தலைமை தாங்கக்கூடிய தகைமையை அது இழந்து விட்டது. எஸ்.ஜே.வி.யின் இந்த வார்த்தைகள் கட்சியின்,தலைமைத்துவத்தின் இயலாமையின் வெளிப்பாடு. இந்த இயலாமையை மறைத்து வீரவசனங்களைப்பேசி உசுப்பேத்திய அமிர்தலிங்கம் முதல் மாவை, சம்பந்தர் முதலான கூட்டம் மக்கள் நலன் சார்ந்து அன்றி அரசியல் வியாபாரத்திற்காகவே -பதவிக்காக வண்டியை கொண்டு இழுத்தது. இந்த நிலையில் கடந்த அரை நூற்றாண்டு கால தலைமைத்துவ இயலாமை வட்டுக்கோட்டை …
-
- 14 replies
- 1.3k views
- 1 follower
-
-
தமிழர்களின் சுயநிர்ணயத்துக்கு இந்திய ஆதரவு கிடைக்குமா? கலாநிதி சர்வேந்திரா கடந்த வெள்ளிக்கிழமை 27.11.2015 அன்று மாவீரர் நாள் நிகழ்வுகள் உலகின் பல நாடுகளிலும் இடம்பெற்றன. தமக்காக உயிர்நீத்த மாவீர்களுக்கு மரியாதை வணக்கம் செலுத்துவதில் மக்கள் உணர்வுபூர்வமாய் ஈடுபட்டனர். மாவீரர்நாள் அறிமுகப்படுத்தப்பட்ட 1989 ஆம் ஆண்டில் இருந்து 2008 ஆம் ஆண்டு வரை தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் மாவீரர் நாள் உரை உலகமெங்கும் கவனத்தைப் பெறுவதாக அமைந்திருக்கும். தலைவர் பிரபாகரன் அவர்கள் 2008 நவம்பர் மாதம் 27 ஆம் திகதி ஆற்றிய இறுதி மாவீரர்நாள் உரையை இவ் வருட மாவீரர் நாள் அன்று மீள வாசித்துப் பார்த்தேன். அதில் இந்தியாவுடன் நட்பினை ஏற்படுத்துவ…
-
- 0 replies
- 1.3k views
-
-
அமெரிக்கா பிரிட்டன் கனடாவைத் தொடர்ந்து இப்போது ஐரோப்பிய யூனியனும் விடுதலைப் புலிகளை தடைசெய்யப் போகின்றது என்று ஒரு கதை அடிபடுகின்றது. தடை செய்யுமா? இல்லையா? என்று பலத்த வாதப்பிரதிவாதங்களும் கருத்தெடுப்புகளும் கூட நடை பெறுகின்றது. தடை செய்யும் செய்யாது என்பதற்கு அப்பால் ஏன் தடைசெய்கின்றன என்பதற்கான காரணங்களையும் அப்படித் தடைசெய்வதனால் ஏதாவது பலனை இந்நாடுகள் பெறுகின்றனவா? என்பதையும் நாம் ஆராய்வோமானால் பல சுவாரஸ்யமான விடயங்களை நாம் அறிந்து கொள்ளலாம். தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பது இலங்கையில் தன் இறைமையையும் சுதந்திரத்தையும் மீட்டெடுப்பதற்காக தமிழ் மக்கள் நடாத்திவரும் போராட்டமாகும். விடுதலைப் புலிகள் என்பது அம் மக்களில் பலர் போராட்டமே வாழ்வாகக் கொண்டு ஒட்டுமொத்த தமிழ்…
-
- 1 reply
- 1.3k views
-