அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9224 topics in this forum
-
-
- 18 replies
- 1.9k views
-
-
செப்ரெம்பர் 1, 1939 அதிகாலை நான்கு நாற்பதுக்கு ஜேர்மனி தனது தாக்குதலை ஆரம்பித்தது. திடீரென்று போர் தொடுக்க முடியாதே! அதற்காக ஒரு காரணத்தையும் ஜோடனை செய்து வைத்திருந்தார்கள். சமீப காலமாக, போலந்து சரியில்லை. எப்போதும் போர் குரோதத்துடன் இருக்கிறது. எல்லைப்புறத்தில் இருந்த அப்பாவி ஜேர்மனிய வீரர்களை தாக்கிக் கொண்டிருக்கிறது. இனியும் பொறுக்க முடியாது என்னும் நிலையில் நாங்கள் அவர்களை எதிர்தாக்குதல் நடத்த முடிவு செய்துள்ளோம். கவனிக்கவும் இது எதிர்த்தாக்குதல் மட்டுமே இது எதிர் தாக்குதல் மட்டுமே என்று காட்டுவதற்காக நாசிகளின் பிரச்சாரப்பிரிவு சிறப்பான முன்னேற்பாடுகளை ஓகஸ்ட் 31 திகதி இரவே செய்திருந்தது. ஓகஸ்ட் 31 மதியமே போலந்து மீதான தாக்குதலுக்கு ஹிட்லரால் கட்டளையிடப்பட்டு…
-
- 0 replies
- 980 views
-
-
புதிய அரசு செல்லப்போகும் பாதையும் சிறுபான்மையின மக்களின் கேள்வியும் August 14, 2020 பொது ஜன பெரமுன அரசாங்கம் பதவியேற்றுக்கொண்ட இரண்டு தினங்களுக்குள்ளாகவே அது எந்தத் திசையில் பணயிக்கப்போகின்றது என்பது அதன் ஒவ்வொரு செயற்பாடுகளின் மூலமாகவும் தெளிவாகியிருக்கின்றது. அமைச்சரவையில் இரண்டே இரண்டு சிறுபான்மையினர். அமைச்சரவைப் பதவியேற்பின் போது சிறுபான்மையினருக்கான அடையாளங்கள் அகற்றப்பட்ட சிங்கக்கொடி. பதவியேற்பு நிகழ்வில் பௌத்த மதத் தலைவர்களுக்கு மட்டுமே இடமளிக்கப்பட்டமை. காணி, காவல்துறை அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்கப்போவதில்லை என்ற அதற்குப் பொறுப்பான அமைச்சர் சரத் வீரசேகரவின் அறிவிப்பு. அமைச்சுக்களின் செயலாளர்கள் அனைவருமே ச…
-
- 0 replies
- 476 views
-
-
-
- 0 replies
- 562 views
- 1 follower
-
-
முன்னணிக்குள் வந்த முட்டுப்பாடு - கபில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குள் அண்மையில் நடந்து வரும் சம்பவங்கள், பொதுத் தேர்தலில் கிடைத்த இரண்டு ஆசனங்கள், அந்தக் கட்சிக்கு வெற்றியாக அமைந்திருக்கிறதா அல்லது குழப்பத்தைக் கொடுத்திருக்கிறதா என்ற சந்தேகத்தையே ஏற்படுத்துவதாக உள்ளது. கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், செயலாளர் செல்வராஜா கஜேந்திரனும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டு விட்ட நிலையில், கட்சிக்குள் கலகம் தீவிரமடையத் தொடங்கியிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக, தேசிய அமைப்பாளர் மற்றும் பேச்சாளர் பதவிகளில் இருந்த சட்டத்தரணி மணிவண்ணன், முதலில் அந்தப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். அதன் பின்னர், அவரது உறுப்புரிமையும…
-
- 0 replies
- 530 views
-
-
எழுக தமிழிற்குப் பின்னரான இலங்கைத்தீவின்அரசியல் – நிலாந்தன்:- எழுக தமிழிற்கு எதிராக தென்னிலங்கையில் தோன்றிய எதிர்ப்பு எழுக தமிழின் முக்கியத்துவத்தை அதிகப்படுத்தியுள்ளது. ‘எழுக தமிழ்’; தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்திருக்கக் கூடிய விளைவுகளை விடவும் அதிகரித்த விளைவை அது தென்னிலங்கையில் ஏற்படுத்தியிருக்கிறது என்று கூடச் சொல்லலாம். இத்தனைக்கும் எழுக தமிழ் ஒரு போர்ப்பிரகடனம் அல்ல. அது யாருக்கும் எதிரானது அல்லவென்று விக்னேஸ்வரன் தனது உரையின் தொடக்கத்திலேயே குறிப்பிட்டிருந்தார். அவர் தனது உரையில் பாவித்த வார்த்தைகளிலும் சரி கருத்துக்களைத் தெரிவித்த விதத்திலும் சரி ஆகக் கூடிய பட்சம் அந்த உரையை ஒரு நல்லெண்ணச் சமிக்ஞையாகக் காட்டவே முற்பட்டார். …
-
- 0 replies
- 242 views
-
-
மகிந்தவின் நினைவு மறதியும் சுமந்திரனின் நினைவு ஏந்தலும்! – பனங்காட்டான் October 4, 2020 பனங்காட்டான் இந்தியப் பிரதமர் மோடியுடன் உரையாடியபோது அவர் தெரிவித்த 13வது அரசியல் திருத்த அமுல் பற்றி தமக்கு நினைவில்லையென்று கூறி தப்பப்பார்த்த மகிந்தவையிட்டு ஊடகவியலாளர்கள் அனுதாபப்பட்டனர். திலீபனின் தியாகத்துக்கான நினைவேந்தலை முழுமையாக பகிஷ்கரித்த சுமந்திரன், இதனை நடத்த வேண்டுமென்ற அதிகளவு உணர்வு தமிழ் மக்களிடம் தற்போது இல்லையென்று கூறி அவர்களின் கடுமையான கோபத்துக்கு ஆளாகியுள்ளார். இதனால் தமிழர் தேசத்தில் ‘சுமந்திரன் நீக்க அரசியல்’ மேலோங்கி வருகிறது. ————————————- இந்த வாரமென்பது இலங்கை அரசியலைப் பொறுத்தளவில் பரந்துபட்ட பல விடயங்களைக் கொண்டதாக அமைந்திருந…
-
- 0 replies
- 447 views
-
-
பாராளுமன்றத்திலும் ஆட்டம் காட்டிய ”கொரோனா” – பா.கிருபாகரன் மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் சனிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா கொத்தணி சமூகத்துக்குள் இறங்கியதனால் 1050 க்கும் மேற்பட்டோர் ஒரு சில தினங்களுக்குள் கொரோனா தொற்றாளர்களானதுடன் இலங்கையின் 16 மாவட்டங்கள் கொரோனாவின் ஆட்சிக்குள் வந்துள்ள போதும் கடந்த வார பாராளுமன்ற அமர்வுகள் எவ்வித தடையுமின்றி இடம்பெற்று முடிந்துள்ளன. பாராளுமன்ற அமர்வுகளுக்கு கொரோனாவினால் தடை ஏற்படாதபோதும் கொரோனா அச்சுறுத்தல் தொடர்பில் அரச,எதிர்க்கட்சியினரிடையில் சபையில் ஏற்பட்ட கருத்து மோதல்களினால் கொரோனாவின் தாக்கம் பாராளுமன்றத்திலும் வெளிப்பட்டது. முதல் நாள் அமர்வான செவ்வாய்க்கிழமையே கொரோனா கொத்தணியை எதிர்க்கட்சிகள் கையில் எடுக்குமென எதி…
-
- 0 replies
- 714 views
-
-
20வது திருத்தச் சட்டம் தொடர்பாக பூரண விளக்கத்துடன் மயிலத்தமடு மேச்சற்தரை மக்களுக்கு தெளிவூட்டல்
-
- 0 replies
- 415 views
-
-
ஆவா குழுவின் தேவை யாருக்கானது? ஆவா குழுவோடு தொடர்புடையவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டு யாழ்ப்பாணத்தில் சில இளைஞர்கள் பயங்கரவாதத் தடைப் பிரிவுப் பொலிஸாரினால் கடந்த வாரம் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். அதில், தமிழ் அரசியல் கட்சியொன்றின் முன்னணி செயற்பாட்டாளர் ஒருவரும் அடக்கம். கடந்த மாதம் 20 ஆம் திகதி நள்ளிரவு யாழ்ப்பாணம், கொக்குவில், குளப்பிட்டிச் சந்தியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரினால் படுகொலை செய்யப்பட்டார்கள்.அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு, கிழக்கு முழுவதும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்த போது, கடந்த 23 ஆம் திகதி சுன்னாகம் பகுதியில் சிவில் உடையிலிருந்த பொலிஸார் இருவர் க…
-
- 1 reply
- 470 views
-
-
தமிழ்த் தேசிய அரசியலில் ‘மூளை’யின் வகிபாகம் -புருஜோத்தமன் தங்கமயில் எதிரி அசுர பலத்துடன் இருக்கும் போதுதான், தமிழ்த் தேசிய அரசியல் தன்னுடைய மூளையைப் பயன்படுத்தி, செயற்பட ஆரம்பிக்கின்றது. எதிரி ஒப்பீட்டளவில் சிறிதாகப் பலமிழந்தால் போதும், மூளைக்கு வேலை கொடுப்பதை நிறுத்திவிட்டு, தமிழ்த் தேசிய அரசியல் தனக்குள் குத்து வெட்டுப்படத் தொடங்கிவிடும். தமிழ்த் தேசிய அரசியல் தோற்றம் பெற்ற காலம் முதல், இதுதான் நிலை. தற்போது ராஜபக்ஷர்கள் அசுர பலத்துடன் ஆட்சியில் இருக்கிறார்கள். அதுவும் கேள்விகளுக்கு அப்பால், நினைப்பதையெல்லாம் செய்ய முடியும். அதற்கு 69 இலட்சம் மக்களின் ஆணை கிடைத்திருக்கின்றது என்பது ஒரு சாட்டு. சஜித் பிரேமதாஸவோ, அவரின் ஐக்கிய மக்கள் சக்தியோ என்ன ச…
-
- 0 replies
- 572 views
-
-
மாகாண சபைகளுக்கான தேர்தலும் ”கொரோனா இராஜதந்திரமும்” – தாயகன் புதிய அரசியலமைப்பில் மாகாண சபைகள் உருவாக்கத்தின் மூலாதாரமான 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் நீக்கப்பட வேண்டும், மாகாணசபைகள் ஒழிக்கப்பட வேண்டும்,மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படக்கூடாது என அரசின் பங்காளிகளும் முக்கிய அமைச்சர்களும் போர்க் கொடிதூக்கியுள்ள நிலையில் அதற்கான நகர்வுகளையே மேற்கொண்டு வந்த கோத்தபாய ராஜபக்ச அரசு ,திடீரென 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதமளவில் மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்த முயற்சிப்பதன் பின்னணி என்ன? 0 தாயகன் மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்தி, அதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கட…
-
- 0 replies
- 501 views
-
-
மனித நேய தொண்டர்கள் பற்றி எப்பொழுதும் எனக்கொரு மரியாதையுண்டு. அந்தவகையில் ஐல்லிக்கட்டுத்தடை தொடங்கியதிலிருந்து நாமும் இந்த விளையாட்டில் கொஞ்சம் வலிகளை ஏற்படுத்துகின்றோமோ அதனால் தான் பீட்டா(Peta) அமைப்பினருக்கு வலிக்கிறதோ என்ற சிறு சந்தேகம் இருந்தது. ஆனால் Peta வை சேர்ந்த ராதா ராஜன் அவர்கள் பேசிய ஒரு வரியில் எல்லாமே உடைந்துபோயிற்று. அவரது தூற்றுதல் என்பது தனது இனத்தை (பெண்களையே) குறி வைப்பதாக உள்ளது. இவ்வாறு தனது பெண்மை சார்ந்து மனிதாபிமானத்தோடு சிந்திக்க தெரியாத ஒருவர் மாட்டின் மீது பற்று வைக்கிறார் என்பதெல்லாம் வெறும் பாசாங்கு. பணத்தைக்கண்டால் பிணமும் வாய் திறக்கும் என்பதை தவிர வேறொன்றுமில்லை. பணம் துட்டு மணி மணி..... இனி ஆண்டவனாலும் தமிழிச்சிகளிடமிருந்து இவ…
-
- 1 reply
- 705 views
-
-
‘சல்லிக்கட்டு மீட்பு’ தமிழக தன்னெழுச்சியான வரலாறு பேரெழுச்சியும் சீரான ஒழுங்கும் பேணப்பட்ட சல்லிக்கட்டு மீட்புக்கான தமிழக மக்களின் போராட்டத்தின் மீது, அரச இயந்திரமும் சதிகாரர்களும் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டு வரலாற்றின் கறுப்புப் பக்கங்களை நிரப்பியிருக்கின்றார்கள். கொண்டாட்ட மனநிலையோடு எழுதப்பட்டிருக்க வேண்டிய இந்தப் பத்தியை, கோபமும் ஆற்றாமையும் கலந்த மனநிலையோடு எழுத வேண்டி ஏற்பட்டிருக்கின்றது. அரசியல் உரிமைகளுக்கான போராட்டத்தினை 70 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னெடுத்து வந்திருக்கின்றவர்கள் என்கிற ரீதியில் ஈழத்தமிழர்களுக்கு போராட்டங்கள் ஒன்றும் புதிதல்ல. அதுபோலவே, வெற்றிகளும் தோல்விகளும் புதியவையல்ல. ஆன…
-
- 0 replies
- 470 views
-
-
அல்கைதா அல்ஜிஹாத் என்ற நூலின் பிரதானமான கருத்துக்கள் வருமாறு; சர்வதேச முஸ்லிம் அடிப்படைவாதம் உலகில் பல பௌத்த நாடுகளின் வரலாறு அழிந்து போனதற்கு முஸ்லிம் அடிப்படைவாதத்தின் ஆக்கிரமிப்பு தான் காரணமாகும். ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியா வரையிலும் இதுதான் பகிரங்க உண்மையாகும். இப்போதுள்ள ஈரான், ஈராக்,மக்கா மற்றும் அதனைச் சூழ உள்ள பகுதிகளிலும் ஒரு காலத்தில் பௌத்த வழிபாடுகள் நடந்துள்ளன. (முகவுரையில்) தற்போது முழு உலகத்திலும் இஸ்லாத்தின் பரவலுக்கும் அடிப்படைவாதத்துக்கும் பணம் கொடுக்கும் நாடாக சவூதி அரேபியா மாறியிருக்கிறது. இஸ்லாமிய அடிப்படை வாதம் உலகம் பூராவும் பரவுவதற்கும், ஷரீஆ சட்டத்தை பரப்புவதற்கும் ஈரானும் அடிப்படையாக அமைந்திருக்கிறது. இலங்கையின் அட…
-
- 0 replies
- 931 views
-
-
‘வெள்ளை’ இனவாதத்துக்கு முடிவு வருமா? இனவாதம் தொடர்பாகவும் மதவாதம் தொடர்பாகவும் பாகுபாடுகள் தொடர்பாகவும், உலகுக்கெல்லாம் பாடமெடுக்கும் ஐக்கிய அமெரிக்கா, அண்மைக்காலத்தில் சிறிது அடக்கி வாசிப்பதைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அந்த நாட்டில், அண்மைக்காலத்தில் பகிரங்கமாகவே ஆரம்பித்திருக்கும் இனவாதங்களும் மதவாதங்களும் பாகுபாடுகளும் தான், இதற்கான காரணங்களாக இருக்கின்றன. அதற்காக, போர்க்குற்றம் தொடர்பாகவும் பாகுபாடு தொடர்பாகவும், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் ஐ.அமெரிக்கா பாடமெடுத்த போது, அது தேனும் பாலும் ஓடும் நாடாகக் காணப்பட்டதா என்றால், இல்லை. ஈராக் போர் என்ற மிக மோசமான, கொடூரமான முடிவை எடுத்து, அதன் ம…
-
- 0 replies
- 497 views
-
-
மலையகத்தில் மொழியுரிமை இலங்கையில் தமிழும் அரசகரும மொழியாகவுள்ளது. எனினும், நடைமுறையில் தமிழ் மொழிக்குரிய இடம் வழங்கப்பட்டிருக்கின்றதா? என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. குறிப்பாக, தமிழ் மக்கள் செறிந்து வாழும் மலையகப் பகுதிகளில் அரச அலுவலகங்களில் தமிழ்மொழி மூலமாக நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பல்வேறு சிரமங்கள் காணப்படுகின்றன. தமிழ் ஏட்டளவில் அரச கரும மொழியாக இருந்து வருவதனையே அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இந்நிலை மாற்றப்பட்டு மலையக மக்கள் தமிழில் நடவடிக்கைகளை மேற்கொள்ள இடமளிக்கப்பட வேண்டும் என்று மலையக புத்திஜீவிகள் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. …
-
- 0 replies
- 1k views
-
-
ஆட்சிமாற்றத்திற்கு பின்னர் மிகவும் அமைதியாக இருந்த முன்னாள் பாதுகாப்புச் செயலரான கோட்டாபய ராஜபக்ஷ இனியும் தான் அமைதிகாக்கப் போவதில்லை என்று தெரிவித்திருக்கின்றார். எலிய (வெளிச்சம்) என்னும் புதிய சிவில் சமூக அமைப்பொன்றை அறிமுகம் செய்யும் நிகழ்விலேயே கோட்டாபய இவ்வாறு தெரிவித்திருக்கின்றார். புதிய அரசியல் யாப்பு என்னும் பெயரில் பிரிவினைவாதிகளை திருப்திப்படுத்தும் முயற்சிகள் இடம்பெறுவதாக குறிப்பிட்டிருக்கும் அவர், புதிய அரசியல் யாப்பை எதிர்த்து களமிறங்கப் போவதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார். இதிலிருந்து கோட்டாபய புதிய அரசியல் அமைப்பை எதிர்த்தல் என்பதையே தனது அரசியல் பிரவேசத்திற்கான துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தப் போகின்றார் என்பதில் ஜயமில்லை. புதிய அரசியல் யாப்பு தொடர்பான …
-
- 4 replies
- 604 views
-
-
கைவிட்ட நேட்டோவும் கைதூக்கப்போகும் யுக்கிரேனும். | இந்திரன் ரவீந்திரன் | ரதன் ரகு
-
- 1 reply
- 595 views
-
-
இந்திய அமைதிப்படை இலங்கை தமிழர்களின் விரோதியாக மாறியது எப்படி? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க Image captionஆழ்ந்து சிந்திப்பதற்கும், நினைவுகூர்வதற்குமான நேரம் 1987ல் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அமல்படுத்தவும், தமிழ் ஈழப் போராளிக்குழுக்களின் ஆயுதங்களைக் களையவும், இலங்கைக்கு அனுப்பப்பட்ட, இந்திய அமைதி காப்புப் படை ( ஐ.பி.கே.எஃப்) அங்கு பின்னர் மோதல்களில் சிக்கியது. இந்திய ராண…
-
- 4 replies
- 1.7k views
-
-
நீங்கள் தொடர்ச்சியாக தெனிந்திய ஊடகங்களை வாசிப்பவராயின், திடீரென்று இவர்கள் எமக்கு ஆதரவு போல் இப்ப எழுதுறாங்கள் என்பதைக் கவனித்து இருப்பீர்கள். எனக்கு என்னவோ "ரா" எங்களை திரும்ப முட்டாள் ஆக்க முயற்சிக்கிறாங்கள் போல இருக்கு. நீங்கள் இது பற்றி என்ன நினைக்கிறீங்கள்? எம்மக்களுக்கு அநியாயம் மிக அளவில் செய்தது இந்தியாதான் என்பது என் அபிப்பிராயம். சிங்களவங்கள் கூட இந்த "naa1kaLu88u " சற்று குறைவாகத்தான் அநியாயம் செய்தாங்கள்.
-
- 3 replies
- 900 views
-
-
1 ‘வியூகம்’ – இந்த சஞ்சிகை குறித்து சில விடயங்களை பதிவு செய்ய வேண்டுமென்று எண்ணம் சில நாட்களாகவே இருந்தது. இவ்வாறான முயற்சிகள் குறித்து ஈடுபாடுள்ள நன்பர் ஒருவரும் இது குறித்து நீங்கள் சில விடங்களை பகிர்ந்து கொள்ளலாமே என்றும் கேட்டிருந்தார், எனினும் இப்போதுதான் அதற்கான சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது. இவ்வாறான கருத்தியல் விவாதங்களில் எல்லாம் ஒரு வகையான காதல் நீடித்த காலமொன்று இருந்தது உண்மைதான் ஆனால் இப்போதெல்லாம் இதில் பெரியளவு ஈடுபாடு காட்டுமளவிற்கு மனம் ஒப்புவதில்லை. இவ்வாறு கோட்பாடு, புரட்சிகர அரசியல் என்றெல்லாம் சொற்கள் வழி நம்மை அடையாளப்படுத்த முற்படுவது ஒரு வகையில் நமது ஆத்மதிருப்தி தொடர்பான விடயங்களோ என்றும் எண்ணத் தோன்றுகின்றது. எனினும் இந்த குழுவினரின் கடந்தக…
-
- 5 replies
- 1.3k views
-
-
இலங்கை தமிழரசு கட்சியின் மேலாதிக்கம் தொடருமா? யதீந்திரா தமிழீழ விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்கு பின்னரான கடந்த எட்டு ஆண்டுகளாக இலங்கை தமிழரசு கட்சியே தமிழ் அரசியலில் மேலாதிக்கம் செலுத்துவருகிறது. இந்த மேலாதிக்கத்தின் மையமாக இருப்பவர் இரா.சம்பந்தன். இந்தக் கட்டுரையை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கின்ற தருணம் வரையில், சம்பந்தன் என்னும் மனிதர்தான் தமிழரசு கட்சியின் ஒரேயொரு பலமாக இருக்கின்றார். சம்பந்தன் இவ்வாறானதொரு இடத்திற்கு அவரது திறமையின் காரணமாக மட்டும் வரவில்லை. சம்பந்தனின் காலத்தை ஒட்டிய பலர் உயிரோடு இல்லாத ஒரு சூழலில்தான் சம்பந்தன் தமிழ் மக்கள் மத்தியில் வாழ்பவர்களில் முக்கியமானவர் என்னும் தகுதியை பெற்றார். இன்று அவர் இலக…
-
- 0 replies
- 393 views
-
-
வெறும் விழலுக்கு இறைத்த நீர் முல்லைத்தீவு மாவட்டத்தில், புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் உள்ள வள்ளிபுனம் கிராமத்தில், தற்காலிக கொட்டிலில், அடிப்படை வசதிகள் அற்ற நிலையில், வறுமையில் வாடிய குடும்பம் ஒன்றுக்கு, சிறிலங்கா பொலிஸார் வீடொன்றைக் கட்டிக் கொடுத்துள்ளனர். அந்த வீட்டைப் பொலிஸ் மா அதிபர், நாடாவை வெட்டித் திறந்து வைத்து, வீட்டின் திறப்பையும் குடும்பத்தினரிடம் கையளித்தார். யாழ்ப்பாணத்தில் படைத்தளபதியின் ஏற்பாட்டில், இரண்டு நிறுவனங்கள் இணைந்து, வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட ஐம்பது மாணவர்களுக்கு, வருடாந்தம் ஐயாயிரம் ரூபாய் வீதம் ஐந்து ஆண்டுகளுக்குப் புலமைப்பரிசில் வழங்க உள்ளது. படைய…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஜனாதிபதி தேர்தலில் மோதிக்கொள்ளப்போவது யார்? ஜனாதிபதித்தேர்தல் 2020 ஆம் ஆண்டு நடக்குமா? அல்லது நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்கப்படுமா? போன்ற கேள்விகளுக்கு இதுவரை சரியான பதில்கள் கிடைக்காமல் இருக்கின்ற சூழலில் அடுத்த ஜனாதிபதித்தேர்தலில் என்ன நடக்கப்போகின்றது என்பது குறித்து தற்போது அனைத்துத் தரப்பினரும் சிந்திக்க ஆரம்பித்து விட்டனர். அதாவது அடுத்த ஜனாதிபதித்தேர்தலை இலக்குவைத்து தற்போது அரசியல் காய்நகர்த்தல்களை அரசியல் கட்சிகள் ஆரம்பித்து விட்டதை காண முடிகின்றது. ஜனாதிபதித்தேர்தல் நிச்சயமாக நடக்கும் என்ற நம்பிக்கையில் ஒரு சாரார் அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கை தொடர்பில் காய்நகர்த்தல்கள…
-
- 1 reply
- 488 views
-