அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9226 topics in this forum
-
உண்மையை அச்சமின்றிச் சொல்லும் ஒரு விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்படுமா? நிலாந்தன்- 27 செப்டம்பர் 2015 போர்க் குற்ற விசாரணைகள் என்று வந்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தங்களுக்குத் தீங்கிழைத்தவர்களைப் பெயர் சொல்லிச் சுட்டிக்காட்டக்கூடிய நிலைமைகளே அதிகம் உண்டு. ஏற்கனவே உருவாக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் முன் தோன்றிய பல சாட்சிகளும் அவ்வாறு ஏற்கனவே பெயர்களைக் குறிப்பிட்டிருக்கின்றார்கள். இந்நிலையில் வெளிப்பார்வையாளர்கள் அதாவது வெளிநாட்டவர்கள் பங்குபற்றும் விசாரணைகளின்போது தமிழ் மக்கள் இப்போது இருப்பதை விடவும் துணிச்சலாக சாட்சியமளிப்பார்கள். சுமார் மூன்று தசப்தங்களுக்கு மேலான ஆயுத மோதல்களின்போது அனைத்துலக தொண்டு நிறுவனங்கள் மற்றும் மனித நேய அமைப்புக்கள் போன்றவற்றின் பிர…
-
- 0 replies
- 185 views
-
-
அரசியல் கருவிகளா மனித உரிமைகள்? ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் குழுவின் தலைவராக சவூதி அரேபியாவைச் சேர்ந்த பைஸால் பின் ட்ரட் நியமிக்கப்பட்டுள்ளார். ஜெனீவாவிலுள்ள சவூதி அரேபியாவுக்கான தூதுவரான இவர், தனது நியமனத்தை அண்மையில் பெற்றுக் கொண்ட செய்தியானது, உலகம் மீது அதிர்ச்சிகளை ஏற்படுத்தியிருக்கிறது. அத்தோடு, ஐக்கிய நாடுகள் சபையினதும் அதன் மனித உரிமைகள் பேரவையினதும் மீதான சந்தேகங்களை மீண்டும் எழுப்பியிருக்கிறது. ஐக்கிய நாடுகளும் அதன் மனித உரிமைகள் சபையும், மேற்கத்தேய நாடுகளாலும் வல்லரசுகளாலும் கட்டுப்படுத்தப்படுகின்றன. அத்தோடு, அரசியல் கருவிகளாவே அவை காணப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு, தற்போது மீண்டும் எழுப்பப்படும் வாய்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது. மனித உரிம…
-
- 0 replies
- 546 views
-
-
அரசுகளின் நீதி - நிலாந்தன்:- 20 செப்டம்பர் 2015 அனைத்துலக விசாரணை எனப்படுவது ஈழத்தமிழர்களின் ஒரு கூட்டுக் கனவு. தமிழர்களில் பெரும்பாலானவர்கள் அப்படி ஒரு விசாரணையைத்தான் கோரி நிற்கிறார்கள். தமிழ் மக்களின் ஆணையைப் பெற்ற கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் அப்படி ஒரு விசாரணைதான் கோரப்பட்டிருக்கிறது. ஆனால் அதே சமயம் கூட்டமைப்பு ஆட்சிமாற்றத்தின் பங்காளியாகக் காணப்படுகிறது. எனவே மாற்றத்தைப் பாதுகாக்க வேண்டிய கூட்டுப் பொறுப்பு கூட்டமைப்புக்கு உண்டு. மாற்றத்தைப் பாதுகாப்பது என்றால் அனைத்துலக பொறிமுறையை ஆதரிக்க முடியாது. ஏனெனில் மாற்றத்தின் பிதாக்களான மேற்கு நாடுகளும், இந்தியாவும் தூய அனைத்துலக பொறிமுறையை ஏற்றுக் கொள்ளவில்லை. தென்னிலங்கையில் உள்ள சிங்களத் தலைவர்கள…
-
- 0 replies
- 282 views
-
-
சம்பந்தரின் இலக்கு? யதீந்திரா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டமை மற்றும், கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளின் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் குழுக்களின் பிரதித் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டமை ஆகியன தமிழ்த் தேசிய அரசியல் சூழலில் பலவிதமான விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது. சம்பந்தர் ஒரு சிங்கள எதிர்க்கட்சித் தலைவரைப் போன்று செயலாற்றப் போகின்றார் என்று ஒரு சாராரும், அவரால் தொடர்ந்தும் தமிழ் மக்களின் உரிமைசார் அரசியலை வீரியத்துடன் முன்னெடுக்க முடியாதென்று இன்னொரு சாராரும், இல்லை - இன்றைய சூழலை சாதகமாக கையாளுவதற்கு மேற்படி பதவி நிலைகளை காத்திரமாக பயன்படுத்த முடியுமென்று இன்னொரு தரப்ப…
-
- 4 replies
- 523 views
-
-
சம்பந்தனும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டபோது அந்தப் பதவியினால் தமிழர்கள் தங்கள் இலக்கை அடையக்கூடியதாக இருக்குமா என்பதே தமிழர்கள் மத்தியில் எழுந்த கேள்வி. 38 வருடங்களுக்கு முன்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவியேற்ற வேளையிலும் தமிழர்கள் இதே கேள்வியைத்தான் கேட்டார்கள். ஆனால் வேறுபட்ட அரசியல் சூழ்நிலையில். 1977 ஜூலை பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன தலைமையில் ஐக்கிய தேசியக்கட்சி பாராளுமன்றத்தில் ஆறில் ஐந்துபங்க…
-
- 0 replies
- 366 views
-
-
ஜெனீவாவில் இந்தியாவின் நிலை என்ன? பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இந்தியப் பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தருணம் ஒன்றிலேயே இடம்பெற்றிருக்கிறது. ஒரு பக்கத்தில் ஐ.நா விசாரணை அறிக்கை கையளிக்கப்பட்டுள்ள சூழல், இன்னொரு பக்கத்தில், ஜெனீவாவில் அந்த அறிக்கை தொடர்பான விவாதங்கள் நடக்கவுள்ள சூழல், மற்றொரு புறத்தில் இந்த அறிக்கையின் தொடர்ச்சியாக இலங்கை தொடர்பான அடுத்தகட்ட நகர்வு என்ன என்று சர்வதேச சமூகம் தீர்மானிக்கவுள்ள சூழல். இந்தப் பின்னணியில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் புதுடெல்லிப்; பயணத்தின் போது, இந்த விவகாரம் குறித்து இந்தியத் தரப்புடனான பேச்சுக்களில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ரணில் விக்கிரமசிங்க, இலங்கையில் கடந்த ஒன்பது மாதங்களாக…
-
- 0 replies
- 320 views
-
-
சி.வியை அகற்றுவதற்கான முனைப்புக்கள் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை முதன்மைப்படுத்தி பதற்றமான அரசியல் சூழ்நிலையொன்றை, தமிழ்த் தேசிய அரங்கில் ஏற்படுத்திவிட வேண்டும் என்கிற முனைப்பில் சில தரப்புக்கள் ஈடுபட்டிருக்கின்றன. குறிப்பாக, வட மாகாண முதலமைச்சர் பதவியிலிருந்து, எப்பாடுபட்டாவது சி.வி.விக்னேஸ்வரனை அகற்றிவிட வேண்டும் என்கிற முனைப்புக்களை முன்னெடுக்கும் தரப்புக்களிடம் வெளிப்படுவது அதுதான். தமிழ் மக்கள் தமக்கான அரசியல் பாதையை சீராகக் கட்டமைப்பது தொடர்பிலான அக்கறையை மெல்ல மெல்ல வெளிப்படுத்த ஆரம்பித்திருக்கின்ற இன்றைய கால கட்டத்தில், வட மாகாண முதலமைச்சரை முன்னிறுத்திய பதற்றமான சூழ்நிலை தோற்றுவிக்கப்பட்டிருக்கின்றது. இவ்வாறான நிலைமை காலம் காலமாக தமிழ் மக்களை நோக…
-
- 0 replies
- 427 views
-
-
'சுமந்திர கலகம்' நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் தமது ஏகபோக பலத்தை தமிழ் மக்கள் மத்தியில் பெற்றுக்கொண்ட தமிழ்க் கூட்டமைப்பு எனப்படும் நான்கு கட்சிகளின் கூட்டணியில் தனியொரு கட்சியின் ஆதிக்கம் எனப்படுவது எதிர்காலத்தில் செல்வாக்கு செலுத்தப்போகின்றதா என்பதை பரிசோதிக்கும் நிகழ்வொன்று அண்மையில் நடைபெற்று அதற்கு விடையும் காணப்பட்டுவிட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுள் தமிழரசு கட்சியின் ஆதிக்கமும் முக்கியமாக சம்பந்தன் - சுமந்திரன் கூட்டுச் செல்வாக்கும் அபரிமிதமாக காணப்படுவதாக ஒரு பாரம்பரிய குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுவருவது வழக்கம். கூட்டமைப்பில் உள்ளவர்கள் அதனை அவ்வப்போது மூடிமறைத்தாலும் நடந்து முடிந்த பொதுத் தேர்தலின்போது சம்பந்தன் மேற்கொண்ட பிரசாரங்களின்போதும்…
-
- 2 replies
- 377 views
-
-
சர்வதேச விசாரணைகளை அமெரிக்கா முன்னர் பெயருக்குத் தூக்கிப் பிடித்திருந்தாலும் கூட, இன்று அதைத் தேவையற்றது என்று கூறுவது எதற்காக என்பதை இக்கட்டுரை கூறுகிறது, கொழும்பு இனவழிப்பு அரசாங்கத்துக்கு முற்றான பாதுகாவலனாகச் செயற்படும் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் போர்க்குற்றவாளிகள் இயல்பாகவே குற்றத்தை பிறர் மீது சுமத்துவதோடு தம்மீதிருக்கும் குற்றத்தை அகற்ற தம்மாலான அனைத்தையும் செய்வார்கள். புலிகள் மீது போர்க்குற்றங்களுக்கான பொறுப்புச் சுமத்தப்பட்டாலும் அவர்கள் இன்று இல்லை. ஆனால் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட மற்றத் தரப்பினர் இன்று சுதந்திரமாக நடமாடி வருகின்றனர். அமெரிக்க உதவி ராஜாங்கச் செயலாளர் ரொபேட் பிளேக் அவர்கள் "தார்மீகப் பொறுப்பெடுத்தல்" பற்றி அடிக்கடி குறிப்பிட்டு வருகிறா…
-
- 0 replies
- 1.8k views
-
-
முன்னர் ஒருமுறை ஊடகமொன்றில் ஆங்கில மூலத்தில் வந்திருந்த முள்ளிவாய்க்கால்ப் படுகொலை தொடர்பான கட்டுரை. சர்வதேச விசாரணைகள் என்பது தேவையில்லை, சாத்தியமற்றது, இதை இந்தியா ஒருபோதுமே அனுமதிக்காது எனப் பல செய்திகள் வந்திருக்கும் இன்றைய நிலையில் இந்தக் கட்டுரையை மீண்டும் தூசி தட்டி இங்கே இணைப்பது சாலப் பொறுத்தம் என்று நினைக்கிறேன். முள்ளிவாய்க்கால் படுகொலைகள் தொடர்பாகவும், இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாகவும் கொழும்பை விடவும் தில்லியே அதிக திகிலடைந்திருக்கிறது 2009 மேயில் இலங்கையில் தமிழர்கள் தோற்கடிக்கப்பட்டதன் முழுச் சூத்திரதாரி அந்நாட்டு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ என்றால் அது மிகையாகாது. இதில் மிகவும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒரு விடயம்…
-
- 0 replies
- 382 views
-
-
ஐயாவின் பதவி: வரமா வலையா? -ப.தெய்வீகன் 'தந்தையாய்', 'தளபதியாய்', 'தலைவராய்' பயணித்த தமிழர் அரசியல் தற்போது 'ஐயாவாய்' வந்து புதுவடிவம் பெற்றுநிற்கிறது என்றார் அண்மையில் என்னிடம் அரசியல் பேசிய முதியவர் ஒருவர். ஆம், நடந்து முடிந்த பொதுத்தேர்தல் பெறுபேறுகளுடன் அகன்ற மேற்குலக அதிகார மையத்தின் 'உத்தியோகபூர்மற்ற மாநிலமாக' மாறிவிட்ட இலங்கையின் எதிர்க்கட்சி தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரா. சம்பந்தன் அவர்கள் தெரிவாகியிருக்கிறார். இலங்கை தொடர்பான அனைத்துலக நிகழ்ச்சி நிரல் என்பது முறையான முன்முடிவுகளுடன் சீராக நகர்ந்து வருவதற்கான அருமையான உதாரணம் என்றால் சம்பந்தன் அவர்களது நியமனத்தை கூறலாம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் ஊடான நாடாளுமன்ற பதவி …
-
- 1 reply
- 1.3k views
-
-
எஸ் எம் வரதராஜன் எனது மதிப்பிற்குரிய நண்பரும் கௌரவ அமைச்சருமான மனோ கணேசன் அவர்கள் பாராளுமன்றத்தில் எடுத்துள்ள படம் எனக்கு பல நினைவலைகளை வாசகர்களுடன் பகிரத் தூண்டியது . வீரகேசரி ஊடகவியலாளர் ஒருவரால் திரு மனோ கணேசன் அவர்கள் பிடிக்கப்பட்டுள்ள இப் படத்தில் அவரின் பின்னணியில் உள்ள சுவர் ஒன்றில் பல பிரமுகர்களின் படங்கள் தெரிவதைக் காணாலாம். பாராளுமன்றம் சென்றவர்களுக்கு இவை என்னவென்று தெரியும். நான் செய்தி சேகரிக்கப்பதற்காகாச் சென்றதில்லை . பல தடவை பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் (தகவல்/ ஊடகம்) பங்குபற்றச் சென்றிருக்கிறேன். இரண்டு அமைச்சர்கள் "மீடியா" அமைச்சர்களாக இருந்த வேளை சுயாதீன தொலைகாட்சி சார்பில் பங்குபற்றியுள்ளேன் . அந்நேரம் தொலைபேசியில் படம் எடுக்கும் வசதிகள…
-
- 0 replies
- 282 views
-
-
பொதுத் தேர்தல் முடிவுகள் எமக்கு உரைக்கும் செய்திகள் பண்டிதத் தமிழ்ச் செயற்பாட்டாளர்களும் பாமரத் தமிழ் வாக்காளர்களும் நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தல் முடிவுகளைப் பற்றிப் பலரும் பல வியாக்கியானங்களைக் கொடுத்தாயிற்று. தேர்தல் காலத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை தீவிர அர்ப்பணிப்புடன் ஆதரித்த ‘புத்திஜீவிகள்’ பலரும் இன்று தாம் சார்ந்த கட்சியின் படுதோல்விக்கு நகைக்கத்தகு அர்த்தங்களைக் கற்பித்துக் கொண்டிருக்கின்றார்கள். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவு வழங்கிய ஊடகவியலாளர்களில் நிலாந்தன் முதன்மையானவர். தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் இவர் எழுதிய “தமிழ் வாக்காளர்களை எப்படி விளங்கிக் கொள்வது?” என்ற கட்டுரையில் தமிழ்த் தேசிய…
-
- 0 replies
- 283 views
-
-
சம்பந்தர் எதிர்க்கட்சித் தலைவராகியதன் மூலம் சாதிக்கப் போவது என்ன? இக்கேள்விக்குரிய பதில் மற்றிருகேள்விகளில் இருந்தே தொடங்குகிறது. முதலாவதுகேள்வி, அவர் எதிர்க்கட்சித் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டதற்கான உள்நாட்டுப் பின்னணிஎது? இரண்டாவது கேள்வி அவர் எதிர்க்கட்சித் தலைவராக தெரிவுசெய்யப்பட்டிருக்கும் பிராந்தியமற்றும் அனைத்துலக பின்னணி எது? முதலாவது கேள்வி. அவர் எதிர்க்கட்சித் தலைவராக ஏன் தெரிவுசெய்யப்பட்டார்? ஏனெனில் யார் எதிர்க்கட்சியார் ஆளும் கட்சி என்று துலக்கமாகக் கூற முடியாத ஓர வித கலங்கலான நிலை நாடாளுமன்றத்தில் தோன்றியுள்ளது. சரி. அப்படி ஒரு நிலை தோன்றக் காரணம் என்ன? காரணம் - ஜனவரி 08 ஆம் திகதி நிகழ்ந்த ஆட்சிமாற்றம்தான் அந்த ஆட்சி மாற்றமானது ஆளும் கட்சிக்கு எதிராக …
-
- 1 reply
- 288 views
-
-
பெண்களின் அரசியல் கோரிக்கையும் பருவகால வாக்குறுதிகளும் படம் | AP Photo/Eranga Jayawardena, FOXNEWS 2015 தேர்தல் நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தல் பெண்கள் பிரதிநிதித்துவத்தைப் பொறுத்தளவில் கறைபடிந்த ஒரு தேர்தல் என்றே கூறவேண்டும். பெண்கள் அமைப்புகள் 40 பெண்களாவது இம்முறை அங்கம் வகிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள். வேட்பாளர் பட்டியலில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, தேசியப் பட்டியலில் உள்ளடக்குவது போன்ற கோரிக்கைகளை நிர்பந்தித்து வந்தார்கள். 225 பேரை நாடாளுமன்றத்துக்கு அனுப்புவதற்காக 6,151 பேர் போட்டியிட்டனர். அதில் 556 பெண்வேட்பாளர்கள். அதாவது, இது மொத்த வேட்பாளர்களில் 9.2% வீதம். அதிக பெண்களை வேட்பாளர்களாக நிறுத்தியிருந்த மாவட்டம் கொழும்பு. கொழும்பில் 147 ப…
-
- 0 replies
- 312 views
-
-
உள்ளக விசாரணையும் இலங்கையின் வெளியுறவுக் கொள்கையும் இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் போன்றவற்றை விசாரணை செய்ய சர்வதேச விசாரணை நடாத்தப்படும் என்றுதான் கடந்த ஐந்து ஆண்டுகளாக பேசப்பட்டு வந்தன. இந்த நிலையில், அது உள்ளக விசாரணையாக மாற்றப்பட்டுள்ளது. அமெரிக்காவும் அதனை உறுதி செய்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையிலான புதிய அரசின் மீது அவ்வளவு நம்பிக்கை வந்து விட்டது என்பதையே இது எடுக்காட்டுகின்றது. மாற்றங்களை எற்படுத்தினார்களா? முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்ட மாறுதல்கள் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுடனான உறவிலும் மாற்றங்களை எற்படுத்தியிர…
-
- 0 replies
- 325 views
-
-
புலம்(ன்) பெயர் தமிழர்களின் கோடைக்கால விடுமுறையும் பொய்முகங்களும் – இரா.துரைரத்தினம் Published on September 1, 2015-1:28 pm · No Comments புலம்பெயர் தமிழர்கள் என்ற அடைமொழியுடன் மேற்குலக நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்கள் தங்களை பலம்மிக்க சக்தியாகவும், இலங்கையில் இருக்கும் தமிழ் மக்களின் மேய்ப்பர்கள் தாமே என்றும் ஒரு கற்பனை உலகிலேயே வாழ்கின்றனர் என்பதுதான் உண்மை. உதாரணமாக புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் என அழைக்கப்படும் தமிழர் ஒருங்கிணைப்பு குழு, ஈழத்தமிழர் அவை, நாடு கடந்த தமிழீழ அரசு போன்ற பல்வேறு அமைப்புக்களும் தங்களை சுற்றி ஒளிவட்டம் இருப்பதாக கற்பனை செய்து கொண்டிருந்தனர். இந்த ஒளிவட்டங்களை எல்லாம் கடந்த பொதுத்தேர்தலில் இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் முற்றாக தகர்த்தெறிந்…
-
- 7 replies
- 647 views
-
-
ஏமாற்றி விட்டதா அமெரிக்கா?Aug 30, 2015 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியதும், ஜெனிவா களம் குறித்த கலக்கத்துடன் காத்திருந்த இலங்கை அரசாங்கத்துக்கு, ஆறுதல் அளிக்கும் செய்தியோடு வந்திறங்கியிருந்தார் தெற்கு, மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால். இந்த ஆண்டில் – இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், அவர் மேற்கொண்ட மூன்றாவது பயணம் இது. கடந்த ஜனவரியில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி தேர்தலில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, பெப்ரவரி 2ஆம் திகதி கொழும்பு வந்திருந்தார் நிஷா பிஸ்வால். அந்தப் பயணத்தின் போது, அவர் கொழும்புக்கு ஒரு புதிய சமிக்ஞையைக் காட்டி விட்டுச் சென்றிருந்தார். மார்ச் மாதம் நடந்த ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 29ஆவது அமர்வ…
-
- 0 replies
- 259 views
-
-
தெற்கில் இனவாதம் தோற்கடிக்கப்பட்டுவிட்டதா? நிலாந்தன்:- 30 ஆகஸ்ட் 2015 தேர்தல் நடந்த அதே கிழமை கொழும்பில் வத்தளையில் ஒரு நட்சத்திர விடுதியில் ஒரு பயிலரங்கு நடத்தப்பட்டது. தேசியத்தைப் புரிந்துகொள்ளல் என்ற தலைப்பின் கீழான இப்பயிலரங்கில் மூவினத்தைச் சேர்ந்தவர்களும் பங்குபற்றினார்கள். இப்பயிலரங்கில் ஒரு நாள் ஒரு நாடகம் நிகழ்த்திக் காட்டப்பட்டது. அந்நாடகத்தின் பெயர் ‘ஒரு நாடு இருதேசம்’. அதில் இச்சிறு தீவில் உள்ள எல்லா அரசியல் போக்குளையும் பிரதிபலிக்கும் விதத்தில் பாத்திரங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. ஒரு நிகழ்ச்சித் தயாரிப்பாளர் அரசியல் கட்சி பிரமுகர்களை ஒரு நாடு இரு தேசம் என்றகருத்துத் தொடர்பாக பேச வைப்பதாக அந்த நாடகம் உருவாக்கப்பட்டிருந்தது. நாடகம் முடிந்தபின் வளவாளர்கள் …
-
- 0 replies
- 287 views
-
-
மேற்குலகின் இலங்கை மீதான ஈடுபாடு. சீனாவின் மடியில் இருந்து இலங்கை மீட்கப் பட்டு உள்ளது. அண்மைய தேர்தலில் ராஜபக்சே, ஜனநாயக ரீதியில் மண் கவ்வ வைக்க, பின்புலத்தில் மேற்கின் கடும் உழைப்பு இருந்தது அவதானிக்கப் பட்டு உள்ளது. ராஜபக்சேவின் வெற்றியானது, நாட்டினை மீண்டும் சீனாவின் கைக்கு கொண்டு செல்லும் நிலைமை கொண்டதாக இருந்தாலும், மைத்திரி எனும், அதிகார மையத்தினை சரியாக கையாண்டு அவரது தோல்வி உறுதிப் படுத்தப் பட்டு உள்ளது. அடுத்து என்ன? இந்திய நிலைப்பாடு இந்தியாவிலும் பார்க்க வேகமாக அமரிக்கா செயல்படுவது தெளிவாக தெரிகின்றது. சிலர் அமெரிக்க ஈடுபாடு, இந்தியாவிற்கு பிடிக்காவிடினும், சீனாவிலும் பார்க்க, அமெரிக்கா, பரவாயில்லை என்று கருத்து தெரிவிக்கின்றனர். தமிழ் நாட்டில், அமெரிக்…
-
- 0 replies
- 279 views
-
-
இலங்கைத் தேர்தல் - இனி என்ன? - தினமணி நாளிதழில் வெளிவந்துள்ள கட்டுரை. [Friday 2015-08-28 12:00] அமெரிக்கா, ஈழத்தமிழர் பிரச்சனையில் கொடூரங்களை விசாரிக்க சர்வதேச சுதந்திரமான விசாரணை என்ற நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கி, இலங்கையிலே உள்ளக விசாரணை நடத்தலாம் என்று நேற்றைக்கு அறிவித்துள்ளது பேடித்தனமானது. இலங்கையில் இந்த வருடம் இரண்டு தேர்தல்கள் முடிவடைந்து மைத்ரி சிரிசேனா அதிபராகவும், ரணில் விக்கிரமசிங்கே நான்காவது முறையாக பிரதமராகவும் பொறுப்பேற்றிருக்கிறார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி கூட்டணி 93இடங்களில் வெற்றிபெற்றது. அவர் போட்டியிட்ட கொழும்பு மாவட்டத்தில் இதுவரை யாரும் பெறாத அளவுக்கு 5,00,566 (preference vote) விருப்ப வ…
-
- 2 replies
- 756 views
-
-
சிங்கள பௌத்த மேனியாவும், சமஷ்டி போபியாவும் Sarawanan Nadarasa படம் | மாற்றம் Flickr தளம் ஏறத்தாழ சகல பிரதான தேர்தல் பிரசார மேடைகளிலும் தவறாத பேசுபொருளாக சமஷ்டி குறித்த சர்ச்சை பெரிதாக எழுந்திருந்தத்தை கண்டிருப்பீர்கள். சிங்கள பௌத்த பெரும்பான்மை மக்களுக்கு சமஷ்டி குறித்த பேரச்ச வெருண்ட உணர்வு (phobia) இனவாதிகளால் வளர்க்கப்பட்டு இன்று தாமும் அதற்குள் அகப்பட்டு அந்த நோய்க்கு இலக்காகி உள்ளனர் என்றே கூறவேண்டும். வெறித்தனமான சிங்கள பௌத்த மேலாதிக்க உணர்வென்பது (mania) ஏனைய இனங்களின் மீதான வெறுப்புணர்ச்சியையும், காழ்ப்புணர்ச்சியையும் மிகையாக வளர்த்தெடுத்து அதுவும் ஒரு தீரா நோயாகவும், பரப்பும் நோயாகவும் ஆக்கப்பட்டுள்ளது. சமஷ்டி பற்றி தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமது தேர்தல்…
-
- 0 replies
- 383 views
-
-
கஜேந்திரகுமாரின் தோல்வி கொள்கை நிலைப்பாட்டின் தோல்வியா? சர்வேந்திரா படம் | TAMIL DIPLOMAT நடைபெற்று முடிவடைந்த நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக தேர்தலுக்கு முன்னர் வெளியாகியிருந்த எனது கட்டுரையில் தேர்தலின் பின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தடம் புறளாமல் பாதுகாப்பதற்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு மக்கள் பிரதிநிதித்துவம் கிடைப்பது துணை புரியும் என்ற கருத்தினை வெளிப்படுத்தியிருந்தேன். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் ஒரு ஆசனத்தையாவது வெற்றி கொள்ளும் எனப் பொதுவாக எதிர்பார்க்கப்பட்ட போதும் அது நடைபெறவில்லை. இதனை கஜேந்திரகுமார் முன்வைக்கும் கொள்கையின் தோல்வியாக வியாக்கியானப்படுத்துவோரும் உள்ளனர். தமிழ்த…
-
- 2 replies
- 307 views
-
-
போர்க்குற்ற விசாரணை இல்லாத தேசிய அரசுக்கான உடன்படிக்கை! A.Nixon படம் | ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் தளம் புதிய அரசு ஒன்று அமைந்ததும் சர்வதேச நாடுகள் அதற்கு வாழ்த்து தெரிவிப்பது வழமை. ஐக்கிய நாடுகள் சபையும் பாராட்டும் வாழ்த்தும் தெரிவிப்பதுடன் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் போன்றவற்றை ஏற்படுத்த அரசிற்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் கூறியுள்ளது. ஆனால், ஐக்கிய நாடுகள் சபையின் வாழத்துச் செய்தியில் எந்தவொரு இடத்திலும் நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் இனப்பிரச்சினைக்கு குறிப்பிட்ட ஒரு காலப்பகுதியில் தீர்வு காணப்பட வேண்டும் என்ற அழுத்தங்கள் சொல்லப்படவில்லை. புதிய அரசா? புதிய அரசு என்று கூறினாலும் அந்த அரசில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்…
-
- 1 reply
- 344 views
-
-
தமிழ் வாக்காளர்களைஎப்படிவிளங்கிக் கொள்வது? நிலாந்தன்:- 23 ஆகஸ்ட் 2015 தமிழ் வாக்காளர்கள் மறுபடியும் கூட்டமைப்புக்குஓர் ஆணையைகொடுத்திருக்கிறார்கள். 2003 இல் இருந்துஅவர்கள் கொடுத்துவரும் ஓர் அணையின் தொடர்ச்சியா இது? ஆயுதமோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரான கடந்த சுமார் ஆறாண்டுகளுக்கு மேலாக கூட்டமைப்பின் செயற்பாடுகளைக் குறித்து தமிழ் வாக்காளர்கள் மத்தியில் அதிருப்தியும் விமர்சனங்களும் அதிகரித்துக் காணப்பட்ட ஓர் அரசியல் சூழலில் தேர்தல் முடிவுகள் இவ்வாறு அமைந்திருக்கின்றன. தமிழ் மக்கள் மத்தியில் உள்ள முன்னேறிய பிரிவினர் என்று கருதத்தக்க அரசியலை புத்தி பூர்வமாக அணுகும் தரப்பினர் கூட்டமைப்பின் மீது அதிருப்தியோடு காணப்பட்டார்கள். இக்கட்டுரை ஆசிரியர் உட்பட தமிழ் ஆய்வுப…
-
- 2 replies
- 1.5k views
-