அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9272 topics in this forum
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குரிய அதிகார உரிமை தங்களுக்கே இருப்பதால் அப் பெயரைப் பயன்படுத்தும் உரிமையைப் பெற்றுத் தருமாறு தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற அமைப்பு தேர்தல்கள் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகப் பத்திரிகைகள் மூலம் அறியக் கிடைக்கின்றது. குறித்த கோரிக்கைக் கடிதத்தின் உள்ளடக்கத்தை வாசித்த போது நாற்பதாண்டு காலத்திற்கு முந்திய உண்மை வரலாற்றை வெளிப்படுத்த வேண்டிய தேவையுள்ளது. உண்மை தெரிந்திருந்தும் அதை வெளிப்படுத்தாது விடுவது சமுதாயத்திற்குச் செய்யும் துரோகம் என்றாலும் அது தவறல்ல. பல்வேறு வழிகளில் பின்னடைவுகளைச் சந்தித்து வரும் நாம் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த்து விட்ட தவறுகளைச் சீர்செய்து,ஏற்படுத்தப்பட்ட தடைகள் இனியும் ஏற்படாமல் இருக்க வழி காண்பதே…
-
- 0 replies
- 690 views
-
-
சம்பந்தருக்கு பின்னரான தமிழர் அரசியல்? அ. நிக்ஸன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் பொறுப்பில் இருந்து விலகிச் செல்கின்றது. நிவாரண அரசியலுக்கு வாக்களிக்காமல் கொள்கை அரசியலுக்கு வாக்களித்த மக்களுக்கு கூட்டமைப்பு கொடுத்த நம்பிக்கை என்ன என்ற கேள்விகளைத் தவிர வேறு எதுவும் விஞ்சிக் காணப்படவில்லை. ஜெனீவா தீர்மானம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் செயற்பாட்டால் வந்தது என கூட்டமைப்பில் உள்ள சிலர் கூறுகின்றனர். ஜெனீவா தீர்மானத்திற்கு கூட்டமைப்பு கூடுதல் பங்காற்றியது என சுமந்திரன் நேரடியாகவே கூறுகின்றார். இறுதிக்கட்ட போரில் சரணடைந்தவர்களை கண்ட நேரடியான சாட்சியம் என்று அனந்தி சசிதரன் கூறுகின்றார்; ஜெனீவாவில் அனைத்தையும் கூறியதாகவும் அவர் சொல்கிறார். கூட்டுப்பொறுப்பு எங்…
-
- 4 replies
- 1k views
-
-
பழைய யாழ்க்களத்தில் இருந்த சில தலைப்புக்களை மீண்டும் இங்கே இணைகிறேன் புதிதாக வந்தவர்களுக்காக. எமது அரசியல் வரலாற்றை புரிந்து கொள்ள வேண்டுமானால் திராவிட இயக்கத்தின் தோற்றுவாயையும் அதற்கான காரணங்களையும் தெரிந்து கொண்டால் தான் அது எங்கணம் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் தாக்கம் செலுத்துகிறது என்பதையும் புரிந்து கொள்ளமுடியும்.இங்கே ஒருவர் வரலாறு தெரியாமல் அல்லது தெரிந்து கொண்டே திரிப்பதற்காக சில விசமத் தனமான சொல்லாடல்களை திராவிட அரசியல் சம்பந்தமாகச் செருகி வருகின்றார்.மேலும் இங்கு இது சம்பந்தமாக அறிய பலர் ஆவலாக இருப்பதாகப் புலப்படுகிறது. பெரியார்! http://www.yarl.com/forum/viewtopic.php?t=10028 திராவிட இயக்கக் கருத்துநிலையின் இன்றைய பொருத்தப்பாடு -**…
-
- 1 reply
- 23k views
-
-
பலன்தருமா கூட்டமைப்பின் குழுக்கள்? செல்வரட்னம் சிறிதரன் 03 மே 2014 பெரும்பான்மையான தமிழ் மக்களின் அரசியல் தலைமை பொறுப்பை ஏற்றுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பலமுள்ள ஓர் அமைப்பாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவர்கள் மத்தியில் நீண்டகாலமாகவே நிலவி வருக்கின்றது. கூட்டமைப்பு இறுக்கமான ஓர் அரசியல் அமைப்பாக இல்லையே என்ற ஆதங்கம் தமிழ் மக்கள் மத்தியில் யுத்தம் முடிவுக்கு வந்த காலம்தொட்டு தொடர்ந்து கொண்டிருக்கின்றது. நான்கு அல்லது ஐந்து கட்சிகளை உள்ளடக்கிய தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கென்று தனியான சின்னம் கிடையாது. யாப்பு கிடையாது. ஒரு கட்டமைப்பென்பதே கிடையாது. கூட்டமைப்பு என்று கூடி பேசுவார்கள். விவாதிப்பார்கள். கடுமையாக மோதிக்கொள்வார்கள். தீர்மானங்களைக் கூட நிறைவேற்ற…
-
- 1 reply
- 636 views
-
-
சிறிலங்கா மீது அமெரிக்கா மனித உரிமைக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததன் பின்னர், தற்போது சிறிலங்காவில் மீளிணக்கப்பாடு சவால்மிக்கது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளமை சிந்திக்க வேண்டிய விடயமாகும். இவ்வாறு கொழும்பை தளமாகக் கொண்ட The Sunday Leader ஆங்கில ஊடகத்தில் N Sathiya Moorthy* எழுதியுள்ள ஆரசியல் ஆய்வில் தெரிக்கப்பட்டுள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. மொழியாக்கத்தின் முதல்பகுதி இது. "சிறிலங்காவின் மீளிணக்கப்பாடு என்பது சவால் மிக்கதாக உள்ளமை நிரூபிக்கப்பட்டுள்ள போதும், இது தனது உள்நாட்டுப் போரை நிறைவுக்குக் கொண்டுவந்தமை அதன் நல்வாய்ப்பாகும். இவ்வாண்டு மார்ச் மாதத்தில் சிறிலங்கா மீது ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம்…
-
- 0 replies
- 446 views
-
-
மத்தல மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தையும் ஹம்பாந்தோட்டை ருஹூணு மாகம்புர துறைமுகத்தையும் நேரடியாக பார்வையிட்டு தகவல் திரட்டுவதற்காக அவ்விரண்டு இடங்களுக்கும் கடந்த 17ஆம் திகதி சென்ற ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது குண்டர்கள் முட்டை வீசியும் அவர்களை மிரட்டியும் இம்சிப்பதை தொலைகாட்சித் திரைகளில் நாடே கண்டது. அந்த குண்டர்கள் மத்தியில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணயைச் சேர்ந்த ஹம்பாந்தோட்டை மேயர் எராஜ் பெர்னாண்டோவும் இருப்பதையும் நாட்டு மக்கள் கண்டனர். ஆனால் இந்த தாக்குதலுக்கு தமது கட்சி பொறுப்பல்ல என்றும் அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களை ஐ.தே.க. விமர்சிப்பதனால் ஆத்திரமுற்ற சாதாரண மக்களே இந்த எம்.பிக்களை தாக்க முற்பட்டுள்ளனர் என…
-
- 0 replies
- 736 views
-
-
இங்கு அமைக்கப்பட்டுள்ள போர் நினைவகமானது எந்தவொரு வெற்றியையும் மக்கள் மனதில் பதிக்கவில்லை. மாறாக கணவன்மார், பிள்ளைகள் மற்றும் சகோதரர்களை இழந்த மக்களின் கசப்பான தோல்வியாகவே இது காணப்படுகிறது. இவ்வாறு சென்னையில் இருந்து வெளியாகும் The Hindu ஆங்கில நாளேட்டில் ஜேர்மனியை சேர்ந்த ஆய்வாளர் Gerrit Kurtz* எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. அதன் விபரமாவது: வன்னியில் இராணுவ வீரர் ஒருவர் ஒரு கையில் ஏ.கே 47 ரகத் துப்பாக்கியுடனும் மறுகையில் சிறிலங்காக் கொடியுடனும் நிற்பதைச் சித்தரிக்கின்ற வகையில் கல்லால் சிலை செதுக்கப்பட்டுள்ளது. இயந்திரத் துப்பாக்கியில் புறா ஒன்று அமர்ந்துள்ளது. தமிழ்ப் புலிகளுக்கும் சிறிலங்கா இராணுவ…
-
- 1 reply
- 370 views
-
-
‘பித்துப் பிடித்த பிக்கு’ நிலைமை: சிங்கள – பௌத்தவாதத்தின் இழிந்த பக்கமாக பொதுபலசேனா ஒரு நீண்ட அரசியல் கயிற்றில் பிணைக்கப்பட்டிருந்ததாகக் காணப்பட்ட, இந்த காட்டுமிராண்டி பௌத்த பிக்குகள், கட்டுப்பாடு இழந்து போயுள்ளனர். அவர்கள் தடுத்து நிறுத்தப்படல் வேண்டும். ஆனால், பொதுபலசேனா போன்ற குழுக்கள் பிரதிநிதித்துவம் செய்ய வந்துள்ள நிலைமை பிரதிபலிக்கின்ற சிக்கலான நிலையின் மீது ஒரு கடுமையான பார்வையைச் செலுத்துவதும் கூட அதிகளவுக்கு அவசியமாகின்றது. இது ஒன்றும் வேடிக்கை விநோதக் காட்சியல்ல, இது போருக்குப் பிந்திய இலங்கையின் அப்பட்டமான ஒரு நெறிமுறைப் பிறழ்வாகும்; அத்தோடு பொதுபலசேனா ஒரு சில மாத காலங்களிற்குள் அழிந்து போய்விடும் என எதிர்வு கூறிய வணக்கத்திற்குரிய. தம்பர அமில தேரர் (ம…
-
- 0 replies
- 603 views
-
-
பொலிஸாகும் பொது பலசேனா - செல்வரட்னம் சிறிதரன்:- 26 ஏப்ரல் 2014 நாட்டில் யுத்தம் முடிவடைந்துள்ளது என்று சொல்லப்படுகின்றது. உண்மையில் துப்பாக்கிச் சண்டைகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனவே தவிர, மோதல்கள் இன்னும் தொடரத்தான் செய்கின்றன. சத்தமின்றி, கத்தியின்றி இந்த மோதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதிகார பலம் என்ற ஆயுதமும், பெரும்பான்மை என்ற பலமும் இந்த மோதல்களில் தாரளமாகப் பயன்படுத்தப்படுகின்றது. இதனால் சிறுபான்மையினராக இருக்கின்ற மக்களும், சிறுபான்மை மதத்தவர்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள். நாட்டில் சட்டங்கள் இருக்கின்றன. ஒழுங்கு விதிகள் இருக்கின்றன. சட்டமும் ஒழுங்கும் நிலைநாட்டப்படுவதாகவும், அதற்குப் பொறுப்பாக பொலிசாரும், பொலிசாருக்கு உதவியாக இரா…
-
- 0 replies
- 464 views
-
-
இலங்கை விவகாரம், இந்தியாவை மீறிச் சென்றுவிட்டதா? - யதீந்திரா அமெரிக்க அனுசரணையின் கீழ், இலங்கை தொடர்பில் கொண்டுவரப்பட்ட பிரேரணை, 23 நாடுகளின் ஆதரவுடன் வெற்றிபெற்றதன் பின்புலத்தில், ஓர் அபிப்பிராயம் மேற்கிளம்பியுள்ளது. கூட்டமைப்பிற்குள்ளிருந்தும், கூட்டமைப்பிற்கு வெளியிலிருந்தும் அவ்வாறான அபிப்பிராயங்கள் வெளிவருகின்றன. இலங்கை விவகாரம் இந்தியாவின் கைகளை மீறிச் சென்றுவிட்டது என்பதே அவ்வாறான அபிப்பிராயங்களின் சாரம்சமாகும். அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட முன்னைய பிரேரணைகளுக்கு ஆதரவளித்திருந்த இந்தியா, இறுதியாகக் கொண்டுவரப்பட்ட பிரேரணையின்போது வாக்களிப்பை தவிர்த்திருந்தது. ஆனால், இந்தியாவின் மேற்படி செயற்பாடு, குறித்த பிரேரணையின் வெற்றியை எந்தவகையிலும் பாதித்திருக்கவில்லை…
-
- 1 reply
- 784 views
-
-
மூன்றாவது ஜெனிவாத் தீர்மானத்தின் அடுத்த கட்டம் - நிலாந்தன் 13 ஏப்ரல் 2014 ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த கையோடு மேற்குநாடுகள் இலங்கை அரசாங்கத்தைப் பாராட்டின. வெல்லக் கடினமான ஒரு பயங்கரவாத இயக்கத்தைத் தோற்கடித்த ஒரு அரசாங்கமாக அவை இலங்கை அரசாங்கத்தைப் பார்த்தன. போரின் இறுதிக் கட்டத்தில் நிகழ்ந்த பேரழிவை அவை தவிர்க்கப்படவியலாத பக்கச் சேதங்களாகவே பார்த்தன. ஆனால், அடுத்தடுத்த ஆண்டுகளில் பக்கச் சேதங்கள் மனித உரிமை மீறல்களாக மாற்றப்பட்டன. கடந்த மாதம் மூன்றாவது ஜெனிவாத் தீர்மானத்தில் அவ்வாறுதான் கூறப்பட்டுள்ளது. அதாவது, 'மனித உரிமை மீறல்கள் மற்றும் அவற்றோடு தொடர்புடைய குற்றங்கள''; என்று. ஆனால், தமிழர்களில் ஒரு தரப்பினர் அவை போர்க் குற்றங்கள் என்று கூறுகிறார்கள். அவை …
-
- 2 replies
- 703 views
-
-
பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதாகப் போக்கு காட்டி, இழுத்தடிப்பதில் இலங்கைக்கு நிகர் யாருமே இல்லையென்றே தோன்றுகின்றது. இந்த விடயத்தில் பெரும் கில்லாடிகளாக இலங்கை அரசுகள் செயற்பட்டிருப்பதை வரலாற்றுப் பதிவுகள் காட்டுகின்றன. இலங்கையின் எரியும் பிரச்சி;னையாக இனப்பிரச்சினை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. யுத்த மோதல்களின் மூலம் இந்தப் பிரச்சினை சர்வதேச மட்டத்திற்கு மேலெழுந்திருந்தது. பிரச்சினைக்குத் தீர்வு காண்பதிலும் பார்க்க யுத்தத்திற்கு முடிவு காண வேண்டும் என்பதில் அரசு மிகுந்த அக்கறையோடு செயற்பட்டது. அதற்கு ஆதாரமாக உலக பயங்கரவாதப் போக்கைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி, விடுதலைப்புலிகளை சர்வதேச நாடுகளின் உதவியோடு அழித்தொழித்தது. ஆயினும் யுத்த மோதல்களுக்கு அடிப்படையான…
-
- 0 replies
- 354 views
-
-
இந்திய வெளிவிவகாரக் கொள்கையை விளங்கிக் கொள்ளல் - யதீந்திரா கடந்த பத்தியில், இந்தியாவில் ஏற்படப் போகும் ஆட்சி மாற்றம், இந்திய வெளிவிவகாரக் கொள்கையில் ஆச்சரியப்படத்தக்க மாற்றங்கள் எதனையும் ஏற்படுத்தாது என்பதை விளக்கியிருந்தேன். அதனை மேலும் விளங்கிக் கொள்ளும் வகையில் இப்பத்தியில், இந்திய வெளிவிவகாரக் கொள்கை குறித்து பார்ப்போம். 'தமிழ் தேசியம்' என்னும் சுலோகத்தின் கீழ் இயங்கிவரும் அரசியல் தரப்பினருக்கு முன்னால் அறுபது வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவங்கள் இருந்தபோதிலும் கூட, இந்திய வெளிவிவகாரக் கொள்கையை விளங்கிக்கொள்வதில் அவர்கள் தொடர்ந்தும் வறியவர்களாகவே இருக்கின்றனர். சில தினங்களுக்கு முன்னர், இந்தியா எடுத்திருந்த ஒரு வெளிவிவகார நிலைப்பாடு தொடர்பில் கூட்டமைப்பினை பிரதிந…
-
- 0 replies
- 630 views
-
-
தமிழீழ விடுதலையை ஈட்டுவதற்கேற்ற வெளியுறவுக் கொள்கைக்கான அடிப்படை தத்தர் தற்போது இலங்கைத்தீவு சார்ந்து காணப்படும் புவிசார் அரசியல் யதார்த்தமும், தமிழீழ விடுதலையை ஈட்டுவதற்கேற்ற வெளியுறவுக் கொள்கைக்கான அடிப்படை ஈழத்தமிழர் தேசியப் பிரச்சனையானது புவிசார் அரசியல் பிரச்சனைக்குள் சிக்குண்டுள்ள ஒரு பிரச்சனையாகும். தேசிய இனப்பிரச்சனை என்பது ஒருபோதும் ஓர் உள்நாட்டுப் பிரச்சனையல்ல. அது எப்போதும் ஒரு சர்வதேச பிரச்சனையாகும். இத்தகைய இரண்டு அடிப்படைகளையும் வைத்தே தமிழீழ விடுதலைப் போராட்டத்தை வடிவமைக்க வேண்டும். சுமாராக ஒன்றரை லட்சம் மக்கள் இனப்படுகொலைக்கு உள்ளாகி இன்றைக்கு ஐந்து ஆண்டுகளாகின்றன. அதன் பின்பும் எதிரி தனது ஒடுக்குமுறைகளை பல வகைகளிலும், பல பரிமாணங்களிலும் அதிகரி…
-
- 0 replies
- 704 views
-
-
ஈழத் தமிழர்கள் நரேந்திர மோடியை எப்படிக் கையாளப் போகிறார்கள்? நிலாந்தன் 20 ஏப்ரல் 2014 கடந்த வாரம் தமிழ் நாட்டில் உள்ள படைப்பாளிகள் மற்றும் செயற்பாட்டாளர்களில் ஒரு தொகுதியினர் பாரதீய ஜனதாக் கட்சியின் முதன்மை வேட்பாளராகிய நரேந்திர மோடிக்கு எதிராக ஒரு பகிரங்க அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள். இந்த அறிக்கைக்கு ஆதரவாகக் கையெழுத்திட்டிருப்பவர்களில் தமிழ்த் தேசிய ஆதரவாளர்களும் உண்டு. அதை விமர்சிப்பவர்களும் உண்டு. ஈழத் தமிழர்கள் தரப்பில் குறிப்பாக, புலம்பெயர்ந்து வாழும் படைப்பாளிகளில் ஒரு பகுதியினர் இதில் கையெழுத்திட்டிருக்கிறார்கள். தமிழ் நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதிலும் உள்ள புத்திஜீவிகள், படைப்பாளிகள், செயற்பாட்டாளர்களில் ஒரு தொகுதியினர் மோடிக்கு எதிராகவே காணப்பட…
-
- 0 replies
- 600 views
-
-
பல்வேறு அமைப்புக்கள் கூறும் நம்பத் தகுந்த அறிக்கையின் ஊடாக பார்க்கும் போது, இலங்கை யுத்தம் மற்றும் சுனாமி பேரிடர் ( 6000 தமிழர்கள் ) போன்றவற்றால் கிட்டத்தட்ட 100, 000 தமிழ் பொது மக்கள் மற்றும் விடுதலைப் புலிகள், இதர தமிழ் போராளிகள் கொல்லப்பட்டும் காணாமல் போயும் உள்ளனர். -------------------------------------------------- உலகம் முழுவதும் இன்று எவ்வளவு இலங்கைத் தமிழர்கள் வாழ்கின்றார்கள் என்பதை முறையாக யாரும் ஆராயவில்லை என்றே சொல்லலாம். விடுதலைப் புலி ஆதரவு இயக்கங்கள் பெரும்பாலும் இந்த தொகையை அதிகரித்தே சொல்வார்கள். ஆனால் உண்மையான ஆதாரங்கள் கிடைப்பதில்லை. விக்கிபீடியா போன்ற தளங்களிலும் தவறான தொகையை கூறப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் பொய்களில் ஒன்று கனடா,…
-
- 4 replies
- 8.4k views
-
-
ஏன் எல்லோரும் ரஷ்யாவை தாக்குகிறார்கள்? - அமெரிக்க ஆவணப்படம் ரஷ்யா : உலகிலேயே மிகப் பெரிய நாடு. "சூரியன் மறையாத சாம்ராஜ்யம்" என்ற பெருமை, இன்றைக்கும் ரஷ்யாவை மட்டுமே சேரும். மேற்கே சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் சூரியன் மறையும் நேரம், கிழக்கே விலாடிவாஸ்டொக் நகரில் சூரியன் உதிக்கும். ஐரோப்பா முழுவதையும் வெற்றி கொண்ட நெப்போலியனின் படைகள், ரஷ்யா மீது படையெடுத்து பெரும் நாசம் விளைவித்தன. ஆனால், ரஷ்யர்களின் எதிர்த் தாக்குதலை சமாளிக்க முடியாமல் தோற்றோடின. அதற்குப் பின்னர், ஜெர்மன் சக்கரவர்த்தியின் படைகள், இன்றைய உக்ரைனில் இருக்கும் கிரீமியா பகுதியை ஆக்கிரமித்திருந்தன. ஆமாம், இன்று சர்வதேச அரங்கில் பேசப் படும் அதே கிரீமியா தான். ஆனால், ஐரோப்பிய வரலாற்றில், "கிரீமியா …
-
- 1 reply
- 1k views
-
-
தற்போது சிறிலங்காவில் இனப்பிளவுகளால் மட்டும் மோதல்கள் ஏற்படவில்லை. பல்வேறு மதங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள பிளவுகளாலும் மோதல்கள் ஏற்படுகின்றன. பௌத்த அடிப்படைவாதக் குழுக்களுக்கும் முஸ்லீம் மற்றும் கத்தோலிக்க மத சமூகங்களுக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டுள்ளன. இவ்வாறு The Platform என்னும் இணையத்தளத்தில் Anupama Ranawana எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அண்மையில் சிறிலங்கா தொடர்பில் அமுல்படுத்தப்பட்ட தீர்மானமானது நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதில் அதிகம் செல்வாக்குச் செலுத்தும். அமெரிக்காவின் தலைமையில் முன்வைக்கப்பட்ட ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானமானது சிறிலங்காவில் தொடரப்பட்ட…
-
- 0 replies
- 420 views
-
-
சிறிலங்கா மீதான ஐ.நா விசாரணையானது வலுமிக்கதாக இருக்காது. ஐ.நா தனது விசாரணையின் இறுதியில் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றிடம் தீர்வெட்டுமாறு கோரும் போது இந்த விசாரணையை ரஸ்யா மற்றும் சீனா மறுக்கும் என்பது நிச்சயமானதாகும். இவ்வாறு THE HUFFINGTON POST UK என்னும் இணையத்தில் பிபிசி முன்னாள் செய்தியாளர் Frances Harrison* எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. 2009ல் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட சிறிலங்காவின் உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற பல்வேறு யுத்த மீறல்கள் தொடர்பாக சுயாதீன அனைத்துலக விசாரணை ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என சிறிலங்காவைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்…
-
- 1 reply
- 436 views
-
-
இவர்களை மன்னிக்காதீர் == பா.செயப்பிரகாசம் “ஏலி, ஏலி, லாமா சபக்தானி! இறைவனே, இறைவனே என்னை ஏன் கைவிட்டீர்?'' உயரத்தில் சிலுவையில் அறையப் பட்ட இயேசு கத்தினார். ராஜவிசுவாசம், உருவ வழிபாடுகளில் அடைக்கலமாகி யிருந்தவர்கள் அவரை “இவன் ஏன் கத்துகிறான்'' என்று ஏறிட்டுப் பார்த்தனர். “இந்த அறிவிலி யாரிடம் முறையிடு கிறானோ, அந்த இறைவன் இதியாஸ் இவனைக் காப்பாற்றட்டும்'' என்றனர். “இறைவனே இறைவனே, என்னை ஏன் கைவிட்டீர்''. மறுபடியும் உரத்த குரலில் கத்தி ஏசு உயிரை விட்டார் (மத்தேயு 27 : வசனம் 46,47). நண்பகல் 12 மணிக்கு சிலுவை யிலறையப்பட்ட இயேசு, பிற்பகல் 3 மணிக்கு சிலுவையில் ஏற்றப்பட்ட போது, உதிர்த்த வாசக…
-
- 0 replies
- 1.4k views
-
-
கடந்த மார்ச் மாதம் 9ம் திகதி, ஜக்கிய நாடுகள் சபையின், இலங்கைக்கான முன்னைநாள் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியான தாமரா மணிமேகலை குணநாயகம், அமெரிக்கா இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளின் மீது உண்மையான ஆர்வம் எதனையும் கொண்டிருக்கவில்லை மாறாக, தங்களது மூலோபாய நோக்கங்களை அடைவதற்கான ஒரு கருவியாகவே மனித உரிமை விவகாரத்தை பயன்படுத்தி வருவதாக குறிப்பிட்டிருந்தார். அமெரிக்காவின் இறுதி இலக்கு மனித உரிமைகளோ அல்லது தமிழ் மக்களுக்கான உரிமைகளோ இல்லை மாறாக, அவர்களது உண்மையான இலக்கு இப்பகுதியில் காலூன்றுவதேயாகும் என்று குறிப்பிட்டிருக்கும் தாமரா மேலும், ஆப்கானிஸ்தானிலிருந்து விரைவில் வெளியேறவிருக்கும் அமெரிக்காவிற்கு பிராந்திய ரீதியான இராணுவ தளங்களின் தேவைப்பாடுள்ளது. இது தொடர்பான அமெரிக்காவின் …
-
- 3 replies
- 1.1k views
-
-
தமிழீழ விடுதலையையும், தமிழகத்தின் வாழ்வுரிமையையும் மக்கள் மன்றத்தில் முன்னெடுப்போம்! தேசிய இனங்களின் மீதான வன்முறையும், அடக்குமுறையும், சுரண்டலும் மிக அதிகமாக ஏவப்பட்டுக் கொண்டிருக்கின்ற காலத்தில் இந்திய பாராளுமன்றத் தேர்தலை நாம் எதிர்கொண்டுள்ளோம். இச்சமயத்தில் எவற்றினை மையமாக வைத்து இத்தேர்தலை தமிழ்த் தேசிய மக்கள் எதிர்கொள்ளவேண்டும் என்பதை விவாதிப்பது மாற்று அரசியல் இயக்கங்களின் மிக முக்கியமான மற்றும் அவசியமான அரசியல் கடமையாகிறது. தேர்தல் காலங்களில், மக்களிடம் எழும் கேள்விகளுக்கு பதிலளிப்பதும், எழுப்பபடாமல் இருக்கும் கேள்விகளை முன்வைப்பதும் அத்தகைய கடமைகளில் ஒன்றாகிறது. 2009க்குப் பின்பான தமிழகத்தின் அரசியல் சூழல் பல்வேறு மாற்றங்களை உள்ளடக்கியே எழுந்து வருகிறது. தம…
-
- 0 replies
- 639 views
-
-
இலங்கையிற் பிரிவினைப்போராட்டம் ஆரம்பித்ததில் இருந்து இலங்கையின்அரசாங்கங்கள் இலங்கையின் சனநாயக விழுமியங்களைச் சிதைக்கக் கூடிய சட்டங்களை இயற்றிக் காலப்போக்கில் நிறைவேற்று அதிகாரம் கொண்டசனாதிபதி ஆட்சி முறையையும் கொண்டு வந்தன. இவற்றின் நோக்கம் அடிப்படையில் சிங்கள பௌத்த பேரினவாத அதிகாரத்தை பேணுவதாகும். ஆனால் இப்பொழுது இலங்கையின் அரசியற்சூழ்நிலை குடும்ப அதிகாரமொன்றைப் பேணுவதற்கானதாகவும் மாறிவிட்டது. 2009 ஆண்டு யுத்தம் நிகழ்ந்த போது சர்வதேசத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களையும் இந்த அரசாங்கம் தடை செய்திருந்தது. இப்போது புலம் பெயர்தேசத்துத் தமிழர் அமைப்புக்களையும் தடை செய்திருக்கிறது. இந்தத் தடையை இலங்கை அரசு கொண்டு வந்தமைக்கு கீழ்வருவன நோக்கங்களாக இருக்கலாம். · …
-
- 0 replies
- 646 views
-
-
காங்கிரசும் முஸ்லிம்களும் 2002இல் குஜராத் மாநிலத்தில் இடம்பெற்ற கலவரத்தில் 1000க்கு மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். அப்போது நரேந்திரமோடி அங்கு முதல்வராக இருந்தார். அதனால் அவரும் பாரதீய ஜனதாக்கட்சியும் முஸ்லிம் களுக்கு எதிரானவர்கள்,சிறுபான்மையின மக்களுக்கு எதிரானவர்கள் என்று காங்கிரசுக்கட்சியினரும்,பிறரும் கூறுகின்றனர்.காங்கிரசுக்கட்சியினர் மட்டும்தான் சிறுபான்மையினமக்களின் பாதுகாவலர்கள் என்கின்றனர். ஆனால் 1984இல் இந்திரா காந்தி கொல்லப்பட்டபோது இடம்பெற்ற கலவரத்தில் டெல்கியில் மட்டும் 3000 வரையிலான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.அதனை முன்னின்று நடத்திய காங்கிரசுக்கட்சியினரில் பலர் இதுவரை தண்டிக்கப்படாமல் சுதந்திரமாக உலாவி வருகின்றனர். பலராலும் அறியப்படாமல் அம…
-
- 0 replies
- 624 views
-
-
• “பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்” என்று கூறுவது தமிழ் மக்களுக்கு நன்மை பயக்குமா? "கசப்பான உண்மைகளையும் மறைக்காமல் மக்களிடம் கூறுங்கள். அவர்கள் வெற்றியை பெற்று தருவார்கள்"- வியட்நாம் தந்தை கோசிமின் 26 வருடங்கள் அமெரிக்க வல்லரசுக்கு எதிராக போராடி வெற்றி பெற்ற வியட்நாம் தந்தை கோசி மின் அவர்களிடம் உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன? என்று கேட்டபோது “எந்த உண்மைகளையும் மக்களிடம் மறைக்காதீர்கள். கசப்பான உண்மையாக இருந்தாலும் மக்களிடம் கூறுங்கள். அவர்கள் வெற்றியைப் பெற்றுத் தருவார்கள்” என்றார். ஆனால் இன்று மதிப்பு மிக்க தலைவர்களான வைகோ, நெடுமாறன் போன்றவர்கள் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்றும் அவர் மீண்டும் வந்து போராடி தமிழீழத்தை பெற்றுத் தருவார் என்றும் கூற…
-
- 15 replies
- 2k views
-