Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. இது, அந்தக் கோரச் சம்பவத்தின் இன்னொரு முகம்! முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட அந்த நாளில் அவருடன் 15 அப்பாவி உயிர்களும் பலியாகின. ''தூக்குமேடைக்குப் போனவர்களைக் காப்பாற்றத் துடிக்கும் தலைவர்கள், அந்த சம்பவத்தில் இறந்துபோன தமிழர்களின் குடும்பங்களுக்காகக் குரல் கொடுத்தார்களா?'' எனக் கொந்தளிக்கிறார்கள் பலியானவர்களின் குடும்பத்தினர். ஸ்ரீபெரும்புதூர் பிரசாரத்தின்போது ராஜீவ் அருகில் இருந்த காங்கிரஸ் பிரமுகர் லீக் முனுசாமி, எஸ்.பி-யான முகமது இக்பால், டெல்லியில் இருந்து பாதுகாப்புக்காக வந்த குப்தா, இன்ஸ்பெக்டர் ராஜகுரு, இன்ஸ்பெக்டர் எட்வர்டு ஜோசப், சப் இன்ஸ்பெக்டர் எத்திராஜூ, கான்ஸ்டபிள் முருகன், கான்ஸ்டபிள் தர்மன், பெண் கான்ஸ்டபிள் சந்திரா, கமாண்…

  2. வங்காள விரிகுடாவிலிருந்து கடலலைகள் அடித்துக் கொண்டிருக்கின்ற முள்ளிவாய்க்கால் என்கின்ற வடக்கு மாகாணத்தின் அழகிய கடற்கரையில் இரத்தம் தோய்ந்த துன்பியல் சம்பவங்கள் நிறைந்த சிறிலங்காவின் உள்நாட்டுப் போர் முடிவடைந்தது. இவ்வாறு Al Jazeera ஊடகத் தளத்தில் Amarnath Amarasingam* எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. "எறிகணைகள் மழை போல பொழிந்துகொண்டிருந்தன" என அஜந்தன் என்னிடம் தெரிவித்தார். இது தொடர்பாகத் தற்போது கூறும்போது அஜந்தன் சிரித்தார். ஆனால் இந்த உண்மையைச் சொல்வதற்கு இவர் உயிருடன் இருக்கிறார் என நான் நினைத்தேன். அஜந்தன் 2006ல் புலிகள் அமைப்புடன் இணைந்து கொண்டார். அதாவது தமிழ்ப் புலிகள் குடும்பத்திற்கு ஒருவரை த…

  3. வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த நாளில், அற்புதம் அம்மாளைச் சந்திக்க முடியவில்லை; ஓரிரு நாட்கள் கழித்துச் சென்றபோது, வழக்கம்போல, மரண தண்டனைக்கு எதிரான புத்தகங்கள் கனக்கும் தோள்பையுடன் கிளம்பியிருந்தார். “எம் புள்ள மட்டும் இல்லப்பா, இன்னும் நெறையப் புள்ளைங்களைத் தூக்குக் கயித்துப் பிடிக்கு வெளியே இழுத்துக்கிட்டு வர வேண்டியிருக்கு” என்றவர், வழியில் ஒரு பொரி பொட்டலத்தை வாங்குகிறார். “ரொம்ப அசத்தினா தவிர, நான் சாப்பாடு தேடுறதுல்ல; பல நாள் இந்தப் பொரிதான் நமக்குச் சாப்பாடு” என்கிறார் சிரித்துக்கொண்டே. நடந்துகொண்டே பேச ஆரம்பித்தோம். இந்த நாட்டின் சர்வ வல்லமை பொருந்திய அமைப்பு களோடு 23 வருஷங்கள் போராடி, உங்கள் மகனைத் தூக்குக் கொட்டடியிலிருந்து மீட்டிருக்கிறீர்கள். இந்தப் போராட்ட…

  4. புரட்சி / அத்தியாயம் 1 ‘இது வரலாற்று நூல் அல்ல. சோஷலிசத்தின்மீது நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் மேற்கொண்ட அரசியல் நடவடிக்கைகளை விவரிப்பதே இதன் நோக்கம்… இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருந்தாலும் சரி, நம் கண் முன்னே இப்போது நடந்திருந்தாலும் சரி. கலகம் ஒன்று நடந்திருந்தால், அதில் சோஷலிசத்தின் சாயல் சிறிதளவு படிந்திருந்தால் அதை இந்தப் புத்தகத்தில் இடம்பெறச் செய்திருக்கிறேன்.’ ஸ்பெயினைச் சேர்ந்த சோஷலிஸ்டும் எழுத்தாளரும் அரசியல் விமரிசகருமான அல்வாரெஸ் (முழுப்பெயர் Julio Álvarez del Vayo) தனது The March of Socialism என்னும் புத்தகத்தின் முன்னுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார். பிரெஞ்சுப் புரட்சி, பாரிஸ் கம்யூன், ரஷ்யப் புரட்சி, சீனப் புரட்சி உள்ளிட்ட பல முக்கிய நிகழ்வுகளை இ…

  5. காணாமல்போன கடவுள்: ஈழப் போராட்டத்தில் கூடப் பிறந்த நாஸ்திகம் ஈழப்போர் நடந்த காலகட்டத்தில், மக்கள் மத்தியில் நாஸ்திக சிந்தனையும் துளிர் விட்டது. ஏற்கனவே, ஈழத் தமிழர்கள் மத்தியில் கணிசமான அளவு நாஸ்திகர்கள் இருந்தனர். உலகப் புகழ் பெற்ற நாஸ்திக அறிவுஜீவியான டாக்டர் கோவூர் இலங்கையில் வாழ்ந்து வந்தார். எழுபதுகளிலேயே, கடவுள் இல்லையென்பதை, பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில், எளிமையாக விளக்கி வந்தார். அவரது நடவடிக்கைகள், அறிவியல் செயல்கள், பரபரப்புச் செய்தியாக பத்திரிகைகளில் வெளியாகும். அவற்றை வாசிக்கும், அல்லது வாசித்தவரிடம் கேட்டறியும் சாதாரண கூலித் தொழிலாளிகள் கூட, " கடவுள் இருக்கிறாரா, இல்லையா?" என்று தமக்குள்ளே வாதிட்டுக் கொள்வார்கள். ஏழைப் பாட்டாளி மக்…

  6. நிலாந்தனும் ஜெனீவாவும் தமிழ்த் தேசிய அரசியலும் : சபா நாவலன் இலங்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அன்றி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோ குறைந்த பட்சம் ‘தேசிய சக்திகள்’ என்ற எல்லைக்குளாவது செயற்பட எல்லா வாய்ப்புக்களையும் கொண்டிருக்கின்றன. தேசியம் என்பதன் அடிப்படையைக் கூட அவர்கள் விளங்கிக்கொள்ளாமல் அன்னிய அதிகாரசக்திகளின் அரசியல் போட்டிக்குள்ளும் ஏகாதிபத்தியக் காய் நகர்த்தல்களுக்குள்ளும் தம்மை அமிழ்த்திக்கொள்கின்றனர். இன்று ஜனாதிபதி ஆணைக்குழு என்ற மகிந்த அரச பாசிசத்தின் போலி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் மக்கள் கூறுகின்ற சாட்சியங்களால் யாருக்கும் நீதி கிடைக்கப்போவதில்லை. ஆனால் சாட்சி கூறுபவர்களின் மன உறுதியும் துணிவும் வியக்கவைக்கிறது. அவர்களைப் பொறுத்தவரையில் எல்ல…

  7. இந்திய மாநில முறைமைக்கு நிகரான தீர்வே கூட்டமைப்பின் நிலைப்பாடு - யதீந்திரா சமீபத்தில் தமிழ்நாட்டில் உரையாற்றிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவரும், தமிழரசு கட்சியின் தலைவருமான இரா.சம்பந்தன், இந்திய மாநில ஆட்சிக்கு நிகரான ஆட்சிமுறையொன்றையே தாம் எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டிருக்கின்றார். விடுதலைப் புலிகளிற்குப் பின்னர் தமிழ் மக்களின் அரசியலை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட சம்பந்தன், முதல் முதலாக கூட்டமைப்பு எவ்வாறானதொரு அரசியல் தீர்வை எதிர்பார்க்கின்றது என்பதை வெளிப்படையாக தெரிவித்திருக்கும் சந்தர்ப்பம் இதுவாகும். இது குறித்து கூட்டமைப்பில் அங்கத்துவம் வகித்துவரும் ஏனைய கட்சிகள் எத்தகைய அபிப்பிராயங்களை கொண்டிருக்கின்றன என்பதை அறிய முடியாவிட்டாலும் கூட, இந்திய ம…

  8. தமிழ் மக்கள் என்ன செய்ய வேண்டும்.....? நிலாந்தன் 23 பெப்ரவரி 2014 தமிழர்கள் ஜெனிவாவில் ஒரு தரப்பாக இல்லைத்தான். ஆனால், தமிழர்களின் அரசியலை முன்னிறுத்தியே அந்த அரங்கு திறக்கப்பட்டுள்ளது. எனவே, தாம் ஒரு தரப்பாக இல்லாத ஓர் அரங்கில் தமது பேரம் பேசும் சக்தியைத் தமிழர்கள் உயர்த்திக்கொள்வது எப்படி? அல்லது தாம் ஒரு தரப்பாக இல்லாத ஒரு அரங்கில் ஏனைய சக்தி மிக்க தரப்புக்கள் தன்னை ஒரு பகடைக்காயாகப் பயன்படுத்தாத படிக்கு அரசியலை செய்வது எப்படி? அல்லது சக்திமிக்க நாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்குள் தமது சொந்த நிகழ்ச்சி நிரலைக் கொண்டு போய் பொருத்துவது எப்படி? உண்மையில் இக்கேள்விகள் தமிழ் டயஸ்பொறாவை நோக்கியே கேட்கப்படவேண்டும். ஏனெனில், ஜெனிவா அங்குதானிருக்கிறது. தவிர தற்பொழுது அதாவது…

  9. சர்வதேச அரசியலும் தமிழர்களின் முக்கியத்துவமும் - யதீந்திரா இன்று சாதாரண குடிமக்கள் அதாவது, அன்றாட வேலைகளில் மூழ்கிப் போவதையே தங்கள் பிரதான கடமையாகக் கொள்பவர்கள், மாலைநேர அரட்டைகளில் அரசியலையும் கொஞ்சம் சேர்த்துக்கொள்பவர்கள் ஆகிய பிரிவினர் தொடக்கம், அரசியலை ஊன்றிக் கவனிப்போர் வரை, அனைவர் மத்தியிலும் இருக்கும் கேள்வி - எதிர்வரும் மார்ச்சில் என்ன நடக்கும்? அவர்களது மனங்களில் எழும் கேள்விக்கு அவர்களிடமே பதிலுமுண்டு. நிச்சயம் ஏதோ பெரிதாக நடக்கத்தான் போகிறது. தமிழர் அரசியலைப் பொறுத்தவரையில் கடந்த மூன்று வருடங்களாக இரண்டு சொற்கள் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கின்றன. ஒன்று ஜெனிவா மற்றையது அமெரிக்கா. ஜெனிவா என்னும் சொல்லுடன் அமெரிக்கா என்னும் சக்திவாய்ந்த சொல்லை இணைத்துப் புரிந…

  10. கேள்விக் குறியாகியுள்ள விடுதலை - செல்வரட்னம் சிறிதரன் 22 பெப்ரவரி 2014 ராஜிவ் காந்தி கொலைக் குற்றத்தில் தண்டனை வழங்கப்பட்டவரகள் விவகாரம் உலக அளவில் தலைப்புச் செய்தியாகியிருக்கின்றது. பாரதப் பிரதமராக இருந்து, ஒரு தேர்தலைச் சந்தித்திருந்தபோது, வேட்பாளராக மக்கள் முன்னால் சென்றிருந்த வேளை, தமிழ் நாட்டில் வைத்து ராஜிவ் காந்தி மிகவும் துணிகரமான முறையில் கொல்லப்பட்டிருந்தார். இது ஓர் அரசியல் கொலை. பிராந்திய வல்லரசாகிய இந்தியப் பெருநாட்டின் முக்கிய தலைவராகக் கருதப்பட்ட இவருடைய கொலை, பிராந்திய சர்வதேச அரசியல் கொலையாகக் கணிப்பிடப்பட்டிருந்தது. இரண்டு தசாப்தத்துக்கும் மேற்பட்ட காலப்பகுதியில் இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணைகளும் நீதிமன்ற விசாரணைகளும் நடைபெற்றிருந்தன…

  11. தமிழரோடு முஸ்லிம்கள் இணைந்து போராடும் தருணம் இது! -எஸ். ஹமீத்- இன்றைய இலங்கைச் சூழலில் சிங்கள பௌத்த மேலாதிக்க சிந்தனை கொண்டோர் திட்டமிட்ட வகையில், ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலின் அடியொற்றி சிறுபான்மைச் சமூகங்களின் மீது மேற்கொள்ளும் கருத்தியல் மற்றும் பௌதீகத் தன்மை வாய்ந்த தாக்குதல்களைக் கிஞ்சித்தேனும் குறைத்து மதிப்பிட முடியாது. இலங்கையில் வாழும் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் மீதான இத்தகு தாக்குதல்களுக்கு அரசாங்கத்தின் அதியுயர் பீடம் தொடக்கம் சாதாரண தரத்திலுள்ள இனவெறி இதயம் தாங்கிகளினால் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் ஆதரவளிக்கப்படுகின்றதென்பதும் மறுக்க முடியாத உண்மையே. தன்னுடைய எதிர்கால அரசியல் இருப்பை இலங்கையின் அரச சிம்மாசனத்தில் இருத்தி அழகு ப…

  12. இளங்கோவன் என்ற தமிழ் நாட்டுக் காங்கிரஸ் அரசியல்வாதி, ரஜீவ் காந்தியின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏழுபேரும் விடுவிக்கப்பட்டால் தாம் தீவிரவாதிகளாக மாறப்போவதாக மிரட்டிருயிருக்கிறார் என்று முகநூலில் சில செய்திகள் சொல்கின்றன.. https://www.facebook.com/Sevanthinetwork/timeline?filter=1 இப்போதாவது புரிகிறதா தீவிரவாதிகள் ஒழிந்திருக்கும் குகை எங்கே என்று. தலைமைகள் தொடக்கம் தொண்டுகள் வரைக்கும் உள்ளே தள்ளப்பட வேண்டியவர்களின் மடம் அது. பிடித்து உள்ளே தள்ளிவிட வேண்டியதுதானே. ஏன் தாமதம்? என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. ரஜீவ் காந்தி காலம் தொடக்கம் பதவியில் இருந்தபோதெல்லாம் கொள்ளை அள்ளிய கட்சியின் தமிழ்நாட்டு தலைவர் ஒருவரின் மானம் கெட்டதனமான வீராப்பு பேச்சு அது. இந்த வீரவண்டி…

  13. என்ன நடக்கப் போகின்றது ஜெனிவாவில்? முத்துக்குமார் அமெரிக்க வெளிநாட்டு அமைச்சின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வால் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருக்கிறார். அவர் கொழும்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரை சந்தித்துவிட்டே யாழ்ப்பாணம் வந்திருக்கிறார். அங்கு அவர் முக்கியமாக யாழ் ஆயர் இல்லம், உதயன் பத்திரிகை அலுவலகம் என்பவற்றிற்கு சென்றதுடன் தனியார் விடுதி ஒன்றில் சிவில் சமூக பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேசியிருக்கிறார் இதன்போது வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி எழிலனையும் சந்தித்திருக்கின்றார். சந்தித்தவர்கள் எல்லோரும் போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரனை வேண்டும் என்பதையே வலியுறுத்தியிருந்தனர். நிசா தேசாய் பிஸ்வாலின் நடவடிக்கைகளையும்…

  14. புலம் பெயர் நாடுகளில் தமிழ் வாழுமா? அல்லது மெல்லச் செத்துவிடுமா? [Tuesday, 2014-02-18 23:49:01] மகாகவி சுப்பிரமணிய பாரதியார் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பிறந்து, வளர்ந்து, மறைந்தவர். ஆங்கிலேயர் ஆட்சியில் ஆங்கிலமொழி கோலோச்சியது. அதற்கு அடுத்ததாக சமற்கிருதம் போற்றப்பட்டது. தமிழ் ஆதீனங்களிலும் தமிழ்ப் பண்டிதர்களது வீடுகளிலும் உயிர் வாழ்ந்து கொண்டிருந்தது. பாரதியார் ஆங்கிலம், சமற்கிருதம் உடபட பல மொழிகள் படித்தவர். ஆனால் பாரதியாரது காதல் தமிழ்மொழி மீதுதான் இருந்தது. அதனை அவர் பல பாடல்களில் வெளிக்கொணர்ந்திருக்கிறார். நாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் வானம் அளந்ததனைத்தும் அளந்திடும் வண்மொழி வாழியவே வானம் அறிந்த …

  15. கிழக்கை மையப்படுத்தி நிலத்தை அபகரிப்பது ஏன்? குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:- ஆவணப்படம்:- 18 பெப்ரவரி 2014 இலங்கைத் தமிழர்களுக்கு புலிகளின் காலத்தில் கிடைக்காத வாழ்வு பரிசளிக்கப்பட்டு அவர்கள் மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார்கள் என்று இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சொல்லிக் கொண்டிருக்கும் சூழலில்தான் நாளும் பொழுதும் தமிழர் தாயகம் அபகரிக்கப்படுகிறது. ஈழத்து மக்கள் இழந்த உரிமைகளுக்காக போராடினார்கள். இப்பொழுது போராட்டம் நடத்தியமைக்காக எஞ்சிய உரிமைகளும் அபகரிக்கப்படும் கட்டத்தில் இருக்கிறோம். நில அபகரிப்பே இன்றைய ஈழத்தின் மிக முக்கியமான பிரச்சினையாக எழுந்துள்ளது. இலங்கை சுகந்திரம் அடைவதற்கு முன்பாகவே திட்டமிட்ட சிங்களக்குடியேற்றங்கள் தொடங்கிவிட்டன. தமிழ்…

  16. ஜெனிவாவை எதிர்கொள்ளல் - நிலாந்தன்- 16 பெப்ரவரி 2014 அண்மையில் லண்டனில் வசிக்கும் சமூகச் செயற்பாட்டாளரான ஒரு நண்பர் கேட்டார். தமிழ்நாட்டிலுள்ள தீவிர தமிழ்த்தேசிய இயக்கங்களும், கட்சிகளும், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக குரல்கொடுக்கும் அதேசமயம், கூட்டமைப்புக்கு எதிராகவும் கருத்துக்களைக் கூறி வருகின்றன. தாய் தளத்தில் துலக்கமான மக்கள் ஆணையைப் பெற்றிருக்கும் ஒரு கட்சியை கடுமையாக விமர்ச்சிப்பதற்குரிய உரிமையை இவர்கள் எப்படிப் பெற்றார்கள்? என்று.... ''அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு' என்று நான் சொன்னேன். ஒன்று கூட்டமைப்பின் கையாலாகாத் தனம் அல்லது அதன் அரை இணக்க அரசியல் தொடர்பாக ஏற்பட்ட அதிருப்தி. இரண்டாவது தமிழ் டயஸ்பொறாவிலுள்ள தீவிரமான தரப்புக்களுடனான உறவு. இவை இரண்டின் காரணமாகவு…

  17. ‘1999’ மற்றும் ‘கண் அன்ட் றிங் (A Gun and A Ring)’ ஆகிய ஈழத் திரைப்படங்களின் இயக்குநர் லெனின் எம் சிவம் அவர்கள் ‘கண் அன்ட் றிங்’ திரைப்படத்தின் பிரத்தியேக காட்சிக்காக கனடாவில் இருந்து பரிசுக்கு வருகை தந்திருந்தார். அவரை எமது ஊடக இல்லத்திற்கு அழைத்து அவருடன் ஒரு நேர்காணலை ஏற்பாடு செய்திருந்தோம். அவர் எம்முடன் பகிர்ந்துகொண்ட விடயங்களை எமது வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றோம். ஊடக இல்லம்:- ‘கண் அன்ட் றிங்’ திரைப்படத்தின் அனுபவங்கள் பற்றி எமது வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்? லெனின்:- கண் அன்ட் றிங்’ திரைப்படம் புலம்பெயர்ந்த கலைஞர்களின் படைப்பு. இப்படத்தில் குறிப்பாக பரிசில் இருந்து மன்மதன் பாஸ்கி அவர்களும் ஜேர்மனியில் இருந்து தேனுகா கந்தராஜாவும் நடித்துள்ளார்கள். ஏனைய கல…

  18. (S.Vinoth) காணாமல் போனவர்கள், கண்களுக்கு முன்பாக பிடித்துக்கொண்டு செல்லப்பட்டவர்கள் எங்கே இருக்கின்றார்கள் என்பது எமக்குத்தெரியாது. ஆனால் நாம் கண்டிருக்கின்றோம் யார் அவர்களை எங்கே கொண்டு சென்றார்கள். கொலை செய்தவர்களும் அவர்கள்தான். நீதி சொல்பவர்களும் அவர்கள்தான். நீதிபதியும் அவர்கள்தான் என்றால் எப்படி உண்மை வெளிவரப்போகுது என மன்னார் மறைமாவட்ட ஆயர் அதி வணக்கத்திற்கூரிய இராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்தார். மாந்தை லூர்து அன்னை ஆலயத்தின் கொடியேற்றம் நேற்று புதன்கிழமை மாலை இடம் பெற்றது. இதன் போது காணமல்போன,கடத்தப்பட்டவர்களுக்காக விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. அதன் போது உரையாற்றுகையிலேயே மன்னார் ஆயர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ம…

  19. அரசாங்கத்தின் இந்த இராஜதந்திர நகர்வுக்கு பிராந்திய அரசியல் சூழல் சாதகமாக அமைந்தது என்று கூறினாலும் அதனை அறிந்து தமது நலன்களை பிரயோகிக்கின்ற அரசியல் வினைத்திறன்; முக்கிய இடத்தை பெற்றுள்ளது. ஆனால் இந்த வினைத்திறன் தமிழத்தேசிய கூட்டமைப்பு- தமிழத்தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் தலைமைகளுக்கு ஏன் இல்லாமல்போனது? ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கை தொடர்பாக சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணை குறித்து இந்திய கொள்கை வகுப்பாளர்கள் கடந்த சில தினங்களாக தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். இந்தியாவில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்கு அரசியல் கட்சிகள் தமது வெற்றிகளை மாத்திரம் தற்போது கருத்தில் எடுத்திருப்பதால் தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் இந்திய நிலைப்பாடு தொடர்பான விடய…

  20. சர்வதேசத்தின் பிடியிலிருந்து சிறிலங்கா மீண்டெழுமா? சீனா காப்பாற்றுமா? [sunday, 2014-02-09 21:20:05] ஜெனீவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டுவரப்படவிருக்கும் போர்க்குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்புவதற்கு சிறிலங்கா அரசாங்கம் பகீரதப் பிரயத்தனங்களில் ஈடுபட்டு வருவதாக சுட்டிக்காட்டியுள்ள தினக்குரல் பத்திரிகை அந்த முயற்சியில் அரசாங்கம் வெற்றி பெறுவதற்கு பாரிய தடைகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அமெரிக்கா, பிரித்தானியா உட்பட மேற்குலக நாடுகள் சிறிலங்காவுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி, போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணையைக் கோரலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சீனாவை நம்பியிருக்க வேண்டி நிலைக்கு சிறிலங…

  21. தமிழர்களுக்கு யார் பொறுப்பு? நிலாந்தன் 09 பெப்ரவரி 2014 ஜெனிவா கூட்டத்தொடர் நெருங்க நெருங்க நாடு உளவியல் ரீதியாக இரண்டாகப் பிளவுண்டு செல்கிறது. சிங்கள மற்றும் தமிழ் பொதுசன உளவியல்கள் ஒன்றுக்கொன்று எதிரான திசைகளில் கொந்தளிக்கத் தொடங்கிவிட்டன. எனவே, ஜெனிவா உளவியலைக் கருதிக் கூறுமிடத்து நாடு இரண்டாகப் பிளவுண்டிருக்கிறது எனலாம். ஒரு புறம் சிங்கள மக்கள் மத்தியில் ஒருவித பயப்பிராந்தி (fear psychosis) தோற்றுவிக்கப்படுகிறது. ரத்தம் சிந்திப் பெறப்பட்ட ஒரு மகத்தான வெற்றியைத் தட்டிப் பறிக்க முற்படும் வெளிச்சக்திகளையிட்டு உண்டான ஒரு பயப் பிராந்தி அது. தென்னிலங்கையில் வெற்றிநாயகர்களாக வலம் வரும் படைத்தரப்பை, அனைத்துல அரங்கில் குற்றவாளிகளாகக் கூண்டில் நிறுத்த முற்படும் வெளிச்ச…

  22. தமிழ் மக்களின் சாபக்கேடு - செல்வரட்னம் சிறிதரன்:- 08 பெப்ரவரி 2014 இலங்கையில் இனப்பிரச்சினை காரணமாக முப்பது வருடங்களாக மோசமான ஒரு யுத்த நிலைமை நீடித்திருந்தது. இதில் பல்லாயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளார்கள். எண்ணற்றவர்கள் அவயவங்களை இழந்தும், மனநிலை பாதிக்கப்பட்டும் இருக்கின்றார்கள். இதைவிட கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. பரம்பரை பரம்பரையாகக் குடியிருந்து வசித்து வந்த பிரதேசங்களில் இருந்து மக்கள் அடியோடு பெயர்த்து வெளியேற்றப்பட்டார்கள். இவ்வாறு வெளியேற்றப்பட்டபோதும், யுத்தச் சூழலில் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் அவர்கள் பல்வகையான அவமானங்களுக்கு ஆளாகி சுயகௌரவம், தன்மானம் என்வற்றை இழக்கவும் நேரிட்டிருந்தது. இவ்வாறான கொடுமைகளுகு;கு மத்…

  23. தமிழ்த்தேசிய கூட்டமைப்பிடமிருந்து தமிழ் மக்களை காப்பாற்றுவது யார்? முத்துக்குமார் ஜனவரி மாதம் அடுத்தடுத்து தமிழ் அரசியல் சூழலில் பல நிகழ்வுகள் நடந்துவிட்டன. அமெரிக்க பிரதிநிதிகளின் வடபகுதி விஜயம், அனந்திக்கு புனர்வாழ்வு அளிக்கவேண்டும் என அரசதரப்பு தெரிவித்தமை, முஸ்லிம் மக்கள் குழு சர்வதேச சமூகத்திடம் தமது பிரச்சனைகளைக் கூற தீர்மானித்தமை, மேல்மாகாண சபைத் தேர்தல் அறிவிப்பு வெளியானமை, ஜனாதிபதி பங்குபற்றிய அரசவிழாவில் விக்னேஸ்வரனும் வடமாகாண சபை உறுப்பினர்களும் பங்குபற்றியமை போன்றவை முக்கியமான நிகழ்வுகளாகும். அமெரிக்க பிரதிநிதி ராப்பின் யாழ் விஜயம் ஜனவரி மாத ஆரம்பத்தில் இடம்பெற்றது. 'தை பிறந்தால் வழிபிறக்கும்' என்பார்கள். அரசாங்கத்திற்கு தை பிறந்தால் தலையிடி தொடங்கும் எ…

  24. தமிழர் அரசியல் மீதான இந்தியாவின் செல்வாக்கு படிப்படியாக குறைவடைந்து செல்கிறதா? யதீந்திரா சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவின் 65வது குடியரசுதின வைபவம் வழமைபோல் வெகுசிறப்பாக நடைபெற்று முடிந்தது. அதேபோன்று, இந்திய துணைத் தூதரகங்கள் அமைந்துள்ள யாழ்ப்பாணம், கண்டி மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளிலும் மேற்படி நிகழ்வு வழமைபோல் இடம்பெற்றிருந்தன. கொழும்பு நிகழ்வில் பேசிய இந்தியத் தூதுவர், இலங்கையிலுள்ள அனைத்து தரப்புக்களின் கூட்டு அணுகுமுறையே நேர்மையான நல்லிணக்கத்திற்கும், அரசியல் தீர்வுக்கும் வழிவகுக்கும் என்று குறிப்பிட்டிருக்கின்றார். மேலும், உறுதிப்பாட்டோடும், பங்குதாரர்கள் என்ற உணர்வோடும், பரபஸ்பர நல்லிணக்கப்பாட்டோடும் இருதரப்புக்களும் செயற்பட வேண்டும் என்றும், இதனையே …

  25. சர்ச்சைக்குரிய வடமாகாண சபைத் தீர்மானம் - நிலாந்தன்:- 02 பெப்ரவரி 2014 வடக்கு மாகாண சபையில் கூட்டமைப்பு ஒரு சர்ச்சைக்குரிய தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கின்றது. இலங்கைத் தீவில் இடம்பெற்றது இனப்படுகொலையை ஒத்தது என்று அத்தீர்மானத்திற் கூறப்பட்டுள்ளது. இடம்பெற்றது இனப்படுகொலை தான் என்பதை வெளிப்படையாகக் கூறத் தயாரற்ற அத்தீர்மானத்தை ஆதரித்தும் எதிர்த்தும் வாதப்பிரதிவாதங்கள் போய்க் கொண்டிருக்கின்றன. அதை ஆதரிப்பவர்கள் கூறுகிறார்கள், அது ஒரு சமயோசிதமான யதார்ததபூர்வமான தீர்மானம் என்று. மற்றொரு தீர்மானத்தில் போர்க் குற்றம் தொடர்பில் அனைத்துலக விசாரணைப் பொறிமுறை ஒன்றைக்கோரிய கூட்டமைப்பு இத்தீர்மானத்தில் இங்கு இடம்பெற்றது இனப்படுகொலைதான் என்பதைக் கூராகக் கூறுவதன் மூலம் அரசாங்கத்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.