Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. அழிக்கபட்டஒரு நினைவுச் சின்னமும் அழிக்கப்பட முடியாத நினைவுகளும் – நிலாந்தன்! January 16, 2021 கடந்த கிழமை யாழ். பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் சின்னம் உடைக்கப்பட்டமை நன்மையான விளைவுகளைத்தான் ஏற்படுத்தியிருக்கிறது. முதலாவது நன்மை தூங்கிக் கிடந்த பல்கலைக்கழகத்தை அது துடித்தெழ வைத்திருக்கிறது. யாழ் பல்கலைக்கழகம் கடந்த பத்தாண்டுகளில் பல போராட்டங்களை முன்னெடுத்து இருக்கிறது. எனினும் பெரும்பாலான அரசியல் போராட்டங்களில் அது எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அல்லது இடைக்கால வாக்குறுதிகள் மூலம் போராட்டங்கள் பிசுபிசுத்துப் போயின. இப்படிப்பட்ட ஒரு பின்னணியில் இது ஒரு வெற்றி பெற்ற போராட்டம். ஏனெனில் மாணவர்களின் க…

  2. திராவிடப்பொழில்: ஆய்வுப் புலத்துக்குள் தமிழை முன்நகர்த்தல் -தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ பண்பாட்டு ரீதியாக, நாம் மிகப்பாரிய நெருக்கடியில் இருக்கிறோம். எமது அடையாளங்களைத் தக்க வைக்கவும் மொழியைப் பேணவும் பண்பாட்டை அடுத்த தலைமுறைக்குக் கடத்தவும், நாம் அரும்பாடுபட வேண்டி இருக்கிறது. நாம், இதைச் சரிவரச் செய்வதற்கு, அறிவியல் ரீதியான அணுகுமுறை தேவைப்படுகிறது. ‘கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த இனம்’ என்ற, வெற்றுப் பெருமைகளில் விளையும் பயன் எதுவுமல்ல; எமது மொழியையும் பண்பாட்டையும் வரலாற்றையும், அறிவியல் ரீதியான சிந்தனைப் பரப்புக்குள் கொண்டு சேர்ப்பது முக்கியமானது. எமக்கான வரலாற்றை, வெறுமனே கட்டுக்கதைகளில் இருந்து உருவாக்கிவிட முடியாது. ஒடுக்கப்படு…

    • 1 reply
    • 713 views
  3. ஜெனீவா பிரேரணை: கடலில் தத்தளிப்பவனுக்கு ஒரு மரக்கட்டை -புருஜோத்தமன் தங்கமயில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பான புதிய பிரேரணை செவ்வாய்க்கிழமை (23) நிறைவேற்றப்பட்டது. இலங்கை தொடர்பில், மனித உரிமைகள் பேரவையில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட பிரேரணைகளை, ராஜபக்‌ஷ அரசாங்கம் முற்றாக நிராகரித்திருந்த நிலையில், புதிய பிரேரணையை எப்படியாவது தோற்கடித்துவிட வேண்டும் என்று, இறுதி நேரம் வரையில், தீவிர முயற்சியில் ஈடுபட்டது இலங்கை அரசாங்கம். ஆனாலும், 46/1 என அடையாளப்படுத்தப்படும் புதிய பிரேரணை, 11 மேலதிக வாக்குகளால் நிறைவேறி இருக்கின்றது. மனித உரிமைகள் பேரவையில் அங்கத்துவம் பெற்றுள்ள 47 நாடுகளில், இலங்கை தொடர்பான பிரேரணையைக் கொண்டு வந்த பிரித்தானியா, …

  4. தாயகப் பகுதியில் அத்துமீறிய குடியேற்றங்கள், நில ஆக்கிரமிப்புக்கள் தொடர்ந்தால் மீண்டும் மண் மீட்புப் போராட்டம் ஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாது. போர் நடைபெற்ற காலப் பகுதியிலும், போர் முடிவுற்ற பின்னரும் வடக்கு, கிழக்கில் தமிழர்களின் பூர்விக நிலங்கள் சிங்களவர்களினாலும், முஸ்லிம்களினாலும் தொடர்ந்து அபகரிக்கப்படுகின்றன. வியாபாராத்திற்காக வந்தவர்கள் முஸ்லிம்கள் என்று பேச்சில் தெரிவித்தாலும், இன்னும் பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளில் பூர்விக மக்களே முஸ்லிம்கள்தான் என்ற கருத்தை முஸ்லிம் அரசியல்வாதிகள் முன்வைக்கக் கூடும். கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டம் தொடக்கம் அம்பாறை வரையிலான கரையோரப் பகுதிகளிலுள்ள தமிழர்களின் காணிகள் சிங்கள அரசாங்கத்தினால், இராணுவக் குடியிருப்பு…

  5. கொழும்பு போட் சிற்றியும் புறக்கணிக்கப்படும் தமிழர்களும் நிதி நகரத்தை மையப்படுத்திக் கொழும்பின் புநகர் பகுதியான கோமகமவில் இயங்கும் பல்கலைக்கழகம்– அவுஸ்திரேலியா, பிரிட்டன். அயர்லான்ட். மற்றும் ஆபிரிக்கப் பல்கலைக்கழங்கள் பயிற்சிநெறிக்கான ஒத்துழைப்புகளை வழங்குகின்றன. -அ.நிக்ஸன்- கொழும்பு காலிமுகத்திடலுக்கு அருகில் உள்ள கடல் பிரதேசத்தை மூடி சீன அரசினால் நிர்மாணிக்கப்பட்டு வரும் போட் சிற்றி எனப்படும் கொழும்பு சர்வதேச வர்த்தக நிதி நகரத்தின். வருமானங்கள் இலங்கையின் மொத்தத் தேசிய உற்பத்தியில் உள்ளடக்கப்பட்டு வரவு செலவுத்திட்ட அறிக்கையில் காண்பிக்கப்படும் என்பதை நகரத்தின் தாய் நிறுவனமான சைனா கொமினிகேசன் கென்ச…

  6. மகிந்த ராஜபக்ஸவிடம் கற்றுக் கொள்ளுங்கள் ... மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்... 30 செப்டம்பர் 2013 குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக ராஜாபரமேஸ்வரி... வடமாகாண சபைக்கான போனஸ் ஆசன இழுபறி நிலை முடிவுக்கு வந்துள்ளது. தேர்தல் முடிவுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட 6 நாட்களுக்கு பின்புதான் இந்த மகா இழுபறி முடிவுக்கு வந்துள்ளது. அதுவும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது போன்று மன்னாரில் போட்டியிட்ட முஸ்லீம் பிரதிநிதி ஒருவருக்கு என்பது வாதப்பிரதிவாதங்கள் இன்றி முடிவாகி உள்ளது. இது வரவேற்கப்பட வேண்டியதே. மன்னாரில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய அயூப் அஸ்மிக்கு இந்த ஆசனம் கிடைத்துள்ளது. இனத்துவ முரண்பாடுகள் நிலவும் நாடுகளில் முதலாவது பெரும்பான்மைத் தேசிய இன ஆட்சியாளர்கள் இரண்டாவத…

  7. ஈழத்தில் நடந்து முடிந்த புலிகளின் அழிப்பின் பின் அந்த அழிவு தொடர்பாக பலவாறான கருத்துக்கள் தமிழர் மத்தியில் பரப்பப்பட்டு வருகின்றன. அவற்றுள் பல புலிகளின் அணுகுமுறையில் தவறுகளை இனம்காண்பவையாக உள்ளன. உதாரணமாக, 1) புலிகள் அரசியல் ராஜதந்திர நகர்வுகளுக்கு முக்கியத்துவம் வழங்காமை 2) ராணுவ மேலாதிக்கத்துக்கு முன்னுரிமை வழங்கியமை 3) கருணாவின் பிளவு 4) தலைவரின் தூரநோக்கற்ற சிந்தனை 5) தக்க தருணத்தில் கெரில்லா போர்முறைக்கு மாறாதமை 6) மரபுப் போர் முறையைக் கைக்கொண்டமை. போன்ற பல கருத்துக்கள் வெளியிடப்பட்டன. வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மாறிவரும் உலக ஒழுங்கு சில இடங்களில் பேசப்பட்டு வந்தாலும், அதன் தாக்கம் அதிகளவில் பேசப்படுவதில்லை. சமீபத்தில் பூகோள அரசியலை…

  8. கொக்கெய்ன் மயக்கங்கள் கொழும்பு புறநகர் பகுதியில், பெருமளவிலான கொக்கெய்ன் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டமை, கடந்த சில நாட்களாக நாட்டின் அரசியல், சமூக அரங்கில் பேசுபொருளாகி இருக்கின்றது. ‘போதையற்ற இலங்கை’யை உருவாக்க வேண்டுமென்ற தொனிப்பொருளில், நாடு பயணித்துக் கொண்டிருக்கும் போது, 218 கிலோகிராம் கொக்கெய்ன், அரச நிறுவனம் ஒன்றுக்கு கொண்டு வரப்பட்ட கொள்கலனில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டமை, கணக்கெடுக்காமல் விடக் கூடிய ஒரு விடயமல்ல. இது தொடர்பாக விசாரித்து, குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மறுபேச்சில்லை. ஆனாலும், கொக்கெய்ன் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அத…

    • 1 reply
    • 566 views
  9. முற்றவெளியில் நடந்த ஒரு பொங்கலும் சந்தையும்! நிலாந்தன். January 30, 2022 கடந்த 13ஆம் திகதி அதாவது பொங்கலுக்கு முதல் நாள் யாழ்ப்பாணம் முற்றவெளியில் ஒரு வித்தியாசமான பொங்கல் ஒழுங்கு செய்யப்பட்டது. அதற்கு பெயர் விடுதலைப் பொங்கல். அரசியல் கைதிகளை விடுவிக்கப் போராடும் அமைப்பாகிய குரலற்றவர்களின் குரல் என்ற அமைப்பு அப் பொங்கல் நிகழ்வை ஒழுங்குபடுத்தியிருந்தது. தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்கள் நினைவாக உருவாக்கப்பட்ட நினைவுச் சின்னத்துக்கு அருகில் ஒரு சிறிய சிறைக்கூண்டு செயற்கையாக உருவாக்கப்பட்டது.அதற்குள் கைதிகளின் உடைகளை அணிந்தபடி செயற்பாட்டாளர்கள் பொங்கல் நிகழ்வை நடத்தினார்கள். நிகழ்வுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஏனைய…

  10. சிறுபான்மையினருக்கு கைச்சேதம் பேரம் பேசும் அரசியல் என்பது சோரம் போகும் அரசியலாகி, இணக்க அரசியலும் கூட பெருந்தேசியக் கட்சிகளோடு எல்லாவற்றிலும் இணங்கிச் செல்லும் அரசியலாகிப் போய்க் கொண்டிருக்கின்ற நிலைமை காணப்படுகிறது. மாகாண சபைகளுக்கு ஒரேநாளில் தேர்தல் நடாத்துதல் என்ற கோதாவில், அச்சபைகளுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற அற்ப அதிகாரங்களிலும் கைவைக்கின்ற, அரசமைப்பின் இருபதாவது திருத்தம் தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் அரசியல் பரப்பை நிறைத்திருக்கின்றன. இலங்கையின் அரசமைப்பை முற்றுமுழுதாக மறுசீரமைப்பதற்கான நடவடிக்கைகளில், மெத்தனப் போக்கை கடைப்பிடிக்கின்ற நல்லாட்சி அரசாங்கம், மாகாண சபைகளின் தேர்தல், அதிகாரங்கள், தத்துவங்கள், கலைப்பு போ…

  11. எதிராக மாறும் அகப்புறச் சூழல் ! மத­பீ­டங்கள், அர­சியல் தலை­மைகள், தேரர்கள், இரா­ணுவத் தரப்­பினர், பொது­மக்கள், இன­வா­திகள், அடிப்­ப­டை­வா­திகள், ஆட்சி எதி­ரா­ளர்கள் என்று எல்லாத் தரப்­பி­ன­ரையும் கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்ள அர­சியல் அமைப்­புக்கு எதி­ராக கூர்­மைப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­களை மிகக் கச்­சி­த­மா­கவும் மதி­நுட்­பத்­து­டனும் மேற்­கொண்­டு­வரும் ஒரு சூழ்­நிலை விளைந்து வரு­கின்ற நிலையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அவர்கள் அண்­மையில் ஒரு செய்­தியைக் கூறி­யது கவ­னத்­தின்­பாற்­பட்­டது. பௌத்த மதத்தின் முதன்­மை க்கு அல்­லது சிங்­கள பெரும்­பான்மை ஆட்­சிக்கு ஊறு விளை­விக்கும் எந்­த­வொரு அர­சியல் யோச­னைக்கும் யான் கையொப்பம…

  12. இலங்கையின் தலைவிதி யார் கையில்? தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ வெல்லப்போவது போராட்டக்காரர்களா, அரசியல்வாதிகளா என்பதே, இன்று எம்முன்னால் உள்ள கேள்வியாகும். இந்தக் கேள்விக்கான பதில், இலங்கையின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். அரசியல்வாதிகள், ரணிலைப் பிரதமர் ஆக்கி, தங்கள் ஆட்டத்தின் முதலாவது காயை நகர்த்தி உள்ளார்கள். ‘கோட்டா கோ கம’வின் திசைவழிகளே, இலங்கையின் ஜனநாயகத்தின் உரிமைகளின் பாதையையும் சாத்தியக்கூறுகளையும் தீர்மானிக்கவல்லன என்பதை போராட்டக்காரர்கள் மட்டுமன்றி, இலங்கையின் மீது அன்பு கொண்ட அனைவரும் மனங்கொள்ள வேண்டும். இலங்கையின் நெருக்கடி, வெறுமனே ஒரு பொருளாதார நெருக்கடியல்ல! இது அரசியல், பொருளாதாரம், சமூகம், ஆட்சி-நிர்வாகம் ஆகியவற்றைக் கொண்டதொரு நாற்பரிமாண நெ…

    • 1 reply
    • 848 views
  13. பெற்றோல் சதித்திட்டம் எங்கிருந்து எதுவரை...! எரி­பொருள் நிரப்பு நிலை­யங்­களை மொய்த்­தி­ருந்த வாக­னங்­களும், பொது­மக்­களும் தான், கடந்­த­வாரம், ஊட­கங்­களின் தலைப்புச் செய்­தி­யாக மாறி­யி­ருந்­தன. திடீ­ரென ஏற்­பட்ட அல்­லது ஏற்­ப­டுத்­தப்­பட்ட பெற்றோல் தட்­டுப்­பாடு நாடு முழு­வ­தை­யுமே பெரும் அல்­லோ­ல­கல்­லோ­லப்­ப­டுத்தி விட்­டது. பெற்­றோ­லுக்கு ஏற்­பட்ட தட்­டுப்­பாடு இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் தொலை­பே­சியில் தொடர்பு கொண்டு உரை­யாடும் அள­வுக்கு முதன்­மை­யான பிரச்­சி­னை­களில் ஒன்­றாக மாறி­யி­ருந்­தது. திட்­ட­மிட்டு ஏற்­ப­டுத்­தப்­பட்ட அல்­லது தானாக உரு­வா­கிய இந்தச் சூழல் தனியே…

  14. திருக்கோணேஸ்வர ஆலய விவகாரத்தில் பின்கதவு ஆக்கிரமிப்பு முயற்சியும், தலைமையற்ற மக்களும் - யதீந்திரா இது இந்தக் கட்டுரையாளரின் வழக்கமான அரசியல் பத்திகளிலிருந்து சற்று மாறுபட்டது ஆனால் இது அரசியலுக்கு அப்பாற்பட்டதல்ல. சில தினங்களுக்கு முன்னர் இந்த விடயங்கள் இந்தக் கட்டுரையாளரின் நேரடி கவனத்திற்கு வந்தது. தட்சன கைலாசம் என்று அழைக்கப்படும் திருகோணேஸ்வர ஆலயமானது, இலங்கையின் பழைமைவாய்ந்த இந்து தமிழ் அடையாளமாகும். திருக்கோணேஸ்வரம் என்பதிலிருந்துதான் திருகோணமலை என்னும் பெயரே உருவாகியது. அதாவது, சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் மலை என்பதன் பொருள்தான் திருகோணமலை. திருக்கோணேஸ்வரம் இலங்கையின் ஜந்து ஈஸ்வரங்களில் ஒன்றாகும். வடக்கில…

  15. ஜெனீவா – ஏமாற்­றமா? சுபத்ரா மீண்டும் ஒரு­முறை இலங்கை பற்­றிய விவா­தங்கள், ஜெனீ­வாவில் நடந்து முடிந்­தி­ருக்­கின்­றன. கடந்த வாரத்­துடன் நிறை­வ­டைந்த ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின், 37 ஆவது கூட்­டத்­தொ­டரில், கடந்த 19ஆம் திக­தியும், 21ஆம் திக­தியும் இலங்கை பற்­றிய இரண்டு விவா­தங்கள் இடம்­பெற்­றன. மார்ச் 19ஆம் திகதி நடந்­தது, பூகோள கால மீளாய்வு அறிக்கை தொடர்­பா­னது. அது அவ்­வ­ளவு முக்­கி­யத்­துவம் அற்­றது. ஆனால், மார்ச் 21ஆம் நாள் நடந்த விவாதம் அப்­ப­டிப்­பட்­ட­தல்ல. அது ஒப்­பீட்­ட­ளவில் அதிக முக்­கி­யத்­துவம் வாய்ந்­தது. அதனால் தான், வெளி­வி­வ­கார அமைச்சர் திலக் மாரப்­பன, அமைச்­சர்கள் சரத் அமு­னு­கம, பைசர் முஸ்­தபா என்று …

  16. நேற்று -இன்று -நாளை!! நேற்று -இன்று -நாளை!! 1 – நேற்று முப்­பது ஆண்­டு­கள் தமிழ் மக்­களை அடக்கி ஆண்­ட­வர்­கள், சித்­தி­ர­வதை செய்­த­வர்­கள், தமிழ்த் தலை­வர்­க­ளைக் கொன்று புதைத்­த­வர்­கள், பேச்­சுச் சுதந்­தி­ரம் எழுத்­துச் சுதந்­தி­ரம் என்­ப­வற்றை மறுத்­த­வர்­கள், பாசிச ஆட்சி நடத்­தி­ய­வர்­கள் தொலைந்து அழிந்து ஒன்­பது ஆண்­டு­கள் ஆகி­விட்­டன என முக­நூ­லி­லும், சமூக வலைத்­த­ளங்­க­ளி­லும் கொக்­க­ரித்து ஆனந்­தக்­கூத்­தா­டு­கி­றார்­கள் சிலர். அந்த அழிவை நடத்­திய மகிந்த …

  17. ஈரான் - இலங்கை உறவு ‘பொருளாதாரத்தையும் தாண்டிய ஒத்துழைப்பு மத்திய கிழக்குக்கான முன்னாள் பிரதி வெளிவிவகார அமைச்சரும் சபாநாயகரின் சர்வதேச விவகாரத்துக்கான தற்போதைய சிரேஷ்ட ஆலோசகருமான டொக்டர் ஹொசைன் அமீரப்துல்லாஹியான் உடன், சிறிது நேரம் உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது. இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையிலான உறவு, மத்திய கிழக்கில் தற்போது காணப்படும் நிலை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் வழங்கிய பதில்களின் தொகுப்பு இங்கு வழங்கப்படுகிறது. இலங்கை விஜயத்துக்கான நோக்கம் ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான தொடர்பு, நீண்டகால சரித்திரத்திரத்தைக் கொண்டதாகும். அண்மைக்காலமாக இத…

  18. லண்டன் வன்முறைச் சம்பவம் : மக்களை விழிப்பாக இருக்குமாறு தகவல்துறை அமைச்சகம் வேண்டுகோள் புலம்பெயர் நாடுளில் தமிழர்கள் மத்தியில் இடம்பெற்றுவருகின்ற வன்முறைச் சம்பவங்களை, தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்துகின்ற ஓர் ஆயுதமாக பயன்படுத்துகின்ற சிறிலங்கா அரசின் பிரசாரங்களுக்கு, வலுவூட்டுகின்ற வகையில் தமிழர்களின் செயற்பாடுகள் அமையக்கூடாதென, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தகவல்துறை துணை அமைச்சர் சுதர்சன் சிவகுருநாதன் நாதம் ஊடக சேவையூடாக தெரிவித்துள்ளார். விடுதலைக்கான செயற்பாட்டுத் தளத்தில், லண்டனில் நீண்டகாலமாக இயங்கி வந்துள்ள திரு.தனம் என அழைக்கப்படும் சூசைப்பிள்ளை மீது நடாத்தப்பட்ட வன்முறைச் சம்பவம் குறித்து நாதம் ஊடக சேவைக்கு கருத்துரைத்த பொழுதே இதனை தெரிவ…

  19. தலை­வ­னுக்­காக ஏங்கி நிற்­கும் – ஈழத் தமி­ழர்­கள்!! ஈழத் தமி­ழ­ர­களை வழி நடத்­திச் செல்­வ­தற்கு பிர­பா­க­ர­னுக்கு நிக­ரா­ன­தொரு தலை­வரே தேவை­யென்ற கருத்து தமி­ழர்­கள் மத்­தி­யில் நிலவி வரு­கின்­றது. இன்று தமி­ழர்­கள் எதிர்­கொள்­கின்ற அவ­லங்­க­ளுக்­குச் சீரான தலை­மைத்­து­வம் இல்­லா­மையே கார­ண­மெ­ன­வும் அவர்­கள் சிந்­திக்க ஆரம்­பித்­து­ விட்­ட­னர். அர­சி­யல் தலை­வர்­கள் தமது இனத்தை முறைப்படி வழி­ந­டத்­திச் செல்ல வேண்­டும் ஓர் ஆட்டு மந்­தைக் கூட்­டம் வழி தவ­றிச் சென்று ஆபத்­தில் சிக்­கா­மல் இருப்­ப­தற்­கும்…

  20. மரண தண்டனை இன்னொரு பழிவாங்கல் மட்டுமே இலங்கையில் இன்று அனைத்து சமூ­கங்களும் முகங்­கொ­டுக்கும் மிகப்­பெ­ரிய பிரச்­சினை போதை­ப்பொருள் பாவ­னை­யாகும். மக்கள் மத்­தியில் வெகு­வாக பர­வி­வரும் நோய் என்றே இதனை கூற வேண்டும். இந்த நாட்டில் யுத்தம் நில­விய காலங்­களில் ஆயுத மோதல், சுட்­டுக்­கொலை என்ற செய்­திகளையே செவிமடுக்கக்கூடியதாக இருந்தது. ஆனால் யுத்­தத்தின் பின்னர் இந்த நாட்டில் ஜன­நா­யகம், சமூக ஒற்­றுமை, அமைதி நில­வு­கின்­றது என கூறப்படுகின்ற போதிலும் அனைத்து பகு­தி­க­ளிலும் பொது­வாக கேட்கும் செய்தி போதைப்­பொருள் கடத்­த­லாக மாறி­யுள்­ளது. போதைப்­பொருள் கடத்­தலின் மைய­மாக இலங்கை மாறி­யுள்­ளது என்ற பார­தூ­ர­மான குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது…

  21. மஹிந்தவின் எச்சரிக்கை உண்மையானதா? -சத்ரியன் இன்­றைய நிலையில், மஹிந்த ராஜபக் ஷ இவற்றை மீண்டும் பிடுங்கிக் கொண்டால் கூட, அவற்­றுக்­காக பெறப்­பட்ட கடன்­களை அவரால் அடைக்க முடி­யாது. திரும்பப் பெற்றுக் கொள்­வ­தானால், அதற்­கான கொடுப்­ப­ன­வையும் செலுத்த வேண்டும். அதற்கு தகுந்த கார­ணமும் கூறப்­பட வேண்டும் இல்­லா­விடின் சர்­வ­தேச அளவில் - பரஸ்­பர வர்த்­தக உடன்­பாட்டை மீறிய அர­சாங்­க­மாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­படும். இந்த விளை­யாட்டை மஹிந்த வேறெந்த நாடு­க­ளு­டனும் விளை­யா­டி­னாலும் அதிக பிரச்­சினை ஏற்­ப­டாது. ஆனால் இந்­தி­யா­வு­டனும், சீனா­வு­டனும் நிச்­ச­ய­மாக விளை­யாட முடி­யாது. இலங்­கையின் கூட்டு அர­சாங்கம் வி…

  22. விக்னேஸ்வரனின் விலகல் உறுதி கே. சஞ்சயன் / தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம், கடந்த வெள்ளிக்கிழமை (ஓகஸ்ட் 31) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற போது, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வு தொடர்பாக, அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்புப் பலமாக இருந்தது. ஆனால், அவர் வழக்கம் போலவே, தனது முடிவை உறுதியாக அறிவிக்காமல், நழுவிக் கொண்டிருக்கிறார். ஆனாலும், அவரது உரை, சில தெளிவான சமிக்ஞைகளை வெளிப்படுத்தியிருக்கிறது. அவர் தனது உரையில், தன் முன்பாக உள்ள நான்கு தெரிவுகள் பற்றிக் கூறியிருக்கிறார். அரசியலில் இருந்து விலகி, மீண்டும் ஓய்வு வாழ்வுக்குச் செல்வது; புதிய கட்சியை ஆரம்பித்துப் போட்டியிடுவது; …

  23. பொறுப்புக்கூறாமைக்கு யார் பொறுப்பு? நிலாந்தன். 53வது ஐநா மனிதஉரிமைகள் கூட்டத்தொடர் கடந்த 19ஆம் திகதி தொடங்கியிருக்கிறது. இதில் இலங்கை தொடர்பாக ஐநா மனித உரிமைகள் ஆணையாளருடைய வாய்மூல அறிக்கை வாசிக்கப்பட்டுள்ளது.அதில் பொறுப்புக் கூறல் தொடர்பாக அழுத்தமான கருத்துக்கள் உண்டு. பொறுப்பு கூறல் எனப்படுவது இறந்த காலத்திற்கு பொறுப்பு கூறுவது. இறந்த காலத்தில் நடந்த குற்றச்செயல்களுக்கு பொறுப்பு கூறுவது. அக்குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியையும் நிவாரணத்தையும் வழங்குவது. அவ்வாறு நீதியை நிலை நாட்டுவதன்மூலம் சமாதானத்தை,நல்லிணக்கத்தை ஸ்தாபிப்பது. இதை ஐநாவின் வார்த்தைகளில் சொன்னால் நிலைமாறு கால நீதியை ஸ்தாபிப்பது. ஐநாவின் முப்பதின் கீழ் ஒன்று தீர்மானம் 2015 ஆம் ஆண்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.